வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-53
146
அத்தியாயம் 53
ஜானு என்ன பண்ற? அபியும் அர்ஜூனும் அவளை தடுக்க, ஆதேஷ் பெற்றோர்கள் அவன் பக்கம் வந்தனர்.
அவள விடுங்க அண்ணா. அவள் என்னை அடிக்கட்டும். என் மீது எவ்வளவு பெரிய தவறு உள்ளது. அதற்கு தண்டனையாக இருக்கட்டும். என் ஜானுவை என் கண் முன்னே ஒருவன்.. சொல்ல முடியாமல் திக்கி ஆனால் நான் அதை கூட கவனிக்காது கொலை செய்து விட்டேனே என்று நினைத்து அவளை விட்டுருந்தால் அவள் நிலை இப்பொழுது என்னவாகி இருக்கும்? என்னால் ஒரு உயிர் போய் விட்டது என்ற கஷ்டத்தில் என் உயிரை இழந்திருப்பேன். ஆனால் அவளின் சத்தத்தில் மீண்டு தான் அவனை சுட்டு விட்டேன். அவளை விடுங்கள் அண்ணா. அவள் கோபம் தீரும் வரை அடிக்கட்டும் என்றான் ஆதேஷ்.
ஜானுவை அவனின் உயிர் என்றானே ஆதேஷ். அதிலே கோபத்தை விட்டு ஜானு அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
எல்லாரும் இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, ஆது உன்னிடம் இருக்கும் துப்பாக்கியை கொடு அர்ஜூன் கேட்டான்.
நோ..அண்ணா. நான் தரமாட்டேன் ஆதேஷ் கூற,
உன்னிடம் லைசன்ஸ் இல்ல. லைசன்ஸ் இருக்கு தற்காப்புக்காகன்னு சொல்லி தான் என்னோட அங்கிள் போலீசாரிடம் பேசி வைத்திருக்கிறார். அதுவரை அந்த துப்பாக்கி என்னிடம் இருக்கட்டும். இல்ல உன்னால தீனா அண்ணாவுக்கும் பிரச்சனை எழும்.
அங்கிளா? ஆதேஷ் கேட்க, அர்ஜூன் கூறினான்.
அண்ணா..எங்க பாதுகாப்புக்கு என்னிடமே இருக்கட்டும்.
நோ..ஆது. இது ரொம்ப டேஞ்சர் என்று அர்ஜூன் அவனருகே வர, மாமா அதை கொடுத்திருங்க ஜானு கூறினாள்.
நோ..ஜானு. இதனால் தான் நீ இன்று பாதுகாப்பானாய்? இது நமக்கு தேவை என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதேஷிடமிருந்து அவனது அப்பா துப்பாக்கியை பறித்து அர்ஜூன் கையில் கொடுத்தார்.
டாட்..என்று அவன் கத்த, இது என்ன விளையாட்டு பொருளா? உனக்கு என்ன பாதுகாப்பு தான வேண்டும்? அதை நீ தான் செய்யணும்.
நான் செய்வதா? ஆதேஷ் கேட்க,
மகனே “தன் கையே தனக்குதவி”. நீ தான் உன்னையும் ஜானுவையும் பாதுகாக்கணும். நான் கற்றுக் கொடுக்கிறேன். நான் சொல்வதை கேட்டு நடந்து கொள் என்றார்.
சரியா சொன்னீங்க சித்தப்பா. எப்பொழுதும் ஆயுதத்தை நம்பி வாழக் கூடாது. அது நம் இக்கட்டான நேரத்தில் மட்டும் தான் பயன்படுத்தணும் இல்லை அது நம்மையே அழித்து விடும் அபி கூறினான்.
இப்ப நீ ஓ.கே தான ஜானு? ஒன்றும் பிரச்சனை இல்லையே? அபி கேட்க,
நான் நல்லா தான் இருக்கேன் அபி மாமா.
