அத்தியாயம் 32

பிரணா, ஆத்வி வாங்க போகலாம். இதற்கு மேல் பேசி ஏதும் ஆகப் போறதில்லை என்று சிவநந்தினி அழைத்து போகலாமா?  என்று கணவரை பார்த்தார்.

அம்மா, எனக்கு என் தம்பியை விட என் பொண்டாட்டி, புள்ளைங்க பாதுகாப்பு தான் முக்கியம் என்றார். நீங்களும் வரலாம் என்று அவர் அம்மாவை பார்த்தார். அவர் ராமவிஷ்ணுவை பார்த்தான்.

நந்தும்மா..ஒரு நிமிசம் என்ற அதீபன், பாட்டி இவருக்கு தான் எங்களை பிடிக்கலை. நானும் அம்மாவுடனே போகிறேன். அதுவும் சில நாட்கள் மட்டுமே பின் என் அம்மா நிர்மலாவுடன் வெளிநாட்டிற்கு சென்று விடுவேன் என்று தாட்சாயிணியை பார்த்தான். அவள் கண்கள் கலங்கியது.

பாட்டி, நான் போகிறேன் என்று அவனும் செழியன், நந்தினியுடன் செல்ல, நில்லுடா நீங்க இல்லாம இந்த வீட்ல நாங்க என்ன செய்றது? இரு நாங்களும் வாரோம் என்று ரவிக்குமாரும் தன் குடும்பத்துடன் வந்தார்.

அந்த வீட்டில் பாட்டியும் ராமவிஷ்ணுவும் இருக்க, அவர் தன் மகன் அனைவரையும் போகதீங்கன்னு சொல்லுவான்னு எதிர்பார்த்து அவரை பார்க்க, நந்து போறேல்ல போ. நான் உன்னை விட்டுட்டேன்னு நினைக்கிறியா? கண்டிப்பா நீ என்னோட தான் இருக்கணும். இருக்க வைப்பேன் என்று அவர் பேச, பாட்டி கோபமாக எழுந்து,

நீ என் வயித்துல தான் பிறந்தியா? நீ வேண்டாம்..நீ வேண்டாம்..போ..என்று அவரை வெளியே இழுத்து வந்து அவரை தள்ளி விட்டார். அனைவரும்  நின்றனர்.

அம்மா, உனக்கென்ன பைத்தியமா? ராம விஷ்ணு சத்தமிட்டார்.

இல்லடா. உனக்கு தான் பைத்தியம். இப்படி யாருமில்லாமல் வாழ்வதும் சாவதும் ஒன்று தான். இதுவரை இந்த வீட்டில் ஐந்து தலைமுறையாய் இருந்து வந்திருக்கோம். பொண்ணுங்க கட்டிக் கொடுத்து போய் தான் வழக்கம். ஆனால் இன்று உன்னால எல்லாரும்..

இல்லை என்று கண்ணை துடைத்து, நீ போயிரு. நீ நம் குடும்பத்திற்கு சரியான மகனாக இல்லை. போ..என்று அவரை கேட்டிற்கு இழுத்து வந்து வெளியே தள்ளி விட்டு இனி, நான் செத்தாலும் நீ இங்கே வரக்கூடாது என்று கத்தி விட்டு, சிவநந்தினியிடம் வந்து,

மன்னிச்சிரும்மா..தாய்ப்பாசம் என்னை விட மாட்டேன் என்றது. அதான். நீ வீட்டுக்கு வந்த மகாலட்சுமி நீ போகக்கூடாதும்மா. நீ இல்லாமல் என்னை யாரும்மா பார்த்துப்பா. என்னை அநாதையா விட்டு போகப் போறியாம்மா? என்று சிவநந்தினி கையை பிடித்து அழுதார்.

அத்தை, எதுக்கு மன்னிப்பெல்லாம் என்று சிவநந்தினியும் மாமியாரை அணைத்துக் கொண்டார்.

வாங்கப்பா..எல்லாரும் உள்ள வாங்க என்று சொல்ல, எல்லாரும் உள்ளே சென்றனர். வெளியே அனைவரையும் வெறித்து பார்த்துக் கொண்டு, எல்லாரையும் சும்மா விடமாட்டேன் என்று ராம விஷ்ணு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

உள்ளே வந்த அதீபன் செழியனிடம், அப்பா..முதல்ல தாத்தாவிடம் இங்க நடந்ததை சொல்லணும். இல்லை அப்பா அங்கே போய் வேறு விதமாக சொல்லி அம்மாவை கஷ்டப்படுத்துவார் என்றார்.

சரி, வா..போகலாம் என்று செழியன் அழைக்க, நிதினும் வந்தான்.

நிது, நீ எல்லாரையும் பார்த்துக்கோ. நான் அவர்களுடன் செல்கிறேன் என்று ரவிக்குமார் கிளம்பி அதீபன் தாத்தாவை சந்தித்து பேசினர். அவன் பார்வை அவன் அம்மா அறையை வருட, நிம்மி வெளிய வா..என்று அவர் அழைக்க, அதீபனுக்கு அவன் அம்மா ஆறுதல் தேவைப்பட்டது. அவன் எழுந்து அவன் அம்மாவை அணைக்க, அவர் அவனை பார்த்து சாப்பிட்டியா? தூங்கினாயா? அவர் என்ன செய்கிறார்? என்று கேட்க, அவரை விட்டு விலகி நின்றான் அதீபன்.

நடந்ததை செழியன் சொல்ல, எனக்கு தான் தெரியுமே? ஆனால் அண்ணா நந்து உங்களை முழுசா நம்பியது தான் சந்தோசமா இருக்கு என்று கண்கலங்கினார் நிர்மலா. ஆனால் அதீபன் தாத்தாவிற்கு கோபம் வந்தது.

