அத்தியாயம் 66

வேலு கவின் அம்மா, அப்பாவை பார்த்து, உங்களுக்கு விருப்பம் தானே?

கல்யாண நாள். நேரத்தை மாற்றலாமா? இல்லை குறித்த நாள் நேரமே சரி தானா? என்று சம்மதத்தை தெரிவித்தார் கவின் அம்மா. அப்பாவோ..எனக்கு சம்மதம் என்று நேரடியாக கூறினார்.

வேலு கவினை பார்க்க, அவன் அம்மாவிடம் சென்று நம்பிக்கையா தான் பேசுறார்? ஆனால் அவரை பத்தி முழுசா தெரியுமா? அவன் கேட்க, அகல்யா அவனிடம் வந்தாள்.

அக்கா..அவர பத்தி தெரியாம எப்படி கல்யாணம்?

ஏன்டா தெரியாது. தினமும் நம்ம வீட்டுக்கு வர்ற பையன் தான் அம்மா கூற, வீட்டுக்கு வருவாரா?

உங்க அப்பா வேலைக்கு போக மாட்டிக்கிறார். குடிக்கிறார்ன்னு நீ அவரை கண்டு கொள்வதேயில்லை. அவன் உங்க அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுவான். அதுவும் இந்த வருடம் தான் அதிகம்.

நான் அவரை பார்த்ததேயில்லை.

நீ உன்னோட அப்பாவையே பார்க்கமாட்ட. வீட்டுக்கு யார் வரன்னா பார்ப்ப? கடுத்தவாறு அம்மா கூற, அவன் அக்காவை பார்த்தான்.

ஆமாம்டா. எனக்கும் தெரியும்.

உனக்கும் சொல்ல தோன்றவில்லையா?

நான் என்ன சொல்றது? அப்பா குடிச்சுட்டு கீழ கிடந்தார். மாமா தான் அழைத்து வந்தார்ன்னு சொல்ல சொல்றியா? நீ வீட்டில் இருக்கும் போதே வந்துருக்கார். அதுவே உனக்கு தெரியல.

அக்கா..நீ..ப்ளீஸ்டா திரும்ப அவனை பத்தி என்னிடம் பேசாதே? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனே கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு சொல்லிட்டான். அதவிட..எனக்கு அவங்க அம்மாவை எப்படி சமாளிக்கப் போறேனோ? என்று தான் கவலையா இருந்தது. கல்யாணத்தை நினைச்சு நானே பயந்துக்கிட்டு தான் இருந்தேன். எல்லாமே ஓ.கே தான். ஆனால் அவன் மீது நான் வைத்திருந்த காதலை தூக்கி எறிய கஷ்டம் தான் என்று கவின் மார்பில் சாய்ந்து அழுதாள்.

இவ்வளவு நேரம் அவர்கள் பேசட்டும் என்று நேரம் கொடுத்தவன் அகல்யா அழவும் அவர்களிடம் வந்தான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவளிடம் வந்து கண்ணீரை துடைத்து விட்டு, சாப்பிட போகலாமா? அவன் வினவ. அகல்யா முகத்தில் புன்னகை வந்தது.

இப்ப சாப்பிட வேண்டாம் என்று அவள் கவினை பார்த்தாள். பதில் சொல்லு.

மாமா..நான் முடியாதுன்னு சொன்னா. கல்யாணத்தை நிறுத்தீடுவீங்களா? கவின் கேட்டான்.

அஃப் கோர்ஸ்.

மாமா இங்கிலீஸ் பேசுவீங்களா?

ம்ம்..கொஞ்சம் கொஞ்சம்.

படிக்கலைன்னு சொன்னீங்க?

அவன் பன்னிரண்டு வரை படித்தான். அவன் கல்லூரி போகும் சமயத்தில் தான் அவனுடைய பெற்றோர்கள் இறந்தாங்க. அதனால் மேல்படிப்பு படிக்க முடியல. நீங்க படிச்ச பள்ளியில் தான் படித்தான். உனக்கு அவனை தெரியாதா கவின்? பிரதீப் கேட்டான்.

அண்ணா..எனக்கு தெரியாது.

மாமா..உங்களுக்கு வயசு எத்தனை?

அது எதுக்கு கேக்குற? குறும்புடன் வேலு கேட்க,

அக்காவை கட்டிக்கப் போறீங்க? நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?

உன் அக்கா வயசு தான். எங்களுக்கு மூணு மாசம் தான் இடைவெளி.

என்ன? ரெண்டு பேரும் ஒரே வயசு தானா? கேட்டான்.

மாமா..நீங்க எதுக்கு படிக்கல? படிக்க பிடிக்கலையா? கேட்டான்.

அவனுக்கு முன் அகல்யா. அவன் நல்லா தான் படிப்பான் என்று அவனை பார்த்தாள்.

