அத்தியாயம் 116

அர்ஜூன் இரவு தூங்கும் முன் அனுவை பார்க்க ஸ்ரீ அறைக்கு வந்தான். இருவரும் விளையாண்டு கொண்டிருந்தனர்.

செகண்ட் ஏஞ்சல், தூங்கலையா? அர்ஜூன்..வா விளையாடலாம் என அனு அவன் கையை பிடித்து இழுத்தாள்.

என்ன விளையாடலாம்? அர்ஜூன் கேட்க, ம்ம்ம்..வாயில் கை வைத்து யோசித்த அனு..”ஹைடு அன்ட் சிக்” விளையாடலாம் என்றாள்.

அர்ஜூன் நீ தான் கண்ணை மூடணும்? என்று அனு சொல்ல..மூவரும் விளையாண்டனர். அனு கண்ணை மூட அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். அவள் புருவத்தை உயர்த்தி, என்ன? கேட்டாள்.

ஸ்ரீ அருகே வந்து அர்ஜூன் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவனை பார்த்தான்.

அர்ஜூன்..அவள் அழைக்க, அவள் உதட்டில் கை வைத்து மீண்டும் அணைத்தான்.

அனு கண்ணை திறந்து, அர்ஜூன்…நான் தான் உன்னை பிடிக்கணும்? நீ எதுக்கு ஏஞ்சலை பிடிக்கிற? என்று இருவருக்கு நடுவிலும் வந்து நின்றாள்.

அர்ஜூன் கண்ணீர் பார்த்த அனு, அர்ஜூன் அழுறியா? என்று அவள் அழுவது போல் கேட்டாள்.

அர்ஜூன் கண்ணை துடைத்து,அவளை தூக்கி தூங்கலாமாடா? கேட்டாள்.

ஏஞ்சல், நீ அர்ஜூனை திட்டுனியா? கேட்டாள் அனு. விளையாடும் ஆர்வத்தில் அவன் காயத்தை பார்த்திருக்க மாட்டாள். இப்பொழுது அவனிடம், அர்ஜூன் விழுந்துட்டியா? வலிக்குதா?

இல்லடா செல்லம். எனக்கு காயம் வலிக்கலை என்று அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். எதை சொல்கிறான் இவன்? புரியாமல் நின்றாள் ஸ்ரீ.

அனு தூங்கலாமா? நாளைக்கு விளையாடுவோம்.

தூங்கலாம் அர்ஜூன். தூங்கினா உனக்கு சரியாகும் என்றாள் அனு. அவளை முத்தமிட்டு அர்ஜூன் அனுவுடன் படுத்துக் கொண்டான். நீயும் தூங்கு ஸ்ரீ என்றான்.

அவளும் அவனுக்கு அடுத்த பக்கம் படுத்துக் கொண்டு அர்ஜூனை பார்த்தான். அனுவும் அர்ஜூனும் தூங்கிய பின் எழுந்தாள். அறையிலிருந்து வெளியேறி அர்ஜூன் அறைக்கு சென்று காயத்திற்கான மருந்தை எடுத்து வந்து அர்ஜூன் அருகே அமர்ந்து ஸ்ரீ போட, அந்த மருந்தின் எரிச்சலால் அர்ஜூன் விழித்தான்.

ரொம்ப பெயினா இருக்கா அர்ஜூன்? ஸ்ரீ போட்டுக் கொண்டே கேட்டாள். அவன் பதிலளிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கௌதம் சார், உன்னிடம் என்ன பேசினார்?

அவருக்கு காருண்யாவை பிடிச்சிருக்கு. ஆனால் உன் மாமா ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ? என்ற பயமும், அவர் அம்மாவுடன் செட் ஆவாளோ? என்றும் பயப்படுகிறார்.

இதுக்கா அழுதார்?

ஆம் என தலையசைத்தாள்.

மாமாவுக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தாலே போதும். ஏத்துப்பார். அடுத்த விசயம் அவர் அம்மா. அவங்க அம்மாவை நமக்கு தெரியாது என்றாலும் காரு சாருக்காக எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிப்பா..என்ற அர்ஜூன்..அவரிடம் நான் பேசினால் தான் சரியாக இருக்கும். நாளை பேசிக்கலாம்..நீ படு ஸ்ரீ என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டு,

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ. நான் எப்படி அந்த கொலைகாரனிடம் உன்னை விடுவது என்னுடைய திட்டத்தில் ஒன்று மிஸ் ஆனாலும் எல்லாமே போயிரும். நீ சொல்லு ஸ்ரீ. உனக்கு பயமா இருக்கா?

இதற்கு முன் வரை இல்லை. ஆனால் இப்ப பயமா இருக்கு அர்ஜூன் என்று அனுவை பார்த்துக் கொண்டே ஸ்ரீயும் அழுதாள்.

போன முறை போல் உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன். நீ என்னை நம்புகிறாயா?

நம்புகிறேன் அர்ஜூன். என்னால் உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு.

ஒரு வேலை பிரச்சனையில் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட அனுவை நல்லா பார்த்துக்கோ ஸ்ரீ என்றான் அர்ஜூன்.

அர்ஜூன்..இப்படியெல்லாம் பேசாத..என்று அவள் வாயில் வந்ததை மென்று விழுங்கினாள். உனக்கு ஏதும் ஆகாது அர்ஜூன். ஆக விடமாட்டேன். அனு நம் பொறுப்பு என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாற்றுவேன் அர்ஜூன் என்று மனதினுள் நினைத்தாள் ஸ்ரீ.

அவள் அமைதியை பார்த்த அர்ஜூன், ஸ்ரீ இன்று என் பக்கத்துலவே படுத்துக்கிறியா?

இல்ல அர்ஜூன் என்று எழுந்த ஸ்ரீ..அனு பக்கம் படுக்க, நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். ப்ளீஸ் என்றான். அவள் மௌனம் காக்க, வேகமாக அவளிடம் வந்து ஸ்ரீயை அணைத்துக் கொண்டே தூங்கினான்.

அவன் தூங்கிய பின் அவன் நெற்றியில் ஸ்ரீ முத்தமிட்டு எழுந்து அனுவை அர்ஜூன் பக்கம் நகர்த்தி மறுபக்கம் படுத்துக் கொண்டாள். கௌதம், காருண்யா தூங்காமலே மறுநாள் பொழுது புலர்ந்தது.

ஸ்ரீ எழுந்து அர்ஜூனை பார்த்தாள். அவன் அனுவை கட்டிக் கொண்டு தூங்கினான். அவள் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை பார்த்து விட்டு தயாராகி வெளியே வந்தாள்.

