அத்தியாயம் 124

அதே நேரம் ஓடிச் சென்ற பிரகதி அபி அம்மா கையை அழுது கொண்டே பிடிக்க.. இருவருக்கும் இடையே கார் ஒன்று வந்து நின்றது. இறங்கியவனை பார்த்த பிரகதி..அபி அம்மா கையை விட்டு ஓட எத்தனிக்க, அவளது முடியை பிடித்து இழுத்தான் அவன்.

என்னடா பண்ற? என்று மூன்று அம்மாக்களும் அவனிடம் வந்தனர். அவ என்னோட பொண்டாட்டி. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றான்.

பொண்டாட்டியா? என்று அனைவரும் அதிர்ந்தனர். அந்த வலியிலும் யாரும் நம்பாதீங்க. நான் இவ்வளவு நேரம் சொன்னவன் இவன் தான். நம்புங்க. எனக்கு கல்யாணமெல்லாம் ஆகலை என்று கதறினாள்.

ஒருவரும் அசையவில்லை. தருண் கோபமாக, ஏன்டா நான் சொன்னதை கூட நீங்க நம்பலையா? கேட்க,

உன்னையும் ஏமாத்தி இருக்கா..பாரேன் நித்தி சொல்ல..

ஏய்..என்னடா, நம்பலையா?

அங்க பாரு தருண் என்று அவன் தலையை இன்பா திருப்பி காட்டினாள். அவன் காரில் இருவரும் மணக்கோலத்தில் எடுத்த புகைப்படம் இருந்தது. அதை பார்த்த தருண், என்னிடம் ஏன் அவனை பற்றி சொல்லாமல் விட்டு விட்டாய்? அன்றே சொல்லி இருந்தால் அவனை பிடிக்க ஏதாவது செய்திருக்கலாம்..என்று தருண் சொல்ல, பிரகதிக்கு மனம் விட்டு போனது..

நான் உன்னுடன் வாரேன் என்று அவனது கையை தட்டி விட்டு தருணிடம் வந்து, இந்த மாதிரி கேவலமான ஒருவனை கல்யாணம் பண்ணி இருப்பேன்னு நினைக்கிறியா? என்று பிரகதி கேட்டு விட்டு செல்ல, அவனோ..என் முன்னே வேரொருவனிடம் பேசுற? என்று அடிக்க அவள் மயங்கினாள்.

எல்லாரும் பதறி முன் வர, அவ என்னோட பொண்டாட்டி. எனக்கு பார்த்துக்க தெரியும் என்றான் அவளை தூக்கிக் கொண்டு விறைப்பாக.

இவ்வளவு நேரம் பிரகதியை நம்பாத பார்வை பார்த்த அஜய்க்கு ஏதோ இவனை பார்த்து சந்தேகம் எழுந்தது.

எங்கோ பார்த்த நியாபகம் என்று யோசித்து நினைவு வந்தவுடன் அவன் முன் வந்து, அவளை இறக்கி விடுங்க சார் என்றான். எல்லாரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

அவ என்னோட பொண்டாட்டி என்றான்.

ஏன்டா, அடுத்த வார்த்தை வரலையா? உன்னோட இந்த பொண்டாட்டி.. பொண்டாட்டி தான் சந்தேகமா இருக்கு. உன்னோட ஆளை விட்டு அஜய் கிருஷ்ணாவை மிரட்டியது நீ தான? கேட்டான்.

அவன் உனக்கு என்ன வேண்டும்டா? அவன் கேட்க. நான் தான்டா அந்த அஜய்கிருஷ்ணா என்று அவனை அடித்தான் அஜய்.

நம்ம பிரச்சனையை அப்புறம் வச்சுக்கலாம். இவ பொண்டாட்டினா? உன்னோட தான இருந்திருக்கணும். ஆனால் இந்த பொண்ணோட அம்மா, அப்பாவை கொன்றுக்காங்க. நீ வரலை. அவளையும் கொல்ல வந்துருக்காங்க. அப்பவும் நீ வரலை. இருக்க இடம் கூட இல்லாமல் இருந்தா அப்ப நீ வரலை. இப்ப புருசனா எங்கிருந்துடா வந்த?

சார், உங்க வேலைய மட்டும் பாருங்க என்றான் அவன். ஸ்ரீக்கு தலை வலிக்க அர்ஜூன், இவன் தான் அர்ஜூன். இவனை தான் நான் ஒரு பெண்ணிடம் தப்பா நடந்துட்டான்னு உள்ளே போட்டேன். இவனுக்காக தான் பிரகதி என்னை கஷ்டப்படுத்துவதாக சொன்னாள்.

தருணும் அவனிடம் சென்று, அவளை என்ன செஞ்ச? கத்தினான்.

அட இருப்பா, அதான் விசாரிக்கிறேன்ல அஜய் சொல்லி விட்டு, முதல்ல அவளை விடு.

விட முடியாது. அவ என்னோட பொண்டாட்டி.

அடச்சீ வாய மூடு. நீ பொண்டாட்டி..பொண்டாட்டி..ன்னு சொல்றதுல தான் சந்தேகமா இருக்கு என்று அவனை அடிக்க..அவன் பிரகதியை இறுக பிடித்தான்.

