அத்தியாயம் 46

எல்லாரும் நிறுத்துங்க. உங்களோட குடும்ப விசயத்தை பற்றி அப்புறம் பேசுங்க. நானும் அசுவும் இப்பொழுதே போகணும். இல்லை “எங்களை கொன்னுடுவாங்க” என்று செள்ளியன் கத்தினான்.

உன்னை யாருடா கொல்லப் போறா ராஸ்கல்? உன்னை நம்பி புள்ளைக்கு முடிச்சு வச்சது தப்பா போச்சு? தினகரன் கோபமாக சத்தமிட்டார்.

ஆமா, தப்பு தான் சீனியர். ஏன்னா வினு கழுத்துல தாலி மட்டும் தான் நான் கட்டினேன் என்றான் செள்ளியன்.

என்னடா பேசுற? நேத்ரா பேச முடியாமல் கோபமாக சத்தமிட்டாள்.

ஆமா வினு, நம்ம கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்னே நானும் அசுவும் தான் கல்யாணம் பண்ண முடிவெடுத்திருந்தோம். ஆனால் அவளை கடத்திட்டாங்க. நானும் எவ்வளவோ இடத்தில் இரு நாட்களாக தேடினேன். இவள் கிடைக்கவேயில்லை. மூன்றாவது நாள் வந்த அலைபேசியில் நான் உன்னை கல்யாணம் பண்ணனும்ன்னு சொன்னாங்க.

நான் முடியாதுன்னு சொன்ன போது தான் மயக்கத்தில் இருந்த அசுவை என்னிடம் காட்டி மிரட்டினாங்க. அதனால் தான் தினகரன் சார் மூலமாக அவங்க சொன்னது போல் தாலி கட்டினேன். ஆனாலும் அவன் அசுவை விடவில்லை.

முதலிரவு அறையில் வினுவுடன் நான் இல்லை. முதலில் நான் தான் உள்ளே சென்றேன். விளக்கு அணைக்கப்படவும் அவன் வந்தான். யாருன்னு எனக்கு தெரியாது. இருட்டில் ஏதும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த சிறு இடைவெளியில் அவ்வறையிலிருந்து வெளியே வந்து அவர்களிடம் பேசினேன். எல்லாம் முடிந்த பின் தான் அசு வருவான்னு சொன்னாங்க. நானும் இரவு முழுவதும் வீட்டிலிருந்த ஓர் அறையில் இருந்தேன். காலை அவன் சென்ற பின் என்னை அழைத்து அறையில் இருக்க சொன்னாங்க. மறுநாள் இரவு தான் அசுவை விட்டாங்க. அவளை என் வீட்டில் இருக்க சொன்னேன்.

பின் தான் என்று வினுவை பார்த்தான். அவள் உடைந்து அழுதாள். அதிரதன் அவன் சட்டையை பிடித்து, “உண்மைய சொல்லு. நீ தப்பிக்க பார்க்காதே!” என்று ஆக்ரோசமாக அவனை அடித்தான்.

அவனை விடு. அவன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை தான். இப்ப கூட அவளை பார்த்தால் வேண்டுமென்றே அவளை சீண்டும்படி சொல்வான். இப்பொழுதும் நாங்கள் அவன் பிடியில் தான் இருக்கோம் என்று அஷ்வினி “எங்க குழந்தை அவனிடம் இருக்கு” என்று அழுதாள்.

குழந்தையா? என்று நேத்ரா அஷ்வினியை பார்த்தாள்.

உண்மை தான் வினு. என்னோட பையனுக்கு ஆறு மாதம் தான் ஆகுது. என்ன செய்றான்னே தெரியல? என்ன செய்றதுன்னே எங்களுக்கு புரியல என்று அஷ்வினி கதறி அழுதாள்.

“இதெல்லாம் சொல்ல கூட இல்லை” தினகரன் கேட்க, சொல்லீட்டு எங்கள சாக சொல்றீங்களா? அசுவை பார்த்த பின் தான் நான் எந்த பொண்ணு பக்கமும் போகலை. அவளும் முதலில் பணத்துக்காக தான் என்னிடம் வந்தாள். ஆனால் எங்கள் பழக்கம் காதலானது.

அதிரதன் சார், அவன் சாதாரண ஆள் இல்லை. படு மோசமானவன். எங்க பிள்ளைய பார்க்க கூட விடலை. நிம்மதியா சாப்பிட கூட முடியல. அப்படி வாழ்ந்துட்டு இருக்கோம். நிதின் சார் என்னை பார்க்க வந்த போது அவரிடமிருந்து தப்பி ஓடியது எங்களது மகனுக்காக தான்.

ஆனால் வினுவுக்காக தான் இப்ப வந்தோம். அதுவும் அவள் வயிற்றில் குழந்தை இருக்குன்னு தெரிஞ்சு தான் வந்தோம். வினு இந்த குழந்தைக்காக வருத்தப்படாத. அவனுக்கு உன் மேல் பைத்தியம். அது மட்டும் அவன் செய்கையில் தெரியும். இது உன் குணத்துடன் வளர்ந்தாலும் என்றாவது அவன் குணமும் வந்திருக்கும் என்ற செள்ளியன்..வினு படுக்கைக்கு கீழே மண்டியிட்டு, என்னை மன்னிச்சிரு. உன் வாழ்க்கை அழிய நானும் ஓர் காரணமாகி விட்டேன்.

அதிரதனை பார்த்து..வினுவை பத்திரமா பார்த்துக்கோ. அவன் சரியான சைக்கோ பிடித்தவன். வினு உன் அம்மா, அப்பா கொலை கூட இவனால் இருக்கும்ன்னு நினைக்கிறேன். எனக்கு முன்னே உன் அப்பாவிடம் பேசி இருக்கான். எனக்கு முன் ஒருவனை உனக்கு திருமணம் செய்ய நினைத்தார் போல உன் அப்பா..என கேட்க, ஆமா விக்னேஷ்வரன் என்றான் எழிலன்.

இல்லை. விக்னேஷை உன் அப்பா முடிவு செய்யும் முன் வினுவிற்கான ஒருவனை பார்த்தார். அவரிடம் பேச முடிவெடுத்த போது தான் முதன் முறையாக உன் அப்பாவிடம் பேசி இருக்கான். பின் தான் விக்னேஷை பார்த்தார். அவன் தவறான பழக்கத்துடன் இருக்கான் என்று தான் அவரை விட்டார்.