பழைய ஜானுவாக இருந்தால் மாமா..மாமா..என்று அழைப்பாள். அபியை பார்த்ததும் ஓடி வந்து அணைத்திருப்பாள். இப்பொழுது அவள் விலகலை விட அவளது அபி மாமா அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
ஜானு..நீ எப்பொழுதும் போல் என்னை மாமா என்று அழைக்கலாமே? அபி கேட்டு விட்டு ஆதேஷை பார்த்தான்.
மாமா..நானும் மாமாவும் காதலிக்கிறோம் ஜானு கூறிக் கொண்டே ஆதேஷ் பின் ஒளிய, ஜானுவுக்கு வெட்கமெல்லாம் வருமா? அபி கேட்டுக் கொண்டே அவள் பக்கம் வந்தான்.
மாமா..என்று சிணுங்கினாள் அவள்.
நான் கேலி செய்யல..என்று அவளது நெற்றி, கன்னம், கழுத்து என்று தொட்டு பார்த்தான்.
மாமா எனக்கு ஒன்றுமில்லை. நான் நல்லா இருக்கேன்.
சரி..சரி..நாங்க கிளம்புறோம் அர்ஜூன் கூற,அவளது தலையை வருடி விட்டு பார்த்துக்கோங்க என்று மூவரையும் பார்த்து விட்டு அபி செல்ல, மாமா என்று ஜானு அழைத்து விட்டு அபியை அணைத்து விடுவித்து,
மாமா..எல்லாரும் பார்த்து இருங்கள் என்றாள்.
சரி என்று தலையசைத்து கண்கலங்க அபி வெளியே வர, அர்ஜூன் அவனிடம், ஏன்டா ஜானுவை கல்யாணம் செய்தா விட்டுட்டு வார? இப்படி வருத்தப்படுற?
தெரியலடா. ஏதோ கஷ்டமா இருக்கு அபி கூறினான்.
அவ உன் பின்னாடியே சுத்தியதால ஒரு மாதிரி இருக்கும். போக போக பழகிடும் அர்ஜூன் கூற, ம்ம்.. என்ற அபி கவினை பற்றி கேட்டான்.
அனைத்தையும் பார்த்து அவனும் போன் செய்தான். விசயத்தை மட்டும் சொல்லி வச்சுட்டேன்.
அவன் இல்லாதது எதையோ இழந்த மாதிரி இருக்கு.
என்ன அபி? இப்ப தான் ஜானுவை நினைத்து வருத்தப்பட்ட. இப்ப என்ன கவினா? அவனுக்கு தாரிகா இல்லாமல் எப்படி இருக்கும்ன்னு உணர வைக்க தான் இந்த நாடகம். அவள் அவனை மறந்துட்டு வேறொருவனை மணப்பால் என்று உனக்கு தோன்றுகிறதா அபி? அர்ஜூன் வினவ,
கண்டிப்பாக இல்லை என்று தெரியும். இது வேற விபரீதமாகி விடாமல் பார்த்துக்கணும் அர்ஜூன்.
ம்ம்..புரியுது. இனி கவின் தாரிகாவுடன் யாரை வைத்து பார்த்தாலும் சிந்தித்து தான் செயல்படுவான். கைரவை வைத்து தான் நாடகத்தை அரங்கேற்றணும். நம் கவின் புத்திசாலித்தனமா யோசிச்சானா பிரச்சனை வேகமாகவே முடியும். ஏனென்றால் ஏற்கனவே தாரி கைரவை அண்ணன் என்று அழைத்திருக்கிறாள். பார்க்கலாம்..அவன் கையில் தான் உள்ளது என்று பேசிக் கொண்டே ஹாஸ்பிட்டல் சென்றனர் இருவரும்.
கைரவும் அனிகாவும் வினிதா வீட்டிற்குள் ஒன்றாக நுழைய, அனிகா பவி பெற்றோரை பார்த்து கைரவ் பின் மறைந்தபடி வந்தாள்.
எங்க போனா? என்று கைரவ் திரும்பி பார்க்க, அவள் பயத்துடன் அவன் பின்னே நிற்பதை கண்டு என்னாச்சு? என்று கேட்டான். பவி பெற்றோர்கள் என்று அவள் கூறிக் கொண்டே அவனை பார்க்க, அவள் கையை பிடித்து உள்ளே சென்றான்.
