அத்தியாயம் 93
மதிய நேரத்தை தாண்ட, கவினும் வேலுவின் மற்ற நண்பர்களும் விழாவிற்கான வேலையை கவனிக்க சென்றனர். அர்ஜூன் பாட்டி வீட்டில் மற்ற இளைஞர்கள் இருக்க..மறையும் நான்கைந்து பேரும் பின்னே நின்றனர். தாரிகா காயத்ரியிடம் விசயத்தை சொல்ல, அவளும் பெரியத்தையும் வந்து மறையையும் ஆட்களையும் பார்த்தனர்,
சற்று நேரத்தில் புகை அதிகமாக அவ்விடம் வர, மறை அருகே இருந்த பசங்க மயக்கமானார்கள். மறையும் மற்றொருவனும் புகையை பார்த்து கைக்குட்டையால் நாசியை மறைக்க..இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மயங்கியது போல் நடித்தனர். டிரக்கிங் கயிற்றால் மேலேறிய பெரியத்தையின் இளைய மகள்..தாரிகாவை வினோதமாக பார்த்தாலும்.. அவளை பிடித்து கட்டினார். அவர் ஏறும் போதே மறை தாரிகாவிற்கு மேசேஜ் செய்திருப்பான். அவன் போனை ஆன் செய்து ஓரிடத்தில் வைத்த பின் தான் அந்த பொம்பளை தாரிகாவை பார்த்து கட்டிப் போட்டிருப்பாள்.
கெல்ப்..கெல்ப்..என்று காயத்ரி கத்த..உன்னால கத்தி ஏதும் ஆகப் போறதில்லை. முன், பின் பக்க ஆட்கள் வீட்டினுள் இருப்பவர்கள் அனைவரும் மயக்கத்தில் இருப்பார்கள்.
உன்னை அன்றே கொன்றிருந்தால் என் அண்ணனும், மருமகனும் செத்திருக்க மாட்டாங்க. நாங்க தப்பு செஞ்சிட்டோம் என்றவர் அம்மாவை பார்த்து, அம்மா..உனக்கு உன் பிள்ளையை விட இவள் முக்கியமா போய்ட்டாளா? இப்ப பாரு உன் கண்ணு முன்னாடியே இவளையும் இந்த குட்டிப்பிசாசையும் குத்திப் போடுறேன் என்று கத்தியை எடுத்தார். பெரியத்தை அவள் கையை பிடித்து தடுக்க, தாரிகா சீக்கிரம் முடிஞ்சா பண்ணு என்று கத்தினாள்
ஏய்..யாருடி நீ? தேவையில்லாமல் எங்க விசயத்துல வர்ற? நான் அர்ஜூனோட தங்கை என்றான்.
அவனோட தங்கையா? இரு உன்னையும் பதம் பார்த்து விடுகிறேன் என்று கத்தியை எடுத்து அவள் முன் வந்தார்.
அண்ணி..அந்த பொண்ண எதுவும் செஞ்சுறாதீங்க? சத்தமிட்டாள் காயத்ரி.
என்னடி சத்தம் கூடுது? காயத்ரியை பார்த்தாள்.
தாரிகா அவரை பார்த்து புன்னகைத்தாள். அவர் பின் நின்று கொண்டிருந்தான் நம் இளம்மறை.
அண்ணா..என்று தாரிகா அழைக்க, அனைவரும் அவனை பார்த்தனர். காயத்ரி அவர் அருகே இருக்க, கத்தியை அவளருகே கொண்டு செல்லும் முன் பாய்ந்து காயத்ரியை இழுத்து தன் பக்கம் வைத்துக் கொண்டான். ராக்கி, தாரிகாவும் கட்டு போட்டபடி அவனருகே இருக்க, அவர் இப்பொழுது அவர் அம்மாவிடமே திரும்பினாள் கத்தியுடன்.
வேண்டாம்மா. நான் உன்னுடைய அம்மா.
அம்மாவா? நீ சொந்த பிள்ளை, பேரனை விட்டு அவள் பக்கம் தான் நிக்குற?
ஏம்மா..உனக்கு நாங்க முக்கியமில்லையா?
எங்களுக்கு பணம் தேவைப்படுகிறதே? என்ன செய்ய சொல்ற? என்று பக்கம் வர, அத்தை..அத்தை..அத்தை..என்று காயத்ரி அழுதாள். மறையின் கவனம் முழுவதும் அவள் பேச்சிலும் அவள் வைத்திருக்கும் கத்தியிலும் இருந்தது. அவன் காயத்ரி கையை அழுத்தி பிடித்து அவளையும் ராக்கியையும் தாரிகா பக்கத்தில் விட்டு அவளை பிடித்தான். அவள் கையை திருப்பி கத்தியை அவள் கழுத்தில் வைத்தான்.
