வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-55
151
அத்தியாயம் 55
நான் உன்னை போல் இல்லை. அவள் நல்ல பொண்ணு. அவளோட பழகுற எல்லாருக்கும் தெரியும். எனக்கும் பிடிக்கும்.சோ..நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம் கைரவ் கூறினான்.
என்ன கல்யாணமா? யாருமே என்னிடம் சொல்லலை என்று ஸ்ரீ கைரவிடம் கோபமாக வந்தாள்.
எதுக்கு ஸ்ரீ இந்த கோபம்? நான் உன்னோட ப்ரெண்டுக்கு சரியா இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா? அப்ப கவின் உனக்கு ஓ.கே வா? கைரவ் கேட்டான்.
இல்ல அவனுக்கு நீயே ஓ.கே தான் ஸ்ரீ கூற. ஸ்ரீ..நீயுமா? கவின் கேட்க,
என்னடா நீயுமா? பசங்க உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க? நாங்க எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போகணுமாடா? உங்க காதல் கல்லூரில்ல தனி ரசிகர், ரசிகை குழுவே இருந்தாங்க. இப்ப உங்க காதல் போல உடைஞ்சு போச்சு.
அன்று கைரவ் வீட்டில் தாரிகா அந்நேரம் வந்திருக்கிறாள். ஆனால் எதற்கு? என்று நீ யோசிக்கல. நீயா முடிவெடுத்து இருவரையும் தப்பா பேசிட்ட. அதற்கு பின் துகிரா, ஆதேஷ், தாரிகாவை ரோட்டில் பார்த்தாயே..அவள் அன்று சரியா சாப்பிடல, தூங்கல..நீ பேசியதில் அவள் ரொம்ப காயப்பட்டு இருக்க, அவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தது துகிரா தான். ஆதேஷ் அவங்களுடன் சேர்ந்து கொண்டான். அவ்வளவு தான். ஆனால் அன்று நீ என்ன செய்தாய்? யாருடன் வந்தாய்? சொல்லுடா..அவள் ஏதாவது உன்னிடம் சந்தேகத்துடன் கேட்டாலா? சொல்லுடா? என்று கவின் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
நீ அவள பார்த்து என்ன கேட்ட? கைரவுடன் இருக்கிறாயான்னு கேட்குற? அவ்வளவு கேவலமா எப்படி உன்னால எண்ண முடிஞ்சது. கைரவ் பையன் அவனே பாரு எவ்வளவு கோபப்படுறான். ஆனால் தாரி அழ தான் செய்தாள். உன்னிடம் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசலை.
பேசல தான என்று தலை கவிழ்ந்து நின்றிருந்த கவினை நிமிர்த்தி கேட்டாள் ஸ்ரீ.
கவின் அழுது கொண்டு, நான் தப்பு தான் செய்துட்டேன். ஆனால் அதை திருத்த வாய்ப்பு தர மாட்டாளா?
எதுக்குடா தரணும்? இதயா அம்மா கேட்டார். எல்லாரும் அவரை பார்த்தனர்.
உனக்கு அவள் வாய்ப்பு தந்தால் ஒவ்வொரு முறையும் அவளிடம் வாய்ப்பு தான் கேட்பாய். உன் பேச்சு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவள் காயப்பட்டுக் கொண்டு தான் இருப்பாள்.
இல்ல ஆன்ட்டி. இனி அப்படி பேச மாட்டேன்.
முடிந்ததாக இருந்தாலும் காயப்பட்ட வடு மறையாதுப்பா. அதை மறைய வைப்பது எளிதல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். நீ அந்த பொண்ணை விட்டுரு.
எனக்கு அவள் தான் வேண்டும் என்றான் கவின். கைரவிற்கு கவின் அன்று பேசியது ஒலித்துக் கொண்டே இருக்க, நிறுத்துங்க என்று காதை மூடி அழுது கொண்டே அமர்ந்தான். அவன் போன் ஒலித்து அடங்கியது. மீண்டும் ஒலிக்க கண்ணை துடைத்துக் கொண்டு, அதை எடுத்தான்.