அஜய் தீனாவை பார்க்க, தீனா துப்பாக்கியை மேலே சுட்டான். அவன் அசந்த நேரத்தில் அவனிடமிருந்த பிரகதியை தூக்கிய அஜய்.. அம்மாக்களிடம் கண்ணை காட்டி வர சொன்னான். தீனா துப்பாக்கி அவனது நெற்றியில் இருந்தது. அவளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, சொல்லு..அந்த பொண்ணை கெடுத்து ஏமாத்தியது நீ தான? அஜய் கேட்டான்.

அவன் சிரித்தான். ஏமாற்றினேனா?

நான் அவளை ஏமாற்றலை. அவள் பெற்றோர்களை தான் ஏமாற்றினேன். அவர்களே அவர்கள் பொண்ணு எனக்கு சொந்தமாக விட்டனர். பாவம் அவர்களும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு வேலை சொன்னா..சரியா செய்யணும். பணம் வாங்கிய பின் என்ன ப்ரெண்ஷிப் வேண்டி கிடக்கு? நான் சொன்ன வேலையை செய்யாமல் அவளாக ஏதோ செய்தால்.. அவளுக்கான தண்டனையை கொடுத்தேன்.

உன்னை காப்பாற்றியதால் கிடைத்த தண்டனை என பிரகதி சொன்னது ஸ்ரீ நினைவிற்கு வர, அவள் முன்னே வந்து..அவள் சொன்னது உண்மை தானா? ஸ்ரீ கேட்டாள்.

ம்ம்..சொல்லு தீனா சத்தமிட,

என்ன உண்மை தானா? உன்னை தான் பழிவாங்க முடியாமல் தவித்தேன். ஆனால் அவள் உன்னை தப்பிக்க வைத்து விட்டாள். அதற்கான தண்டனை தான் கொடுத்தேன்..

ஸ்ரீ அழுது கொண்டு, அவளை என்ன செஞ்ச? கேட்டாள்.

அவள் உன்னை தப்பிக்க வைத்து விட்டு என்னை பார்க்க வந்தாள். இனி அவளால் நான் சொல்வதை செய்ய முடியாதாம். அவளுக்கு ஒரு பையனை பிடிச்சிருக்காம். அதனால் அவள் அம்மா, அப்பா, அவளை விட்டு விடணும். அவள் சந்தோசமா இருக்கணும். நான் இடைஞ்சலா இருக்கேனாம். என்னிடமே தைரியமா சொன்னா?

எங்களோட லக் என்னோட ப்ரெண்ட்ஸூம் அங்க இருந்தாங்களா? காதும் காதும் வைத்தது போல் அவளை முடிச்சிட்டோம். ஆனாலும் அவள்..சொல்லும் போதே அவன் வாயிலே ஓங்கி குத்தினான் அஜய்.

சார், இதுக்கே கோபமா? அப்ப மட்டுமல்ல ரெண்டு நாளா எங்களோட தான் அவளை வச்சிருந்தோம்..செம்ம பார்ட்டி தான். ஸ்கூல் பொண்ணுன்னு நினைச்சா..சூப்பர் பொண்ணு..என்றான்.

ஸ்ரீ கதறி அழுதாள். நித்தி, யாசுவால் கேட்க கூட முடியலை. இன்பா, இதயா, பவி அவளிடம் வந்தனர். தருணும் அகிலும் கொதித்தே விட்டனர். ஆனால் பின் அவளை தேடியும் கிடைக்கலை. ஒரு நாள் மாட்டுனா வயித்துல குழந்தை இருக்குன்னு வந்தா. அவளை பிடிக்க வந்து என்னோட ப்ரெண்டு கார்ல விழுந்து விபத்தாகிடுச்சு.

அவ அழுதா..அப்ப கூட அவ்வளவு அழகா இருந்தா.. செத்துட்டான்னு நினைச்சு விட்டுட்டு போனோம். எவனோ பரதேசி வந்து காப்பாத்தி இருக்கான்.

அப்புறம்..இப்ப அவ அம்மா, அப்பா செத்த நியூஸ் தெரிஞ்ச பின் தான் அவ சாகலைன்னு தெரிஞ்சது. அவள என்னிடமே விட்டிருங்க சார் என்றான்.

கொலைவெறியுடன் இருந்த எல்லாரும் அவனை ஏறி மிதித்தனர். வழிய விடுங்கடா என்று அஜய் அவன் சட்டையை இழுத்து தூக்கி அவனது தங்ககாப்பை கைக்குள் வைத்து அவன் மூச்சிலே அடிக்க இரத்தம் ஒழுகியது. அவளை எழுப்புங்க சத்தமிட்டான் அஜய் கிருஷ்ணா. கூட்டம் கூட அனைவரும் வேடிக்கை பார்த்தனர். தண்ணீர் தெளித்து பிரகதியை எழுப்ப, அவள் அஜய் அவனை பிடித்திருப்பதை பார்த்தாள். அவளை பார்த்த அஜய்..இவனை கொன்றலாமா? கேட்டான்.

ஹா..என்று பயத்துடன் எழுந்தாள்.

