அத்தியாயம் 58

ஏய்..என்று பதறி அனிகாவிடம் வந்தான் கைரவ். அவள் எழ கையை கொடுத்தான். கையை பிடித்துக் கொண்டே எழுந்தாள். காலின் பெரு விரலில் இரத்தம் கசிந்தது. பெஞ்ச் ஒன்றில் அவளை அமர வைத்து மண்டியிட்டு கீழே அமர்ந்து அவளது காலை தூக்கி அவன் கால் மீது வைத்து ஊதினான். அவள் கூச்சமுடன் காலை இழுக்க, நிமிர்ந்து அவளை பார்த்தான்.

கைரவ், நாம போகலாம்..இருக்கட்டும். இதெல்லாம் ஒன்றுமில்லை என்று எழுந்தாள்.

உட்கார்..என்றான் அழுத்தமாக. நீ இங்கே இரு என்று வீட்டினுள் சென்று தண்ணீர், மருந்தை எடுத்து வந்து தண்ணீரை வைத்து துடைத்து விட்டு, மருந்தை போட்டு விட்டான். அனிகா கைரவையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் நிமிர, வேறெங்கோ பார்ப்பதை போல் பாவனை செய்து விட்டு அவனை பார்த்தாள்.

போகலாமா? கேட்டான்.

போகலாம் என்று எழுந்தாள். அவள் கையை பிடித்துக் கொண்டு பார்த்து நட மருந்து அழிந்து விடாமல்.

மருந்து அழியாம எப்படி நடக்குறது? கேட்டாள்.

அவன் காலை நீட்டி காட்ட, என்ன? கேட்டாள். அவன் குனிந்து அவன் கால் மீது அவளது மருந்திட்ட காலை வைத்தான். அவள் அவனிடம், என்ன பண்ற?

இருக்கட்டும்.

வா..நட என்றான்.

அறை வரை இப்படி தான் நடக்கணுமா? பாவம் போல் கேட்டாள்.

ஆமாம். வா..என்று கையை பிடிக்க முதலில் நடக்க தெரியாமல் தடுமாறினாள். கைரவ் அவளை தன்னுடன் ஒட்டி அணைத்தவாறு நடக்க, தாத்தா எதிரே வந்தார்.

என்னாச்சும்மா? அவர் கேட்க, தாத்தா அவ கீழ விழுந்துட்டா. மருந்து போட்டேன். மருந்து அழியக் கூடாதுல்ல. அதனால் தான் அவள் அறைக்கு அழைத்து செல்கிறேன்.

நில்லுடா..என்று அவரும் காயத்தை பார்த்து, டேய்..பெருவிரல்ல அடிபட்டுருக்கு. என்னோட அறையில மாத்திரை இருக்கும் எடுத்து கொடு என்றார்.

சரி..நீங்க தூங்காம எங்க போறீங்க?

நானும் உங்களை போல் விளையாட போகிறேனே?

தாத்தா, இதெல்லாம் கேட்க முடியல. எங்க போறீங்க?

நான் சும்மா உன்னை பார்க்க தான் வந்தேன்.

நீங்க அறைக்கு போங்க. அனி..நீ இங்கேயே இரு என்று அவளை சோபாவில் அமர வைத்து கைரவ் அவன் தாத்தா தோளில் கையை போட்டுக் கொண்டு, வாங்க.. வாங்க.. உங்கள படுக்க வைச்சிட்டு தான் போவேன். அண்ணா..உங்களுடன் இல்லையா?

இருவரும் ரொம்ப சோர்வாக இருந்தாங்க. அதான் அவர்களை அவன் அறைக்கே அனுப்பி விட்டேன்.

தாத்தா..ஒரே அறையில் தப்பா நடந்துறாதா? கைரவ் கேட்டான்.

என் பெயரனை பற்றி எனக்கு தெரியும்? என்று கைரவ் காதை திருகினார்.

எல்லாருக்கும் என் காது தான் பிடித்து விட்டதா? கேட்டான்.

வேற யாருடா உன்னிடம் உரிமையாக காதை திருகியது?