பவி அம்மா அவளை பார்த்து முறைக்க, அனைவரும் கைரவுடன் ஒரு பொண்ணு வந்திருப்பதை பார்த்து,
யாருடா இந்த பொண்ணு? இங்க எதுக்கு கூட்டுட்டு வந்திருக்க? இதயா கேட்க,
பவி அம்மா சினத்துடன் நீ எதுக்கு இங்க வந்த? நான் சொன்னதை மறந்துட்டியா? அவளை அடிக்க கையை ஓங்கினார். அவரை தடுத்த கைரவ் அவளுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் இப்பொழுது அதை காட்டாதீங்க. அவள் எங்க வீட்டுக்கு வரப் போறவ? அவன் கூற,
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அனிகா.
கைரவ், நீ என்ன சொன்ன? உங்க வீட்டுக்கு வரப் போறவளா? தருண் அதிர்ந்து கேட்டான்.
ஆமாம். அவளை பிரச்சனையிலிருந்து என் அண்ணா தான் காப்பாற்றி அழைத்து வந்தார். அவள் எங்க வீட்ல தான் இருக்கப் போறா..அவன் கூற,
பெருமூச்சுடன் அவ்வளவு தானா? தருண் கேட்டான்.
பவி அம்மாவை பார்த்து, இன்று காலையில் தான் அவள் அம்மாவை இழந்திருக்கிறாள். இவளையும் கொல்ல பார்த்திருக்கிறார்கள். கொஞ்சம் அவளை விடுங்கள். அவள் ஓய்வெடுக்கட்டும் என்று ஸ்ரீயை அழைத்தாள்.
இதெல்லாம் சரிடா. அதை அவள் கையை பிடித்துக் கொண்டு தான் கூற வேண்டுமா? ஸ்ரீ கேட்க, அனு ஸ்ரீ மடியிலிருந்து எழுந்து கைரவிடம் ஓடி வந்தாள். அவன் அனிகாவை பார்த்து விட்டு அவள் கையை விடுத்து அனுவை தூக்கினான்.
பவி அம்மா அனிகாவிடம் வந்து, அவள் அம்மா பற்றி விசாரிக்க அவள் நடந்த அனைத்தையும் அழுது கொண்டே கூறினாள். அவர் அவள் மீதுள்ள கோபத்தை மறந்து அவளை அணைத்தார்.
ஆன்ட்டி,..அவள் முதலில் ஆடை மாற்றட்டும்.அப்புறம் பேசுங்களேன் ஸ்ரீ கூற, சரிம்மா..நீ சென்று ஆடை மாற்றி விட்டு வா என்று அவர் கூற, ஸ்ரீ அவளை அழைத்து சென்றார்.
நாங்களெல்லாம் இருக்கோம்லப்பா..இதயா அம்மா கூற, அவ்விடம் அமைதி நிலவியது. அனுவை இறக்கி விட்டு சோபாவில் அமர்ந்தான் கைரவ்.
உனக்கு அந்த பொண்ணை தெரியுமா? தருண் கேட்டான்.
தெரியும். அந்த பொண்ணும் நம்ம கல்லூரி தான். என்னோட விளையாட்டு பயிற்சியின் போது அவள் வருவாள். பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் பேசியதில்லை.
என்னோட ரெண்டு ப்ரெண்ட்ஸும் சொன்னாங்க. அவள் யாரிடமும் பேசியதில்லையாம். அவள் யாரிடமாவது பேசினால்..என்று கைரவ் நிறுத்தினான்.
பேசினால்..சொல்லு இதயா ஆர்வமுடன் கேட்க, அவன் என்ன கதையா சொல்றான்? தருண் அவள் மண்டையில் கொட்ட,
வலிக்குதுடா..நீ சொல்லு கைரவ்..பேசினால் என்ன ஆகும்?
பேசுறவங்கள கொன்றுவாங்களாம். அவனுக அப்படி தான் சொன்னாங்க. அவளோட வீட்ல வேலைபார்ப்பவரிடம் இவள் யாருடனோ ஓடி விட்டாள் என்று பேசி இருக்கிறார்கள். அவள் அம்மா இறந்த விசயமே வெளிய வரலை. அவளுடைய பிரச்சனையும் பெரிது தான் போல. எனக்கும் முழுதாக தெரியாது. அண்ணாவிற்கு தெரியுமென்று நினைக்கிறேன்.
