அர்தீஸ் உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என்று வேஷ்டியை மடித்து கட்டி வேகமாக நடந்தான் பிரதீப்.
அண்ணா..நில்லுங்க. இப்ப ஜானு பத்திரமா இருக்கா. இங்க இருக்கிறவங்களுக்கு தான் அவனால் ஆபத்து துருவன் கூற, பிரதீப் கால்கள் நின்றது.
என்ன? இங்கையா? பிரதீப் கேட்க, அண்ணா..அவன் மீண்டும் தப்பித்து விட்டான். கண்டிப்பா புவி அவனோட அடுத்த இலக்கா இருக்கும். நீங்களும் கவனமா இருங்க என்று துளசியை பார்த்தான். அவன் பார்ப்பதை பார்த்து பிரதீப்பும் துளசியை பார்த்தான். அவள் முகம் பயத்தை தத்தெடுக்க நின்றிருந்தாள். ஏற்கனவே அவனோட அம்மா, அண்ணா இறந்ததுக்கு நம்ம எல்லார் மேல தான் கோபமா இருக்கான்.
இப்ப ஆதேஷ் அண்ணா வேற, அவனை சுட்டிருக்காங்க. மேலும் சினத்துடன் இருப்பான். அதனால கவனமா இருங்க. அர்ஜூன் அண்ணா நம்பர் குடுங்களேன் அவன் கேட்க,
நாளைக்கு வாங்கிக்கோ துருவா. நீ வீட்டுக்கு போ. அம்மா கஷ்டத்துல இருப்பாங்க. அவங்கள பார்த்துக்கோ அவனை அனுப்ப, அவன் துளசியை பார்த்துக் கொண்டே வெளியே அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். துகிரா இருவரையும் பார்த்தாள்.
எல்லாரும் உள்ள போய் தூங்குங்க பிரதீப் கூற, அண்ணா ஜானுவிடம் பேசணும் துளசி கூற, துகிரா ஏற்கனவே ஆதேஷிற்கு போன் செய்தாள்.
அவளிடமிருந்து போனை பிடுங்கிய பிரதீப், மாப்பிள்ள ஜானு நல்லா இருக்காளா? ஆதேஷிடம் கேட்க, பேசு ஜானு என்று அவன் போனை ஜானுவிடம் நீட்டினான்.
இல்ல மாமா. அப்பா, அர்ஜூன் அண்ணா, அபி அண்ணா சரி பண்ணிட்டாங்க.
அபிக்கும் தெரியுமா? யாருக்குமே என்னிடம் சொல்ல தோணலைல பிரதீப் சினத்துடன் கேட்டான்.
மாமா..நீங்க ஏற்கனவே கஷ்டத்துல இருந்தீங்க. நான் தான் சொல்லிக்கிறேன்னு சொல்லி அவங்கள தடுத்துட்டேன். மன்னிச்சிருங்க மாமா என்றான். பின் அனைவரும் பசி விட்டு படுக்க செல்ல,
துகிரா பிரதீப் அறைக்கு சென்று..நீங்க நல்லா தான இருக்கீங்க? நான் இங்கேயே இருக்கவா? என்று அவனுடன் படுத்துக் கொண்டான். அவன் கண்ணீருடன் இருக்க, அவனை அணைத்து சமாதானப்படுத்தி அவள் அவனை அணைத்தவாறே தூங்கி விட்டாள்.
தீனாவிடம் வந்த பிரதீப் கிளம்பலாமா? என்று கேட்க,
நீ புல்லட் எடுத்து வராத. கார் எடுத்துட்டு வா. நான் என்னோட வண்டியில வாரேன் தீனா கூற, இருவரும் வேலீஸ்வர் வீட்டை நோக்கி சென்றனர்.
வீட்டை அடைந்ததும் உள்ளே செல்ல யாருமில்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. அந்த பய இங்க வரலை போலடா தீனா.