அதுவா..அவ தான். உங்க பெயர்த்தி ஒருத்தி நினைச்சு ரொம்ப கவலைப்படுறாளே? அந்த ஸ்ரீ தான். தாத்தா அந்த பொண்ணு ரொம்ப டேஞ்சர். பாவம் என்னோட நண்பன் அர்ஜூன் என்று கிண்டலாக கூற,

அச்சச்சோ..ஸ்ரீயிடம் பேசவில்லையே? யோசித்தாள் அனிகா. அவன் தாத்தாவை படுக்க வைத்து அவருக்கு போர்த்தி விட்டு வெளியே வந்தான்.

கைரவ்..நான் மறந்துட்டேன். ஸ்ரீ விழித்திருப்பாளா? நான் அவளிடம் பேசணுமே? அனிகா கேட்டாள்.

இப்பவா? காலையில பேசிக்கலாம்ல.

இல்ல நான் பேசணும் என்று முகத்தை மழலை போல் வைத்திருக்க, போனை கொடுத்து அவள் எடுக்கலைன்னா நாளை பேசிக்கோ..என்றான்.

ஸ்ரீ போனை எடுத்து, எந்த நேரத்துல போட்டுருக்க? அர்ஜூன் கேட்க, அர்ஜூன் அனிகா பேசுறேன். ஸ்ரீ முழிச்சிருக்காளா?

என்னாச்சு? பிரச்சனையா?

இல்ல. நான் அவளிடம் பேசணுமே.

பாப்பா அவள் அருகே தான் தூங்கிக் கொண்டிருக்கிறாள். இரு கொடுக்கிறேன் என்று கதவை திறந்து உள்ளே சென்றான். அனு ஸ்ரீயை அணைத்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஸ்ரீ கண்ணில் கண்ணீருடன் இருந்தாள். அர்ஜூனை பார்த்து கண்ணை துடைத்து,

என்னாச்சு அர்ஜூன்? மெதுவாக கேட்டாள்.

நீ எதுக்கு அழுற?

இல்லையே..நான் அழலை. அப்ப இது என்ன? தொட்டு காட்டி கேட்டான்.

அர்ஜூன் ஒன்றுமில்லை.அக்கா நினைவாகவே இருக்கு. நீ வந்த விசயத்தை சொல்லு.

அனிகா உன்னிடம் பேசணுமாம்.

அவளா? இந்த நேரத்திலா?

இந்தா என்று போனை கொடுத்து விட்டு, நீ நகரு என்று அனுவை ஸ்ரீயிடமிருந்து மெதுவாக விலக்கி அர்ஜூன் அனுவுடன் படுத்துக் கொண்டான்.

ஸ்ரீ வெளியே வந்து பேசினாள். அர்ஜூன் அவளை பார்க்க, கைரவ் அனிகாவை பார்த்தான்.

ஸ்ரீ அழுதியா? எதுக்கு அழுத? அனிகா கேட்டாள்.

அழுதாளா? கைரவ் சிந்தித்தான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ இந்த நேரம் என்ன செய்ற? தூங்கலையா?

“தேங்க்ஸ்” ஸ்ரீ. நீ சொன்னது போல் சாரிடம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. நான் உன்னிடம் சொல்லலைன்னு தப்பா எடுத்துக்கலைல்ல.

நீ நல்லா தான இருக்க. அதுவே போதும். நீ தூங்கு என்று போனை பார்த்தாள். கைரவ் அருகிலா இருக்கான். இந்நேரம் இருவரும் என்ன செய்றீங்க?

அது வந்து என்று கைரவை பார்த்தாள். அவன் போனை வாங்கி, ரொம்ப முக்கியம். யாருமே தூங்கலையா? கேட்டான்.

எங்க தூங்க முடியுதுடா.

என்ன ஸ்ரீ அழுதுகிட்டு இருக்கியா? இனி அவங்கள கொண்டு வர முடியாது. உன்னாலவே ஏத்துக்க முடியலைன்னா. எப்படி அர்ஜூன், அனுவை சமாளிக்கமுடியும்? அவன் எதையும் சொல்ல மாட்டிக்கிறான். எனக்கு அவனை நினைச்சா கஷ்டமா இருக்கு. அவனும் தூங்காம தான இருக்கான். தூங்குங்க..நாளைக்கு உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். நல்லா ஓய்வெடுங்க. நானும் அண்ணாவும் காலையில வாரோம்.