மாப்பிள்ள, எங்க போயிருக்கார்? சொல்லுங்க. அவனை என் கையாலே அடிச்சு கொல்லணும் என்று அவர் ஆவேசப்பட, அதீபன் அவரை அமைதிப்படுத்தி அம்மாவை இங்கேயே பத்திரமா பார்த்துக்கோங்க.

அப்பா..இல்ல அந்த ஆளு வந்து என்ன சொன்னாலும் நம்பாதீங்க. அம்மா கவனமா இருங்க. தேவையில்லாத வேலை செய்து நான் உங்களையும் வெறுக்கும் படி செய்யாதீங்க என்று அதீபன் எச்சரித்து வெளியே வந்தான்.

சாப்பிட்டு போங்க என்று அவன் பாட்டி, அவர்களை அழைக்க, யாரும் சரியில்லை. நாங்க இப்பவே கிளம்பணும். அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களிடம் கூட பேசாம வந்துட்டேன் செழியன் சொல்ல,

சரிப்பா, போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார். அவர்களும் வீட்டிற்கு வந்தனர்.

நடந்த அனைத்தையும் பிரணா யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து நிதினுக்கு தெரியாமல் அவன் அலைபேசியில் அதிரதனுக்கு அனுப்பி வைத்தாள்.

அதிரதன் ரணா அனுப்பிய பதிவை பார்த்து சீற்றமுடன் எழுந்து ஒருகையாலே அவன் சட்டையை போட்டு பொத்தானை போட முடியாமல் முயற்சித்துக் கொண்டே வெளியே வந்தான்.

அதிரதன், உனக்கு இன்னும் சரியாகலை. நீ எங்க கிளம்பிட்ட? சாரு கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தாள். வினு நேத்ரா அப்பொழுது தான் எழுந்தாள். அவளும் அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஜீவாவும் அவனிடம் வந்து, பாஸ் இப்ப வெளிய போறது ஆபத்து என்றான். ஆனால் அதிரதன் ருத்ரனாய் சீற்றமுடன் அவனை தள்ளி விட்டு வெளியே வந்தான். சாரு அவன் பின்னே ஓடி வந்தாள். திரும்பி அவளை முறைத்து பார்த்த அதிரதன் அருகே நேத்ரா வந்தாள்.

சார், என்னாச்சு? உங்களுக்கு இன்னும் சரியாகலையே? எங்க போறீங்க? கேட்டாள்.

உள்ள போங்க. யாரும் வெளியே வர வேண்டாம் என்று கத்தினான் அதிரதன்.

சார், இந்த நிலையில வெளிய போறது நல்லதில்லை. என்ன பிரச்சனை என்றாவது சொல்லுங்க? கேட்டாள் நேத்ரா.

வினு, நான் இப்பவே என்னோட அம்மா, அப்பாவை பார்க்கணும். அங்க எல்லாரும் என்று நிறுத்தி அவளிடம் சென்று அவளை அணைத்து, நான் தப்பு செஞ்சிட்டேனோன்னு தோணுது என்று அழுதான். மூவரும் அவனை திகைத்து பார்த்தனர்.

என்னாச்சு சார்? பெரிய பிரச்சனையா? யாருக்கும் ஏதுமில்லையே? நேத்ரா கேட்க, நான் போயிட்டு வந்திடுறேன் என்று அவன் விலக, அவன் கையை பிடித்து போகாதீங்க சார் என்றாள்.

நான் போகணும் வினு என்றான் அமைதியாக. நீங்க விசயத்தை முதல்ல சொல்லுங்க. போகலாமா வேண்டாமான்னு நான் சொல்கிறேன் என்றாள். அவன் மற்றவர்களை பார்த்து தயங்கினான்.

ஜீவா, எனக்கு ஒரு வேலை இருக்கு. வா..வந்து கெல்ப் பண்ணு என்று சாரு அவனை அழைத்து சென்றாள். அதிரதன் தன் பதிவை காட்ட, அவள் பார்த்து விட்டு, “இப்ப போய் என்ன சார் பண்ணப் போறீங்க?” உங்களுக்கு நடந்தது தெரிந்து விட்டது என்றால் அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. நீங்க என்ன ஆறுதலாக பேசினாலும் ஏதும் அவங்களால் ஏத்துக்க முடியாது.

“இப்ப தான் அவங்களே அவங்க பிரச்சனைய முடிச்சிட்டாங்களே?” ஃபீரீயா விடுங்க சார்.

அவன் மீண்டும் அவளை அணைத்தான். சார்..விடுங்களேன் என்றாள்.

உனக்கு காய்ச்சல் சரியாகிடுச்சா அதிரதன் கேட்க, ம்ம்..பரவாயில்லை சார் என்றாள்.

உனக்கு காய்ச்சல் வந்தால் மயக்கமும் வருமா? அதிரதன் கேட்க, இல்ல சார் சோர்வு அதிகமானதால் தான் மயக்கம் வந்திருக்கும்.

சாரி வினு, என்னோட தம்பி உன்னிடம் தப்பா பேசிட்டான்ல்ல? அவன் கேட்க, இல்ல சார் சரி தான். அவர் இடத்தில் யார் இருந்தாலும் அப்படி தான் பேசி இருப்பாங்க என்று அவன் கையை எடுத்து விட்டு நகர்ந்து நின்றாள்.

உள்ளிருந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவும் சாருவும் அதிரதன் அவர்கள் பக்கம் திரும்ப, இருவரும் ஒவ்வொரு திசையிலும் சென்றனர். அவர்களை பார்த்துக் கொண்டே “வா வினு, போகலாம்” என்று அவளுடன் அதிரதன் சென்றான்.

அதிரதன் அறைக்கு வினுவை அழைக்க, “சார், நான் இங்கேயே இருக்கேன்” அவள் சொல்ல, உன்னை நான் ஏதும் செய்வதாக இல்லை என்று சொல்லிக் கொண்டே அவள் கையை பிடித்து, “எனக்கு கொஞ்சம் கெல்ப் வேணும்?” என்றான்.

