அத்தியாயம் 115
சுந்தரம் டென்சனுடன் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவன் அம்மா வெளியே வந்து நிதானமாக அந்த புடவையை டேபிளில் வைத்தார். அவரை பார்த்து சுந்தரம் எழுந்து நந்து அம்மாவை அடித்தார்.
என்னோட அம்மாவை எதுக்கு அடிச்சீங்க? என்று அவனும் கையை ஓங்கினான். அடிடா..எதுக்கு நிறுத்திட்ட? அடி..உனக்கு என்ன? என் மேல நம்பிக்கை இல்லை. அப்படி தான?
எனக்கும் என்னோட பொண்டாட்டிக்கும் பிரச்சனை வந்து பத்து வருசமாச்சி. ஆனால் நான் அவள் நினைவிலே தான் என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நான் நினைத்தால் மறுபடியும் கல்யாணம் செய்திருக்கலாம். நான் செய்யாத காரணம். அவளுக்காக இல்லை. என் பொண்ணுக்காக..என்றாவது ஒரு நாள் என்னோட பொண்ணு விசயம் தெரிஞ்சு என்னிடம் வருவா..அந்த நேரம் எங்களுக்கு இடைஞ்சலா யாரும் வரக்கூடாதுன்னு என்னை பத்தி யோசிக்கலை. அவள் அம்மா..ஒருவனுடன் இருப்பது போல் நானும் வேறொரு பொண்ணுடன் இருந்தால் கஷ்டப்படுவான்னு நான் வேலையில் மட்டும் தான் கவனமா இருந்தேன். இருக்கிறேன். ஆனால் ஒருநாள் முன்பு அவளாகவே என்னை தேடி வந்தாள். உதவி கேட்டு தான் இருந்தாலும் அவளை நான் பிரிந்த போது அவளுக்கு வயசு பத்து..இப்ப நல்லா வளர்ந்துட்டா, அவளுக்கு தெரியாமல் பார்ப்பேன். ஒரு நாள் கூட அப்பாவாக நிற்க முடியாத நிலைக்கு என் பொண்டாட்டி தள்ளிட்டா.
இப்ப என்னோட பொண்ணுக்கு அவள் அம்மா பற்றிய அனைத்தும் தெரிஞ்சு உடஞ்சு போயிட்டா. அதான் என்னோட அம்மாவிடம் அனுப்பினேன். நீ அர்ஜூனுக்கு க்ளோஸாமே? சொல்லி இருப்பான்ல.
சின்ன வயசுல அப்பாவிடம் கோபிச்சுட்டு வந்தேன். இருக்க இடம் கூட இல்லாமல் பிளாட்பார்ம்ல தான் தூங்குவேன். அது போல் ஓர் நாள் தான் ஒரு போலீஸ் என்னை அவர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவருக்கும் யாருமில்லை என்பதால் என்னை படிக்க வைத்து போலீஸ் ஆக்கினார்.
அங்கே தான் இந்த கொலைகாரன் எனக்கு நண்பனானான். அவனும் நல்லவன் தான். போலீஸ் டிரையினிங்ல இருவருக்கும் ஒரே அறை. ஒரே பேஜ் தான். என்னை வளர்த்த சாதாரண போலீஸாக இல்லாமல் உயர்ந்த பதவிக்கு செல்ல வெறியோட எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருந்த சமயம் சைக்கோ ஒருவனால் என்னை வளர்த்த அப்பாவை இழந்தேன். என்னுள் வெறி அதிகமாகியது. அன்று ஆரம்பித்தேன் என் வேட்டையை. ரௌடிகளை பார்த்தாலே எனக்கு கோபம் தான் வரும். எனக்கு உயர் பதவி வேண்டுமென்பதால் அதை கட்டுப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முதல் என்கவுண்டர் அந்த சைக்கோ தான். பாரபட்சமின்றி சுட்டு தள்ளுவேன். அதனால் தான் என்னை “டெவில்”னு சொல்லுவாங்க.
வளர்ப்பு அப்பா தான் அவளை எனக்கு மணமுடித்து வைத்தார். அவள் ஏற்கனவே ஒருவரை காதலித்தது தெரிந்தால் அன்றே எங்கள் திருமணம் நடந்திருக்காது. அவள் என்னிடம் சொல்லாமல் நான் நேரம் கழித்து வருவதாலும், சில நேரங்களில் வராமல் இருப்பதாலும் அவள் வேறொருவனுடன் வாழ ஆரம்பித்தாள் எனக்கு தெரியாமலே பிள்ளையை வைத்துக் கொண்டு என்று கண்ணீருடன்..தெரிந்த பின் இருவரையும் எச்சரித்தேன். ஆனால் அவள் புள்ளையை தூக்கிக் கொண்டு என்னை விட்டு நிரந்தரமாக சென்று விட்டாள். அவளை நான் தான் ஹாஸ்டலில் சேர்க்க சொன்னேன். தனியாக இருந்தாலும் பாதுகாப்பா இருப்பான்னு..என்னால் என்னுடைய பொண்டாட்டியை நம்ப முடியவில்லை. அதனால் தான் சேர்த்தான். நாளடைவில் பிள்ளைய பார்க்க போக மாட்டேன்னு சொல்லிட்டா. பணம் கொடுத்து என் பொண்ணை பார்க்க அனுப்பினேன் என்றார். மேகா வாயில் கையை வைத்தாள்.
அவரை நிறுத்திய நந்து, காருண்யாவை பத்து வயசிலே ஹாஸ்ட்டல்ல விட்டுட்டீங்களா? கண்கலங்க கேட்டான்.
ம்ம்..என்றவர் நிமிர்ந்து, உனக்கு அவளை தெரியுமா? கேட்டார்.
அர்ஜூனுக்கு தெரிந்த பின் நாங்களும் அவனுடன் போவோம் என்றான் அவன்.
நாங்களுமா? என்று மேகாவை பார்த்தார். நானும் அர்ஜூனோட ப்ரெண்டு தான் என்றாள் மேகா.