ஆமாண்ணா. அப்படி தான் தெரியுது.வா..என்று தீனா கையசைக்க, பிரதீப்பும் உள்ளே சென்று அவன் அம்மாவை தேடினார்கள்.
அவர்கள் நினைத்தது போல் பிரதீப் அம்மா அங்கே தான் இருந்தார். வீட்டினுள் ஓர் ரகசிய அறையில் இருந்தார்.
அம்மா..இங்க இல்லையேடா? பிரதீப் கூற,
இங்க தான் இருக்கணும். நான் என் ஆட்களை வைத்து ஏற்கனவே பார்த்து விட்டேன். இவர்களது மற்ற வீடு, தோப்பு வீடு..எதிலுமே அம்மா இல்லை. கண்டிப்பா இங்க தான் இருக்கணும் அண்ணா.
அவங்கள யாருக்கும் தெரியாம தான் வைச்சிருக்கணும். அதனால ரகசியமான இடத்துல இருப்பாங்க. அண்ணா..எல்லா பொருட்களையும் எடுத்து பாரு..ஏதாவது செய். சீக்கிரம் என்றான் தீனா.
இருவரும் ஒவ்வொரு பக்கமாக தேட..ஓர் அறையில் மட்டும் மரப்பலகையால் தரை போடப்பட்டு இருந்தது. அதை தட்டி பார்த்து அங்கிருந்த அனைத்தையும் பார்த்தான் தீனா. அதில் ஒரு அலமாரி வித்தியாசமாக மீன் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. தீனா அதை தொட்டு பார்த்தான். அதனுடைய கண்கள் பளபளக்க அதை தொட்டான். அந்த அலமாரி திறக்க, அண்ணா..இங்க வா தீனா பிரதீப்பை அழைத்தான்.
அலமாரி திறந்தவுடன் பாஸ்வேர்டு கேட்டது. இருவரும் யோசித்தனர். தீனா அந்த மீனை உற்று பார்த்தான். கண்டுபிடிச்சுட்டேன்..என்று மீனு..என்று அழுத்தினான் தீனா. பிரதீப் அம்மா பெயர் மீனாட்சி.
அறைகதவு ஒன்று தென்பட்டது. அதற்கான சாவி தனியே கண்ணாடி பெட்டியினுள் இருந்தது. தீனா அதை உடைக்க முற்பட்ட நேரத்தில் அவனை தடுத்த பிரதீப், அந்த கண்ணாடியாலான பாக்ஸை சுற்றி பார்த்தான். அதன் முனையில் மிகச்சிறிய அளவிலான ஏற்றி இறக்கும் பட்டன் இருக்க, அதை ஏற்றி விட்டான்.
அண்ணா..உன் மூளையோ மூளை தீனா அவனை பாராட்ட, இதை கவனிக்கும் நிலையிலா பிரதீப் இருக்கிறான்.
அவன் அதை கதவில் பொருத்தி உள்ளே சென்றான். பலவாறு பொருட்கள் இருக்க தூரத்தில் ஒரு மெத்தை தெரிந்தது. அதனருகே சென்ற இருவரும் கண்ணீருடன் பார்த்தனர்.
மெத்தையில் சங்கிலியால் கட்டப்பட்டு படுத்திருந்தார் மீனாட்சி. அவர் தூங்குவது போல் இருக்க, அவர் நரைமுடி களைந்து ஆடை மட்டும் புதியது போல் இருந்தது.
அம்மா..என்று அருகே சென்றான் பிரதீப்.
வெல்கம் பாய்ஸ்..என்றொரு சத்தம் கேட்டது. குரலே சொன்னது குரலில் சொந்தக்காரன் வெற்றி சக்கரவர்த்தியென்று.
என்னோட அம்மாவை என்ன பண்ணி வைச்சிருக்கீங்க? பெருங்குரலெடுத்து சீற்றத்துடன் கத்தினான் பிரதீப். அவர்கள் முன் வந்தார் வெற்றி சக்கரவர்த்தி.
