அத்தியாயம் 106
அர்ஜூன் கௌதம் அறைக்குள் நுழைந்து படுக்கையில் படுத்துக் கொண்டு கௌதமை பார்த்தான்.
என்னோட மாமாவிடமே நம்பிக்கையை பெற்று விட்டீர்கள்? அவர் பெரியதாக யாரையும் நம்பவே மாட்டார் என்று எக்கி அவன் கையிலிருந்த பாக்சை அங்கு வைத்தான்.
என்ன இது? கௌதம் கேட்க, அது என்னோட ஏஞ்சலுக்கும் எனக்கும். ஹப்பா..இந்த பொண்ணுங்க இருக்காங்களே! முடியலைடா. எதுக்கு தான் கோபிச்சுக்கிறாங்கன்னு தெரியவே மாட்டேங்குது? சாப்பிட்டாமவா படுப்பா. என்று கௌதமை பார்த்து, சார் சொல்லுங்க? எப்படி அவருக்கு உங்க மேல நம்பிக்கை வந்துச்சு? அவர் பொண்ணையே இந்த இரவில் உங்களுடன் அனுப்பி வச்சிருக்கார்.
தெரியலை என்றான் கௌதம்.
உட்காருங்க சார். தொந்தரவு பண்றேனா? அர்ஜூன் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் தூங்க முடியாமல் தான் அமர்ந்திருந்தேன்.
எனக்கு அடுத்து அவர் நம்புவது உங்களை தான். அவருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. நான் கூட அத்தைக்கும் மாமாவுக்கும் சின்ன மிஸ் அன்டர்ஸ்டிடாங்கன்னு நினைச்சேன். ஆனால் அத்தை இப்படி இருப்பாங்கன்னு நினைக்கலை. மாமா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் என்று கண்கலங்கினார்.
உனக்கு எத்தனை வருடமாக அவரை தெரியும்? கௌதம் கேட்டான்.
எனக்கு இரண்டு வருசமா தான் தெரியும்.
அதுக்கு முன்னாடி தெரியாதா? கௌதம் கேட்க, அர்ஜூன் எல்லாவற்றையும் கௌதமிடம் பகிர்ந்து கொண்டான். அவனை பற்றி, அவன் மாமா குடும்பத்தை பற்றி யாரும் ஏதும் சொல்லவில்லை. மாமா என்று ஒருவர் இருப்பதே தெரியாதுன்னு சொன்னான். கௌதம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
உனக்கு அவளை எப்பொழுதிலிருந்து தெரியும்?
மாமாவை பற்றி தெரியும் போது காருவை பற்றியும் தெரியும்.
நான் காருவை கேட்கலை.
காருவா? என்று அர்ஜூன் கௌதமை பார்த்தான். நான் ஸ்ரீயை பற்றி கேட்கிறேன்.
ஸ்ரீயா? உங்களுக்கு தெரியுமா?
ம்ம்..தெரியும். அவள் தான் தேவ்வின் முதல் பேசன்ட். நானும் அப்பொழுது தான் எங்களது தொழிலில் காலை பதித்தேன். அவளுடைய குடும்பம் மொத்தமும் தெரியும் என்றான்.
ம்ம்..என்ற அர்ஜூன்..வந்த வேலையவே மறந்துட்டேன். சார் மாமாவிடம் வந்துட்டோம்ன்னு சொல்லிட்டீங்களா?
சிக்னல் கிடைக்கலை. மெசேஜ் போட்டேன். அதுவும் சென்ட் ஆகலை.
அர்ஜூன் பால்கனி சென்று ஸ்ரீ அறையை பார்த்தான். லேசான வெளிச்சம் மட்டும் மின்னிக் கொண்டிருந்தது. கௌதம் அறைக்கதவு தட்டப்பட இருவரும் பார்த்துக் கொண்டனர். கௌதம் கதவை திறக்க காருண்யா நின்று கொண்டிருந்தாள்.
இந்த நேரத்துல என்ன பண்ற? யாராவது தப்பா நினைச்சுக்கப் போறாங்க அவன் சொல்ல, அவள் வெளியே வெகு நேரமாக உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்று நின்று கொண்டிருப்பாள். அர்ஜூனை பார்த்து அவள் வந்திருப்பாள். கௌதம் அடைத்து நிற்க, அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டு அவளது பையுடன் உள்ளே வந்து பெட்டில் அமர்ந்தாள்.
இப்ப எதுக்கு இங்க வந்திருக்க. மணியை பார்த்தாயா? அர்ஜூன் கேட்டான்.
உன்னிடம் பேச தான் வந்தேன்.
என்னிடம் நீ பேசத் தேவையில்லை என்று அவன் ஸ்ரீ அறையை பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் பேசணும் என்றாள். அவன் கௌதமை பார்க்க அவன் அதே கதவருகே பிரம்மை பிடித்தவன் போல் நின்றான். அர்ஜூன் அவனிடம் சென்று சார்..என்று தோளை தட்டினான். காருண்யாவும் அவனை பார்த்தாள்.
ஹான்..என்று பேந்த பேந்த விழித்தான். என்னாச்சு சார்? நல்லா தான பேசிக்கிட்டு இருந்தீங்க? பேய் எதுவும் அடிச்சிருச்சா? என்று அர்ஜூன் காருண்யாவை பார்த்தான். அவள் முறைத்தாள்.