நீ தான் அந்த டார்ச்சர் பொண்ணா?
டார்ச்சரா? அப்படியா சொல்லி வச்சிருக்கான்? அர்ஜூன்..நீ என் கையில மாட்டுன. செத்தடா..திட்டினாள் அர்ஜூனை.
நிறுத்துறியா? என்றான் கோபமாக நந்து.
சரி, நான் பேசலை என்று வாயில் கை வைத்தாள்.
நான் பாதுகாப்பா இருப்பான்னு சேர்த்தேன். தனிமையால கஷ்டப்பட்டிருப்பா போல..
ம்ம்..ரொம்ப அமைதியா இருந்தா. போக போக நல்லா பேசினா. நாங்க வெளியெல்லாம் சுத்திட்டு வந்துருக்கோம். ஆனால் அவளிடம் ஏதோ வித்தியாசமா இருந்தது என்றான்.
வித்தியாசமா? என்று கேட்டார்.
ஆமா, ஏதோ வித்தியாசம். ஆனால் தெரியலை என்ற நந்து..அந்த கொலைகாரன் நல்லவனா? அவன் மூஞ்சிய பார்த்தா அப்படியா தெரியுது? என செல்லமாக கோபப்பட்டான்.
நல்லவன் தான். உனக்கு ஸ்ரீ தெரியுமா?
ம்ம்..இருவருக்குமே தெரியும். அவளோட அம்மாவை தான் காதலித்தான் இவன்.
என்ன? இருவரும் ஒரே போல் கேட்டனர்.
ஸ்ரீயோட அப்பா..இவனோட அண்ணன். அண்ணனா? என்ற மேகா. இருங்க மீதிய நான் சொல்றேன் என்று ஆர்வமாக ஸ்ரீ அம்மாவை உங்க ப்ரெண்டுக்கு பிடிச்சு இருந்தது. ஆனால் அவங்களுக்கு ஸ்ரீ அப்பாவை பிடிச்சு இருந்தது. சரியா? அவள் கேட்டுக் கொண்டே நந்துவை பார்த்து எப்படி? என்றாள் புருவத்தை உயர்த்த அவன் முறைத்து பார்த்தான்.
ஆமாம். நாங்க பயிற்சி முடிந்து வந்தவுடன் இவன் அண்ணனை பார்க்க தான் நேராக கல்லூரிக்கு வந்தான். வந்த இடத்தில் அவங்கள பார்த்து அவனுக்கு பிடிச்சு போச்சு. ஆர்டர் கூட வாங்க வரல. பின்னாலேயே சுத்தினான். ஒரு கட்டத்தில் அவன் அண்ணனும் அவங்களும் காதலிப்பது தெரிந்து அவன் அண்ணன் மீது பகையை வளர்த்துக் கொண்டான். ஆனால் அவனால் அவங்களை மறக்க முடியாமல் அடிக்கடி பார்க்க செல்வான். அப்பொழுது தான் ஸ்ரீ அம்மாவின் ப்ரெண்டு ரதி. அதான் அர்ஜூன் நண்பன் அகில்..அம்மா அவன் கண்ணில் பட்டார். இருவரும் ஓரளவு ஒரே குணம். முகம் மட்டும் தான் மாறி இருக்கும். மற்றபடி இருவரும் ஒருவர் என்பது போல் நடந்து கொள்வார்கள். அவங்க பின் ஒரே நாள் தான் சென்றான். ஆனால் அவருக்கும் வேறொருவரை பிடித்து விட்டது.
அங்கிள், அகில் அப்பா தான? அவள் ஆர்வமுடன் கேட்டாள் மேகா.
அவன் முன்னாடி இப்படி பேசுன உன்னை கொல்ல கூட தயங்க மாட்டான். அதுவும் இரு ஜோடிகளையும் காதலை கூறி கல்யாணத்தை பற்றி பெரியவர்களிடம் பேசினார்கள். இதில் அகில் அப்பாவை இவன் தங்கை கயலுக்கு பிடிக்கும். அவள் அதுக்கு மேல..சரியான பைத்தியம் அவர் மீது.
அகில் அம்மா..அவங்க கணவரை கை பிடிக்க படாத பாடு பட்டு விட்டார். ஸ்ரீ அம்மாவை மட்டும் விடுவானா இவன்? அவங்க சாகும் போது தவறாக நடந்து கொள்ள பார்த்தான். ஆனால் அகில் அப்பா தான் இவன் தலையில் அடித்து அவரை காப்பாற்ற, கோபத்தில் வெறியில் ஆட்களை வைத்து கொலை செய்து விட்டான். அவனது கொலையின் ஆரம்பம் அவனது பெற்றோரிடமிருந்து ஆரம்பித்தது.
காதலினால் ஏற்பட்ட இந்த மன வலியை மறக்க போதை மருந்து பயன்படுத்தி அதை பிசினஸாக கையில் எடுத்தான். ஆனால் கயல் வைத்து நடத்தும் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் எல்லாத்திற்கும் இவனும் பார்ட்னர் தான். அதை விட பொண்ணுங்க ஏமாத்துறாங்க என்ற பிரம்மையில் செய்ய ஆரம்பித்து நிறைய கல்யாணம் ஆன பெண்களை கற்பழித்து வருகிறான். அவனுக்கு ஸ்ரீ அம்மாவும், அகில் அம்மாவும் கிடைக்காத விரக்தியில் செய்கிறான். தன் மனைவியை இருவருமே தனியே விட்டதில்லை. அதனால் அவனால் அவர்கள் பக்கம் நெருங்க முடியவில்லை. ஆனால் அகில் அப்பா இப்பொழுதும் அவன் பிடியில் தான் இருக்கிறார். என்ன செய்து வைத்திருக்கிறானோ? நினைத்தாலே கஷ்டமா இருக்கு. அவர் இல்லாததால் ஒரு முறை ஊருக்கு போய் அவங்க ஊராரிடம் அடி வாங்கி வந்தான். அதிலிருந்து அவங்க பசங்க தான் அவங்களுக்கு பாதுகாப்பு. அதை விட அந்த வீட்டில் பூனை ஒன்று இருக்கு. அது அவன் கண்ணை கிழித்து விட்டு அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கு. அந்த பூனை இப்பொழுது கூட அவங்களுடன் தான் இருக்கு. ஆனால் இவனால் பெண்கள் விசயத்தில் திருப்தி அடைய முடியவில்லை..என்று முடித்தார்.