அவன் சத்தத்தில் விழித்த மீனாட்சியை பார்த்து, பெரியம்மா..என்று தீனா வர,..
வராத..வராத..என்று கத்தினார். அவர் சத்தத்தில் பிரதீப் அவரிடம் வந்தான்.
வராத..வராத..வராத..என்று அழுதார்.
அம்மா..நான் உங்க மகன் பிரதீப். என்னை பாருங்கம்மா..என்று அவரை பிடிக்க, அவர் மீண்டும் வராதே..வராதே.. என்று கத்தினார். இருவரும் தீனா அப்பாவை பார்க்க..அவளுக்கு யாருமே தெரிய மாட்டாங்க. அவள் மனநோயாளி என்றார்.
யோவ்..என்ன சொல்ற? தீனா கேட்க,
ஆமாம் அவளுக்கு நினைவே ஒரு மாதத்திற்கு முன் தான் வந்தது. நான் இவளுக்காக தான் வேலீஸ்வர் பேச்சுக்கே ஆடினேன். இப்ப அவன் உள்ள போயிட்டான். எனக்கு இவள் மட்டும் போதும் என்று தான் இங்கேயே வந்தேன். ஆனால் இவள் அருகே செல்ல கூட முடியல. அவளுக்கு சரியாகும் வரை இங்கேயே வைத்து பார்த்து விட்டு அவளுடன் வாழ நினைத்தேன்.
ஆனால் உங்களுக்கு விசயம் தெரிஞ்சுடுச்சு. பரவாயில்லை. அவளை யாராலும் இங்கிருந்து அழைத்து செல்ல முடியாது. அவள் யாரையும் அருகிலே விட மாட்டாள்.
வெற்றி கழுத்தை பிடித்த பிரதீப், என்னோட அம்மா வாழ்க்கையை கெடுத்தது மட்டுமல்லாமல்..அவங்களை இத்தனை வருசமா எங்களிடமிருந்து பிரிச்சு எங்களை நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ வைச்சுட்டியேடா..என்று வெறியுடன் கழுத்தை நெறித்து தள்ளி அடித்தான்.
தீனா பார்த்துக் கொண்டிருக்க, அடி..அடிச்சு கொன்னுடு. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா கண்ணா. நீ உன் அம்மா மாதிரி. ஜானு அப்பா மாதிரி.
மீனு இங்க பாரு. உன்னோட பையன் வந்திருக்கான்.
பிரதீப் மீண்டும் சினத்துடன், மீனுவா? என்று அவரை அடிக்க வந்தான்.
ஹாஸ்பிட்டலில் பதட்டமாக காவேரி போனை தேடிக் கொண்டிருந்தார். அதே சமயம் துருவனை பார்த்த சக்கரை,
துரு அண்ணா.. இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?
அண்ணா இருக்கிற இடத்துலையும் பிரச்சனை. இங்கேயும் பிரச்சனையா இருக்கு. மனசே சரியில்லைடா.
சாப்பிட்டீங்களா? அவன் அக்கறையுடன் விசாரிக்க, சாப்பிட்டேன்டா. பிரதீப் அண்ணா வீட்ல தான் சாப்பிட்டேன்.
எவ்வளவு நேரமா சுத்திக்கிட்டு இருக்கீங்க? அவர்கள் பேசிக் கொண்டிருக்க, ஒரு வேன் விருட்டென அவர்களை கடந்து பிரேக் போட்டு நின்றது. முன்னே ஏதோ டூவிலர் இருக்க, அவனை திட்டிக் கொண்டிருந்தான் வேனில் வந்தவன்.
துருவன் முன் சென்று பார்க்க, சக்கரை கண்ணில் பட்டது அந்த கை.
அண்ணா…என்று துருவனை சக்கரை அவனை இழுத்து வந்து காட்ட,.வேன் கிளம்பியது.
துளசிடா..துருவன் கத்த,
அண்ணா..அக்காவா? அவங்க கையில..
