வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-101
143
அத்தியாயம் 101
தியாவிற்கு சத்யா ஆடை ஒன்றை கொடுத்து, இதை மாத்திட்டு வா என்றான். அவள் பேண்ட் சர்ட்டில் இருந்தாள். அவள் மாற்றி வர,மறை வீட்டிற்கு மறை,காயத்ரி, ராக்கி, அர்ஜூன் பாட்டி, பர்வதப்பாட்டி, வினிதா அம்மா, அப்பா, அபி அம்மா, அப்பா, பவி அம்மா, அப்பா, அர்ஜூன், நிவாஸ்..மற்ற சிலரும் கிளம்பினர்.
காரிலிருந்து தேவ், கௌதம், சுவாதி அனைவரும் இறங்கி மண்டபத்திற்கு வந்தனர். அவனை பார்த்த ஆருத்ரா அவனிடம் வர, கௌதம் அண்ணா..நீ தானடா அப்பாகிட்ட போட்டுக்குடுத்த என்று ஆரு அவனை மிரட்டினாள். பின் அனைவரையும் அவனிடம் அறிமுகப்படுத்தினாள். இதை அண்ணா தானே செய்யணும். நான் செய்கிறேன்னு அவனை பார்த்தாள். அவன் அமைதியாக இருந்தான். அர்ஜூனும் அமைதியாக இருக்க..மூஞ்சிய ஏன்டா இப்படி வச்சிருக்கீங்க? என்று கேட்டாள். அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். கௌதம் சுவாதியை பார்த்தான்.
ஏதோ பிரச்சனையோ என்று நினைத்த நிவாஸ் சுவாதி குடும்பத்தை பார்த்துக் கொண்டே தேவ்வை அணைத்து,
மச்சான் பிரச்சனைய அப்புறம் பார்த்துக்கலாம். கொஞ்சம் சிரிங்களேன் என்றான். அவனும் புரிந்து கொண்டு அனைவரையும் பார்த்தான். தாரிகா அவனை பார்த்துக் கொண்டிருக்க,
ஹேய்..லவ் பேர்ஸ்ல ஒண்ணு குறையுது? கேட்டான்.
அது வேலையா வீட்டுக்கு போயிருக்கு என்று தாரிகா குரல் கொடுக்க, ஏம்மா..அதை கொஞ்சம் சிரித்துக் கொண்டே சொல்லலாம்ல.
சிரிக்கணுமா? ஈ..என்று பல்லை காட்டினாள்.
அவளருகே சென்ற தேவ்..நான் டென்டிஸ்ட் இல்ல என்றான்.
என்னை பார்க்கும் போது முறைக்கிற? இன்னொரு சண்டை கோழிய காணோம். நான் வந்ததிலிருந்தே பார்க்கலை என்று இன்பாவை தேடினான்.
அபி முன்னே வந்து, மேம்..ரொம்ப பிஸி சார். சுவாதியை பார்த்துக் கொண்டு நான் வேண்டுமானால் நம்பர் தாரேனே? நீங்க பேசிக்கோங்க என்றான்.
டேய்..அபி அர்ஜூன் சத்தமிட, அர்ஜூன் அவங்ககிட்ட யாரும் வாலாட்ட முடியாது, ஒட்ட நறுக்கிடுவாங்க. சாருக்கு தெரியாததா? ஏற்கனவே வாங்கியவராயிற்றே..
ஏன்டா, என்னை கூப்பிட வந்தேன்னு அங்க என்னடா வெட்டிப் பேச்சு என்றாள் ஆருத்ரா.
மறந்துட்டேன்னு பாரு என்று காருக்கு ஓடினான் தேவ். கிஃப்ட் ஒன்றை எடுத்து வந்து, மேரேஜ் முடிஞ்சு குடுக்குறது. என்னால அப்ப குடுக்க முடியல. ஹாப்பி மேரேஜ் லைஃப் என்றான் சிரிப்புடன்.
என்ன டாக்டர் சார்? உங்களுக்கு எப்ப மேரேஜ்? வேலு நண்பன் கேட்க, புன்னகையை பரிசாய் கொடுத்து விட்டு, நாங்க கிளம்புறோம் என்று முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு கிளம்பினான்.
சார்..நில்லுங்க என்று அர்ஜூன் அவனிடம் வந்து, இந்த நம்பரை டிரேஸ் பண்ண முடியுமா? கேட்டான். அதான் ரெண்டு போலீஸ் உனக்கு நல்ல பழக்காமாச்சே. என்னிடம் கேட்கிறாய்?
சார்..சில விசயங்கள எல்லாரிடமும் சொல்ல முடியாது என்றான் அர்ஜூன்.
ம்ம்..
நான் சொல்ற நேரம் மட்டும் டிரேஸ் பண்ணனும்.
அவனை பார்த்து தலையசைத்து அர்ஜூன் கால் பண்றேன்னு அவன் சொல்ல, அவன் பக்கமிருந்த சுவாதி நிவாஸிடம் கண்ணை காட்டிக் கொண்டே அர்ஜூனை பார்த்தாள்.
அர்ஜூன் அவளை பார்த்து, சுவாதி..சாரி. பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல. மறந்து போச்சு. சாரிப்பா என்றான்.
இட்ஸ் ஓ.கே அர்ஜூன் என்று அவனிடம் சொல்லி விட்டு, அவனை பார்த்து பேச வந்து தொண்டைக்குள் தள்ளினாள். பின் ஸ்ரீயை பார்த்து அவளிடம் ஓடிச் சென்று, நான் கிளம்புகிறேன் ஸ்ரீ. நம்மால் மீண்டும் பார்க்க முடியுமான்னு தெரியல. ஆனால் அர்ஜூனிடம் சீக்கிரம் உன் காதலை சொல்லிடு. ரொம்ப லேட் பண்ணிடாத என்று கண்ணீருடன் நடந்தாள். சுவாதி மனநிலையில் அவளுக்கு அர்ஜூன், ஸ்ரீ தவிர எதுவுமே அவள் கண்ணுக்கு தெரியலை.