கொன்றலாமான்னு கேட்டேன்.

அவள் பயத்துடன் அவனை பார்க்க, அவன் இவளை பார்த்து கண்ணடித்தான். இந்த நேரத்தில் கூலாக இருப்பவன் அவன் இல்லையே? என்று அவனை கூர்ந்து கவனித்தால், அவன் கையின் பின்புறமிருந்த கத்தியை பார்த்த பிரகதி. சார்..அவனை விடுங்க..விடுங்க..என்று அஜய்யை அடித்தாள். எல்லாரும் புரியாமல் பார்க்க, அந்த படுபாவி விசிலடித்தான். திரும்பிய அவள் அஜய்யை குத்த வைத்திருந்த கத்தியை பிடித்து அவன் முன் வந்து நின்றாள்.

உனக்கு தைரியம் கூடி போச்சுடி என்றான்.

நீ சொல்லி நிறைய செஞ்சி பழக்கமா போச்சுடா. இதுல தைரியம் இல்லை. மரணத்துக்கு எனக்கு பயமில்லை என்றாள்.

ம்ம்..நல்லா பேசுற? மரணத்துக்கு பயமில்லாமல் இருக்கலாம். ஆனால் மானத்திற்கு..என்று தீனாவை எட்டி உதைத்து விட்டு மற்றொரு கையால் அவள் ஆடையை பிடித்து இழுத்தான். அவள் ஆடை கிழியப்பட கத்தியிலிருந்து கையை எடுத்து விட்டாள்.

ஏளனமாக நகைத்த அவனது சட்டையை பிரகதி பின்னிருந்து நின்ற அஜய் அவள் இடையிலே கையிட்டு இழுக்க வில்லன் முன் வர பயத்தில் திரும்பினாள் பிரகதி. அஜய்யை பார்த்த அவள் தலையை தாழ்த்த இருவரும் நெருக்கமாக இருந்தனர். அவன் அதை கவனிக்காது அவன் மூச்சியிலே குத்தினான். அவன் கத்தியை ஓங்க, பிரதீப் அவன் கையை பிடித்து கத்தியை பிடுங்கினான். அவன் பிரதீப்பை அடிக்க கையை ஓங்கினான். அர்ஜூனும் அகிலும் அவனை பிடித்துக் கொள்ள, எழுந்து வந்த தீனா யோசிக்காது அவனை அவ்விடத்திலே சுட்டான். அவன் கத்திக் கொண்டே கீழே விழுந்தான்.

துப்பாக்கி சத்தத்திலும், அவன் கத்தலிலும் பயந்த பிரகதி கண்ணை மூடிக் கொண்டு அஜய்யை கட்டிக் கொண்டாள். அவன் அவளை பார்த்தான்.

ஹலோ..என்றான் அஜய். சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து அவனை விட்டு விலகி, சாரி சார்..சாரி..சாரி..என்று அவனை பார்த்தாள். அவன் சுருண்டு கிடக்க..

உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா ஒரு பொண்ணை ரெண்டு நாள் வச்சிருந்தேன்னு விளக்கி இருப்ப என்று அவன் கைகளை பிடித்த தீனா கையிலும் சுட்டான். பிரகதி பயந்து விலகினாள்.

ஸ்ரீ அவளிடம் வந்து சாரி..சாரி..நீ சொல்லி இருக்கலாம்ல. எனக்காக நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேல்ல..என்று கேட்க, அவள் கண்ணீருடன் அங்கிருந்து சென்றாள்.

எங்க போற? என்று அபி அம்மா கேட்க, என்னை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. எனக்கு அவமானமா இருக்கு. என்னால யாரையும் பார்க்க கூட முடியலை என்று அழுதாள். ஸ்ரீ, நித்தி, யாசு, இன்பா, இதயா, பவி எல்லாரும் அவளிடம் வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

ப்ளீஸ் என்னை விட்டுருங்களேன் என்று பிரகதி சொல்ல, எல்லாரும் அவளிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதெல்லாம் தேவையில்லை. எல்லாரும் போய் உங்க வேலையை பாருங்க என்றாள்.

அர்ஜூனும் அகிலும் அவளிடம் வந்து, யாரும் உன்னை தப்பா நினைக்கலை. வா..என்று அழைத்தனர். அவள் கேட்கவேயில்லை. தீனா அவன் ஆட்களை வர வைத்து கேசவனையும் வரவைத்து அவனுக்கு சிகிச்சை அளித்தனர். அவனுக்கு சிகிச்சை முடிந்து ஜெயிலுக்கு அழைத்து செல்ல உத்தரவிட்டு அவர்களிடம் வந்தான்.

ஏம்மா, எல்லாரும் தான் சொல்றாங்கல்ல? மனசார மன்னிப்பு கேட்டாங்கல்ல தீனா கேட்க, சார் அவங்க மன்னிப்பை ஏத்துகிட்டேன். ஆனால் அவங்களுள் ஒருத்தியாய் இருக்க அன்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்ப முடியாது.

ஏன் முடியாது? என்று தருண் அவளிடம் வந்தான்.

நான் கிளம்புறேனே? கேட்டாள்.