பேசுங்கம்மா..என்று மறை கத்த, அவரும் தன் பொண்ணிடம் பேசினார். அவர் எப்படி புலம்பினாரோ? அனைத்தையும் பேசினார். ஆனால் அவள் மனம் மாறுவதாக இல்லை. தீனா, அர்ஜூன், போலீஸார் அங்கு வந்து அவளை பிடித்து அழைத்து சென்றனர். பெரியத்தை காயத்ரியை கட்டிக் கொண்டு அழுதார். காயத்ரி மறையை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
யாராக இருந்தாலும் இவ்வாறு தான் செய்திருப்பேன் என்று ராக்கியை துக்கி அணைத்து விட்டு தாரிகாவை பார்த்தான். அர்ஜூன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு, தாரி நீ இப்படி ரெண்டு நாள் இரு போதும். என்னோட மச்சான் நிம்மதியாகவாது இருப்பான் என்று கேலி செய்தான். அவர்களை பார்த்துக் கொண்டே மறை அங்கிருந்து கிளம்பினான். ஒருவழியாக அனைவரையும் நீதிபதியால் தீர்ப்பெழுதப்பட்டு ஆயுள் கைதியாகினர். தீனாவிற்கு இதனால் பாராட்டும் கிடைத்தது. அவனை சென்னைக்கு மாற்ற போவதாக கூறினார்கள். அவன் மகிழ்வுடன் ஸ்டேசனுக்கு சென்றான்.
காலையிலே கேரி, ஜாஸ்மின், ஜான், பாப்பா அனைவரும் நித்தி வீட்டிற்கு வந்தனர். நித்தி தாத்தாவுடன் அமர்ந்திருந்தாள். கேசவனும் வீட்டில் இருந்தார்.
வா..வெளிய போகலாம் என்று கேரி நித்தியை அழைத்தான். ஆனால் அவள்..நான் வரமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றாள். கேசவன் நித்தியிடம்..நீ போக வேண்டாம். சாப்பிடு என்றார்.
இல்ல. நீங்க என்னை அடிச்சாவது புரிய வச்சிருக்கலாமேப்பா.. என்று அழுதாள்.
உன்னால அவளுக்கு ஒன்றுமில்லை. நானும் அவள் சென்ற பின் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கணும். அவளும் சொல்லாமல் இருந்துட்டா. அவள் சாவுக்கு நீ காரணமில்லை. நீ மறுபடியும் தப்பு செய்யாதம்மா..என்றார்.
அப்பா..என்று அவள் அணைத்து அழுதாள். அவ போயிட்டா. இனி அதை நினைத்து உன் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதே..
எப்படிப்பா?
நான் உயிரோட இருக்கணும்ன்னா? உன்னை என் பழைய நித்தியா இருக்கணும்மா
அப்பா..அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா. நான் நாளைக்கு வெளியே செல்கிறேன். இன்று மட்டும் என்னை விடுங்கள் என்று கேரியை பார்த்து அனிகா அப்பா இப்ப எப்படி இருக்கார்? என்று கேட்டாள்.
தெரியலம்மா..இரு பேசிட்டு சொல்றேன் என்று கேரி வெளியேற, ஜாஸ்மின் அவன் பின் சென்று, நாங்க கிளம்பணும் என்றாள்.
எங்க கிளம்பணும்?
எங்கையா? யூ.எஸ்.ஏ போகணும்.
அதெல்லாம் வேண்டாம். இங்கேயே இரு.
நான் எதுக்கு இருக்கணும்?
சொல்றேன்ல…இங்கேயே இரு. நாம போகும் போது சேர்ந்தே போகலாம் என்றான்.
எனக்கு சரியான பதில் சொல்லு. “வில் யூ மேரி மீ”? கேட்டாள்.
எங்க வச்சு என்ன சொல்ற?
உன்னால பதில் சொல்ல முடியாதுல்ல. நான் இப்பவே கிளம்புறேன்.
போகாத..என்னால பாப்பாவை தனியே சமாளிக்க முடியாது.
பாப்பாவை பார்த்துக்க நான் வேண்டுமா? நீ தான் ஆளை அழைத்து வந்துருக்கேல. பாப்பாவை பார்த்துக்கச் சொல்லு. நான் கிளம்புகிறேன் என்று ஜாஸ்மின் வீட்டிற்கு நடந்தாள். ஜானும் அவள் பின்னே செல்ல.
நீ எனக்கு ப்ரெண்டா? அவளுக்கு ப்ரெண்டா? என்று கேரி அவனை நிறுத்தினான்.
உனக்கு ப்ரெண்டு தான். அவ ஒத்துக்கிட்டா. நான் அவளை மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்..
“வாட் ஆர் யூ டாக்கிங்க்”?
உன்னால தான் அவளை ஏத்துக்க முடியாதுல்ல..என்று ஓடி சென்று ஜான் ஜாஸ்மின் கையை பிடித்து நிறுத்தினான். அவன் பேசுவதற்குள்.. அவர்களிடம் வந்த கேரி அவனது கையை தட்டி விட்டு ஜாஸ்மின் கையை அவன் பிடித்தான்.
விடுடா அவளை.. என்று கேரியை ஜான் பிடித்து இழுக்க, இருவருக்கும் சண்டை ஆரம்பிக்க, நிறுத்துங்கடா..ஜான் நீ உன்னோட பிரச்சனை முடிச்சிட்டு எப்ப வரணுமோ வா. நான் இப்பவே கிளம்புகிறேன் என்று அவள் வேகமாக நடந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அவளிடம் ஓடிச் சென்றனர்.
நீ தனியே போக வேண்டாம். நானும் வாரேன் ஜான் அவள் கையை பிடிக்க, நீ எங்கும் போகக்கூடாது என்று கேரி அவள் கையை பிடித்தான்.