அர்ஜூன்..அவள் உன்னோட தங்கைன்னு எனக்கு தெரியாது. அதான் கொஞ்சம் கோபமாக பேசிட்டேன். இவ்வளவு கோபப்படுற? அவ்வளவு முக்கியமா அவ? காருண்யா கேட்டாள்.
ஆமா..யாருமில்லாத எனக்கு. தங்கை முக்கியம் தானே. அவளும் ஸ்ரீயும் வந்த பின் தான் என் வாழ்க்கை சந்தோசமா மாறி இருக்கு என்றான்.
சார், உங்களுக்கு ஸ்ரீயை பற்றி வேறென்ன தெரியும்?
வேறென்ன? கௌதம் கேட்டான்.
அவளோட பெற்றோர் அவள கவனிச்சுக்கிட்டாங்க. அவளோட ஆன்ட்டி வருவாங்களா? வேற யாரெல்லாம் அவளை பார்க்க வருவாங்க?
சரியா எனக்கு தெரியாது. அவளோட அம்மா, அப்பா, அவளோட தம்பி..அப்புறம் ஒரே ஒரு முறை ஒருவனை பார்த்திருக்கேன்.
இவனா? என்று ஜிதின் புகைப்படத்தை அர்ஜூன் காட்டி கேட்க, ஆமாம் என்று கௌதம் தலையசைத்தான். அர்ஜூனுக்கு ஸ்ரீ ஹாஸ்பிட்டலில் வைத்து அணைத்த போது அர்ஜூன்..அப்பா..அப்பா..என்று மயங்கியது நினைவில் அடிக்கடி தொந்தரவு செய்தது.
அவன் ஸ்ரீ பெற்றோர் இறந்த தேதியை யோசித்து..இந்த நாளில் உள்ள புட்டேஜ் அனைத்தையும் செக் பண்ணனும் சார் என்று அவன் கூற, அவங்க உயிரோட இருப்பாங்கன்னு உனக்கு தோணுதா? கௌதம் கேட்டான்.
சரியா தெரியலை. இருந்தா நல்லா இருக்கும் என்றான்.
ஹலோ, நான் உன்னிடம் பேசணும்? என்றாள் காருண்யா அர்ஜூனிடம்.
எனக்கு நேரமில்லை.
ஏன்டா, இப்ப தானடா உனக்கு அவளை தெரியும். அதுக்கு இரண்டு வருசமா பேசிக்கிட்டு இருக்கிற என் மேல கோபப்படுற?
இரண்டு வருசம் தெரியும். ஆனால் ஒரு நாள் கூட உரிமையா மாமான்னு கூப்பிட்டு இருப்பியா? ஆனால் தெரிஞ்ச மறு நிமிஷம் என்னை அண்ணன்னு உரிமையா கூப்பிட்டா? இப்ப வரை நிறுத்தவில்லை. பேசாம இருக்க மாட்டா. ஸ்ரீ இல்லைன்னாலும் அவளால கொஞ்சமாவது சரியாகி இருப்பேன் அர்ஜூன் சொல்ல..
காருண்யா தலைகவிழ்ந்து கொண்டு..எனக்கு நீ சொல்ற எதுவும் எனக்கு தெரியாது. என்னோட பத்து வயசுலையே நான் ஹாஸ்ட்டல் போயிட்டேன் என்றாள் காருண்யா. இருவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.
காரு..பத்து வயசிலா? அர்ஜூன் கேட்க, அவள் கண்ணீருடன் தலையசைத்தாள்.
எனக்கு உறவுகள் பற்றி தெரியாது? யாரிடமும் பேச தெரியாது தோன்றியதை பேசிடுவேன். அதனால் யாரும் என்னிடம் ப்ரெண்ட்ஸ் ஆக மாட்டாங்க. பசங்க தான் பேசுவாங்க. ஆனால் எனக்கு அது பிடிக்கலை. பொண்ணுங்க ப்ரெண்ட்ஸா வேணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கும். காலேஜ்ல தான் சுவாதி கிடைச்சா. அவள் பின் கூட ஒரு மாசமா சுத்தினேன். பின் தான் இருவரும் பழகி ப்ரெண்ட்ஸ் ஆனோம்.
சுவாதியா?
இந்த ஊர்ப்பொண்ணு சுவாதி தான்.
உனக்கு அவளை தெரியுமா?
ம்ம்..பள்ளியில் நாங்கள் ஒரே வகுப்பு தான். அன்று தேவ் சாருடன் தான ஊருக்கு கிளம்பினாள். சீனுவையும் தெரியும் என்று அவளது பையை திறந்து அவளுக்கு விடுதிகாப்பாளர் கொடுத்த அவளது ரிப்போர்ட் பைல்லையும், சாரிடம் வாங்கியதையும் காட்டினாள்.
ஏய்..என்ன இது? ஹார்ட் பிராபளமா?
ஆமா.
இப்ப என்ன பண்றா?
அவளுக்கு சர்ஜரி பண்ணி இருக்கோம் என்று கௌதம் கூற, அவளோட
பேமிலி?
பேமிலியா? என்று கோபமானாள் காருண்யா.
கௌதம் அவள் குடும்பத்தை பற்றி சொல்ல, அவள் அப்பா எதுக்கு பயந்தாங்க. வெற்றி அய்யாவிடமாவது கூறி இருக்கலாமே? அர்ஜூன் கேட்டான். இருவரும் அவனை அமைதியாக பார்த்தனர்.
