அத்தியாயம் 67
சைலேஷிற்கு ஒருவன் பார்வை சந்தேகத்தை தர, அவன் கையில் கத்தியை எடுப்பதை பார்த்த வேலு..அகல்யா கையை விட்டு,
அண்ணா…என்று பிரதீப்பிடம் வர, மற்றவர்கள் புரியாமல் வேலுவை பார்த்தனர். சைலேஷ் ஏற்கனவே கவனித்திருப்பானே? அவனும் பிரதீப்பிடம் வந்தான். இருவரும் பிரதீப்பை மறித்து வேலு அவன் கழுத்தை நெறிக்க, சைலேஷ் அவன் கையை பிடித்து திருப்ப கத்தி கீழே விழ சென்றதை அவன் மறு கையால் பிடித்து பிரதீப்பிடம் தூக்கி எறிய சக்கரை ஒரு கல்லை எடுத்து பட்டென எறிய கத்தி துருவன் கையை பதம் பார்த்து கீழே விழுந்தது. துருவன் கையை பிடித்துக் கொண்டே மயங்கினான்.
துருவா..என்று ரதி எழ, நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா. நித்தி அப்பா அவனிடம் வந்து பார்த்து, அவன தூக்கிட்டு வாங்க. சீக்கிரம் என்றார். பிரதீப் பதறி அவனை தூக்க, அவன் மெதுவாக கண்களை திறந்து பிரதீப்பை பார்த்து விட்டு கண்களை மூடினான்.
வேலு..பைக்கை எடுக்க, பிரதீப் துருவனுடன் அதில் செல்ல, போன் பேசிக் கொண்டே வேகமாக நடந்து கொண்டிருந்த கேசவன் அருகே சைலேஷ் காரை நிறுத்தினான். கவின் கத்தியை எடுத்து பார்த்தான். அதில் ஏதோ தடவ பட்டு இருப்பதை பார்த்து ஓட்டம் எடுத்தான்.
பின் நித்தி அப்பா சைலேஷூடன் செல்வதை பார்த்த கவின் அவனுக்கு போன் செய்ய, அவன் திரும்பி பின்னே பார்த்து விட்டு போனை எடுத்தான்.
சார்,,போனை மாமாகிட்ட கொடுங்க என்றான். சைலேஷை போனை ஸ்பீக்கரில் போட்டு, பேசு என்றான்.
மாமா..கத்தியில் விசம் தடவியது போல் உள்ளது என்று சொல்ல,..விசமா? என்று கேசவன் அதிர்ந்தாலும், நான் பார்த்துக்கிறேன் மாப்பிள்ளை என்று சைலேஷிடம்..வேகமாக போங்க தம்பி..என்றார்.
பிரதீப் துருவனை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலில் நுழைய, கேசவன் வேகமாக இறங்கினார். பக்கத்தில் இருந்தவர் வீட்டிலிருந்து ஸ்கூட்டியை வாங்கிய நித்தி, அகில் அம்மாவுடன் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தாள். ஊரார் அனைவரும் கொல்ல வந்தவனை ஓர் மரத்தில் கட்டி வைத்து போலீஸிற்கு போன் செய்ய, வீட்டிலிருந்த தீனாவிற்கு தெரிய வர, அவன் துளசியை பார்த்தான். அவளிடம் ஏதும் கூறாமல் வாரேன் என்று பதட்டத்தில் வண்டியை கூட எடுக்காது வேகமாக துருவனை காண ஓடினான்.
வெற்றி வேகமாக உள்ளே வந்து, தீனா எதுக்கு இப்படி ஓடுறான்? ஏதும் பிரச்சனையா? என்று துகிராவை பார்த்தார்.
தெரியலையே மாமா. நீங்க வந்து இவ்வளவு நேரமாகுது. அவரை இன்னும் காணலையே? என்று அவள் கேட்க, சக்கரை மூச்சிறைக்க வீட்டினுள் நுழைந்தான்.
அக்கா..அக்கா..சார் எங்க? தீனா சார் எங்க? புவனாவிடம் கேட்டான்.
ஏன்டா இப்படி ஓடி வந்துருக்க? புவனா கேட்க, அவன் அழுது கொண்டு நம்ம துருவன் அண்ணன் கையில கத்தி அறுத்துடுச்சு? என்று அழுதான்.
கத்தியா? எப்படிடா? என்று புவனா முடியாமல் எழ, துளசி கண்கலங்க, இப்ப எப்படி இருக்கான்டா? கேட்டாள்.