இன்பா அவளிடம் வந்து, உன் நிலையை இங்க இருக்கிற எல்லாரும் கடந்து தான் வந்துருக்கோம். இனி நீயே பார்த்துக்கோ என்றாள்.

அஜய் அவளிடம், நீ என்ன சொன்ன? என்று கேட்டான். இன்பா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சைலேஷை பார்த்தான் அஜய். அவன் தலையசைக்க..

அஜய் அவன் அம்மாவிடம் சென்று அவர் போர்த்தி இருந்த சால்வையை எடுத்து வைத்து, இந்தா..இதை வச்சுக்கோ. நீ கிளம்பு என்றான்.

சார்..என்று அர்ஜூன் அழைக்க, அவ தானப்பா போகணும்ன்னு சொன்னா. போகட்டுமே என்றான்.

இல்லை. நீ போக கூடாது ஸ்ரீ அவள் எதிரே வந்தாள்.

நீ சொன்னாலும் அந்த பொண்ணு கேட்க மாட்டா. அவள் போகட்டும். விடும்மா..என்றான் அஜய்.

தாரிகாவும் அனுவும் கேரியுடன் வந்தனர். அனு எல்லாரையும் பார்த்து தாரிகாவிடமிருந்து இறங்கி ஓடி வந்தாள்.

ஸ்ரீ..அனு என்றான் அகில்.

ஸ்ரீ திரும்பி பார்க்க, அனு ஸ்ரீயை பார்த்து விட்டு, ஆன்ட்டி..என்று பிரகதியிடம் வந்தாள். பிரகதி குனிந்து கையை நீட்ட இருவரும் கையை குலுக்கிக் கொண்டு “ஹை பை” கொடுத்தனர். அனுவை பிரகதி தூக்கினாள்.

ஆன்ட்டி அழுதீங்களா? என்று அனு கேட்டாள்.

இல்லையே? அனு ஸ்கூலுக்கு போகலையா? கேட்டாள்.

அர்ஜூன் அவர்களிடம் வந்து, உனக்கு அனுவுடன் பழக்கம் இருக்கா?

ம்ம்..இருக்கு. நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது உடன் படிப்பவன் பாலோ பண்ணானான். அவனிடமிருந்து தப்பித்து அக்கா வீட்டிற்குள் ஒளிந்து கொண்டேன். அவங்க என்னை அன்று தங்க வச்சாங்க. நான் அந்த வருடம் பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டதை அறிந்து கட்டி அந்த வருடம் படிக்க வச்சாங்க. அம்மா..அவங்ககிட்ட நடந்ததை சொல்லி இருப்பாங்க போல. அதனால் பாதுகாப்புக்காக அவங்க வீட்ல தான் இருந்தேன். ஆனால் என்னால் அவங்களுக்கு ஏதாவது தொந்தரவாக கூடாதுன்னு ஒரே மாதத்தில் வெளியே வந்தேன்.

காலேஷ் படிக்க வக்கிறேன்னு சார் சொன்னாங்க. ஆனால் எனக்கு விருப்பமில்லை. அதனால் அவங்க கம்பெனியிலே வேலையில சேர்த்து விட்டாங்க. யாரு என்ன கெல்ப் கேட்டாலும் செய்வேன் என்றாள். இப்ப கூட.. அவள் சொல்ல..போதும். அனுவை வச்சுக்கிட்டு எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவள் கவனிப்பதை அர்ஜூன் காட்டினான்.

அர்ஜூன்..அனு ஸ்கூல் போகலையா?

அவள அங்க தான் சேர்க்கணும். எப்படியும் இங்கிருந்து ஒரு மாசத்துல கிளம்பணும். அப்புறம் சேர்த்துக்கலாம்ன்னு விட்டுருக்கோம் என்று ஸ்ரீயை பார்த்தான்.

ஹாஸ்பிட்டல் முன் வந்து துருவன் சைக்கிளை நிறுத்தி, அகில் தோளில் கையை போட்ட துருவன், அண்ணா இங்க சம்பவம் நடக்க போகுது. பார்க்கலாமா? கேட்டான்.

சம்பவமா? அபி கேட்க, அங்க பாருங்க என்றான் துருவன்.

புவனா கோபமாக உள்ளே வந்து நேராக தருணிடம் சென்று அவனை அடித்தாள்.

புவி, என்னாச்சு? இதயா அவளை பிடிக்க, அழுது கொண்டே என்னை உள்ள வச்சி லாக் பண்ணிட்டு வந்துட்டான். நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா? என்று மேலும் அவனை அடித்தாள்.

தீனா அவளிடம் வந்து, அவருக்கு என்ன பிரச்சனையோ? என்று தருணை முறைத்துக் கொண்டு, இது என்ன? அவள் சடையை பிடித்து ஆட்டினான். தலை பின்னாமல் இரு பக்கமும் போனிடைல் செய்திருந்தாள்.

புவி, ஸ்கூல்ல திட்ட போறாங்க தருண் சொல்ல, நீ பேசுன அவ்வளவு தான்..என்று விரலை நீட்டினாள். அவள் விரலை பிடித்த தீனா, இதுக்கு தான் மாமா வீட்ல இருக்க சொன்னேன். அவள் தீனாவிடமிருந்து நகர்ந்து அவனை முறைத்தாள்.