என்ன பேசுனா கொல்லுவான்னுகளா? அப்படி எத்தனை நாள் யாருடனும் பேசாமல் இருந்தாளோ? பாவம்ல அந்த பொண்ணு இதயா கூற,
இப்படி எல்லாமா கஷ்டப்படுத்துவாங்க? வினிதா அம்மா கேட்டாள்.
அவருடைய கணவரோ..இதெல்லாம் விசயமே இல்லை. அந்த பொண்ணோட தேவை ஏதாவது இருக்கும் இல்லை அவர்களது தவறான செயல்கள் அவளுக்கு தெரிந்து இருக்கலாம் . அதனால் கூட மற்றவர்களிடமிருந்து விலக்க இவளை பேச விடாது அவள் பேசுபவர்களை கொல்லலாம்.
பவி அம்மா சிந்தனையுடன், அவள் அப்பாவின் இரண்டாவது குடும்பத்தின் வேலையாக தான் இருக்கும். அவர்கள் தான் அவள் அம்மாவையும் இந்த பொண்ணையும் கஷ்டப்படுத்துவாங்க.
ஆன்ட்டி..உங்களுக்கு அவளோட அப்பா பற்றி தெரியுமா? கைரவ் கேட்டான்.
அவளோட அப்பா..ஒரு நாள் கூட அவர்களுடன் இருந்ததில்லை. அந்த பொம்பளையும் விட்டதில்லை. அவள் அம்மா ரொம்ப அமைதியானவங்க. அவங்க யாரிடமும் பேச கூடமாட்டார்கள். பவி சொல்லி இருக்கா..அவங்க ரொம்ப நல்லவங்க. வீட்டுக்கு வரவங்கள நல்லா பார்த்துப்பாங்க. அவங்கள மாதிரி தான் அனிகாவும் என்று அவளை பற்றி கூறிக் கொண்டே இருப்பாள்.
அப்புறம் எதுக்கு அவங்க பேசுறதில்லை? நீங்களும் அவள் மீது கோபமாக இருக்கீங்க? கைரவ் கேட்டான்.
எனக்கு கோபம் தான். அவள் மீது என்று கூற முடியாது. என்னோட பொண்ணுக்கு பிரச்சனைன்னா..நான் சும்மா இருக்க முடியுமா?
அவளுடைய அண்ணன் பொறுக்கி பையன். அடிக்கடி அனிகா வீட்டிற்கு வருவான். பவியும் அனியும் ப்ரெண்ட்ஸா இருந்த போது பவி அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவாள். அவளும் எங்க வீட்டுக்கு வருவா.
ஒரு நாள் அனிகா அம்மா வீட்டில் இல்லாத சமயத்தில் இருவரும் வீட்டில் இருந்த போது அனியிடம் அப்பா கேட்டார் என்று எதையோ எடுத்து வர சொல்லி அனுப்பி விட்டு பவியிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அனிகாவும் வீட்டு வேலைக்காரர்களும் தான் உதவினார்கள்.
அதிலிருந்து பவி அங்கு சென்றால் எனக்கு ரொம்ப பயம். அனிகாவின் அம்மாவே என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் எனக்கு பவியும் பாதுகாப்பு முக்கியமானதாக பட்டது. அதனால் நான் இருவரையும் பேசக் கூடாதுன்னு பிரிச்சு வைச்சுட்டேன். ஆனால் அனிகாவை இப்படி கஷ்டப்படுத்துவாங்கன்னு எனக்கு தெரியாது என்று கண்கலங்கினார்.
ஆன்ட்டி,..நீங்க சொல்லும் படி பார்த்தால் அனிகா அண்ணணால் அவள் பேசாமலிருப்பது போல் தோன்றவில்லை தருண் கூற,
ஆமாம் தருண். அவளுக்கு ஏதோ..கல்யாணம் பண்ண போறவன் தான் அவளை தொந்தரவு செய்வதாக கூட பசங்க சொன்னாங்க. உங்களுக்கு அப்படி யாரையும் தெரியுமா?