ஒரு நிமிஷம் நில்லு என்று அனுவை தூக்கிக் கொண்டு ஸ்ரீ சுவாதியிடம் வந்தாள். உனக்கு என்று சுற்றி பார்த்தாள். அனைவரும் அவர்களை பார்க்க, உனக்கு ஓ.கே தான? கேட்டாள்.
நீ கேட்டதே போதும் என்று ஸ்ரீ அணைத்து விட்டு காரில் ஏறினாள். நிவாஸ் அவளிடம் வந்து நின்றான். நிவி அவள் பேச்சே வேற மாதிரி இருக்கு என்றாள் ஸ்ரீ.
என்ன மாதிரி? இனி பார்க்க முடியாதுன்னு சொன்ன மாதிரி. ஆனால் அவளும் சென்னைக்கு தான போகிறாள். அவன் தோளை குலுக்கினான்.
எல்லாரும் காரில் ஏற, அங்கிள் நீங்க கௌதம் கார்ல வாங்க என்று சொல்ல அவர் யோசனையுடன் அவன் காரில் ஏறினார். கௌதம் சுவாதியை பற்றி கேட்டுக் கொண்டே வந்தான்.
தேவ் காரில் சற்று நேரம் அமைதி நிலவியது. பின் அவன் சுவாதியிடம் பேச நினைத்த போது அவளுக்கு போன் வந்தது. போனை அவள் தேட..இரு. நான் எடுத்து தாரேன் என்று சீனு எடுத்துக் கொடுக்க அவனை பார்த்து புன்னகைத்து விட்டு, சொல்லு காரு என்றாள்.
ஹேய்..குட் நியூஸ் சொல்லலாம்ன்னு கால் பண்ணா நீ எடுக்கவேயில்லை.
கொஞ்சம் வேலையா இருந்தேன். என்ன சொல்லு குட் நியூஸ்? உன்னோட அம்மா உன்னை கூப்பிட வந்துட்டாங்களா?
இல்லடி..
சொல்லு..
ம்ம்..சொல்றேன். அந்த சுருட்ட மண்டையன் உன்னை எப்படி கிண்டல் செய்வான்? இன்று ஒரு பொண்ணுக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டான்.
பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டானா? தெளிவா சொல்லு.
செம்ம பல்ப் வாங்கி அனைவரும் அவனை பார்த்து சிரிக்கும் படி செய்து விட்டாள் அந்த பொண்ணு.
யாரும் புதுசா வந்துருக்காங்களா?
ஆமா சுவா..வெளிநாட்ல இருந்து ஒரு மேம் வந்தாங்க. செம்ம அழகாக இருக்காங்க. ஆனால் அவங்க ப்ரெண்ட மீட் பண்ண வந்ததா சொன்னாங்க? அவங்ககிட்ட இவன் வாலாட்டினான். வச்சு செஞ்சிட்டு போயிட்டாங்க. அழுதான்டி என்று காருண்யா பயங்கரமாக சிரித்தாள். சுவாதி அமைதியை பார்த்து,
சுவா..ஏதும் பிரச்சனையா? ரொம்ப அமைதியா இருக்க. இந்த வாய்ப்புக்காக தான் காத்திருந்தோம். நீயும் இருந்திருந்தா நல்லா இருக்கும் என்றாள்.
எனக்கு ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கெல்ப் வேணுமே காரு? என்று தேவ்வை பார்த்தாள்.
அவனிடம் நான் என்னோட வாழ்க்கையை பற்றி முக்கியமான விசயம் பேசணும். அதனால் அவனை நாளை காலையே நான் மீட் பண்ணனும்.
நீ எதுக்கு உன் வாழ்க்கையை பற்றி அவனிடம் பேசணும்? ஹே..நீ புரோபோஸ் எதுவும் செய்யப் போறியா? அவள் கேட்க, தேவ் காரை சட்டென நிறுத்தினான். ஆருத்ராவும் சீனுவும் இருவரையும் பார்த்தனர்.
எதுக்குன்னு சொல்ல முடியாது? ஆனால் அதுவாக கூட இருக்கலாம் என்று தேவ்வை பார்த்துக் கொண்டே அவனை காலை பத்து மணிக்கு லேப்பிற்கு வரச் சொல்லு என்றாள்.
ஏய் பைத்தியமாடி உனக்கு?
நாம நாளைக்கு மீட் பண்ணலாம் என்று போனை வைத்தாள் சுவாதி. தேவ் கோபமாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
என்னாச்சு சார்? கார் ஏதும் பிரச்சனையா? சுவாதி சாதாரணமாக கேட்டாள். சீனு அவளிடம், கார் பிரச்சனையில்லை. உன் மூளைக்கு தான் ஏதோ ஆகிடுச்சுன்னு. அவள் புன்னகையுடன் “இஸ் இட்”! யாரோ என் பதில் எதுவாகினும் துணைக்கு இருப்பேன்னு சொன்னாங்களாம் என்றாள்.
அப்ப உனக்கு மூளை இருந்தது சொன்னேன். ஆனால் இப்ப இல்லை என்று திரும்பிக் கொண்டான். தேவ் கார் கண்ணாடியை கீழிறக்கி விட்டான்.
சாரி சார் என்று மனதில் நினைத்த சுவாதி கண்ணில் நீர் கோர்க்க தேவ்வை பார்த்துக் கொண்டே வந்தாள்.