அக்கா..கத்தில அவனுக விசத்தை தடவி வச்சுருக்காங்க என்று பிரதீப்பை அவர்கள் குறி வைத்து வேலு தடுத்து இவன் கல்லை வைத்து தட்டி துருவன் மேல பட்டதை கூற,
விசமா? என்னடா நம்ம ஊர்ல இதெல்லாம்மா? என்று வெற்றி ஆக்ரோசமாக, துளசியும் புவனாவும் பதறி
சக்கரை..அவன் இப்ப நல்லா தான இருக்கான்? துளசி கேட்க, இல்லக்கா..அண்ணா மயங்கிட்டாங்க. பிரதீப் அண்ணா தான் துரு அண்ணாவை தூக்கிட்டு போனார். எனக்கு பயமா இருக்குக்கா என்று அழுதான்.
இருவரும் அழுது கொண்டு வெற்றியிடம்..அவனை பார்க்க கூட்டிப் போங்க என்று மீண்டும் அழ, வெளியே இருந்தவர்கள் உள்ளே வந்து விசயத்தை அறிந்து அனைவரும் அங்கு சென்றனர். வெற்றி வெளியே வரக்கூடாது என்று துளசியை மட்டும் அழைத்து சென்றனர். புவனாவை வெற்றி வீட்டிலே இருக்க வைத்தார். அவள் அழுது கொண்டிருக்க, துகிரா அவளுக்கு ஆறுதலாக பேசினாள்.
இல்லக்கா. அவனை இதுல தலையிடாதன்னு எவ்வளவோ சொன்னேன். கேட்கவே மாட்டீங்கிறான். எனக்கு உதவி செய்கிறேன்னு அடி வாங்கினான். அடுத்து ஜானுவுக்கும் துளசிக்கும் என்று..
அக்கா..ஜானுவுக்கு தெரியாதுல. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா?
இப்ப என்ன பண்றது? இவன் தான் இப்படி செய்கிறானோ? என்று புலம்பினாள்.
அமைதியா இரு. அவனுக்கு ஒன்றும் ஆகாது.
பாவம்..ஆன்ட்டி ரொம்ப கஷ்டப்படுவாங்களே? என்று மெதுவாக புவனா எழுந்து நடக்க, ஏய்..நீ இரு. எழுந்திருக்காத. இன்னும் டாக்டர் உன்னை எழுந்திருக்க சொல்லலை.
இல்ல இன்று நடக்கலாம்ன்னு சொன்னாங்க. அங்கிள்..நான் போகலாமா? கேட்டாள் புவனா வெற்றியிடம்.
வேண்டாம்மா. இந்த நிலையில் வேண்டாம்மா. அவனுக்கு ஒன்றுமாகாது என்று கூற,
அங்கிள், ஏற்கனவே அகில் அண்ணாவுக்கு வேற அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அங்கிளும் இல்லை. இப்ப இவனுக்கும்..இதில் ஆன்ட்டிக்கு உண்மை வேற தெரிஞ்சு போச்சு. பாவம் அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.
வெற்றி புவனாவிடம், என் மீது உனக்கு கோபம் இல்லைல்லம்மா? கேட்டார்.
அங்கிள்..யார் கிட்ட கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது? நீங்க எனக்காக யோசித்ததே பெரிய விசயம். நான் கோபப்படும் நிலையிலே இல்லை.
அப்ப..என்னை மன்னிச்சிட்டியா?
நான் உங்களை மன்னிக்கும் அளவிற்கு நீங்க எந்த தவறும் செய்யல. உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு நினைச்சேன் அங்கிள்.
அங்கிள்ன்னு தான் சொல்வியாம்மா? மாமான்னு கூப்பிட மாட்டியா?
புவனாவின் பார்வை வெற்றியின் தங்கை மீது படிந்தது. இதுவரை இவர்கள் பேசியதை கேட்டவர்..அவள் பார்வை வெற்றி தங்கை மீது இருக்க,..வெற்றி புவனாவிடமும் துகிராவிடமும் பேசுவது பிடிக்காமல் அவர் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த மீனாட்சி
பசங்க போயிருக்காங்கள. அந்த பையன் உனக்கு நண்பனா?
புவனா தலையசைக்க, நீ வெளிய இந்த காலோட போனா புள்ளைங்க கஷ்டப்படுவாங்கல்ல. மீனாட்சி பேச,
ஆமா. இவளுக்கு புள்ளைங்க மேல ரொம்ப அக்கற? இவளே எவன் வீட்லயோ இருந்துட்டு வந்திருக்கா. ஒருத்தன் பத்தாதுன்னு இவளுக்கு எத்தனை பேரோ? கேட்க, மீனாட்சி கண்கலங்கினார். வெற்றி கோபமுடன் அவரிடம் வந்தார். அவரை பேச விடாது துகிரா.. அவங்க எத்தனை பேர் கூட இருந்தாங்கன்னு நீங்க பார்த்தீங்களா? நீங்க பார்த்தீங்கன்னா மாமாகிட்ட சொல்லி இருக்கலாம்ல..என்று அத்தை இவங்கள நான் எப்படி கூப்பிடணும்ன்னு கேட்டாள் துகிரா.