என்ன கல்யாணமா? பவி அம்மா அதிர்ந்து, அதெல்லாம் இருக்காதே..என்றார்.
பசங்க அப்படி தான் சொன்னாங்க ஆன்ட்டி என்றான் கைரவ்.
தெரியலப்பா. நாங்க எங்க பொண்ணையும், வேலையையும் பார்த்துக்கவே நேரம் சரியா போச்சு. அதனால அதைப் பற்றி தெரியல..
கையூ..வா..போகலாம் என்று அனு கைரவை அழைக்க, அனு..பெயர் சொல்லி அழைக்காத அவள் பாட்டி கண்டிக்க,
குட்டி பசங்க பெயர் சொல்லி அழைத்தாலே தனி அழகு கைரவ் கூறிக் கொண்டே, அனுவிடம் பாப்பாவிற்கு எங்க போகணும்? கேட்டான்.
அம்மாகிட்ட போவோமா? அவள் கேட்க, அனைவர் முகமும் வாடியது. ஸ்ரீயும் அனிகாவும் அங்கு வந்தனர்.
அனுவை கைரவ் அவன் மீது அமர்த்தி, அம்மாகிட்டவா போகணும்? பாப்பா அம்மா தூரமா போயிருக்காங்க. உன்னோட ஏஞ்சல் சொன்னால. அம்மா வர மாட்டாங்க. அவங்க உன்னை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. உனக்கு வேண்டியதை செஞ்சு கொடுப்பாங்க. உனக்கு ஏதாவது வேண்டும்ன்னா என்னிடம் கேளு.
எனக்கு அம்மா..வேணும். அம்மாவை பார்க்கணும் என்று அனு அழுதாள். இதை பார்த்து அனைவரும் கலங்கினர். அனிகாவும் அனு நிலையில் தானே இருக்கிறாள். அவளும் அழுது கொண்டே வந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.
அவள் கதவை சாத்தும் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் நோக்க, ஸ்ரீ அனுவை கைரவிடமிருந்து வாங்கினாள். கைரவும் பவி அப்பாவும் அனிகா இருக்கும் அறைக்கு வெளியே நிற்க, கதவை திறம்மா..பவி அப்பா அழைத்தார். அவளிடம் பதிலில்லாது இருக்க,
அந்த பொண்ணு தனியா இருக்கட்டும் விடுங்க வினிதா அம்மா கூற, இருவரும் அமைதியாக வந்து அமர்ந்தனர்.
அனுவை துக்கிய ஸ்ரீ, அனும்மா..நாம பாட்டு கேட்டுக் கொண்டே பாடலாமா? அவள் கேட்க, அவள் தோளில் சாய்ந்து கொண்டு ம்ம்..என்றாள்.
“தி வீல்ஸ் ஆன் த பஸ் கோ ரவுண்டு அன்ட் ரவுண்டு” என்ற மழலை பாடலை ஒலிக்க விட்டு ஆடி ஸ்ரீ வேடிக்கை காட்ட, மற்றவர்களும் அவளுடன் இணைந்து கொள்ள..அனுவும் பாடலை ரசித்து அவர்களுடன் ஒன்றி ஆடினாள்.
சற்று நேரத்தில் ஆடி களைத்து அனைவரும் அமர்ந்திருக்க, அனு தூங்கிப் போனாள். அனிகா வெளியே வந்தாள். அவளது அழுது சோர்ந்த முகம் தெளிவாக தெரிந்தது. ஸ்ரீ அவளை பார்த்து..சாப்பிட்டாயா? என்று கேட்டாள்.
எனக்கு எதுவும் வேண்டாம் என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
காலையிலிருந்தே சாப்பிடலையா? பவி அம்மா கேட்க, அவள் அமைதியாக இருந்தாள். ஸ்ரீ எழுந்து அவளை தனியே அழைத்து சென்று பேசினாள்.