ஏய்..துகி எங்க கூட தான் இருக்கா. நீ தான்..வாரீயா? அவன் கேட்க, ஹலோ சார், உங்க ரொமான்ஸ் பார்க்க சகிக்கலை. புவி நேரமாகுது வாரீயா? இல்லையா? துருவன் கேட்டான்.

அண்ணா, மாப்பிள்ளைக்கு பொறாமையை பாரு தீனாசொல்ல,

என்ன மாப்பிள்ளையா? துளசிய பார்க்க பேச கூட விடாம பண்ணிட்டு மாப்பிள்ளையா? என்று கல்லை எடுத்தான்.

புவி..அவன் என்னை கொல்ல பார்க்கிறான்? தீனா அவளை பிடிக்க, ஏது..இந்த கல்ல வச்சு கொல்ல போறானா? ரெண்டு பேரும் டிராமா பண்றத நிறுத்துறீங்களா?

யாருக்கும் என் மேல அக்கறையே இல்லை. டேய்..அண்ணா பேசிறாத..

அச்சோ..புவி டென்சன்ல பழைய நினைவில் பூட்டிட்டு வந்துட்டேன்.. சாரிடா என்றான்.

போடா..என்ற புவி துருவனை பார்த்தாள். அவனோ தீனாவை முறைப்பதை நிறுத்தவில்லை. அண்ணனும் தம்பியும் சேர்ந்து அவளை ஊருக்கு அனுப்பிட்டு ரொமான்ஸ் பண்றீங்களா? பண்ண விடுவேனா? புவியும், துகி அக்காவும் உங்க பக்கத்துல கூட வர விட மாட்டேன் என்ற துருவன் பிரதீப்பை பார்த்து, தினமும் வீட்டுக்கு வருவேன். பாருங்க உங்கள சும்மா விட மாட்டேன் என மிரட்ட..துருவா நான் ஒன்றுமே செய்யலை பிரதீப் சொன்னான்.

பிள்ளையார் சுழியே நீங்க தான்னு நல்லா தெரியும். அய்யா..வரணும்ன்னு சொன்னார். கண்டிப்பா வருவேன். உங்கள் காதலை பிரிக்கும் “க்யூபிக்” நான் தான்.

டேய்..க்யூபிக் லவ்வ சேர்த்து தான வைக்கும் புவனா கேட்க,

ரொம்ப முக்கியம் பாரு. அவன் சொன்னான்னு என்னோட பேசாம இருந்த நைட் உன்னோட வீட்டுக்கே வந்துருவேன் தீனா சொல்ல..

என்ன சொன்னீங்க? தருண் கேட்டான்.

மச்சான், துருவை பாருங்க..என்ன சொல்லீட்டான்?

யாராவது நைட் வீட்டு பக்கம் வந்தா வெட்டி போட்ருவேன் தருண் சொல்ல, முதல்ல போய் வேலைய பாருங்கடா. ஆமா..போலீஸ்காரருக்கு வேலையில்லையா? கிளம்புங்க. ஹலோ..சார். உங்களுக்கு தனியா சொல்லணுமா? பிரதீப்பிடம் இன்பா கேட்க..

அண்ணா, இந்த பொண்ணை மட்டும் வீட்டுக்குள்ள விட்டோம். அப்பத்தாவ விட அதிகாரம் பண்ணும் என்று தீனா சொல்ல, அதுக்கு தான டா ஆள் வேணும்கிறது என்று அபி அம்மா சொல்ல,

டேய், அர்ஜூன்..அடுத்து நம்மள தான் சொல்லுவாங்க. நாம கிளம்புவோம் அபி சொல்லிக் கொண்டே நகர, எங்க போற? என்று இன்பா அவன் சட்டையை பிடித்து இழுத்தாள்.

எங்க போக போறீங்க?

எங்க போவோம். மேரேஜூக்கு..

அபி யார் மேரேஜூக்கு? கவின் கேட்க, அடப்பாவி எனக்கு அடி வாங்கி கொடுக்காமல் இவன் விட மாட்டான் போல என்ற அபி, கவின் வாயை மூடிரு..இல்ல என்று தாரிகாவை பார்த்து,

தாரி..நேற்று ஃபங்சன்ல ஒரு பொண்ணுகிட்ட கவின் நம்பர் வாங்கினான் அபி சொல்ல, சீனியர் போனை கொடுங்க என கேட்டாள்.

இந்தாம்மா போனை வச்சுக்கோ. நான் வாரேன் என்று டேய் அபி என்னையே மாட்டி விட பாக்குறியா? என இருவரும் விளையாட புவி நேரமாகுது துருவன் சொல்ல,

ஒரு வாரத்திற்கு பின் தான் ஸ்கூலுக்கு போவதாக இருந்தது? ஸ்ரீ கேட்டாள்.

ஆமா அக்கா, ஆனால் வீட்ல இருக்க ஒரு மாதிரி இருக்கு. இன்று போய் பார்க்கலாம்ன்னு தான் கிளம்புறேன்.

