அத்தியாயம் 84
ஜாஸ்மினை பிளைட் ஏற்றி விட சென்ற கேரிக்கு இன்பாவை பற்றி மாதவ் கூற, பாப்பாவை ஜாஸ்மினிடம் கொடுத்து விட்டு..அவர்களையும் அழைத்து நேராக ஸ்டேசன் சென்று கேரியும் மாதவும் விக்னேஷ், கிஷோரை பிரட்டி எடுத்தனர்.
டேய்..அவன் செத்து போயிடாமல் மாதவ் கூற, கேரி அவர்களை விடுத்து.. இன்பாவை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தனர். ஜாஸ்மினும் ஜானும் கேரியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்பா அறைக்கு மூவரும் நுழைய..பாப்பாவுடன் ஜாஸ்மீனும் ஜானும் நித்தியை பார்த்து விட்டு இன்பாவை பார்க்க சென்றனர்.
பிரின்சஸ்..இங்க பாரு, க்ரி..பாரு பிரின்சஸ் என்று அழுதான். அபி அருகே அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்த சந்துரு, உனக்கு ஒன்றுமில்லையே?
இல்லண்ணா..என்று கண்கலங்கினான். வேறெதுவும் பேச முடியாமல் எழுந்தான் அபி.
டாக்டர், என்ன சொன்னாங்க?
அதிர்ச்சியால் தான் இப்படி இருக்காங்களாம். அவங்களுக்கு மருந்து போட்டிருங்காங்க. அதான் தூங்குறாங்க. எழுந்ததும் சரியாகிடுமாம். கேரி அவனை நிறுத்தி அணைத்துக் கொண்டான்.
அனிகாவிற்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் வெளியே அர்ஜூன் அருகே வந்து அமர்ந்தாள். தாத்தா அவளிடம் வந்தார். உனக்கு அம்மா நினைவு வந்திருச்சா?
அவள் அழுதாள்.
ஆன்ட்டி..எதுக்கு அழுறீங்க? அனு கேட்டாள். அர்ஜூன் அனிகாவை பார்த்தான்.
நான் அழலடா என்று கண்ணை துடைத்து விட்டு அர்ஜூனை பார்த்தாள். அனிகா அனுவை வைத்துக் கொண்டு அமர்ந்தாள். அனு அவள் கண்ணீரை துடைத்து விட அவளை அணைத்தாள் அனிகா. கைரவ் அங்கு வர, அவனை பார்த்து அவனிடம் சென்றாள் அனு.
நாம வெளிய போகலாமா? என்று அனுவை வெளியே அழைத்து சென்றான்.
வெளியே வந்த கேரி ஓரிடத்தில் அமர்ந்தான். ஜாஸ்மின் பாப்பாவுடன் அவனருகே அமர அவளது தோளில் சாய்ந்து கொண்டான்.
ஆம்புலன்ஸ் வர வைத்து..நித்தி அம்மாவை ஏற்ற..அதில் நித்தியும் அவள் அப்பாவும் ஏறினர். மற்றவர்களும் கிளம்ப..கேரி இன்பாவை அழைத்து வருவதாகவும், மாதவ் யாசுவை அழைத்து வருவதாக கூற, அவர்கள் குடும்பத்தை தவிர அனைவரும் ஊருக்கு கிளம்பினர். சைலேஷ் நித்தி மோதிரம் மாற்றியது பகிரப்பட்டது.
வேலுவின் நண்பனிடமிருந்து ராக்கியை வாங்கிய இதயா அம்மா..அவனுக்கு சாப்பிட இட்லி வாங்கி ஊட்டி விட்டார். இதயாவும் அம்மாவுடன் இருந்தார்.
சாரி அண்ணா. நானும் உடன் இருந்திருக்கணும் தருண் மறையிடம் சொல்ல..அதெல்லாம் ஒன்றுமில்லை புவனாவை தனியே விட்டுட்டு வந்திருக்கிறாயா?
இல்லண்ணா..இன்று அவளை தீனா மாமா, அப்பத்தா இருக்க சொன்னாங்க. அதான் பாதுகாப்பு என்றும் தோன்றியது என்று சொல்லிக் கொண்டிருக்க..மறையை பார்க்க வெற்றி உள்ளே நுழைந்தார்.
ஏன்டா, எவனாது கூட இருந்திருக்கலாம்ல. அவனை தனியா விட்டுருக்கீங்க? என்று அவன் நண்பர்களை கடிந்தார்.
அய்யா, பெரிய அடியெல்லாம் இல்லை என்று அவன் எழுந்து அமர்ந்தான் மறை.
டேய்..படுத்துக்கோ. கை, கால்களில் அடிபட்டிருக்கு. நீ என்ன ஒன்றுமில்லை என்று சொல்கிறாய்? அவர் கடிந்தார்.
அய்யா..நிஜமாகவே ரொம்பலாம் அடியில்லை. அவர் வேலுவை தேடினார்.
அவன் இந்த பொண்ணோட கணவர் வீட்ல இருக்கிறவங்களுக்கு விசயத்தை சொல்லி பேச சென்றிருக்கிறான் என்று ஒருவன் கூற, மறை முகம் லேசாக மாறியது. யாரும் அதை கவனிக்கவில்லை. மேலும் காயத்ரியின் கணவனை பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“பி எம் டபியூ”வில் பயணித்துக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு வேலுவிடமிருந்து போன் வந்தது. அவங்க குடும்பம் என்ன சொன்னாங்க? அர்ஜூன் கேட்டான்.