நான் நானாக தான் தினகரன் சாரிடம் சென்றேன். அதற்கு முன்பே வினு..உன்னோட அப்பா தினகரன் அங்கிளிடம் என்னை பற்றி விசாரித்து இருக்கார். அப்பொழுது தான் அசுவுடன் காதல் ஏற்பட்ட சமயம் என்பதால் என்னை பற்றி இவருக்கு முழுதாக தெரியாமல் கல்யாணத்துக்கு இரு பக்கமும் இவர் தான் பேசினார்.

டேய், நான் வக்கீல். எனக்கு தெரியாமலா உன்னை கல்யாணம் பண்ணிக்க வைப்பேன். தெரிந்து தான் செய்தேன். ஆனால் இது பரணிக்கும் தெரியும். நீ பொண்ணுங்களோட சுத்துவன்னு பரணிக்கும் நன்றாக தெரியும். அவன் ஒத்துக் கொண்டதன் காரணம் எனக்கு தெரியலை. ஆனால் எனக்கு உன் மேல் நம்பிக்கை இருந்தது. அது தான் தவறாகி விட்டது என்றார்.

அவருக்கு தெரியுமா சார்? அப்ப கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே? செள்ளியன் கேட்க, ஒருவேலை நம்மை மிரட்டியது போல் வினுவோட அப்பாவையும் அவன் மிரட்டி இருப்பானோ? அஷ்வினி கேட்க, நேத்ரா உடைந்து அழுதாள்.

“வினு, அழாத. நீ அழுத அவன் ஜெயித்தது போல் ஆகும்” என்றான் செள்ளியன்.

என்ன சொல்ற? அதிரதன் கேட்க, அவனுக்கும் பல பொண்ணுங்களுடன் பழக்கம் இருக்கு. அவனுக்கு வினுவை எடுத்துக் கொள்ள ஆசை இல்லை. அவனுடன் எப்பொழுதும் மனைவியா வச்சிருக்க தான் நினைக்கிறான்.

அது எப்படி சொல்ற? அவனே வினுவிற்கும் வேறொருவனும் கல்யாணம் செய்து வச்சிட்டு மனைவியா இருக்க வைப்பானா? நிதின் கேட்டான்.

அதான் அவனோட திட்டம். அவ எனக்கு பொண்டாட்டியாவா வாழ்ந்தா? இல்லையே? இதுவரை நாங்க சரியாக பேசியது கூட இல்லை. மற்றவர்களுக்கு வினு கல்யாணம் ஆனவள். ஆனால் அவனுக்கு இது தான் அவளை தன் பக்கம் திருப்பும் முயற்சி. இப்ப எங்களுக்கு டிவோர்ஸ் ஆகிடிச்சு. இனி எவன் வினுவை கட்டிப்பான் என்ற நினைப்பு? ஒருவேலை யார் என்ன சொன்னாலும் வினு ஏத்துக்க மாட்டாள். அவள் மனதை நன்றாக அறிந்து தான் திட்டம் போட்டு செயல்பட்டிருக்கான்.

அதிரதன் சார் நீங்க வினு அருகே வந்தது, அவளுக்காக அழுதது எங்களுக்கே அதிர்ச்சி. அவனுக்கு சரியான பாடத்தை உங்களால் தான் புகட்ட முடியும் என்று செள்ளியன் புன்னகைத்து விட்டு, வினுவிடம் திரும்பி, உன்னோட அம்மா, அப்பாவை கொன்றதும் அவனாக தான் இருக்கணும். என் சந்தேகம் அவன் மீது தான்.

ஏன்னா..அம்மா, அப்பா முதல்ல நம்ம வீட்டுக்கு தான் வந்தாங்க. பின் தான் உன்னோட அம்மா, அப்பாவும் யாரையோ சந்திக்க போயிருக்காங்க. நானும் வீட்டிற்கு வர மாட்டேன்னு அவனுக்கு தெரியும். நீ தனியா தான் இருந்த? அவன் நினைத்திருந்தால் உன்னை எதுவும் செய்திருப்பான். நீயாக அவனிடம் செல்லணும்ன்னு தான் உன்னுடன் நெருக்கமானவர்களை கொல்ல பார்க்கிறான்.

காவியன் அருகே வந்த செள்ளியன், அப்படியே அங்கிள் மாதிரி இருக்கான்ல்ல எழிலா. வினுவுக்கு அவங்க அப்பான்னா உயிரு.

“நீ பக்கத்துல இருந்தா வினு எந்த பிரச்சனையையும் தாங்கிப்பா என்று காவியனிடம் சொல்லி விட்டு, எழிலனிடன் சென்று அவனை அணைத்து, என்னை மன்னிச்சிருடா..என் பின்னாடி நீ ஆசையா மாமா..மாமான்னு வந்த. ஆனால் நான் உன்னுடன் நெருக்கமாகி இருந்தால் உன்னையும் கொன்னுருப்பான்.

தினகரனிடம் அங்கிள், அவன் யாருன்னு எனக்கு தெரியாது. ஆனால் கொலைகாரனுக்கும், வினுவை அருகே வைத்துக் கொள்ள நினைப்பவனுக்கும் ஏதோ உறவு இருக்கு. அப்பா, மகனா இருப்பானுகன்னு தோணுது.

வினு, குழந்தைய நினைச்சு உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காத. இந்த குழந்தை விசயம் மட்டும் அவனுக்கு போச்சு. உடனே உன்னை தூக்கி இருப்பான். நல்ல வேலை யாருக்கும் தெரியாமல் சரியாக கவனித்து இருந்திருக்க. இப்ப உனக்குன்னு ஒருவன் இருந்தான்னா போதும். அந்த பரதேசியால் உன் பக்கம் நெருங்க முடியாது. எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறியோ அந்த அளவு உனக்கு நல்லது.

பழச நினைத்து இப்ப உனக்கு கிடைத்திருக்கும் உறவுகளையும் இழந்து விடாதே என்று “அசு போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு செல்ல, ஒரு நிமிசம் என்று அதிரதனிடம் வந்து, “அன்று கொஞ்சம் ஓவரா பண்ணிட்டேன் சாரி. நான் பண்ணலைன்னா அவன் என் பையனை கொன்றுப்பான்” என்றாள் அஷ்வினி.