அக்கா…மாமாவை உனக்கு அப்பொழுதே தெரியுமா?

ம்ம்..தெரியும். நாங்க நான்கு வருசமா ஒரே வகுப்பில் படிச்சவங்க தான்.

அக்கா..என்று வேலுவை பார்த்தான். அவன் அகல்யாவை காதலுடன் பார்த்தான்.

மாமா..நீங்க அக்காவை காதலிச்சீங்களா?

ம்ம்..என்றான். அவள் அதிர்ந்து அப்பொழுதேவா? கேட்டாள்.

ம்ம்..என்றான்.

அவளுக்கு பழைய நினைவுகள் வந்து செல்ல, மாமா..கடைசி வருடம் நீங்க தான டாப்பர். அப்புறம் எதுக்கு நீங்க படிக்கலை? அகல்யா கேட்டாள்.

அவன் தயங்கி நிற்க, உங்க அப்பன் தான் காரணமென்று வேலுவின் தாத்தா வந்தார்.

நீ எதுக்குடா இவனோட புள்ளைய கட்டிக்கணும்? வேலுவை திட்டினார்.

தாத்தா.. என்னோட பேத்திய நீ கட்டிக்கிட்டா நல்ல இருக்கும்ன்னு நீங்க தான சொல்வீங்க?

இப்ப புடிக்கல..வேண்டாம்கிறேன்.

தாத்தா..என்று வேலு சத்தமிட்டான்.

இவனால தானடா உன்னோட வாழ்க்கையே மாறிப் போச்சு. எல்லாத்துக்கும் காரணமே இவள் தானே? என்று கவின் அம்மாவை தாத்தா குற்றம் சாட்டினார்.

தாத்தா..வேண்டாம் என்று அவரை பேச விடாமல் வேலு தடுக்க, கவின் அவர் முன் வந்து, நீங்க என்ன சொல்றீங்க? கவின் கேட்டான்.

உனக்கு என்னை தெரியுதா? கேட்டார் தாத்தா கவினிடம்.

எனக்கு தெரியலை என்றான்.

நீ பிறந்தப்ப..முழுசா வேலு அம்மாவிடம் தான் இருப்ப. ஆனால் என் மருமக தான் எங்களை பிடிக்காம. நீ வளர்ந்த பின் எங்களிடமிருந்து முழுசா என் பிள்ளைய வைச்சு பிரிச்சுட்டா. உன்னோட அப்பன் குடிக்க காரணம் பிசினஸால் இல்லை. என்னிடமும் அவன் தங்கையிடமும் பேச முடியாத காரணம் தான். என் பிள்ளைகள் எல்லாருக்கும் உரிமையான அந்த வீட்டை ஏமாற்றி வாங்கிய பின் தான் மனசு கஷ்டத்துல என் பொண்ணு செத்துப் போயிட்டா. அவ புருசனும் வீடு இல்லை என்றதும் ஓடி விட்டான். எங்களுக்கு இருந்தது நீங்க இப்ப இருக்குற அந்த வீடு மட்டும் தான். அது இல்லாமல் என் பேரனால் படிக்க வைக்ககூட என்னால் முடியல. மீதமிருந்தது கொஞ்ச பணம் தான். அதை வைத்து வாடகை வீடு பிடித்தோம். இவன் தான் படிப்பை விடுத்து வேலைக்கு சென்றான். சம்பாதித்தான். என்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அகல்யா அவள் அம்மாவை கோபமுடன் பார்க்க, கவினோ..அம்மா, அப்பா குடிக்க காரணம் நீங்க தானா? மாமா வாழ்க்கை மாறக் காரணம் நீங்க தான். மாமாவோட அம்மா சாக காரணமும் நீங்க தானா? என்று கத்தினான்.

அனைவரும் வேடிக்கை பார்க்க, வேலு அவனை தடுத்தான். விடுங்க மாமா..என்று கவின் சொல்ல அகல்யா அவள் அம்மாவிடம், உன் மேல இவ்வளவு தப்ப வைச்சுக்கிட்டு…அப்பாவை திட்டிக்கிட்டு இருந்திருக்க. எனக்கு உன்னை பார்த்த இப்ப என்ன தோணுது தெரியுமா?

இப்ப போனாலே அந்த பொம்பள மாதிரி தான் தெரியுது. என்ன அவ மருமகள கட்டுக்குள் வச்சுக்க பாக்குறா? நீ வாழ போன இடத்துல எல்லாரையும் பிரிச்சு அத்தை சாவுக்கு காரணமாகி, மாமாவும் தாத்தாவும் கஷ்டப்படுறத வேடிக்கை பார்த்துகிட்டு இருந்திருக்க. அந்த பாவம் தான் எங்கள இப்படி கஷ்டப்படுத்தி இருக்கு என்று சினத்துடன் பேசினாள்.