அத்தைன்னா கூப்பிட்ட?
ஆமா. அவரு அம்மா அத்தை தான? கேட்டாள்.
ம்ம்..என்ற மீனாட்சி மகிழ்வுடன் சித்தின்னு கூப்பிடணும்மா..என்றார்.
என்ன மாமா நீங்க? எல்லார் கிட்டையும் விசாரித்து தெரிஞ்சதுக்கு சித்திகிட்ட கேட்டா. அவங்க சொல்லி இருப்பாங்கள? இதுக்காக ஏன் இருவரும் கஷ்டப்பட்டீங்க?
என்ன சித்தி? சரி தான..சித்தி நீங்களே சொல்லி இருக்கலாம்ல..ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்களும் அத்தைய கடத்தி வச்சிருந்த இடத்துல இருந்தீங்களா?
மாமா? உங்க தங்கைக்கு அங்க என்ன வேலையா இருக்கும் என்று துடுப்புடன் கேட்க, அனைவரும் அதிர்ந்தனர்.
என்னடி..எங்கிட்டயே வம்புக்கு வார? கொழுப்பு வச்சு போச்சா?
இல்ல சித்தி. நீங்க தான் நேர்ல பார்த்த மாதிரி சொன்னீங்களே! அதான் கேட்டேன்.
சரி..நீ இங்க என்ன பண்ற? வெற்றி தங்கை கேட்க,
நான் என்ன பண்றேன்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர் வீட்ல இருக்கேன். அதுல என்ன இருக்கு?
ம்ம்..கல்யாணம் பண்ணிக்கல. இந்த ஊர்ல யாரையும் தெரியாது. ஆனா எப்படி அவனுடன் வந்த? ஆமாம் நீ அவனறைக்கு செல்வாயாமே?
நான் போனா உங்களுக்கென்ன? நாங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறோமே?
எப்ப? கேட்டாயா அவனிடம்?
நான் படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணிப்போம்.
பார்த்து எல்லாம் முடிஞ்சுடாம என்றார் எளக்காரமாய்.
சித்தி..வார்த்தைய பார்த்து பேசுங்க.
என்னடி இது? நீ இப்ப தான் கல்லூரிக்கே போகிறாயாமே? இன்னும் மூன்று வருடமாவது படிக்கணும். அதுவரை அவன் அருகே..எப்படிம்மா அது? பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்காது.
துகிரா கோபமாக அவரை பார்த்தாள். எனக்கு அவரை பற்றி நல்லா தெரியும்.
எனக்கும் அவனை பற்றி தெரியும். நான் கூறுவது உன்னை தானே? கூற, அவள் வெளியே கோபப்பட்டாலும் அமைதியாக கண்கலங்க நின்றாள்.
இங்க பாரு..வந்த வேலைய பார்த்துட்டு போ. இதுக்கு மேல பேசுன? அவ்வளவு தான் என்று கொதித்தார் வெற்றி.
அண்ணா..இந்த சிறுக்கிக்காக என்னை திட்டுகிறாய்? வந்த வேலைய பார்த்துட்டு போக சொல்ற? அழுத வெற்றியின் இரண்டாவது தங்கை
ஏன்டி, வந்தவுடனே என் அண்ணாவையும் மயக்கிட்டியே? கேட்க துகிரா அழுதாள். மீனாட்சி கோபமாக..போதும் நிறுத்து. சின்னபுள்ள கிட்ட என்னடி பேசுற?
ஆமா..இந்த வம்சமே இப்படி தான் இருக்கு. இந்த வீட்டு பொண்ணு புள்ளைங்க தான் ஒழுங்கா இருக்கோம்.
இந்த வீட்டு மருமகள் எல்லாருமே இப்படி ஆம்பளைகளோட படுக்குற புள்ளைங்களா தான் இருக்கு கூற, அப்பத்தா கோபமாக அறையிலிருந்து வெளியே வந்து அவரை அடிப்பதற்குள் அவர் கன்னத்தில் சப்பென்ற ஓசையுடன் நின்றிருந்தார் அபி அம்மா.
என்னடி பேசுற? நம்ம வீட்டு புள்ளைங்கள பத்தி இப்படி பேசுற? நீ ஒழுக்கமாடி. நீ ஒருத்தனோட ஓடிப் போய் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்தோட பேரையே கெடுத்திட்டு இப்படி பேசுற?
அண்ணி தப்பு செய்றவங்களா இருந்தா காதலுக்காக இந்த எல்லைக்கு போயிருக்க முடியாது. ஆனால் நம்ம அண்ணனை தவிர ஏன் கட்டுன புருசனை கூட கிட்ட விடாம எவ்வளவு கஷ்டத்தை தாங்கிக்கிட்டு இருந்திருக்காங்க.