எந்த உரிமையில நீ என்னை இங்கே இருக்க சொல்ற? என்னோட அக்காவோட ஹப்பியா நினைச்சா நான் இங்க இருக்க முடியாது. சொல்லு…என்று கேரியை பார்த்தாள் ஜாஸ்மின்.
கேரி ஜானின் கையை எடுத்து விட்டு, அவன் புறம் அவளை திருப்பியவன்.. அவளை அணைத்துக் கொண்டு பாப்பாவுக்கு மம்மியாவும், எனக்கு வொய்ஃபாகவும் இரு என்றான். அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
உனக்கு என்னை பிடிச்சிருக்கா? காதல் இருக்கா? கேட்டாள்.
எனக்கு தெரியல..ஆனால் நீ எப்பொழுதும் என் பக்கத்திலே இருக்கணும்ன்னு தோணுது என்றான் அவனும் கண்ணீருடன்.
நீ காதலை சொன்னால் கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவரை எப்பொழுது போல் இருக்கலாம் என்று அவனை நகர்த்தினாள்.
நாம் இங்கிருந்து செல்லும் வரை மட்டும் நேரம் தருகிறாயா? என்று கேரி கேட்டான்.
ம்ம்..என்றாள். நீ நித்தியுடன் இரு. நான் சைலுக்கு போன் செய்துட்டு வாரேன் என்று அங்கேயே நின்றான்.
சைலேஷ், மாதவ், சந்துரூ, கைரவ், அனிகா ஹாஸ்பிட்டலில் அனிகா அப்பாவை கவனித்துக் கொண்டிருந்தனர். அவருக்கு ஓரளவு சரியாகி இருந்தது.
சைலேஷ் அவரிடம்..நீங்களும் எங்களுடன் ஊருக்கு வாங்க. ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு போங்க.
நல்ல வேலையாக அவர்கள் எடுத்த அனைத்தையும் கீழே போட்டுட்டு கிளம்பினார்கள். அதை எடுத்து வைத்தாச்சு. அதன் மூலம் நீங்க கிளம்பலாம்.
அனிகாவிற்கு அவள் அப்பாவை பற்றி தெரிந்ததும் அனைத்தையும் மறந்து அவருடன் நன்றாக பேசினாள். அப்பா..நீங்க கண்டிப்பா போகணுமா?
ஆமாம்மா. போகணும். இல்லை நம் அனைவரையும் சும்மா விட மாட்டானுக என்றார்.
சார்..உங்க வொய்ஃப் கொலையானதை என் நண்பன் தான் விசாரிக்கிறான். அவனுக்கு உதவி அவங்க எல்லாரையும் உள்ள தள்ளிடுறேன்.
பார்த்து செய்யுங்க. அவங்க ரொம்ப மோசமானவங்க. அதான் வேலனிடம் உதவி கேட்டேன். ஆனால் அவனும் என் பொண்டாட்டியை போல் போயிடுவான்னு நினைக்கலை என்று அழுதார்.
அப்பா..போதும். இதுக்கு மேல் எதுவும் பேசாதீங்க..என்றாள் அனிகா.
மாலையில் கோட்டையூருக்கே சென்று விடலாம் சைலேஷ் கூற, அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
பவி குடும்பமும் அவளுடன் இருக்க..பவி மூலமாக நடக்கும் அனைத்தையும் அறிந்து கொண்டாள் நித்தி.
பளிச்சென ஆரஞ்சு நிற கற்றையுடன் மாலை நேரத்து செங்கதிரோன் மறைய தொடங்க, சைலேஷ் அனிகா அப்பாவுடம் ஊருக்கு வந்தான். அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து அனிகா, கைரவை விட்டு நித்தி, கேசவன், தாத்தாவை காண வந்தான்.
சைலேஷை பார்த்த நித்தி எழுந்து அவனிடம் ஓடி அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அமைதியாக அவளை அணைத்துக் கொள்ள.. கேசவன் அவனிடம் வந்தார். வீட்டினுள் விளக்கேற்றி நித்தி அம்மாவிற்காக சாமி கும்பிட்டிருப்பார்கள். கேசவனை பார்த்து விட்டு அவ்விடம் நோக்கி சென்று அவன் சாமி கும்பிட்டு நித்தி அப்பாவுக்கும் தாத்தாவிற்கும் இடையே வந்து அமர்ந்தான். அப்பொழுது அர்ஜூன் பாட்டி வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். காயத்ரியும் அவள் பெரியத்தையையும் அழைத்து வந்திருந்தான் அர்ஜூன்.
சைலேஷை பார்த்து விட்டு, கைரவை பற்றி கேட்டான். சைலேஷ் நடந்ததை கூற, அர்ஜூனும் அவன் வீட்டில் நடந்ததை சொன்னான். சந்துரூ சைலேஷை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க, மாதவ் யாசுவை பார்க்க சென்றான்.
அவர்கள் அனைவரிடமும் பேசிய சைலேஷ் சந்துரூவிடம் வந்தான். அவர்களிடம் அர்ஜூனும் வந்து அமர்ந்தான்.