சரி, இப்ப எதுக்கு இதெல்லாம் கொண்டு வந்துருக்க? அர்ஜூன் கேட்டான்.
அவள் கௌதமை பார்த்து விட்டு, நாங்க ஃபாரின்ல போய் படிக்கப் போறோம் என்றாள்.
அதுக்கு தான் என்னையும் கூட்டிட்டி வந்தியா? கௌதம் கோபமானான்.
சார், விசயம் இருக்கு என்றாள் அவள்.
என்ன மண்ணாங்கட்டி விசயம்? தேவ்வால தான நீ இந்த முடிவ எடுத்த? அவனை எனக்கு நன்றாக தெரியும். அவன் தேஜூவை ப்ரெண்டா தான் பார்த்தான். நான் தான்..என்று நிறுத்திய கௌதம். அவள் மிரட்டியதால் தான் டேட்டிங்கிற்கு ஒத்துக் கொண்டான். ஆனால் ஆரம்பிக்கும் முன்பே தான் அவளை பற்றி தெரிந்து விட்டதே?
அதுக்கு, நடந்தது இல்லைன்னு ஆகிடுமா? சுவாதிக்கு தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவாள். அவளிடம் அண்ணனுன்னு பேசிட்டு..இப்ப உங்க ப்ரெண்ட்டுக்கு சாதகமா பேசுறீங்க? அவளும் கோபப்பட்டாள்.
அன்று நடந்தது அவனுக்கு தெரியாமல் நடந்த அவளது திட்டம். அவள் திட்டத்தில் அவனுக்கு எந்த பங்கும் கிடையாது.
பங்கு இல்லையா? அது எப்படி இல்லாமல் போகும்? என்று அவள் சத்தமிட்டாள்.
கௌதம் கோபமாக அவளருகே சென்று மெதுவா பேசு. கத்தாத. நீயே எல்லாருக்கும் தெரிய படுத்திடுவ போல. அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு யோசித்தாயா? அவன் சினமாக அவள் கையை பிடித்து அழுத்த, அவள் அவனை தள்ளி விட்டு, போதும். நாங்க முடிவை மாத்த மாட்டோம் என்றாள்.
மாத்தி தான் ஆகணும். சீனுவுக்கு தெரியுமா? என்று கௌதம் கேட்டான்.
அவனுக்கு தெரியும். ஆனால் சுவாதி எழுந்த பின் தான் பேசப் போகிறான்.
ரொம்ப நல்லது. நான் சுவாதியிடம் பேசிக்கிடுவேன் என்றான்.
அவளிடம் என்ன பேசப் போறீங்க? உங்க ப்ரெண்டு தேஜூவுக்கும் தேவ் சாருக்கும் எல்லாம் முடிஞ்சது. அதை வச்சு அவள் அவரை மிரட்டிகிறாள். அவளது பெற்றொரை கொன்றது அவள் தான். இப்ப சாரோட பணத்துக்காக தான் ப்ரெண்டா நடித்து ஏமாற்றி அவர் குடித்த நேரத்தை அவள் பயன்படுத்திக் கொண்டாள்ன்னு சொல்லப் போறீங்களா? என்று கத்தினாள்.
அர்ஜூன் இருவரையும் அதிர்ந்து பார்த்தான். ஆனால் காருண்யா நிறுத்தாமல் இதுக்கு மேலே சுவாதியை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களுக்கு இரண்டு மாசத்துல செம் முடியும். நாங்க ஃபாரின் போகப் போறோம். அதுக்கான ஏற்பாடு செய்ய தான் உனக்கு போன் செய்தேன் அர்ஜூன். நீ காலையில் இருந்தே போன் எடுக்கலை.
ஃபாரினா? மாமாவை இந்த நிலையில் விட்டு எங்க போகப் போற? தேவ் சாரும் சுவாதியும் லவ் பண்ணா. அவங்க முடிவெடுக்கட்டும்.
இல்லை. அவள் இதுக்கு மேல கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு இதுக்கு மேல பிரச்சனை வந்தா நான் பார்த்துக்கிறேன். அதுக்கான ஒன்று மட்டும் தான் வேண்டும். இது ஹாஸ்பிட்டல் ரிப்போர்ட்..
ம்ம்..கண்டிப்பா உனக்கு கிடைக்காது. கிடைக்க விட மாட்டேன் என்றான் கௌதம்.
சார், இதுல நீங்க எதுக்கு வர்றீங்க?
ஏன்னா, நான் தேவ்வோட ப்ரெண்டு. இருவருமே காதலிக்கிறாங்க. சுவாதியை நான் போக விட மாட்டேன். அதை விட முக்கியமான ஒன்று. அவளோட ஹார்ட் பிராபிளம். இயற்கையானது அல்ல. அவளுக்கு ஊசி போட்டு ஹார்ட் பிராபிளம் வர வச்சிருக்காங்க. அவள் அன்று சீனுவை கடத்திய விசயத்தை சொல்ல வரும் வழியில் ஏதோ செய்து வர வச்சிருக்காங்க. கொஞ்ச கொஞ்சமா முன்பிருந்தே மருந்தை செலுத்தி இருக்காங்க. ஆனால் கடைசியா போட்டது ரிப்போர்ட்ல இருக்கு.