சாப்பிட்டு தூங்குங்க..என்று அவர் எழுந்தார்.
ஒரு நிமிஷம், சாப்பிட்டு போங்க என்றார் அவன் அம்மா.
நந்து ஏதும் பேசாமல் அவனே எடுத்து வைத்து சாப்பிட்டான்.
எனக்கு பசிக்கலை என்றார்.
இதை எடுத்துட்டு போங்க..இல்லை. இனி தேவைப்படாது. நீங்க வேண்டுமானால் எடுத்துக்கோங்க என்றார்.
சார், இதை நான் எடுத்துக்க முடியாது என்று கோபமாக எழுந்தார் நந்துவின் அம்மா. நான் இதை அவளிடம் கொடுக்க தான் தேடினேன். ஆனால் இப்பொழுது இதை கொடுத்தால் யாரோ உடுத்தி இருக்காங்கன்னு எளிதாக கண்டு பிடிச்சிருவா. அதனால் இதை நீங்களே வச்சுக்கோங்க என்றார்.
எனக்கு வேண்டாம் சார். உங்க மனைவி கல்யாண புடவை வேற யார் கையிலும் இருக்கக்கூடாது என்றார் அவர்.
அப்படின்னா..அதை குப்பையில போட்ருங்க என்றார்.
நீங்களே போட்டுக்கோங்க என்றார் அம்மா.
அவர் நந்து அம்மாவிடம் வந்து உற்று பார்த்து, என்னை சொல்றீங்கல்ல? உங்க கல்யாண புடவை உங்களிடம் இருக்கா? கேட்டார்.
உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றார் அவன் அம்மா. நந்து அதிர்ந்து அவன் அம்மாவை பார்த்தான்.
உங்க புருசன் பேரு..தேவசகாயம் தான? கேட்டார். நந்து அம்மா பயந்து விலகினார்.
நந்துவிடம், உங்க அப்பா என்ன வேலை செஞ்சார்? கேட்டார் அவர்.
உங்களுக்கு என்னோட அப்பாவை தெரியுமா?
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..என்று அதட்டினார்.
அவர் போலீஸ்..என்றான்.
அப்படியா? போலீஸா? என்று நந்து அம்மாவை நெருங்கினார். அம்மா பயந்து கொண்டே பின் செல்ல,..சார்..என்று கத்தினான்.
உன்னோட அப்பா போலீஸ் இல்ல பொறுக்கி. உங்க அம்மா விருப்பத்தோட கல்யாணம் நடந்ததான்னு கேளு?
அம்மா..என்றான் நந்து.
அம்மா..கண்கலங்க நிற்க, அவன் அம்மாவிடம் வந்தான். சொல்லுங்க? விருப்பத்தோடவா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? சத்தமிட்டார்.
அம்மா..அழுது கொண்டே நந்துவை கட்டிக் கொண்டார். அவர் அழ, நந்து அம்மாவை விலக்கினான்.
என்னம்மா? எதுக்கு பொய் சொன்னீங்க?
நான் சொல்றேன். உன்னோட அம்மா யாருமில்லாமல் இல்லை. அவங்க ஜமீன் குடும்பம். உனக்கு நிறைய சொந்தங்கள் இருக்காங்க. உன்னோட அப்பா..திருட ஆரம்பிச்சு கொலை வரை செய்தவர். அவனை விடு.
உன் அம்மாவை நீ எப்படி பார்த்துக்கிற? இதுல ஒரு சதவீதம் கூட அவன் இல்லை. அவங்களை பணத்துக்காக கடத்தி, அவங்கள கற்பழித்து, அவங்க வீட்ல இருக்கிறவங்களே.. உன்னோட அம்மாவை ஒழுக்கம் கெட்டவன்னு சொல்லி வெளிய அனுப்ப வைத்து..அவங்க இங்க வந்து மீண்டும் அவனிடம் மாட்டி சின்னபின்னமாகி வாழ்க்கையை தொலைத்து உன்னை பெற்றெடுத்த சமயம் தான் அவன் போலீசால் சுடப்பட்டு கொல்லப்பட்டான்.
அவன் செத்த பின் தான் வாழ்க்கையை நிம்மதியா உன்னுடன் வாழுறாங்க. ஆனால் அவங்க வீட்ல இவங்க ஒழுக்கம் கெட்டவன்னு சொன்னதும் வெளிய வந்துட்டாங்க. அவங்க வெளியே அனுப்பினால் இவங்க மேல தவறில்லைன்னு நிரூபித்து இருக்கணும். அப்படி செய்திருந்தால் உங்க அம்மா இன்று ராணி மாதிரி வாழ்ந்திருப்பாங்க. அவங்களோட வெகுளித்தனமே அவங்க வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்கிடுச்சு என்று சுந்தரம் பேச பேச..அவர் அழுது கொண்டிருந்தார். உன் அம்மாவை அண்டர்கிரவுண்டில் வீடமைத்து அடைத்து வைத்திருந்தான். அவங்கல காப்பாற்றிய போலீஸ் என்று நிறுத்தினார்.
சார், நீங்க..நீங்க தானா? நந்து அம்மா கேட்க,
நான் தான்.
உன் அப்பாவை என்கவுண்டரில் சுட்டதும் நான் தான். என் முதல் என்கவுண்டர். என் வளர்ப்பு அப்பாவை கொன்றது உன் அப்பா தான் என்று கத்தினார்.