“வினு, அதிரதன் சாரை மிஸ் பண்ணிடாத” என்று அஷ்வினி நேத்ராவை பார்த்து கண்ணடித்தாள். எல்லாரும் அவளை பார்க்க, “எல்லாரும் எங்கள மன்னிச்சிருங்க” என்று செள்ளியனும் அஷ்வினியும் சொல்லி விட்டு இருவரும் சென்றனர்.

காவியன் எழுந்து கதவை திறக்க, அவனை தடுத்த எழிலன் எங்க போற? எனக் கேட்டான்.

“எங்காவது போரேன்” என்று அவன் சொல்ல, நேத்ரா யசோதா சிவநந்தினி கண்ணீருடன் காவியனை பார்த்தனர்.

“காவியா, நீ எங்கேயும் போகக்கூடாது” என்று அதிரதன் சொல்ல, என்னை விடுங்க. “பாட்டி, மிதுன், வெண்பா வாங்க போகலாம்” என்றான் காவியன்.

காவியா அவசரப்படாத, வினு அக்கா? சங்கீதன் சொல்ல, என்னை பார்த்தவுடனே அவங்களுக்கு தெரிந்திருக்கும்ல்ல. அப்பவே சொல்லி இருக்கலாம்ல்ல. அவங்க ஏன் சொல்லலை? காவியன் கேட்டான்.

என்ன சொல்ல சொல்ற? நம்ம அப்பாவை கொன்னுட்டாங்க. கொலைகாரனுக்கு பயந்து எழிலனை சொல்லாமல் தனியே விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லவா? இல்லை உன்னை தம்பின்னு எல்லார் முன்னும் சொல்லி உன்னையும் அவனிடம் பறி கொடுக்க சொல்றியாடா?

அதுக்காக? காவியன் கேட்க, தினகரன் முன் வந்து “உன்னோட அம்மாவை நான் கண்டுபிடிச்சு தாரேன்” என்றார்.

அம்மாவா? அதான் பக்கத்திலயே இருக்காங்களே? என்று காவியன் யசோதாவை பார்த்தான். பையன் “அம்மா” என்றவுடன் சந்தோசத்தில் காவியனை யசோதா அணைத்தார்.

“ஹலோ, கொஞ்சம் விடுறீங்களா? நான் கிளம்பணும்” என்றான் காவியன்.

போகாதப்பா. “நிஜமாகவே அந்த கொள்ளைக்காரனுக வரலைன்னா இன்று நாம சேர்ந்து தான் இருந்திருப்போம்” என்று அழுதார்.

மேம், நீங்களா? பரணி..என்று தினகரன் கேட்க, ஆமா எனக்கும் பரணிக்கும் பிறந்தவன் தான் இவன் என்றார் யசோதா .

தினகரன் புன்னகையுடன் காவியனை அணைக்க, சார் என்ன பண்றீங்க? நீங்களுமா? காவியன் தினகரனை விலக்கினான்.

காவியா, உன் பெயரை சங்கீதன் சொல்லி கேட்ட போதே எனக்கு சந்தேகம் வந்தது. அன்று லட்சணாம்மா வீட்டில் பார்க்கும் போது உன்னை பார்த்து அவ்வளவு சந்தோசம். உன்னை பார்க்க தான் அங்கே வந்தேன்.

எனக்கும் பரணிக்கும் வெகுநாள் பழக்கமில்லை. விவாகரத்து விசயமா என்னை பார்க்க வந்தான். அப்பொழுது தான் தெரியும். எனக்கு தெரிந்து அப்பொழுது நீ சின்ன பையனா இருந்திருப்ப. பரணி அவனை பற்றிய அனைத்தையும் சொல்லும் போது எனக்கு அவனுடைய குணம் பிடித்து தான் நண்பர்களானோம். அவனும் உன்னை என்று அதிரதனை பார்த்து விட்டு, அதிரதன் தம்பியும் உன்னை போலும் தான் அவன்.

அதிகமாக பேச மாட்டான். ஆனால் செயல்கள் அதிரடியாக இருக்கும். ரொம்ப நல்லவன். அதான் அவன் வாழ்க்கையை மொத்தமாக அழித்து விட்டது.

அழிச்சிருச்சா சிவநந்தினி கேட்க, நீங்க தான் அவன் அக்கான்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால் அவன் காதலிச்ச பொண்ணு இவங்கன்னு தான் தெரியாது என்றார் தினகரன்.

காதலா? அவனுக்கு என் மீதா? யசோதா கேட்க, தினகரன் வெற்றுச் சிரிப்புடன் உங்க காதலை ஏத்துக்காத காரணம் அவன் அப்பாவுக்கு பயந்து தான். ஆனால் அவனும் உங்களை தான் காதலித்தான். அவங்க அக்கா காதலை ஏற்காத அம்மா, அப்பா இறப்பு அவரை பெரிதும் பாதித்தது. வேலைக்காக ஏறி இறங்கி சோர்ந்து விட்டார்.

அந்நேரம் தான் காந்தாரி என்று நேத்ரா எழிலனை பார்த்து, உங்க அம்மா, உன்னோட அப்பாவிடம் டீல் பேசி இருக்காங்க. “அவங்க அம்மா, அப்பா மனசை ஜெயித்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீ இழந்த மரியாதையை திருப்பி கொடுப்பேன்னு சொல்ல அந்த நிமிடம் அவர் காதலை தூக்கி எறிந்து விட்டு, உன்னோட அம்மா சொன்னது போல் கல்யாணம் பண்ணிட்டார்”.

விளைவு உன் தாத்தா, பாட்டியிடம் பேச்சு வாங்கி வாழும் நிலையானது. அப்பொழுதும் வினும்மா உனக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டான். உன் அம்மாவுக்கு அப்பா மேல் காதல் இருந்தாலும் அவனது காதலை பிரித்த ஒரு சந்தோசமும் இருந்தது.

நாட்களும் ஓடியது. உன் அப்பா அவர் அக்காவை சந்திக்க செல்லும் நேரத்தில் அவரது காதலியை பார்த்திருக்கார். அவர் இதை என்னிடம் சொல்லவில்லை. அவரின் காதல் இவங்க என்ற பின் தான் உன் அம்மா எதுக்கு அப்பாவை சந்தேகப்பட்டாங்கன்னு எனக்கே இப்ப தான் புரியுது.