அவங்க நம்ம ஊருக்கு வாராங்களாம்.
அவங்க எதுக்கு ஊருக்கு?
காயத்ரிக்கு நடந்தது பற்றி கூறி விட்டு, அந்த பொண்ணையும் சேர்த்து அழைத்து செல்ல போறாங்களாம். அவங்கள நம்பி விடலாமா? அர்ஜூன்.
அண்ணா..எப்ப சொன்னீங்க?
இப்ப தான். அப்படியா? அதற்குள் நாங்க வந்துருவோம் என்று நித்தி அம்மாவை பற்றி கூற, அர்ஜூன் என்ன சொல்ற?
ஆமாண்ணா..இன்னும் கொஞ்ச நேரத்தில நாங்க இருப்போம். எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யுங்க என்றான்.
ஓ.கே அர்ஜூன் என்று போனை வைத்தான். அதே நேரத்தில் இன்பா எழுந்தாள்.
அபி எழுந்து, அவளிடம் பேச..எழுந்து வெளியே வந்து பார்த்து விட்டு படுக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளை பார்த்து, கேரி ஜாஸ்மின் ஜான் வந்தனர்.
மேம்..இப்பவே ஊருக்கு கிளம்பணும். நித்தி அம்மா இறந்துட்டாங்க போகலாமா? அபி பேச, இன்பா பேசலை. ஆனால் தயாராக எழுந்தாள். அவள் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருந்தது.
பிரின்சஸ் என்று கேரி அழைத்தும் அவள் பேசவில்லை. நர்ஸிடம் கூற..மருத்துவரை அழைத்து வந்தார். அவர் அவளை பார்த்து விட்டு அவங்களுக்கு டிப்ரெசனா இருக்கும். அதனால் தான் இப்படி நடந்துக்கிறாங்க. இடமாற்றம் அவங்கள குணப்படுத்தும். எங்காவது அழைத்து போங்க என்றார் மருத்துவர். கேரியும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இன்பாவை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினார்கள். உடன் ஜாஸ்மீனும் ஜானும் வந்தனர்.
வேலு நடந்ததை கூற..வா..வேலு போகலாம் என்று வெற்றி சொல்ல, தருண் நித்தி அம்மாவா? சிந்தித்தான். தருணை அழைத்தான் அர்ஜூன்.
வெற்றியையும் மற்றவர்களையும் பார்த்து விட்டு போனை எடுத்தான் தருண். அர்ஜூன் இன்பாவிற்கு நடந்ததை கூறி, இன்பா அம்மாவையும் இதயாவையும் வீட்டில் இருக்க சொன்னான்.
அர்ஜூன் என்ன சொல்ற? இப்ப எப்படி இருக்காங்க?
பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்காங்கடா. இப்ப தான் கிளம்புறாங்க. கேரி சாரும் வாராங்க. அவங்கள வீட்டிற்கு அனுப்பு.
அபி, ஆதேஷ் ஓ.கே வா?
ஆதேஷ் பின்னே காரில் எங்களுடன் தான் வாரான். யாசு குடும்பமும், இன்பா மேம்மும் ஒண்ணா தான் வாராங்க. சொன்னதை முதல்ல செய் என்று போனை துண்டித்தான்.
தருண் கண்கலங்கி இருப்பதை பார்த்து, என்னாச்சுடா? வேலு கேட்க..அவனும் இன்பா பற்றி கூறினான். இப்ப இவங்கள அனுப்பினா..யார் பார்த்துப்பா?
இரு நான் அத்தைய வர சொல்றேன் என்று வேலு கூற, டேய்..இன்னும் கொஞ்ச நேரத்தில் நித்தி அம்மாவ கொண்டு வந்திருவாங்க. அந்த பொண்ணுக்கு துணையா அவங்க தான் துணையா இருப்பாங்க. நாமே பார்த்துக்கலாம் ஒருவன் கூற.. அங்க போக வேண்டாமா? எல்லாத்தையும் கவனிக்கணும் மற்றொருவன் கேட்டான்.
எல்லாரும் கிளம்புங்க. அர்ஜூன் அங்க வந்தா அவனை வரச் சொல்லுங்க. இப்ப தருண் நீ என்னுடன் இரு மறை கூற. வெற்றி சினமுடன் நீ ஓய்வெடு. நாங்க பார்த்துக்கிறோம்.
அய்யா..அங்க இன்னும் ஒன்றுமே ஆரம்பிக்கல. நிறைய வேலை இருக்கும். நான் இங்க இருக்க வேண்டாம்ன்னா. நானும் உங்களுடன் வாரேன் என்றான் அவன்.
நீ வர்றீயா? என்று மீண்டும் கோபப்பட்டவரை வேலு சமாதனப்படுத்தி தருணை மறையுடன் காயத்ரிக்கு துணையாக விட்டு செல்ல முடிவெடுத்தனர்.
இதயா தருணிற்கு போன் செய்து ராக்கியை மீண்டும் காணோம் என்றாள்.
ஏய்..என்று டென்சனுடன் கத்தினான் தருண்.
என்னடா?
குட்டிப்பையனை காணோமாம்.