சைலு..நான் கிளம்புகிறேன். அமைச்சரை பேக் பண்ற வரை எனக்கு நிம்மதி இருக்காதுடா..யாழியை வேற விட்டுட்டு வந்துருக்கேன். இதுவே அதிகமான நேரம். சீக்கிரம் போகணும்டா..சந்துரூ கூற,
தனியே செல்லாதே..மாதவுடன் செல்லு என்று சைலேஷ் அவன் எங்கடா?
அவன் அவனோட ஆள பாக்க போயிருக்கான் என்று கூற, அர்ஜூன் அவர்களிடம், அக்காவிடம் முன்னேற்றம் தெரியுதா?
இல்ல அர்ஜூன். அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
சார். எதுக்கும் காலம் வரும். அவங்க மறைச்சு வச்சிருக்கிறது கூட நல்லது தான். நீங்க சீக்கிரம் கிளம்புங்க.
என்ன? அதுக்குள்ள கிளம்பணுமா? தாரிகா அம்மா வந்தார்.
ஆன்ட்டி..என்று சந்துரூ எழுந்தான்.
அம்மா..அவங்களுக்கு வேலை இருக்கும் என்றான் அர்ஜூன்.
நான் அவரிடம் கேட்டால் நீ என்னடா பதில் சொல்ற?
நான் சொல்லக்கூடாதா?
சொல்லக்கூடாது என்று சந்துரூவிடம் ஒரு கவரை கொடுத்தார்.
என்னது ஆன்ட்டி?
பிரிச்சு பாருங்க என்றார்.
அதில் பெண்களின் புகைப்படங்கள் இருந்தது. சந்துரூ அர்ஜூனிடம் காட்டினான்.
அம்மா..என்னது இது?
ஏன்டா, உனக்கு தெரியலையா? பொண்ணுங்க புகைப்படம். இதை நீ செஞ்சிருக்கணும்?
நானா?
காயத்ரிக்கு மட்டும் பாக்குற? உன்னோட அக்கா யாரிடமும் பேசவே மாட்டா. இன்பாவுக்கு பின் இவர் தான்னா…ரொம்ப பிடிச்சதால தான் அவருடன் இந்த அளவு பழகி இருக்காள். நான் தான் புரியாமல் தப்பா நினைச்சுகிட்டு இருந்துருக்கேன். இவர் தனியே கஷ்டப்படுவதை பார்த்தால் அவளுக்கு கஷ்டமாக இருக்கும்ல..அதான் நானே புரோக்கரிடம் பொண்ணு புகைப்படத்தை வாங்கினேன்.
மாப்பிள்ள நீ சொல்லுப்பா..எந்த பொண்ணு பிடிக்குதோ? சொல்லு..என்றார் ஆர்வமுடன்.
ஆன்ட்டி, என்னால யாழுவை விட யாரையும் நினைக்கவே முடியாது.
அதுக்கு தனியாகவே இருப்பதா?
இல்ல ஆன்ட்டி. எனக்கு கொஞ்ச வருசம் டைம் தாங்களேன்.
வருசமா? தாரிகா அம்மா கேட்டார்.
உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த நித்தி அவர்களிடம் வந்தாள். ஆன்ட்டி..நீங்க தான உங்க பொண்ணுக்கு இவரை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க? இவருக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிக்கலாமே? அண்ணாவுக்கு கொஞ்சம் நேரம் தரலாமே? என்று கேட்டாள்.
ஆமாம்மா. நித்தி சொல்றது சரி தான் அர்ஜூன் ஒத்து ஓத, ஏன்டா வருச கணக்காகவா நேரம் கேட்பீங்க? என்று சந்துரூவை பார்த்தான்.
ஆன்ட்டி..நீங்க அங்கிளுக்காக வெயிட் பண்ணது போல இருக்கட்டுமே?
சரி..அடுத்த வருசம் இதே நாள்ல பொண்ணை காட்டிருங்க என்றார்.
அவனும் சரி என்றான். சந்துரூவிற்கு போன் ஒலிக்க அவன் எடுத்து பேசினான். முகம் மலர..உண்மையிலே தான் சொல்றீங்களா அம்மா?
ஆமாம்பா..என்றார்.
அம்மா..இப்பொழுதே வாரேன் என்று ஆன்ட்டி ரொம்ப முக்கியமான விசயம் வாரேன் என்று ஓடினான் சந்துரூ.
எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காயத்ரி ஜாஸ்மின் அருகே அமர்ந்து பாப்பாவை தூக்கினாள். ராக்கி அழுதான்.
குட்டி பாப்பா டா ராக்கிம்மா..இங்க பாரு என்று பாப்பாவை கிச்சு கிச்சு மூட்டி பாப்பாவையும், ராக்கி, அனுவையும் சிரிக்க வைத்தாள் காயத்ரி. அவளுக்கு மறையை பிடித்திருந்தாலும் கல்யாண வாழ்வை பார்த்து பயந்தாள். இது புரியாமல் பெரியத்தை மறை பற்றியே அவளிடம் கேட்க, அவளுக்கு பயம் வந்தது.
அர்ஜூன்..வினியோட அம்மா, அப்பா ஊருக்கு போயிட்டாங்களா? காயத்ரி கேட்டாள்.
ஆமாக்கா..ஆனால் நாளைக்கு வந்துருவாங்க. ஹாஸ்பிட்டல்ல கூட உங்கள பார்த்துகிட்டு அன்று இரவு முழுவதும் உங்களுடன் தான் இருந்தாங்க. காலையில தான் வந்து ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னாங்க. அவங்களுடன் ஆட்கள் இருவரை துணைக்கு அனுப்பி இருக்கேன் என்றான்.