அகல்யா வேண்டாம்மா..என்று வேலு அவனிடம் வர, ஏன் மாமா..பள்ளி முழுவதும் முடிச்சிருக்கீங்கள? உங்களால வீட்டை வாங்க முடியாதா? அப்பொழுதே சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்ற திட்டம் அமலில் தான் இருந்தது.

அவன் எப்படி வாங்குவான்? அம்மாவை இழந்த அவனுக்கு அம்மாவாக கண்ணில் பட்டது உன்னோட அம்மா தான என்றார் தாத்தா.

கண்ணீருடன் கவின் அம்மா..வேலுவிடம் வந்து, என்னை மன்னிச்சிருய்யா என்று காலில் விழுந்தார். அத்த..என்று அவன் தள்ளி நிற்க, என்னை மன்னிச்சிருங்க மாமா என்று தாத்தா காலில் விழ, அவர் கோபமாக திரும்பிக் கொண்டார்.

அவருக்கு பிசினஸ்ல நட்டம். அதே நேரம் நீங்க ஏதோ சொத்து என்று பேசிக் கொண்டிருந்தீர்கள் அண்ணியிடம். அதை வைத்து..எங்க உங்க பொண்ணு மேல இருக்குற பாசத்துல எங்களை விட்டிருவீங்களோன்னு பயந்துட்டேன். மற்றவர் பேச்சை கேட்டு, இவரை மிரட்டி தான் இந்த வீட்டை இவர் பேருக்கு வாங்கினேன். மீண்டும் புள்ளைகளை விட்டால் திருப்பி வீட்டை வாங்கிடுவீங்களோன்னு பயந்து தான் உங்களிடம் விடவில்லை. ஆனால் இப்படி அண்ணி இறந்து போவாங்கன்னு நினைக்கல. பையனும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் என்று அழுதார்.

நீ வீட்டை வாங்கியதால் என் பொண்ணு சாகல. நீ உன் பையனை விடாம இருந்ததால அவனையே நினைச்சு தான் செத்து போயிட்டா. நீ வீட்டை வாங்கிய பின் இந்த பய வருவான்னு எதிர்பார்த்து வாசல்லயே காத்துக்கிட்டு கிடந்தா. ரெண்டே நாள் தான். அவ புள்ளைய பத்தி கூட கவலைப்படாம பாவிமவ போய் சேர்ந்துட்டா. உன்னை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும் என்று தாத்தா கவினை பார்த்து கூற, அவன் அழுதான். கவின் அம்மாவும் அழுதார்.

வேலு கவினை அணைத்துக் கொள்ள, என்னை மன்னிச்சிருங்க மாமா. எனக்கு எதுவுமே நினைவில் இல்லை.

அது எப்படி நினைவிருக்கும்? உன்னோட ப்ரெண்டு அந்த பொண்ணு ஸ்ரீக்கும். அதே நேரம் தான் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. உனக்கு அன்று வேகமாக அவளை பார்க்க போய் கீழே விழுந்து உன் தலையில் கல் பட்டு எங்களை மொத்தமாக மறந்து விட்டாய். ஆனால் மற்றவர்கள் உன் அருகே இருந்ததால் எல்லாரையும் நினைவில் வைத்திருந்தாய்.

ஆனால்..அம்மா..உனக்கு நினைவு இருந்திருக்குமே? அகல்யாவிடம் தாத்தா கேட்க,

அத்தை இறந்ததால் நீங்கள் ஊரை விட்டு சென்றதாக சொன்னாங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல நான் மாமாவை பார்த்தேன். ஆனா அவரிடம் ஏனோ என்னால் முன்பு போல் பேச முடியவில்லை. அம்மாவிடம் கேட்டால் நீங்கள் தான் அப்பாவிடம் சண்டை போட்டதாக சொல்லி என்னை பேச விடாமல் செஞ்சுட்டாங்க தாத்தா. நிஜமாகவே நடந்து எதுவுமே எனக்கு தெரியாது தாத்தா என்று வேலுவை பார்த்தாள். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

அவனிடம் சென்ற அகல்யா, எனக்கு எதுவுமே தெரியாது மாமா. அன்றே தெரிஞ்சிருந்தா அத்தையை போக விட்டுருக்க மாட்டேன் என்று கூற, அவளை அணைத்து வேலு அழுதான்.

உனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கா மொசக்குட்டி? கேட்டான்.

மாமா..அத்தை என்னை அப்படி தான கூப்பிடுவாங்க என்று அழுது கொண்டு, எனக்கு எல்லாமே நினைவு இருக்கு. நாம மூணு பேரும் சேர்ந்து விளையாடியது. நான் பெரியபிள்ளையானப்ப எனக்கு மாமா..நீங்க தான் ஓலை கட்டுனீங்க? அத்தை எனக்கு புடவை வாங்கி தந்தாங்க. ஆனா அது இப்ப என்னிடம் இல்லை.