காரை வேகமாக எடுத்தான். அண்ணா..மெதுவா போ. பயமா இருக்கு ஆருத்ரா தேவ் கையை பிடித்தாள்.
மறையின் வீட்டிற்கு அனைவரும் வந்தனர். நில்லுங்க என்று கவின் குடும்பம் மொத்தமும் மறை வீட்டிலிருந்து வந்தனர். அகல்யா ஆராத்தி தட்டுடன் வந்து காயத்ரி, மறை, ராக்கிக்கு ஆராத்தி எடுத்து உள்ளே வரவேற்றாள்.
மறை காயத்ரி முகத்தை கவனிக்க, அவள் எப்பொழுதும் போல் சிறுபுன்னகையுடன் உள்ளே வந்தாள். ராக்கி சுற்றி சுற்றி பார்த்தான். ஏற்கனவே ராக்கியிடம் தாரிகா வீட்டை வரைந்து காட்டி இது தான் உன்னுடைய வீடு என்று கூறி இருப்பாள். ராக்கி வீட்டை பார்த்து தாரிகா வரைந்த அனைத்தும் இருக்கிறதா? என்று பார்த்தான். வெளியிருந்து பார்த்தால் சிறிய அறையாக இருக்கும். ஒரு ஹால், சமையலறை, குளியலறை அனைத்தும் இருந்தது. ஆனால் சாமி படங்கள் இல்லாமல் இருக்க, காயத்ரி மறையை பார்த்தாள்.
நான் கோவிலுக்கும் போக மாட்டேன். வீட்டிலும் கும்பிடுவதில்லை. அம்மா சென்றதிலிருந்து போக தோன்றவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கு என்றான். அவன் அம்மா புகைப்படத்தின் முன் விளக்கு திரி போட்டு இருந்தது.
காயூம்மா விளக்கேற்று வினிதா அம்மா கூறினார்.
அத்தை வேண்டாம்.
சாமி தான தம்பி கும்பிடக்கூடாது. அம்மா கடவுளுடன் ஒன்றி விட்டாலும் உங்களுக்கு அம்மா தான. அவங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கட்டுமே என்றார். அவன் ஏதும் கூறவில்லை. காயத்ரி விளக்கேற்ற இருவரும் மறையின் அம்மாவை வணங்கினர். ராக்கி இறங்கி வீட்டை ஆராய்ந்தான். பின் அவள் வரைந்திருந்த காகிதத்தை எடுத்து பார்த்து அழுதான்.
அதுக்கில்லை ராக்கியை சமாதானப்படுத்த என்றாள் காயத்ரி. அவள் மறையிடம் சாதாரணமாக பேசுவதை பார்த்த மறையும், மற்றவர்களும் மகிழ்ந்தனர்.
ராக்கியை வாங்கிய மறை, ஸ்டாருக்கு என்ன வேண்டும்?
டீவிய காணோம். இங்க டீவி இல்ல.
கண்ணா..நாளைக்கு டீவி கொண்டு வரலாம்.
டீவியா? மறை கேட்க, பெரியத்தை அவனிடம் பொண்ணுக்கு சீர் நாளைக்கு கொண்டு வருவோம். அதுல டீவி, ஃப்ரிஜ் பெரிய பொருள் என்றார். இன்னும் வாங்க நினைத்தோம் என்று வினிதா அம்மா காயத்ரியை பார்த்தார். அவள் அவரை முறைத்தார். அவளை பார்த்து புன்னகையுடன் உட்காருங்க என்று அமர வைத்தான். பின் சமையலறைக்கு காயத்ரியை அழைத்து சென்றான். அங்கே விறகடுப்பு தான் இருந்தது.
கேஸ்..சிலிண்டரை மறந்துட்டேனே? என்றார் பெரியத்தை.
அம்மா..அதை நான் வாங்குகிறேன். நேற்றே பதிந்தாயிற்று. ஒரு வாரம் மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிடுவாயா? மறை கேட்டான்.
அவளுக்கு பழக்கம் இருக்கு. அவள் அம்மா வீட்டிலும் விறகடுப்பு தான் என்றார் வினிதா அம்மா.
அப்படியா? நல்லது. பிரச்சனையே இல்லை என்றார் கவின் அம்மா. வெளியே இருந்த மரத்தடியில் சிலரும் வீட்டினுள் சிலரும் இருந்தனர்.
இந்தாங்கம்மா..என்று வினிதா அம்மாவிடம் பால் பாக்கெட்டை அர்ஜூன் கொடுத்தான். வாங்கிய அம்மா..நான் பார்த்துக்கிறேன். காயூம்மா..வா என்று வினிதா அம்மா அவளை அழைத்து விறகை பற்ற வைத்து ஆரம்பிம்மா என்றார். அவளும் நெருப்பை ஏற்றி பாலை அடுப்பில் வைத்து தயார் செய்து எழுந்தாள்.
நீ மாப்பிள்ளைக்கு கொடும்மா என்று அவள் கையில் கொடுத்து விட்டு, ராக்கிக்கு வினிதா அம்மா எடுத்துக் கொண்டு அவனை தூக்கி அமர்ந்தார். கவின் அம்மா, அபி அம்மா மற்றவர்களுக்கு கொடுத்தனர்.