அர்ஜூன் ஏற்கனவே எழுந்து யாரிடமோ பேசும் சத்தம் ஸ்ரீ குளிக்கும் போது கேட்டிருக்கும். இப்பொழுது அவள் வெளியே வர, அர்ஜூன் கண்ணீருடன் நின்றான். ஸ்ரீயை பார்த்தவன் அவளை அணைத்து, ஸ்ரீ நந்து கோபமாக இருந்தான். தப்பு செய்கிறேனோ? என்று தவிப்பு இருந்தது. ஆனால் நந்துவிற்கு அப்பாவாகும் தகுதி மாமாவிற்கு கண்டிப்பா இருக்கு என்றான். நந்து அனைத்தையும் அர்ஜூனிடம் கூறி விட்டான். அவன் அப்பாவிலிருந்து..அவன் மாமா இவனை தூக்கி கொஞ்சியது வரை. ஸ்ரீ புரியாமல் விழித்தாள். கதவை திறந்து வெளியே வந்தான்.

கேரி தயாராக இருந்தான் ரெசார்ட் செல்ல. கமலி சோபாவில் அமர்ந்திருக்க அவன் அம்மாவை அணைத்து..அம்மா நான் செய்ய நினைத்தது ரொம்ப சரி என்றான் அர்ஜூன். அவன் அனைத்தையும் கூற..காருண்யா முகம் மட்டும் மாறியது. கௌதமும் ஸ்ரீயும் அவளை பார்த்தனர்.

அர்ஜூன், இன்னும் கிளம்பலையா? நேரமாகுது என்று மறை அங்கு வந்தான். மாமா பத்தே நிமிடம் என்று தயாராகி அனுவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு கீழே வந்தான். அங்கே வேலு, மறை, கேரி, அகிலை தவிர மற்ற நண்பர்களும் வந்திருந்தனர். சக்தி மட்டும் வெளியே நின்றிருந்தான்.

அண்ணா..உள்ள வாங்க அர்ஜூன் அழைக்க, அஜூ..அவன் அங்கேயே இருக்கட்டும். அவன் என் வீட்டுக்கு வரக்கூடாது. எனக்கு என் வீடு கோவில். இவன் குடிச்சுக்கிட்டே இருப்பான். இவனையெல்லாம் உள்ளே விட முடியாது.

பாட்டி..அண்ணா..குடிக்கலை என்று சக்தி கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தான். சத்யாவை தவிர மற்றவர்கள் கிளம்பினர். சாப்பிட்டு போடா..

பாட்டி..ஏழு தான் ஆகுது. நாங்க வெளிய சாப்பிடுக்கிறோம் என்ற அர்ஜூன், சாயங்காலம் தான் வருவோம். வெளிய யாரும் போக வேண்டாம்.

அன்று மாதிரி செல்ல மாட்டோம் அண்ணா..ப்ளீஸ் தாரிகா கேட்டாள்.

சரி, பார்த்து இருங்க..என்று காருண்யாவை பார்த்தான். அவள் அழுதிருப்பது நன்றாக தெரிந்தது.

அண்ணா..ஒரு நிமிஷம் என்று ஃபிரிஜை திறந்து, “மேங்கோ மில்க் ஷேக்கை” பாட்டிலை எடுத்து, காரு கேச் என்று தூக்கி போட்டான்.

அவள் அதை பிடித்து அர்ஜூனை பார்த்து விட்டு கௌதமை பார்த்தாள். அவன் அர்ஜூனை பார்த்தான். சார்..உங்களுக்கு வேலை இருந்தால் முடிச்சிருங்க. நாம சாயங்காலம் வெளிய போகணும் என்றான்.

அர்ஜூன்..காருண்யா அழைத்தாள்.

என்ன? சீக்கிரம் சொல்லு..வர அப்புறம் நேரமாகிடும்.

நானும் வாரேன். என்னால வீட்டுக்குள்ள இருக்க எப்படியோ இருக்கு?

கௌதமும் கமலியும் காருண்யாவை பார்த்தனர். ஸ்ரீ கௌதமை பார்த்தாள்.

ஆன்ட்டி, நான் போயிட்டு வராவா? அவள் கேட்க, அவர் பாட்டியை பார்த்தார். அவளாகவே பாட்டியிடம் வந்து, நான் போயிட்டு வரவா பாட்டி? கேட்டாள்.

போயிட்டு வாம்மா. பத்திரமா போயிட்டு வாங்க என்றார். இன்பா, இதயா வந்திருப்பதை பார்த்து நீங்களும் போறீங்களா? நானும் வாரேன் என்றாள் தாரிகா.

தாரி..நாங்க டிரிப் போகலை. நிறைய வாங்கணும். எல்லாரையும் கவனிச்சுக்கிட்டு இருக்க முடியாது அர்ஜூன் சொன்னான்.

ஆமா, அக்கா மட்டும் தான் அவங்களுடன் போறாள் என்று இதயா வீட்டினுள் நுழைந்தாள்.

போயிட்டு வாங்க என்றாள் அர்ஜூன் கவினை முறைத்துக் கொண்டு. ரதி தன் ஆட்கள் இருவரை அவர்களுடன் அனுப்பி இருக்க அனைவரும் கிளம்பினர். கௌதம் காருண்யாவை பார்க்க அவளும் அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.

சத்யா- தியா திருமணத்திற்கான வேலையில் ரதி ஈடுபட்டிருக்க அகில் துருவனை கவனித்தான். துருவனுக்கு கோபம் குறையவேயில்லை.

காலையிலே சைலேஷ், கைரவ், நித்தி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நுழைந்தனர். கைரவிற்கும் நித்திக்கும் செம்ம சந்தோசம் அவங்க விளையாடும் ஆட்கள்..வார்ம் அப் செய்து கொண்டிருந்தனர் கோச்சுடன்.

எப்ப வந்தீங்க? கைரவ் கேட்க, சார், நான் காலையிலே வர வைத்து விட்டார். ஒருவாரம் இங்கே தான். கோச் சொல்லிக் கொண்டே நித்தியிடம், எத்தனை முறை உன்னை அழைத்திருப்பேன். சொல்பவர்கள் சொன்னால் தான் நீங்க கேட்பீங்க போல என்றார்.

அப்படியில்லை சார். எனக்கு கொஞ்சம் பயம் தான் என்று பசங்க அனைவரையும் பார்த்தாள். நேற்றிரவும் சைலேஷ், கைரவ் ரெசாட்டை பார்க்க சென்றிருக்க டீம் மெம்பர் விளையாடுவதையும், எதிரணிகள் விளையாடுவதை பார்த்து ஏதோ நோட் செய்து வைத்திருப்பாள் நித்தி.

நித்தியும் கைரவும் சைலேஷை பார்த்து அவனிடம் ஓடி வந்து “தேங்க்ஸ் அண்ணா” என்றும், “தேங்க்ஸ் சைலூ” என்று கூறி விட்டு அனைத்தனர்.