அவர் காலில் விழுந்து “நன்றி சார்” என்றார் அவன் அம்மா.
பார்த்தேல..எவ்வளவு வலி, வேதனை இருந்தால் என் காலில் விழுவாங்க என்று நகர்ந்து நின்றவர். உங்க வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க. .என்று விறைத்து நின்றார்.
ஏம்மா, மறச்சீங்க..என்று நந்து அழுதான். அவன் கையை பற்றி இழுத்த சுந்தரம்..அவரது மூன்றாவது மாடிக்கு அழைத்து சென்று அவன் அப்பாவை பற்றி அனைத்தையும் காட்டினார். அவன் அப்பாவை முதலாய் பார்க்கிறான் வெறுத்து. சுந்தரம் நந்து அம்மா, அவங்க குடும்பம், அவங்க வாழ்ந்த வீடு, அடைப்பட்டு இருந்த இடம், பல காயங்களுடன் மயங்கிய நிலை என பலவாறான புகைப்படத்தை காட்டினார். நந்து அழுது கொண்டே அமர்ந்தான்.
சுந்தரமும் அவனருகே அமர்ந்தார். சார்..அம்மா என்னிடம் எதையும் சொல்லவேயில்லை. பாருங்க எல்லாத்தையும் மறச்சிருக்காங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்கல்ல சார் என்றான்.
உன் அப்பா இறந்தநாள் தான் உன் பிறந்தநாள். அவன் உன் முகத்தை பார்க்ககூட இல்லை. அவர் ஒரு புகைப்படத்தை அவனிடம் காட்டினார். அவன் அதிர்ந்து கண்ணீருடன் சுந்தரத்தை பார்த்து அணைத்துக் கொண்டான். அவர் திகைத்தாலும் அவன் கஷ்டம் புரிந்து அவரும் அணைத்துக் கொண்டார்.
நந்து பிறந்து அழுது கொண்டிருக்க அவன் அம்மா மயங்கி இருந்த போது தான் சுந்தரம் உள்ளே வந்திருப்பார். அவன் அழுகையை நிறுத்த அவனை முதலில் தூக்கியதும் அவர் தான். அவர் குழந்தையான நந்துவை தூக்கியது போலான புகைப்படம் தான் அது. அவன் அழுகையை நிறுத்த அவர் கையில் இருந்த மற்றொரு போனை எடுத்து அவனது பிறந்த வீடியோவை ஓட விட்டார். அவர்கள் நிலையை பார்த்து போலீஸ் அனைவரும் அதிர்ந்தனர். அவன் இங்கே தங்கும் விசயம் தெரிந்து தான் இங்கே வந்திருப்பர்.
சுந்தரம், அவரது டீம் மேட் எல்லாரை பற்றியும் கூறினார். அந்த வீடியோவில் நந்து அம்மா நல்லா இருக்காங்களா? என்று அவரது மூச்சை பார்த்தனர். சீராக இருந்தது. சுந்தரம் தான் அவனை முதலாக தூக்கினார். அவரும் அவர் அருகே இருந்தவரும்..அவனை கொஞ்சுவதும்,
யாராவது ஸ்வீட் வச்சிருக்கீங்களா? குழந்தைக்கு சீனித்தண்ணி கொடுக்கணும். ஆனால் இப்ப அதெல்லாம் முடியாது. சாக்லேட் இருந்தா தாங்க என்று ஒருவர் சத்தமிட, மற்றொருவர் எடுத்து கொடுத்தார். சுந்தரம் முதலிலும் மற்றவர்களும் குட்டி நந்துவுக்கு மிட்டாய் கொடுக்க,..அவன் சுவைத்தான். அனைவரும் அவனை ரசித்தனர்.
மிட்டாயெல்லாம் சாப்பிடுவீங்களா? என்று சாக்லெட் கொடுத்தவரை கிண்டல் செய்து கொண்டிருந்தனர் அனைவரும்.
சார், இங்க பாருங்க..உங்க ஆடையை குட்டிப்பையன் ஈரமாக்கி விட்டான் என்று சுந்தரத்திடம் ஒருவர் கூற, அவர் புன்னகையுடன் அவனுக்கு முத்தமிட்டு பக்கத்தில் இருந்தவர் கையில் கொடுத்தார்.
பிறந்த பிள்ளைக்கு முத்தம் கொடுக்கக்கூடாது என்று ஒருவர் சொல்ல, சுந்தரம் அவரை பார்த்து விட்டு சரி என தலையசைத்தார். பின் அவன் அம்மாவை பார்த்தார். எல்லாரும் மேலே போங்க என்று போர்வையை எடுத்து பிள்ளையை வாங்கி சுற்றினார். பிறகு அவன் அம்மாவின் மேலே போர்வையை சுற்றி நந்து அம்மாவை முழுதாக போர்வையால் கவராக்கி அவரை துக்கி மேலே நின்றவர்களிடம் கொடுத்தார். வீடியோ அணைக்கப்பட..நந்து சுந்தரத்தை பார்த்தான்.
என்ன? கேட்டார்.
“தேங்க்ஸ் சார்” என்று மேலும் அணைத்தான்.
வெளிய போகலாமா? கேட்டார்,
எனக்கு இந்த வீடியோவும் புகைப்படமும் அனுப்புங்க சார்..என்றான்.
சரி அனுப்புகிறேன். வா..போகலாம். என்னமோ ஏதோன்னு உன்னோட அம்மா பயப்படப் போறாங்க என்று எழுந்தார். அவன் மீண்டும் அவரையே பார்த்தான். நான் இந்த வீடியோவை பார்த்து அம்மாவை மறந்து விட்டேன். ஆனால் இவர் அம்மாவை பற்றி சரியாக யோசிக்கிறார் என மனதினுள் நினைத்தான்.
ஹே..என்னாச்சு? கேட்டார்.
ஒன்றுமில்லை என எழுந்தான்.