மறைக்கு கொடுத்து விட்டு அவளும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். பின் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர். சாப்பிட்டு விட்டு அர்ஜூன் எல்லார் முன்னும் ராக்கியிடம், இன்று உன்னோட அக்காவுடன் தூங்கலாமா? என்று கேட்டுக் கொண்டே ராக்கியை தூக்கினான். ராக்கி காயத்ரியை பார்த்து அர்ஜூனிடமிருந்து இறங்கி ஓடி வந்தான் காயத்ரியிடம். மகனை தூக்கிய காயத்ரி பெரியத்தை, வினிதா அம்மாவிடம் பேச்சை ஆரம்பிக்கும் முன்,..ஸ்ரீ ராக்கியிடம் வந்து, உனக்கு கதை வேணும்ன்னா எங்களோட வரலாம் இல்லைன்னா அம்மாவிடம் போ. ஆனால் குட்டிப்பையா இன்று அம்மா ரொம்ப நேரம் நின்னாங்க. ஒரே இடத்துல உட்கார்ந்திருந்தாங்க. நிறைய அலைச்சாங்கல்ல. அம்மாவால இன்று கதை சொல்ல முடியாது. அம்மா தூங்கட்டும். நான் உங்களுக்கு என்ன கதை வேண்டுமானாலும் சொல்றேன்.
அவள் கூறிய குட்டிப்பையனில் நண்பர்கள் அர்ஜூனை பார்த்தனர்.
ஆனை கதை தெரியுமா?
ம்ம்..தெரியும். வேற என்று வாயில் கையை வைத்து யோசித்த ராக்கி மங்கி? கேட்டான்.
ம்ம். நீ வந்தா சொல்லுவேன். இல்ல அனுவுக்கு மட்டும் தான் என்றாள் ஸ்ரீ.
அனு அவனிடம் வந்து..ஏஞ்சலுக்கு எல்லா கதையும் தெரியும். நாம ஏஞ்சல் கூட தூங்கலாமா? கேட்டாள். ராக்கி மனம் மாறியது. அம்மா..நான் அக்காவுடன் தூங்குறேன் என்றான். அவள் சரி..சமத்தா இருக்கணும். ஸ்ரீயை தூங்க விடணும். தொந்தரவு செய்யக்கூடாது என்று காயத்ரி அறிவுரையை போதிக்க, அக்கா..போதும். பையன் மனசு மாறி விடமால் என்றான் அர்ஜூன். எல்லாரும் சிரித்தனர்.
அர்ஜூன் பாட்டி, அர்ஜூன், பசங்க, ஸ்ரீ, காயத்ரி, மறை அர்ஜூனின் பாட்டி வீட்டிற்கு சென்றனர். ஏற்கனவே கமலியும், தாரிகா அம்மாவும் சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
காயத்ரி மறையுடன் பைக்கில் முன் செல்ல…மற்றவர்கள் காரில் அர்ஜூனுடன் வந்தனர். அனைவரும் கீழிருக்க, இரண்டாவது மாடி கடைசி அறையை மறை, காயத்ரிக்காக ஒதுக்கினர்.
நல்ல நேரம் வந்த சமயம் மறை முதலில் சென்றான். பின் காயத்ரியை அனுப்பினர். உள்ளே சென்ற காயத்ரி கதவை தாழிட்டு அங்கேயே நின்றாள்.
மறை அவளை அழைக்க..அவனிடம் வந்தாள். அவன் அவளை பார்க்க பூனை நடையில் நடந்து டேபிளில் பால் செம்பை வைத்து விட்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவனருகே வந்து, இந்தாங்க என்றாள்.
என்ன? கேட்டான்.
ஷ்..என்று அவன் வாயை மூடி கண்களால் வெளியே கவனிக்கிறாங்க என்று சைகை செய்தாள். அவன் தண்ணீரை குடித்து அமர்ந்தான். அவள் குடிக்கவேயில்லை ஆனாலும் எனக்கு ஏதோ மாதிரி இருக்கு என்று சிணுங்கலாக பேசினாள். அவன் அதிர்ந்து அவளை பார்த்தான்.
ம்ம்..நடிக்கணும். நீங்களும் என்னை மாதிரி பேசுங்க? அவன் காதில் மெதுவாக கூறினாள்.
அடிப்பாவி, இது வேறையா? வராதே என்றான் மெதுவாக.
ஓ.கே என்று அவன் வாயை பிடித்து தண்ணீரை ஊற்றி, நீரை விழுங்காம பேசுங்க என்றாள். அவனும் பேசினான். காயத்ரி அவனை பார்த்து சிரித்தாள். அவள் கொலுசொலி கேட்கும்படி பெட்டில் அமர்ந்து காலை ஆட்டினாள். இருங்க வாரேன் என்று கட்டிலில் பொத்தென விழுந்தாள். பின் போர்வையை சுருட்டிக் கொண்டு மெதுவாக எழுந்து கதவருகே சென்று தாழ்ப்பாளை விலக்கினாள். மெதுவாக எட்டிப் பார்த்தாள். யாருமில்லை. அப்பாடா என்று போர்வையை விலக்கிக் கொண்டு அவனருகே வந்தாள். அவளை இப்பொழுது தான் முழுதாக கவனித்தான் மறை.
மஞ்சள் நிற ஜியார்ஜெட் புடவை, கையில்லா சட்டையுடன்.. அவள் அங்கங்கள் தெரியும் வண்ணம் வந்தாள். அவன் பார்வை மாறுவதை கண்ட காயத்ரி அவனருகே அமர்ந்து பேசலாமா? கேட்டாள்.
ஹஅ..என்று அவன் கேட்க, பேசலாமான்னு கேட்டேன் என்று அவன் கையில் கிள்ளினாள்.
ஏய்..என்ன பண்ற? வலிக்குது?
வலிக்குதா? இதா வலிக்குது? உங்களுக்கு அடிபட்டு கட்டு போட்ட போது வலிக்கலையா?
அது வேற..இது வேற.
என்ன வேறையா? நான் ஏற்கனவே எனக்கு நேரம் வேண்டும்ன்னு சொன்னேன்.
ஆமா சொன்ன? அதுக்கென்ன? எடுத்துக்கோ என்றான்.