“சார், நீங்க இப்படி பேசவே மாட்டீங்க?” சாரி சொல்றீங்க, உரிமையா உதவி கேட்குறீங்க? சரியில்லை சார்.

எனக்கு ரொம்ப பெயினா இருக்கு. நீ உதவ கூட யோசிக்கிறேல்ல. நானே பார்த்துக்கிறேன் என்று படுக்கையில் அமர்ந்து பின்னிருந்த தலையணையை சரி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

மனம் கேட்காமல் நேத்ரா அருகே வந்து அவனை நிமிர்த்தி தலையணையை சரி செய்தாள். நீங்க ஓய்வெடுங்க சார் என்று அவள் செல்ல, அவள் கையை பிடித்து “தேவையில்லாததை யோசிக்காத” என்று அவளது உள்ளங்கையில் முத்தமிட்டான். அவள் உடல் சில்லிட்டது. ஆனாலும் விரைந்து கையை அவனிடமிருந்து எடுத்து கோபமாக அவள் செல்ல,

வினு, நான் சொல்றதை கேட்டுட்டு போ. நான் எப்போதும் என் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன். “எனக்கானவள் நீ தான்” என்று அவன் சொல்ல, அவனை முறைத்து விட்டு வெளியே சென்றாள் வினு நேத்ரா.

நிதின் தன் அலைப்பேசியில் இருந்த பதிவை பார்த்து அனைவரையும் சந்தேகமாக” யார் அனுப்பி இருப்பார்கள்?” என பார்த்தான். அம்மா, அதீபன், பாட்டி வாய்ப்பில்லை. சேர்மன் சாருக்கு நேரில் எதையும் பேசி தான் பழக்கம். நம்ம அம்மா, அப்பா கண்டிப்பாக இருக்காது என்று ஆத்விகாவை பார்த்தான். அவள் அம்மா அருகே சாதாரணமாக ஆனால் வருத்தமாக அமர்ந்திருந்தாள்.

தாட்சாயிணியை பார்த்து அவளை தனியே அலைபேசியை காட்டி கேட்டான். ரணா அதை பார்த்து, அவனிடம் வந்து நான் தான் அனுப்பினேன்.

எதுக்கு பிரணா? அவன் வரப் போறான் பாரு?

மாமா, நம்ம எல்லாருக்கும் தெரிந்த விசயம் அண்ணாவுக்கு மட்டும் தெரியாமல் இருந்தா நாம அவரை குடும்பத்திலிருந்து விலக்கியது போல் தெரியும். அதனால் தான் அனுப்பினேன். இப்ப கண்டிப்பா அண்ணா பார்த்துருப்பான். ஆனால் பதில் ஏதும் வரவில்லையே? பிரணா கேட்க, நிதின் நேத்ராவிற்கு அழைப்பு விடுத்தான்.

அவள் அவனை திட்டி தீர்த்து விட்டாள். அவள் பேசி சமாதானப்படுத்தியதாக அவள் சொல்ல, நான் அனுப்பலை வினு. அவனோட குட்டிம்மா தான் என்றான்.

யார்கிட்ட பேசுறீங்க மாமா? பிரணா கேட்க, என்னோட ப்ரெண்டிடம் பேசுறேன். நான் அப்புறம் கால் பண்றேன் என்று வைத்து விட்டு ரணாவை முறைத்துக் கொண்டே ஹாலிற்கு சென்றான் நிதின். பொண்ணுங்களும் அவன் பின் சென்றனர்.

செழியன், ரவிக்குமார், அதீபன் அங்கே வந்து அமர்ந்தனர். அப்பா, நான் அறைக்கு செல்கிறேன் என்று அதீபன் செல்ல, அதீபா சாப்பிட்டு போ என்று ரேவதி அழைத்தார்.

எனக்கு பசிக்கலை அத்தை என்று அவன் சென்றான். எல்லாரும் நடந்ததையே யோசிச்சுகிட்டு இருக்காதீங்க. வேலைய பாருங்க என்ற செழியன், அம்மா இன்று மட்டும் சாப்பாட்டிற்கு வெளிய ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றார் செழியன்.

பாட்டி வருத்தமுடன் அறைக்கு செல்ல, அம்மா நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிடலை என்று சத்தமிட்டு அவரும் அறைக்கு சென்றார். சிவநந்தினியும் செல்ல, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

செழியன் வருத்தமாக அமர்ந்திருந்தார். சிவநந்தினியும் அவர் அருகே வந்து அமர்ந்தார்.

நீ என்னை நம்புறேல்லம்மா? செழியன் வருத்தமாக மனைவியிடம் கேட்டார். சிவநந்தினி பேசாமல் இருந்தார். செழியன் படுக்கையிலிருந்து சிவநந்தினியின் காலடியில் அமர்ந்து அவர் மடியில் தலையை வைத்தார். அப்பொழுதும் சிவநந்தினி அமைதியாக இருந்தார். அவரை நிமிர்ந்து பார்த்து, நந்து “என் மீது உனக்கு நம்பிக்கை வரலையா?” கேட்டார்.

உங்க தம்பி என்னை காதலிக்கிறான்னு உங்களுக்கு முன்பே தெரிஞ்சிருக்கு. ஆனால் என்னிடம் இதை பற்றி சொல்லவேயில்லை. அவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்திருக்கான். அப்பொழுதும் நீங்க சொல்லலை? இப்பவும் விட்டிருக்கலாமே? அவன் என்ன செய்தால் உங்களுக்கென்ன? என்று அவரை நகர்த்தி விட்டு அழுது கொண்டே முதுகு காட்டி படுத்தார்.