தாரிகா அம்மா பேச, சொல்லுங்க ஆன்ட்டி..என்றான்.
என்னடா பேசுன? தாரி அழுதுகிட்டே இருக்கா அவர் கோபமாக பேச, போனை பார்த்தான்.
ஓ…செட்..போனை அணைக்காமல் விட்டு விட்டேன். தாரிகா எல்லாத்தையும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறாள் என்று அவன் போனை விட்டெறிந்தான்.
பின் கைரவ் வெளியே செல்ல அனிகாவும் எழுந்தாள். தருணும் அபியும் அவனை தடுத்து, கைரவ் கொஞ்சம் நிதானமாகுடா என்று அவனை அமைதியாக்கினர். கவின் வெளியே செல்ல,
நில்லு..எங்க போற? ஸ்ரீ கேட்டாள்.
நான் என்னோட தாரிய பார்க்க போறேன்னு அவன் கூற, கைரவ் மீண்டும் சினத்துடன் அவன் கழுத்தை பிடித்து, நான் தான் சொல்றேன்ல. உன்னோட கதை முடிஞ்சது. அவள தொந்தரவு செய்யாத என்று கத்தினான்.
போதும் கைரவ். வா..என்று அவனை அபி அறைக்குள் இழுத்து செல்ல, கவின் அழுது கொண்டே அமர்ந்தான். அவனருகே வந்து அமர்ந்தார் வினிதா அப்பா.
உங்கள பத்தி என் பொண்ணு சொல்லி இருக்கா? ஆனால் உங்களை புகைப்படத்தில் பார்த்தது. ம்ம்..இப்ப என்ன செய்யப் போறீங்க? என்று வினிதா அப்பா கேட்டார்.
தெரியலயே..என்று கண்ணை கசக்கிக் கொண்டிருந்தான்.
நீங்க உறுதியா இருந்தா நிரூபிங்க.
அது எப்படி செய்றது?
அவங்க அம்மாவிடம் பேசுங்க.
பேசுறதா?
ம்ம்.பேசுங்க முடியலயா..கால்ல விழுந்திருங்க. தம்பி பொண்ணுங்க விசயத்துல ஈகோ பார்க்கக்கூடாதுப்பா அவர் அறிவுரை கூற,
என்ன பேசிகிட்டு இருக்கீங்க? வினிதா அம்மா சத்தம் கொடுக்க, வந்துட்டேன்மா என்று எழுந்து ஓடிக் கொண்டே கையை உயர்த்தி காட்டினார். பின்னே நின்ற பவி அப்பா அவரது மனைவியை பார்த்தார்.
என்ன? என்று அவர் கண்களை உயர்த்தி பவி அம்மா கேட்க, பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தார். அறையை விட்டு வெளியே வந்த கைரவ் பார்த்தது பவி அப்பாவின் முத்தத்தை.
அவன் விழித்தபடி நிற்க, பவி அம்மா வெட்கத்துடன் நகர்ந்தார்.
கைரவும் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து, அடக்கொடுமையே, இங்க என்ன நடக்குது? இந்த பெருசுகளுக்கு என்ன சேட்டை? புலம்பியவாறு அமர்ந்தான்.
கைரவ்..என்று அருகே சத்தம் கேட்க, யாருடா அது? நிமிர்ந்து பார்த்தான்.
வெகு அருகே அனிகா இருந்தாள். அவளை பார்த்தவுடன் தான்..இவ முன்னாடி என்ன பேசிட்டோம் என்று அவளை உற்றுநோக்கினான்.
நீ தான் அழைத்தாயா?
ஆமா..நாம எப்ப வீட்டுக்கு போவோம். நேரமாகுமா?
அண்ணா..வந்த பின் தான் செல்ல முடியும். உனக்கு ஏதாவது வேண்டுமா?
ஏய்..எதுக்கு கத்துற? அவ பாப்பாவுக்கு சாப்பாடு செய்ய போயிருக்கா.