டேய்..அது என்னுடையது. கொஞ்ச நேரத்துக்கு முன் தான் என் கையிலிருந்த பிரேஸ்லெட்டை எடுத்தாள்.
அது ஒரு பொண்ணுன்னு தான் நான் காட்டினேன். அப்ப..அக்காவை கடத்துறாங்களா? சக்கரை கேட்க,
சக்கர..அண்ணா வீட்டுக்கு போ. அண்ணாவிடம் சொல்லு.
அது எப்படி நம்ம கண்ல எல்லாமே படுது சக்கர சந்தேகம் கேட்க, துருவன் காதில் ஏதும் விழவேயில்லை. அவன் வேன் பின்னே ஓடினான். ஆனால் அவனால் பிடிக்க முடியவில்லை. துருவன் தீனாவிற்கு போன் செய்ய..அவன் நம்பர் பிஸி என்று வந்தது. காவேரி போட்டும் அவன் எடுக்கவில்லை.
அம்மாவிடம் வந்த பிரதீப், அம்மா..என்னை பாருங்க. நான் உங்க பையன்மா..என்று அழுது கொண்டே அவரை உலுக்க, அவரது கை கட்டை மட்டும் அவிழ்த்தார் வெற்றி.
அம்மா..அம்மா..என்று அவன் அழ,..மீனாட்சி தன் பையனை கூட அறியாது தொடாதே..தொடாதே..என்று அவனை வெறியுடன் அடிக்க, தீனா என்ன செய்யவென்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிரதீப் சோர்வுடன் அங்கேயே சாய்ந்து அமர்ந்தான். உங்களால முடியாதுடா அவர் கூற, வாய மூடுய்யா..தீனா சீறினான்.
பிரதீப் எழுந்திரு. நீ பேசு..அவங்களுடன் நடந்த அனைத்தையும் பேசு. அவன் கூற..அவர் அடித்தும் அவர் கையை பிடித்துக் கொண்டு, அம்மா இல்லாமல் அவனும் ஜானும் எப்படி தனியா வாழ்ந்தார்கள் என்று கதறிக் கொண்டே சொன்னான்.
மீனாட்சி அடிப்பதை நிறுத்தி அவனை உற்று பார்க்க.. அம்மா..என்னை தெரியுதா? தெரியுதா? அம்மா..எங்களுக்கு நீங்க வேண்டும் என்று அவரது கையில் முகத்தை புதைத்து கதறினான்.
மீனாட்சிக்கு அவருள் இருந்த தாயுள்ளம் அவன் பேச்சால் தூண்டப்பட்டு கண்ணீர் வந்தது. அதை பார்த்து வெற்றி அதிர்ந்தார். அன்று அவருடைய அந்த கடைசி தருணத்தில் கூட “என் பிள்ளைகள் தேடுவார்கள். நான் போக வேண்டும்” என்று அழுதிருப்பார். அது மீனாட்சிக்கு நினைவுக்கு வர, அடுத்து நடந்தது நினைவிற்கு வந்தது.
அவர் பிரதீப்பை பார்த்ததும் கண்கலங்கி, கண்ணா..என்று அழைத்து விட்டு ஜானு நினைவில் பாப்பா எங்கடா? கேட்டுக் கொண்டே தீனாவை பார்த்தார்.
பெரியம்மா..என்று அவனும் கண்ணீருடன் வந்தான். அவன் கையை பிடித்து தீனுகுட்டியா? கேட்டார். பின் வெற்றியை பார்த்தவர் பசங்க கையை விடுத்து, அங்கிருந்த பொருட்களை தூக்கி அவர் மீது எறிய ஆரம்பித்தார்.
ஏன்டா,..இப்படி பண்ண? என்னோட விருப்பமில்லாமல் என்ன செஞ்சுட்ட? என்று வாயை மூடிக் கொண்டு அழுதார்.
சாரி மீனும்மா..என்று இளைஞன் போல் ஓடி வந்து அவர் முன் மண்டியிட்டார். பசங்க புரியாமல் இருவரையும் பார்த்தனர்.