“என்னை மன்னிச்சிரும்மா” என்று சொல்லிக் கொண்டே சிவநந்தினி அருகே வந்து அவரை அணைத்து செழியனும் படுத்துக் கொண்டார்.

நந்து, “என்னை பாரு” என்று அவரை தன் பக்கம் திருப்பி, “நீயே எல்லாத்தையும் சரி செய்யணுன்னு நினைத்தேன். அதனால் தான் என் தம்பியை நான் வெளியே அனுப்ப முயற்சிக்க கூட இல்லை. அதே போல் நடந்தும் விட்டது.  என்னை நம்பு நந்து. அவன் சொன்னது போலெல்லாம் நான் சவால் விடுக்கவில்லை” என்று கண்கலங்கினார்.

சிவநந்தினியும் அவர் மார்பில் புதைந்து, அவன் என்னிடம்..என்னால சொல்ல கூட முடியலை. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. “நீங்கள் என்னை தவறாக நினைத்துக் கொள்வீர்களோ?” என்று பயந்தேன். ஆனால் நீங்க இந்த அளவு பாதுகாப்பா பார்த்துக்கிட்டீங்க. “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்று அழுதார்.

உன்னோட கணவனா நான் என் மனைவி நந்துவை பாதுகாத்தேன். இதில் என்ன உள்ளது? என்று அவரும் அணைத்து இருவரும் சமாதானமானார்கள்.

பாட்டியை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்க ரவிக்குமார் ரேவதி ஆத்விகாவும், செழியன், சிவநந்தினியை சாப்பிட வைக்க ரணாவும், அதீபனை சமாதானப்படுத்த நிதினும் தாட்சாயிணியும் சென்றனர்.

அம்மா சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன் என்று செழியன் சொல்ல, அப்பா பாட்டி சாப்பிட்டுருவாங்க என்று ரணா அவரை சாப்பிட வைக்க, பாட்டியும் தன் பேத்தி ஆத்விகாவிற்காக சாப்பிட்டார். ஆனால் அதீபனை நிதினாலும் தாட்சணியாவாலும் சமாதானப்படுத்த முடியவில்லை. அவன் கத்தி விட்டான். இருவரும் சோகமாக வந்தனர்.

அண்ணா, நீ போ. நான் அவனிடம் பியானோ வாசிக்க சொல்லி தர சொல்லி ஏதாவது பேசி சாப்பிட வச்சுட்டு வாரேன் என்று மீண்டும் அவனறைக்குள் வந்தாள் தாட்சாயிணி. அவனுக்கு ராமவிஷ்ணு மேல் அவ்வளவு கோபம். கையில் கிடைத்ததை தூக்கி எறிந்தான். அங்கே வந்த தாட்சாயிணி காலடியில் வந்து விழுந்தது ஒரு “ப்ளவர் வாஷ்”.

“ஏய், நீ இன்னும் போகலையா?” அதீபன் ஆக்ரோசத்துடன் கத்தினான். நிதின் உள்ளே வந்து, வா..என்று தாட்சாயிணி கையை பிடித்து அதீபனை முறைத்தான்.

அண்ணா, நான் தான் சொன்னேன்ல. நான் பேசிட்டு வாரேன் என்று கண்ணை காட்டினாள். அவனுக்கு விட்டு போக மனமில்லாமல் இருக்க, “அண்ணா ப்ளீஸ்” என்றாள் தாட்சாயிணி.

சீக்கிரம் வா. நான் உனக்காக சாப்பிட காத்திருப்பேன் என்று அதீபனை பார்த்துக் கொண்டே நகர்ந்தான் நிதின். இருவரும் பேசுவதை பார்த்துக் கொண்டே நின்றிருந்த அதீபன் நிதின் வெளியே சென்றவுடன், “நீ கிளம்பு. எனக்கு பசிக்கலை” என்றான்.

நீ பசி தாங்க மாட்டன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால் நீ சாப்பிடலைன்னாலும் பரவாயில்லை என்று உணவுத்தட்டை ஓரமாக வைத்து விட்டு, “எனக்கு பியானோ ப்ளே பண்ணனும் போல இருக்கு” என்றாள்.

“விளையாடாத போயிரு” என்றான்.

நான் விளையாடலை. பியானோ ப்ளே பண்ணா மனசுல இருக்குற கஷ்டம் தீரும் என்றாள்.

யாருக்கு? அவன் புருவத்தை உயர்த்த, ஹப்பாடா அமைதியா பேசுறான் என்று “நமக்கு தான்” என் டென்சனும் தீரும். உன் கோபமும் குறையும். நல்லா தூக்கம் வரும் என்றாள்.

என்ன?

இல்ல. சும்மா தான். ப்ளீஸ் எனக்கு சொல்லித்தாயேன் அவள் கெஞ்ச, சிந்தித்து விட்டு “சரி” என்றான்.

மியூசிக் சிஸ்டம்ஸ் வைத்திருக்கும் அறைக்கு அவளை அழைத்து வந்தான்.

அப்பாடா, நான் ப்ளே பண்ணப் போறேன் என்று பியானோவை பார்த்து ஆர்வத்தில் குதித்தாள் தாட்சாயிணி.

என்ன பண்ற?

மாமா, உனக்கு தெரியுமா? என்னோட மிஸ் பியானோவை கண் முன் வைத்து கிளாஸ் எடுப்பாங்க பாரு. கடுப்பா இருக்கும். உனக்கும் அப்படி தான் எடுத்தாங்களா? அவள் அவனை பார்த்தாள்.

நீ என்ன சொன்ன?

நான் என்ன சொன்னேனா? நான் பேசுவது உன் காதில் விழவேயில்லையா?

விழுந்தனால தான் கேட்கிறேன்?

எனக்கு புரியல? என்று சிந்தித்துக் கொண்டு, நான் தப்பா ஏதும் சொல்லீட்டேனா?

