அத்தியாயம் 54

கவின் அகில் அறைக்கு செல்ல, உள்ளே பவி இருந்தாள். காத்திருக்காது கதவை திறந்த கவின் பவியை கண்டு கொள்ளாமல் அகிலிடம் கத்த ஆரம்பித்தான். அபி அவனை தடுக்க,

அகில் அவனை பார்த்து ஒன்று தான் கேட்டான். கவின் ஏதும் பேசாமல் அமர்ந்தான்.

ஏன்டா, இப்படி நடந்துகிட்ட? அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல? அப்படியே அமர்ந்தான் கவின் கண்ணீருடன்.

அகில் ஏதும் பேச வேண்டாம் என்று அகிலிடம் கூற, எதுக்குடா பேசக் கூடாதுன்னு சொல்ற?

இவன் பேசியது தெரிஞ்சு எனக்கே எவ்வளவு கோபம் தெரியுமா இவன் மீது? அந்த பொண்ணு அவனை ஒரு தலையாக காதலித்து, இப்ப தான் காதல் கை கூடியதால் நிம்மதியா இருந்திருப்பா. ஆனால்..என்ன பேசிட்ட? ஆதேஷிற்கும் அவளுக்கும் ஒன்றுமில்லை என்று அவள் கூறிய பின்னும் உனக்கு என்ன சந்தேகம் அவன் மீது மட்டுமா? கைரவ் சும்மா உன்னை வெறுப்பேற்ற தான் செய்தான். அதையும் சேர்த்து பேசி அவளை நோகடித்து விட்டாய். இப்ப அனுபவி ராசா..ஆன்ட்டி சொன்னது வேற யாரையும் இல்லை. கைரவை வைத்து தான பேசின. அவனோடவே சேர்த்து வைக்க தான் நினைக்கிறாங்க. அதனால நடப்பதை வேடிக்கை பாரு.

இல்ல அவ ஒத்துக்க மாட்டா கவின் சாதாரணமாக பேசினான்.

அகில் சினத்துடன் எழுந்தான். என்ன? ஒத்துக்க மாட்டாளா? அவ ஒத்துக்குவா டா? அவ அம்மாவுக்காக செய்வா? நீ எப்படி சந்தேகப்பட்டாலும் அமைதியாக எத்தனை நாள் போவா? கத்தினான்.

அகில்..என்ன பண்ற? உன்னை டாக்டர் ஓய்வெடுக்க சொன்னாங்க? உங்க பிரச்சனைய அப்புறம் வச்சுக்கலாம் பவி கூற, அப்பொழுது தான் கவின் பவியை பார்த்தான்.

பவி..எனக்கு ஒன்றுமில்லை. இருக்கிற பிரச்சனையில இவன் வேற. அர்ஜூன் தனியா எத்தனைய தான் பார்ப்பான். இங்க பாரு கவின். அர்ஜூன் நம்ம ப்ரெண்டு முதல்ல மாதிரி இல்ல. தாரிகா அவனோட தங்கை. சோ..நீ விலகிடு.

என்னால முடியாது? கவின் கூற, அபி அவனை வெளிய போக சொல்லு இல்ல அடிச்சிருவேன் அகில் கத்தினான். இன்பா அங்கே வந்தாள். அபி என்ன செய்வதென்று விழிக்க,

ஏன்டா, இப்படி கத்திக்கிட்டு இருக்க? இன்பா உள்ளே வந்தாள். கவினை பார்த்து ஓ..உன்னால் தான் இந்த கூச்சலா?

மேம்..என்றான் அகில்.