நீ எதுக்கு என்னோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அதுக்காக பேச கூட இல்லைன்னா எனக்கு எப்படி இருக்கும்? அழுதார் வெற்றி.
எல்லாத்தையும் முடிச்சு தான் கல்யாணம் செய்து கொண்டோம். அப்புறம் உன்னிடம் பேசாமலே என்னை அவர் வார்த்தைகளாலே வதைத்தார். இதில் எங்கே உன்னிடம் பேசுவது? மீனாட்சி கவலையுடன் பேசினார்.
அம்மா..என்ன சொல்றீங்க? பிரதீப் கேட்டான்.
கண்ணா. நாங்க தான் காதலிச்சோம். ஆனால் உன்னோட அப்பாவுக்கு என்னை பிடித்து..அவர் என்னை தான் மணப்பேன் இல்லை செத்துடுவேன்னு கையில் பால்டாயிலை வைத்து மிரட்டி அந்த நேரத்திலே திருமணம் செய்து கொண்டார்.
என்னால் முதலில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் பின் அவருடன் வாழ ஆரம்பித்து விட்டேன். பெரியவர்களுக்கு எங்கள் காதல் தெரியாது. ஆனால் உன் அப்பா என்னை சந்திப்பதற்கு முன்பே எங்க காதல் தெரிந்து தான் இருந்தது. அவர் தான் எங்களை பிரிக்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
எங்க எல்லார் குடும்பமும் சேர்ந்து இருந்த தருணத்தில் என்னை தனியே அழைத்து இவரை கொன்று விடுவேனென்று மிரட்டி எல்லார் முன்னும் நானும் காதலிப்பதாக கூறி விட்டார். ஆனால் என் வாழ்க்கை..என்று அழுத மீனாட்சி எல்லார் முன்னும் மகிழ்ச்சியாகவும் அவருடனான நாராசமான வார்த்தைகளுடன் தான் கழிந்தது. நல்ல படியாக அவர் இறந்து விட்டார். என்ன இருந்தாலும் அவர் என் கணவராயிற்றே..என்றவர்..வெற்றியை பார்த்து..நீயும் அவரும் ஒன்று தான் என்று காட்டி விட்டாய் என்று மீண்டும் அழுதார்.
பெரியம்மா..அந்த ஆளை விடுங்க. நாம போகலாம் தீனா மீனாட்சியை அழைத்து ஓர் எட்டு வைக்க, வெற்றி முன் வந்து,
போங்க..போங்க..என்று கத்தி விட்டு தீனா முன் வந்து, உன்னோட அம்மாவை என்ன செய்ய போற? கேட்டார்.
அம்மாவுக்கென்ன?
உன்னோட அம்மா யாருன்னு தெரியுமா?
சித்தப்பா..வழிய விடுங்க. நீங்க நல்லவரா இருந்தாலும் விருப்பமில்லாதவங்கள தொட்டு இருக்கீங்க?
பிரதீப்பிடம், நீ அந்த வீடியோ பார்த்து முடிவெடுக்காதே? என்றார் வெற்றி.
அப்புறம் என்ன நேர்ல பார்க்க சொல்றியா? தீனா கேட்க, அவனை வெற்றி அறைந்து விட்டார்.
எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசாதே? சினத்துடன் சொன்னவர். இப்ப நீ அவள விட்டுட்டு போ..இல்ல உன்னோட அம்மாவ கொன்றுவாங்க.. பிரதீப்பிடம் வெற்றி சொல்ல.
யார் கொல்லுவாங்க? வேலீஸ்வர் தான் உள்ளே சென்று விட்டாரே?
ஆமா..அவனை பிடிச்சு கொடுத்துட்டீங்க. ஆனால் காவேரி..அவ யாரு தெரியுமா? வேலீஸ்வரின் முதல் தங்கை. அடுத்தவள் ஒருவனுடன் ஓடி விட்டாள் அவர் கூற,
என்ன சொல்றயா? நீ சொல்ற எல்லாத்தையும் நம்ப சொல்றியா? தீனா கத்தினான்.