இருவரும் வெளியே வந்தனர். கோபப்படாம பேசு. உன்னோட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. எதையாவது பேசி மேலும் அவங்களை வேதனைபடுத்தாதே. வீடியோல்ல பார்த்தேல்ல. யாருமில்லாமல் உன்னை கஷ்டப்பட்டு தனியே உன்னை பெத்தெடுத்திருக்காங்க. உனக்கு அவங்க கஷ்டம் புரியுதுல. நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் சொல்லாம இருந்திருப்பாங்க. பார்த்து பேசு என்று அவனிடம் சொல்லிக் கொண்டே இறங்கி வந்தவர். முதல் தளத்திலே நின்றார்.
முதல்ல சாப்பிடு. அப்புறம் எதுவாக வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்று அவர் அறை நோக்கி செல்ல, அவன் அங்கேயே நின்றான். அவனை பார்த்து நீ போகலையா? கேட்டார்.
ம்ம்..போகிறேன் என்று போனை எடுத்து அர்ஜூனுக்கு போன் செய்தான். அவர் அவனை பார்த்து விட்டு அவனிடம் வந்து நந்து போனை வாங்கி, அர்ஜூனுக்கு கால் பண்றியா?
“நைட் டைம்” எங்க ஊர்ல சிக்னல் கிடைக்காது. என்ன பேசணும்ன்னாலும் காலையில பேசிக்கோ. அப்புறம் அர்ஜூனை ரொம்ப திட்டாத. அவனுக்கு பதிலா அவன் பேசியதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று உள்ளே சென்றார். நந்து கண்கலங்கி கீழே வந்து அமர்ந்தான். அவன் அம்மா அவனிடம் ஓடி வந்தார்.
கண்ணா..அம்மா மேல கோபமா? என்று அவர் பாவம் போல் கேட்க நந்து எழுந்தான். திட்டுவானோ? இருவரும் சண்டை போட போடுவார்களோ? என்று அவர் வெளியே வந்தார். மேலிருந்து அவர் பார்க்க, மேகாவோ அப்படியே அமர்ந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எழுந்த நந்து கண்ணீருடன் அவன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அவனுக்கு சுந்தரம் கூறியது அனைத்தும் வந்து கொண்டே இருந்தது. அவனுடன் அம்மா சிக்கி எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ? நான் இவ்வுலகில் வரும் போது அம்மாவை தனித்திருந்து கஷ்டப்படுத்தி தான் வந்துருக்கிறேன். ஆனால் அவங்க எனக்காக எல்லாத்தையும் மறைத்து சிரித்துக் கொண்டு இருந்திருக்காங்க..என்று அம்மாவை கட்டிக் கொண்டே அழுதான்.
அவன் அம்மா குடும்பத்திடம் அம்மா தப்பு செய்யலைன்னு நிரூபிக்கணும்ன்னு மனதினுள் நினைத்தான்.
அவன் அழுவதில் பயந்து, எதுக்குடா இப்படி அழுற? என்று கண்ணீருடன்.. என்னால சொல்ல முடியலைடா. உன்னை நான் ஏமாத்த நினைக்கலை. உன்னை கொலைகாரன் பையன்னு சொல்லிருவாங்களோன்னு பயந்து தான் உன் அப்பா பற்றிய எல்லாவற்றையும் மறைத்தேன் என்று அவர் அழுதார்.
கொலைகாரன் பையனா? இந்த வார்த்தை..என்று மேலே பார்த்தான். சுந்தரம் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். அவன் அம்மாவை விலக்கி விட்டு, வேகமாக படியேறி அவரிடம் ஓடினான்.
ஏய், என்ன? எதுக்கு? மெதுவா வா..என்ன? கேட்டார்.
அந்த கொலைகாரன் பையன்..பையன்..என்று சிந்தித்த நந்து..ஸ்ரீ தம்பி நிவாஸா? கேட்டான்.
நீ தேவையில்லாம யாரை பற்றியும் யோசிக்காத. அதை நானும் அர்ஜூனும் பார்த்துக்கிறோம்.
அது எப்படி விட முடியும்? அர்ஜூனுக்கு ஆபத்து. நான் அவனோட ப்ரெண்டு. அப்படியே விட முடியாது..
சரி தான். ஆனால் அர்ஜூன் மட்டும் அங்கே பிரச்சனையில் இல்லை. அங்கே நிறைய பேர் காயப்பட்டு இருக்காங்க. நான் வேற அவனை சுட்டு விட்டேன். அவன் சும்மா இருக்க மாட்டான். அவன் அதிகமாக நெருங்குவது போல் உள்ளது என்றவர் நந்து அம்மாவை பார்த்தார்.
சாப்பிட எடுத்துட்டு வரவா சார்? கேட்டார் அவன் அம்மா கீழிருந்து.
எனக்கு எதுவும் வேண்டாம் என்று நந்துவை பார்த்தார். உன்னோட அம்மா பக்கத்திலே இரு. இதுவரை ஆறு பொம்பளைங்க அவனிடமிருந்து தப்பித்தனர். அவன் பார்த்தவுடன் அடைய நினைப்பான். தப்பி விட்டால் அவன் விட்டு விடுவான். ஆனால் அவன் உன் அம்மாவை விடுவது போல் தெரியலை. அதே போல் அவன் பிகேவியர்..என்று யோசித்தார். வேகமாக மூன்றாவது படியில் ஏறினார். அதே அறைக்கு சென்றார். அவனும் பின்னே சென்றான்.
அங்கிருந்த பெரிய திரையை விலக்கினார். ஓர் அறை போன்ற அமைப்பு இருந்தது. அதில் அனைத்தும் இருந்தது. முழுவதும் புகைப்படங்கள். அதை பார்த்து அவரை பார்த்தான்.
அவர், உங்க ப்ரெண்டு தான? அவரை பற்றி இத்தனை ஆதாரங்களா?
அதுக்கு? கொலைகாரனை விட முடியுமா? இதை விட பெருசா இருந்தா தான் அவனை பிடிக்க முடியும். ஆனால் அதுவும் வேஸ்ட் தான். அவன் செத்தா தான் எல்லாரும் வாழ முடியும் என்றார்.