எல்லாரும் தாரிகாவை பத்தி யோசிச்சீங்க? அவன் நிலையை யாராவது கேட்க தோன்றியதா? அவனோட அக்காவுக்கு மேரேஜுன்னு சொன்னீங்க? அந்த டென்சன்ல கூட இருந்திருக்கலாம். இல்ல அவனுக்கு வேற பிரச்சனை கூட இருக்கலாம் என்று கவினிற்காக இன்பா பேச,

அவன் பேசியது சரின்னு சொல்றீங்களா? அபி கேட்க, நான் அப்படி சொல்லவில்லை. அவன் பேசியது, செய்தது தவறு தான். ஆனால்..அதற்காக அவனை மட்டுமே குறை சொல்ல முடியாதே.

என்னவாது செய்யுங்க. என்ன பிரச்சனையானாலும் அவன் செய்தது தவறு தான். இப்ப ஓ.கே தான். கல்யாணம் முடிஞ்ச பின் இப்படி பேசினா என்ன நடக்கும்? போங்க எல்லாரும் என்று கத்தி விட்டு அகில் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

கவின் அவனிடம் வந்து, எனக்கு நல்லா புரியுதுடா. நான் தவறிழைத்து விட்டேன். ஆனால் இந்த ஒரு முறை வாய்ப்பு குடுக்கலாம்ல. அவள் உடனே வேறொருவனிடம் போற பொண்ணு இல்லடா. எனக்கு அவளை பற்றி நல்லா தெரியும். ஆன்ட்டியால் கூட ஒத்துக்கிட்டு இருந்திருக்கலாம். அவள் மட்டும் என்னை காதலிப்பது போல் எல்லாரும் பேசுறீங்க? என் காதல் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

உன் காதல் மேல எங்களுக்கு நம்பிக்கை இருந்த ஒன்றும் ஆகப் போறதில்லை. அதை வேண்டியவங்களுக்கு புரிய வை. பார்ப்போம்.

ஆன்ட்டிய தான சொல்ற? கவின் கேட்க, அகில் முறைத்தான்.

முறைச்சே என்னை கொன்றாத..

நீ என்ன செஞ்சாலும் சீக்கிரம் செய். சைலேஷ் சாரும் தாரிகா அம்மாவும் தீவிரமா இருப்பது போல் தெரியுது? விட்டா இருவருக்கும் கல்யாணத்தையே முடிச்சிருவாங்க அபி பயமுறுத்த,

அண்ணா இருக்கும் போது எப்படிடா தம்பி கல்யாணம் செய்வான்?

கட்டுபாட்டுடன் இருக்க இது என்ன நம்ம ஊரா? அகில் கேட்க,

நிஜமாகவே தாரிய கைரவுடன் சேர்த்து வைக்க போறாங்களா? கவின் கண்ணீர் அகில் கையில் பட்டு தெறிக்க, அகில் அவனை பார்த்து, செய்றத செஞ்சுட்டு அழுது என்ன பிரயோஜனம்? என்று மீண்டும் திட்டினான்.

இன்பா அவனை பார்த்து ஏதோ பேச வர, அபி இன்பா கையை பிடித்து தடுத்தான். அவள் அவனை பார்க்க, வா..போகலாம் என்று கவினை அபி அழைத்தான்.

எங்க போறது? கவின் கேட்க

கவின் வா..அர்ஜூனிடம் பேசலாம். எவ்வளவு பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. இதுல நீ வேற..வாடா அவனுக்கு உதவலாம் என்று அபி கூற, அகில் அபியை பார்த்து கண்ணசைத்தான்.

அபி கவினை அழைத்து செல்ல அகில் அர்ஜூனை அழைத்து,

அர்ஜூன்..தாரிகா விசயத்தில் கவின் தெளிவா தான் இருக்கான். அப்புறம் இப்ப சைலேஷ் சாரை பார்க்க நினைப்பான் இல்ல கைரவை தான் பார்க்க செல்வான்.

ஆனால் அபி உன்னிடம் அழைத்து போவதாக வெளியே அழைத்து செல்கிறான்.

நான் பார்த்துக்கிறேன் அகில். நீ ஓய்வெடு. கைரவும் அக்கா வீட்ல தான் இருக்கான். நானும் வீட்டிற்கு தான் போறேன். அபி கவினையும் அங்கே வர வைத்துக் கொள்கிறேன்.