இருக்கு. என்னிடம் தான் இருக்கு என்றான்.

மாமா..என்று மீண்டும் அவனை அணைத்து அழ, தாத்தா அவர்களிடமிருந்து இருவரையும் பிரித்து விட்டார்.

தாத்தா..என்று அகல்யா அவரை பார்த்து அவரது கண்ணாடியை தொட்டாள். அவர் கண்ணீருடன் அவளை பார்த்து, நீ மறக்கலையா? கேட்டார். மேலும் அவரை நெருங்கிய அகல்யா…அவரது கண்ணாடியை எடுத்து அவள் முதுகுக்கு பின் மறைத்து அழுதாள்.

நீ சிரிப்படா? என்று அவர் கூற, ஆமா தாத்தா. ஆனால் இப்ப சிரிக்க முடியல தாத்தா என்று அவரை கட்டிக் கொண்டு அழுதாள். கவின் மூவரையும் பார்த்து, தலையை பிடித்து அமர்ந்தான். அவனுக்கு எதுவுமே நினைவிலே இல்லை.

நித்தி அப்பா கேசவன் அவனை பார்த்து, மருமகனே..இங்க பாரு. தேவையில்லாம நீ நினைவுக்கு கொண்டு வர ஃபோர்ஸ் பண்ணாத. உனக்கு வலி மட்டும் தான் கிடைக்கும்.

அவன் அப்பா அவனிடம் வந்தார். அப்பா..ஏம்பா உனக்கும் சொல்லவே தோணலையா? எனக்கு எதுவுமே நினைவிலே இல்லை. நான் என்ன யோசித்தாலும் நினைவிற்கே வர மாட்டிங்குது என்று கத்தினான். அவன் அம்மா அருகே வர,

வேணாம்மா. என் பக்கம் வாராதீங்க என்று கோபப்பட்டான்.

வேலுவும் அகல்யாவும் கவினிடம் வர, அங்கே காரிலிருந்து சைலேஷ், நித்தி, கவினிடம் வந்தனர்.

இவர்களை பார்த்த கவின் எழுந்து நேராக நித்தியிடம் சென்றான்.

நித்தி..நீ சொல்லு. வேலு மாமா சிறுவயதிலிருந்து பழக்கமா? எனக்கு எதுவுமே நினைவுக்கு வர மாட்டிங்குது? சொல்லு என்று அவள் கையை பிடித்தான். சைலேஷ் அவனை முறைக்க,

நித்தி கையை தட்டி விட்டு சைலேஷ் பின் மறைந்து நின்றாள். அவனும் அவளை திரும்பி பார்க்க,

அப்ப..உனக்கும் தெரிஞ்சிருக்கு? ஏன் என்னிடம் சொல்லலை என்று சைலேஷ் பின் வர, அவள் பயந்து முன் வந்தாள். சைலேஷ் விலகி கையை கட்டிக் கொண்டு நித்தியை பார்த்தான்.

என்ன விசயம்? கேட்கிறான்ல. சொல்லு..என்றான் சைலேஷ்.

கவின்…என்று அழுது கொண்டே, உன்னோட அத்தை இறந்த பின் உன் அம்மா அப்பாவிடம் பேசுவதை நான் கேட்டேன். எங்கே அந்த வீட்டை விற்று விசயம் உனக்கு தெரிந்து கஷ்டப்படுவியோன்னு நான் சொல்லலை.

நீங்க எல்லாருமே சேர்ந்து தான் இருந்தீங்க. ஆனால் ஆன்ட்டி என்று கவின் அம்மாவை பார்த்தாள். அவர் அழுது கொண்டிருக்க, அவள் அவனிடம் பேசுவதை நிறுத்தி, ஆன்ட்டி என்று அவரை அணைக்க கவினிற்கு கோபம் அதிகமானது.

நித்தி..என்று கத்தினான்.

அவள் அவனை பார்த்து விட்டு, அவர்கள் தாத்தா முன் வந்து,

ஆன்ட்டி செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க உங்க பொண்ண பத்தி வீட்டுக்கு வர்றவங்க போறவங்க கிட்ட பெருமையா பேசுனீங்க. அப்ப எல்லாரும் ஆன்ட்டிய ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. நானே அத நேரடியா பார்த்திருக்கேன்.

புரியாமல் தாத்தா நித்தியை பார்க்க, உங்க பொண்ணு தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறா..வேலையெல்லாம் பார்ப்பா..அது நல்லா செய்வா..இது நல்லா செய்வா..என்று அந்த வீட்ல உங்க பொண்ணு மட்டும்  இருக்கிற மாதிரியும், ஆன்ட்டி அங்க இல்லாத மாதிரியும் தான் பேசுவீங்க. வாய்க்கு வாய்..என் பொண்ணு…என் பொண்ணு தான்.