எங்க போயிருப்பான்? மற்றவர்கள் கேட்க, வாங்க தேடலாம்..என்று அனைவரும் வாசல் அருகே செல்ல..மறையும் காலில் கட்டுடன் கீழே இறங்கினான்.
ராக்கி..இங்க என்ன பண்ற? என்று வாசலுக்கு வெளியிருந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனை தூக்கினான் தருண்.
ராக்கியா? அப்ப அந்த பொண்ணு கணவன் பெயர் இல்லையா? என்று மனதினுள் எண்ணியவாறு அவனை பார்க்க..தருணிடம் பதிலளிக்காமல் நேராக மறையிடம் வந்தான்.
சுட்டுவிரலை அசைத்து மறையை குனிய சொன்னான். அவன் குனிய..அவனது கையில் பட்டிருந்த அடியில் ஊதி விட்டு ரொம்ப வலிக்குதா ப்ரெண்டு என்று கேட்டான். மறை கண்கள் கலங்கியது. அனைவரும் ஆச்சர்யமுடன் இருவரையும் பார்த்தனர். மறு கையால் அவனை தூக்கி படுக்கையில் அமர்ந்தான் மறை.
அண்ணாவை பார்க்கவா வந்த? தருண் கேட்டான்.
ஆமா என்று மறையின் கையில் அவனது பிஞ்சுக்கையால் வருடினான். பின் மறையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
ப்ரெண்டு, எனக்கு அடிப்பட்டா அம்மா இப்படி தான் ஊதி விடுவாங்க. உன்னோட அம்மா எங்க? உனக்கு அடிபட்டிருக்கு. எங்க போனாங்க? அறையை பார்த்தான் குட்டிப்பையன்.
கண்ணிலிருந்து கண்ணீர் வர..என்னோட அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க.
சாமிகிட்டயா? எப்படி போனாங்க?
டேய்..இவனை இப்படி பார்த்தே பல வருசமாச்சுல்ல ஒருவன் கூற, அதெல்லாம் ஒன்றுமில்லை. பையனையும் கொல்ல ஆட்கள் வந்தாங்க. அவனை காப்பாற்றியதில் என் கையில் காயம் பட்டது. அவனால் தான் பிள்ளை வந்திருக்கான்.
அண்ணா..இவனை பார்த்துக்கோங்க. நான் அவங்களிடம் பேசிட்டு வாரேன் என்று தருண் வெளியே சென்றான். மற்றவர்கள் ராக்கியுடன் வேடிக்கையுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் மறையிடமிருந்து இறங்கவேயில்லை.
தருண் எப்படி ஆரம்பிக்க? என்று தெரியாமல் வந்தான். ராக்கியை வைத்து பேசி ஆரம்பிக்கலாம் என்று பதட்டமுடன் வெளியே நின்று கொண்டிருப்பவர்களிடன் சென்று நினைத்தது போல் அவனை பற்றி பேசி விட்டு..ஆன்ட்டி நீங்க வீட்டுக்கு போங்க. நான் அக்காவை பார்த்துக் கொள்கிறேன்.
நீ எப்படி பார்த்துப்ப? இதயா கேட்க..ஆன்ட்டி மேம் ஊருக்கு இப்ப வருவாங்க என்று அனைத்தையும் கூற, இருவரும் பதறினர்.
நித்தி அம்மாவா? இதயா கேட்க, இன்பாவை கூறியவுடன் அழுது கொண்டே அமர்ந்தாள் இதயா. என் புள்ளைக்கு ஏன் இப்படி நடக்குது? என்று இன்பா அம்மா அழுதார். வேலுவும் வெற்றி அங்கே வந்து..வாங்க போகலாம்..அழைக்க,
இந்த பொண்ணு..நான் இங்கே இருக்கேன் ஆன்ட்டி. நீங்க கிளம்புங்க என்று தருண் கூற, இருவரும் பேசாமல் நகர்ந்தனர். இதயாவை அழைத்து.. அவளிடம் நீங்க அழுதா. கண்டிப்பா மேம் டிஸ்டர்ப் ஆவாங்க. அமைதியா இருந்தீங்கன்னா நல்லது. நார்மலா பேசிப் பாருங்க என்று அனைவரையும் அனுப்பி வைத்தான்.
அப்பொழுது அங்கே வந்த நர்ஸ் இங்க இருந்த அம்மா எங்கப்பா? தருணிடம் கேட்டார். அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க.
என்னப்பா இப்படி சொல்ற? அந்த பொண்ணு பக்கத்துல யாராவது இருக்கணும். அவங்க மருந்து வேலை செய்யும் போது வாமிட் பண்ணுவாங்க. அவங்க வயிறு சுத்தமான பின் தான் சாப்பாடு கொடுக்கணும். இப்ப முழிச்சிடுவாங்க. இப்ப வீட்டுக்கு போயிருக்காங்கன்னு சொல்ற? வேற யாராவது இருக்காங்களா?
அவன் மறையை சொல்ல..அவருக்கும் அடிபட்டிருக்கு. பொண்ணுங்க யாருமில்லையா? கேட்டார்.
எல்லாரும் முக்கியமான வேலையா இருக்காங்க என்றான் தருண்.
உன்னால பண்ணமுடியுமா? என்று நர்ஸ் கேட்க..தருண் தயங்கியவாறு எனக்கு ஒத்துக்காது என்றான்.