உனக்கு என்னடி தெரியும் இந்த புள்ளைய பத்தி? என்று துகிராவை காட்டி..நம்ம எல்லாரோட சொத்து மதிப்பையும் தாண்டி அவ அப்பன் வைச்சிருக்கான். அவளுக்கு பிரதீப் காதல் பிடிச்சு..கட்டியிருந்த ஆடையை தூக்கி எறிஞ்சு நம்ம புள்ள வாங்கிக் கொடுத்ததை கட்டிட்டு வந்தவடா..
அப்புறம் என்ன புவனாவா?
ஏன் உனக்கு அவள பத்தி தெரியாது? அவளிடம் அந்த அர்தீஸ் தொந்தரவு செய்த போதெல்லாம்..அவளை அவள் பாதுகாக்க அவ்வளவு கஷ்டப்பட்டிருக்காள். இங்கேயும் சரி உன் வீட்டிலும் சரி உனக்கு தான் எல்லாரும் ஊழியம் பண்ணனும். தன் படிப்பையும் பார்த்து இந்த ஒரு வருடமா அவ அவளோட அம்மாவை எப்படி பார்த்துக்கிட்டான்னு இந்த ஊருக்கே தெரியும்?
அது அவள் தலைவிதி..
தலைவிதியா? இல்லை..அது அவளோட பாசம். நம்ம வீட்டுக்கு வந்தப்ப கூட வேலை பார்க்க தான் செய்வாள். என்ன அண்ணா? செஞ்சாளா? இல்லையா? அதை விட எல்லாரிடமும் அன்பாவும் பண்பாவும் பேசுற புள்ள?
ஆனா என் புள்ளையோட கால் தூசிக்கு வருவாளா?
சரி தான். இந்த புள்ளையோட கால் தூசிக்கு உன் பிள்ள வர மாட்டா. உன் புள்ளை மினிக்கிக்கிட்டு மேக் அப் போட்டு உரசிக்கிட்டு தான வருவா? மறந்துட்டியா நம்ம தீனாகிட்ட அவ அடி வாங்குனத..அபி அம்மா கேட்டார்.
அவனுக்கு திமிரு. போலீஸ்ன்னு திமிரு. அதான் அடிச்சுட்டான்.
அண்ணி..உங்களுக்கு தெரியாதுல. நான் சொல்றேன் பாருங்கேன் என்று முழங்காலுக்கு மேல ஆடையை ஏத்திக்கிட்டு மேலை அங்கங்கு கிழிந்து உடல் தெரிய ஒரு கல்யாண விழாவின் போது தீனாவை அடிக்கடி இடித்துக் கொண்டிருந்தாள். அவனும் பொறுமையா நகர்ந்து தான் சென்றான். அப்பொழுதாவது விட்டுருக்கலாம். விடாமல் மேலும் அவனை உரச, நம்ம புள்ளைக்கு வந்து பாருங்க கோபம்.. ருத்ரானாக மாறி ஒரே அறை தான் கீழே விழுந்து சுருண்டு விட்டாள்.
எல்லாரும் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தார்களே அதை என்னால் மறக்கவே முடியாது என்று உதட்டை மடித்து சிரித்தார்.
ஏய்..என்று வெற்றியின் இரண்டாவது தங்கை சத்தமிட, ஆமாம் என் பிள்ளைக்கு தீனா பிடிக்கும். முறைப்பையன். அவனை கட்டிக்க ஆசை அப்படி நடந்து கொண்டாள்.
ஏன்டி, என்று அவர் எழுந்து புவனாவிடம் வந்து அவளது காலை பார்த்து நொண்டியா இருந்து கூட உனக்கு ஆசை அடங்களேல..ச்சீ..கூற, புவனாவிற்கு அழுகை வர,அப்பொழுதும் விடாமல் நீ எல்லாரிடமும் நடிக்கிற தான? காலையில எல்லார் முன்னாடியும் நடிச்சிட்டு, இரவுல அவனுக்கு விருந்தாகுறியா? எங்க தீனா உன்னை மட்டும் எடுத்துக்கல.. அவன் நிறைய பொண்ணுங்களோட இருந்திருக்கானாம். அது தெரிஞ்சு தான் நான் என் பொண்ணை அழைச்சு வரல..என்று கூறிக் கொண்டே அவளை பார்க்க, அவள் தேம்பி தேம்பி அழுதாள்.
நிறுத்துடி..என்று அனைவரும் புவனாவிடமிருந்து அவளை இழுக்க, புவனா அமர்ந்திருந்த வீல் சேரை பிடித்துக் கொண்டு..அவதூறாக பேச அவள் அழுது சோர்ந்து விட, அனைவரும் அவரை பிடித்து இழுத்தனர். ஆனாலும் கண்களை வன்மமாக வைத்துக் கொண்டு புவனா அமர்ந்திருந்த சேரை எட்டி உதைத்தார்.