தாரி என்ன பண்றா?

அவ..தெரியல. ஆனால் நானும் யோசிக்காம பேசிட்டேன்ல.

இல்லடா. நீ சரியா தான் பேசுன? கவின் சீனியர் அவளை புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்.

போதும் ஸ்ரீ. மத்தவங்கள பத்தி நினைக்காம தூங்கு. அவனையும் தூங்க சொல்லு. பார்ப்போம் என்று போனை வைத்தான். அனிகா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளை அறைக்கு அழைத்து செல்ல, ஸ்ரீ எதுக்கு அழுதா?

பாப்பாவோட அம்மாவை நினைச்சு அழுதா? நாளைக்கு அவங்களுக்கு சாமி கும்பிடப் போறோம். நிறைய வேலை இருக்கு. நீ எதையும் நினைச்சு கஷ்டப்பட்டிருக்காம நல்லா தூங்கு என்று அவளறைக்குள் வர,

நீ போ..நான் படுத்துக்கிறேன்.

வாம்மா..என்று அவளை படுக்க வைத்து விட்டு போர்வையை போர்த்தி விட்டு, கண்ணை மூடி நல்லா தூங்கு என்று விளக்கை அணைத்து விட்டு அவனறைக்கு சென்றான்.

தாத்தா கூறிய மாத்திரையை எடுத்து மீண்டும் அவளறைக்கு வந்தான். அவள் பயந்து எழுந்து அமர்ந்தாள்.

ஏய்..வீட்டுக்குள்ள வேற யாரும் வர முடியாது. இந்தா..இத போட்டுக்கோ என்று மாத்திரையையும் தண்ணீரையும் கொடுத்தான்.

அனிகா போட்டு விட்டு, “தேங்க்ஸ்” என்றாள் புன்னகையுடன்.

அவன் புன்னகையுடன் அவளருகே வந்து, பின் அவளை பார்த்து நல்லா தூங்கு என்று சொல்லி அவளை பார்த்துக் கொண்டே சென்றான்.

அம்மா..பாரும்மா. இவன் இப்படி செய்தால் எனக்கு அவன் மீது காதல் அதிகமாகிறதே. நான் என்னம்மா செய்றது? அழுது கொண்டே அனிகா தூங்கினாள்.

கைரவ் போனை வைத்தவுடன் ஸ்ரீ அறைக்குள் சென்று அர்ஜூன் நீ இங்கேயே பாப்பாவுடன் தூங்கு. நான் வெளியே இருக்கிறேன்.

இங்க வா..விரலை காட்டி அழைத்தான் அர்ஜூன்.

அவள் அருகே வரவும் அவளது கையை பற்றி இழுத்தான். அவள் அவனருகே வர, இங்கேயே தூங்கலாம் என்று அவளை மீண்டும் வேகமாக இழுத்தான். அவள் அவனருகே அமர, அவளை இழுத்து கட்டிலில் படுக்க வைத்தான்.

நாம இங்கேயே தூங்கலாம். அர்ஜூன்..என்ன பண்ற? விடு என்று அவனை விலக்கி எழுந்தாள்.

ஏய், நான் உன்னை என்ன செய்தேன்? தூங்க அருகிலே படுக்க தானே சொன்னேன்.

அர்ஜூன் பார்த்தால் தப்பா தெரியும் அவள் கூற, அனுவை பிரித்து படுக்க வைத்து விட்டு எழுந்து வெளியே சென்றான்.

அர்ஜூன்..நில்லு..போகாத..என்று அவனை சமாதானப்படுத்துவதா? அனுவுடன் படுப்பதா? யோசித்தாள். அர்ஜூன் வெளியே இருந்த சோபாவில் படுத்தான்.

அர்ஜூன்..வேற அறை இருக்குல. அங்க போ. நல்லா தூங்கி எழுந்து வா.