அவரை அதிர்ந்து பார்த்து விட்டு, இத்தனை பொண்ணுங்களை கற்பழித்து இருக்கானா? நந்து அதிர்ந்தான்.
அவர் எதையோ தேடிக் கொண்டிருந்தார். கண்களை மூடி நிலைப்படுத்திக் கொண்டு நேராக ஒரு கப்போர்டை திறந்து கவரை எடுத்தார். நந்து சுற்றி பார்த்து விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே அமர்ந்து கவரை பிரித்து உள்ளிருந்த புகைப்படத்தை எடுத்து தரையில் பரப்பி போட்டார். அவனை பின் தொடர்ந்து எடுத்த புகைப்படங்கள்..இதில் எதிலாவது உன் அம்மா தெரியுறாங்களான்னு பாரு என்றார்.
என்னோட அம்மாவா?
அவுட் போகசையும் பாரு. அவன் துக்க நினைத்த பொண்ணுங்களை கொஞ்ச மாட்டானே?
கொஞ்சினானா?
அவர் கோபமுடன், பிளையிங் கிஸ் கொடுத்தானே? யாருக்கும் அவன் கொடுத்தது போல் தெரியவில்லையே? உன் அம்மாவிடம் வித்தியாசமாக இருக்கு. அவன் காதலித்த பொண்ணுங்களுக்கே கொடுத்திருக்க மாட்டான் என்றார்.
அவர் பேசுவதை கேட்டுக் கொண்டே, சார் இதை பாருங்க..இந்த நான்கு புகைப்படமும் ஒரே ஆடையில் என அரேஞ் செய்தான்.
அவனை யாரோ கொல்ல வருவது போல் முதல் புகைப்படம். அவன் அம்மா கையில் காய்கறி பையுடன் அவனை நோக்கி வருவது போல் இரண்டாவது புகைப்படம். அவனை கத்தியால் குத்த வருவதை பார்த்து அதிர்ந்த புகைப்படம் மூன்றாவது. நந்து அம்மா கொல்ல வருபவனை தடுத்து தள்ளி விடுவதும் அவன் கீழே விழும் முன் அவனை பிடித்து நிறுத்துவது போல் கடைசி புகைப்படம்.
அதை பார்த்து சுந்தரம்..உன்னோட அம்மாவா போய் அவனிடம் மாட்டிகிட்டாங்க என அவர் கையில் வைத்திருந்த புகைப்படத்தை அவன் முன் வைத்து நந்துவை முறைத்தார். அதில் அவன் புன்னகையுடன் அவரை பார்ப்பது நந்து அம்மா அவனை முறைத்துக் கொண்டே செல்வதும் இருந்தது.
அவன் அனைத்தையும் எடுத்து கீழே வந்தான். சுந்தரமும் கீழே வந்தார். அவன் அம்மா இருவரையும் பார்த்து எழுந்தார்.
கோபமாக அனைத்து புகைப்படத்தையும் டேபிளில் வைத்தான் நந்து. அவன் அம்மா அதை பார்த்து..அமைதியாக இருவரையும் பார்த்தார்.
என்னம்மா இது?
இது..நீ ஸ்கூல் படிக்கும் போது உன்னை ஸ்கூலில் விட்டு காய் வாங்கி வந்த போது..அந்த புகைப்படத்தில் கொலை செய்ய வந்தவனை பார்த்து..நந்து..இவன் பெரிய கத்தியோட வந்து இந்த சாரை கொல்ல வந்தான். நான் தான் உதவினேன் என்று புன்னகையுடன் கூற, நந்து தலையில் அடித்துக் கொண்டான். சுந்தரம் நந்து அம்மாவை பார்த்து சிரித்தார்.
சார், சும்மா இருங்க.
என்னடா கெல்ப் பண்ணக்கூடாதா?
அம்மா..என்று சினத்துடன், அதுல நீங்க காப்பாற்றியவன் யாருன்னு பாருங்க..
யாருடா? என்று புகைப்படத்தை எடுத்து பார்த்து கீழே விட்டார்.
எனக்கு தெரியாதுடா? என்று அவன் அம்மா பாவமாக சொல்ல, அவனிடம் நீங்களா போய் மாட்டி இருக்கீங்க.
என்ன?
அதெல்லாம் ஒன்றுமில்லை. உட்காருங்க என்று தண்ணீரை எடுத்து நந்து அம்மா முன் வைத்து எதிரே அமர்ந்தார். அவன் அம்மா கை நடுங்க எடுத்து குடித்தார். அவன் முறைக்க..மேகா அவன் அம்மா அருகே அமர்ந்து, புகைப்படத்தை பார்த்தாள்.
வாவ்..ஆன்ட்டி, செம்ம க்யூட்டா இருக்கீங்க என்று அவரை பார்க்க, அவர் அவளை பார்த்து வெட்கத்துடன் அவளை பார்த்து புன்னகைத்தார்.
அம்மா..என்று சத்தமிட்டான். இப்ப இந்த அழகு ரொம்ப முக்கியம் பாரு. மேகா நீ நாளைக்கு தான் பேச வாயவே திறக்கணும். இல்லை..அவ்வளவு தான். விசயம் சீரியசா போய்கிட்டு இருக்கு. உனக்கு சிரிப்பு தான் கேடு..
ஏன்டா, நான் சிரிக்கக்கூடாதா? அவன் அம்மா கேட்க, டேய்..பையா என்னால முடியலைடா. உன்னோட அம்மா மேலே செம்ம கோபத்துல வந்தேன். அவங்க பேசுறத பார்த்து சிரிப்பு தான் வருது என்று திரும்பி சிரித்தார்.
கிண்டல் செய்தது போதும் சார் என்றான் அவன்.
நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க. கடைசியில் அவனை எதுக்கு முறைச்சீங்க? என்ன கேட்டான்?
நந்து அம்மா, நந்துவை பார்த்தார்.