நான் சொன்னால் நம்ப மாட்டாய் தானே? மீனு..நீ சொல்லும்மா. காவேரி யாரு? அவர் கேட்க, பசங்க ரெண்டு பேரும் மீனாட்சியை பார்த்தனர்.
ஆமாம். அவள் வேலீஸ்வர் தங்கை தான்.
அப்பா…அம்மா உங்கள பத்தி சொன்னது? தீனா கேட்க,
பொய் தான். நீ அந்த சின்ன பொண்ணு புவனாவை காதலிப்பதை நான் தடுக்க நிறைய முயற்சி செய்ததும் அவளால் தான். உன் அம்மா பழி வாங்க தான் நம்ம வீட்டுக்கு வந்தா.
ஆமாம். அந்த வேலீஸ்வர் தான் இவளை கல்யாணம் செய்வதாக வீட்டினர் பேசினார்கள். அவன் மோசமானவன் என்றதும் தான் இவங்க திருமணம் நின்றது. அவனுக்கும் இவள் மீது ஆசை. அவளை அடைய முடியாமல் எங்க காதல் குறுக்கே இருக்க, என் அண்ணனை வைத்து சரி செய்ய நினைத்தான். ஆனால் அண்ணாவிற்கும் இவள் மீது காதல். அவர் எங்களை பிரித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த கோபத்தில் பல முறை அண்ணாவை கொல்ல முயற்சி செய்தான். ஆனால் அண்ணன் தப்பித்துக் கொண்டே இருந்தார். அதனால் காவேரியை உள்ளே அனுப்பி அண்ணாவை கொன்று இவளை அடைய நினைத்து என்னை திருமணம் செய்து வைத்தார்கள்.
இதில் அவன் எதிர்பார்க்காதது உன் அம்மாவுக்கு என் மீது முளைத்த காதல் என்று தீனாவை பார்த்தார். என்னால் மீனுவை மறந்து அவளுடன் வாழ முடியவில்லை. அவள் உன்னிடம் சொன்னாலா? நான் காயப்படுத்தின்றேன்னு. அவளை அவளே காயப்படுத்தி உன் அப்பத்தாவிடம் நாடகம் போட்டு என்னை காதலிக்க வைக்க நினைத்தாள்.
இப்படி செய்தால் காதல் வராது. வெறுப்பு தான் வரும் என்று அவளுக்கு புரியவில்லை. உன் தங்கையை வெளியூர் அனுப்பியதும் என்னால் என்றாளா?
அவள் நடந்து கொள்வதை சுஜிம்மா..பார்த்துட்டா. எனக்காக அவள் அம்மாவிடம் சண்டை போட்டாள். ஆனால் நான் அவர்களை தடுத்து, உன் அம்மாவிடம்..பிள்ளைகளை விட்டு விலகி இருந்தால் மட்டுமே உன்னுடன் இருப்பேன் என்று தீர்மானமாக சொல்லி விட்டேன்.
அதனால் பொண்ணுங்க ரெண்டு பேரையும் வெளியூருக்கு அனுப்ப, என் அம்மா முன் நானே தவறானவாக நின்றேன். துளசி அப்ப சின்ன பொண்ணுடா..
அவங்க போன பின் அவளோட நடவடிக்கை அதிகமாக மாறியது. என்னால் அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்நேரம் தான் புவனாவின் பெற்றோர் இறந்தாங்க.
உன்னோட அம்மா அவளை நம் வீட்டிற்கு அழைத்து வர, எனக்கு பக்கென்றது. எங்க அந்த புள்ளைய அந்த படுபாவியிடம் விட்டு விடுவாளோ? பயமாக இருந்தது.