சைலூவா? ஒருவன் நித்தியின் அணைப்பை பார்த்து வாயை பிளந்தான். இன்னும் நோட்டிபிகேஷன் வரலையா? கேட்டான் சைலேஷ்.

எல்லாரும் வேகமாக போனை எடுத்து பார்த்தனர். அவர்கள் மோதிரம் மாற்றிய வீடியோ வைரலானது. நித்தி..நீ சாரை லவ் பண்றீயா? என்று கேர்ல்ஸ் டீம் வர புரியாமல் சைலேஷை பார்த்தாள். இன்று முழுவதும் இவங்களோட பண்ணு.

கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் பசங்க வர ஆரம்பிச்சிருவாங்க நித்தி சொல்ல..பிரச்சனை இல்லைம்மா..சார் முன்னதாகவே பர்மிசன் வாங்கிட்டார். நம்ம ஊர் புள்ளைங்க ஜெயிச்சா நல்லது தானே பிரபசர் சொன்னார்.

தேங்க்ஸ் சார் என்று அவரிடம் கூறி விட்டு சைலேஷை அணைத்தாள். அனைவரும் ஓவென கத்த நித்தி வெட்கத்துடன் சைலேஷ் பின் மறைந்து கொண்டாள். கைரவ் அவர்களை புன்னகையுடன் பார்த்தான். அவள் இரு டீமை பற்றி அவள் சேகரித்ததை கூற, ஒரே நாளில் பார்த்து சொல்ற..

சரியா தான் இருப்ப ஒருவன் கூற, சார்..பசங்க மத்தியில நித்தி விளையாடுறது சரியா இருக்காதே! நேரடியாக சைலேஷிடம் கூறினான்.

உன்னோட ஃபேவரேட் புட் என்னது? கேட்டான்.

அவனோ…சிக்கன் பிரைடுரைஸ், நூடுல்ஸ்..என்று பலவாறாக அடிக்கினான்.

இதில் ஏதாவது..பழைய உணவு வகை இருக்கா? சைலேஷ் கேட்டான்.

இல்ல சார். பாதுகாப்பு?

ஏன்? நீங்க பார்த்துக்க மாட்டீங்களா? சைலேஷ் கேட்க, நோ…என்னை யாரும் பாதுகாக்க வேண்டாம். போன முறை அதனால் தான் குரு இன்னும் சரியாகாமல் இருக்கான். என்னால் யாருக்கும் ஏதும் ஆகக்கூடாதுன்னு அவள் கண்ணீருடன் சொல்ல.

இதுக்கா அழுறம்மா? முடியும்மா. யாருக்கும் ஏதும் ஆகாமல் உங்க பொசிசனை மட்டும் மாற்றுவோம். அதுக்கு நான் பிளான் வச்சிருக்கேன் என்ற கோச்..போன முறை உன்னை பாதுக்காக்க வந்து மட்டும் இப்படி ஆகலை. முதல்ல அவன் அவன் பொசிசன்லயே நிக்கலை..

சார்..

ஆமாம்மா. அவன் மேலும் தப்புள்ளது. அந்த ரஞ்சித் பையன் உன்னை தொட்றகூடாதுன்னு தான் குரு இடையே வந்தான். அவன் அதை செய்வதற்கு பதில் பந்தை பிடித்திருக்கலாம். பந்தை பசங்க உன்னிடம் போடும் போது..உன்  கவனம் பந்தின் மீது மட்டும் தான் இருந்தது. ஆனால் நீயும் வாங்கலை. அவன் அதை வாங்கி இருந்தாலும் ரஞ்சித்திடமிருந்து உன்னை பாதுகாத்து இருக்கலாம்.

யார் மீது தப்பானாலும் இப்ப அவனும் அவன் அம்மாவும் தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க. எப்படியும் நானும் காரணம்.

சரிம்மா, நீ உன்னையே குற்றம் சாட்டிக் கொண்டே இரு. யாராலும் போகஸ் பண்ண முடியாது. தோத்து தான் போகப்போறீங்க? ஆனால் உன் திறமை உனக்கு தெரியலம்மா. அன்றி ஒரு சாட் பண்ணியே நினைவிருக்கா. 6.2 அடியிலிருந்தே பந்து தூக்கி சரியாக வளையத்தினுள் போட்டாயே? வேற மாதிரி இருந்தது.

என்ன? என்று அனைவரும் அதிர்ந்து நித்தியை பார்த்தனர்.

கோச் அந்த வீடியோ வச்சிருக்கீங்களா? கைரவ் கேட்டான்.

இல்லாமலா? இத்தனை வருசமா இந்த மாதிரி யாரும் செய்து பார்த்ததில்லை. எப்பொழுதும் என் போனில் இருக்கும் என்று அனைவரையும் அமர வைத்து போட்டு காட்டினார்.

வாவ்..சூப்பர் நித்தி..என்ற ஒருவன், இந்த ரஞ்சித்துக்கு நாம யாருன்னு காட்டணும். வாங்கடா என்று கிளம்பினர். சைலேஷ் மகிழ்வுடன் நித்தி, கைரவை பார்த்து கையை உயர்த்திக் காட்டி விட்டு லேப்பில் அவன் வேலையை தொடர்ந்தான்.

பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். ஜானுவும் துருவனும் வந்தனர். நித்தியை பார்த்து புன்னகைத்து விட்டு வகுப்பிற்கு சென்றனர்.

சற்று நேரத்தில் வெற்றி பள்ளிக்கு வந்தார். அவருக்கு ஏக வரவேற்பு ஆசிரியர், ஆசிரியைகள்.

சார், இதெல்லாம் வேண்டாம். என் பொண்ணு ஜானு ஆசிரியர் வரச் சொல்லி இருந்தார். அவங்க வந்தா நல்லா இருக்கும் என்றார். அனைவரும் கலைய..ஓர் அறையில் வெற்றி இருக்க ஜானு ஓடி வந்தாள்.

அப்பா..அவங்க முன்னாடி நல்லா திட்டுங்க. அவங்களே விட்டிருவாங்க என்றாள். அவள் ஆசிரியை வந்து அவளது மார்க் சீட்டை காட்டினார்.

வெற்றி அதை பார்த்து ஜானுவை பார்க்க அவள் கண்ணால் ஏதோ சொல்ல,அவர் கண்ணை மூடி காட்டி இருந்த சம்பாஷனையை பார்த்தவர்..ஜானுவிற்கான புகழை ஆரம்பித்தாள்.

மேடம், ஒரு நிமிஷம் இனி ஜானு நல்லா படிப்பா. நல்ல பொண்ணா நடந்துப்பா. அதுக்கு நான் பொறுப்பு. ஒரு வேலை அவள் நடவடிக்கை மாறலை என்றால் அவளது படிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

ஜானுவிற்கு தூக்கி வாரி போட்டது. அப்பா..என்ன சொல்றீங்க?