வர வச்சிருக்காங்களா? என்று சுவாதி கண்ணீருடன் நிற்க, அஸ்வினிய விட அவ அம்மா தான் டேஞ்சர். அவங்க இங்க போலீஸ் ஸ்டேசன்ல தான இருக்காங்க? உனக்கு தான் தெரியுமே?
அவங்கள போலீஸ் ஆட்கள் பாலோ பண்றாங்கன்னு தான் சொன்னாங்க. ஆனால் ஸ்டேசன்ல இருக்காங்களா? என்று சுவாதி கேட்க, தேவ் அப்படி தான் சொன்னான் கௌதம் கூற, அர்ஜூன் போனை எடுத்து தீனாவை அழைத்தான்.
தீனா தூக்கக் கலக்கத்தில் போனை எடுத்து ஹலோ, யாரு இந்த நேரத்தில்? என்று போனை பார்த்துக் கொண்டே எழுந்தான்.
அண்ணா, அர்ஜூன் பேசுறேன்.
அர்ஜூனா? வேகமாக எழுந்தான். என்ன பிரச்சனை? யாருக்கும் ஏதுமில்லையே? அவன் கேட்டான்.
அண்ணா, சுவாதி அம்மா உங்க ஸ்டேசன்ல தான இருக்காங்க.
சுவாதி அம்மாவா?
கௌதம் போனை பிடுங்கி ஹாஸ்பிட்டல்ல தேவ் கூட ஒரு பொண்ணை காப்பாத்துனீங்களே? இரட்டையர்கள் என்று அவன் கூறவும் ஆமா..ஆனால் பாலோ செய்ததில் அந்த பொண்ணோட அம்மா வீட்டுக்கு தானே போனாங்க. அதனால அவங்களை விட்டுட்டுட்டோம்.
ஓ..காட்..என்ன சொல்றீங்க? விட்டுட்டீங்களா? அவங்களால சுவாதிக்கு ஏதும் ஆகி விடாமல் பதறினான் கௌதம்.
நீ யாருப்பா? தீனா கேட்க, தேவ்வோட ப்ரெண்டு என்றான். நீ அர்ஜூன் போன்லயா? இந்த நேரத்தில் அவன் வீட்ல என்ன செய்ற?
சார், நான் என்ன கேட்டா? இது ரொம்ப அவசியமா? அர்ஜூன் நீயே பேசு என்று கௌதம் அர்ஜூனிடம் போனை கொடுத்தான்.
அர்ஜூன் போனை வாங்கி சுவாதி பற்றி அனைத்தையும் கூறினான். சட்டை எடுத்து போட்டு வெளியே வந்த தீனாவிற்கு புவனா நினைவு வர அவள் அறையை பார்த்தான். அவள் இப்பொழுது அவன் அண்ணா தருணுடன் அவள் வீட்டில் இருக்கிறாள்.
அப்பத்தா அவனிடம் வந்து, என்னய்யா புள்ள நினைவா இருக்கா? கேட்டார்.
அப்பத்தா நீ தூங்கலையா? கேட்டான்.
தூக்கம் வரலைய்யா. அதான் வெளியே வந்தேன். வீட்டுக்கு வராம இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு தான் புள்ள போயிருக்கா. கவலைப்படாதய்யா..
நான் வேலையா கிளம்புறேன் அப்பத்தா. நீ போய் தூங்கு என்று அவன் வெளியேறினான். சுவாதி வீடு வெளியிருந்து பூட்டி இருப்பதை பார்த்து விட்டு..அர்ஜூனிடம் கூறினார். போன் கையில்ல வச்சிருக்கீங்களா? என்று காரு, கௌதமிடம் கேட்டான்.
வாங்க சீக்கிரம் என்று இருவரையும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடி உச்சிக்கு சென்று காரு நீ சீனுவுக்கு கால் பண்ணி அவனை அலார்ட் பண்ணு. சார் நீங்க தேவ் சாரை உடனே சுவாதி அறைக்கு போக சொல்லுங்க.
கௌதமிடமிருந்து போனை பிடுங்க வந்தாள் காருண்யா. அர்ஜூன்.. போலீஸா இல்லை என்று சத்தமிட்டாள். கத்துன எல்லாருக்கும் கேட்கும். வாயை மூடு இல்ல கீழ தள்ளி விட்டுருவேன் என்றான் அர்ஜூன்.
சார், அவருக்கு கால் பண்ணாதீங்க? நான் பண்ணுவேன் என்று கௌதம் அவளை முறைத்தான்.
காரு, போலீஸ் எத்தனை பேர் இருந்தாலும் உரிமையானவங்க போல் பாதுகாக்க முடியாது.
அப்படி என்ன உரிமை? முகம் சுளித்தாள்.
போலீஸ் குற்றம் செய்பவர்களை பிடிக்க தான் முதல்ல நினைப்பாங்க. உரிமையானவங்க தான் கஷ்டமான சூழ்நிலையில் நம்மை காப்பாற்ற நினைப்பாங்க.
நீ என்ன சொன்னாலும் இவ மண்டியில ஏறாது? இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? கௌதம் கேட்க, காருண்யா கண்கள் கலங்கியது. கௌதமும் அவளை பார்த்துக் கொண்டே தேவ்விற்கு போன் செய்து விசயத்தை சொன்னான். அர்ஜூன் கமிஷ்னருக்கு போன் செய்து சொன்னான். அவர் மகளை பற்றி கேட்க, அவ நல்லா தான் இருக்கா மாமா. அவளை பற்றி கவலைப்படாதீங்க. நாளைக்கு பேசிக்கலாம். அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகாமல் போலீஸை அனுப்புங்க.