பதில் என் மூஞ்சிலையா இருக்கு கத்தினான்.
இல்லை..என்று வருத்தமுடன் தலையை கவிழ்ந்து, போன் நம்பர் கேட்டான். நான் தரமாட்டேன்னு சொன்னேனா? அவன் என் பையிலிருந்து கொய்யா பழத்தை எடுத்தான்.
அதை கொடுக்க சொல்லி கேட்டேன். தர மாட்டேன் என்று அதை எடுத்துக் கொண்டு பக்கத்துல வந்தான். நான் தர போறான்னு நினைச்சேன். அவன் தர மாட்டேனே? என சொல்லி சிரித்துக் கொண்டே சென்றான். நான் உனக்கு வாங்கிய பழம்..எல்லாமே காயாக இருந்தது. பழம் ஒன்று தான் இருந்தது. அதனால் தான் அவனை திட்டி விட்டு முறைத்துக் கொண்டே சென்றேன்.
சுந்தரமும், மேகாவும் பயங்கரமாக சிரித்தனர்.
எதுக்கு சிரிக்கிறீங்க?
அது பழம் முடியுற சீசன் வேற. நந்துவுக்கு கொய்யா ரொம்ப பிடிக்கும். அடுத்து பழம் கிடைக்குமோன்னு அவனிடம் கேட்டா. எடுத்துட்டு போயிட்டான் என்றார்.
சோ..க்யூட் என்றார் மெலிதான குரலில் சுந்தரம். என்ன? மேகா கேட்க, ஒன்றுமில்லை என்றார்.
நந்துவும் அமைதியானான்.
அம்மா..ஏம்மா, கவனமா இருந்திருக்கலாம்ல. அப்பவே அவனுக்கு உன்னை பிடிச்சிருந்திருக்கு என்றான் நந்து.
பிடிச்சிருந்ததா? நந்து அவன் ஸ்ட்ரேஜர். அவனுக்கு எப்படி பிடிக்கும்?
இவ்வளவு க்யூட்டா பேசுனா..பசங்களுக்கு பிடிக்கும் ஆன்ட்டி என்றாள் மேகா.
அவனுக்கு பிடிச்சதால தான் இந்த ஆர்ப்பாட்டம் செய்து என்னை கோபப்படுத்தி உங்கள பார்த்துட்டு போயிருக்கான் சுந்தரம் சொல்ல.
எனக்கு பயமா இருக்கே. நாங்க மட்டும் இருக்கும் நேரம் தெரிந்தால் அவன் வந்துட்டான்னா..அவர் கண்கள் படபடக்க கேட்டார்.
அவனால் என் வீட்டிற்குள் வர முடியாது. விடுங்க பார்த்துக்கலாம்.
அவன் சொன்னதை யாராவது கவனித்தீர்களா?
என்ன சொன்னான்? நந்து கேட்க,..உன்னோட அம்மாவை லவ் பண்றானாம் என்று கடுப்புடன் எழுந்து அறைக்கு சென்றார்.
லவ்வா? மேகா..நந்துவை பார்த்து, இவர் எதுக்கு விறச்சுக்கிட்டு போறாரு? கேட்டாள். நந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
நந்து அம்மா கண்கலங்கியவாறு அமர்ந்திருக்க, ஆன்ட்டி ஒன்றுமில்லை. எல்லாமே சரியாகும். அதான் நந்துவும் சாரும் இருக்காங்களே என்றாள்.
சரி, சாப்பிடுங்க என்று அம்மா சாப்பாட்டை எடுத்து வைக்க சாப்பிட்டனர்.
நந்துவை அழைத்து, இந்த பாலை சாருக்கு குடுத்துட்டு வா..என்று அவன் அம்மா சொல்ல, அவனும் வாங்கி சென்றான்.
ஆனால் அவர், இரவில் பால் சாப்பிட்டால் தூக்கம் வராதுப்பா. எனக்கு வேண்டாம் என்று போனை எடுத்தார். அவன் அம்மாவிடம் அதை திரும்ப கொடுத்தான்.
ஏன்டா, நல்லா இல்லையா?
அவர் தூங்குறது முன்னாடி குடிக்கமாட்டாராம்.
இரு..இதை கொடு என்று சாப்பாட்டை நீட்டினார்.
அம்மா..ரொம்ப கவனிக்கிற மாதிரி இருக்கு.
ஆமாடா, நம்மள பாதுகாப்பா பார்த்துகிறாரு. வேற யாரும்னா பணம் கேட்டிருப்பாங்க. ஆனால் இவர் சாப்பாடு தான கேட்டிருக்கார். அதுவும் எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டார்.
அம்மா, இவரை உனக்கு முன்னமே தெரியுமா?
இல்லையே. நான் உன்னுடன் வந்த போது தான் பார்த்தேன். ஆனால்.. உன்னோட அப்பா.
அம்மா, இனி அப்பன்னு எவனை பத்தியாவது பேசுன நான் பொல்லாதவனாகி விடுவேன் என்று கோபத்துடன்..நீயே கொடுத்திரு என்று அறைக்கு சென்றான்.
டேய் நில்லுடா, இந்த நேரத்தில நான் எப்படி போவது? என்ற முணங்கலுடன் யோசித்துக் கொண்டே நின்றார். பின் மெதுவாக படியேறி கதவை தட்டினார்.
நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்ல என்று சுந்தரம் கதவை திறந்து கொண்டே சத்தமிட..நந்து அம்மா பட்டென தண்ணீர் தம்ளரை கீழே விட்டார். தண்ணீர் சுந்தரம் மீது தெறித்தது. அவர் அவன் அம்மாவை முறைத்தார்.
சாரி சார்..என்று அவர் துடைக்க, இங்க என்ன பண்றீங்க? கோபமாக கேட்டார்.
உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னேன். நந்து கோவிச்சிட்டு போயிட்டான்.
கோபித்தானா?