அவன் காதில் விழாதது போல் கண்ணை மூட, அவனருகே வந்து டேய்..சொல்றேன்ல போடா. என்னை கத்த வச்சுறாத.

நீ போ..பாப்பா எழுந்திருவா? என்றான். அனுவும் திரும்பி படுக்க ஸ்ரீ உள்ளே சென்று விட்டாள்.

ஹாஸ்பிட்டலில் தீனா புவனாவை அணைத்து படுத்திருக்க, அவன் தூங்கி விட்டான். புவனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கதவு திறக்கும் ஓசை கேட்க, அவனை மெதுவாக விலக்கினாள்.

காவேரி, துருவன், துளசி வந்தனர். புவி நான் கிளம்புகிறேன் துருவன் சொல்ல, துளசி கோபமாக இவனுக்கு தூக்கம் ஒன்று தான் கேடு..செய்வதை செய்து விட்டு தூங்குகிறான் என்று சினத்துடன் சத்தமிட, துருவன் அவள் வாயை பொத்தி அமைதியா இரு..என்று கண்ணை அவள் அம்மாவிடம் காட்டினான்.

காவேரி அவனை ஒருமாதிரி பார்க்க, துருவா..புவி அவனை பார்க்க, புவி அவளுக்கும் தெரிஞ்சுடுச்சு.

அம்மா..என்று எழ போனவளை, நீ இரும்மா..என்று அவளை நிறுத்திய காவேரி..நீ உண்மையிலே அவனை நம்புகிறாயாம்மா?

நம்புகிறேன் அத்தை என்றாள்.

காவேரி மட்டுமல்ல துருவன் துளசியும் அவளை பார்த்தனர்.

ஆனால்..என்று துளசி பேச, நீ என்ன சொல்லப் போறன்னு தெரியும் துளசி..வேண்டாம். யார் என்ன சொன்னாலும் அவர் தான் சொன்னாரே அவர் யாருடனும் இருந்திருக்க மாட்டார். நான் எதையும் கண்ணால் காணும் வரை நம்பவே மாட்டேன். இவரை நம்புகிறேன். இவர் காதலை நம்புகிறேன்.

புவி கிளம்புகிறேன் துருவன் கூற, தம்பி..துளசியையும் அழைச்சிட்டு போறீங்களா? வீட்ல விட்டுருங்க..காவேரி துருவனிடம் கேட்டார்.

ஆன்ட்டி, நான் நடந்து தான் செல்லப் போகிறேன்.

பரவாயில்லை. நானும் நடந்து வாரேன். இங்க இருந்தா இவன் மீதுள்ள கோபத்தில் அவனிடமே சொல்லிடுவேன் என்றாள் துளசி. மூவரும் அவளை பார்த்தனர்.

துளசி யாரோ காட்டியதை நம்புவாய்? உன் அண்ணன் கூறுவதை நம்ப மாட்டாயா? புவனா கேட்டாள்.

எனக்கு தெரியல புவி. எங்க வீட்ல எதுவுமே சரியில்லை. என்னால யாரையும் நம்ப முடியல என்று துருவனையும் காவேரியையும் பார்த்தாள்.

சரி..வா போகலாம் துருவன் கூற, அவர்கள் கிளம்பினார்கள்.

வெளியே வந்த துருவன், பிரதீப் அண்ணா ஆளுங்கள கூப்பிட வரச் சொல்லவா துளசி?

ஏன்? நீ கூட்டிட்டு போக மாட்டாயா?

நான் கூட்டிட்டு போவேன். நீ தான் அதிகம் நடந்ததேயில்லையே? உன் அப்பாவுடன் தானே பள்ளிக்கு வருவாய். செல்வாய்.

நான் பழகிக்கிறேன்.

நடக்க கஷ்டமா இருக்குமே? கொஞ்சம் தூரமா இருக்கும். புவியும் ஜானுவும் கூட இவ்வளவு தூரம் நடந்துடுவாங்க. ஆனால் உனக்கு பழக்கமில்லை.

நான் தான் பழகிக்கிறேன்னு சொல்றேன்ல. ஆமா எதற்கெடுத்தாலும் புவி ஜானு தானா? கேட்டாள் துளசி.