யாரையாவது கூப்பிட்டு வா..என்று அவங்க சொல்ல, நான் பார்த்துக்கிறேன் என்று மறை பையனுடன் வந்தான்.
அண்ணா..நீங்க எப்படி பண்ணுவீங்க? உங்களுக்கும் அடிபட்டிருக்கு. நான் சிறுவயதிலே என் அம்மாவை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். எனக்கு ரொம்ப வலியெல்லாம் இல்லை. இவனுக தான் கேட்கவேயில்லை.
சரிங்க சார். நான் டாக்டரிடம் சொல்லிட்டு வாரேன் என்று நர்ஸ் வந்தார். அவரிடம் மறை..இரண்டு நாளாகுன்னு டாக்டர் சொன்னார்.
ஆமாம் சார். இரு நாட்களாகும். ஆனால் இப்ப விழித்திடுவாங்க. வயிறு சுத்தமான பின் குளுக்கோஸ் ஏற்றி நன்றாக ஒரு நாள் முழுவதும் தூங்கணும். பின் தான் சாப்பிட வேண்டும்.
சிஸ்டர்..இவங்க கணவர் இறந்துட்டாங்க. சொல்லலாமா? கேட்டான் தருண்.
என்னப்பா சொல்லலாமான்னு கேட்கிற? சொன்னா? யாராவது ஹாஸ்பிட்டல்ல உட்கார்ந்துகிட்டு இருப்பாங்களா? டிரீட்மென்ட் முடிஞ்ச பின் சொல்லலாம்.
ஆனால் இவங்களையும் கூட்டிட்டு போக இவங்க பேமிலி வர்றாங்களாம் தருண் சொல்ல..இல்லப்பா. இப்ப கண்டிப்பா பயணம் கூடாது என்றவர்..ஏதாவது பேசி சமாளிங்க.
ஓ.கே சிஸ்டர் என்றான் விரைவாக மறை. தருண் அவனை பார்த்தான். பின்..நாங்க பார்க்கிறோம் என்று தருண் சொல்ல..அறையினுள் சத்தம் கேட்டது. மூவரும் உள்ளே சென்றனர். வாயில் கையை வைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
மேம்..நீ சாய்ந்து படுங்க..எழக்கூடாது என்ற நர்ஸ் காயத்ரியை படுக்க வைத்தார். அவள் அங்கிருந்தவர்களை பார்த்து விட்டு ராக்கியை தூக்க..எழுந்தாள். அவள் குழந்தை யாரென்று தெரியாதவரிடம் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. மறையை முறைத்து பார்த்தாள்.
ஆனால் அதற்குள் வாமிட் வர..கையை வாயில் வைத்தாள். தருணிடம் ராக்கியை கொடுத்து விட்டு காயத்ரியிடம் வந்தான் அவன். மேம்..வாமிட் வரும்.. எடுங்க அப்பொழுது தான் முழுவதுமாக சரியாகும் நர்ஸூம் உதவிக்கு வந்தார். அவளது வாயில் டியூப் ஒன்றை சொருகி பக்கெட்டை ஒன்றை வைத்தார். தருண் மறையையே பார்த்துக் கொண்டிருந்தான். தோளில் ராக்கியை போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
சார்..நீங்க ஓய்வெடுங்க என்றார் நர்ஸ். ஒரு மணி நேரம் கழிந்தது. காயத்ரியும் தூங்கி எழுந்தாள். அவள் வாயிலிருந்த டியூப்பை அகற்றி இடத்தை சரி செய்தார் நர்ஸ். காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். “தேங்க்ஸ்” என்றாள்.
அவளை பார்த்து விட்டு அவன் செல்ல முற்படும் போது அவளுக்கு வாமிட் வர அவளிடம் வந்தான். மேம் எழாதீங்க ஆடையை மாத்திக்கலாம் என்று நர்ஸ் கூற..அவளிடம் நெருக்கமாக வந்த மறையின் ஆடையிலே எடுத்து விட்டாள்.
அக்கா..என்று தருண் கத்த..அதற்குள் அவன் ஆடை பாழானது. கண்ணை மூடி நின்ற மறை அவளை பார்க்க..அவள் விழித்துக் கொண்டிருந்தாள். அவன் ரெஸ்ட் ரூம் சென்று ஆடையை அலசி அதையே போட்டுக் கொண்டு வந்தான்.
அண்ணா..ஏண்ணா? தருண் கேட்க..அர்ஜூன் அங்கு வந்தான். அர்ஜூனை பார்த்ததும் அவள் எழ..அக்கா..எழாதீங்க. படுத்துக்கோங்க என்றான் தருண்.
அவன் மறையை பார்த்து புன்னகையுடன் அவனிடம் வந்தான். அவன் சட்டை ஈரமாக இருக்க..அண்ணா..என்னாச்சு? உங்க கை எப்படி இருக்கு? என்று காலை பார்த்தான். அண்ணா..ஓய்வெடுக்காம என்ன செய்றீங்க?
அண்ணா. இதுக்கு தான் முதல்லயே வேண்டாம்ன்னு சொன்னேன்.
அதெல்லாம் பிரச்சனையில்லை. இருபது வருசத்துக்கு முன்னே நான் இதை விட நிறைய அம்மாவுக்கு பார்த்தேன். ஆனால் பலனில்லை. ஆனால் இவங்களுக்கு என்று காயத்ரியை பார்த்து விட்டு ராக்கி தலையை வருடி..இப்பொழுது அந்த பலன் கிடைத்தது போலுள்ளது என்றான்.