சீனு போனில் அழ, எதுக்குடா அழுற? பதறினாள் காருண்யா. இருவரும் அவளை பார்த்தனர்.
சுவாதி அப்பா இறந்தது தெரிந்து, அவள் விடாமல் அழுது கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் மயங்கி விட்டாள். அவளுக்கு தேவ் அப்பா சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார் என்று அவன் கூறினான்.
போனை பிடுங்கிய கௌதம் அவனிடம் அனைத்தையும் சொன்னான். தேவ் அப்பா அவனிடம் வந்து, ஒன்றுமில்லை உன்னோட அக்கா நல்லா தான் இருக்கா. பயப்படாத என்று சொல்ல,..அவன் போனை தேவ் அப்பாவிடம் நீட்டிக் கொண்டு கௌதம் சார் பேசுறாங்க.
பாரேன்..இப்பவாது அண்ணன்னு சொல்றானா? என்று வருத்தப்பட்டான் கௌதம். அவரிடமும் கௌதம் சொல்லி விட்டு, சார்..பார்த்துக்கோங்க. கொஞ்ச நேரத்தில் தேவ் வந்துருவான் என்று போனை அணைத்து விட்டு அமர்ந்தான் கௌதம்.
அர்ஜூன் அவன் பக்கம் அமர்ந்து, என்னாச்சு சார்?
அம்மாவை தனியா வேற விட்டுட்டு வந்துருக்கேன். அவங்க சாப்பாட்டாங்களான்னு கூட கேட்க முடியலை. அவங்களுக்கு சுகர் இருக்கு. டின்ட்டு இன்று வந்தானா? தனியா இருக்காங்களான்னு கூட தெரியாது? வருத்தப்பட்டான்.
கால் பண்ணி பேசுங்க. இப்ப ரொம்ப நேரமாகிடுச்சு. ஒன்ஸ் எழுந்தா சரியா தூங்க மாட்டாங்க. அதனால் தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்றான்.
அம்மா..நல்லா தூங்குவாங்க. வருத்தப்படாதீங்க..என்று இருவரையும் மீண்டும் அறைக்கே அழைத்து சென்றான்.
சுவாதி அறையில் விழித்து அமைதியாக படுத்திருந்தாள். சீனு உள்ளே சென்று அவளை பார்த்து பதறினான். அக்கா..அவர் போயிட்டாரு. நீயும் என்னை அநாதையா விட்டுட்டு போயிடாத என்று அவளிடம் பேசினான். அவளும் தலையசைத்து காருவை கேட்ட படி தேவ் இருக்கானா? என்று வாசலையே பார்த்தாள்.
சீனு அவளிடம் அனைத்தையும் கூறி ஏத்துக்கோக்கா..என்று அழுதான். அவளும் அழுது கொண்டு அவரை விட்டு தூரமா இருக்கிறது தான் நமக்கு நல்லது. நாம் எங்கே? அவர் எங்கே? என்றாவது அவர் ஏதாவது குடும்பத்தை பற்றி பேசி விட்டால் என்னால் தாங்க முடியாதுடா என்று அழுது கொண்டு நாம் காருவுடன் கிளம்பி விடுவோம் என்றாள்.
ஒரு செவிலியர் உள்ளே வந்து தம்பி, வெளிய இருப்பா. ஊசி போடணும் என்றார். அவனும் வெளியே சென்றான். வெளியே சென்றவுடன் இந்த குரல் என்று யோசித்துக் கொண்டிருக்க தேவ் அப்பாவும் தேவ்வும் வந்தனர்.
வெளிய நிக்கிற? அந்த பொண்ணு பக்கத்துல தான இருக்க சொன்னேன் தேவ் அப்பா கேட்க, செவிலியர் ஒருவர் ஊசி போடணும்னு வெளிய இருக்க சொன்னாங்க. அதான் வெளிய வந்தேன்.
இனி எதுக்கு ஊசி? நான் யாரையும் உள்ளே செல்ல அனுமதி கொடுக்கவில்லை என்றார்.
சிந்தித்த சீனு..போச்சு மாமா..அம்மா, ச்சீ அந்த பொம்பளை தான் வந்துருக்கா? என்று சொல்ல, இருவரும் வேகமாக கதவை திறந்தனர்.
சுவாதி எழுந்து அமர்ந்து இருக்க, அஸ்வினி அம்மா கீழே விழுந்து சீற்றமுடன் கையில் ஊசியுடன் சுவாதியை நோக்கி வந்தார். அக்கா..என்று சீனு பதட்டத்துடன் அவளிடம் வந்தான். தேவ் அவனுக்கு முன் சென்று அவள் மேலே படுத்து அவளை கீழே தள்ளி அவனும் விழுந்தான். சுவாதி அவனை பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுதும் விடாமல் ஊசியை அஸ்வினி அம்மா போட வந்தார். தேவ் அவர் கையை தடுத்துக் கொண்டே அப்பா, சீனு யாராவது வாங்க என்று கத்தினான். தேவ் செய்கையில் இருவரும் உறைந்து இருந்தனர். அந்தம்மா ஊசியை தேவ் பக்கம் திருப்பினார். தேவ் அப்பா பக்கத்தில் இருந்த மருந்தை பார்த்து எடுத்து மயக்க ஊசியை அந்தம்மா மீது செலுத்தினார். சீனு இருவர் அருகே ஓடி வந்தான்.