சரி, பார்த்து இரு தருண் சொல்ல, அவள் உதட்டை சுளித்து காட்ட, தீனா அவளை பார்த்து, நான் டிராப் பண்ணவா டியர்? கேட்டான்.

செருப்பு என்று துருவனிடமிருந்து பதில் வந்தது.

ரைட்டு விடு..என்று தீனா அமர, புவியும் துருவனும் சென்றனர்.

சார், ஸ்கூல் பொண்ணையா லவ் பண்றீங்க? அஜய் கேட்டான்.

ஆமா சார். அதுக்கென்ன? தீனா கேட்டுக் கொண்டே அவனை பார்க்க, வயசு வித்தியாசம் அதிகமா இருக்குமே? அஜய் கேட்க, அவளுக்கும் என்னை பிடிக்கும். எனக்கும் அவளை பிடிக்கும். அதை விட வேரெதுவும் தேவையில்லை.

இல்லை..அஜய் கேட்க, சார் புரியுது. வயதான பின் ரொம்ப கஷ்டப்படுவான்னு தான கேட்கப் போறீங்க? நான் இல்லைன்னா என்ன? என் நினைவோட புவி இருப்பா.

எத்தனை வருடம் வித்தியாசம்? அஜய் கேட்க, சார்..இதை நீங்க கேட்க தேவையில்லை. அவள் அண்ணன் நானே சும்மா இருக்கேன். உங்களுக்கென்ன? தருண் கேட்டான்.

மச்சான் இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க? எல்லாரும் கேட்பதை தானே கேட்கிறார்.

எட்டு வருடம் இருக்கும்..என்றான்.

எட்டு வருசமா? அஜய் அம்மா கேட்க, தீனா அவரிடம் எனக்கு என் புவி சந்தோசமா இருக்கணும். அவளுக்காக நான் அந்த எமனையும் எதிர்த்து அவளுடன் இருப்பேன் என்றான். பெருமையாக அனைவரும் அவனை பார்த்தனர்.

அவன் சொன்னதை கேட்ட துருவன் மெய்மறந்து அவனை பார்த்தான். புவனா கண்ணீருடன் ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டாள்.

ஹே.. மெதுவா வா கால் வலிக்க போகுது. உனக்கு நேரமாகலையா? தீனா கேட்க, நேரமாகுது, இதை எடுக்க தான் வந்தேன் என்று தருண் சட்டையில் வைத்திருந்த பேனாவை எடுத்து விட்டு தீனாவிடம் வந்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையுடன் சென்றாள்.

டிராப் பண்ண வரவா? தீனா கேட்க, நோ..என்று சொல்லிக் கொண்டே துருவன் சைக்கிளில் ஏறினாள்.

ஏன் சார், நீங்க யாரையும் லவ் பண்ணலையா? தீனா அஜய்யிடம் கேட்டான்.

எனக்கு விருப்பமில்லை.

நானும் எத்தனை பொண்ணுங்களை பார்க்கிறேன். ஆனால் ஒத்துக்கவே மாட்டேங்கிறான். அந்த கடவுள் தான் ஒரு பொண்ணை அனுப்பி வைக்கணும் அஜய் அம்மா சொன்னார்.

“லவ் மேரேஜ்” உங்க வீட்ல எல்லாரும் ஒத்துப்பாங்களா? தீனா கேட்டான்

ஏன் செட் பண்ண போறீங்களா? எரிச்சலுடன் தருண் கேட்டான்.

இல்லை. சும்மா கேட்டேன்.

எனக்கு லவ் மேல பெருசா நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் உங்களது காதலில் மெய் மறந்து விட்டேன் என்றான் அஜய்.

அய்யோ..சார். இதுக்கே சொல்றீங்க? சார்..இது விட பெருசா அந்த பொண்ணுக்காக பண்ணார். வேற லெவல்ல இருந்தது. சினிமால நடக்குறத நேர்ல பார்த்தேன். செம்ம..போங்க என்று பவி ஆர்வமுடன் அஜய்யிடம் வந்தான். அகில் அவளிடம் வந்து, என்ன பண்ற? கேட்டான்.

நான்..என்று சாரி சார்..ரொம்ப எமோஸ்னல் ஆகிட்டேன் என்றாள் பவி.

இதெல்லாம் விசயமல்லம்மா. வாழ்க்கையில் நம்பிக்கை தான் எப்பொழுதும் இருக்கணும் என்று முகம் சுருங்கிய தீனா பவி தலையை தடவி விட்டு, உனக்கு நினைவிருக்கா, நீ என்னிடம் பேசிய பின் தான் நான் புவியிடம் காதலை சொன்னேன் என்றான்.

போகலாமா? நேரமாகுது தயாராகணும் தாரிகா சொல்ல, எல்லாரும் பிரகதியை பார்த்தனர்.

அஜய் அவளிடம் வந்து, நீ இன்னும் கிளம்பலையா? என்று மணியை பார்த்து, அம்மா..அண்ணா..இன்னுமா வரலை? கேட்டுக் கொண்டே அவன் அம்மா பக்கம் திரும்பினாள்.