இதயா என்று அழைக்க வாயெடுத்தான். அவனது வாயை பொத்திய அனிகா..நீ யாரையும் கூப்பிட வேண்டாம். நான் இங்கேயே ஓய்வெடுத்துக்கிறேன்.
உனக்கு கோபமெல்லாம் வருமா? கைரவ் கேலி செய்ய, அவள் முறைத்து விட்டு சோபாவில் இருந்த தலையணையை அதில் போட்டு அவள் அங்கேயே படுக்க, கைரவ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கவின் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
அபி அங்கே வந்து, நீ என்ன பண்ற? இங்க எதுக்கு தூங்குற?
வா..என்று அவன் அனிகாவை அழைத்து செல்ல, கைரவ் அழைத்து செல்வான் என்று தான் அவனிடம் கேட்டால் என்று தாமதமாக அறிந்து கொண்டான். அவள் கைரவை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். கவின் கைரவை முறைத்துக் கொண்டிருந்தான். கைரவும் அங்கிருந்து அகன்றான்.
அர்ஜூன் என்கொயரி நடக்கும் இடத்திற்கு வர, மாதவின் பெரிய அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் கூறிய நீதிபதிகள் மட்டும் வராமலிருக்க, அவர்களும் சற்று நேரத்தில் வந்தனர்.
அர்ஜூன் வீடியோவை போட, அனைவரும் பார்த்தனர். பின் அதிகாரிகள் பேச, மாதவ் அமைதியாக அமர்ந்திருந்தான். அதிக ஆட்கள் அவனுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் இருந்தனர்.
போலீசாக இருந்தாலும் அவருக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்க வேண்டும் என்று எதிரானவர்களும், அப்படியென்றால் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களை கொலைகாரன் கொன்ற பின் கொலைகாரனை பிடித்து உள்ளே தள்ளுவதா? அப்ப நாம் எதுக்கு மக்களை காப்பவர்களாக இருக்க வேண்டும்? கொலைகாரன் கொலை செய்து விட்டானா? என்று அறிந்து, திருடன் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டானா? என்று தெரிந்த பின் அவனை பிடித்து உள்ளே போடலாமா? இதில் என்ன பயன்?
போலீஸை காக்கும் கடவுளாய் மக்கள் பார்க்கணும். அதை விட்டு எல்லாம் முடிந்து இரத்த ஆறு ஓடும் போது ஆம்புலசுக்கு பதில் நாம் சென்று வேடிக்கை பார்ப்பதா? பலபலவாறு கேள்விகளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அனைத்தையும் பார்த்து விட்டு கலந்து பேசினார்கள் முடிவெடுக்க வேண்டியர்கள். சற்று நேரத்தில் அனைவரும் வெளியே வந்தனர். வெளியே இருந்த சைலேஷ் மாதவை எதிர்நோக்கி காத்திருந்தான்.
அர்ஜூன் கமிஷ்னருடன் வந்தான். அர்ஜூன்..மாதவ் எங்கே? சைலேஷ் கேட்க, உள்ளே என்று கையை காட்டினான் அர்ஜூன்.
சைலேஷ் உள்ளே செல்ல மாதவ் சைலேஷை பார்த்து, ஓடி வந்து அணைத்தான்.
என்னாச்சுடா? சைலேஷ் பதற,
சைலு..எனக்கு பிரமோஷன் கொடுத்திருக்காங்கடா.
ஹே..வாழ்த்துக்கள்டா சைலேஷ் குதூகலிக்க, டேய்..நான் என்னோட பப்ளிய பார்க்கணும்டா. கொஞ்ச நேரம் கூட பக்கத்துல விடாம பண்ணிடாங்க.அவள் நல்லா தான இருக்கா?
அத ஏன் கேக்குற? சாப்பிடவே இல்லை. உன்னை பார்த்தா தான் சாப்பிடுவா போல சைலேஷ் கூற,
நாங்க சொல்ல மட்டும் இல்ல. நித்தி ஊட்டியும் வாயை திறக்கவே மாட்டிங்கிறா? பயங்க பிடிவாதம் போ..
இப்பவே என்னால வர முடியாதே. அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்த பின் தான் வெளியவே வர முடியும்.