அக்காவை பார்க்கிறேன் என்று அவளை பார்த்துட்டு வர்றீயான்னு? அம்மா தினமும் உன் அப்பாவிடம் சண்டை போட்டார். இதை விட அவங்க அம்மா சொல்றாங்கன்னு உன்னை தனியா விட்டு போனாங்கல்லே அப்பா தான் உன் அம்மாவை அவர் வெறுக்க ஆரம்பித்தார். நீயும் ரொம்ப கஷ்டப்பட்டதால உன்னையும் இங்கே அழைச்சிட்டு வந்தார்.

இன்னொரு விசயம் என்று செழியனிடம் வந்த தினகரன், சார் உங்க மனைவி உங்களை காதலிக்கும் முன்னே பரணி உங்களை பார்த்திருக்கார். நீங்க அவர் அக்காவை கவனிப்பதையும் பார்த்திருக்கார். ஏதோ கோவில் நிகழ்ச்சியின் போது தான் பார்த்தீர்களாமே? தினகரன் கேட்க, செழியன் தலையாட்டினார்.

செழியன் தன் மனைவியை பார்த்துக் கொண்டு, நானும் அவரை பார்த்தேன் என்றார்.

அதுமட்டுமல்ல சார், அவருக்கு உங்க இருவர் காதலும் தெரியும். அவர் ஏதும் தெரியாதது போல் தான் இருந்திருக்கார். ஆனால் அவர் வாழ்க்கை தான் உங்கள் இருவரால் ஒன்றுமில்லாது போனது.

மேம், அவர் மீண்டும் உங்களை சந்தித்ததையும் நடந்ததையும் சொன்னார். ஆனால் காவியன் எப்படி? தினகரன் கேட்க, யசோதா அவரிடமும் அப்படியே சொன்னார்.

எந்த இடத்தில கொள்ளை நடந்தது? தினகரன் கேட்க, யசோதா இடத்தை கூறினார்.

மேம், அன்று அந்த கொள்ளைகாரர்களிடமிருந்து பிள்ளையை வாங்கியது நான் தான். போலீசில் கம்பிளைண்ட் பண்ணேன். இரு நாட்கள் ஆகியும் யாரும் வரவில்லை என்றனர். அதனால் காவியனை அழைத்து வீட்டிற்கு சென்றேன். ஆனால் என் மனைவிக்கு பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் நிலையத்தில் சேர்த்தேன் என்று பாட்டியை பார்த்தார்.

ஆமா, உன்னை பார்த்ததுமே பார்த்த மாதிரி தெரிந்தது. இவர் தான் உன்னை என் அக்காவிடம் கொடுத்துட்டு, காவியன்னு பெயர் வைக்க சொன்னார் என்றார் பாட்டி.

“அப்பா, என்னிடம் நீங்க சொல்லவேயில்லை” சங்கீதன் கேட்டான்.

அப்ப நீ சின்னப்பையன்டா. காவியன் ஒரு வாரம் நம் வீட்டில் தான் இருந்தான். எனக்கு பரணி மகன்னு தெரிஞ்சிருந்தா உன்னோட அம்மாவோட சண்டை போட்டாவது பார்த்திருப்பேன். பாவம் இது கூட தெரியாமல் அவர் போயிட்டார். ஆனால் காவியன் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்க என்று தினகரன் மகிழ்ச்சியாக கூறினார்.

போலீஸ் கம்பிளைண்ட் பண்ணேனே! யாருமே என்னிடம் ஏதும் சொல்லலையே? யசோதா கேட்டார். அதை கூட சின்ன அண்ணன் தான் பார்த்துக்கிட்டார் என்ற யசோதா..அண்ணாவுக்கு தெரிந்திருக்குமோ? என்னிடம் தான் மறைச்சிட்டாரா? என்று கண்ணீருடன் சொல்ல, செழியனும் அதிரதன் பாட்டியும் யசோதாவை கோபமாக பார்த்தனர்.

அம்மா என்று யசோதா அழைக்க, உன்னை நம்பி தனியா விட்டதுக்கு என்ன செஞ்சிருக்க? எவ்வளவு விசயத்தை மறைச்சிருக்க? பாட்டி கோபமாக கேட்டார்.

இல்லம்மா, நான் சொன்னா நீங்க குழந்தைய ஏத்துக்க மாட்டீங்களோன்னு தான் யாரிடமும் சொல்லலை என்றார் யசோதா.

யசோ, நீ விசுவ நம்பி விசயத்தை சொல்லி இருக்க. ஆனால் என்னிடம் சொல்ல உனக்கு தோணலைல்ல. நான் தேவையில்லாதவன் ஆகிட்டேன்ல்ல செழியன் கண்ணீருடன் கேட்க, அண்ணா நீ அம்மாவிடம் மறைக்க மாட்ட . சொல்லீடுவன்னு பயந்து தான் சொல்லலை அண்ணா என்று செழியனை கட்டிக் கொண்டு அழுதார்.

ஒரு நிமிசம் நான் இன்னும் முடிக்கலை என்ற தினகரன், வினுவை இங்கே அழைத்து வந்ததும் சங்கீதன் படிக்கும் பள்ளியில் தான் அவரை சேர்க்க சொன்னேன். ஆனால் அவர் அதிரதன் தம்பியும், நிதின் தம்பியும் படிக்கும் கல்லூரியில் தான் சேர்த்தார்.

அவர் உங்க எல்லாரையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவர் திருமணத்திற்கு முன்னே மேம் உங்களை பார்க்க வந்தார். நீங்கள் உங்க குடும்பத்துடன் சந்தோசமா இருந்தீங்க. அதுவும் உங்களது கணவர் உங்களை நல்லா பார்த்துக்கிட்டார். அதுவே அவருக்கு பெரிய மகிழ்ச்சி. அவர் சென்று திருமணம் செய்து பிரச்சனையும் வந்து பின், இங்கே வந்ததும் அவர் முதலில் பார்த்தது நிதினை தான்.

என்னையா? நிதின் கேட்க, நிதுவுக்கும் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? நேத்ரா கேட்டாள்.

உன்னோட ஐந்து வயதில் அடிக்கடி உன்னுடன் அவர் அக்காவை சந்திக்க வரும் போது, மேம் அடிக்கடி ரவிக்குமார் சார் குடும்பத்தை பற்றி பேசுவாங்களாம். அதனால் நிதினை பார்த்தான். பின் என்று அதிரதனை பார்த்து, அதிரதன் தம்பியும் சின்ன வயசிலே அவருக்கு தெரியும்ன்னு சொன்னார்.