ஆமாம்மா. எனக்கு முடிவை மாத்தி பழக்கமில்லை. நீ மாறி தான் ஆகணும். படிக்க தான் செய்யணும் என்று எழுந்து பார்த்துக்கோங்க மேடம்.

ஏதாவது சேட்டை பண்ணா? அன்றே கால் பண்ணுங்க என்று நம்பரை கொடுக்க, அவரும் தலையசைத்தார்.

வெளியே வந்த ஜானு, அப்பா நீ வீட்டுக்கு போங்க. நான் வந்து உங்களை பார்த்துக்கிறேன் என்றாள். வகுப்பிற்கு சென்று துருவிடம் புலம்பி தீர்த்தாள்.

படி ஜானு, படிக்க முடியாம பாரு வேலு அண்ணா ப்ரெண்ட்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க? பார்த்து ஆதேஷ் அண்ணா உன்னை வேண்டாம்ன்னு சொல்லிடாம?

மாமா, என்னை சொல்லமாட்டாங்க? இந்த அண்ணாவே பரவாயில்லை. அப்பாவை கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு என்று அவள் புலம்ப,

சொன்னா புரிஞ்சுக்கோ ஜானு. உன்னோட மாமா பெரிய இடத்து பையன். நீ படிக்காத கிராமத்து பொண்ணுன்னா, அவர் நண்பர்கள் உன்னை வைத்து அவரையும் காயப்படுத்துவாங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன் பார்த்துக்கோ..நான் கேண்ட்டீன் வரை செல்கிறேன் என்று எழுந்து செல்ல,

அங்கே பசங்க துளசியை பற்றி பேசினாங்க. அவளுக்கு யாருடனோ பழக்கம் இருந்ததாம். அதனால் தான் அவள் வீட்டினர் அவளை ஃபாரின் அனுப்பிட்டாங்க என்று அவதூறாக பேசுதை கேட்ட துருவன் பொறுக்க முடியாமல் அடித்தான். அவர்களுக்குள் சண்டை நடக்க விசயம் அனைவரும் பரவியது.

உனக்கு எதுக்குடா கோபம் வருது? நீ தான் காரணமா? அவளை ஏதும் செய்து விட்டாயா? என்று துருவனை பற்றி பேச, ஜானு அங்கு வந்து..எல்லாரும் நிறுத்துறீங்களா?

துருவன் மேலுள்ள காதலால் தான் துளசி ஊரை விட்டு போயிருக்கா. அதுக்கென்ன இப்ப?

துருவன் கோபமாக ஜானுவை முறைத்து செல்ல, அவள் அவன் முன் வந்து, அவள் சொன்ன போதே பதில் சொல்லி இருக்கலாம். உனக்கு அவளை பிடிக்காதா?

அவளை பிடிக்கும். ஏன் ஜானு? உனக்கு தெரியாதே அம்மா கஷ்டம். ப்ளீஸ் ஜானு. ரொம்ப கஷ்டமா இருக்கு. நல்லா தான் பேசுனா. ஆனால் இப்படி விட்டுட்டு போவான்னு நான் நினைக்ககூட இல்லை. நீயும் என்னிடம் சொல்லலை.

எப்படி சொல்ல சொல்ற? நீ சொன்ன அதே காரணம் தான் எல்லாரையும் தடுத்தது. எங்க அப்பாவுக்கு கூட தெரியும். அவர் எத்தனை வருஷம் கழித்து துளசியிடம் நன்றாக பேசினார். ஆனால் உன் காதல் போல அவளுக்கு எங்க குடும்பத்து பாசமும் இல்லாமலே போச்சு. அவ போயிட்டா. வருவியான்னு கேட்டேன். பதில் கூட சொல்லாமல் போயிட்டா.

வருவா துருவா. கண்டிப்பா வருவா. இதுவரை காதல்ன்னு அவளுக்கு யாருமில்லை. உன்னை பார்க்க உனக்காக கண்டிப்பா வருவா. அவள் வரும் போது நீ நல்ல நிலையில் இருக்கணும். ஒழுங்கா நடந்துக்கோ..என்று சுற்றி இருப்பவர்களை பார்த்து..அடுத்தவங்க விசயத்திலே எல்லாரும் குறியா இருக்கீங்க? நாம படிக்க வந்துருக்கோம். அந்த வேலையை பார்ப்போம் என்றாள்.

துருவன் அவளை பார்த்து, இப்ப தான் உன்னோட அப்பாவை வீட்ல போய் கவனிச்சுக்கிறேன்னு சொன்ன?

நீ சொன்னது சரி தான் துருவா. மாமா கஷ்டப்பட விட மாட்டேன். அதுக்காக படிக்கிறேன். ஆனால் நீயும் புவியும் தான் உதவி செய்யணும்.

பண்ணலாமே? என்று அவன் ஜானுவிற்கு கையை கொடுத்தான். எல்லாரும் இருவரையும் வித்தியாசமாக பார்த்து அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

சுந்தரம் வீட்டில் நந்து தயாராகி வெளியே வந்தான். சுந்தரம் கையில் போனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவர் வீட்டிற்கு வந்த மாதவ் கேட்டிலே நின்று அவருக்கு போன் செய்தான்.

உள்ளே வா என்றார்.

சார், இருக்கட்டும்.

அட, வாய்யா..என்று கூற அவன் உள்ளே வந்தான்.

நந்து சாதாரணமாக அவர் அருகே வந்து அமர்ந்தான். உள்ளே வந்த மாதவ் நந்துவை பார்த்து நின்று பின் சுந்தரத்தை பார்த்து சல்யூட் செய்து பைல்லை கொடுத்தான்.

தம்பி, உன்னோட அம்மாவை மூவருக்கும் டீ எடுத்து வர சொல்லுங்க என்றார். மாதவ் வித்தியாசமாக அவரை பார்த்தான்.

நந்து அமர்ந்தபடியே அம்மா, டீ எடுத்துட்டு வாங்க என்றான்.

என்ன நடக்குது? இவர் யாரையும் வீட்டிற்குள் விடவே மாட்டார். அவனை எங்கோ பார்த்தது போல் உள்ளதே? சிந்தித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பைல்லை பார்த்துக் கொண்டு மாதவை பார்த்தார்.

மேகா வெளியே வந்து,” குட்மார்னிங் அங்கிள்” என்று அமர்ந்தாள்.

அங்கிளா? நந்து கேட்டான்.