அர்ஜூன் பார்த்துடா..சும்மாவே எங்களுக்கும் கைரவுக்கும் ஏகாந்த பொருத்தம். இப்ப இது வேற..பார்த்து பண்ணு. கவினை சரிசெய்ய நான் தேர்ந்தெடுத்ததே கைரவை தான். தெரியும்ல.

கைரவ் வாய்க்கு வாய் பேசுவான். அளவுக்கு மீறி போகமாட்டான் அர்ஜூன் கூற,

அர்ஜூன் எல்லாத்திலும் கவனமா இரு. அந்த கயல் என்ன ஆனால்..?

நம்ம ஆன்ட்டி பாதுகாப்பா இருக்காங்க அகில் என் அங்கிள் கண்காணிப்பில்.  கயலுக்கு தெரியாமலே அவளை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தான் இப்பொழுது நம் மீது குறி வைத்தவன் யார் என தெரியும்?

அர்ஜூன்..ஆமாம் அகில். அவனும் அந்த கொலைகாரன் ஆள் தான். அவங்கள யாருமே முழுசா பிடிக்கல. எல்லா இடத்திலும் பழக்கம் வைச்சிருக்கான் அவன்.

யாரு தான்டா அந்த ஆள்? சொல்லித் தொலையேன். யோசித்து தலைவலிக்கிறது.

ரொம்ப யோசிக்காதடா. அடுத்து அவங்க பார்க்க போறது என்னையும் உன்னையும் தான்.

என்ன சொல்ற?

நாம இருவரும் அவனை பார்க்க போறோம். தயாராகி இரு.

பார்க்கணும்டா..அவன் யாருன்னு பார்க்கணும்டா என்று பல்லை கடித்தான் அகில்.

அவனை உனக்கு தெரியாது. ஆனால் அவனுக்கு உன்னை நல்லா தெரியும். உன் அம்மா, அப்பாவை நல்லா தெரியும். நீ அனைத்திற்கும் தயாராகு என்று போனை துண்டித்தான் அர்ஜூன்.

அகில் போனை வைத்து விட்டு பார்த்தால் இன்பாவும் பவியும் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.

என்ன? என்று அகில் கேட்க,

கவினை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்களா? இன்பா வினவ,

மேம்..உங்கள விட அவனை பத்தி எங்களுக்கு தெரியும். நீங்க எதையாவது பேசி கவின் கண்டு கொண்டால் அனைத்தும் வீணாகிவிடும். அதனால் தான் அபி தடுத்தான்.

கவின் தாரிகா மீது காதல் வைத்திருக்கிறான் என்று எங்க எல்லாருக்குமே நன்றாக தெரியும். ஆனால் அவன் கோபத்தில் இது போன்ற சந்தேகமான வார்த்தையை உதிர்த்து விட்டால் எல்லாம் முடிந்து விடும்.

பிரச்சனையில பிரிஞ்சவங்கள பார்த்திருப்பீங்க? எங்க ஊர்ல கணவனும் மனைவியும் எவ்வளவு சண்டை வேண்டுமானாலும் போடலாம். பொறாமை படலாம். ஆனால் இருவரும் சந்தேகம் கொள்ளக்கூடாது. அப்படி ஊரார் முன் நடந்தால் இருவரது பந்தத்தையும் ஊரார் பிரித்து விடுவார்கள்.

என்ன? என்னடா ஊர்? உங்க ஊர்? எத்தனை கண்டிப்பு? என்று இன்பா சலிப்புடன் கூற,

நீங்க ஏன் மேம்..சலித்துக்கிறீங்க..உங்களுக்கென்ன? வெளிநாட்டு பையனை தான பிடிக்கும்? அகில் கூற,

டேய்..நீயுமா? கேரி..என்னோட ப்ரெண்டு மட்டும் தான். அவனுக்கு புரிந்திருக்கும்.