நான் உன்னிடம் அடிக்கடி கூறுவேனே? காதல் இவ்வுலகில் இல்லை. அதற்கு தினமும் ஒரு பொண்ணுடன் இருக்கலாம் என்று. அதில் மற்றொரு செய்தியும் உள்ளது.
உன் அம்மாவிற்கு உன் மீது காதல் இல்லை. அதற்கு பதில் வேறு பொண்ணுடன் வெளியே சென்று விடு என்று தான் கூறுவேன்.
ஆனால்..தீனா நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டடா. புவனா மேல உள்ள காதலை உன்னோட அம்மா முன் சொல்லிட்ட. அவள் கண்டிப்பா அந்த பொண்ணை கொல்லாம விடமாட்டா. அவளோட காதல் கிடைக்கலைன்னு நம் ஊர்ல யாராவது சேர்ந்து போன கூட எதையாவது பேசி பிரிச்சுடுவா.
அதனால தான் முன்பே அந்த சின்ன பொண்ணு பக்கம் செல்லாதே என்று உன்னையும்,..அந்த பொண்ணிடமும் கூறினேன். இன்று கூட உன்னுடன் வேற பொண்ணுங்கள வைச்சு இருப்பது போல் போட்டோகிராப் செய்து அனுப்பி அவள் உன் மீது கோபப்பட்டு பிரிக்க நினைத்தேன். ஆனா அந்த பொண்ணு உன்னை விட்டு போறது மாதிரி தெரியலடா.
அந்த பொண்ணை உன்னோட அம்மாவுடன் தனியா தான் விட்டுட்டு போற. எனக்கு தான் பயமா இருக்கு என்று கலங்கினார்.
என்ன சொல்றீங்க? இதெல்லாம் உண்மையா? அப்ப என்னை பொண்ணுங்களுடன் இருக்க அனுப்புவீங்களே?
டேய், எல்லாருமே என்னோட ப்ரெண்ட்ஸ் பொண்ணுங்க. எனக்கு உன் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் தான் அவளை ஏமாற்ற செய்தேன். அவளுக்கு நீ இந்த மாதிரி நீ பொண்ணுங்களோட இருப்பது முதலிலே தெரியும்.
உன் பெயர் கெட்டாலும் எனக்கு என் பிள்ளை வேண்டும் என்பதால் தான் அனைத்தும் செய்தேன். என்னை மன்னிச்சிருடா என்று மண்டியிட்டார்.
அப்பா..நாங்க?
அவள் என்னை அடைய போதை மருந்தை எனக்கு தெரியாமலே கொடுப்பாள். அதனால் என் உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் தான் என்னால் தூங்கவே முடியும் என்று அழுதார்.
அப்பா..என்று தீனா அவரை அணைக்க மற்ற இருவரும் அவரையே திகைத்த விழிகளோடு பார்த்தனர்.
குடும்பமே இருக்கீங்களா? என்ற ஒருவனை பார்த்து மூவரும் திகைத்தனர். அவன் அச்சுஅசலாக வெற்றி போல் ஒருவன் வந்தான்.
தீனா அவனை பார்த்து விட்டு மண்டியிட்டவரை பார்த்தான்.
தீனா..நான் தான் உன்னுடைய அப்பா என்று மண்டியிட்டவர் அழுதார்.
இங்க என்ன நடக்குது? இது உண்மையா? மீனாட்சி கேட்க, தீனா இவர் தான் உன்னுடைய அப்பா என்று வந்தவன்..ஆனா நீ அவனை அப்படி கூப்பிட முடியாது என்று கையிலிருந்த கட்டையை எடுத்து அவர் பின் தலையிலே அடித்தான்.
ஏய்..என்று இரு பசங்களும் ஒருவாறு அழைக்க, அடித்தவன் மீனாட்சி அருகே வந்தான். அதற்குள் மீனாட்சியை தன் பக்கம் இழுத்தார் இரத்தம் வழிந்த நிலையில் வெற்றி..
இந்த வயசுல இது தேவையா? என்று அவன் இருவர் அருகே செல்ல தீனாவும் பிரதீப்பும் அவர்கள் முன் வந்தனர்.