காயத்ரி புரியாமல் அவனை பார்த்தாள். அதுக்காக..அவன் சொல்ல, சாரி என்று பாவமாக முகத்தை வைத்து காதில் கை வைத்தாள் காயத்ரி.
சாரியா? எதுக்குக்கா? அர்ஜூன் அவளிடம் வந்து காய்ச்சல் ஏதும் இருக்கா என்று தொட்டு பார்த்தான்.
நான் என்று அவள் சொல்வதற்குள்..அங்கே வந்தனர் அவளது குடும்பத்தினர். அவர்களை பார்த்தவுடன் காயத்ரி முகம் மாறியது.
அம்மாடி.. உனக்கு என்னாச்சுடா? அவளது மாமியார் அருகே வந்தார். அவள் அசையாது படுத்துக் கொண்டாள்.
பையன் தூங்குறான்னா? என்று தருணிடமிருந்து ஒருவர் ராக்கியை வாங்க..எழுந்து அமர்ந்தாள். அக்கா…என்று தருண் பதறி வந்தான். மறையும் அவளிடம் வந்து, நீங்க படுத்துக்கோங்க என்று அவன் கூற,..
பையனை வாங்குடா என்று தருணை பார்த்து சத்தமிட்டாள்.
நர்ஸ் ஓடி வந்து, எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?
ஏம்மா..அவ எங்க வீட்டு மருமகள். என் பையன் இறந்துவிட்டான். அழைச்சிட்டு போக வந்தோம் என்று அர்ஜூன் கூறிய பெரியப்பா கூற, நர்ஸ் அவளிடம் வந்து படுங்க என்றாள்.
ஒரு நிமிஷம் என்று, என்ன சொன்னீங்க? செத்துட்டானா? என்று ஒரு சொட்டு கண்ணீர் உதிர்த்த அவள் அவளது கழுத்தை பார்த்தாள். சட்டென அவன் கட்டிய தாலியை கழற்றி கீழே போட்டாள். அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். ஆனால் அவள் மாமியார் அவளை அறைய, அர்ஜூன் அவர் கையை பிடித்து தடுத்தார்.
அர்ஜூன்..என்று அவர் கத்த..எதுக்கு அவனை கத்துறீங்க? காயத்ரி சத்தமிட்டாள்.
எல்லாரும் போங்க. நான் அவன் மூஞ்சியிலே விழிக்க விருப்பமில்லை. மீண்டும் அவளை அடிக்க அவர் கையை ஓங்க, கையை இறங்கிடுங்க. இல்ல மரியாத கெட்டுரும் என்று கத்தினாள் காயத்ரி. என்னை தொடும் அருகதை கூட உங்க யாருக்கும் இல்லை.
ஏன்டி இப்படி பேசுற? அந்த வினிதாவ விட உன் மேல தான் அம்மா பாசமா இருந்தாங்க.
பாசமா? என்ன பாசம்? வினிதா யாருன்னு தெரியுமா? எனக்கு அவள் அக்கா என்பதை விட நிதர்சன உண்மை. என்னுடைய பதினேழு வருட உயிர் தோழி என்று அழுது கொண்டே. அவளுக்காக தான் நான் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எதுக்கு தெரியுமா?
வினியையும் மாமாவையும் பிரித்து விடுவேன். அப்புறம் உன் தோழி வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன்னு என்னை மிரட்டினான். என்னால் அவனை ஏத்துக்க முடியலை. ஆனால் என் வீட்டிலிருந்து என்னை கடத்தி என் பெற்றோரை மிரட்டி..திருமணம் செய்து என் வாழ்வை பாழாக்கி விட்டான். அவனால் என் படிப்பு போச்சு. என்னோட பெற்றோரை இழந்தேன். என்னோட கனவை இழந்தேன். அப்புறம் கூட நிம்மதியா இருக்க விட்டானா? நான் என் பிரச்சனையை சொல்ல நினைத்தால் வினியை வைத்தே மிரட்டினான். எனக்கு அவளை பிடிக்கும் என்று தெரிந்து அவளை பயன்படுத்தி என் வாழ்க்கையை பாழாக்கிய அந்த கேவலமானவனை இனி பார்க்க கூட எனக்கு விருப்பமில்லை. என்னால் யாரிடமும் வாயை திறந்து பேச கூட முடியாது.
நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு வினி இல்லை. அவள் ரொம்ப அமைதியான பொண்ணு. நான் அவளுக்கு அப்படியே எதிர்மாறானவ. எதையும் துணிந்து செய்வேன். ஆனால் என்னால் அவனை சமாளிக்க முடியல என்று இரவு நல்ல பிள்ளை போல் உங்களுடன் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்து அவன் செய்வது..வினிதா வீட்டை கண்காணிப்பது. அவளும் அண்ணாவும்..என்று கண்கலங்கி அழுது கொண்டே சேர்ந்து இருப்பதை போட்டு பார்ப்பான். என்னை கட்டாயப்படுத்துவான் என்று கதறி அழுதாள். குடிப்பான். டிரக்ஸ் பயன்படுத்துவான். நான் எதையும் சொல்லாததன் காரணம் என்னுடைய வினுக்காக தான்.