நடிக்கிறியா நீ? அவன் கேட்க, சீரியசா எனக்கு ஒன்றுமே புரியல சீனியர். நான் சத்தியம் கூட செய்கிறேன் என்று அவன் தலையில் கை வைத்தாள்.

அவள் கையை பிடித்து, நீ எப்படி அழைத்தாய்?

எப்படியா? மாமா தான? என்று அவனை பார்த்துக் கொண்டு, நாக்கை கடித்தாள்.

அதிரதன் மாமா..மாதிரி நீயும் மாமா முறை தானே?

எப்பவாது வாய் தவறி வந்திரும். சாரி என்றாள்.

அது என்ன? ஒரு நேரம் போடான்னு சொல்ற? மறு முறை சீனியர்? இப்ப மாமா? அவன் கேட்க, அதுவா சின்ன குழப்பம் தான்.

குழப்பமா?

இல்லை..இல்லை..நாம ப்ளே பண்ணலாமா? என்று அவனை திசை திருப்ப முயன்றாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே அதற்கான இடத்தில் அவளை அமர வைத்தான். தாட்சாயிணி அலைபேசி அவளை அழைத்தது. அவள் அவனை பார்த்தாள்.

அவன் கையை காட்ட, எழுந்து கோபமாக அலைபேசியை எடுத்து, என்னடா சொல்லு?

தாட்சு, நம்ம சந்தீப்புக்கு “பிரேக் அப்” ஆகிடுச்சு. அழுது உசுற எடுக்குறான். கெல்ப்புக்கு வா.

“பிரேக் அப்” பா? நான் வரணுமா? வீட்ல எல்லாரும் கொன்னுடுவாங்க என்றாள்.

அதான் உன்னோட மாமா வீட்ல தான இருக்க? கேட்டுட்டு வா.

முடியவே முடியாது. என்னையே “ஹவுஸ் அரெஸ்ட்” பண்ணி வச்சிருக்காங்க?

எதுக்கு? யாரையும் லவ் பண்ணி ஓடி போக முயற்சி செஞ்சீயா?

டேய் கிஷோர், உன்னோட மூளைய மியூசியம்ல தான் வைக்கணும். கடுப்பேத்தாதடா என்றாள். அதீபன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏய், சொல்லவே இல்லை. உன்னோட எந்த மாமன்? அவன் கேட்க, எதுக்கு கால் பண்ணிட்டு என்ன பேசுற? வைசு கிட்ட கேளு.

அவ அம்மா ரொம்ப ஸ்ரிட்டு. உனக்கு தெரியாதா?

தெரியுது? முதல்ல எங்க வீட்ல இருந்தேன். அம்மா, அப்பா மட்டும் தான் ஈஸியா ஏமாத்திட்டு வந்துருவேன். இப்ப அண்ணா இருக்கான். மாமா குடும்பமே இருக்கு. இதெல்லாம் விட எங்கள போட்டு தள்ள காத்துகிட்டு இருக்கானுக. நான் மட்டும் இப்ப வெளிய வந்தேன். தெரு தெருவா என்னோட உயிர காப்பாத்திக்க ஓடணும்? தயாரா இருக்கியா?

நீ வரவே வேண்டாம் தாயே? ஆனால் இவனை என்ன செய்றது? குடிக்கவே இல்லை. ஆனால் எப்படி புலம்புகிறான் பாரு என்று சந்தீப் அருகே அலைபேசியை கிஷோர் வைத்தான்.

“என்னிலா..

பொன்னிலா..

என்னை விட்டு போனால் என் செந்நிலா

நான் வருவேன் நிலா

மன்னிப்பை ஏற்பாயோ? என் தேனிலா..

நிலா நிலா வாராயோ?”

அவன் உளற, அதீபன் அருகே இருப்பதை மறந்து விழுந்து விழுந்து சிரித்தாள் தாட்சாயிணி. அலைபேசியை கிஷோர் எடுத்துக் கொள்ள,

அவன் நிலாவை சீக்கிரம் பிடிச்சு கொடுடா .இல்ல நீ தான் நிலா இருக்கும் இடத்துக்கு போகணும் என்று சொல்லிக் கொண்டு மேலும் சிரித்தாள். அதீபன் கோபமாக அவளை பார்த்தான்.

சிரிக்கிறத நிறுத்திட்டு ஏதாவது ஐடியா கொடு? கிஷோர் சீரியசாக கேட்டான்.

சரிடா, இரு..சொல்றேன் என்று சிரிப்பை நிறுத்தி, வேற வழியே இல்லை. ஒன்று அந்த நிலா வீட்டுக்கு கூட்டிட்டு போ.

இல்ல அவனை அவனோட அம்மா, அப்பாகிட்ட போட்டு குடுத்துட்டு ஓடிரு என்றாள்.

நான் மட்டும் நிலா வீட்டுக்கு இவனை அழைத்து சென்றால் என்னை மிலிட்டரி அங்கிள் துப்பாக்கி இல்லாமலே கொன்றுவாரு. அம்மாவிடம் அழைத்து சென்றாலும் நாளை வந்து சண்டை போடுவானே?

உனக்கு தூங்கணுமா? இல்லை அவனது அழகிய கவிதை ராகத்தை கேட்கணுமா?

நாளைக்கு எனக்கு பிராக்டிஸ்க்கு கோச் வேகமா வர சொன்னாரு. நான் போகணும். அப்ப அவனை போட்டு கொடுத்துட்டு உன் வேலைய பாருடா?

சரி, நான் மட்டும் எப்படி?

அதுக்கு?

உன்னோட ஒரு மாம்ஸ் ஃபிரீயா தான இருப்பாரு. இல்ல அண்ணாவை..