வேசமில்லையே மேடம். பணம் தான். அதுக்கு தான் உங்களை கொல்ல வந்திருக்கேன்.
கொலை செய்ய வந்துருக்கியா? பணம் அவ்வளவு முக்கியமா?
ஆமாம் மேடம். பணம் இருந்தால் தான் என் அம்மா உயிரை காப்பாற்ற முடியும். அதனால நீங்க செத்து போயிடுங்களேன்.
உனக்கு பணம் எவ்வளவு வேண்டும்? பிரதீப் கேட்டான்.
ஐம்பது இலட்சம் வேண்டும். உன்னால குடுக்க முடியுமா? அவன் கேட்க.
தாரேன். நீ போட்டுருக்கிறது முகத்திரையா? கேட்டான் பிரதீப். அவன் கழற்றி காட்ட..உன்னோட அம்மாவை வைத்திருக்கும் மருத்துவமனை.. அவங்க ரிப்போர்ட் எல்லா விவரத்தையும் காட்டு மறு நிமிடம் உனக்கான பணத்தை தருகிறேன் பிரதீப் கூறினான்.
பிரதீப்..என்ன பேசுற? அவ்வளவு பணத்தையும் கொடுத்துட்டு..நீ என்ன பண்ண போற? தீனா கேட்டான்.
பிரச்சனையில்லைடா..என்னோட ப்யூட்டி பிராடெக் கம்பெனியையும் என்னோட ரெசார்ட்டையும் வித்துடலாம். அம்மா இல்லாம அவனும் கஷ்டப்பட வேண்டாம். இனி ஜானுவை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. எஸ்டேட் மட்டும் போதும் என்றான்.
பிரதீப்..துகியை நினைச்சு பாருடா. அவ வசதியா வளர்ந்த பொண்ணுடா.
அவ பணத்துக்காக என்னுடன் வரலை. என் காதலை புரிஞ்சு தான் வந்தா. அவகிட்ட பேசுனா புரிஞ்சுப்பாடா என்று அவனை பார்த்து..எனக்கு ஒரு வாரம் மட்டும் நேரம் கொடு என்று கேட்டான் பிரதீப்.
நீ எதையும் விற்க வேண்டாம். உன்னோட அப்பா சென்னையில கம்பெனி ஆரம்பிக்க தான் டெபாசிட் பணம் வங்கியில் ஒரு கோடி போட்டு வைத்திருந்தார். அதில் எடுத்துக் கொள்ளலாம் மீனாட்சி சொல்ல,
ஆனால் அந்த முகத்திரையை கொடுத்து விடு என்று பிரதீப் வாங்கிக் கொண்டான்.
அந்த வீடியோ? தீனா கேட்க, அது வேலீஸ்வர் தான் இவர் போல் முகமூடியிட்டு மேடமிடம் தவறாக நடந்து கொண்டான். இது போல் நிறைய முகமூடி உள்ளது என்று அவர்களிடம் அவன் எடுத்து வந்த மூட்டை பிரித்து கொட்டினான்.
இவ்வளவா? என்று மீனாட்சி அதிர்ந்து பார்த்தார்.
பிரதீப் போன் அழைக்க, அவன் எடுத்தான். துருவன் போன் செய்து துளசியை கடத்தியதாக சொன்னான்.
துளசிய கடத்திட்டாங்களா? என்று பிரதீப் தீனாவை பார்த்தான். பிரதீப் வீட்டிற்கு சென்ற சக்கரை அப்பத்தா மயங்கி இருந்ததை பார்த்து அவரை எழுப்பினான். அவர் எழவில்லை. துகியும் இல்லை. அதனால் பிரதீப் ஆட்களை தேடினான். அவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்க, அவர்களிடம் சென்று அப்பத்தாவை பார்த்துக் கொள்ள சொல்லி வேகமாக துருவன் சென்ற திசையிலே ஓடி வந்தான்.