உங்களுக்கு வேற யாரையுமே பிடிக்கலையா? அகில் கேட்க, இன்பா அவனை முறைத்து விட்டு வெளியே சென்றாள்.

மேம்..போங்க..போங்க..இந்த வருசம் முடிவதற்குள் எங்க அபிய மிங்கிள் ஆக்கி காட்டல நான் அகில் இல்லை அவன் கூற,

முடிஞ்சா முயற்சி செய் என்றாள்.

மேம்,..நீ சொன்னதை நான் எப்படி எடுத்துக்கிறது? அவனுக்கு வேற பொண்ணை கரெக்ட் பண்ணி விட்றவா? அவன் கேட்க, அவள் அவனை பார்த்து போடா..டேய்..என்று திட்டி விட்டு சென்றாள்.

பவி அகிலை அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீ எதுக்கு அப்படி பார்க்குற? அவன் கேட்க,

கவினையும் தாரிகாவையும் சேர்த்து வைக்க கைரவா? அவள் வினவ, அவளை அமர சொல்லி..நீ எதுக்கு இதை பற்றி யோசிக்கிற?

இல்ல..நான் ஒன்று சொன்னால் யாரிடமும் சொல்ல மாட்டேல அகில் பவி புதிர் போட,

அப்படி என்ன சொல்லப்போறீங்க?

அது.வந்து..அனிகா..?

யாரு?

அதான் நான் ரொம்ப நாள் கழித்து பேசினேன்னு சொன்னேன்ல என்னோட தோழி.

அவளுக்கென்ன?

அவளுக்கு…அவளுக்கு..

இழுக்காம சொல்லும்மா?

அவளுக்கு கைரவை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

அதுக்கு?

அதனால அவனுக்கு பதில் தாரிகாவிற்கு உதவ வேற யாராவது அரேஞ்ச் பண்ணலாமே?

என்ன? அதிர்ந்தான்.

ஏய்..விளையாடாத? அவனே ஒத்துகிட்டான். எல்லாமே ஆரம்பிக்க போறாங்க.

கொஞ்ச நாள் கைரவ் வீட்ல தான் அவளும் இருக்கப் போறா? அவள் முன்னாடி நடந்தா கஷ்டப்படுவால..

இப்ப நான் ஏதாவது சொன்னா? என்னை கூப்பிடுவாங்க? ஆத்தாடி..என்னை விட்டுரும்மா.எனக்கு இதெல்லாம் வராது.

ப்ளீஸ்..அவ ரொம்ப அப்பாவியான பொண்ணு. ரொம்ப கஷ்டப்படுவா.

அதுக்கு? இங்க பாரு பவி. காதல்ல பிரச்சனை வரும். அதை ரெண்டு பேரும் சேர்ந்து தான் சமாளிக்கணும். அவ கைரவிடம் காதலை கூறினாளா?

இல்லை. என்னிடமே ஒத்துக் கொள்ள மாட்டிங்கிறா?

கைரவிடம் இதை அர்ஜூன் கூட பேச முடியாது. அந்த பொண்ணு பக்கத்துல தான இருக்கப் போறா? அவனும் அவள் காதலை உணருவான். அவளும் அவனை புரிந்து கொள்வாள். அகில் என்ன தான் கூறினாலும் பவி சமாதானமாகவில்லை.

அப்ப..நான் அவனுக்கு பதில் போகவா? அகில் கேட்க, பவி மௌனம் காத்தாள்.

சொல்லு..என்று அவளை திருப்பினான்.

அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது.

எதுக்கு அழுற? அவள் கண்ணீரை துடைத்தான் அகில்.

அவளோட அம்மாவை வேறு இழந்திருக்கிறாள்..என்று அவள் அழ, பவி..நீ அவளை சொல்லிவிட்டு நீ தான் வெகுளித்தனமாய் இருக்க. உன்னை நினைச்சு சிரிக்கவா? வருத்தப்படவான்னு தெரியல. இரு தோழியரும் ஒரே மாதிரி இருப்பீங்களோ? கிண்டல் செய்தான்.