எப்படிடா நடந்தது? சைலேஷ் கேட்க, உயர்தர மக்களிடம் பேசினாங்க. அவங்க சொன்னதும் நீதிபதிகள் சொன்னதும் தான். என்னால் இதிலிருந்து வெளியே வர முடிந்தது. அதுமட்டுமல்ல சைலூ..என்னோட ஆட்கள் சிலரே எதிரா இருந்தாங்கடா. ஏதோ..நல்ல நேரம் என்றான் மாதவ்.
நீ வாங்கிய பின் போகலாம் சைலேஷ் கூற, இல்லடா நான் இப்பொழுதே அவளை பார்க்கணும். நான் என் வீட்டில் பேசி விட்டு வாரேன் என்று மாதவ் அவன் வீட்டில் பேச, அவனுடைய அப்பாவே அந்த பொண்ணு அவளோட நல்ல நேரத்தை உனக்கு கொடுத்த மாதிரி இருக்கு என்று சொல்ல, மாதவிற்கு கொண்டாட்டம் தான்.
சைலேஷை அணைத்து அவன் அப்பா கூறியதை கூற, டேய்..ரொம்ப சந்தோசப்படாத..அவங்க ஊரே ஒரு மாதிரி. அவளோட பெற்றோர் இன்னும் ஏதும் சொல்லவில்லை.
ம்ம்..நான் பேசிடுவேன். இல்ல அவ தான் இருக்காளே? நாங்க சேர்ந்து அவங்கள ஒத்துக்க வைப்போம்.
போடா..உனக்கு இன்னும் தெரியல? இனி தெரிஞ்சுப்ப சைலேஷ் கூற, மாதவ் அவனை பார்த்து சிரித்தான். பின் இரு நான் சாரை பார்த்து வாரேன் என்று கமிஷ்னர் அறைக் கதவு முன் வந்து நின்றான்.
அவனை பார்த்து அவர் உள்ளே அழைக்க, சார்..என்று சல்யூட் செய்தவன்..சார் ஆர்டர் நான் நாளை வாங்கிக் கொள்ளவா? நான் கட்டிக்கப்போற பொண்ணை பார்த்துட்டு வரவா? கேட்டான்.
கட்டிக்கப்போறீங்களா? அது முடியுமா? எங்க ஊரு பொண்ணை சும்மா குடுத்திருவோமா? அர்ஜூன் வினவ,
அர்ஜூன்..அவனை பயமுறுத்தாதே. நீ பார்த்துட்டு வா..நாளைக்கு முடியாது. காத்திருந்து வாங்கிட்டு போ..இல்ல நீ அதே இன்ஸ்பெக்டராக தான் இருக்கணும் என்றார்.
மாமா..என்னை சொல்லிட்டு நீங்க அவரை பயமுறுத்துறீங்க?
வாங்கிட்டு போ..எவ்வளவு நேரம் ஆகப் போகுது?
அர்ஜூன் கையில் தயாராக வைத்திருந்தான். அதை தூக்கி ஆட்டி காட்டினான்.
அதை வாங்கிய கமிஷ்னர் எழுந்து வந்து, நம்ம புது “ஏ எஸ் பி”க்கு சல்யூட் என்று அவர் கேலி செய்ய, அர்ஜூனும் அவ்வாறே செய்து காட்ட, மாதவ் புன்னகையுடன் “தேங்க்யூ சார்” என்று சல்யூட்டுடன் ஆர்டரை வாங்கிக் கொண்டான்.
சார்..கிளம்பலையா? யாசு வெயிட்டிங் அர்ஜூன் கூற, அவன் வேகமாக வெளியே வர, வரிசையாக அவனுக்கு சல்யூட் அடித்தனர். அவனுக்கு அதெல்லாம் இப்பொழுது பெரியதாக இல்லை. யாசுவை பார்க்கப் போகிறான். இல்லை.. இல்லை.. பறந்தான் மாதவ் நம் சைலூவுடன்.
மாமா..நானும் கிளம்புகிறேன் அர்ஜூன் சொல்ல, அந்த பொண்ணு ஒத்துக்கலைன்னா என்ன செய்வ?