கொன்றுவேன். என்னோட குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்ற வேலைய வச்சுக்காதீங்கடா. அவன் தான் குடிக்கலைல்ல. அப்புறம் என்ன ரெண்டு சாத்து சாத்தி அவனை இழுத்துட்டு போ. நீயெல்லாம் பாக்ஸ்ர்ன்னு சொல்லாத. எனக்கு அசிங்கமா இருக்கு என்றாள் தாட்சாயிணி .

என்ன சொல்லீட்ட தாட்சு? இப்ப பாரு என்று வீறிட்டு எழுந்தவனை பார்த்து சந்தீப் அலறிக் கொண்டு அவன் நிலாவிலிருந்து விழித்தான்.

அய்யோ, யாராவது காப்பாத்துங்க. இங்க ஒருத்தன் என்னை கொல்லப் போறான்? என்று சந்தீப் ஓட, பைக்கை எடுத்த கிஷோர் அவனை அள்ளி தூக்கி போட்டு கொண்டு அவனை அவன் வீட்டில் சேர்த்து விட்டு கிளம்பினான்.

தாட்சாயிணி மேலும் சிரித்துக் கொண்டே எழுந்தாள். அதீபன் முறைப்பதை பார்த்து, சாரி சீனியர் நாம ப்ளே பண்ணலாமா? அவள் கேட்க,

யாரிடம் இந்த நேரத்துல பேசுற?

ப்ரெண்டு தான்.

ப்ரெண்டா? என்று அவளை அவன் உற்றுப்பார்த்தான்.

உனக்கு கூட தெரியும்ல. நம்ம காலேஜ்ல “பாக்ஸிங் சேம்பியன்ஷிப்”பில் முதலாம் இடத்தை பிடித்தானே? அந்த கிஷோர் தான்.

எனக்கு தெரியாது?

என்னோட தான சுத்துவான்?

உன்னோட சுத்துனா எனக்கு எப்படி தெரியும்? அவன் சொல்ல, அவள் முகம் சுருங்கியது.

நேரமாகுது, நான் ஓய்வெடுக்கணும். இப்ப வர்றீயா? இன்னும் யாருடனும் பேசணுமா? கோபமாக கேட்க, அவள் கண்கள் கலங்கியது.

அப்பொழுதும் அவன் நிறுத்தாமல் வா..என்று அவளை இழுத்து சென்று பியானோ முன் அமர வைத்தான்.

உங்க மிஸ் என்ன சொல்லி குடுத்தாங்க? அவன் கேட்க, அவள் அமைதியாக எழுந்தாள்.

நான் என்ன கேட்டால் நீ என்ன செய்ற? அவன் சத்தம் போட, அவள் அமர்ந்தாள். எனக்கு நினைவில்லை என்று சொல்ல, விருப்பமிருந்தால் சொன்ன விசயம் இங்கே இருக்கும் என்று அவன் சினமுடன் அவள் தலையில் கையை வைத்தான்.

சரி, நான் சொல்லித் தாரேன் என்று அவளை அமர வைத்து, அவன் அருகே அமர்ந்து ப்ளே செய்து காட்டி விட்டு அவளை செய்ய சொன்னான்.

அவளுக்கு சரியாக வரவில்லை. அவன் அவள் பின் நெருக்கமாக நின்று அவளது கை மேல் கையை வைத்து விரல்களை அழுத்தி கற்று கொடுத்தான். முதலில் கோபமாக தாட்சாயிணி இருந்தாலும் அவளுக்கு பிடித்து விட்டது. அவள் அவன் சொன்னது போல் செய்ய, “வெரி குட். இப்படி தான்” என்று அவள் கை மேலிருந்த கையை எடுத்தான்.

அவள் அவனை திரும்பி பார்க்க இருவரது மூக்கும் உரசியது. இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, தாட்சாயிணி சுயம் வந்து, இன்று போதும். நீ ஓய்வெடுத்துக்கோ என்று உணவை எடுத்து அவனிடம் வந்தாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

இந்தா சாப்பிடு. நீ உணவு உண்ட பின் தான் செல்வேன் என்று அவள் அலைபேசியை எடுத்தாள். அதீபன் அவளது அலைபேசியை பிடுங்கி வைத்து விட்டு, நீ அமைதியாக அமர்ந்தால் சாப்பிடுகிறேன் என்றான்.

அவள் அவனிடம் கொடுத்து விட்டு, இதையாவது பார்க்கலாமா? என்று தொலைக்காட்சியை காட்டினாள்.

சரி என்று அவன் சொல்ல, காதல் பாடலை ஒலிக்க விட்டு அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசையில் சாய்ந்து கொண்டு பார்த்தாள். அப்படியே தூங்கி விட்டாள். அதீபன் அவளை பார்த்து சிரித்து விட்டான்.

உணவை முடித்து சிவநந்தினி வெளியே வந்தார். அப்பொழுதும் நிதினிடம் ரேவதி, தாட்சு எங்கடா? என்று கேட்டார்.

அதீபன் சாப்பிட மாட்டேன்னு கத்தினான். கோபத்துல நான் அவளை அழைத்தேன். அவனை சாப்பிட வைத்து விட்டு வாரேன் என்றான். நான் வந்துவிட்டேன் என்றான் நிதின்.

அச்சோ..போச்சு, அண்ணி அடி வாங்க போறாங்க. அண்ணா முடியாதுன்னா முடியாது தான். எப்படி அடிப்பான் தெரியுமா? ரணா சொல்ல சொல்ல, ரேவதி பயத்துடன் அதீபன் அறையை பார்த்தார்.

அதீபா சாப்பிடலையா? ஏன்டி, முதல்லவே சொல்ல மாட்டாயா? சிவநந்தினி திட்ட, அம்மா போகாதீங்க, ஏற்கனவே ஒரு ஜீவன் மாட்டிக் கொண்டு இருக்கு. பாவம் அண்ணி என்று ரணா ரேவதியை பார்க்க, நான் என் பிள்ளைய கூட்டிட்டு வாரேன் என்று எழுந்தார் ரேவதி.