ஆமாம். எனக்கு வேற யாரையும் பிடிக்காது என்றான் துருவன்.

வேறு யாரையும் பிடிக்காதா? என்று துளசி அவனை பார்க்க, ஆமாம்..யாரையும் பிடிக்காது என்றான்.

துளசி துருவன் கையை பிடிக்க, அவளை பார்த்து விட்டு கையை எடு என்றான்.

இல்லை என்று தலையசைத்தாள்.

யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.

நினைச்சா நினைச்சிட்டு போகட்டும்.

விடு துளசி என்று அவள் கையை எடுத்து விட்டு அவன் நடக்க, அவள் அதே இடத்தில் நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

பின்னே திரும்பி பார்த்து, வா..என்று அழைத்தான். அவள் கையை கட்டிக் கொண்டு நீ என் கையை பிடிச்சு கூட்டிட்டி போனா வருவேன் என்று கையை நீட்டினாள்.

துளசி..இப்ப வர போறாயா? இல்லையா?

கையை பிடிச்சுக்கோ..என்றாள்.

உன்னை..என்று சினத்துடன் வா..என்று கையை பிடித்தான்.

ம்ம்..வாரேன் என்று அவன் கையை அவள் பிடித்துக் கொள்ள, அவனோ சுற்றி இருப்பவர்களை பார்த்தான். அவர்கள் நடந்து கொண்டிருக்க, அவர்கள் பள்ளியில் படிக்கும் ஒருவன் வந்து,

துருவா..என்ன செய்தி பரபரப்பா இருக்கு. எல்லாரும் உங்க அண்ணனோட ப்ரெண்ட்ஸ் அப்புறம் ஸ்ரீ..அர்ஜூன்..என்று யாரையோ குறிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பின் தான் துளசியை பார்த்தான். துருவன் கையை உருவ, அவள் வேண்டுமென்றே அவன் கையை பிடித்து உயர்த்தி காட்டினாள்.

ம்ம்..நடத்து..நடத்து..அவன் கூறி விட்டு, பார்த்து போ. உன்னை பார்த்தாலும் கேள்விகளை துளைத்து விடுவார்கள் என்று..உன்னை மட்டும் எப்படிடா எல்லாருக்கும் பிடிக்குது?

பிடிக்குதா? யாருக்கு பிடிக்குது? துளசி கேட்க,

உன்னோட சுத்துற ஒருத்திக்கும் துருவன் மேல ஒரு கண்ணு. பார்த்து துளசி..

போடா. எனக்கு தெரியும் என்று துளசி கூற, துருவன் அவளை பார்த்தான்.

என்ன பாக்குற? நீ வேற யாரைவாது பார்த்த சீவிடுவேன் துளசி அவனது கழுத்தில் கை வைக்க,

நான் யாரை வேண்டாமானாலும் பார்ப்பேன். சீவிக்கோ..என்றான்.

நான் சீவினால் நீ என் பக்கம் இருக்க முடியாதே. இங்க வா..என்று அவனை மரத்தின் பின் நிற்க வைத்து இரு கைகளையும் மரத்தில் வைத்து  அவனை நெருங்கி, யாரும் இருக்கிறார்களா? என்று சுற்றி பார்த்தாள்.

நமக்கு சாதகமாகவே எல்லாமே நடக்குதே என்று அவனிடம் மேலும் நெருங்க,

துளசி..வழிய விடு.

அச்சோ..உனக்கு வேற வழியில்லையே? என்று அவனது இதழ்களை கைகளால் பிடித்து முத்தமிட வந்தாள்.

அவளது தோளை பற்றி அவளை மரத்தில் சாய்த்து..உனக்கு ரொம்ப தைரியம் கூடிப்போச்சு என்றான் அவள் கண்களை பார்த்தவாறு.

ஆமா..மாமா இருக்கணும்ல. அப்புறம் எப்படி என் அத்தையை சமாளிப்பது?

மாமாவா? துளசி தேவையில்லாம ஆசைய வளத்துக்காத.

இனி நீ சொல்லி எந்த பிரயோஜமும் இல்லை. நான் தான் உன்னை காதலிக்கிறேனே?

காதலா?