யாருக்கு இதெல்லாம் தெரியக்கூடாதுன்னு நினைச்சேன்னோ அவளுக்கு தெரிந்து என்னை வீட்டை விட்டு போக சொன்னாள். அவனிடம் பேச சென்றாள். ஆனால் அவன் அவளை என்று அழுத காயத்ரி..கண்ணை துடைத்து..ஒரு முறை விபத்து என்றானே? அது விபத்தல்ல..வினியை காப்பாற்ற நான் தான் அவனை அடித்தேன். வினு கணவருக்கு தெரிந்து அவர் வந்து பேசி பார்த்தார். அவளும் சரி அவரும் சரி..அதனால் தான் தனியே சென்றனர். அப்புறமும் அவளை தேடி வீட்டுக்கு போவான். அவர் உடனிருப்பதால் அவனால் அவளை நெருங்க முடியவில்லை. அவரை கொல்ல முடிவு செய்து யாரிடமோ பேசினான். யார்? என்ன நடந்ததுன்னு தெரியல. அன்றே வினியிடம் நான் கூறும் முன்னே அவர் இறந்த செய்தி தான் வந்தது. ஆனால் அதற்கு பின் அவளை தொந்தரவு செய்யும் போது அங்கு வேலை செய்பவர் மூலமாக எனக்கு விசயம் வந்து ஆன்ட்டி, உங்களை வைத்து தான் வீட்டிற்கு வர வைத்து அவளை காப்பாற்றினேன். ஆனால் அர்ஜூனாலும் அவள் அவனிடமிருந்து தப்பித்தாள். அர்ஜூன் சில நாட்கள் வினு நாட்களில் தங்கினான். அதனால் அவன் திசை மற்ற பெண்களிடம் சென்றது. பேசும் அனைவரிடமும் தவறாக நடந்து கொள்வார்.
போதை மருந்து பிசினஸ் செய்தான். நான் அவனுக்கு தெரியாமல் இந்த விசயத்தை உங்களுடன் கோவிலுக்கு வரும் போது சொன்னேன். ஆனால் நீங்க கண்டுகொள்ளவே இல்லை.
அதை கூட விடுங்கள். நான் உங்க எல்லாரிடமும் கேட்கிறேன். பதில் சொல்லுங்க? உங்க வீட்டுக்கு வர்ற பொண்ணு என்ன செய்றான்னு கவனிக்க மாட்டீங்களா? என்னை விடுங்கள். அவன் உங்க பிள்ளை தான கவனிக்க மாட்டீங்களா?
என்னோட ராக்கியை அவன் பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட தூக்கியதில்லை. அப்பா என்றாலே ராக்கிக்கு பிடிக்காது. அவன் குட்டி பையன் முன் வைத்தே என்னை பல முறை காயப்படுத்தி இருக்கான் என்று ராக்கியை பார்த்தாள். உங்க மகன் அவன் பிள்ளை, பொண்டாட்டியை கவனிக்கிறானா? என்று பார்த்தாலே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும். எங்க பிறந்த நாள் தெரியும். ஆனால் எங்க வயசு தெரியுமா உங்களுக்கு?
நானும் வினுவும் முதல் வருடம் தான் படித்துக் கொண்டிருந்தோம். அவள் காதலுக்காக தன் படிப்பை விட்டு அவரால் மீண்டும் படித்தாள். நான் அவளுக்காக..என்று முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுதாள்.
ஏன்டி, எல்லாமே நீ தான் பண்ணதா? எங்கள முட்டாளாக்கி இருக்க? என்று அவர் தம்பி கையை ஓங்கினார். இப்பொழுது மறை முன் வந்து கையை பிடித்து தடுத்து..ஒரு ஆம்பளையானவன் பொண்ணை அடிக்க கையை ஓங்குவது பெரிய தவறு. அதை விட உங்க வீட்டு பொண்ணை ஓங்குவது பாவம் என்றான்.
அதை சொல்ல நீ யாருடா? என்றவுடன் முறைத்துக் கொண்டு விலகி நின்றான்.
அர்ஜூன், பெரியவரை பார்த்து..இவரை இன்னும் சேர்த்து சுத்திக்கிட்டு இருக்கீங்க? அவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அதனால் இவர் இடம் வேற..
என்னடா வேற? அவர் கொந்தளிக்க..ஹாய்..என்று தீனா உள்ளே வந்தான் விலங்கை காட்டிக் கொண்டு. சாட்சி இல்லையே?
இருக்கே..இப்ப தான இந்த பொண்ணு அனைத்தையும் சொல்லுச்சி என்று புன்னகைத்தான்.
காயத்ரியை பார்த்து, ஏம்மா..ஒரே ஒரு கம்பிளைண்ட் கொடும்மா. எல்லாரையும் தூக்கி உள்ள வச்சிடலாம்.
வேண்டாம் சார். யார் தப்ப ஏத்துக்காம இருக்காங்களோ அவங்க தான் உண்மையான குற்றவாளி.
சார்..அந்த பொண்ணை கேட்காதீங்க. நான் கம்பிளைண்ட் தாரேன். இந்த மாதிரி குடும்பம் இருப்பதால் தான் பல பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போகுது. எல்லாரையும் பிடிச்சி உள்ள போடுங்க நர்ஸ் கூறி விட்டு, காயத்ரியிடம் வந்து அவளை சாய்ந்து படுக்க வைத்தாள்.