எத்தனை நாள் தான் ஆன்ட்டி பொறுமையா இருப்பாங்க? நீங்க உங்க பொண்ணை உயர்த்தியாக பேசலாம். அவங்க அதுக்கு தகுதியானவங்க தான். அதுக்கு ஆன்ட்டி ஒன்றும் குறைச்சல் இல்லையே. அவங்களும் உங்கள நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க.

கவின் எப்படி அவன் அத்தையே கதின்னு இருந்தானோ? அதே போல்  வேலு அண்ணாவென்றால் ஆன்ட்டிக்கும் உயிர் தான். உங்களுக்கு தெரியாதா அண்ணா? என்று வேலுவை பார்த்தாள். அவனும் கண்கலங்க தலையசைத்தான்.

அண்ணா…கஷ்டப்படும் போது ஆன்ட்டி என்னிடம் அவரை பற்றி பேசி பேசி என் காதுல இரத்தம் வராத குறை தான். ஆனால் அக்காவிடம் இதை காட்டிக் கொள்ள மாட்டாங்க. அன்று அவங்க பேசியதை கேட்ட பின் அவரிடம் தனியாக பேசிய போது அனைத்தையும் கூறி அழுதாங்க. எனக்கும் அன்று ஆறுதல் தேவைப்பட்டது என்று நித்தி தாரிகாவை பார்த்தாள்.

ஸ்ரீக்கு அன்று தான் தலையில் அடிப்பட்டு என் கண்முன் இரத்த வெள்ளத்தில் சென்றாள். நான் அன்று அவரிடம் ஆறுதலுக்காக சென்று நான் அவளை பற்றி புலம்ப, கவின் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏதும் தெரிய வேண்டாம். தெரிந்தால் என்னை வெறுத்து விடுவான்னு சத்தியம் வாங்கினாங்க. பின் வேலு..வேலு..வேலு..தான். அன்றிலிருந்து தினமும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக பேசிக் கொள்வோம் என்று நித்தி அழுதாள்.

தாரிகா நித்தியை அணைக்க, பாரு..தாரி..எங்க ஸ்ரீக்கு இன்னும் எங்களுடன் இருந்த நினைவேயில்லை என்று நித்தி அழுதாள். தாத்தா கண்ணீருடன் ஓரிடத்தில் அமர்ந்தார். அவர் மகன் அவரருகே வந்து அமர்ந்து, என்னை மன்னிச்சிருங்கப்பா..என்று அழ, கவின் அம்மாவும் அவரிடம் சென்றார்.

ஏன்மா..நீ நேரடியாகவே பேசி இருக்கலாமே?

மாமா..என்னை மன்னிச்சிருங்க என்று அழுதார்.

மாமா முதல்ல மாதிரி நாம சேர்ந்தே இருப்போம் என்று கவின் அம்மா கூற, அவர் அனைவரையும் பார்த்தார்.

வேலு தாத்தாவை பார்த்து, எங்க திருமணம்?

உனக்கு விருப்பம் தானம்மா? என்று தாத்தா அகல்யாவிடம் கேட்க, அவள் வேலுவின் கையை பிடித்துக் கொண்டாள்.

திருமணம் நடக்கும். ஆனால் சேர்ந்து இருப்பதை நாம அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.

கவின் மட்டும் அனைவரையும் முறைத்தபடி இருந்தான். பிரதீப் வேலுவிடம் கண்ணை காட்ட, அகல்யா கையை விடுத்து வேலு கவினிடம் சென்றார்.

வேலு கவின் கையை பிடிக்க, மாமா..பேசாதீங்க. எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்கீங்க? நீங்க நடந்ததை சொல்லி இருக்கலாம்ல.

ஆமாடா..அவன் சொல்வான்? அவன் அம்மா இறந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து முன்னேறாம ஏற்கனவே கோபத்துல இருக்கிற உன் அம்மாவிடம் சிக்கித் தவிக்கணுமா? வேலுவின் தோழன் கேட்டான்.

சும்மா இருடா என்று வேலு கையமர்த்தினான்.

கவின் அவனிடம். எல்லாருக்குமே விசயம் தெரியும். எனக்கு மட்டும் தான் தெரியாதா? கோபமாக கத்தினான்.

உனக்கு என்ன? எல்லாமே தெரியணும் அவ்வளவு தான? என்று அவனது கையை பிடித்து வேலு இழுத்து சென்றான்.

நேராக வேலு வீட்டிற்குள் சென்று அவர்கள் சிறு வயதிலிருந்து வளர்ந்த ஆல்பத்தை காட்டினான். அதில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. அவர்களது கடைசி புகைப்படத்தில் கவின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவனது பிறந்த நாளில் எடுத்தது இருந்தது.