பிரகதி அவனை முறைத்து விட்டு, நான் எங்கேயும் போகலை. இங்க தான் என் ப்ரெண்ட்ஸூடன் தான் இருப்பேன். என்ன அனு? நாம போகலாமா? என்று அனுவை பார்த்தாள். ஸ்ரீ அவளை அணைத்துக் கொண்டாள்.

ஆன்ட்டி..என்று அஜய் அம்மாவிடம் சால்லை கொடுக்க..நீ போட்டுக்கோம்மா என்று அவள் கை பக்கம் கிழிந்திருந்ததை பார்த்து, வீட்டுக்கு போய் வேற ஆடை மாத்திக்கோம்மா என்றார்.

கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதை பார்த்த அஜய், கார் அருகே புன்னகையுடன் சென்று அம்மா..என்று அழைத்தான். அவரும் அருகே வர கதவை திறந்து அவன் அண்ணன், அண்ணி வந்தனர்.

அண்ணி எங்கே? கேட்க, அவன் அண்ணி கண்ணை காட்டினார்.

காரினுள் தலையை விட்டு சீட்டிற்கு கீழிருந்து குட்டி பையனை துக்கிய அஜய், ஹே..லக்கி சார்ம். லவ் யூ..என்று அவன் முத்தம் கொடுக்க, சித்தப்பூ..லவ் யூ..என்று குட்டிப்பையனும் முத்தம் கொடுத்தான்.

பாட்டிகிட்ட வாங்க என்று அஜய் அம்மா பையனை துக்க, பாட்டி, இது உன்னுடையது தான? யார் இவங்க? உன்னுடையதை வச்சிருக்காங்க என்று பிரகதியை பார்த்து கேட்டான்.

அவள் பேச முடியாமல் தவிக்க அவனாகவே அனுவை பார்த்து, சித்தப்பூ..என்று அவனிடம் சென்று, சித்தப்பூ யார் அந்த “ப்யூட்டி கெர்ல்” என்று கேட்டான்.

டேய்..இந்த வயசுல இது உனக்கு தேவையா?

சொல்லு சித்தப்பூ. இப்பவே பார்த்தா தான். பொண்ணை கரெக்ட் பண்ண முடியும் என்றான் அஷ்வின்.

டேய்,..என்னடா பேச்சு குசுகுசுன்னு? கேட்டுக் கொண்டே அவன் அண்ணன் வர, அப்புறம் சொல்றேன்டா என்று ஸ்கூல்லுக்கு எத்தனை நாள் மட்ட போட்டன்னு கேட்டேன்..என்றான்.

இல்லையே? அப்படி ஏதும் தோணவில்லையே? என்று தன் மகன் காதை திருகினாள் அஷ்வின் அன்னை.

அண்ணி, என்னோட லக்கி சார்ம் என் கையில் இருக்கும் போது யாரும் தொடக்கூடாது என்றான்.

உனக்கு எப்படிடா போகுது? அஜய் அண்ணா கேட்க, நல்லா போகுது.

உனக்கு வொர்க் ஹெவி போல. அண்ணா..வீட்டுக்கே வரலையா அண்ணி கேட்டான் அஜய்.

ஆமா..கிரிஷ்..முடியலை. பாரின்ல எத்தனை ரூல்ஸ். நம்ம நாட்டுக்கு எப்ப தான் வருவோம்ன்னு இருக்கு என்று அவர் கணவரை கண்ணை காட்டினார். இருவரும் அஜய் அம்மா காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அப்பா இன்னும் வரலையா?

அவர் நேரத்துக்கு வந்துட்டு கிளம்பிடுவார் என்றார் அம்மா.

ஓ.கே..தேங்க்யூ சார். ரொம்ப கெல்ப் பண்ணீங்க என்றான் அர்ஜூன்.

அட, இனி நாம அடிக்கடி மீட் பண்ண போறேமே? அப்புறம் என்ன? அஜய் கேட்க, சார்..என்று அர்ஜூன் விழித்தான்.

நானும் அந்த கேஸை தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். சந்துருவுக்கு உதவ முடிவு செஞ்சுட்டேன்.

சார், வேண்டாமே? அர்ஜூன் சொல்ல, சும்மா இருடா என்ற தீனா, மீட் பண்ணலாம் சார் என்றான்.

அர்ஜூன், இங்க வாயேன் என்று பிரகதி அர்ஜூனை தனியே அழைத்து செல்ல..அனைவரும் அவளை பார்த்தனர். அஜய் அவளை முறைத்து பார்த்தான்.

அர்ஜூன், நான் உனக்கு என்ன வேலைன்னாலும் செய்து தாரேன். எனக்கு இரண்டாயிரம் கடனாக தருகிறாயா? கேட்டாள்.

எதுக்கு பிரகதி?

அர்ஜூன், நான் அவருக்கு பணம் கொடுக்கணும்ல கொடுத்திடலாம். நீ வச்சிருக்கேல்ல. தருவேல்ல..பாவமாக கேட்டாள்.

ஏய்..சும்மா இரு. உதவி தான செய்தார். சார் கோபப்பட போறார்.