நீங்க, போங்கன்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன். எனக்கு உன்னோட கஷ்டம் புரிஞ்சது, புரியுது. நான் வெயிட் பண்றேன். எனக்கு ஒன்று மட்டும் சொல்லேன். உனக்கு..உனக்கு..என்று வார்த்தை வராமல் தடுமாறினான்.
காயத்ரி புன்னகையுடன், எனக்கு இப்ப இல்லை. முன்னும் பின்னும் நேரமாகும். அதனால் தான் பயந்து அன்று வாங்க சென்றேன். இருக்குமோ என்று தான் குளித்தேன். சாரி கொஞ்சம் மிரட்டுற மாதிரி பேசினேன்ல.
அப்பாடா. வேரேதுமில்லையே? அவன் கேட்க,
வேறென்ன?
அப்ப அம்மாகிட்ட இதான் பேசினோம் என்றான். அவள் சிரித்துக் கொண்டு அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும்.
உங்ககிட்ட என்ன சொன்னாங்க? நல்லா பயமுறுத்தி விட்டாங்கல்லா?
ஆமா.
என்ன சொன்னாங்க?
அதான் இல்லைன்னு சொல்லிட்டீயே? நான் அதை மறந்துடுறேன். விடு என்றான் அவன்.
சரி..இப்ப எதுக்கு இந்த நாடகம்?
அதுவா? நாம சேர்ந்து இருக்கணும்ன்னு பால்ல எதையோ கலந்தாங்க. நான் பார்த்துட்டேன். அதுக்கு தான். அவங்களுக்கு நான் கஷ்டப்படுவேன்னு தெரியும். ஆனால் இதுவும் சம்பிரதாயமாக தானே பார்ப்பாங்க.
தூங்கலாமா? என்று அவள் கேட்க, நான் கீழே படுத்துக்கிறேன்னு அவன் எழுந்தான். கரெண்டு போய் அறை இருட்டானாது. அவள் பயந்து கத்துவதற்குள் அவள் வாயை பொத்தினான் மறை. கத்திறாத. எல்லாருக்கும் நாம போட்ட நாடகம் தெரிய வரும் என்றான். அவள் அழுது கொண்டே அவனது இடுப்பை கட்டிக் கொண்டாள்.
அவனுக்கு மூச்சு முட்டியது. இப்படி பண்ணாத. நான் போர்வையை போர்த்தி விடுகிறேன். தூங்கு. நான் வெளியே சென்று பார்த்துட்டு வாரேன் என்றான்.
அவன் கையை தட்டி விட்டு எழுந்து காயத்ரி அவனை கட்டிக் கொண்டாள். கையை இறுக்கியபடி நின்றான் மறை. ப்ளீஸ் போகாதீங்க. பயமா இருக்கு என்று அழுதாள்.
ஒரே நிமிஷம் வந்துடுறேன் என்றான்.
அன்று கத்திய காயத்ரி..இப்பொழுது பேசுகிறாளா? என்று பார்த்தான். அன்று இருட்டில் ராக்கி அப்பா முகம் வந்திருக்கும். அவன் மீதுள்ள பயம் தான் பயப்பட்டு இருந்தாள். ஆனால் இன்று மென்மையான குணமுள்ள மறை. அவள் விருப்பமில்லாமல் தொட மாட்டான் என்ற நம்பிக்கை அவனுடனான பழக்கத்தில். அதனால் அவனை பார்த்து பயமும் இல்லை. அவன் அருகே இருந்தால் தனக்கு ஒன்றுமாகாது என்ற எண்ணத்தில் அவள் அணைத்திருந்தாள். ஆனால் மறைக்கு உணர்வுகளை கட்டுப்படுத்த சிரமமாக இருந்தது.
இங்க பாரு. வெளிய போனா தான் வெளிச்சம் வரும்.
இல்லை. போகாதீங்க என்று பிடிவாதமாக சிறுகுழந்தை போல் அழுதாள். அவள் அணைத்திருக்க அவனும் அணைத்தான். அவளை அணைத்தவாறே அவன் போனை தேடி எடுத்தான். காயத்ரி அழுகை நிற்கவில்லை. டார்ச்சை ஆன் செய்து அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் கண்ணை திறக்காமல் அழுது கொண்டிருந்தாள்.
இங்க பாரும்மா என்று அழைத்தான்.
அவள் அழுதாள். கண்ணை திறக்கவில்லை.
காயூ,..என்று மெதுவாக அழைத்து, கண்ணை திற. உன்னருகே நான் இருக்கிறேன் என்றான். கண்ணை திறந்த அவள் விழிகள் சுற்றிலும் துலாவி மீண்டும் கண்ணை மூடின.
காயூ என்னை பாரு. என்னை மட்டும் பாரு. கண்ணை திற என்றான்.
மெதுவாக கண்களை திறந்து மறையை பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான். நான் பக்கத்துல தான் இருக்கேன். எங்கேயும் போகலை..என்று அவள் கண்ணை துடைத்து விட்டான். அவன் கரங்கள் அவள் மேனியில் பட்டவுடன் ஏதோ பழகிய உணர்வில் உரிமையுடன் அவன் மார்பில் சாய்ந்து கட்டி அணைத்தாள்.
காயூ..வேண்டாம். நான் கரெண்டுக்கு பார்த்துட்டு வாரேன். இருட்டுன்னா உனக்கு பயமா இருக்கும்.
நீங்க போகக்கூடாது.
எப்படி தூங்குறது?
நீங்க இருக்கீங்கல்ல.
இல்லம்மா. என்னால இதுக்கு மேல என்னை கட்டுப்படுத்த முடியாதும்மா.