புவனா கீழே விழுந்து, தூணில் தலை இடித்து இரத்தம் வர, அவளிடம் அனைவரும் பதறி வந்தனர். அப்பொழுதும் விடாத அந்த வெற்றியின் தங்கை அவள் கைகளை மிதிக்க, அவரது விரல்களில் உள்ள நகக்கீறல் புவனா கையை அழுத்த, தாங்க முடியாமல் கத்தினாள்.
அவள் சத்தம் வெளியே கேட்க, வேலுவுடன் பைக்கில் வந்த தீனா வேகமாக உள்ளே வந்து நடப்பதை பார்த்து, அவன் அத்தை காலை பிடித்து தள்ளி விட்டு,..புவி..புவி..என்று கதற அவளுக்கு எங்கே கேட்கப் போகிறது? அவள் வலியில் மயங்கி விட்டாள். துகிரா நீரை எடுத்து வந்து கொடுக்க, மீனாட்சி தண்ணீரை தெளித்தார். வேலு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அபி அம்மா, அவர் தங்கையின் புருசனை அழைத்து..இவள கூட்டிட்டு போங்க என்றார்.
இல்ல. யாரும் போக வேண்டாம் என்றார் வெற்றி.
சக்கர அவங்க பக்கத்துல வந்து அவன் விரலை காட்ட, அவர்..என்ன திமிரு..என்று அவனை திட்ட, அவன் அவரை முறைத்துக் கொண்டு அவன் விரலை அவர் கண்ணை குத்தி விட்டு, என்னோட அக்காவையே மிதிக்கிறியா? என்று அவன் பாக்கெட்டில் இருந்த பென்சிலை எடுத்து சீவினான். அபி அம்மா அவனை வேடிக்கை பார்க்க, கூர்மையாக சீவிய பின் அதை எடுத்து வெற்றி தங்கை கண்ணுக்கருகே வைத்து,
இனி என்னோட அக்காவை தப்பா பேசுன? என்று அவர் அவளை மிதித்த காலிலே இறக்கினான். பென்சில் முனை உடைந்து கீழே விழ, அலறினார்.
டேய்..என்ன பண்ற? என்று வேலு அவனிடம் ஓடி வந்து அவனை தூக்கினான்.
என்ன விடுங்க..விடுங்க என்று துள்ளினான் சக்கர.
அண்ணா..விடுங்க. அவங்க பிரதீப் அண்ணா அம்மாவையும், அக்காக்களையும் தப்பா பேசுறாங்க என்று வேலுவிடமிருந்து திமிறி புவியிடம் வந்தான். அவள் விழித்து தீனாவையும் மற்றவர்களையும் பார்த்தாள்.
அக்கா..எழுந்திரு என்று அவளை பிடித்து இழுத்து, தீனா கையை தட்டி விட்டான் சக்கர.
துகிராவை பார்த்து, அக்கா..நீங்களும் வாங்க. நான் உங்கள கூட்டிட்டு போய் பார்த்துக்கிறேன். அக்காவை பிடிச்சிக்கோங்க என்று என்று அவளது வீல் சேரை எடுத்து வந்தான். கண்ணீருடன் இருவரும் அவனை பார்த்தனர்.
புவி..தூக்க முடியல. கொஞ்சம் எந்திரிக்கா என்று கூற, புவி சக்கரைய பார்த்துக்கிட்டே இருந்தாள்.
துகிரா சக்கரைய அணைத்து, அவரிடம் சொல்லாம என்னால வர முடியாதுடா என்றாள்.
என்ன பேசுற? போக போறியா? தீனா துகிராவை பார்க்க, அவர் வரட்டும். நான் சொல்லிட்டு போறேன் என்றாள்.
துகிரா புவனாவை அமர வைக்க, புவனா வெற்றியை பார்த்து, இத்தனை நாள் என்னை நல்லா பார்த்துக்கிட்டீங்க. ஏன் காவேரி ஆன்ட்டி கூட நல்லா பார்த்துக்கிட்டாங்க. இப்ப தான் அர்தீஸ் செத்துட்டானே? அவனுக்கு பயந்து தான் உங்க வீட்டுக்கே வந்தேன். நான் என் வீட்டுக்கு போகிறேன் என்றாள்.
புவி..என்ன பேசுற? தீனா அவன் கையை பிடிக்க அவள் எடுத்து விட்டு “தேங்க்ஸ்”. அம்மா, அப்பா என்னை விட்டு போனாலும் உங்க வீட்ல நான் கொஞ்சம் சந்தோசமா தான் இருந்தேன். நல்லா பார்த்துக்கிட்டீங்க. நான் கிளம்புகிறேன் என்று மீனாட்சியை பார்த்தாள்.