ஆமா தாரி, ஸ்ரீ எங்க?
அவள் அகில் சீனியர் தம்பிய பார்க்க போயிருக்கா என்றாள்.
துருவனை எப்படி ஸ்ரீக்கு தெரியும்?
அதான் சீனியர் அவனை பற்றி ஏற்கனவே சொன்னாரே?
கவினா?
ம்ம்..என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
ஆமா..அவன் அக்கா நிச்சயத்துக்கு யாரும் போகலையா? நித்தி கேட்டாள்.
சீனியர், உங்களுக்காக நாங்க இல்லாம யார் இருப்பா? தாரிகா கேட்க, அர்ஜூன் சந்தேகமாக அவளை பார்த்து, ஏதும் திட்டம் வச்சுருக்கியா?
நானா? திட்டமா? என்று கேட்டுக் கொண்டே அர்ஜூன் அருகே வந்த தாரிகா, உன் மேல பிராமிஸ் அண்ணா..நான் எந்த திட்டமும் போடலை என்றாள்.
கையை எடு. எனக்கு உன் பேச்சே சரியில்லாமல் இருக்கே. நிவி எங்கே?
கவின் சீனியர் குடும்பத்துக்கு பதிலா நம்ம குடும்பம் இங்க இருக்கோம். ஸ்ரீக்கு பதிலா நிவி சீனியர் அக்கா விழாவிற்கு போயிருக்கான்.
காயத்ரியை பார்த்து, உங்க அத்தை எங்க? என்று கேட்டான் அர்ஜூன்.
இங்க தான் இருப்பாங்கடா.
அபி அர்ஜூனிடம் தானாகவே அம்மா, அப்பா வேலு அண்ணா விழாவிற்கு போயிருக்காங்க என சொல்லிக் கொண்டிருக்க, பிரதீப் தன் குடும்பத்துடன் அங்கே வந்தான்.
கமலி லலிதாவை பார்த்து அவரிடம் செல்ல, விசாலாட்சி வெற்றியை அழைத்து அவர் பக்கம் அமர செய்தார். கேசவனை பார்த்து அவரிடம் சொன்னார். மீனாட்சி, ஜானு, துகிரா, புவனா நித்தியிடம் வந்தனர்.
பிரதீப், ஆதேஷ், தீனா, சைலேஷிடம் வந்து அமர்ந்தனர். தாரிகா பவி அருகே அமர்ந்தாள். ஜானு மட்டும் தாரிகாவை பார்த்து அக்கா..என்று அவளிடம் வந்தாள்.
ஜானுவிற்கு அவளின் வளர்ப்பு அப்பாவுக்கும், மீனாட்சிக்கும் நடந்த விபத்தில் ஸ்ரீ முகம் தெரிந்தது நினைவிற்கு வந்தது.
அர்ஜூன் பாட்டியிடம் வந்து, கிழவி உனக்கு ஸ்ரீ அக்காவை நல்லா தெரியும்ல..இது அக்கா தான என்று புகைப்படத்தை காட்டி தேதியுடன் கேட்டாள். அர்ஜூனும் மற்றவர்களும் வந்து பார்க்க, பவி குடும்பம் பயத்துடன் அந்த புகைப்படத்தை பார்த்தது. அது பவி என்று அர்ஜூனுக்கும் தெரியுமே?
வேற யாராவது இருப்பாங்க ஜானு. அன்று அவளுக்கு பிறந்தநாள் ஜானு. அவள் என்று யோசித்த அர்ஜூன்.. காலையில் நடந்ததா? மாலையில் நடந்ததா?
காலை தான்.
நாங்க பள்ளியில் இருந்தோம் என்றான்.
அண்ணா..இதெல்லாம் ஓவர் ஜானு சொல்ல.. என்னோட வீட்டுக்கு வா..உனக்கே தெரியும் அர்ஜூன் கூற, அவள் பிரதீப்பை பார்த்தாள்.
சும்மா தான் அர்ஜூன் கேட்டிருப்பா என்று அவன் கூற, இப்பேச்சு முடிந்தது. ஆனால் தீனா, பிரதீப் சந்தேகமுடன் அர்ஜூனை பார்க்க, நித்தி பவியை பார்ப்பதும், பவியின் பயமும் புவனா வெற்றியை யோசிக்க வைத்தது.
அண்ணா..மேம் எப்படி இருக்காங்க? அர்ஜூனிடம் ஆதேஷ் கேட்டான்.
பிரச்சனையில அவங்கள பார்க்கவே முடியலை. நாளைக்கு வருவாங்க பார்க்கணும்.
தருண் சீனியர் வீட்ல இருக்காங்களா? தாரிகா கேட்டாள்.
ஆமா..அவங்க குடும்பமே அங்க இருக்காங்க என்று புவனாவை பார்த்தான் அர்ஜூன்.
தீனாவை பார்த்து, வாழ்த்துக்கள் அண்ணா. நீங்க சென்னைக்கு வரப்போறீங்க போல?
ஆமாம் என்றான் சுருக்கமாக.