வினும்மா, உன்னோட பாதுகாப்புக்காக தான் இவங்க படிக்கும் கல்லூரியில் சேர்த்ததாக சொன்னார்.

சாரை எப்படி அப்பாவுக்கு தெரியும்? என்று நேத்ரா அதிரதனை பார்த்தாள். அவன் அவளருகே வந்து சுட்டுவிரலை நீட்டினான். அவளும் அதே போல் விரலை நீட்ட, மற்ற விரலை மடக்கி இருவரது சுட்டு விரல், கட்டை விரலை கோர்த்து அதிரதன் அவளை பார்த்தான். நேத்ரா அவளாகவே கைகளை திருப்பி அவனுக்கு கை கொடுத்து விட்டு, அந்த சின்ன பப்பூவா? கேட்டாள். ஆமாம் என்று தலையசைத்தான் அதிரதன்.

அப்படின்னா, ரதா நீ கேட்ட சின்னப் பொண்ணு வினுவா? நிதின் கேட்க, ஆமாம் என்று அதிரதன் தலையசைத்தான்.

அப்பவே வினு உன்னையுமா கொல்ல வந்தாங்க? செழியன் கேட்க, அவள் யோசனையுடன் பார்த்தாள்.

ரதா, நாம கடைசி இரு வருட புட்டேஜ் தான் பார்த்தோம். வினு உன்னோட அத்தை பொண்ணுன்னு அவனுக்கு தெரிஞ்சுருக்க, மாமா, அப்பா ப்ரெண்ஷிப் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதை விட வினு உன்னோட அப்பாவை அவன் அப்பொழுதே மிரட்டி இருக்கான். அதான் பாதுகாப்பிற்கு என்று எங்களுடன் உன் அப்பா பள்ளியில் சேர்த்திருக்கார்.

அப்படின்னா எதிரி நம் பக்கம் தான் இருக்கான் என்றான் காவியன். எல்லாரும் அவனை பார்த்தனர். தோளை குலுக்கி விட்டு காவியன் அமர்ந்தான்.

யசோதா தன் அம்மாவை பார்த்தார். அம்மா..என்று அவர் அழைக்க, நீயெல்லாம் பிள்ளையாடி, என்ன வேலை பார்த்து வச்சிருக்க? என்று யசோதாவை திட்டிக் கொண்டே ஓரக்கண்ணால் காவியனை பார்த்தார் அதிரதன் பாட்டி.

அத்தை..சிவநந்தினி அழைக்க, நீ சும்மா இருடி. இவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தால் என்ன வேலை செஞ்சுட்டா. மானம் போச்சு. மரியாதை போச்சு என்று பாட்டி கத்த, யசோதா அழுதார்.

“யசோ” என்று சிவநந்தினி அவர் பக்கம் வர, “நில்லுடி நீயும் அவளோட சேர்ந்து மறைச்சுட்டேல்ல” பாட்டி சத்தமிட அவரும் நின்றார். அதிரதன் அவன் பாட்டி அருகே நின்று கொண்டு,

யசோ, நீ ரொம்ப மோசம். எவ்வளவு பெரிய விசயத்தை மறச்சிட்ட? பாட்டி பாவம்ல்ல. உன்னை அப்பாவும் பாட்டியும் எப்படி பார்த்துக்கிட்டாங்க. நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட? அதிரதன் சத்தமிட்டுக் கொண்டே காவியனை பார்த்தான். அவன் சிந்திக்கிறான் என்று அதிரதன் கவனித்து விட்டு,

“பாட்டி, யசோவ அவங்க வீட்டுக்கே போக சொல்லுங்க” என்று அதிரதன் சொல்ல, அழுக ஆரம்பித்தார் யசோதா.

அண்ணா, யசோ என்ன செய்வாங்க? பாவம்ல. சும்மா இருவரும் திட்டுறீங்க? ரணா அதிரதனை முறைத்தான்.

ஆமா, அத்தை என்ன தப்பு செஞ்சாங்க? என்று ஆத்வியும் ரணாவுடன் வந்து நிற்க, நிதின் வாயில் கையை வைத்துக் கொண்டு சிரித்தான்.

அடேங்கப்பா, என்னம்மா டிராமா பண்றீங்க? “செம்மையா பேசுறீங்கப்பா…வேற லெவல்” என்று நேத்ரா புருவத்தை உயர்த்தி பாட்டியையும் அதிரதனையும் பார்த்தாள். அடக்கி வைத்திருந்த சிரிப்பை அள்ளி தெளித்துக் கொண்டே வினுவிடம் “ஹை பை” கொடுத்தான் நிதின்

வாட்? டிராமாவா? என்று யசோதா, ஆத்வி, ரணா நேத்ராவை பார்த்து விட்டு பாட்டியையும் அதிரதனையும் பார்த்தனர். பாட்டி தோளில் கையை போட்டுக் கொண்டு, யசோ பயந்துட்டியா? அதிரதன் கேட்க, கண்ணா இதெல்லாம் என்ன விளையாட்டு? எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்று யசோதா கண்ணீருடன் கேட்க, அதிரதன் அவரை அணைத்துக் கொண்டு காவியனை பார்த்தான்.

ரதா, கொஞ்சம் இங்கேயும் பாரேன் நிதின் அழைக்க, பத்திரகாளியாய் நின்றனர் ரணாவும் ஆத்வியும்.

ஏய் குட்டிம்மா, வேண்டாம் என்று அதிரதன் சொல்ல, ஆத்வி போட்டிருந்த துப்பட்டாவை வைத்து அதிரதன் கழுத்தை சுற்றினர் அவன் செல்ல தங்கைகள்.

அடியேய், பிள்ளைய என்ன பண்றீங்க? என்று சிவநந்தினியும் பாட்டியும் ரணாவையும் ஆத்வியையும் விரட்ட, அவர்கள் தினகரனிடம் வந்து, “அங்கிள் கெல்ப் பண்ணுங்க” என்று அவர் பின் நின்று கொண்டனர்.