யாரு?
நீ காதலிக்கிற பொண்ணு.
ஸ்ரீயா? அவ ஒத்துக்கலைன்னா என்ன? அவள பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
அர்ஜூன்..அந்த பொண்ணு கல்யாணம் செஞ்சு போயிட்டா?
பண்ண மாட்டா மாமா. அவளுக்கு கல்யாணம்னா என்னோட தான். இல்ல நாங்க தனியா தான் அனுவை பார்த்துட்டு இருப்போம்.
அர்ஜூன்..நீ நினைக்கிறது நடக்காது என்று மனதினுள் நினைத்த அர்ஜூன் மாமா. கிளம்பு உனக்கு வேலை இருக்கும்.
நீங்க ஆன்ட்டியிடம் பேசுனீங்களா? இல்லையா?
நீ கிளம்பு என்று அவர் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார். அவன் தோளை குலுக்கி விட்டு சென்றான்.
கமலிக்கு கயல் பற்றிய அனைத்தும் தெரிய வந்தது. ஆனால் இவள் இந்த அளவு செய்யமாட்டாளே? அவன் யாராக இருப்பான்? சிந்தித்தார். அண்ணனும் சொல்ல மாட்டிக்கிறான். அர்ஜூனும் சொல்ல மாட்டிக்கிறான். ஸ்ரீக்கு நெருக்கமானவர் என்றால் அகில் அப்பாவா?
ச்சே..அவர் ரொம்ப நல்லவராயிற்றே யோசனையுடன் இருந்தார். அவர் செக்ரட்டரி சில புகைப்படங்களை கமலி முன் வைத்தார்
என்ன?
இதை பாருங்க..
கமலி எடுத்து பார்த்தார். கயல் வீட்டிலிருந்து அர்ஜூன் நிவாஸையும் கவின் ஸ்ரீயையும் தூக்கி வருவது போல் இருந்தது. ஸ்ரீ மயங்கிய நிலையில் இருந்ததும், அவள் ஆடையில் அர்ஜூனின் ஆடை தெளிவாக தெரிய அதிர்ந்து அவரை பார்த்தார் கமலி.
மேம். கயலோட பையன் தான் அந்த பொண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தான். நம்ம தம்பியும் அவரோட நண்பனும் தான் காப்பாற்றி இருக்காங்க.
ஹாஸ்பிட்டலில் தாரிகா அம்மாவிடம் ஸ்ரீக்கு நடந்ததை அர்ஜூன் கூறி கதறிய புகைப்படமும் இருக்க, அர்ஜூன் எதுக்கு இப்படி அழுகிறான்?
தெரியல மேம். ஒன்று சொல்லவா மேம்.
என்ன?
மேம். அந்த பொண்ணை மிரட்டி தான் அந்த வீட்ல வைச்சிருந்திருக்காங்க. இப்ப நம்ம தம்பியும், அந்த பொண்ணோட ப்ரெண்ட்ஸூம் அந்த கயலிடம் டீல் பேசி அந்த பொண்ணை வெளிய அழைச்சு வந்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க நினைச்ச மாதிரி அந்த பொண்ணு இல்ல மேம்.
அவ ப்ரெண்ட்ஸை அடுத்தடுத்து கொல்ல பார்க்கிறாங்கன்னு அவளாகவே அந்த வீட்டுக்கு தனியே சென்று மீண்டும் மயங்கிய நிலையில் உங்க பையன் தான் தூக்கிட்டு வந்தார் என்று அர்ஜூன் ஸ்ரீயை வைத்துக் கொண்டு ஆதேஷ் காரில் ஏறியது புகைப்படமாக்கப்பட்டு இருந்தது. அதை காட்டினார்.
அவள கொல்லமட்டும் பார்க்கலை. அவளை அந்த பையன் அடைய நினைக்கிறான். சரியா? கமலி கேட்க, அப்படி தான் தெரிகிறது மேம். கமலி சிந்தனை ஜிதின் பக்கம் சென்றது.