வாழ்க்கையில பிரச்சனை வரத்தான் செய்யும். அதுக்கு அவளுடைய எல்லா விசயத்திலும் நீ செல்ல முடியாது. நீ தோழி தான. அவளே உன்னிடம் பேசுவா பாரு. அப்ப ஆறுதலா பேசு. அதுவே போதும்.

என்ன ஓ.கே தான? என்று அவளது கன்னத்தை பிடித்தவன் நெற்றி முட்டி சிரித்தான். அவன் சிரிக்கவும் பவி வேகமாக தலையசைத்தாள்.

கவினும் அபியும் வினிதா வீட்டினுள் நுழைய கவினை பார்த்து தருண் எழுந்து, எதுக்குடா வந்த? என்று கத்தினான்.

வேண்டாம் தருண். பிரச்சனை பண்ணாத இதயா கூற,

இவன் பண்ண மாதிரி எனக்கு பண்ண தெரியாது இதயா. நீ அமைதியா இரு என்று சத்தமிட்டான். கைரவ் அவனை முறைத்தவாறு இருந்தான்.

ஸ்ரீ கவினிடம் வந்து, பளாரென்று ஓர் அறை விட்டாள்.

என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க? உங்கள உருகி உருகி காதலிச்சா இப்படி தான் பேசுவீங்களோ? அவளும் கத்த, இதயா அம்மாவும் வினிதா அம்மா, அப்பாவும் ஸ்ரீயை தடுத்து அவளை நகர்த்தி விட்டு,

ஆம்பள பையனை கை நீட்டுற? என்று வினிதா அம்மா திட்ட,

அவன் பேச்சுக்கு இது போதாதும்மா. அவனை கொல்லாம விட மாட்டேன் என்று துள்ளினாள்.

அவளை அவர்கள் பிடித்துக் கொண்டிருக்க, ஸ்ரீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? என்று அர்ஜூன் வந்தான்.

நீ எப்படா வந்த? கைரவ் கேட்டான்.

அனு விழித்துவிடுவாளோன்னு சத்தமில்லாம வேலைய பார்த்துக்கிட்டு இருந்தா. எல்லாரும் சத்தமிட்டே அவளை விழிக்க வைத்து விட்டீர்கள்? என்று சத்தமிட்டான்.

எழுந்து அமர்ந்திருந்த அனு அர்ஜூன் சத்தம் கேட்டு, கட்டிலிருந்து குதித்து அவனிடம் ஓடி வந்தாள். அவளை தூக்கிய அர்ஜூன்,

என்ன செகண்ட் ஏஞ்சல் எழுந்துட்டீங்க?

தெளிந்த அனு..அர்ஜூனிடமிருந்து இறங்கி அறைக்குள் ஓடினாள். அவனும் பாப்பா பின் சென்றான். அவளும் ஸ்ரீயும் வரைந்து வண்ணம் தீட்டிய படங்களை காண்பித்து சிரித்தாள்.

பாப்பா வரைஞ்சீங்களா?

ஏஞ்சல் வரஞ்சா..நான் கலர் பண்ணேன்.

ஸ்ரீயை பார்த்து விட்டு, வாவ்..ரொம்ப அழகா கலர் பண்ணி இருக்கீங்க.

அர்ஜூனுக்காக வேறொரு படத்தில் வண்ணம் செய்து தருகிறீர்களா?

ம்ம்..ஏஞ்சல் பண்ணலாமா? அனு கேட்க, பண்ணலாம் அனுக்குட்டி என்று அவளிடம் வந்தாள்.

செகண்ட் ஏஞ்சல், நீங்க முடிச்சு வையுங்க. அர்ஜூன் நாளைக்கு வந்து பார்க்கிறேன்.