அவருக்கு என் அப்பாவை நன்றாக தெரியும்ல அதான் அங்கிள்ன்னு சொன்னேன் என்று மாதவை பார்த்து, சார் நீங்களா? தெய்வமே எங்க ப்ரெண்ட நல்லபடியா காப்பாத்தி கொடுத்தீங்க என்று மாதவிடம் கூற, நந்து அவளை முறைத்தான்.

ஏய் குடிகாரி, இங்க என்ன பண்ற? யாசு உன்னை கழுவி கழுவி ஊத்தினா. பாவம் உன்னால அந்த பொண்ணு ரொம்ப பயந்துட்டா. நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? என்று மேகாவை பார்த்து மாதவ் கேட்டான்.

யார பார்த்து குடிகாரீன்னு சொன்னீங்க? என்று மேகா மாதவை நெருங்கினாள். நில்லு மேகா..என்று நந்து எழுந்தான்.

சார், அது முடிஞ்சது. அதுக்கு முன் அவள் குடிச்சதில்லை. கோபத்துல்ல பண்ணிட்டா என்று மாதவிடம் பேசினாலும் மேகா அருகே சென்று என் மானத்தை வாங்கிட்ட என்று பல்லை கடித்தான்.

ஏய், எல்லாமே உன்னால் நடந்தது. நீ தான் என்னிடம் பேசவேயில்லை மேகா கோபமாக கூற, நானா காரணம்? நீ பேசியதை மறந்துட்டியா? நான் கோபப்படும் அளவு அர்ஜூனிடம் சீப்பா பேசிட்ட..அவன் சத்தமிட்டான்.

நந்து, எதுக்கு சத்தம் போடுற? என்று கேட்டுக் கொண்டே டீ எடுத்து வந்து சுந்தரத்திற்கும் மாதவிற்கும் கொடுத்தார். அவர்களை பார்த்துக் கொண்டே டீயை வாங்கினார்கள் இருவரும்.

தம்பி, உட்காருங்கப்பா..என்று நந்து அம்மா சொல்ல, மாதவ் அவர்களை பார்த்து விட்டு சுந்தரத்தை பார்த்தான்.

ஆமா, பேசினேன் தான். எனக்கு என்னோட அப்பா கொடுத்த டென்சன். அர்ஜூனும் ஸ்ரீயுடனே இருந்தான். அப்பாவிற்கு தெரியவந்தது. அர்ஜூன் அம்மா கூட அவகிட்ட பேசினாங்க. ஆனாலும் அவள் அர்ஜூனை விட்டு விலகவேயில்லை.

அர்ஜூன் அம்மா ஸ்ரீயிடம் பேசினாங்களா? என்ன பேசினாங்க? நந்து கேட்க, சுந்தரமும் எழுந்தார். அவள் பயந்து கொண்டே நின்றாள்.

தம்பி, முதல்ல அம்மாவிடம் வாங்கி டீ சாப்பிடு என்று நந்துவிடம் கூறி விட்டு மாதவ் பக்கம் அவர் நகர, அவர் கையை பிடித்து நந்து நிறுத்தினான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாதவ் வேகமாக நந்து கையை தட்டி விட்டான்.

மாதவ் சும்மா இருப்பா என்று சுந்தரம் சொல்ல, அவர் கையை நீ எதுக்கு பிடிக்கிற?

சுந்தரத்திடம் சார், எதுக்கு சார் இவங்கெல்லாரும் உங்க வீட்ல இருக்காங்க. நீங்க வீட்டுக்குள்ள யாரையும் விட்டதில்லை. நீங்க வேலைக்கு கூட ஆள் வக்காம தான இருந்தீங்க? இவங்க எல்லாரோட சேர்ந்து இருக்கீங்க? யாராவது தப்பா நினைத்தால்…சும்மாவே இத்தனை நாள் பார்க்க வராத பொண்ணு உங்கள பார்க்க வந்திருக்கான்னு பேச ஆரம்பிச்சி இருக்காங்க. இவங்கள பார்த்தால் கண்டிப்பா தப்பா தான் நினைப்பாங்க.

நந்து மாதவை முறைத்து பார்த்தான். சுந்தரம் அவனை பார்த்து, வா..நாம பேசலாம் என்று மாதவை வெளியே அழைத்தார். நந்து அவர் முன் வந்து உரிமையுடன், இங்கேயே பேசுங்க என்றான்.

ஏய்..என்று மாதவ் கோபப்பட, மாதவ் பேச்சை நிறுத்து என்று சத்தமிட்டார் சுந்தரம். நந்து அம்மாவும் மேகாவும் அவரை பார்த்தனர். நந்து மாதவை பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

சார்..என்று விலகி நின்றான். ஷ்…என்றவர், உனக்கு தெரியாதா மாதவ்? அர்ஜூன் ப்ரெண்டு தான் இந்த பசங்க. நான் கூட அதனால இந்த பையன் அம்மாவை கடத்த முயற்சிக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அந்த கொலைகாரன் கண் இவங்க மேல ஏற்கனவே விழுந்திருக்கு. அவன் முன்பே இவர்கள் வீட்டையும் கண்டுபிடிச்சுட்டான். ஆனால் ஏதும் செய்யவில்லை என்று நந்துவையும் அவன் அம்மாவையும் பார்த்தார்.

சார், அப்ப இவங்க மேல அவன்..

உன்னிடம் அர்ஜூன் அந்த கொலைகாரன் காதலிச்சவங்கள பத்தி பேசினானா?

அவன் மிரட்டியதை சொன்னான் சார். யாரோ ரெண்டு பேரை காதலித்து ஏமாந்தானாம்.

அவர் சிரித்துக் கொண்டு, அவன் ஏமாந்தானா? ஒரு பொண்ணுகிட்ட சொல்லி தான் ரிஜெக்ட் ஆனான். ஒரு பொண்ணுக்கு அவன் காதல் தெரியாது.

அகில்..தெரியுமா? உன்னோட லவ்வரோட ப்ரெண்டு.

ஆமா, நல்லா தெரியுமே? பார்க்க தான் அமைதியா இருப்பான். ரொம்ப கோபக்காரன் சார்.

அவன் அம்மாவிடம் தான் காதலை சொல்லி ரிஜெக்ட் ஆனான்.

என்ன? அவன் அம்மாவா? அப்ப சொல்லாத காதல்?

ஸ்ரீ அம்மா.

அவங்களா? அப்ப இந்த கொலைகாரன் காதலுக்காக தான் எல்லாமே செய்கிறானா?

ம்ம். அதை விட இப்ப அர்ஜூன், ஸ்ரீயை விட இவங்களுக்கு தான் ஆபத்து.

அவனது மூன்றாவது காதல் இவங்க தான் என்றார் சுந்தரம் அவன் அம்மாவை பார்த்தார்.