மாதவும், சைலேஷும் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைய இன்பா அவர்களிடம் வந்தாள்.
மாதவ்..என்னடா அவ என்னை விட பிடிவாதம் பண்றா. சாப்பிடாம மருந்து சாப்பிடாம நர்ஸ் திட்டுறாங்க. அவளை வேற ஹாஸ்பிட்டல் மாத்த சொல்றாங்க.
வா..போகலாம் சைலேஷ் கூற, நீங்க இருங்க. நான் அவளை பார்த்துக்கிறேன். இன்பா நீ அவளுக்கு சாப்பாடு, மருந்து எடுத்து வா என்று மாதவ் யாசுவை காண ஓடினான்.
யாசு அறைக்குள் சென்று, பப்ளிம்மா நான் வந்துட்டேன் என்று அவளிடம் வந்தான். அவள் வாடிய கொடி போல் படுக்கையில் இருக்க, அவனை பார்த்ததும்..உங்களுக்கு ஒன்றுமில்லைல. வேலை போயிருச்சா? மெதுவாக கேட்டுக் கொண்டே பதறினாள்.
அவளருகே அமர்ந்து, அவன் அப்பாயின்மென்ட் ஆர்டரை காட்டினான். எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு பப்ளி. உன்னால்..உன்னால் தான்.
நீ ஏன் சாப்பிடலை? இப்படியா பிடிவாதம் பண்ணுவ? உனக்காக வேகமாக ஓடி வந்தேன். சாப்பிடு மருந்து போட்டு நீ ஓய்வெடுக்கணும்.
அவள் கண்ணீர் வெளியே வர, என்னருகேயே இருப்பீங்களா?
உன் பக்கத்திலே தான் இருப்பேன். நான் எங்கும் போகலை..மாதவ் கூற, ஓய்ந்து கண்களை மூடினாள்.
சாப்பிடணும்மா..தூங்காத என்றான்.
ம்ம்..என்று கண்ணை திறந்து மாதவை பார்த்தாள் யாசு. அவன் கண்கள் சிவந்து தலை களைந்து இருக்க, அவனது கன்னத்தை தொட்டாள். அவளது கையை பிடித்து அவளது உள்ளங்கையில் முத்தமிட்டான்.
இன்பா உள்ளே வந்து யாசுவை திட்டிக் கொண்டே சாப்பாட்டை எடுத்து வைத்தாள். அமைதியா எடுத்து வை இன்னு மாதவ் கூற,
இவள திட்டக்கூடாதா? இவளால நானும் நித்தியும் எவ்வளவு திட்டு வாங்கினோம் தெரியுமா? பிடிவாதம்..இந்த நிலையில் என்ன பிடிவாதம்? மேலும் திட்டி விட்டு ஒழுங்கா அவளை சாப்பிட வை. அவள் சாப்பிட பின் சொல்லு. அவளுக்கு மருந்து கொடுக்கணும். நர்ஸ் வருவாங்க இன்பா யாசுவை பார்த்து விட்டு வெளியேறினாள்.
யாசு வயிற்றை பிடித்துக் கொண்டு அமர, அவளருகே சென்று அவளை தோளில் சாய்த்திக் கொண்டு சாப்பாடு ஊட்ட, அவள் அவனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டாள்.
என்னால பேசவே முடியல. ரொம்ப வலிக்குது என்றாள். தன் நெஞ்சில் அவளை சாய்த்து அவளது முடியை வருடிக் கொண்டே..நீ பேச வேண்டாம். நீ சீக்கிரம் சரியாகணும். அப்பொழுது தான் நம் பிரச்சனையில் கவனத்தை செலுத்த முடியும்.
அர்ஜூன் ஹாஸ்பிட்டலுக்குள் வர, சைலேஷ் தோளில் சாய்ந்தவாறு நித்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அனிகா பற்றிய யோசனையில் இருந்தான். நிவாஸும் இன்பாவும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். அகில் அறையில் பவி இருந்தாள்.
அர்ஜூன் அவர்களை பார்க்க, நிவாஸ் அவனிடம் வந்து ஸ்ரீ நல்லா இருக்காலா? கேட்டான்.