நீ தான்ன சொன்ன..உன்னோட அம்மா அவங்க கையில நீ மாட்டக் கூடாதுன்னு அவங்க உயிரையே விட்டிருக்காங்க. நீ இப்படி அழுதுகிட்டு சாப்பிடாம இருந்தா. அவங்க செஞ்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். நானும் ஒரு நாள் உன் நிலையில் தான் இருந்தேன் என்று ஸ்ரீ அவளது பெற்றோரை நினைத்து கண்கலங்கி பின் சுதாரித்து அனு பாப்பாவை பார்த்தாயா? அவளுடைய அம்மாவும் நேற்று தான் இறந்தாங்க. தருண் தெரியுமா உனக்கு? அவன் பெற்றோர் இருவரையும் ஒரு வாரத்திற்கு முன் தான் இழந்தான்.
எல்லாருக்கும் யாராவது ஒருவராவது இருக்காங்க? எனக்கு யாருமில்லை.
தருணை பார்த்தேல..அவனுக்கு ஒரு தங்கை இருக்கா என்று அவன் ஹாஸ்பிட்டலில் இருந்த போது பெற்றோரை இழந்தது. புவனா கஷ்டமான நிலை இருந்தும் அவன் ஊருக்கு செல்ல முடியாத நிலை. கொஞ்சம் யோசிச்சு பாரு. அவ ஸ்கூல் படிக்கிற பொண்ணு. உன்னால மூவ் ஆன் பண்ண முடியாதா?
ஸ்ரீயை மௌனமாக பார்த்தாள் அனிகா.
உனக்கு யாருமில்லைன்னு சொல்ற? இங்க நிறைய பேர் யாருமில்லாம தான் இருக்காங்க. உன்னை சைலேஷ் சார் தான் காப்பாற்றினார்ன்னா..நீ பாதுகாப்பா தான் இருந்திருப்ப..இனியும் இருப்ப.
எனக்கு நீ சொல்றது புரியுது ஸ்ரீ. ஆனால் அவங்க கூட இருக்குதுல நான் பாதுகாப்பா தான் இருப்பேன். ஆனால் அவங்களுக்கு தான் பிரச்சனை வரும். அதனால் தான் முதலிலே சார் கிட்ட என்னை ஹாஸ்டலில் சேர்க்க சொன்னேன். அவரு தான் கேட்கவே மாட்டேன்னு சொல்லிட்டார். என்னால அவங்க எல்லாருக்கும் பிரச்சனை வருமோன்னு ரொம்ப பயமா இருக்கு.
அப்படி யார் தான் உனக்கு பிரச்சனை? அண்ணா என்று கூறினாயே? அவரா?
இல்ல..என்று தயங்கினாள்.
சார் கிட்ட உன்னை பற்றி எல்லாவற்றையும் சொன்னால் அவர் முன்னதாக தயாராகிக் கொள்வார் ஸ்ரீ கூற, அனிகா தலையாட்டினாள்.
மேடம், இப்ப சாப்பிடுவீங்களா? ஸ்ரீ கேட்க, அவள் தயக்கத்துடன் தலையாட்டினாள். கைரவும் இதயாவும் வெளியேயிருந்து அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ கதவை திறக்க, இருவரும் திரும்பி நின்று கொண்டு போனை பார்ப்பது போல் நடிக்க, ஸ்ரீ கையை கட்டிக் கொண்டு அவர்கள் முன் வந்தாள். பின்னே அனிகா நின்றாள்.
“இருவருக்கும் இங்கு என்ன வேலை”? ஸ்ரீ கேட்க, ஒன்றுமில்லையே என்று கைரவ் தோளை குலுக்க, இதயாவோ..ஸ்ரீ உனக்கு தெரியுமா? ஒருவன் ஒரு பொண்ணிடம் செம்மையா அடி வாங்கினானாம்..என்றாள்.
அடியா? ஸ்ரீ கேட்க, கைரவ் அவளை முறைக்க, நான் உன்னை சொல்லலடா இதயா கூற,..
ஒட்டு கேட்டீங்களா? என்று கைரவ் காதை ஸ்ரீ திருகினாள்.