தேவ் எழுந்து சுவாதியை துக்கி பெட்டில் போட எண்ணினான். வேண்டாம் என்று தடுத்த சுவாதி அவளாகவே எழுந்து படுத்துக் கொண்டு “தேங்க்யூ சார்”. நீங்க வெளிய இருக்கீங்களா? என்று தேவ்விடம் கேட்க, அவன் கண்கள் கலங்கியது.
அக்கா..சார் கெல்ப் பண்ணி இருக்காரு. நீ வெளிய போக சொல்ற? சீனு கேட்டான். அவன் மாமா மறுபடியும் காணாமல் போக..நான் வெளிய இருக்கேன். உதவி என்றால் கூப்பிடு என்று வெளியே சென்று அமர்ந்தான் தேவ்.
கமிஷ்னர் நேராகவே ஆட்களுடன் வந்தார். அவரை பார்த்த தேவ்…உள்ள இருக்காங்க. சிரஞ்சும் இருக்கு ஆதாரத்துக்கு எடுத்துக்கோங்க. அவங்க வெளிய வராம இருப்பது தான் நல்லது என்றான்.
அவர் உள்ளே செல்ல..சுவாதி, சீனுவிற்கு அவரை தெரியவில்லை. சார்..அந்த பொண்ணு உங்க பொண்ணா? யாருக்குமே தெரியாது என்றார் தேவ் அப்பா.
சிறுபுன்னகையுடன் அவர் அழைத்து செல்லுங்கள். தம்பி கம்பிளைண்ட் பேப்பரில் சைன் பண்ணுங்க என்று சீனுவை பார்த்து அவர் ஆள் ஒருவரை அழைத்தார். அவர் வந்து சீனுவிடம் சைன் வாங்கி செல்ல..சார், நாங்க ஸ்டேசனுக்கு வந்து தான சைன் பண்ணனும். ஆனால் இங்கேயே கொண்டு வந்துருக்கீங்க? அவன் கேட்டான்.
என் பிள்ளையிடம் ரொம்ப வருசம் கழித்து பேசினேன். ஆனால் இப்பொழுது கூட அவள் உங்களுடன் ஃபாரின் போகணும்ன்னு சொல்லிட்டா. அதனால் தான் உதவ நானே வந்தேன். இப்ப எப்படிம்மா இருக்கு? என்று சுவாதியிடம் கேட்டார்.
சார், காருவோட அப்பாவா? இத்தனை நாள் எங்க இருந்தீங்க? அவள் ரொம்ப கஷ்டப்பட்டாள்.
தெரியும்மா. ஆனால் இப்ப அவளுடன் கொஞ்ச நாளாவது இருப்பேன். எனக்கு வேலை இருக்குன்னு தான். அவள் மாமா அர்ஜூனிடம் வெளியூர் செல்லும் ஏற்பாட்டை பார்த்துக்க சொல்ல போயிருக்காள்.
அர்ஜூன்..காருவுக்கு மாமாவா? சார்..நீங்க விசாலாட்சி பாட்டியோட பையனா?
ம்ம்..ஆமாம்மா. அவங்கள உனக்கு தெரியுமா? அவங்க நல்லா இருக்காங்களா?
அர்ஜூன் உடன் இருக்கும் போது சந்தோசமா தான் இருந்தாங்க. அப்புறம் கஷ்டப்பட்டாங்க. இனி சந்தோசமா இருப்பாங்க. சார்..நீங்க ஊருக்கு போய் உங்க அம்மாவை ஒரு முறை பாருங்க. எல்லாமே சரியாக போயிரும்.
சரிம்மா. நீ ஜாக்ரதையா இரு என்றார்.
தம்பி அக்காவை பார்த்துக்கோ. இனி இந்த பொம்பளையால எந்த தொந்தரவும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
“ரொம்ப நன்றி சார்” என்றான் சீனு. தேவ் அப்பாவும் கமிஷ்னரும் வெளியே வந்தனர். தேவ் எழுந்தான்.
சார், இந்த புள்ளைங்க தனியா எப்படி வெளியூர்ல இருப்பாங்க? தேவ் அப்பா கேட்க, வெளியூருக்கா? எங்க போகப் போறாங்க? தனியாவா? என்று தேவ் கேட்டான்.
அப்பா அவனை பார்க்க தலை கவிழ்ந்து நின்றான்.
எனக்கு புரியுது. நடந்ததில் உன் தவறும் சில இருக்கு. அது தெரிந்த பின் அவங்க இங்க இருந்தா? இருவருக்குமே கஷ்டம் என்றார்.
அப்பா..அவளுக்கு தெரியுமா? என்று அழுவது போல் தேவ் கேட்க, அவர் மகனை அணைத்தார். இவர்கள் காதல் விவகாரம் தெரியாது கமிஷ்னருக்கு. சார் நான் கிளம்புகிறேன். இந்த பிள்ளைகளை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. நேரம் கிடைக்கும் போது நான் வந்து பார்த்து விட்டு செல்கிறேன் என்றார்.