யாரும் போக வேண்டாம். தாட்சு அழுதுகிட்டு இப்ப வருவா பாருங்கம்மா. நான் சொன்னேன். அவ கேட்கலை நிதின் சொல்ல, அவ உன்னோட தங்கை.

அம்மா, நான் அவள் அண்ணன். சொன்னா கேட்கணுமா? இல்லையா? நிதின் கேட்க, ரேவதி அமைதியானார்.

ரேவா, அதீபன் நல்ல பையன். ஏதும் செய்ய மாட்டான் என்று ரணாவை சிவநந்தினி முறைத்தார். அதீபன் அறையிலிருந்து கோர்வையாக இரவு நேரத்திற்கு ஏற்றவாறு, பியானோ சத்தம் கேட்டது.

ரணாவும் நிதினும் ஆச்சர்யமாக அதீபன் அறையை பார்த்து எழுந்தனர்.

அம்மா, அண்ணாவா ப்ளே பண்றான்? அவன் இரைச்சல் சத்தமாக தானே கொடுத்து கொல்லுவான். இது சூப்பரா இருக்கே? என்று ரணா சொல்ல, இது அவனிருக்காது, தாட்சுவாக தான் இருக்கும் நிதின் சொல்ல,

அவள் கத்துக்கணும்ன்னு தான சொன்னா? ஆத்விகா கேட்டாள்.

ஆமா, அப்ப இருவருமே ப்ளே பண்றாங்களோ? என்று பேசிக் கொண்டிருந்தனர். சத்தம் நிற்க அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர். ஆனால் தொலைக்காட்சி ஓடும் சத்தத்தில் அமர்ந்து விட்டனர்.

உணவை முடித்து விட்டு, தூங்கும் தாட்சாயிணியை பார்த்துக் கொண்டு அவளை நெருங்கி, எழுப்புவோமா? வேண்டாமா? என யோசித்தவன் தன் பாக்கெட்டில் அவளது போனை வைத்து விட்டு அவளை துக்கினான். அவள் எழுவால் என்று பார்த்தால் அவன் நன்றாக அவன் மார்பில் சாய்ந்து தூங்கினாள்.

அவன் அவளை துக்கிக் கொண்டு கீழே வர, என்னாச்சு? என்று ரேவதி பதறினார். அம்மா, கொஞ்ச நேரம் தூங்க விடேன் என்று துக்கக் கலக்கத்தில் சொன்னாள் அவள்.

ஷ்..என்று சத்தமிட்டு அவளறைக்கு சென்று அவளை படுக்க வைத்து அவளை பார்த்து புன்னகைத்தான். எல்லாரும் அவனை “ஆ” வென பார்த்தனர்.

ஆன்ட்டி, நல்லா தூங்கிட்டா. இவ்வளவு சீக்கிரம் தூங்கிடுவாலா? அவன் கேட்க, இல்லப்பா. நேற்று நேரமானதுல்ல. அதான் தூங்கிட்டா என்றார்.

இந்தாங்க. அவளோட அலைபேசி.

தம்பி, அவள் ஏதும் தொந்தரவு செய்தாலா? ரேவதி கேட்க, அதீபன் அவளை பார்த்து விட்டு, “இல்லை ஆன்ட்டி” என்று சொல்லி விட்டு ஹால் பக்கம் வந்தான்.

டேய் அண்ணா, அண்ணிய நீ அடிக்கலையா? அவன் கேட்க, ஹாம்..இல்லை என்று அவன் சென்று உணவுத்தட்டை எடுத்து வந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த சிவநந்தினியிடம் கொடுத்து விட்டு, அவரை அணைத்து நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா தூங்குங்க என்று அறைக்கு சென்றான்.

அம்மா, அவன் அப்பா சொன்னதுக்காக கூட பியானோவை தொட விட்டிருக்கலாம். ஆனால் எப்படிம்மா இவ்வளவு கோபத்திலும் அடிக்காமல் விட்டுட்டான்? ரணா கேட்க, என் பிள்ளைய பார்த்தால் அடிப்பவன் போலா உனக்கு தெரியுது? சிவநந்தினி கேட்க, உன் பிள்ளைய நீ தான் மெச்சிக்கணும். எப்ப பாரு என் தலையில கொட்டி கொட்டி தலையே வீங்கி போயிரும் என்று ரணா புலம்பினாள்.

அம்மா, யசோ அத்தைக்கு விசயமே தெரியாதுல்ல. எப்ப வருவாங்க? ஆத்விகா கேட்க, வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? நிதின் கேட்க, நான் அத்தைய தான கேட்டேன்.

நாளைக்கு விடியும் போது வீட்ல இருப்பாங்க.

கோவில் விசேசம் அப்ப தான் முடியுமா?

இது வருடத்திற்கு ஒரு முறை நடப்பது. அதனால் அவங்க இதை மிஸ் பண்ணவே மாட்டாங்க.

அம்மா, நீயும் பக்திமான் தானே? ரணா கேட்க, அவங்களோட ஸ்பெசல் பூஜை நாள் என்று சிவநந்தினி சொல்லி விட்டு, எல்லாரும் போய் படுங்க என்றார். எல்லாரும் அவரவர் அறைக்கு செல்ல நிதினும் ஆத்விகாவும் கையை கோர்த்துக் கொண்டே அதீபன் அறையை பார்த்தனர்.

நான் நினைப்பதை தான் நீ நினைக்கிறாயா? நிதின் கேட்க, ம்..அப்படிதான்னு நினைக்கிறேன் என்று ஆத்விகா சொல்ல, ஆத்வி எல்லாரும் போயிட்டாங்க. ஒரே ஒரு கிஸ் தாவேன் நிதின் கேட்க, அவனருகே வந்து கொண்டு யாரும் வருகிறார்களா? என ஆத்வி சுற்றி கண்களை அலைய விட, அவளது இதழ்களில் மென்மையான முத்தம் ஒன்றை பதித்து விட்டு நிதின் ஓடினான். இவர்களை ரணா பார்த்து பெருமூச்சு விட்டாள்.