“சும்மா விளையாட்டுக்கு தான பண்ணாங்க. விடுங்க மேம்” என்று தினகரன் சொல்ல, சிலர் மகிழ்ச்சியுடன் அதை பார்த்தாலும் செழியனுக்கு தான் செய்த வேலையால் தன் மனைவி குடும்பமே அழிந்து பிள்ளைகள் தனித்திருக்க தான் காரணமாகி விட்டோமே? என்று வருத்தமுடன் அமர்ந்திருந்தார்.

அதிரதன் அலைபேசி அழைக்க, புன்னகையுடன் எடுத்த அதிரதன் முகம் மாறியது.

என்னடா சாதாரணமா சொல்லிட்டு இருக்க? ஆட்களை பின் தொடர சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறியா? கத்தினான் அதிரதன்.

“சார், முதல்ல அவங்களுக்கு வார்னிங் கொடுக்கணும். அவங்களுக்கு சொல்லுங்க” என்றான் விக்ரம்.

போலீஸ் ஆட்களை அனுப்புங்க. அவங்களுக்கு ஏதும் ஆகக்கூடாது. நான் சொல்றேன். சீக்கிரம் விக்ரம்..என்று போனை வைத்து வினு..என்று அவளிடம் கேட்க வந்தவன், இல்ல என்று அவனது துப்பாக்கியை எடுத்தான்.

ரதா, நிதின் சத்தமிட அனைவரும் அதிர்ந்து அதிரதனை பார்த்தனர்.

தினகரன் கையை பிடித்த அதிரதன், “யாரும் வெளிய வராதீங்க” என்று தினகருடன் வெளியே வந்தான்.

“நிது, கண்ணா துப்பாக்கி எடுக்கிறான். பெரிய பிரச்சனையாக இருக்குமோ?” என்று யசோதா கேட்க, நான் பார்த்துட்டு வாரேன் என்று நிதின் சொல்ல, நானும் வாரேன் என்று அதீபன் சொன்னான்.

“எல்லாரையும் நீ பார்த்துக்கோ” என்று நிதின் வெளியே வர, அக்காவை பார்த்துக்கோங்க என்று எழிலனும் நளனும் வர, காவியனும் அவன் நண்பர்களும் அதீபன் தடுத்தும் கேட்காமல் வந்தனர்.

தினகரிடம் அதிரதன், செள்ளியனை அழைக்க சொன்னான். அவரும் கால் பண்ண, எடுத்தான் செள்ளியன். அதிரதன் போனை வாங்கி, உங்க பின்னாடி கார் ஒன்று ரொம்ப நேரமா பின் தொடர்ந்து வருதாம். கவனமா இருங்க. நான் போலீஸை வர வைக்கிறேன் என்றான்.

“அவன் எங்க குழந்தையை தருவதாக வரச் சொன்னான்” என்று செள்ளியன் சொல்ல, கார் வேகத்தை குறைங்க. மெதுவா போங்க. நான் வந்துடுறேன் என்று அதிரதன் கிளம்ப, பசங்க எல்லாரும் வந்து நின்றனர்.

“எல்லாரும் உள்ள போங்க” என்று அதிரதன் சத்தமிட்டான்.

“தம்பி தனியா போகாதீங்க!” தினகரன் சொல்ல, ஆமா “நாங்க கண்டிப்பா வருவோம்” என்றான் நளன். ஆமாம் “நாங்களும் வருவோம்” என்று அருளும் சொன்னான்.

நேரம் புரியாம என்னடா பேசுறீங்க? அதிரதன் சத்தமிட்டான்.

என்ன இருந்தாலும் அவர் என்னோட அக்காவை கல்யாணம் செய்தவர். அவருக்கு ஏதும் ஆகக்கூடாது. நாங்களும் வாரோம் என்று எழிலன் காவியனை பார்த்து கையை நீட்டினான். அவனும் எழிலன் கையை பிடித்தான்.

அங்கிள், எல்லாரையும் பார்த்துக்கோங்க. சீக்கிரம் வந்துருவோம் என்ற அதிரதன், நிது பசங்கள யாரும் காரை விட்டு இறங்க கூடாது என்று எழிலன் காவியனிடம் கண்ணை காட்டினான்.

அதிரதனுடன் எழிலனும் காவியனும் முன் சீட்டில் ஏற, நளனும் அருளும் பின் அமர்ந்தனர். மற்றவர்கள் நிதினுடன் சென்றனர்.

செள்ளியன் லயனில் இருந்து இவர்கள் பேசுவதை கவனித்து, எழிலனுக்கு தன் மீது இவ்வளவு பாசமா? என்று நினைத்தான்.

“அதிரதன் சார், என்னோட அசுவையும் குழந்தையையும் மட்டுமாவது காப்பாத்திடுங்க” என்றான் செள்ளியன்.

“என்ன பேசுற? யாருக்கும் ஏதும் ஆகாது” என்ற அதிரதன் காரை நிறுத்தாத. “மெதுவா போ” என்றான்.

அஷ்வினி பயத்துடன், செள்ளு நம்ம பையனுக்கு ஏதும் ஆகி இருக்காதுல்ல. பயமா இருக்குடா என்று அவன் கையை பிடிக்க, உனக்கும் நம்ம பையனுக்கும் ஏதும் ஆகாது. ஆக விட மாட்டேன் என்றான் செள்ளியன். அவள் அழுது கொண்டே அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

இவர்கள் பேசுவதை அதிரதன் காரில் இருப்பவர்கள் கவனித்தனர். அதிரதன் வேகத்திலே செள்ளியனை நெருங்கி விட்டான். ஆனால் அதிரதன் முன் செல்வதற்குள் ஓர் கார் செள்ளியன் காரை நிறுத்தி இருவரையும் வெளியே வர வைத்தனர்.

எங்க குழந்தை எங்கடா? என்று அஷ்வினி கேட்க, ஏய் என்ன சத்தம் போடுற? என்று ஒருவன் அஷ்வினியை அடித்தான்.

ஏய்..என்று செள்ளியன் அவள் முன் வந்து நின்று, அவ மேல கை வைக்கிறதெல்லாம் வச்சுக்காதீங்க? எங்க குழந்தை? என்று செள்ளியன் கேட்க, ரோட்டின் மறுபக்கம் ஒருவன் குழந்தையை இறக்கி விட்டான்.