சரிங்க சார் என்று தேவ் அப்பா..கூற, அவர் கிளம்பினார். தேவ் மீண்டும் அவன் அப்பாவை கட்டிக் கொண்டு, எனக்கு நிஜமாகவே அவளோட இன்டென்சன் தெரியாதுப்பா. கௌதம் மாதிரி அவளையும் ப்ரெண்டா தான் பார்த்தேன் என்று அழுதான். எல்லாரும் அவனை வேடிக்கை பார்த்தனர்.
அழுறத நிறுத்து. அந்த பொண்ணு ஃபாரின் தான போக போகுது? நாம நினைச்சா உடனே போக முடியும் அவர் கூற, நான் செஞ்ச தப்புக்கு அவள் என்னை பார்க்க கூட விரும்ப மாட்டா. என்னால அவள நினைக்காம இருக்க முடியலப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாரிடமும் சும்மா விளையாட்டுக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டிருக்கேன். ஆனால் இவளிடம் அதை கேட்க என்னால் இனி முடியாதுப்பா என்று அழுதான். கதவை திறந்து வெளியே வந்த சீனு அவன் கூறியதை கேட்டு மனம் கலங்கினான். அவனுக்கும் தேவ்வை பிடிக்கும் தான். ஆனால் அவன் அக்கா நிலையை சிந்திக்க வேண்டும்மல்லவா? திடீர்ன்னு அந்த பொண்ணு கருவுற்று விட்டால் எல்லாருக்கும் சிரமமாகி விடுமே? மீண்டும் கதவை திறந்து உள்ளே சென்றான்.
எல்லாரும் நம்மை தான் வேடிக்கை பார்க்கிறாங்க தேவ். நீ வீட்டுக்கு போ ரெஸ்ட் எடு என்றார் அவன் அப்பா. அவன் கதவை திறந்து சுவாதியையும் சீனுவையும் பார்த்தான். இருவரும் அவனை பார்க்க, ஒன்றுமில்லை. கவனமா இருங்க என்று சுவாதியை பார்த்து கூறி விட்டு அவன் சென்றான்.
கௌதம் அறைக்கு மூவரும் வந்து அமர்ந்தனர். அர்ஜூன் காருண்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏன்டா, அப்படி பாக்குற?
தேவ் சார் பற்றி ஏதோ சொன்னீயே?
அது ஒன்றும் முக்கியமில்லை என்றாள். கௌதம் அவளை முறைத்து பார்த்தான்.
சார், நீங்க சொல்லுங்க?
ஆமா..பெருமையான விசயம் பாரு எல்லாருக்கும் தெரிய என்றாள் அவள்.
கௌதம் கோபமாக அவளை பார்க்க, அவள விடுங்க. நீங்க சொல்லுங்க சார்? அர்ஜூன் கேட்டான். கௌதம் தேஜ்வினியை பற்றி அனைத்தையும் கூறினான்.
சரி, இப்ப இதுனால உனக்கு என்ன பிரச்சனை? காருண்யாவிடம் அர்ஜூன் கேட்டான்.
என்ன இருக்கா? அவள் கோபமாக அவங்க தப்பு செஞ்சுருக்காங்க அர்ஜூன்.
தப்பா? இதுல சார் மீது எந்த தவறும் இல்லையே? அர்ஜூன் சொல்ல. கோபமாக திட்டிக் கொண்டே சென்றவள், அவனுக்கு காதலிக்க எந்த அருகதையும் இல்லை என்றாள்.
ஓவரா பேசுற? என்று கௌதம் எழுந்தான். அர்ஜூன் காருண்யாவை கோபத்தில் அறைந்தான்.
என்னை எதுக்குடா அடிச்ச? உனக்கு என்னை விட எல்லாரும் முக்கியமா தெரியுறாங்க? கத்தினாள்.
வாய மூடு. செக்ஸ் வாழ்க்கையில் நாம் வாழும் சில நேரங்களே! ஆனால் காதல் இல்லாமல் யாரும் துணையுடன் வாழ முடியாது. அவருக்கு அறியாமல் நடந்து விசயத்தை எதுக்கு பெருசாக்கிற?
ஒரு வேலை குழந்தையோட அவள் வந்தால்..
அதுக்கு அவள் தான் பொறுப்பு. சார் என்ன செய்ய முடியும்?
உன்னிடம் கேட்கிறேன். கௌதம் சார் இல்லாமல் உன் சார் வீட்டுக்கு இரவில் போய் உனக்கும் அவருக்கும் ஏதாவது நடந்தால் நீ என்ன அந்த ஆளை கல்யாணம் பண்ணிக்கிடுவாயா?
அர்ஜூன்..என்று கௌதம் சத்தமிட்டார்.
சார், நான் அவளிடம் கேட்டேன். உங்களிடம் அல்ல. பதில் சொல்லு என்றான் அர்ஜூன்.
நல்லவராக இருந்தால் கல்யாணம் பண்ணிப்பேன்.
தேவ் சாரை ஏமாற்றிய பொண்ணு இடத்தில் உன் சார் இருந்தால்..
அர்ஜூன்..வேண்டாம். என்னை வச்சு இப்படி பேச உனக்கு எப்படி மனசு வந்துச்சு?
இதே போல் தான் தேவ் சாருக்கும் இருக்கும். ப்ரெண்டா பார்த்த பொண்ணு ஏமாற்றினால் அதோட வலி உனக்கு புரியாது என்று அர்ஜூன் கத்தினான்.