அவன் அப்பாவை அப்பான்னு சொல்லக்கூடாதாம். நீயே குடுத்துக்கோன்னு போயிட்டான் என்றார் பாவமாக.
அவரை பார்த்து தாங்க என்று வாங்கிட்டு..நீங்க போங்க காலையிலே கொண்டு வந்திடுறேன்.
இல்ல சார். சாப்பிட்டு குடுங்க கொண்டு போரேன்.
நான் கொண்டு வாரேன்.
சார், காலை வரை சாப்பிட்ட தட்டை அப்படியே போடக்கூடாது. இருங்க தண்ணீர் எடுத்துட்டு வாரேன் என்று காலை எடுத்து வைத்தார். தண்ணீரால் கால் வலுக்கியது. உதவ சுந்தரம் வெளியே வந்தார். ஆனால் நந்து அம்மா
சார், நீங்க சாப்பிடுங்க. நான் தண்ணீர் எடுத்திட்டு வாரேன் என்று படிக்கம்பியை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தார்.
ஒரு நிமிஷம் தண்ணீர் இங்கே இருக்கு என்று அவரும் மெதுவாக வந்து அந்த தம்ளரை எடுத்து விட்டு உள்ளே சென்றார். அவர் சாப்பிட்டு வெளியே வந்து பார்த்தார். அவ்விடம் சுத்தமாக இருந்தது. படிச்சுவற்றில் சாய்ந்து அவர் தூங்கினார்.
புன்னகையுடன் அவரிடம் வந்து, ஹலோ மேடம்..எழுந்திருங்க அவர் அழைக்க, அவர் அசையவேயில்லை. அவர் தொட வந்து நிறுத்தி, நோ..டா என்று அவராக சொல்லிக் கொண்டு கையை ஆட்டி காட்டினார்.
யாரோ பார்ப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தார். நந்து மறைந்து நின்றான். அவன் அவர் செய்வதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
நந்துவை கண்டு கொண்டார். பார்க்காதது போல் திரும்பி கையிலிருந்த காலி தம்ளரை வேண்டுமென்றே கீழே போட்டார். அவன் அம்மா விழித்து..அவரை பார்த்து பயந்து எழுந்தார்.
திரும்பவும் தண்ணி கொட்டிருச்சா? கேட்டார் நந்து அம்மா.
தட்டையும் தம்ளரையும் கொடுத்து போய்..தூங்குங்க என்று உள்ளே செல்ல, அவர் பின்னே சென்று சார், காரம் போதுமா? இன்னும் அதிக காரம் சாப்பிடுவீங்களா?
சுந்தரம் திரும்பி முறைக்க, சரிங்க சார். இந்த அளவே போடுறேன் என்று கீழே சென்றார். அவர் புன்னகையுடன் அவரை பார்த்து விட்டு நந்துவை பார்க்க, அவன் எட்டி பார்த்து மறைந்து நின்றான். அவர் புன்னகையுடன் உள்ளே சென்றார்.
இவருக்கு என்னவாம்? சும்மா சும்மா முறைக்கிறாரு..ஆளைப் பாரு என்று திட்டிக் கொண்டே அவன் அம்மா சமையலறைக்குள் சென்றார். அவன் சிரித்துக் கொண்டே அம்மாவிடம் சென்றான்.
அம்மா…வேலைய முடிச்சுட்டீங்களா?
நீ தான் கோபமா போன? இப்ப என்ன போ..
அச்சோ..என்னோட அம்மா கோவிச்சுக்கிட்டாங்களே? அவன் அம்மாவை கொஞ்சிக் கொண்டிருக்க தண்ணீர் எடுக்க சுந்தரம் வந்தார்.
சார், என்னாச்சு? தூங்கலையா?
நான் தண்ணீர் எடுக்க வந்தேன். நீங்க தூங்க போகலையா?
இல்ல சார். அம்மாவிடம் கோபப்பட்டுட்டேனா? அதான் பார்க்க வந்தேன்.
சீக்கிரம் தூங்க போங்க என்று தண்ணீரை ஜக்கில் எடுத்துக் கொண்டிருந்தார்.
அவன் அம்மா சாப்பாட்டு தட்டை டேபிளுக்கு எடுத்து வந்து அமர்ந்தான்.
அம்மா..சாப்பிட போறீங்களா?
இல்ல. நான் தூங்கப் போறேன்.
கோபிச்சுக்காதீங்கம்மா. அவளோட சேர்ந்து நீங்களும்..
உங்களுக்கு பொண்ணுங்க சிரிச்சா தான பிடிக்கும். நான் சிரிக்ககூடாதுல்ல..
அம்மா, அப்படி இல்லை. நான் கொலைகாரனை நினைத்து பயத்தில் இருந்தேன். நீங்க தேவையில்லாததை பேசி சிரிச்சீங்கல்ல? அதான் கோபம் வந்துருச்சு என்று நந்து அம்மா கழுத்தை கட்டிக் கொள்ள..
நாம எதுக்கு இங்க வந்தோம்? சார் வீட்ல பாதுகாப்பா இருக்க வந்தோம். அவர் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றாருல. அப்புறம் எதுக்கு பயப்படுற?
ஏம்மா, நீங்க பயப்படலையா?
அவன் அம்மா அமைதியாக கண்கலங்க அவனை பார்த்தார்.
நீங்க எதுக்கு வெளிய போனீங்க?
புரியுதுடா. என் மேல தான் தப்பு. சாரிடா..நீ போ. காலையில வேலை இருக்கும்ல. போ..என்றார்.
அம்மா..என்று அவன் அணைத்துக் கொண்டு, சாப்பாட்டை அவன் அம்மாவிற்கு ஊட்டி விட, கவனித்துக் கொண்டிருந்த சுந்தரம் தடுமாறினார். அவருக்கு அவர் அம்மா நினைவு வர, கண்ணீருடன் வேகமாக படியேறினார். நந்து அவரை பார்த்துக் கொண்டே ஊட்டினான். பின் அவர்களும் தூங்க சென்றனர்.