அத்தை மத்தவங்க என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நீங்களும் மாமாவும் தப்பு செய்யலை. வருத்தப்படாதீங்க. எல்லாரும் ஒரு நாள் உங்கள புரிஞ்சுப்பாங்க என்றாள்.
நீ இந்த காலோட எப்படி தனியா இருப்ப? மீனாட்சி கேட்க,
அவ தனியா இருக்கப் போறான்னு யார் சொன்னா? என்று துகிரா அவளிடம் வந்து, நானும் அவளுடன் அவள் வீட்டிலே தங்கிக்கிறேன். நான் சென்னைல்ல அதுவும் பணக்கார பொண்ணா வளர்ந்தனால இங்க கிராமத்துல..என்ன பேசுவாங்க? எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. ஆனால் இப்ப நான் தெரிஞ்சுகிட்டேன். நான் அவருடன் வந்தது தவறில்லை. அவருடன் ஒரே வீட்டில் தங்கியது தவறுன்னு இவங்க பேசியதுல தெரிஞ்சுகிட்டேன்.
தப்ப திருத்திக்கணும்ல என்று துகிரா புவனாவின் வீல் சேரில் கை வைக்க..
அக்கா..வேண்டாம். எங்க வீடு சின்னதா இருக்கும். சாப்பாடு வாங்க இப்போதைக்கு பணம் இல்லை. அண்ணாவிடம் வாங்கிட்டு தான் நானே எல்லாவற்றையும் வாங்கணும் புவி கூற,
புவி..என்னால எந்த ஒரு கஷ்டமான இடத்துலையும் சமாளிக்க முடியும். ஒரு வேலை அவர் உன் நிலையில் இருந்தாலும் அவருடன் வந்து இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன். ஒரு நிமிஷம் என்று தீனாவிடம் அவர் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காரா? கேட்டாள்.
ம்ம்..என்றான். சரி..என்று போனை எடுத்து பிரதீப்பை அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. மேலும் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. அவர் வேலையாக இருக்கார் போல. நான் மெசேஜ் பண்ணிடுறேன் என்று பிரதீப்பிடம் நடந்த எதையும் கூறாமல் நானும் புவியும் அவளோட வீட்ல இருக்கோம் என்று அனுப்பி விட்டு நகர அப்பத்தாவும் வெற்றியும் முன் வந்தனர்.
ஏம்மா..அவன் வந்தா நாங்க என்ன பதில் சொல்றது? அப்பத்தா கேட்க,
இப்ப வேற கொலைகாரன் ஊர்ல இருக்கான்னு பேச்சு அடிபடுது. உங்கள தனியா விட முடியாது. யாரும் போகக் கூடாது வெற்றி கூற,
மாமா..எங்களுக்கும் தன்மானம் இருக்கு. எங்கள கொஞ்சம் தனியா விடுங்க துகிரா கூற,
நீ சொல்றது புரியுதும்மா. ஆனால் இப்ப நிலைமை சரியில்லை. யார் பேச்சையும் எதுக்கு கேக்குற? எப்படியும் எங்க பசங்கள தான கட்டிக்கப் போறீங்க?
ஆமாம் மாமா. ஆனால் உங்க பையனை கட்டிக்கிட்ட பின் வர்றது தான் எங்களுக்கும் மரியாதை. உங்களுக்கும் மரியாதை புவனா கூற, தீனா அவளிடம் வந்து மண்டியிட்டு, என்னை விட்டுட்டு போகமாட்டேன்னு சொன்ன?
அவங்க என்னை பத்தி மட்டும் பேசல. உங்களையும் தப்பா பேசிட்டாங்க. இதுக்கு மேல நான் இங்க இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும். உங்கள நான் விட்டு எங்க போறேன். என்னோட வீட்டுக்கு தான போறேன். உங்களை காதலிக்க மாட்டேன்னு சொல்லல. உங்களை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு சொல்லல. வீட்ல தான் இருக்கணும்ன்னு இல்லையே என்று தீனா கன்னத்தில் கை வைத்தாள் புவனா.
ப்ளீஸ் புவி..போகாத. எனக்கு இப்ப தான் கொஞ்சம் நல்லா இருக்குற மாதிரி தெரியுது. நீ போகாத. நீ போனா கஷ்டமா இருக்கும் என்று கண்ணீர் வடிக்க, புவனா சிரித்துக் கொண்டு சக்கர..இங்க பாரேன் சார் அழுறாரு என்று கிண்டல் செய்தாள். அவள் அவனை சமாதானப்படுத்துவதை பார்த்து,
சின்ன புள்ளையா இருந்தாலும் யார் கிட்ட எப்படி பேசுனா மயங்குவங்கன்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க? வெற்றியின் தங்கை அவர்களிடம் வந்து மீண்டும் புவியை காயப்படுத்த, தீனா முகம் மாறியது.