அய்யோ..அண்ணா..சீக்கிரம் வாடா. காது போச்சுடா..என்று கத்தினான் கைரவ். இவர்களது வேடிக்கை பேச்சில் அனிகா ரசித்து அங்கிருந்து நகர, சாப்பாடு ஸ்ரீ எடுத்து வைக்க அனிகா சாப்பிட்டாள். பவி அம்மா, அப்பா அவளருகே வந்து, நாங்க பார்த்துக்கிறோம். நீ போம்மா..என்று ஸ்ரீயை அனுப்பி விட்டு பவி அம்மா அனிகாவை கவனித்தார்.
உண்மையாகவே இவளுக்கென்று ஒருவன் இருக்கிறானோ? என்று அனிகாவை பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான் கைரவ்.
சாப்பிட்டு வந்த அனிகா, பவி பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள். அவன் அப்படி எண்ணுவான் என்று கூட நான் நினைக்கவேயில்லை. பவி ரொம்ப கஷ்டப்பட்டாலா ஆன்ட்டி?
இல்லம்மா..உன்னுடன் பேசாமல் தான் கஷ்டப்பட்டாள். அவளை பார்த்தாயா? பேசினாயா? கேட்டார்.
அவள் தயங்கியவாறு..நாங்க பேசினோம் என்று அமைதியானாள்.
யாருமில்லைன்னு வருத்தப்படாதம்மா. நாங்க இருக்கோம். முன் போல் பேசிக் கொள்ளுங்கள். நீ சென்ற பின் உன் வாழ்க்கை போல் அவள் வாழ்வும் மாறி தான் போயிற்று வருத்தமுடன் பவி அம்மா பேச, ஸ்ரீ அவங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அனிகா அவரை அணைக்க, நீயும் என்னை மன்னிச்சிரும்மா..
ஆன்ட்டி,.நீங்க மன்னிப்பு கேட்க அவசியமேயில்லை. உங்க நிலைமையில எந்த அம்மாவும் அப்படி தான் நடந்துப்பாங்க. எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹாஸ்பிட்டலுக்கு அர்ஜூனும் அபியும் வந்தனர். சைலேஷ் நித்தியுடன் அமர்ந்திருந்தான். மாதவ் கமிஷ்னருடன் இருந்தான். அவர் அவனை பார்த்துக் கொள்வதாக கூற, அங்கே இருந்தான் மாதவ்.
அர்ஜூனும் அபியும் அகில், யாசுவை பார்த்து விட்டு சைலேஷை பார்க்க வந்தான். அங்கே வந்திருந்தான் கவின். அர்ஜூன் கவினை கண்டு கொள்ளாது சைலேஷிடம் சென்றான்.
அபி..கவினை பார்த்து, நீ எப்படி தனியாக வந்தாய்? இங்கே எவ்வளவு பிரச்சனையா இருக்கு? நீ ஊர்லயே இருக்க வேண்டியது தானே? திட்டிக் கொண்டே கவினிடம் வந்தான். அர்ஜூன் திரும்பி இருவரையும் பார்த்தான். சைலேஷ் நித்தியும் அவர்களை பார்த்தனர்.
நான் எங்க போனா உனக்கென்னடா? அடுத்தவங்க சொல்லி தான் அகில், யாசுவிற்கு அடிபட்டது கூட எனக்கு தெரிந்தது. நான் உங்களுக்கு தேவையில்லாதவனாகி விட்டேன்ல. ஊர்ல எல்லாரும் உங்கள பத்தி தான் கேட்டுக் கொண்டே இருக்காங்க? நான் செய்தது தவறு தான். அதுக்கு ப்ரெண்ஷிப்பே வேண்டாம்னு பழி வாங்குவீங்களா? கவின் கேட்க,
பழி வாங்குறோமா? அர்ஜூன் சிரித்துக் கொண்டு அவனருகே வந்தான்.
சிரிக்காதடா. எரிச்சலா இருக்கு கவின் திட்ட, மேலும் சிரித்த அர்ஜூன் உன்னை யாரு இப்ப வரச் சொன்னா? எப்படி வந்த?