நாளைக்கா? ஏன்டா? என்று கவின் அர்ஜூனிடம் வந்தான்.

நீங்க வீட்ல இருக்கிறவங்கள..பார்த்துக்கோங்க. நான் மாதவ் சார் பிரச்சனையை முடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போரேன்.

அனிகாவை பார்த்த அர்ஜூன், நீ ஓ.கே தான? கேட்டான். அவள் தலையசைத்தாள்.

கைரவ் உன்னோட அண்ணா வர கொஞ்சம் நேரமாகும். அதுவரை இங்கேயே இருங்க. சார் வந்த பின் அனிகாவுடன் நீயும் வீட்டிற்கு சென்று விடு.

அர்ஜூன் நீ கண்டிப்பா போகணுமா? நீ ஓய்வெடுக்கவே இல்லையே? தருண் கேட்க,

ஆமாம். மாதவ் சாருக்கு தேவையான வீடியோ எடுக்க தான் இப்ப வந்தேன். இப்ப அவங்க என்கொயரிய ஆரம்பிச்சிருவாங்க. நான் சீக்கிரம் போகணும். கவினை இங்கே அனுப்பியது நான் தான். எல்லாரும் அமைதியா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். பிரச்சனை பண்ணாதீங்க..என்று அனும்மா சமத்தா இரு. நான் வாரேன் என்றான்.

அர்ஜூன் நில்லு..நீ இரு. நான் குடுத்துட்டு வாரேன் கைரவ் முன் வந்தான்.

கையூ நீயும் அனிகாவும் இங்கேயே இருங்க. நான் என்னோட மாமாவையும்  பார்த்து பேசணும்.

மாமாவா? தருண் கேட்க,

ஹே..என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் சுந்தரன். அவர் தான் அர்ஜூனின் சொந்த மாமா. இப்ப கமிஷ்னரா இருக்கார்டா அபி கூற

சொந்த மாமாவா? ஸ்ரீ அர்ஜூனிடம் என்னடா சொல்றான்?

ஆமா..என்னோட அம்மாவோட உடன் பிறந்த அண்ணன். இப்ப இத பேசுற நேரமா?

அர்ஜூன்? எல்லாரையும் வைச்சுக்கிட்டு ஏன்டா தனியா கஷ்டப்பட்ட? கவின் கேட்க,

அவர் மனைவி, புள்ளையே கோபிச்சுகிட்டு தனியா போயிட்டங்க. அவர் கிட்ட போய் அவர் பிரச்சனைய அதிகமாக்க சொல்றியா? என் அம்மாவுக்கு பிசினஸ்னா.. அவர் உத்தியோகத்தில் கண்ணாய் இருந்தவர். குடும்பத்தை விட்டார். இவர் கூட பேச மட்டும் தான் முடியும். வாழ முடியாது. என்னை விடுங்கடா. நேரமாகுது.

ஓ.கே அர்ஜூன் அவரிடம் பேசிட்டு வீட்டுக்கு வந்திரு. ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் கவின் கூற, காரியம் கெட்டது என்று அர்ஜூன் தலையில் கை வைத்து, என்னால முடியாது. நீங்க பத்திரமா இருங்கடா என்று சொல்லிக் கொண்டே வெளியே ஓடினான். போகும் போது கைரவை பார்த்து கண்சைகையிலே இருவரும் பேசினார்கள். அனிகாவும் ஸ்ரீயும் இருவரையும் பார்த்தனர்.

இப்படி ஓடிக்கிட்டே இருந்தான்னா இவனிடம் எப்படி நான் பேசுவது? என்று இதயா அம்மா புலம்பினார்.

ஆன்ட்டி..நோ வொரி. அவனை வர வைச்சிடலாம் தருண் கூற, கைரவ் கவினை பார்த்தான்.

கைரவ் போன் ஒலிக்க,..ம்ம்..ஓ.கே என்று போனை அணைத்தான். பக்கத்தில் இருந்த அனிகா அவனை பார்த்தாள்.