ஆனால் கவினுடன் நெருக்கமாக இருந்த அத்தை இன்று புகைப்படத்தில் மாலையிட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கவினுக்கு நினைவு வரவில்லை என்றாலும் அவருடனான நெருக்கம் ஏதோ உணர்வை கொடுத்து கதறி அழுதான். தாரிகா அவனருகே வந்து அவனது கையை பிடித்தாள்.

பாரு..தாரி..இவங்க தான் என்னை வளர்த்தாங்களாம். அவங்க இறந்தது கூட தெரியாம இருக்கேன் என்று கதறி அழுதான். அவள் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொள்ள, அகல்யாவும் அவர்களை அணைக்க, நித்தி வர..ஒவ்வொருவராக கவினுக்கு ஆறுதலாக வந்தனர்.

அவன் கண்ணை துடைத்து அனைவரையும் விலக்கி விட்டு வெளியே வந்தான். நித்தி கவினிடம், மாமா எங்க? பிரச்சனை முடிஞ்சதா? நித்தி கேட்க,

அவரு கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு.

டேய்..என்று நித்தி அகல்யாவை பார்க்க, அவள் வேலு கையை பிடித்து தூக்கி காட்டினாள்.

நித்தி கண்கள் கண்ணீருடன் சிரிக்கவா? அழவா? புரியாமல் இருக்க, சைலேஷும் அவளை பார்த்தான்.

நீ அழுறியா? சிரிக்கிறியா?அவன் கேட்க, தெரியலையே என்று பாவனையை காட்டினாள்.

நான் வேலு மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று அகல்யா கூற, அக்கா..என்று உங்களுக்கு பிரச்சனையில்லையே? என்று அணைத்து கேட்டாள் நித்தி.

இல்ல நித்தி. நான் ரொம்ப லேட்டா தான் எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன் என்றாள். அகல்யாவிற்கு ஏதோ பெரிய நிம்மதியாக இருந்ததே தவிர கண்களில் கண்ணீரே இல்லை.

நித்தி ஆச்சர்யமுடன், எல்லாமே மாறுது. இன்னும் சில விசயமும் மாறினால் நல்லா இருக்கும். ஆனால் மாற வாய்ப்பிருப்பது போல் தெரியல என்று அழுதாள்.

சைலேஷ் அவளிடம், எல்லாத்துக்கும் நேரம் இருக்கு. இவங்க வாழ்க்கை மாறியது போல் மாறும் எல்லாமே மாறும் என்று இருவரும் பேச, நித்தி அப்பா அவள் முன் வந்து..நீ ஸ்ரீய சொல்றியாம்மா?

அப்பா..என்று அவரை அணைத்து,..நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவ இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டா என்று அழுதாள்.

நித்தி..போதும். அழாதே..பிரதீப் கூற, அண்ணா..உங்க சித்தி என்று கேட்க,

எனக்கே எல்லாமே குழப்பமா இருக்கும்மா..என்றான் பிரதீப். சைலேஷ் அவனிடம் வந்து, அவங்க நிலையில் இருந்து ஒரு நிமிடம் யோசித்தால் அதற்கான தெளிவான விடை கிடைக்கும் என்றான்.

சைலேஷை பார்த்து ஒருவர்,..தம்பி சொல்றது சரி தான். வெற்றி..நல்லா பேசிக்கிட்டு இருந்த மனுசன். ரொம்ப அமைதியாகிட்டார் கல்யாணத்திற்கு பின். நாங்களும் முதலில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நான் அவரை சந்திக்க சென்ற போது நான் பார்த்தேன். வெற்றியும் மீனாட்சியும் போதையில் சேர்ந்து இருந்ததை உன்னுடைய வளர்ப்பு அப்பா மறைந்து நின்று பார்த்தான். ஆனால் தடுக்கவில்லை. அங்கிருந்து செல்லவும் இல்லை. அவனுக்கு போதை மருந்து கொடுத்திருந்தாலும் அவன் அவங்களை பார்த்திருந்தால் தடுத்திருக்கணும். எனக்கு தெரிந்து அவனுக்கு ஏதாவது ஆகி இருக்கணும். இல்லை அவன் விட்டு கொடுக்க நினைத்திருக்கலாம். அதுவும் இல்லை என்றால்…என்று தயங்கினார். பிரதீப் அவரையே பார்க்க, இருவரையும் பழி வாங்க அவர்களை வேண்டுமென்றே..அவர் கூற, போதும் நிறுத்துங்க..என்று கத்தினான்.

இல்ல தம்பி. நான் கடைசியா சொன்னது உண்மை தான் என்று அவர் போனை காட்டினார். இது அந்த வேலீஸ்வர் போன் என்று கொடுத்தார்.