கண்ணை திறந்து அவனை பார்த்தாள். அவன் இதழ்களில் இதழ் கோர்த்தாள்.
காயூம்மா..
நான் உங்க பொண்டாட்டி தான. அதனால தப்பில்லை என்று கண்ணை மூடிக் கொண்டு கையை விரித்தாள்.
நீ நினவுல தான பேசுற?
ஆமா. நான் ஒத்துக்கிறேன் என்றாள்.
நீ கண்ணை திறக்க மாட்டேங்குற?
மரமண்ட இருட்டு பயமா இருக்குடா என்றாள்.
என்ன சொன்ன?
அப்புறம் என்ன? நானே பயத்துல உயிர் போவது போல் இருக்கேன்.
நான் பக்கம் இருக்கும் போது அந்த எமன் கூட உன்னை ஏதும் செய்யமுடியாது என்றான்.
அவள் கண்ணை திறந்து மறையை பார்க்க, அவன் மோகமன்மதனாய் மாறி விட்டிருந்தான். அவள் இடை பற்றி இழுத்து..விருப்பமில்லைன்னா சொல்லுடு என்றான்.
இல்லை அவள் கூற கையை எடுத்தான். அவன் கையை பிடித்து அவளாக அவள் இடையில் வைத்தாள். கண்களை மூடக்கூடாது என்றான்.
இருவரும் தங்களது வாழ்க்கைக்கான அச்சாரத்தை பதித்தனர். ராக்கி அப்பாவால் பட்ட கஷ்டம் மறையின் ஆறுதலால் காயத்ரிக்கு புது வாழ்க்கை கிடைத்ததை போல் உணர்ந்தாள்.
வீட்டின் முன் காரை நிறுத்திய தேவ் ஆருத்ராவை பார்த்தான். அனைவரையும் அவள் இறக்கி வீட்டிற்குள் அழைக்க, பெரிய பங்களாவினுள் நுழைந்தனர். சீனு..இங்க நான் இருக்க முடியுமா? சுவாதி சீனு காதில் கிசுகிசுக்க அமைதியாக இருந்தான். ஆருத்ரா ஓடிச் சென்று அவள் அம்மாவை அழைத்து வந்தாள்.
வாங்க என்று அவர் அழைக்க, தேவ்வும் கௌதமும் காரை நிறுத்தி விட்டு வந்தனர். தேவ் அவர்களை பார்த்து விட்டு, அங்கிள் வாங்க..இன்று ஒரு நாள் இங்க தங்கிக்கோங்க. அம்மா..அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வையுங்க.
டேய்..நீ? அம்மா கேட்க, தம்பி நீங்களும் வாங்க என்று அவர் அழைத்தார்.
அங்கிள் எல்லா இடத்திற்கும் சேர்ந்து வர முடியாது என்று சொல்லிக் கொண்டே அவனறைக்குள் சென்றான்.
நில்லுடா அம்மா கத்த..அம்மா வந்தவங்கள கவனிங்க. நான் அவனிடம் பேசுகிறேன். அப்பா எங்க? இன்னும் வரலையா? ஆருத்ரா கேட்டாள்.
நாளை மாலை தான் வருவாராம் என்றார் அவள் அம்மா.
நல்லது என்று படி ஏறி தேவ் அறையினுள் ஆருத்ரா சென்றாள். அவள் உள்ளே செல்ல, அவன் ஆடை மாற்றி வெண்ணிற ஆடையில் வந்தான்.
நில்லுடா எங்க போற?
எனக்கு வேலை இருக்கு.
வேலையா? சாப்பிடலை. ஊர்ல இருந்து வந்து ஓய்வெடுக்காமல் என்ன வேலை?
எனக்கு பதிலா நீ போறியா?
எனக்கு தெரியாதே?
தேவ், நில்லு.. கௌதம் அழைக்க அவனை பார்த்து விட்டு, சுவாதியை பார்த்தான். நான் வாரேன். சாப்பிட்டு தூங்குங்க என்று அவன் சொல்லி நகர, மூவரும் எழுந்து நின்றனர்.
எங்களுக்கு பசிக்கல. நாங்க கிளம்புகிறோம் என்றார் சுவாதியின் அப்பா. தேவ் நின்றான்.
இந்த நேரத்துல எங்க போவீங்க அங்கிள்? ஆருத்ரா கேட்டாள்.
என் பொண்ணுக்கு ஹாஸ்டல் இருக்கு. நாங்க ஆம்பளைங்க தான எங்காவது பார்த்துக்கிறோம் என்று தன் பிள்ளைகளை இழுத்து கிளம்பினார்.
அங்கிள், போகாதீங்க. பாதுகாப்பு இல்லை என்று அவர் முன் வந்தான் தேவ்.
ஏன்ப்பா. நீ தான சொன்ன? பார்த்துக்கிறேன்னு. ஆனால் உன்னோட வீட்ல நீயே சாப்பிடலை, தங்கலை. நாங்க யாரு இங்க தங்க?
அவள மாதிரியே பேசுறீங்க அங்கிள்?
இல்லப்பா. என் பொண்ணு உங்களிடம் வேண்டாம்ன்னு நேரடியா சொல்லைன்னாலும் மறைமுகமா சொன்னா. எனக்குமே அவள் உங்களிடம் சொன்ன விதம் பிடிக்கலை. ஆனால் அவள் சொன்னது..அவள் காரணம் சரின்னு தோணுதுப்பா. உன்னை கஷ்டப்படுத்துனதுக்கு மன்னிச்சிருப்பா.
அங்கிள் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?
இல்லப்பா. நான் இப்ப பேசுறது சரி தான்.
அவன் சின்ன பையன். நீங்க அவனிடம் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? பிள்ளைகள கூட்டிட்டு இந்த ராத்திரில எங்க போய் தங்குவீங்க? அவன் அம்மா கேட்டார்.