இல்ல சார். அவங்கள விட்டுருங்க. என்னை நல்லா பார்த்துகிட்டாங்க. இனியாவது பார்த்து நடந்துப்பாங்க. ஆனால் நான் இனி இவங்க யாரையும் பார்க்க வேண்டாம். எனக்கு என்னோட ராக்கி மட்டும் போதும். அதை மட்டும் தெளிவா எழுதி வாங்கிடு அர்ஜூன். நான் சரியான பின் வாங்கிக் கொள்கிறேன் என்றாள்.
பிள்ளையவாது கொடும்மா.
என்னோட பிள்ளைய நான் யாரிடமும் கொடுக்க மாட்டேன். எனக்கு இருப்பது அவன் மட்டும் தான். தயவு செஞ்சு போயிடுங்க.
மேம்..நீங்க அதிகமா பேசிட்டீங்க? ஓய்வெடுக்கணும் டாக்டர் என்று அந்த நர்ஸ் சினத்துடன் கத்த..மற்ற நர்ஸ் அனைவரும் வந்து அவர்களை வெளியே விரட்ட..தீனா அவரை மட்டும் அரெஸ்ட் செய்து விட்டு..என்னோட ஸ்டேசனுக்கு வர்ற எல்லாரையும் கொல்றானுகடா அர்ஜூன். மேலிடத்தில் பேச முடியல. இவனையாவது உயிரோட நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லணும்.
அண்ணா..எனக்கும் அப்படி தான். நான் போடும் திட்டம் அனைத்தும் பாழா போகிறது. பாருங்க முன்னாடியே ஊருக்கு வந்துட்டோம். இன்பா மேம் வேற என்று கவலையுடன் கூறினான். கஷ்டமா இருக்கு அண்ணா.
எல்லாமே சரியாகிடும் அர்ஜூன். எல்லாத்துக்கும் நேரம் வரும் மறை கூற, அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன் என்றான் அர்ஜூன்.
ராக்கியை பார்த்து சோ..க்யூட் அழகா தூங்குறான் அர்ஜூன் கொஞ்ச.. கண்ணை மூடி படுத்திருந்த காயத்ரி புள்ளைய கண்ணு வைக்காதடா..
பேசாம அமைதியா இருங்க என்று தருணும் மறையும் ஒன்றாக கூறினர். தருண் அங்கேயே ராக்கியுடன் அமர்ந்தான். மறை அவனறைக்கு சென்றான்.
என்னடா ஆச்சு அண்ணாவுக்கு? சட்டை ஈரமா இருந்தது.
அக்கா வாமிட் பண்ணிட்டாங்கடா..
அண்ணா மேலா?
ம்ம்..என்றான். அர்ஜூன் சிரித்துக் கொண்டே காயத்ரியை பார்த்தான். அவளுக்கு மறை முகமாற்றம் நினைவு வந்து புன்னகைத்தாள்.
அர்ஜூன் அவளை பார்த்து தருணிற்கு கண்ணை காட்டினான்.
வேண்டாம் அர்ஜூன். ரொம்ப யோசிக்காத. அண்ணா பற்றி தெரியும்ல.. அவன் காதில் கிசுகிசுத்தான்.
பையனை கொடு. நான் இருக்கிறேன் அர்ஜூன் சொல்ல..இல்லடா நானே பார்த்துக்கிறேன் என்றான். துருவனை பார்க்கலாம்ல?
முதல்ல அகில் பார்த்துட்டு வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். இல்ல இருவருக்கும் சண்டை வரும் என்றான் அர்ஜூன்.
அதுவும் சரி தான். அனுவை போய் பாரு. உன்னை தேடப்போறா?
அவள ஸ்ரீ அவளோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கா என்று அவர்கள் வந்த போது நடந்ததை கூறினான்.
முதலில் அகில், பவி குடும்பம், வினிதாக்கா அம்மா, அப்பா வந்திருப்பாங்க. அவர்கள் இறங்க பின்னே அர்ஜூன், அவன் அம்மா, ஸ்ரீயும் வந்திருப்பார்கள். அர்ஜூனுடன் ஸ்ரீ அனுவை கையில் வைத்திருக்க..அவர்களுக்கு அருகே கமலி நின்றிருந்தார். அனைவரும் அவர்களையே பார்த்து பேச..அகிலும் மற்றவர்களும் அவர்களை பார்க்க..அகில் அர்ஜூனை பார்த்து சூப்பர்டா என்று கையை காட்டினான்.
ஆனால் ஸ்ரீ அர்ஜூனிடம் அனுவை நான் பார்த்துக்கிறேன். நான் என் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல..
நில்லுடி என்று..பாட்டி ஸ்ரீயிடம் வந்து, என்னை தெரியுதா? கேட்டார்.
அவள் அர்ஜூனை பார்த்தாள். பாட்டி என்றான்.
பாட்டி..என்று புன்னகையுடன் அணைக்க வந்தாள். நில்லுடி..வீட்டுக்கு வா..அவர் அழைக்க, நான் நாளைக்கு வாரேன் என்றாள். அனு பாட்டியை பார்த்து பயந்து ஸ்ரீ தோளில் சாய்ந்து கொண்டாள்.