அவன் எழ, புவனா அவன் கையை பிடித்து வேண்டாம் என்று தலையசைத்து தடுத்தாள். அவள் கையை எடுத்து விட்டு, மயக்குறாளா? அவளா?
சக்கர..இவங்க என்ன பேசுனாங்கன்னு விளக்கமா சொல்றியா? தீனா கேட்க, அவன் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.
நீங்க யார என்ன பேசுறது? என்னை பத்தி பேசுனீங்க சரி. ஆனால் துகியை பத்தியோ இல்ல புவிய பத்தியோ பேச அதிகாரமில்லை.
உங்க பொண்ணு தினமும் ஒருவனோட ஊர் சுத்துறாளே? அது உங்க கண்ணுக்கு தெரியலயா? மயக்குற வேலையெல்லாம் உங்க பொண்ணுக்கு தான் நல்லா தெரியும். ஆனா எங்க வீட்டு பொண்ணுங்கள..குடும்பத்தை பத்தி பேச தேவையில்லை. அவங்க காதல்ல உறுதியா இருக்குறவங்க.
அப்புறம் என்ன? இவ எங்க வீட்ல இருந்தாலும் இல்லைன்னாலும் அவள் படித்து முடிக்கும் வரை எங்களுக்குள் ஏதும் நடக்காது. படித்து முடித்த அந்த வருசமே நாங்க கல்யாணம் பண்ணிப்போம். ஒரு வேலை உங்க பொண்ணு ஒரு பையன் இருக்கும் வீட்டில் இருந்தா உங்க லட்சணம் தெரியும். முதல்ல..உங்க பொண்ணு எந்த கேடுகெட்டவனுடன் பழகி வயித்த பெருசாக்கிட்டு வராம பார்த்துக்கோங்க.
அவர் சினத்துடன் அவனை முறைத்து விட்டு, புவனாவிடம் சென்று இவன் பல பெண்களுடன் பழகி ஏமாற்றி இருக்கிறான். உன்னையும் ஒருநாள் இல்லை ஒருநாள் ஏமாற்றி விடுவான். அவனை விட்டு சென்று விடு என்றார்.
புவனா அவரை பார்த்து விட்டு, தீனாவை கண்ணசைத்து அழைத்தாள். அவன் கையை பிடித்து, இவரை பத்தி யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன். இப்ப தான் என்னை பத்தி பேசுனீங்க? நீங்க என்ன சொன்னாலும் நம்பவும் மாட்டேன். அவரை விட்டு செல்லவும் மாட்டேன். நான் கிளம்புகிறது எங்க குடும்பத்தை பத்தி யாரும் தப்பா பேசக்கூடாதுன்னு தான் போறோம் என்று துகிராவை பார்த்தாள்.
உங்களுக்கு பயந்து நாங்க போகல. நீங்க எங்கள பத்தி மட்டும் பேசி இருந்தா பரவாயில்லை. வெற்றி மாமா பேரும் கெட்டுப் போகும். நீங்க அத்தையையும் தப்பா தான பேசுனீங்க? ஆனா தீனா சொல்றத பார்த்தா..நீங்க பெரிய ஆளா இருப்பீங்க போல..துகிரா பேச, அவர் கோபமாக அடிக்க கையை ஓங்கினார்.
ஏய்..நீ யார் மேல கைய வைக்க பாக்குற? வெற்றி சத்தமிட்டார். பக்கத்து வீட்டு ஆட்கள் வந்து வேடிக்கை பார்க்க,
அண்ணா..என் மேலா கோபப்படுற?
ஆமா..நீ பேசுனதுக்கு அப்படியே விடுறதே தப்பு அபி அம்மா கூற,
ஆமாடா..தப்பு தான் என்று வெற்றி தீனா கையை பிடித்து உள்ளே சென்று, சில பத்திரங்களை காட்டி..இதில் உன் கையெழுத்திட்டு அவ மூஞ்சில விட்டெறிடா. நான் ஏற்கனவே சொத்தை பிரித்து விட்டேன் என்றார்.
அப்பா..என்றான் தீனா.
அவரே பேனா எடுத்து எல்லார் முன்னும் கையெழுத்து போடுடா என்று தீனாவிடமிருந்து வாங்கி அவரது இரண்டாவது தங்கையிடம் வந்தார்.
நான் யாருக்காகவெல்லாம் உயிரோட இருக்கேனோ? அவங்க எல்லாரும் கஷ்டப்படும் படி செஞ்சுட்ட. இனி உனக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுக்காக தான் என் பசங்கள பத்தியும் மீனாவை பத்தியும் தப்பா பேசுன. எடுத்துட்டு போ. இனி எங்க வீட்டுக்கு வர்ற உரிமை உனக்கும் இல்லை. உன் பிள்ளைகளுக்கும் இல்லை. இனி என் கண் முன்னே வந்துறாத என்றார்.