உன்னோட மாமியாரு எனக்கு வாங்கிக் கொடுத்த கார்ல தான் வந்தேன் முகத்தை கடுத்தவாறு வைத்துக் கொண்டு.
டேய்..மச்சான்..என்னோட மாமியாரு கார் தரலடா. பொண்ணயே குடுத்துட்டு போயிருக்காங்க.
அர்ஜூன் வேலைய பார்ப்போமா? சைலேஷ் சத்தம் கொடுக்க, கவின் சைலேஷ் நித்தியை பார்த்தான். இருவரும் அவனை பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை.
கவின் அவர்களிடம் வந்து, சார்..நான் உங்களிடம் பேசணும் என்றான்.
பேசலாம். ஆனால் எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அப்புறம் பேசலாம் என்று கவினை தவிர்த்தான் சைலேஷ்.
ஓ.கே சார். நாம அப்புறம் பேசலாம்.
அர்ஜூனை சைலேஷ் அழைக்க, நீ அகில், யாசுவை பாரு என்று அர்ஜூன் சைலேஷிடம் சென்று தன் கையிலிருந்த ஆதாரத்தை கொடுத்தான். மாதவ் சார் நேராக அறைக்குள் நுழைந்தது. நான் சூட் செய்வதற்குள் அவர் செய்தது அனைத்தும் இருக்கு. அவர் பர்சனலாக ஏதும் செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் இது ஒன்றே போதும் அர்ஜூன் சொல்ல,
சைலேஷ் அதை வாங்க சந்துரூ அங்கே வந்தான். அவனிடமும் அந்த ஆதாரத்தை காட்ட, ஆனால் அர்ஜூன் யாசுவை அவன் பார்க்கவேயில்லையா? சந்துரூ கேட்க,
எதுக்கு கேக்குறீங்க?
மாதவின் எதிரிகளுக்கு அவனுடைய சிறிய விசயத்தை கூட பெரியதாக்கும் வாய்ப்பு இது தான். விசயம் பெரியதானால் அவனுடைய கனவே உடைந்து விடும். அவனை நிரந்த பணிநீக்கம் செய்து விடுவார்கள்.
சார்..யாசுவை பார்த்து தான் வந்தார். ஆனால் அவளருகே கூட செல்லவில்லை. அவளை பார்த்துக் கொண்டே தான் நாங்கள் இருந்த அறையில் நுழைந்தது போல் கேமிராவில் பதிவாகி இருந்தது. நான் அதை கட் செய்து எடுத்து வந்திருக்கேன்.
உண்மையான இந்த பதிவு தான் அவனை காக்க போகிறது. முழுதாக எடுத்து கொண்டு வா அர்ஜூன். நாங்க கிளம்புகிறோம். அவனுக்கான என்கொயரி ஆரம்பிக்க சற்று நேரம் தான் உள்ளது. வா..சைலு..கிளம்பலாம் சந்துரூ அழைக்க, நித்தி தயக்கத்துடன் அண்ணா..சாருக்கு பிரச்சனை வராதுல?
இல்லம்மா..வராது. அவனுக்கு ஏதாவது ஆக விட்டுருவோமா நாங்க?
அண்ணா..யாசு சாப்பிடவேயில்லை. பிடிவாதம் பண்றா. சார் வந்தா தான் சாப்பிடுவா. யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டா. பிரச்சனை முடிஞ்சா அவரை அழைத்து வாரீங்களா? நித்தி கேட்டாள்.
அவனும் அந்த பொண்ணு நினைவிலே தான் இருக்கான். கண்டிப்பா வருவான்.
அவங்க பெற்றோர் எதுவும் சொல்வார்களா?
இல்ல நித்தி..அவங்க அப்பாவை தவிர எல்லாருக்கும் ஓ.கே தான். அதனால் கண்டிப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க சைலேஷ் கூறினான்.
அவரோட அப்பா..அதான் நாங்க இருக்கோம்ல சிஸ்டர். வொரி பண்ணாதீங்க சந்துரூ கூறி விட்டு சைலூ..போகலாமா?
ம்ம்..போகலாம் டா என்று நித்தியை பார்த்து கண்ணசைத்து விட்டு கிளம்பினான்.