அறைக்குள் சென்ற அதீபன் அவனறையில் தாட்சாயிணியின் மூச்சுக்காற்றை உணர்ந்தவாறு புன்னகையுடன் நெஞ்சை பிடித்துக் கொண்டு படுக்கையில் பொத்தென விழுந்தான். அவன் கண்ணை மூட, அவனுள் அவன் அப்பாவின் நடத்தை கண் முன் வந்து பாடாய் படுத்தியது. தூங்க முடியாமல் தவித்தான்.

நடுஇரவு என்றும் பாராது அந்த பியானோ முன் வந்து நின்று தாட்சாயிணியை நினைவில் கொண்டு அவள் அருகே இருப்பது போல் எண்ணிக் கொண்டு, அவளுடன் சேர்ந்து ப்ளே செய்த மியூஸிக்கை அதீபன் இப்பொழுதும் செய்ய, அமைதியான வீடு முழுவதும் எதிரொலித்தது. அனைவரும் எழ, இவனுக்கு வேற வேலை இல்லை என்று ரணா தூங்க, ஆத்வியும் நிதினும் கண்டிப்பாக காதல் தான் என நினைத்தனர்.

அந்த பையன் தூங்க முடியாமல் கஷ்டப்படுறான் போல என்று ரேவதி ரவிக்குமாரிடம் சொல்ல, ஏங்க நான் பையனை பார்த்துட்டு வரவா? என்று சிவநந்தினி செழியனிடம் கேட்டார். அவன் முடிக்கட்டும் பார்க்கலாம் என்றார். ஆனால் தாட்சாயிணி அடித்து போட்டது போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

மியூசிக்கை முடித்த பின்னும் அவனால் தூங்க முடியவில்லை. கீழிறங்கி வீட்டிற்கு வெளியே செடிகளுக்கு இடையே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வானை நோக்கி கொண்டிருந்தனர். முதலில் வெளியே வந்தது ரவிக்குமாரும் ரேவதியும். அவன் கண்ணீருடன் அமர்ந்திருப்பதை பார்த்து அவனிடம் வந்தனர். அவர்களை பார்த்ததும் எழுந்தான்.

உட்காரு மாப்பிள்ள என்று ரவிக்குமார் அவனை அமர வைத்தார். ரேவதி அவனருகே அமர்ந்தார்.

அப்பா மீது கோபமா இருக்கீங்களா? ரவிக்குமார் கேட்க, இல்ல அங்கிள். அம்மாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அப்பா இனி எங்க வாழ்க்கையில் வேண்டாம்ன்னு முடிவெடுத்திட்டேன். அம்மாவிடமும் சொல்லீட்டு தான் வந்தேன்.

சொல்லீட்டியா? அவங்க என்ன சொன்னாங்க? ரேவதி கேட்க, அவங்க பதிலே சொல்லல ஆன்ட்டி. இந்த கொலைகாரனை பிடித்த மறுநாளே இங்கிருந்து அம்மாவுடன் கிளம்பணும். ஆனாலும் அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்படுவாங்களோ? என்ன செய்றதுன்னு புரியல? என்று இருவரையும் பார்த்தான்.

எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் என்று ரவிக்குமார் சொல்ல, இல்ல அங்கிள். எனக்கு அப்படி தோணல.

என்ன தோணல? செழியன் கேட்க, எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்து அழுதான்.

அச்சோ அதீபா, எதுக்கு அழுற? சிவநந்தினி அவன் கண்ணீரை துடைக்க, சாரிப்பா. அவரு உங்களையும் அம்மாவையும் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கார். நான் அது கூட தெரியாமல் இருந்திருக்கேன். “மன்னிச்சிருங்கப்பா” என்றான்.

நீ எதுக்குப்பா மன்னிப்பு கேக்குற? உன் மேல எந்த தப்பும் இல்லை. கஷ்டப்படாத. கொஞ்சநாள் அம்மாவை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடலாம். அவங்க உனக்காக தான் எல்லா தப்பும் செஞ்சாங்க. அப்புறம் எப்போதும் போல் இருங்க. அவன் இல்லைன்னா என்ன? அப்பா நான் இருக்கேன். அம்மா இருக்கா. அண்ணா, பாப்பா, பாட்டி, அத்தை எல்லாரும் இருக்கோம் என்று செழியன் சொல்ல, அவரை அணைத்து மேலும் அழுதான்.

எதையும் நினைக்காம தூங்கு. வா போகலாம் அதீபா, சிவநந்தினி அழைக்க  ரவிக்குமாரையும் அணைத்து “தேங்க்ஸ் அங்கிள், ஆன்ட்டி” என்று சொல்லி விட்டு சிவநந்தினியுடன் சென்றான். அவர்கள் பின் மூவரும் அவனறைக்கு செல்ல, சிவநந்தினி மடியில் படுத்தான்.

நந்தினி செழியனை பார்க்க, அவர் புன்னகையுடன் நான் போறேன். நீ இங்கேயே இரு என்று சொல்ல, ரேவதி சிவநந்தினியையும் அதீபனையும் பார்த்துக் கொண்டே நின்றார். அவர் மகன் சிறுவயதில் அவருடன் தூங்கியது. அவர் பார்த்துக் கொண்டே நிற்க, ரவிக்குமார் புரிந்து கொண்டு அவர் தோளை தட்டி, நாம நாட்களை வீணாக்கி விட்டோம் என்றார். ரேவதி கண்ணீருடன் அறைக்கு சென்றார். அவர்களை பார்த்த செழியன் நிதின் அறைக்கு சென்றார்.