அஷ்வினி வேகமாக செல்ல, குழந்தை தவண்டு கொண்டே வந்தது. வாகனங்கள் சென்று கொண்டிருக்க வராத.. என்று கத்திக் கொண்டே இவளும் செல்ல, கார் ஒன்று அவளை தூக்கி அடித்தது. சரியாக அந்நேரம் அவ்விடம் வந்து காரை நிறுத்தினான் அதிரதன்.

அசு..என்று செள்ளியன் கத்திக் கொண்டே செல்ல, அவனை கத்தியால் குத்தினர். இதை பார்த்த எழிலன் காரை நிறுத்திய மறுநிமிடம் இறங்கினான். காவியனும் அவன் பின் இறங்க, வேண்டாம்டா..என்று அதிரதனும் இறங்கினான்.

அதிரதனை பார்த்தவுடன் எல்லாரும் அங்கிருந்து சென்றனர். செள்ளியன் இவர்களை பார்த்து குழந்தையை கை காட்ட, குழந்தையை கார் ஏற்ற வந்த நேரம் அதிரதன் அதை தூக்கிக் கொண்டு உருண்டு கீழே விழுந்தான்.

பின் குழந்தையுடன் அதிரதன் அஷ்வினி அருகே சென்று பார்த்தான். அவள் இறந்து குழந்தையை பார்த்தவாறு இருந்தாள். அவள் தலை இரத்தமாகி மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து இருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தான்.

உயிரை கையில் பிடித்திருந்த செள்ளியனிடம் அதிரதன் வந்தான். அதற்கு முன் அவனிடம் வந்த எழிலன் செள்ளியன் கையை பிடித்து கதறிக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

எழிலனிடம் செள்ளியன் பேசிக் கொண்டிருந்தான். ரொம்ப சந்தோசமா இருக்குடா. உன்னோட இந்த பாசம் போதும். இவனுகளுக்காக அன்றே உன் பாசத்தை தவிர்த்தது ரொம்ப தப்புடா. என்னை மன்னிச்சிரு என்று குழந்தையுடன் அதிரதன் வருவதை பார்த்து, குழந்தையை தொட, ப்பா..என்று குட்டிப்பையன் அழுதான்.

உன்னை நானும் உன் அம்மாவும் விட்டுட்டு போறோம்ன்னு கோவிச்சுக்காதடா. “எங்கள விட உன்னை நல்லா வினு பார்த்துப்பாடா என்று அதிரதனை பார்த்து, இவனோட பெயர் தர்ஷன். எங்க பிள்ளைய அநாதை ஆக்கிடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை பிடித்துக் கொண்டே இறந்தான். குழந்தை அவன் மீதே சாய்ந்துக் கொண்டு ப்பா..என்றது. நின்று கொண்டிருந்த அனைவரும் கண்ணிலும் ஈரம் தொட்டு சென்றது.

விக்ரமை அழைத்த அதிரதன், “யாருமே உதவ வரலை. போலீஸ் ஒருவர் கூட வரலை. என்னடா பண்றீங்க?” கத்தினான்.

சாரி சார், யாரும் வர மாட்டாங்க. ஏன்னா..இதில் சம்பந்தப்பட்டவன் அமைச்சர்களை வைத்து இதில் தலையிடக்கூடாதுன்னு போலீஸாரை நிறுத்தி விட்டான். ஆனால் சார் இனி உங்களுக்கு உதவ பதவியில் இருக்கும் ஒருவர் தயாராக இருக்கார். அவராகவே உதவ முன் வருவதாக சொன்னார். “ஏ.சி.பி தாமோதரன்” என்றான் விக்ரம்.

ம்ம்..அவர் எண்ணை அனுப்புங்க. நான் கான்டாக்ட் பண்ணிக்கிறேன் என்று ஆம்பிலன்ஸில் இருவரையும் ஏற்றி விட்டு காவியனிடம் வந்த அதிரதன், உன்னை பற்றியும் நம் குடும்பம் பற்றியும் வெளியே தெரிய வேண்டாம் என்றான்.

காவியனும் சரி என்று விட, எழிலன் கண்ணீருடன் அதிரதனை அணைத்து அழுதான். மற்ற பசங்க குட்டிப்பையன் தர்ஷனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.

எழிலா, இனி தான் அவன் நம்மை தீவிரமாக கவனிப்பான். “உன் கண்ணீர் அவனை பலப்படுத்தும்” என்ற அதிரதன் எல்லாரும் கிளம்புங்க. நாங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு வாரோம். நிது எல்லாரையும் பத்திரமா கூட்டிட்டு போ சொல்லி காவியனை பார்த்து விட்டு எழிலனை அழைத்து சென்றான்.

காவியன் கையில் குழந்தையுடன் அறைக்குள் வந்தான். எல்லாரும் பின் வந்தனர். உள்ளே நர்ஸ் நேத்ராவை கவனித்துக் கொண்டிருந்தார்.

காவியன் கையில் குழந்தையை பார்த்து நேத்ரா வாசலை நோக்கினாள். சாரி வினு, அவனையும் அஷ்வினியை பார்க்க முடியாது என்று சொல்லிக் கொண்டே நிதின் உள்ளே வந்து கதவு ஜன்னலை திறந்து வைத்தான்.

அவங்களுக்கு என்ன? நேத்ரா கேட்க, அவங்கள கொன்னுட்டாங்க என்று நிதின் கூற, தினகரன் அவனிடம் வந்து, கொன்னுட்டாங்களா? என்று கேட்டார்.

ஆமா சார், கொன்னுட்டாங்க. குழந்தைய மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது என்ற நிதின் நர்ஸ் அருகே வந்தான்.

இவங்கள இன்றே இப்பொழுதே டிஸ்சார்ஜ் பண்ணலாமா? நிதின் கேட்டான்.

“சார், நீங்க டாக்டரிடம் தான் பேசணும்” என்றார் நர்ஸ்.

இத்தனை பேர் இங்க அறைக்குள் இருந்தால் பேசண்டால் ஓய்வெடுக்க முடியாது.

நேத்ரா அழுவதை பார்த்த நர்ஸ், இப்படியெல்லாம் நீங்க அழக்கூடாது. அமைதியாக ஓய்வா இருக்கணும். ஒரு மாதம் நன்றாக ஓய்வெடுத்தால் தான் உங்கள் உடல் பழைய நிலைக்கு வரும். இல்லை உங்களது கர்ப்பப்பை வீக்காகும் என்றார்.