சார், அப்ப இதுக்கு முன்னாடி நிறைய பேர் என்று நந்து அம்மாவை பார்த்து நிறுத்த, அவரும் சொல்லாதன்னு தலையசைத்தார். அவன் கற்பழிப்பு விசயம் தெரிந்தால் பயப்படுவாங்கன்னு இருவரும் பார்த்துக் கொண்டார்.

சார், எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னா விட மாட்டானா? அவன் அம்மா கேட்க, மேம்..அவன் சாதாரண ஆளா? நீங்க சொன்னதை கேட்க? அவன் கொலைகாரன்..பல பொண்ணுங்க வாழ்க்கை என்று சொல்ல..நந்து அவன் வாயை பொத்தினான்.

நந்து, அவர் ஏதோ சொல்ல வர்றார். அந்த பையனை பேச விடு என்றார் அவன் அம்மா. நந்து மாதவிடம் கண்ணை காட்ட, அவன் மாற்றி பேசினான்.

இப்ப அவன் என் மீது கோபமாக இருக்கிறான். இவங்க அவங்க வீட்ல இருந்தா அப்பவே துக்கி இருப்பான். என்னை எச்சரிக்க தான் இங்கே வந்தான்.

இங்க வந்தானா? சார் ஒன்றும் பிரச்சனையில்லையே? பதறினான் மாதவ். மாதவின் அக்கறை நந்துவிற்கு பிடிக்கவில்லை. அவனை முறைத்து பார்த்தான்.

இரு. நான் சில புகைப்படங்கள் எடுத்து வாரேன். எனக்கு உன் உதவி தேவை. ஆனால் யாருக்கும் ஏதும் தெரியக்கூடாது என்று சுந்தரம் நகர, நில்லுங்க அந்த புகைப்படம் அங்கு இருக்காது. நான் வைத்திருக்கிறேன் என்றான் நந்து.

நீ அவருக்கு தெரியாமல் அவர் பொருளை எடுத்தாயா? மீண்டும் மாதவ் சண்டைக்கு நிற்க, ஷ்..என்று அவனை நிறுத்திய சுந்தரம், எதுக்கு நீ எடுத்த?

எனக்கு அவசியம் தான். யார் என் அம்மாவை ஒழுக்கமில்லாதவங்கன்னு சொன்னாங்களோ அவங்களுக்கு காட்ட வேண்டிய ப்ரூஃப். நான் அவங்களை பார்க்க போகணும். நீங்க தான எல்லாத்தையும் சொன்னீங்கல்ல? அவங்க முகவரியை கொடுங்க. நான் சாப்பிட்டு கிளம்புறேன்.

அதற்கு அவசியமில்லை என்றார் அவன் அம்மா.

அம்மா..உனக்கு அவங்க மேல கோபமே வரலையா? எனக்கு விவரம் தெரியாத போது எனக்கு பெரியதாக ஏதும் தெரியலை. நான் எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருக்கும் போது மற்ற அம்மாக்களுக்கும்  உனக்கும் வித்தியாசம் தெரிந்தது என்று நந்து அவன் அம்மாவிடம் வந்து,

சொல்லுங்க..நீங்க வீட்டிலிருந்து வெளியே வந்ததில்லையே? நீங்க படிக்கவும் இல்லை. ஆனால் நீங்க ஜமீன் குடும்பம். எப்படி?

வீட்டில இருந்து வெளிய வந்ததில்லையா? படிக்கலையா? நீங்க வீட்ல இருந்து வெளியே வரும் போது உங்களுக்கு வயசு இருபது தான இருக்கும்? சுந்தரம் கேட்டார்.

ஆமா..அது எங்க வீட்டு ஜமீன் குடும்பத்தோட விதிமுறைகள். பொண்ணுங்க கல்யாணம் முடியும் வரை அரண்மனையை தாண்டக் கூடாது. நாங்க படித்தால் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம்ன்னு

எங்களை படிக்க விட மாட்டாங்க. சின்ன அவதூறான பேச்சு ஊரில் எழுந்தாலே பெரிய தண்டனை தான். அதான் பிள்ளையை வைத்து தனியே கஷ்டப்படும் போது கூட நான் அவர்களை பார்க்க கூட செய்யலை. என்னால் என் நந்துவும் அவர்கள் பேச்சால் கஷ்டப்படுவான்னு எனக்கு தெரிந்த வேலையை செய்து அவனை பார்த்துக் கொண்டேன். அவங்க எப்படி நம்பாம இப்படி செஞ்சாங்கன்னு தெரியலை. அதான் கஷ்டமா இருக்கு. நான் வீட்டுல கடைசி பொண்ணு. நான் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். ரொம்ப செல்லம். ஆனால் என்னை அவங்க ஒருவர் கூட நம்பலை. நான் மட்டுமல்ல.. நீயும் அங்கே போகக்கூடாது என்று கண்ணீருடனும் கண்டிப்புடன் நந்து அம்மா கூற,

அம்மா, இப்ப தான் கண்டிப்பா போகணும்ன்னு தோணுது? அது எப்படி? உங்கள வெளிய விடாம இருந்து எதையும் முழுதாக தெரியாமல் பழி சுமத்துவாங்கல்லா? அப்ப உங்களுக்காக பேச யாரும் இல்லை. இப்ப நான் இருக்கேன். நாம அந்த மண்ணை மிதிக்க கூடாது தான். ஆனால் என்னோட அம்மா மேல தப்பான பெயர் தான இருக்கு. அதை நான் சரி செய்துட்டு வாரேன்.

போகாதன்னு சொன்னா கேட்க மாட்டாயா? என்று அவன் அம்மா அவனை அடிக்க கையை ஓங்கினார். சுந்தரம் அவர் கையை பிடித்து தடுத்து, அமைதியா இருக்கீங்களா? கேட்டார்.

சார், இதுல நீங்க தலையிடாதீங்க? உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று அவன் அம்மா சொல்லவும் யார் சொன்னா? எனக்கு சிறியதாய் உங்க பையன் மேல உரிமை இருக்கு என்றார். நந்துவிற்கு அவர் சொல்வது நன்றாக புரிந்தது.

சார், புரிஞ்சு தான் பேசுறீங்களா? மாதவ் கேட்டான்.

நல்லா புரிஞ்சு தெரிஞ்சு தான் பேசுறேன்னு. அவர் அவர்களை காப்பாற்ற வந்த போது நடந்ததை காட்டினார். அவன் அம்மா கண்ணீருடன் சுந்தரத்தை பார்த்தார்.

சார், என்னோட அப்பா இருக்கார் மாதவ் சொல்ல, உங்க அப்பாவா? நந்து கேட்டான்.

சுந்தரத்தை அடுத்து நந்துவை ஏந்தியவர் நம் மாதவின் அப்பா.