அகில் சீனியர் போகாதீங்க. நானும் வாரேன் என்று கத்திக் கொண்டே முன்னேறிய ஸ்ரீ..மீண்டும் அர்ஜூனிடம் வந்து, பாப்பாவை பிடி..என்றாள். அவன் அனுவை தூக்கினான்.
ஸ்ரீ அவனது சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு துலாவி பணம் எடுத்து..எண்ணி..பாப்பாக்கு இப்ப சாப்பிட இது போதும் என்று நூறு ரூபாய் சில்லறையில் இருபது ரூபாயை எடுத்துக் கொண்டு..மீதியை அவனது பாக்கெட்டிலே வைத்து விட்டு அனுவை கொடு என்று தூக்கிக் கொண்டு.. அர்ஜூனை பார்த்து ஊருக்கு வந்தாச்சு. இனியாவது ஓய்வெடு..பேய் மாதிரி முழிச்சுக்கிட்டு இருக்காத..என்று போனவள் அர்ஜூன் மறந்துட்டேன் என்று கார் கதவை திறந்தாள். நிவாஸ் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.
வெளிய வாடா..அர்ஜூன் அழைக்க, முடியாது என்று கையை கட்டிக் கொண்டு உள்ளே அமர்ந்திருந்தான்.
அர்ஜூன் நிவி கார்ல இருக்கட்டும். அவனுக்கு சாப்பிட ஏதும் வேண்டாமாம் அனு கூற..அவன் ஸ்ரீயை பார்த்து..
நீ பாப்பாவ பார்த்ததுல இருந்து என்னை மறந்துட்ட.
நான் மட்டுமா? அர்ஜூன் என்று ஸ்ரீ கேட்க..அவன் தான் என்னை உள்ளே இருக்க சொன்னான்.
அர்ஜூன்..ஏன்டா, சும்மாவே இருக்கமாட்டாயா? அவனை ஏற்கனவே கோபத்திலிருந்து சமாளிக்க படாத பாடாயிற்று என்று அவனை செல்லமாக அடித்தாள்.
ஏஞ்சல் அர்ஜூனை அடிக்காத..அர்ஜூன் பாவம் அனு கூறினான்.
யாரு? இவனா பாவம்? என்னை மாட்டி விட்டு எப்படி வேடிக்கை பார்க்கிறான். நான் தான் பாவம்..என்று ஸ்ரீ கூற..
ஸ்ரீ வர்றியா? நேரமாகுது..அர்ஜூனை அப்புறம் திட்டிக்கலாம். அடிச்சுக்கலாம்.
வாரேன் சீனியர் என்று நிவியிடம்..என்னோட செல்ல தம்பில்ல..சமத்தா இறங்குப்பா என்று அவனிடம் ஸ்ரீ கெஞ்ச..அது என்று கூறிக் கொண்டு கீழே நிவி இறங்கினான்.
கீழிருந்த குச்சியை எடுத்து அர்ஜூனுடன் சேர்ந்து, நீ என்னை திட்டிறியா? அடிக்க ஓங்கினாள்.
ஸ்ரீ நான் உன்னை திட்டுவேனா? அர்ஜூன் கேட்க..நீ திட்ட மாட்டாயாடா? எனக்கு தான தெரியும் நீ என்ன செய்வன்னு என்று ஸ்ரீ பட்டென கூறினாள்.
ஏய்..இப்ப என்ன சொன்ன? நிவி கேட்க, அவன் என்னை கழுத்தை பிடிச்சான்ல. அதை சொன்னேன் என்று மனதினுள் இதுக்கு மேல இங்க இருந்தா இருவரும் என் வாயிலிருந்தே வர வச்சிருவானுக என்று நிவாஸ் கையை பிடித்து வா..போகலாம் என்றாள்.
நான் அர்ஜூனுடன் இருக்கேன் நிவாஸ் கூறினான். இல்ல..நீ என்னுடன் தான் வரணும் ஸ்ரீ கூற, அவன் தான் வரலைன்னு சொல்றான்ல விடு ஸ்ரீ. என்னோட மச்சான நான் பார்த்துக்கிறேன் அர்ஜூன் கூற..
மச்சானா? என்று எப்படா இப்படியெல்லாம் பேசுற? நிவி அவனை மாதிரி நீ பேசுன..உன் தோளை உரிச்சிடுவேன்.
நீ சொல்லிட்டேல. நான் அர்ஜூனை இனி தான் மாமான்னு கூப்பிடப்போகிறேன் என்றான்.
வேண்டாம் நிவி..என்னை கோபப்படுத்தாதே! சரி..சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். கொஞ்ச நேரத்துல வருவேன். நீ தயாரா இரு..என்று அர்ஜூன் அம்மாவை பார்த்தான். அவர் இவர்களது பேச்சை கவனித்தவாறு நின்றார். அவரையும் பாட்டியையும் பார்த்து தலையசைத்து சென்றாள்.
அஜூ..நம்ம ஸ்ரீ தானா? அவ உன்னிடம் வம்பு பண்ண மாட்டாளே? பாட்டி ஸ்ரீயை பார்த்துக் கொண்டே பேச, இதான் பாட்டி நல்லா இருக்கு என்று அர்ஜூன், நிவாஸ் தோளில் கையை போட்டான். ஸ்ரீ அகிலுடன் அவள் வீட்டுக்கு சென்றாள்.