இந்த வேலு பயனை காரணமா வச்சு மத்தவனுகளும் ஓடிட்டானுக. இரவு குதிரைக்கு சாப்பிட யார் கொடுப்பாங்க? விசாலாட்சி புலம்ப,
அங்கிருந்த இளைஞன் ஒருவன், பாட்டி என்ன பேசுற? ப்ரெண்டுன்னா சும்மாவா?
நம்ம மறை அண்ணா அவருக்கு ஏதாவது வாங்கி பார்த்துருக்க, மாலையில் வேலு அண்ணா, அந்த பொண்ணு, நம்ம கவின் பயனை கூட்டிட்டு போய்..நிச்சயத்துக்கு ஆடை வாங்கி கொடுத்திருக்காரு.
டேய்..என்ன தான் ப்ரெண்டா இருந்தாலும் சொந்தமாக முடியாதுல டா மற்றொருவன் கூறினான்.
சொந்தத்தை மீறியதுடா ப்ரெண்ஷிப்.
அண்ணா..நீங்களும் அய்யாவும் வர முடியாதுன்னு தான் வேலு அண்ணா வருத்தப்பட்டாங்க என்று பிரதீப், வெற்றியை பார்த்தான் ஒருவன்.
டேய்..இப்ப அவனுக்கு கல்யாணம் நடக்க வேண்டியது. அய்யாவுக்காக தான் திருமணத்தையே ஒரு மாசத்துக்கு பின் மாத்தி வச்சிருக்கான் என்று மற்றொருவன் சொல்ல..
எங்களுக்காக எல்லாரும் அண்ணாவுக்கான விழாவுக்கு செல்லாமல் இருக்க வேண்டாம் நித்தி கூற,
ஏம்மா இப்படி பேசுற? எங்களால விழாவுக்கு போகலாம் முடியாது வெற்றி கூற, அவள் அர்ஜூனை பார்த்தாள்.
நித்தி..அக்கா என்றான் அவன்.
சரி..வாங்க சாப்பிடலாம் என்று கேசவன் சொல்ல..அனைவரும் எழுந்தனர்.
ஏழுமணியாக வேலு கிரேப் சர்வானியுடனும், அகல்யா கிரேப் நிற லெஹங்காவில் அழகு பதுமையாய் முக, உதட்டு சாயத்துடன் வந்தாள். வேலு கண்ணெடுக்காமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, நண்பர்கள் ஆரவாரத்துடன் இருந்தனர்.
கவின் அம்மா வீட்டு சொந்தங்கள், புகுந்த வீட்டு சொந்தங்கள், ப்ரெண்ட்ஸ், ஊர்க்காரர்கள் அனைவரும் முருகன் கோவிலில் குழுமி இருக்க, மாமன்மார்கள் சந்தனம், மாலை தட்டை மாற்றினர். பின் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயத்தை உறுதி செய்ய..பட்டாசுடன் கொண்டாடினர் நண்பர்கள். பின் அனைவரும் மண்டபத்திற்கு வந்தனர். அனைவரும் அவர்களுக்கு ஆசி வழங்க,..பந்தி ஆரம்பித்தது. மறை, அவன் நண்பர்கள் மற்றும் ஊர்க்கார பசங்க அனைவரும் பந்தி வேலையில் கலந்து கொள்ள..அனைத்தும் நல்லபடியாக நடந்தது.
நித்தி வீட்டிலிருந்து மற்றவர்கள் கிளம்ப, அர்ஜூன் நான் எனக்கு தேவையான பொருட்கள் வாங்கணும். சூப்பர் மார்கெட் இங்க இருக்காம். என்னை அங்கே அழைத்து செல்கிறாயா? காயத்ரி கேட்டாள்.
இப்பொழுதே வாங்கணுமா?
அவள் தயங்கிக் கொண்டு இப்பொழுதே வேண்டும் என்றாள்.
சரிக்கா போகலாம் என்றான் அர்ஜூன்.
அர்ஜூன்..வீட்டுக்கு போகலாமா? என்று அனு கேட்க, ராக்கியும், பெரியத்தையும் மற்றவர்களும் வந்தனர்.
அர்ஜூன்..எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு. ஆனால் சோர்வா இருக்கு வாங்கிட்டு வர்றியா? ஸ்ரீ கேட்க, அபியை பார்த்து, எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ. அனு..நீயும் போ என்று அவளையும் அனுப்பி விட்டு ராக்கியை தூக்கினான்.
காயத்ரி பெரியத்தையிடம் காரணத்தை சொல்ல..பார்த்து போயிட்டு வாம்மா என்று அவரும் அவர்களுடன் சென்றார்.
அர்ஜூன், ராக்கி, காயத்ரி மூவரும் ஷாப்பை அடைந்தனர். அர்ஜூனுக்கு போன் வந்தது. தள்ளி நின்று பேசுகிறேன்னு அவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான். காயத்ரி வாங்கி விட்டு ராக்கியை தூக்கிக் கொண்டு எல்லா பக்கமும் அர்ஜூனை தேடினாள். பின் வெளியே சென்று பார்த்தாள். அங்கும் அர்ஜூன் இல்லாமல் இருக்க, ராக்கியுடன் தனியே நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னே இளைஞன் ஒருவன் அவளை உரசுவது போல் வந்தான்.
யாரு வேணும் உங்களுக்கு? நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை என்றாள்.