உங்க உறவுக்காரவங்க செய்றதை தான் அந்த இடத்திலிருந்து நாங்க செஞ்சோம். அந்த உரிமையில் ஒன்று கேட்கவா? என்ற சுந்தரம் நந்து அம்மா அருகே வந்தார்.

கண்ணீரை துடைத்து விட்டு நிமிர்ந்து அவரை பார்த்தார். எனக்கு அர்ஜூன் அவன் ப்ரெண்டுன்னு சொன்னவுடனே உங்களை பற்றி சொன்னான். அவன் தான் உங்களுடன் அவன் எடுத்த புகைப்படத்தை அனுப்பினான்.

அதை பார்த்தவுடன், ஏதோ உங்களை பார்த்த நினைவு மீண்டும் சில புகைப்படத்தை அனுப்பினான். அதை பார்த்து எனக்கு நீங்க தான்னு தெரிஞ்சது. உங்களை பற்றி தெரிந்ததால் தான் உங்களை என் வீட்டிற்குள் அனுமதித்தேன். இன்று நான் உன்னை உள்ளே அழைத்த காரணம் என்று மாதவை பார்த்து, இந்த வீடியோவை காட்ட தான்.

எதுக்கு சார்?

ம்ம்..காரணம் இருக்கு. அவங்க என்று தயங்கி..அந்த சைக்கோவை போல் இந்த கொலைகாரனும் மாறி விட்டான். அவன் அனுப்பிய ஆட்கள் எட்டு பேரை ஒரே நேரத்தில் சுட்டீங்க? உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ண சொல்லி மேலிடத்தில் இருந்து தான் ஆர்டர் வந்தது. உங்களுக்கு எதிராக இருந்த அனைவரும் அவன் ஆட்கள்.

உங்களுக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல யார் இருந்தாங்க நினைவிருக்கா?

இருக்கு சார். நான் அவன் ஆட்களை கொன்றால் செய்தானா?

இல்லை. அதுக்கு நானும் ஒருவிதத்தில் காரணம். என்னோட ரெக்கார்ட்ஸ்..சாதனை பற்றி உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்?

எஸ் சார், அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம்?

புல்லட் ரவி, கொக்கி குமாரு என பத்து பேரே ஒரே நேரத்தில் என்கவுண்டர் பண்ணேனே?  அது போல் தான் அன்று எட்டு பேரை என்கவுண்டர் பண்ணீங்க. ஆனால் அதை கொலை கணக்கில் செய்தது எதுன்னு தெரியுமா?

தெரியும் சார். ஆர்டர் இல்லாமல் செய்தது.

ம்ம்.கரெக்ட்..இனி பெரியதாக செய்ற மாதிரி இருந்தா என்னிடம் சொல்லிட்டு செய்யுங்க. இம்முறை போல் மறுமுறை சமாளிக்க முடியாது.

சார், நீங்க தானா? அவங்க முடிவு பண்ணலையா?

ம்ம்..அவங்க முடிவு செஞ்சிருந்தா இப்ப நீங்க உள்ள தான் இருந்திருக்கணும். மக்கள் உங்க பக்கம் இருந்தாலும் நம்ம ஆட்கள் பலர் உங்களுக்கு எதிராக தான் இருந்தாங்க. அதனால் ரகசிய உளவாளியான நான் தான் அனுப்பியதாக ஆர்டரை உடனே தயார் செய்து அனுப்பினேன். அதனால் தான் தப்பித்தீங்க. நீங்க சுட்ட பத்தாவது நிமிஷமே அர்ஜூன் விசயத்தை மேசேஜாக அனுப்பினான். அதனால் தான் உதவ முடிந்தது.

ஆனால் அவனுக்காகவோ, உங்க அப்பாவுக்காகவோ இந்த பதவி உயர்வு இல்லை. உங்களை பார்க்கும் போது என்னையே பார்த்தது போல் இருந்தது. என்ன நமக்குள் சில வித்தியாசமென்றால்..உங்களுக்கு குடும்பம் இருக்கு. எனக்கு இப்ப கூட என் பொண்ணை தவிர குடும்பமுல்லை. அடுத்தது காதல்..அதுவும் இல்லை வருத்தமாக கூற,

சார், எனக்காக நீங்க உதவுனீங்களா? என்று மாதவ் கண்ணீருடன் அவரை அணைத்து விட்டு நகர்ந்து, சல்யூட் செய்து உங்கள் உதவி வீண் போகாது சார். இனி நீங்கள் சொல்லும் ஒவ்வோர் வார்த்தையையும் கடைபிடிப்பேன்.

ஏன் சார், யாருமில்லைன்னு சொல்றீங்க? அப்படி சொல்லாதீங்க. அர்ஜூன் கஷ்டப்பட்ட போது நீங்களும் அவன் அம்மாவின் செக்கரட்டரி சாரும் இருந்ததா சொன்னான்.

அப்படியா சொன்னான். அவன் தான் யாருமில்லாமல் உடைந்து தவித்திருந்த சமயம் என்னிடம் வருவான். வாரம் ஒரு முறையாவது வந்துருவான். அவனுக்காக தான் சன்டே அதிகமாக ஆபிஸ் வர மாட்டேன் என்றார்.

நந்து அம்மா பக்கம் திரும்பிய சுந்தரம், அவன் அப்பா கொலைகாரன். அவன் பாசமான அம்மா வாழ்க்கையை கெடுத்தவன். அதையும் விட அவன் அம்மாவிற்கு தப்பான பெயரை வாங்கி கொடுத்தவன். இப்பொழுது தான் உங்க பையனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவன் கோபம் நியாயமானது. நீங்க யோசித்து பாருக்க? உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரிய வந்தால் கொலைகாரன் பையனென்றும், அம்மா தவறான நடத்தை உள்ளவர் என்று தான் அவனுக்கும் பெயர் கிடைக்கும். அதை அப்படியே விட சொல்றீங்களா?

எந்த உண்மையும் எல்லா நேரங்களிலும் மறைத்து விட முடியாது. என்றாவது ஒரு நாள் வெளிவரும். இப்பவே பிசினஸ் பண்ணப் போறான்னு அர்ஜூன் சொன்னான். அவன் பெயரும் கெட்டு, அவன் உழைப்பு, வாழ்க்கை முழுவதும் வீணாகும் பரவாயில்லையா? உங்கள் பெயராவது சரியானால் அவன் கொஞ்சம் நிம்மதியாவது இருப்பான் என்றார்.

அவன் அம்மா சிந்திக்க, ஆமாம் இனி அப்பாவை பற்றி நீங்க பேசவே கூடாது. நீங்க வேரொருவரை கண்டிப்பாக திருமணம் செய்யணும். அப்ப தான் கொலைகாரன் மனைவி என்ற பெயரும் கொலைகாரன் மகன் என்று என் பெயரும் வெளியே வராது என்று நந்து சுந்தரத்தை பார்த்துக் கொண்டே அம்மாவிடம் சொன்னான். அவன் அம்மா அவனை அடித்து விட்டார்.