கைரவிற்கு கவினை பார்க்க பார்க்க கோபம் ஏறியது. நீ என்னையே தவறானவா பேசிட்டேல. இரு என் வேலையை காட்டுகிறேன் என்று அவனை முறைத்துக் கொண்டே போனை எடுத்து தாரிகாவை அழைத்து,

ஹே..டியர் என்ன பண்றீங்க? நானா? வினிதா அக்கா வீட்ல தான் இருக்கேன். பெரிய அடியெல்லாம் இல்லை என்று அவன் பேசிக் கொண்டிருக்க, தாரிகா அவனிடம் உனக்கு என்ன பைத்தியமா? என்று திட்டினாள்.

இங்கயா? இங்க நமக்கு வேண்டாதவங்கல்லாம் வந்திருக்காங்க என்று கவின் அருகே வந்து வேண்டுமென்று சத்தமாக கூற தாரிகாவிற்கு புரிந்தது. கவின் ஊரிலிருந்து வந்து விட்டான் என்று.

அவளும் கைரவுடன் இணைந்து கொள்ள, கைரவிற்கு சொல்லவா வேண்டும். அதிகமாகவே பேசினான். இதை பார்த்துக் கொண்டிருந்த அனிகா வருத்தமாக, கவினோ பட்டென போனை பிடுங்கி

தாரி..நீ தான பேசுற? பேசு நானும் கேட்கிறேன் என்று சினத்துடன் பேசினான். அவள் மௌனமாகி விட,..எல்லாரும் சொல்றது உண்மையா? நீ கைரவையா கல்யாணம் பண்ணிக்கப் போற? கேட்டான்.

கண்கலங்க நின்ற தாரிகா கண்ணை துடைத்து விட்டு ஆமாம், என்று ஒற்றை சொல்லில் பதில் தந்தாள் அவள்.

உனக்கு என்னிடம் பேச கூட விருப்பமில்லையா? கவின் கேட்க, மீண்டும் அமைதி நிலவ கவின் சீற்றத்துடன் போனை உடைக்க கையை உயர்த்தினான்.

கைரவ் அவன் கையை பிடித்து, அது என்னுடையது. அதை உன்னால் எடுத்துக் கொள்ள முடியாது.

என்னால் முடியாதா? பார்ப்போம். இது உன்னுடையதாக இருக்கலாம். ஆனால் தாரி என்னுடையவள். இதை போல் அவளை விட மாட்டேன்.

ஓ.ஹோ..அவள் உன்னுடையவள்ன்னு இப்ப தான் தெரியுதா? ஆனால் நீ செய்த வேலையால் உன்னுடைய கதை முடிந்தது. அர்ஜூன் உன்னிடம் சொல்லவில்லையா? அவனுக்கு நான் சொந்த மச்சானாக போறேன்.

அன்று ஆன்ட்டி உன்னிடம் கோபத்தில் தான் கூறினார்கள். அவங்களாகவே என்னிடம் பேசினார்கள். அவங்க பொண்ணை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக சொன்னாங்க. நானும் ஓ.கே சொல்லிட்டேன்.

நீ தவறாக பேசியது அதே உன்னுடைய காதல் தாரிகாவை தான். ஆனால் நீ எதுக்கு என்னை இழுத்தாய்? என்னை பற்றி என்ன தெரியும்ன்னு பேசின? இனி தான் என்னை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள போகிறாய். என்னை பற்றி ஏன்டா பேசினோம்ன்னு நினைக்க வைக்கிறேன்.

ஏய்..என்னை பழி வாங்க தாரிய பயன்படுத்துறியா? கவின் கைரவ் சட்டையை பிடிக்க,

கைய எடுடா. என்னோட பொறுமைய சோதிக்காத என்று கைரவ் கத்தினான். அபி கவினை பிடித்து இழுத்தான்.