இல்லடா, ஒருமாதிரி இருக்கு என்றாள்.

சரி..என்ற அர்ஜூன் பர்ஸை எடுத்து நோட்டுகளை கொடுத்தான். அவள் வாங்கி விட்டு அனுவை அவனிடம் கொடுத்து விட்டு அஜய்யிடம் வந்து பணத்தை நீட்டினாள்.

என்ன இது? அஜய் கேட்டான்.

அன்று எனக்கு பணம் கட்டுனீங்கல்ல? அது தான்..

அப்படியா? யாரோ..பணம் இல்லைன்னு சொன்ன மாதிரி இருந்ததே?

அப்போ..இல்லை. இப்ப இருக்கு.

ஆனால் இது பத்தாதே. நான் கால் நோக உன்னை தூக்கி நடந்தேன். உன்னை அட்மிட் செய்தேன். அப்புறம் அதற்கு பணம் கொடுத்தேன். இப்ப கூட அடிபடாமல் பார்த்துக்கிட்டேனே? அதுக்கெல்லாம் சேர்த்து இருபதாயிரம் வேண்டும் என்றான்.

என்னது? இருபதாயிரமா? சார் என்னை ஏமாத்த பாக்காதீங்க? நான் ஒரு வருசம் தான் படிக்கலை. மத்தபடி நல்லா படிப்பேன். நீங்க எனக்கு உதவுனீங்க தான். ஆனால் நானும்..என்று நிறுத்தி அவனை பார்த்தாள். அவளுக்கு அவனுடனான நெருக்கம் நினைவு வர..சார், வாங்கிக்கோங்க சார் ..

ஏதோ சொல்ல வந்தீங்களே? முடிச்சிருங்களேன் என்றான் புன்னகையுடன்.

அவள் அவனை முறைத்து விட்டு, இந்தா நீயே வச்சிக்கோ..என்று அர்ஜூனிடம் கொடுத்து விட்டு, நீங்க எப்ப சார் எங்க ஊர்ல இருந்து கிளம்புவீங்க?

நான் கிளம்புறது இருக்கட்டும். உன்னோட ஊர் இதுவா?

சார்..என்று முகத்தை சுளித்து, அவன் அம்மாவிடம் ஆன்ட்டி..உங்க நம்பர் தாங்க. இங்கிருந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க. என்னால முடிஞ்சதை நான் தாரேன். பின்..

சொல்லுங்க..சொல்லுங்க..பின் என்ன செய்வீங்க பணத்துக்கு? மூடை தூக்க போறீங்களா? என்று கேலியாக அவன் கேட்க. ஆன்ட்டி..உங்க பையன் லாயர்ன்னு தெரியுது. ஆனால் கொஞ்சம் பேச்சை குறைச்சுக்க சொல்லுங்க இல்லை டென்சன் ஆகுது என்று அவனை முறைத்துக் கொண்டே பல்லை கடித்தாள்.

ஓய்..என்ன? என்னோட சித்தப்பூவை முறைக்கிற? அஷ்வின் கேட்க, நான் உன்னோட பேசலைடா குட்டி பையா என்று ஆன்ட்டி நான் வாரேன் என்று அவள் கோபமாக செல்ல, அஜய் அவளை பார்த்து சிரித்தான்.

எல்லாரும் பிரகதி பின் செல்ல, சார் ரொம்ப வம்பு பண்ணாதீங்க. பழைய மாதிரி ஆனா அவ்வளவு தான். நீங்க மட்டுமல்ல நாங்களும் தொலைஞ்சோம்.. என்று அகில் கூறி விட்டு, நீங்க வேற ஆள தேடிக்கோங்க என்று பவியை இழுத்து அவள் தோளில் கையை போட்டு அழைத்து சென்றான்.

அஜய்..பயங்கரமாக சிரித்தான்.

அத்தை, நம்ம கிரிஷ்ஷா இது? ஒரு பொண்ணுடன் வம்பு வளர்க்கிறான். சிரிக்கிறான். பார்த்து அத்தை. அவன் அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு வந்து நின்னுடாம என்றாள் அஜய் அண்ணி.

அண்ணி..என்றான் கோபமாக.

அதனால் என்னடா? தப்பாவா பேசிட்டா. உனக்கு பிடிச்சிருந்தா ஓ.கே தான்.

அம்மா, இந்த பொண்ணை பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க?

என்னடா? விருப்பப்பட்டு ஓடி போய் பிடிக்காம திரும்ப வந்து வேற பையனை கூட இப்ப பொண்ணுங்க கட்டிக்கிறாங்க. இந்த பொண்ணு நல்லா தான் இருக்கா. என்ன அவள் பிரச்சனையிலிருந்து வெளிய வர நாட்களாகும். எனக்கேதும் தப்பா தெரியலை.

அத்தை என்ன சொல்றீங்க? மூத்த மருமகள் ஆர்வமாக, அம்மா.. அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். நீயே அவரிடம் கேஸ் விசயம் போல பேசிப்பாரு தெரியும் என்றார்.

அண்ணா..வா போகலாம் அஜய் அவன் அண்ணனுடன் பேசிக் கொண்டே செல்ல, அவர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.