அழாதம்மா..என்று யசோதாவும் சிவநந்தினியும் அருகே வந்தனர். யசோதா நேத்ரா கண்ணை துடைக்க, சிவநந்தினி நேத்ராவை அணைத்தாள். நேத்ராவும் அணைத்தாள்.

யாராவது ஒருவர் மட்டும் இருங்க. மத்தவங்க கிளம்புங்க. இவங்க இந்த ஒரு மாதம் யாருடன் இருப்பாங்களோ அவங்க டாக்டரை பார்க்க போங்க என்று நர்ஸ் கிளம்பினார்.

செழியன் நேத்ரா முன் வந்து, “நான் செய்தது தவறு தான். என்னை மன்னிச்சிரும்மா. நீ தண்டனை கொடுத்தாலும் ஏத்துப்பேன்” என்று அவர் கூற, “இல்ல நான் தான இவருடன் வந்தேன். எனக்கு தண்டனை கொடும்மா” என்று சிவநந்தினி தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் வந்து நின்றார்.

வினு கோபப்படப் போறா? என்று நிதின் ஆத்விகாவிடம் சொல்ல, நேத்ரா அழுதாள்.

இது தான் என்னோட அம்மா, அப்பாவிடம் இல்லை. என்னால உங்களை முழுசா மன்னிக்க முடியலை. என்னோட அப்பாவே உங்களை மன்னிச்சுட்டார். நான் என்ன சொல்றது என்று காவியனை பார்த்தாள். எல்லாரும் அவன் என்ன சொல்லப் போகிறானோ? என்று பயந்து பார்த்தனர்.

நான் என்னோட குடும்பத்தை விட்டு உங்களுடன் வர முடியாது. ஆனால் நான் மன்னிக்கிறேன். உங்க யாருக்கும் நான் ஒருவன் பிறந்ததே தெரியலைங்கிறதால உங்களை மன்னிக்கிறேன் என்று யசோதாவை பார்த்தான்.

நீங்க கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் நீங்க காதலிச்சவருக்காக உண்மையா இருந்திருக்கீங்க? இவங்க ஏதாவது செஞ்சிருவாங்கன்னு என்னை அப்படியே விட்டுட்டீங்கள? என்று காவியன் கண்ணீருடன் எத்தனை பேர் அநாத பையன்னு சொல்லி இருக்காங்க தெரியுமா? என்று கேட்க, யசோதா அழுதார்.

பாட்டி காவியனிடம் வந்து, காவியா நீ மட்டுமல்ல நம்ம நிலையத்துல இருக்கிற எல்லாருமே இந்த பெயருடன் தான் இருக்காங்க. நீங்க எல்லாரும் கஷ்டப்படுறது புரியது. ஆனால் அதுக்காக உங்கள பெத்தவங்களிடம் இதை சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. கொஞ்சம் அவங்க நிலையையும் யோசித்து பார்.

அவங்க குடும்பத்துக்கு விசயம் அன்றே தெரிந்தால் ஏதாவது செய்திருக்கலாம் இல்லை அவங்க ஏத்துகிட்டாலும் உன் அம்மாவும் நீயும் கஷ்டப்படும் படி தான் இந்த சமூகம் நடந்திருக்கும்.

உன்னை அநாதைன்னு சொன்னவங்க எல்லாரும் அப்பா பேர் தெரியாதவன்னு சொல்லி இருப்பாங்க. ஆனால் இப்ப யாரும் உன்னை அநாதைன்னு சொல்ல முடியாது. அப்பா பேர் தெரியாதவன்னு சொல்ல முடியாது. உன் அம்மாவை ஏத்துக்க முயற்சி செய். நீ மட்டும் கஷ்டப்படலை. அவங்களும் பட்டிருக்காங்க என்று நேத்ராவிடம் திரும்பினார்.

அவள் எழ, படுத்துக்கோம்மா. நீ காவியனை பார்த்து கொண்ட விதத்திலே இருவரும் உறவானவர்கள்ன்னு புரிஞ்சது. ஆனா நேத்ராம்மா, உன்னோட அம்மா, அப்பாவை போல இவங்களை இழந்துறாதம்மா. நம்ம நிலையத்தை நாங்க பார்த்துக்கிறோம். நீ எப்ப வேண்டுமானாலும் வா. சுஜியும் திருமணம் முடிந்த பின்னும் வேலையை தொடர்வதாக தான் சொன்னாள். என்ன தங்க மாட்டாள். நாங்க பசங்கல்ல பார்த்துக்கிறோம்.

இப்ப உனக்கும் இந்த குட்டிப் பையனுக்கும் தான் ஏதும் ஆகாமல் பார்த்துக்கணும். நீயும் உன்னோட தம்பிகளும் இவங்களுடன் இருப்பது தான் பாதுகாப்பானது.

அப்புறம் சாரோட பையனை கல்யாணம் பண்ணிக்கோம்மா. ஒரு பொண்ணுக்கு உற்றவன் இல்லாமல் வாழ முடியாது. வாழவும் விட மாட்டானுக. நீ படிச்ச பொண்ணு. உனக்கு அனுபவமும் இருக்கு. புரிஞ்சு நடந்துக்கோடா என்று செழியனை பார்த்து, “சார் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கோங்க” என்று கண்ணீருடன் அவர் வெளியே வந்தார். காவியனை பார்த்த அவன் நண்பர்களும் வெண்பா, ஜீவா, தேவா, அருணா கண்கலங்க வெளியே செல்ல, கொஞ்ச நேரம் இருங்க பாட்டி. ரதன் வந்திருவான் என்று நிதின் வெளியே வந்தான்.

காவியன் தன் கையிலிருந்த குட்டிப்பையனை தாட்சுவிடம் கொடுத்து விட்டு தன் நண்பர்களை பார்க்க சென்றான்.

நேராகுமாதுப்பா, இந்த தன்வந்த் போனதிலிருந்து பசங்களுக்குள் பிரச்சனையில்லை இருந்தாலும் இந்த பிரச்சனை இருக்கு. புள்ளைகளை தனியே விட பயமா இருக்கு. நாங்க கிளம்புறோம்.

அதான் பசங்க இருக்காங்கல்ல பாட்டி என்றான் நிதின்.

வெளியே வந்த காவியன் பாட்டியை அணைத்துக் கொண்டான். பின் தன் நண்பர்களை அணைக்க எல்லாரும் அழுதனர்.