பரவாயில்லை. நீ எப்படி வேண்டுமானாலும் இரு என்று அவன் அவளது தோளை பற்ற, ராக்கி அவன் கையை கடித்தான்.
ஏய்..பொடிப்பயலே..என்னையே கடிக்கிறியா? என்று காயத்ரியிடமிருந்து ராக்கியை பிடுங்கி தூக்கி எறிந்தான். ராக்கிக்கு அடிபட்டு, அம்மா..அம்மா.. அம்மா..என்று கத்தினான்.
காயத்ரி ராக்கியிடம் ஓடி வர, அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவள் பயத்தில் கத்தினாள். கெல்ப்..கெல்ப்..என்று அவள் கத்த, அவள் வாயை அவன் மூட, அவன் கையில் கடித்த காயத்ரி தன் மகனை நோக்கி ஓட, பல்லை கடித்து பொறுத்த அவன் பின்னாலே வந்து அவளை தூக்கி தோளில் போட்டான். பின் பள்ளமிருக்கும் பகுதியில் அவன் அவளை தூக்கிச் சென்றான். அவள் விடுடா..என்னை விடு. நான் என் ராக்கியை பார்க்கணும் என்று அழுது கொண்டே அவனை அடித்தாள்.
மண்டபத்தை தள்ளி இருந்த பகுதியில் தான் காயத்ரியை தூக்கி வந்திருப்பான் அவன். ராக்கி சத்தம் கேட்டு அங்கே வந்த வேலு நண்பனின் ஒருவன்.
டேய்..மற இங்க வந்து பாரு என கத்திக் கொண்டே ராக்கியிடம் வந்தான். வேலுவும் மற்றவர்களும் மறையின் பின் வந்தனர்.
ராக்கியிடம் வேலு நண்பன் பேச ராக்கி அழுது கொண்டே இருந்தான். மறை ராக்கியை பார்த்து பதறி அவனை வந்து தூக்கினான். ராக்கியின் கை, கால்களில் சிராய்ப்பை பார்த்து பதட்டத்தை குறைத்து,
ஸ்டார் இங்க என்ன பண்றீங்க?
ப்ரெண்டு..அம்மா..அம்மா..அம்மா..என்று அவன் அழுது கொண்டே அவன் அவளை தூக்கி சென்ற திசையை கை காட்டினான்.
மறையும் நண்பர்களும் அங்கு செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். அவளது கெல்ப் சத்தம் கேட்டு மறை அவ்விடம் ஓடினான். அர்ஜூன் அப்பொழுது தான் அங்கு வந்தான். இவர்கள் பின் அவனும் வந்தான்.
காயத்ரியை தூக்கி வந்த அவளை கீழே போட்டு தவறாக நடந்து கொள்ள அருகே வந்தான். அவளுக்கு இவன் முகமும் கணவனின் முகமும் மாறி மாறி வந்தது. பயம், பதட்டத்துடன் பார்த்த அவளுக்கு படபடப்பு தொற்ற மயங்கினாள்.
அவன் பயந்து அவளது நாசி துவாரத்தில் கையை வைத்து பார்த்தான். பின் அவளது மார்பில் இதயத்துடிப்பு கேட்கிறதா? என்று அவன் காதை வைத்து கேட்க, மறை அவனை பின்னிருந்து உதைத்தான். அவன் முன்னோக்கி விழ அவனுக்கு அடிப்பட்டது.
அவளை பார்த்த மறை அவனை விடுத்து காயத்ரியிடம் வந்தான். அவள் மயங்கி இருப்பதை பார்த்து கண்ணீர் தேங்கிய நிலையில் அவளை தூக்கினான். அவளுடைய போனிடைல் லூஸாக..அதை கவின் அம்மா சரி செய்து விட்டார். அவள் வியர்த்து வழிந்து இருந்தாள்.
அர்ஜூன் அவளை பார்த்து பதறி வந்தான். நீ தான் வெளிய அழைச்சிட்டு வந்தியா? மறை சத்தமிட்டான்.
அண்ணா..போன் வந்தது. பேசிட்டு வந்து பார்த்தால் அக்காவை காணோம். அதான் தேடினேன். இங்கே வந்தேன்.
ஹாஸ்பிட்டல் போகலாம் அர்ஜூன் சொல்ல..இல்ல வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. பயந்திருப்பான்னு நினைக்கிறேன் என்று சிதறிக் கிடந்த அவள் வாங்கிய பொருட்களை எடுத்து அர்ஜூன் கையில் அபி அம்மா கொடுத்தார்.
சீக்கிரம் கூட்டுட்டு போங்க என்றார். அர்ஜூன் பைக்கை எடுக்க மறை காயத்ரியை கையில் ஏந்தியவாறே அமர இருய்யா,..என்று ஒரு பாட்டி அவள் மீது தண்ணீரை தெளிக்க காயத்ரி எழுந்தாள். அவள் உச்சரித்த பெயர் ராக்கி.
பின் மறை அவளை பைக்கில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தான். ராக்கி என்று அவள் கேட்க, அவள் பிள்ளையை காட்டினர். அவன் வேலுவிடம் இருந்தான். பின் தான் மறையை பார்த்தாள்.