உங்களுக்கு அவர் போன் எப்படி கிடைத்தது?

அவர் இறந்தது தெரிந்து நான் பார்க்க சென்றேன். அங்கே உன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி கொடுத்தார்.

எனக்கு வெற்றி எல்லா விதத்திலும் உதவி இருந்தான். அன்று நடந்ததை நான் மறைந்து தான் பார்த்தேன். எனக்கு வெற்றியை சிறுவயதிலிருந்து தெரியும். உன் அம்மா விருப்பமில்லாமல் ஏதும் நடக்கலை. அவங்க மேல தப்பு இல்லை. உன்னோட வளர்ப்பு அப்பாவும் அந்த வேலீஸ்வரும் காவேரியின் காதலை துரும்பாய் பயன்படுத்தி உங்க அம்மா, அப்பாவை பிரித்து இருக்காங்க. அவங்களுக்குள் ஏதும் சண்டை வரவில்லை என்பதால் இதை வைத்து முயற்சி செய்தனர்.

இதை வேலீஸ்வருக்கு அனுப்பினார் வெற்றியின் அண்ணன். ஆனால் வேலீஸ்வர் இதை வைத்து மீனாட்சியை அடைய நினைத்து வெற்றி அண்ணனை மிரட்ட..

போங்கடா. நான் அவள ஊரவிட்டே அழைச்சிட்டு போரேன்னு போனாரு. கடைசில அவரையும் கொன்னுட்டாங்க.

தம்பி..உங்க அப்பா வெற்றி தான்னு நீங்க ஒத்துகிட்டு தான் ஆகணும். நியாயமா மீனாட்சிக்கும் வெற்றிக்கும் தான் திருமணமே நடக்க முடிவு செஞ்சாங்க மீனாட்சி வீட்ல. ஆனால் வேலீஸ்வருக்கு நிச்சயமான பின் தான். அவன் கெட்டவன் என்றதும் நிறுத்தினாங்க. பின் தான் மீனாட்சி தயங்க அவள் வீட்டில் காதலை சொல்ல வெற்றியை அழைத்து பேசி ரெண்டு பேருக்கும் முடிச்சிருவோம்ன்னு இங்க பாருங்க புகைப்படமெல்லாம் சந்தோசமா எடுத்தாங்க வெற்றியுடன். ஆனால் வேலீஸ்வர் சூழ்ச்ச்சியில் சிக்கினார் வெற்றியின் அண்ணன். உங்க அப்பத்தாவிடம் பேசுவதற்குள் விழா நேரத்தில் மீனாட்சி அம்மாவை மிரட்டி, அவங்க பெற்றோர் பணம் வாங்கினாங்கன்னு மீனாட்சியை நம்ப வைச்சு. அவங்களையும் உன்னோட அம்மா மீனாட்சியிடமிருந்து பிரித்து, மீனாட்சியை சம்மதிக்க வைத்தது தான் உங்களுக்கே தெரியுமே?

இவங்க எல்லாரோட சூழ்ச்சியில உன்னோட அம்மாவும், உன்னோட வெற்றி அப்பாவும் தவிச்சு, துடிச்சு..உங்க அப்பா அமைதியா இருந்து பார்த்தாலே. வெற்றி அழுது பார்த்தியா? அவன் எப்ப கதறினான் தெரியுமா? அவனை போல் ஒருவனை தயார் செய்து மீனாட்சி போல் ஒரு பொண்ணை அன்று நடந்த விபத்தின் போது ரேப் செய்தது போல் காட்டி அவனை கதற வைத்து,..அந்த வீடியோ வைத்து மிரட்டி அவனை கடத்தி அவனை போல் ஒருவனை உங்க வீட்ல உலவ வைத்தார்கள்.

அவனும் மீனாட்சி தான் என்று நம்பி..அவள் மானத்தை காக்கவே இந்த ஒரு மாதமாக அலைந்து கொண்டிருந்தான் இரவும் பகலுமாய். இந்த வயதில் கூட என் நண்பனுக்கு நிம்மதி இல்லை.

இதுல..அவன் பொண்ணாட்டி வேற..என்று தலையில் அடித்தவர் தன் கணவனை தான் அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்பி..ஏமாந்து அந்த வலியை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் இப்ப அவனை கஷ்டப்படுத்தி செத்தே போயிட்டா.