அந்த மேகா உன்னை ஏதும் செய்து விட்டாளா? என்று காருண்யா கேட்க, அர்ஜூன் கோபமுடன் உனக்கு புரிய வைக்க நினைத்தேன் பாரு..என்னை சொல்லணும் என்று அங்கிருந்த டேபிள் மேலுள்ள பொருளை தள்ளி விட்டு அமர்ந்து அழுதான்.
அர்ஜூன், என்னாச்சு, நீ அழுறியா? காருண்யா அருகே வர, கௌதமும் அவனை அதிர்ந்து பார்த்தான்.
சொல்லுடா…சொல்லு..என்று காரு அவனை உலுக்க, எனக்கில்லைடி..ஸ்ரீக்கு என்று கதறி அழுதான்.
ஸ்ரீக்கா? என்ற கௌதம், அர்ஜூன்..நீ உண்மையா தான் சொல்றீயா? என்னாச்சு அவளுக்கு? எப்பொழுது? இப்ப அவள் ஓ.கேவா?
அவனோட அவளை விட சொல்லுவியா? அர்ஜூன் கேட்க, காருண்யா அமைதியானாள்.
அவனுக்கு போதை மருந்தை கொடுத்து அவளையும் மயக்கமடைய செய்தும், அவனை மிரட்டியும் எத்தனை முறை காயப்படுத்தினாங்களோ? அவளுக்கே தெரியாமல் எல்லாம் நடந்திருக்கு. வீடியோ எடுத்து வேற வச்சிருந்தானுக? எங்களுக்கு வீடியோ தெரிய வரும் போது தான் அவளுக்கு நடந்தது அவளுக்கே தெரிஞ்சது. அது அன்று வேற அவளை..என்று அழுத அர்ஜூன் நானும் கவினும் தான் அவளை காப்பாற்றினோம். ரொம்ப உடைஞ்சு போயிட்டா. ரெண்டு நாளா யாரிடமும் பேசலை. சாப்பிடலை. தூங்கலை..நான் கூட கயல் தான் காரணமுன்னு நினைச்சேன். ஆனால் எல்லாத்துக்கும் காரணம் அந்த கொலைகாரன் தான். என்னோட அம்மாவையும் அவன் விடலை. என்று அவனை நான் நேரில பார்க்குறேனோ? அவனுக்கு என் கையால தான் சாவு.
அம்மாவா? அம்மாவுக்கு என்னடா? காருண்யா கேட்க, அவன் மீண்டும் அழுதான். அவன் அம்மாவை..அம்மாவிடம் தப்பா நடந்துருக்கான்டி என்று கதறிய அர்ஜூன் கையை தரையில் குத்தினான். கௌதம் அவனை தடுத்து அவனை அணைக்க..காருண்யா கண்ணீருடன், ஏன்டா?..என்று அழுதாள். அர்ஜூன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவங்களிடம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க என்ற அர்ஜூன் அவளை விலக்கி விட்டு, இப்ப சொல்லு..ஸ்ரீயை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமா? அம்மாவை அந்த கொலைகாரனுக்கு..என்று மீண்டும் அழுது கொண்டு அவங்கள அவனிடம் விட்டு வரவா? சொல்லு என்று கத்தினான். காருண்யா மேலும் அழுதாள். பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கா காரு? சார் தெரிஞ்சப்ப எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? அவர் நிலையில் இருந்து யோசிச்சா தான் தெரியும்?
அது என்ன காதலிக்க அருகதை இல்லாதவன்..காதலிக்க அருகதை இல்லாதவன் எவன் தெரியுமா? காதலிக்கிற பொண்ணுக்கு துரோகம் செய்பவன். அவளை ஏமாற்றுபவன். இதுல அவர இழுத்த நான் மனுசனா இருக்க மாட்டேன் என்று சத்தமிட்டான்.
அனு அழும் சத்தம் அதிகமாக கேட்க, எழுந்த அர்ஜூன் முகத்தை தண்ணீரில் கழுவி விட்டு பால்கனி செல்ல கௌதம் அவன் கையை பிடித்து நிறுத்தி, துவாலையை எடுத்து அவனுக்கு கொடுத்து விட்டு துடை..இந்தா என்று கப்போர்ட்டில் இருந்து அவனுடைய ஆடை ஒன்றை எடுத்து கொடுத்து மாற்றி விட்டு போ. உன்னை பார்த்தால் நீ அழுதது நன்றாக தெரியுது. அவள் பார்த்தால் அவளும் கஷ்டப்படுவாள் என்றான்.
அர்ஜூன் அவனை சரி செய்து கொண்டு பால்கனி பக்கம் செல்ல அந்த மங்கிய ஒளியில் நிழலாக ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு நடப்பது தெரிந்தது. பால்கனி கம்பி மீது ஏறிய அர்ஜூனை பார்த்து, ஏய் என்னடா பண்ற? இருவரும் பதறினர்.
அமைதியா இருங்க என்று பெருமூச்செடுத்து விட்டு அங்கிருந்த ஸ்லாப்பில் குதித்தான். இருவரும் பயந்து கத்த அனு சத்தம் அடங்கியது. அங்கேயே அவன் அமர்ந்தான். இவர்கள் கத்திய சத்தம் கேட்டு அனு அருகே படுத்திருந்த ஸ்ரீ பால்கனிக்கு வந்து பார்த்தாள். அதே நேரம் அர்ஜூனுக்கு போன் வந்தது.