அனைவரும் பதற, பரவாயில்லைம்மா. நீங்க அடிச்சாலும் வாங்கிக்கிறேன். நீங்க செய்து தான் ஆகணும். உங்க வாழ்க்கையில் என் முன் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க? ஆனால் உங்களிடம் இதுவரை உங்களுக்கு திருமணத்தை பற்றி பேசலைன்னா. என் அப்பாவுடன் சந்தோசமா வாழ்ந்திருப்பீங்கன்னு தான். ஆனால் ஒவ்வொரு நாளும் எப்படி கஷ்டப்பட்டு கடந்து இருப்பீங்கன்னு நினைச்சாலே வேதனையா இருக்கு. உங்க மகன் உங்களை பார்த்துக் கொண்டாலும்..எல்லா நேரமும் முன் போல் என்னால இருக்க முடியாது. உங்களை தனியா பார்த்து கஷ்டப்பட முடியாது. உங்களை பார்த்துக்க, உங்கள் அருகிலே இருக்க யாராவது வேண்டும்.

எனக்கு காலேஜூம் இருக்கு. கம்பெனியும் பார்த்துக்கணும். காலை காலேஜூம் மாலை கம்பெனி வேலையாகவும் சுற்றி திரிய வேண்டி இருக்கும். என்னால மேகாவையும் விட முடியாது. உங்களையும் விட முடியாது. அவள் நிலையும் உங்களுக்கு நல்லா தெரியும். நீங்க பார்த்து பதில் சொல்லுங்க..

சார், நீங்க முகவரி தாரீங்களா? கேட்டான் நந்து.

தாரேன். ஆனால் நீ நினைப்பது போல் சாதாரணமாக உன் அம்மா வீட்டிற்குள் நுழைய முடியாது. அவங்க தான் கட்டுப்பாடு, விதிமுறைன்னு சொன்னாங்களே! நீ உள்ள போகணும்ன்னா உன்னோட அம்மாவும் உன்னுடன் வரணும். அதான் சரியா இருக்கும் என்றார்.

அம்மா, நீங்க என்ன சொல்றீங்க? நந்து கேட்க, அவன் அம்மா அங்கிருந்தவர்களை பார்த்தார். நந்துவிடம் வந்து, நான் திருமணம் பண்ணிகிறேன். ஆனால் ஒரு கண்டிசன்..என்னிடம் மிஸ்பிகேவ் பண்ணாதவராக இருக்கணும் என்றார். சுந்தரம் முகம் மாறியது. மற்றவர்கள் அவரை பார்த்தனர்.

நந்து அவன் அம்மாவை கட்டிக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ்ம்மா” என்று சுந்தரத்தை பார்த்தான். அவர் முறைத்து பார்த்தார். அவன் புன்னகைத்தான்.

அம்மா, உன்னோட வீட்டுக்கு போகலாமா? நந்து கேட்டான்.

போகலாம். ஆனால் அங்கே உரிமை கொண்டாடக் கூடாது என்றார்.

அம்மா..நான் உங்க மேலுள்ள தவறான அபிப்பிராயத்தை மாற்ற தான் அழைத்து செல்கிறேன்னு சொன்னேன். மற்றபடி நம் வேலை முடிந்தவுடன் கிளம்பி விடலாம்.

போகலாம் என்றார். சுந்தரத்திடம், “இப்ப அட்ரஸ் தாரீங்களா சார்?” நந்து கேட்டான்.

நானும் வருகிறேன் என்றார்.

நீங்க எதுக்கு சார்?

தனியா எப்படி போவீங்க? கொலைகாரனை மறந்துட்டியா?

மறக்கலை சார். உங்களுக்கு வேலை இருக்குமே?

ஆமா சார், ப்ரெஸ் மீட்டிங் பத்து மணிக்கு இருக்கு. குட்டிப்பொண்ணுங்க கடத்திய விசயத்தை முடித்து விட்டோமே? அதற்கான மீட்டிங் என்று மாதவ் சொன்னான்.

இருக்கு. இவங்கள எப்படி தனியா அனுப்புறது?

நான் பார்த்துக்கிறேன் சார் என்றான் மாதவ்.

தேவையில்லை. நானே அவர்களுடன் செல்கிறேன். மீட்டிங்கை முடிச்சிட்டு போகலாம் என்றார்.

நந்து அவரை பார்த்து விட்டு, ஓ.கே நீங்களும் வாங்க சார் என்றான்.

மாதவ் நான் பைல்லை பார்த்துட்டு ஆபிஸ் வரும் போது தருகிறேன். நீ வீட்டுக்கு சென்று தயாராகி வா.

சார், நானா?

நீ தான். கிளம்பி வா..என்னோட அசிஸ்டென்ட் கிட்ட மீட்டிங்கிற்கு நேரத்திற்கு வருவேன்னு மட்டும் தகவல் சொல்லிடு என்று நந்துவிடம்.. மீட்டிங் முடிந்து உங்களை கூட்டிட்டு போறேன்.

நானும் வரலாமா?

நீ வந்து என்ன செய்ய போகிறாய்? கேட்டான் மாதவ்.

சும்மா தான் வரக்கூடாதா?

தயாராகு..கிளம்பலாம்.

நந்து, நீ அங்க போய் என்ன செய்யப் போற? அவன் அம்மா கேட்க, சும்மா தான் வெளிய தான் எங்கேயும் போக முடியாது. அவருடன் தானே போயிட்டு வாரேனே? என்றான்.

நந்து, நமக்கு வேலை இருக்கு என்றாள் மேகா.

எப்படியும் அம்மா ஊருக்கு போயிட்டு வர நேரமாகலாம். நாளையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றான். அவள் முறைத்துக் கொண்டிருந்தாள்.

உனக்கென்ன வேலை சரியா நடக்குதான்னு தானே பார்க்கணும். சார் தயாராகி வரும் முன்னே நாம வீடியோ கால் செய்து மேனேஜரிடம் பேசலாம் என்றான்.

இப்பவே வா? என்று நந்துவை மேகா இழுத்து சென்றாள். இருவரும் பேசி விட்டு வரவும் சுந்தரமும் தயாராகி வந்தார். சாப்பிட்டு விட்டு இருவரும் கிளம்பினர். சுந்தரம் நந்து அம்மாவை பார்த்து விட்டு சென்றார்.

இவருக்கு என்னாச்சும்மா? ஒருமாதிரி இருக்காரே? நந்து அம்மா கேட்க, மேகா புன்னகைத்தாள். அவளும் நேற்று நந்துவுடன் நின்று அவரை கவனித்திருப்பாள்.