அய்யா..என்று அப்பத்தா பதற, உனக்கு உன்னோட புள்ள, பேர பசங்க முக்கியமா? இல்லை பொண்ணு முக்கியமான்னு நீயே பார்த்துக்கோ.
நீ வெளிய போ என்று கத்தினார். ஒரு நிமிஷம் நில்லுங்க.. பிரதீப் என்னோட சொந்த அண்ணன். அவன் கையெழுத்து துளசி, ஜானு கையெழுத்துடன் நாங்களே அனுப்புகிறோம். அப்ப எடுத்துக்கோங்க. இப்ப கொடுத்துட்டு போங்க என்று தீனா கூற, மாமா..என்ன பண்றீங்க? வேண்டாம்
என் கண்ணு முன்னாடி என் பையனையே கேவலமா பேசுறா? ச்சீ..இவெல்லாம் என் தங்கையே இல்லை என்று அவர் கூற,
மாமா..மன்னிச்சிருங்க என்று அவருடைய கணவர் கூற,போறீங்களா? என்று கத்தினார் வெற்றி.
வாடி..என்று அவர் தன் மனைவியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
இருவரும் உள்ளே வாங்க வெற்றி துகிரா, புவனாவை அழைக்க,.. மாமா..நாங்க போறது தான் நல்லது புவனா கூற,
தாராளமா போகலாம். ஆனால் என் பிள்ளைகிட்ட சொல்லிட்டு போம்மா..என்று துகிராவை பார்த்து மீனாட்சி கூறினார்.
ஆமாம்மா. எங்க புள்ளகிட்ட சொல்லிட்டு போம்மா என்று வெற்றி மீனாட்சி அருகே வந்து நின்றார். மீனாட்சி அவரை பார்த்து முறைக்க.. துகிராவும் புவனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். தீனா அவர்களை முறைத்துக் கொண்டு நின்றான்.
அத்தை..ஏன் அத்தை? மாமாவிடம் பேச கூட மாட்டீங்களா? துகிரா கேட்க, இல்லம்மா..முதல்ல மற்றவர்களிடமிருந்து தீர்ப்பு வரட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
அக்கா..என்று புவனா துகிராவை அழைக்க, துகிரா அவளிடம் சென்று குனிந்தாள்.
மாமா..என்னக்கா இப்படி செஞ்சுட்டாங்க? இப்ப அவங்க தங்கையை நாம தான் பிரிச்சிட்டோம்னு எல்லாரும் பேச மாட்டாங்களா? கேட்க.
அப்பத்தா அவளிடம் வந்து, யாரும் உங்கள ஏதும் சொல்ல மாட்டாங்க. புவனா பயந்து, உஃப்..உஃப் என்று ஊதி விட்டு திடீர்ன்னு முன்னாடி வந்து பயமுறுத்தாதீங்க பாட்டி என்றாள் நெஞ்சை பிடித்துக் கொண்டு.
யார் என்ன சொன்னா? என்னம்மா? வெற்றி கேட்க,
மாமா..இருக்கு. நாங்க இன்னும் உங்க குடும்பத்துகுள்ளவே வரல. அதுக்குள்ள இப்படி பிரிச்சிட்டோம்னு சொன்னா. நாங்க உங்க குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருக்க முடியாது.
அவள் கன்னத்தை பிடித்து இழுத்து, ஏன்டி உனக்கு துளசி வயசு தான்னா எவனுமே நம்ப மாட்டானுக. ரொம்ப யோசிக்கிறடி..அப்பத்தா மேலும் அவளது கன்னத்தை பிடித்து கிள்ள, தீனா அவரிடம் வந்து கையை தட்டி விட்டு,
அப்பத்தா..நீ தொடாமலே பேசலாம்.
எவன்டா இவன்? என்னோட பேத்திய தொட கூட விட மாட்டிக்கிறான்.
தொட்டா விடலாம். இப்படி பிடிச்சு இழுத்தா அவளுக்கு வலிக்குமே?
அடடா..பாட்டி..உங்க பேரன் ஓவரா தான் போறார்ல என்று துகிரா புவியின் கன்னத்தை பிடிக்க, அவள் கையில் விரலால் சுண்டினான் தீனா.
நீங்க இங்க இருக்க யோசிக்கலாமே? என்று இருவரையும் பார்த்தான்.
நோ..நோ..இது நிச்சய முடிவு துகிரா சொல்ல, ஆமா..நாங்க முடிவ மாத்த மாட்டோம் புவியும் கூறினாள்.
சரிம்மா..நீங்க போகலாம். எனக்கு நீங்க பாதுகாப்பாக இருக்கணும். அவ்வளவு தான். அதனால நான் சொல்றவங்களோட தங்கணும் வெற்றி கூற, இருவரும் பார்த்துக் கொண்டு சரி என்றனர்.