அப்பா..அவங்க சொல்றது சரி தான். நீங்களும் சீனுவும் இங்க இருங்க. நான் ஹாஸ்டலுக்கு கிளம்புறேன் என்றாள் சுவாதி.
நீ வாயை மூடு என்றான் தேவ்.
அங்கிள்..உங்களுக்கென்ன? நான் சாப்பிடணும், வீட்ல இருக்கணும் அவ்வளவு தான? வாங்க என்று அவரை கையை பிடித்து அழைத்து வந்து அவன் சாப்பிட அமர, அவர் யோசனையோடு நின்றார். சீனு தேவ் அருகே சென்று அமர்ந்தான்.
ப்ளீஸ் அங்கிள் என்றான். அவர் அமர்ந்தார். சுவாதி நிற்க அனைவரும் அவளை பார்த்தனர்.
வாம்மா..என்று தேவ் அம்மா அழைத்தார். அவன் திரும்பி கூட பார்க்கலை. ஆருத்ரா சுவாதியிடம் வந்து அவளது கையை பிடித்து அழைத்து வந்தாள்.
உட்காரும்மா என்றார். அவள் அமர தேவ் அவளை முறைத்தான்.
தண்ணீர் அருந்திய சுவாதிக்கு புரை ஏறியது. யாரோ திட்டுறாங்க? என்று தேவ் அம்மா சுவாதி தலையை தட்டினார்.
அம்மா..யாரோ இல்லை. உன் மகன் தான். பாரு என்றாள் ஆருத்ரா.
சுவாதி நெஞ்சை தடவினாள். தேவ் கோபத்தில் கவனிக்கலை. ஆனால் கௌதம் அவளை கவனித்தான். சாப்பாட்டிலும் எண்ணெய் அடங்காத உணவுகளை எடுத்து சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழ, அவள் கையை அழுத்தி ஊன்றி எழுந்தாள்.
அங்கிள், வாங்க என்று அவரை அழைத்து மூவருக்கும் அறையை சொன்ன தேவ்..நான் தூங்க தான் போறேன் அங்கிள் என்று அவனறைக்கு கிளம்பினான். அவன் சுவாதியை பார்க்கவேயில்லை.
கௌதம் சுவாதியிடம் பேசலாமா? கேட்டான்.
என்ன பேசணும்?
சும்மா தான். உன்னை ஏதும் செய்து விட மாட்டேன் என்றான் கௌதம்.
சரி..சொல்லுங்க என்று இருவரும் வெளியே வந்தனர். குடை போன்ற அமைப்புடைய இடத்தில் உள்ள இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.
சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு டயர்டா இருக்கு.
உனக்கு ஏதும் பிரச்சனையா? அவன் அவளிடம் கவனித்த விசயத்தை கேட்டான்.
நைட் அதிகமா சாப்பிட மாட்டேன். டயட்ல இருக்கேன். இந்த கையில் அடிபட்டிருப்பதால் அடுத்த கையை ஊன்றி எழுந்தேன். புரை ஏறிய போது ஆன்ட்டி தலையை தட்டினாங்க. ஆனால் தொண்டை, நெஞ்சு எறிந்தது. அதனால் நெஞ்சை தடவினேன். இதில் என்ன உள்ளது?
உள்ளது என்று நினைத்த கௌதம் அவள் காரம் சுத்தமாக எடுக்கலை. பின் எப்படி எறியும்? அவள் ஊன்றிய கை..அதே அடிப்பட்ட கை. இவள் எதையோ மறைக்கிறாள்? நான் கண்டு பிடிக்கிறேன் என்று அனைத்தையும் மனதினுள் நினைத்து, சும்மா தான் கேட்டேன். நீ ஓய்வெடு என்று எழுந்தான். சுவாதி கௌதமை திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல அவனது சந்தேகம் உறுதியானது.
தேவ் அறையில் இருக்க ஆருத்ரா அவனுக்கு போன் செய்து கதவை திறக்க சொன்னாள். பின் கதவை அடைத்து..சுவாதிக்கு உன்னை பிடிச்சிருக்குண்ணா.
அவள பத்தி பேசுறதா இருந்தா. நீ கிளம்பு.
கிளம்புறேன். நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புறேன். காரில் நீயும் அவள் தம்பியும் கோபித்துக் கொண்டு அவளை பார்க்கவேயில்லை. அவள் அழுதாள் அண்ணா.
கண்ணீரோட நம் வீட்டிற்கு வரும் வரை உன்னை தான் பார்த்துக் கொண்டே வந்தாள்.
நிஜமா தான் சொல்றீயா?
அவள் இன்னும் அந்த பொண்ணுக்கு பயப்படுறான்னு நினைக்கிறேன். அதான் உன்னை ஏத்துக்க மாட்டேங்கிறா?
ஆனால் காலேஜ்ல யாரையோ மீட் பண்ண போறேன்னு சொன்னாலே.
அது உண்மையா இருக்காது.
நீ நடந்த எல்லாத்தையும் சொல்லு ஆருத்ரா கேட்டாள்.
எனக்கு உறுதியா தெரியுது. அவள் ஒண்ணு அவ அக்காவுக்காக பயப்படணும் இல்லை நம் வசதியை பார்த்து பயப்படணும். அவள் உன்னை விட்டு விலக தான் இவ்வாறு நடந்தது போல் தெரியுது என்றாள் ஆருத்ரா.
பார்த்துக்கோன்னா. அவசரப்படாத. கோபப்படாத. நிதானமா யோசி என்று அவள் சென்றாள்.