தம்பி..உன்னோட அம்மா மீனாட்சி அதுக்கு மேல கஷ்டப்பட்டார். வெற்றியோட அண்ணன் உங்க அப்பத்தாவிடம் எந்த அளவு நல்லவன் போல் நடித்தானோ..அதுக்கு மேல மோசமானவன். உன்னோட அப்பத்தாவுக்கு சந்தேகம் வந்துடக் கூடாதுன்னு மீனாட்சிய அம்மா வீட்டுக்கு அழைச்சு போவானான். ஆனா அவங்க முன்னாடியே உன்னோட அம்மாவை அவதூறாக, கேவலமாக பேசி அவங்க பெற்றோரை காயப்படுத்து..ச்சீ..அவனெல்லாம் மனுசனான்னு கேட்குற அளவு உன்னோட அம்மா கஷ்டப்பட்டாங்க.

உங்க அம்மா வாழ்க்கையை நினைச்சு வருத்தப்பட்டு வருத்தப்பட்டே அவங்க அப்பா செத்துட்டாரு. அப்பொழுதும் விடாம அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய்..அவங்க அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. பாவம்பா..மீனாட்சி. அந்த பொண்ணு உடைஞ்சே போச்சு. ஒரு முறை கோவிலில் வைத்து பார்த்த போது..என்னிடம் சொல்லுச்சு..புள்ளங்கள நினைச்சா கவலையா இருக்குன்னு புலம்புச்சு. எனக்கு அப்ப புரியல. ஆனா அவ செத்துட்டான்ன்னு சொன்ன புறவு தான் நானும் வெற்றியும் சேர்ந்து நிறைய விசயம் தெரிஞ்சுகிட்டோம்.

நீ யார நினைச்சு வருத்தப்பட்டு வெளிய போனீயோ? அவன் நல்லவன் இல்லை. யார் மேல கோபமா இருந்தியோ? அவன் தான் நல்லவன்.

நான் எதையும் வெளிய சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டான் வெற்றி. உனக்கு நினைவிருக்கா..பெத்தவங்க கொன்னுட்டான்னு அவனிடம் கோபிச்சிட்டு நீ போனப்ப..அவன் ஒரு முறை தான் அவனுடன் இருக்க சொன்னான். கட்டாயப்படுத்தல. அதுக்கு காரணம் காவேரி உன்னையும் பாப்பாவையும் ஏதாவது செய்து விடுவாளோ என்று பயந்து தான். அவனோட பொண்ணுங்களும் வெளிநாட்டுல இருக்காங்க சந்தோசமா.. வாரத்திற்கு ஒரு முறை அவனை பார்ப்பாங்க. அது தெரியுமா உனக்கு? ஆனால் இந்த தீனா பையன் தான் அவன் சொன்னதை புரிஞ்சுக்கல. காவேரி பெத்த புள்ளையா இருந்தாலும் அவங்க எல்லாரையும் இடஞ்சலா தான் பார்த்தாள்.

தீனா வெளியே போகும் போது துளசிய திட்டுனா கோபத்துல அவனோட கூட்டிப் போயிடுவான்னு வெற்றி திட்டமெல்லாம் போட அவன் அவளிடம் சிக்கியதில்லாமல்…அந்த குட்டிப் பொண்ணை புவனாவை காதலிக்கிறேன்ன்னு அவளையும் சேர்த்து மாட்டி விட்டான்.

ஹாஸ்பிட்டலில் அர்தீஸ் வந்தது வெற்றியால் அல்ல.. காவேரியால். ஜானு, துளசிய கடத்துனதுலையும் அவளும் இருக்கா. இப்ப..கூட உங்க எல்லாரையும் கொன்னுட்டு வெற்றிய மிரட்டி அழைச்சுட்டு போக நினைச்சா.

ஆனா இதுல நீங்க மட்டுமல்லாம..நீ கட்டிக்கப் போற பொண்ணோட அண்ணன், துருவன்,..ஏன் சக்கரைய கூட ஆழமாக கவனிச்சாங்க. எப்படியோ முடிஞ்சது.

இனி..உங்க அம்மா, அப்பா வாழ்வு உங்க கையில தான் பார்த்துக்கோங்க. அதே மாதிரி நீங்களும் தீனாவும் எப்பொழுது ஒண்ணா இருந்தா உங்க குடும்பமே சந்தோசமா இருக்கும் என்று தோளில் இருந்த துண்டினால் கண்ணீரை துடைத்து விட்டு சென்றார். பிரதீப் கண்ணீருடன்..என்னோட அப்பாவை நானே காயப்படுத்தீட்டேன். அவரு ரொம்ப கஷ்டப்பட்டுருப்பாரு என்று அழுதான். மற்றவர்களுக்காகவாது எல்லாமே ஓரளவேனும் தெரிஞ்சிருக்கும். அகல்யா கல்யாணப் பொண்ணு என்பதால் வெளியே விட்டுருக்க மாட்டாங்க. அதனால் காவேரி இறந்ததை தவிர ஏதும் தெரியாது. அகில் அம்மாவும், அபி அம்மாவும் பிரதீப்பை சமாதானப்படுத்தினர்.