நல்லா இருக்கா நிவி என்று நீ மேம்மை அழைத்துக் கொண்டு வினிதா அக்கா வீட்டுக்கு போ..அர்ஜூன் கூற,
நான் இங்கேயே இருக்கேன். நான் இங்க பார்த்துக்கிறேன்டா அர்ஜூன் கூற,
அர்ஜூன் நாளைக்கு அக்காவுக்கு சாமி கும்பிடணும். என்னோட அம்மா பேசணும்ன்னு சொன்னாங்க. நீ வீட்டுக்கு வரணும். நிவி..நீ ஓய்வெடுக்கணுமே? கேட்க,
நான் பார்த்துக்கிறேன் என்று தேவ் வந்தான். மாப்பிள்ள நீங்க என்னோட அறையில் சென்று ஓய்வெடுங்க. இப்ப உங்களுக்கு எப்படி இருக்கு? நிவாஸிடம் வந்தான்.
பரவாயில்லை மாமா.
இன்பாவை பார்த்து, மேம்..உங்களுக்கு எப்படி இருக்கு? தேவ் கேட்க, எனக்கு நல்லா தான் இருக்கு என்று சைலேஷை பார்த்தாள். அவனும் நித்தி மீது சாய்ந்திருக்க, அர்ஜூன்..எல்லாரும் சோர்வா இருக்காங்க. அகில், யாசுவை பார்க்க ஆள் இருக்காங்க. நிவாஸ் நீயும் வீட்டுக்கு வா..இன்பா அழைக்க,
நான் பார்த்துக்கிறேன் என்று தேவ் கூற, சார்..நீங்க இங்க இருக்கப் போற நாலு பேரையும் பார்த்துக்கோங்க. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. யாருமே இந்த வாரம் ஓய்வே எடுக்கல.
நம்ம ப்ரெண்ட்ஸ சார் பார்த்துப்பாரு..என்ற இன்பா..டாக்டர் சார் பார்த்துப்பீங்கள? கேட்டாள்.
பார்த்துக்கிறேன்.
நீ அகிலையும் யாசுவையும் பார்த்துட்டு வா அர்ஜூன் கிளம்பலாம் என்று யாசு அறைக்கு சென்று, இருவரும் ஓய்வெடுங்க. நாங்க வீட்டுக்கு கிளம்புறோம். நர்ஸிடம் சொல்லிட்டேன். வந்துருவாங்க. அவனை தொந்தரவு செய்யாம தூங்கு. நீயும் ஓய்வெடுத்துக்கோ. கவனமா இருடா என்று இன்பா பேச,
இன்பா..எனக்கு பிரமோசன் குடுத்திருக்காங்க மாதவ் கூற, ஹே..வாழ்த்துக்கள்டா என்று அவன் கையை பிடித்துக் கொண்டு குதித்தாள்.
சரி ட்ரீட் வைக்க மறந்துறாத? மகிழ்வுடன் கலகலவென பேசினாள். ஆனாலும் மாதவ் அவள் வருத்தத்தை புரிந்து கொண்டான்.
எல்லாரும் கனவு எல்லையை தொட்டு விட்டோம். இன்பா..நீ..உனக்கு உன் அப்பாவோட கம்பெனி.. அவன் ஆரம்பிக்க,
வேண்டாம் மாதவ். பேசாத. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு கிடைக்கும். நானும் உங்களை போல் என் கனவை அடைவேன். என்ன? நேரம் தேவைப்படும். நான் கிளம்புகிறேன் அவளை பார்த்துக்கோ..என்று வெளியேறினாள். மாதவ் இன்பா செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். யாசு அவன் கையை பிடிக்க, கண்கலங்க..அவ ரொம்ப கஷ்டப்பட்டா பப்ளிம்மா. ஆனாலும் அவளால் அவனிடமிருந்து மீட்டெடுக்க முடியாமல் அவள் மாட்டிக் கொண்டாள் என்று வருத்தப்பட்டான். அவளும் இன்பா சென்ற திசையையே பார்த்தாள்.