அவன் ப்ளூ நிற கோர்ட்டும் அதற்கேற்ற சட்டை பேண்டுடன் இருந்தான். அவனை பார்த்து அவள் பயப்பட அவன் அவளை பைக்கில் அமர வைத்து, அர்ஜூன் பார்த்துப்போ. கவனமா இரு என்றான்.
அண்ணா..நீங்களும் வாங்க என்றான் அர்ஜூன். நான் பின்னே வருகிறேன் என்று நண்பனிடம் பைக்கை வாங்கி வேலு பைக்கை ஓட்ட, மறை ராக்கியுடன் அமர்ந்தான். அவளுக்கு இப்பொழுது தான் நடந்தது நினைவு வர..அர்ஜூன் நில்லு என்று மூச்சு வாங்கினாள்.
அக்கா..ஒன்றுமில்லையே?
இல்லடா..மயக்கமா இருக்கு என்றாள். அங்கிருந்த ஒரு பொண்ணு காயத்ரி உதவிக்கு ஏறினாள். அவளை தாங்கியவாறு அந்த பொண்ணு வர, மற்றவர்கள் கலைந்தனர். ஆனால் வேலுவின் நண்பர்கள் அவனை ஏறி மிதித்து அவனை ஒருவழி செய்தனர்.
டேய், இளம்மற..என்னை எல்லார் முன்னும் அசிங்கப்படுத்திட்டேல. அந்த பொண்ணை வச்சே உனக்கு கெட்ட பேரு வாங்கி தாரேன் என்று அவனுக்குள் அவனே சூளுரைத்துக் கொண்டான்.
வண்டியில் பாதி வழியிலே காயத்ரி மயங்கி பின்னிருந்து பொண்ணு மேலே சாய்ந்தாள். அந்த பொண்ணு சீக்கிரம் போங்க என்று கூற வீட்டிற்கு வந்தனர்.
ஸ்ரீ வெளியே அமர்ந்திருந்தாள். அர்ஜூனை பார்த்து.. அர்ஜூன்..ஐஸ்கிரீம் என்று அவனிடம் வந்து, காயத்ரியை பார்த்து,
அக்காவுக்கு என்னாச்சுடா? பதறினாள். வேலு வண்டியிலிருந்து இறங்கிய மறை ராக்கியை ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு நீ இறங்கும்மா. அவங்கள நான் பிடிச்சுக்கிறேன் என்று அந்த பொண்ணு இறங்கிய பின் காயத்ரியை தூக்கி உள்ளே அவளறைக்கு அழைத்து செல்ல..அனைவரும் என்னாச்சு? என்று அவளிடம் வந்தனர்.
பெரியத்தை பதறி மறையிடம் கேட்டுக் கொண்டே வர, அவன் பதிலேதும் சொல்லாமல் அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.
என்னடாச்சும்மா? எழுந்திருடா காயூம்மா…என்று அவர் அழுதார்.
மறை தண்ணீரை எடுத்து அவள் மீது அடித்துக் கொண்டிருக்க, என்னடா பண்ற? அவனை பெரியத்தை தள்ளி விட்டார். அவள் மெதுவாக விழிக்க நீரை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவனை ஒரு நிமிடம் பார்த்து விட்டு,..தண்ணீரை வாங்கி அருந்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
அமைதியாக இருந்த மறை திட்ட ஆரம்பித்தான். அர்ஜூனுடன் போனா அவன் வரும் வரை காத்திருக்க முடியாதா? தனியா பையனோட எதுக்கு வெளிய வந்தீங்க?
வெளிய வந்தா போன் எடுத்துட்டு வர்ற பழக்கமேயில்லையா? அவன் திட்டிக் கொண்டே சென்றான்.
எதுக்குப்பா இப்ப திட்ற?
இவங்க செஞ்சதுக்கு கொஞ்ச சொல்றீங்களா? பையனுக்கும் அடிபட்டிருக்கு. அப்படி என்ன அவசரம்?
அண்ணா..என்று ஸ்ரீ அர்ஜூன் கொடுத்த பையுடன் உள்ளே வந்தாள். அர்ஜூன் ராக்கிக்கு மருந்து போட்டு விட, கேரி பாப்பாவுடன் அனு ராக்கிக்கு விளையாட்டு காட்டியும் பையன் அழுது கொண்டிருந்தான்.
அர்ஜூன் அவனை குதிரையிடம் அழைத்து சென்றான். தருணும் விசயம் கேள்விப்பட்டு அங்கே வந்தான்.
அண்ணா…வெளிய போங்க ஸ்ரீ கூற, உங்க அக்காவை திட்டக் கூடாதோ?
உங்களுக்கு திட்டணும்ன்னா..காத்திருங்க. அவங்க வெளிய வந்த பின் திட்டுங்க. பொண்ணுங்களால் சில விசயங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த காரணத்திற்காக தான் அக்கா வீட்டிற்கு வேகமா வர நினைச்சிருக்காங்க. அவன் புரியாமல் விழித்தான்.
அண்ணா..அக்காவுக்கு மென்சஸ் டைம். வெளிய போறீங்களா? ஸ்ரீ சத்தமிட்டாள்.
காயத்ரி அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்து விட்டு வெளியே சென்றான். ஸ்ரீயும் பெரியம்மாவும் உதவ குளித்து ஆடை மாற்றி விட்டு..மீண்டும் வந்து படுத்த காயத்ரி.. ராக்கியை கேட்டாள்.