ஆமாம் மாமா. உன்னை தான் கட்டிப்பேன் என்று அவனை இழுத்து அணைத்தாள். துளசியை விலக்கிய துருவன் வேகமாக நடந்தான்.

என்னை விட்டுட்டு போகாதடா? என்று அவன் பின் ஓடி வந்தாள். அவனுக்கும் துளசியை பிடிக்கும். முன்பு துருவன் குடும்பமும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவன் அப்பா தொலைந்த பின் முற்றிலும் மாறி விட்டது. அவனோட அம்மா உடல் நிலை சரியில்லை. பணத்திற்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது. தீனா என்ன தான் அவன் அப்பாவிடம் எழுதிக் கொடுத்திருந்தாலும் பிரதீப் அவர்களை தனியே விடமாட்டான். இருவர் குடும்பமும் அவர்கள் ஜில்லாவிற்கு பெயர் போன குடும்பம் தான். இருவர் குடும்பத்திலும் பிரச்சனை உள்ளது. துருவன் அவ்வழியில் சிந்திக்க, துளசிக்கோ அவளுடைய காதல் மட்டும் தான் தெரிந்தது. துருவன் அவள் வீட்டில் விட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

அவன் வீட்டிற்கு சென்றவுடன், அவன் அம்மா அழைப்பதை கூட கவனிக்காது அவன் அறைக்கு சென்று படுத்து விட்டான். துளசி காதல் சொன்னதை எண்ணி புன்னகையுடன் திரும்பி படுக்க, அவன் அம்மா மறுவாசல் வழி உள்ளே வந்து அவன் முன் நின்றார்.

அம்மா..என்று எழுந்து அமர்ந்தான்.

என்ன சந்தோசமா இருக்க போல..என்று முறைத்தார். அவன் உடன் படித்தவன் கூறியது நினைவு வர, அம்மா..எனக்கு ஏதும் தெரியாது.

என்னாச்சும்மா? கேட்டான். அவர் டிவியை ஆன் செய்ய அர்ஜூன் அம்மாவிடம் பேசியது..அந்த கொலைகாரன்..அவன் அர்ஜூனிடம் பேசியது..ஸ்ரீ, தருண், ஆதேஷ், அகில் அனைவரும் இருந்தனர்.

ஒரே நாள்ல அண்ணனுக எல்லாரும் பேமஸாகிட்டாங்க துருவன் சிரிக்க, டேய்..விசயம் ரொம்ப பெரிசு. என்னோட ஜாங்கிரி, அண்ணாவை கொன்னுட்டாங்களாம்டா. ஸ்ரீயும் கஷ்டப்பட்டு கிட்டு இருந்திருக்கா. இது தெரியாம..நாம இங்க என்று அழுதார்.

அவ என்னை விட்டு போயிட்டாடா..ஜாங்கிரி என்று கத்தி அழுதார். அம்மா..என்று அவரிடம் ஓடி வந்தான்.

அம்மா..அண்ணாவுக்கு அதனால் தான் அடிபட்டிருக்கு.

நான் அர்ஜூனிடம் பேசணும். உன் அண்ணனுக்கு தெரியக்கூடாது. அவன் நம்பர் வேண்டுமே? கேட்டார் ரதி. அகிலின் அம்மா.

நீங்க அழாம இருந்தா நாளைக்கு வாங்கித் தாரேன்.

நாளைக்கா?

ஆமாம்மா என்று அவரை பார்த்தான்.

சரி என்று அவர் வெளியேற,..அம்மா..நான் வெளிய போயிட்டு வாரேன். நீங்க எல்லா கதவையும் பூட்டிக்கோங்க.

எங்க போற?

அம்மா..நான் பிரதீப் அண்ணாவை பார்த்துட்டு வாரேன். கண்டிப்பா அவருக்கும் தெரிஞ்சிருக்கும். அவரும் அதில் இருந்தாரே?

பார்த்து போயிட்டு வாடா.

அம்மா வர நேரமாகும். சாப்பிட்டு படுங்க. கல்யாண வேலையை நாளை பார்த்துக்கோங்க சொல்லி விட்டு கிளம்பினான்.