அவன் படுத்துக் கொண்டே சுவாதியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். சுவாதி தூங்க முடியாமல் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு, எல்லாமே சீக்கிரம் முடிய போகுது. நான் சாரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். பாவம் அவர்.
கிருஷ்ணா..அக்கா எப்படியும் விட மாட்டா. வெளியே வந்தாலும் அவள் பிரச்சனை முடியாது. சாருக்கும் அவர் குடும்பத்துக்கும் எதுவும் ஆகக் கூடாது. நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துருச்சி. நீ அவரை பார்த்துக்கோ என்று அழுதாள்.
சார்..உங்களுக்கு சாரி சொல்றதை விட என்னால் வேறு எதையும் சொல்ல முடியாது என்று மேலும் அழுதாள். அழுது கொண்டே தூங்கி விட்டாள் சுவாதி.
புத்துணர்வுடன் காலை இனிதே விடிய மறை விழித்தான். இருவரும் ஒரே போர்வையில் இருக்க ராக்கி போல் காயத்ரியும் மறை மீது சாய்ந்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகையுடன் அவளது கூந்தலை விளக்கினான். அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை நகர்த்தினான்.
விழிச்சுட்டீங்களா? குட் மார்னிங் என்று கண்ணை திறந்தாள். அவன் கண்ணை மூடி தூங்குவதை போல் நடித்தான். அவன் முத்தமிட்ட நெற்றியில் கை வைத்து பார்த்தாள். நீங்க விழிக்கலையா? என்று அவனை உற்று பார்த்தாள். அவர்கள் ஆடை சிதறி இருக்க..அவனை நிமிர்ந்து பார்த்து..கனவா? என்று அவன் முகத்தின் அருகே வந்து அவனது மீசையை வருடினாள்.
உங்கள நான் ஏன் முதல்லவே பார்க்கலை? என்று அவனிடம் கேட்டுக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டாள். அன்றே என் வாழ்க்கையில் நீங்க வந்திருந்தால் நான் இந்த அளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன். எனக்கு உங்களை பிடிச்சு தான் இருந்தது. ஆனால் ரொம்ப தயக்கமாக இருந்தது. நான் ஏற்கனவே திருமணமானவள். உங்களையும் தவறாக பேசுவாங்கன்னு தோணுச்சு. ஆனால் அன்று நடந்தது நம் வாழ்க்கை ஆரம்பிக்க காரணமாயிற்று. உங்களிடமிருந்து தவறான எந்த பேச்சும் வராம இருந்தா நல்லா இருக்கும். அதை நினைத்தால் இப்ப கூட பயமா தான் இருக்கு. மறுபடியும் பிரச்சனைன்னா என்னால தாங்க முடியாது என்று கண்ணீருடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.
இப்ப நீ எழுந்தால் என்று அவன் அவளை வருட..வெட்கத்துடன் சாய்ந்து கொண்டு அமைதியாக, நான் பேசியதை கேட்டுட்டீங்களா?
கேட்டேன். அதனால் என்ன? உனக்கு கஷ்டமான விசயத்தையும் என்னிடம் பங்கிட்டுக் கொள்ளலாம். நான் உன்னிடம் கடந்த வாழ்க்கையை இழுக்க மாட்டேன். நம்ம பையனை பற்றி மட்டும் சொல்லு என்றான்.
ம்ம்..ஆனால் இப்ப வேண்டாமே. நான் குளிச்சிட்டு வாரேனே?
வேண்டாமே என்று மறை அவளை அணைத்தான். அவள் மறையின் கண்ணை பார்த்துக் கொண்டு, நீங்க எப்பொழுதும் எங்களுடன் இருப்பீங்கல்ல..
உங்களுடன் இருக்காமல் நான் எங்கே போகப் போகிறேன்?
நான் ஏதாவது தப்பு செய்து விட்டால் என்னோட பழைய வாழ்க்கையை இழுக்கக் கூடாது.
நான் சொன்னேன்ல. இப்ப மட்டுமல்ல எப்பொழுதும் என்னோட பொண்டாட்டி நீ? உன்னுடைய கடந்த காலம் தேவையில்லாதது. இப்ப எதுக்கு இந்த பேச்சு. விடு என்று அவளுக்கு இதழணைப்பை கொடுத்தான்.
யாரிடமும் கரெண்ட் போனதை பற்றி கேட்காதீங்க?
ஏன் கேட்கக்கூடாது?
அவங்க பிளான் தான் வெற்றியடைந்து விட்டதே என்று வெட்கத்துடன் குனிந்தாள். உனக்கு அவங்க பிளான் தான்னு தெரியுமா? தெரிஞ்சு தான் ஒத்துக் கொண்டாயா?
ம்ம்..என்று புன்னகையுடன் வெட்கப்பட்டாள். மீண்டும் கூடல் நிகழ்ந்து இருவரும் தயாராகி கீழே வந்தனர்.
அர்ஜூனும், வினிதா அப்பாவும் மறை வீட்டில் சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்றனர். நண்பர்களும் உதவ முடித்து விட்டு வீட்டிற்கு வந்தனர். காயத்ரியும் மறையும் கீழே வந்தனர். எல்லாரும் அவர்களை பார்த்து புன்னகைத்தனர். இருவரும் வந்து அமர்ந்தனர். ஸ்ரீ ராக்கி அனுவை தயார் செய்து அழைத்து வந்தாள்.
சாப்பிடுங்க..என்று அழைத்து அனைவரையும் சாப்பிட வைத்தனர். பின் வினிதா அம்மாவும் அப்பாவும் காயத்ரி, மறை, ராக்கியை மறை வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டில் அனைத்து பொருட்களையும் அடுக்கி தயார் செய்து கொடுத்து விட்டு அவர்களும் வீட்டிற்கு சென்றனர்.