அத்தியாயம் 44

சரி..போதும் உங்க அரட்டைய அப்புறம் வச்சுக்கலாம். ஜானு அவனை கீழே அழைச்சிட்டு வா..

ஆன்ட்டி..மாமா ஓய்வெடுக்கட்டுமே?

அதெப்படி அவன் உன்னை விட்டு தனியே ஓய்வெடுப்பது?

ஆன்ட்டி..என்ன பேசுறீங்க?

நான் சொன்னது உங்க காதலை உன்னை தனியே கூற வைத்து விட்டானே? அதனால் அவனை..

ஆன்ட்டி..நான் அண்ணா நினைவிலே இருந்தேனா? என்னால மனசுக்குள்ள வைச்சுக்கிட்டே இருக்க முடியாது. ஏற்கனவே நிறைய மனசுக்குள்ள வைச்சு நான் நானாக இல்லை.

அண்ணா தான் பக்கத்தில் இல்லை. அதனால் தான் உங்களிடம் சொன்னேன். மாமாவுக்கு தெரிஞ்சா கோவிச்சுக்கிடுவாரோ? அது வேற பயமா இருக்கு. நீங்க மாமாவிடம் கோபமா பேசுறதுன்னா. நான் அவரை அழைத்து வரமாட்டேன்.

அட..என் புள்ளைய நான் திட்ட கூட கூடாதாம்மா.

உங்க புள்ளைய நான் திட்ட வேண்டாம்னு சொல்லலை. தாராளமா திட்டுங்க. ஆனால் என்னால மாமாவ நீங்க திட்டக் கூடாது.

எனக்கு நீங்க எல்லாருமே முக்கியம் என்று அமர்ந்தாள்.

என்னாச்சும்மா? ஆதேஷ் அப்பா ஜானுவிடம் வந்தார்.

அங்கிள்,..எனக்கு மனசு படபடன்னு அடிக்குது. ஏதோ பயமா இருக்கு. இதுக்கு முன் இப்படி அடித்த போது அண்ணா..ஓர் விபத்திலிருந்து தப்பித்தான். ஆனால் அண்ணாவை என்னால் இப்ப பார்க்க கூட முடியல. ரொம்ப பயமா இருக்கு.

உன்னோட அண்ணாவை சுத்தி எத்தனை பேர் இருக்காங்க. இப்ப மாப்பிள்ள ஊருக்கு போயிருப்பார். அதெல்லாம் ஒன்றுமிருக்காது என்று ஆதேஷ் அப்பா கூற,

நம்ம துகி பக்கத்துல இருப்பா..அவருக்கு ஒன்றுமாகாது லலிதா கூற, ஆமா அவங்க இருக்காங்கள என்று கண்கலங்கியவள்..அங்கிள் போன் தாரீங்களா? நான் அவங்களிடம் பேசிக்கவா?

அவர் போனை கொடுக்க, லலிதா போனை அணைத்தாள்.

துகிராவிற்கு ஜானு போன் செய்து, அண்ணி..அண்ணா பக்கத்துல இருக்காங்களா?

இல்ல ஜானு. நீ இங்க வரலாம்ல..

அண்ணி..அங்க ஏதும் பிரச்சனை இல்லைல? கேட்க, இங்க ஒன்றுமில்லையே? என்று ஏதும் தெரியாதது போல பேச,

அண்ணா..நல்லா இருக்காங்கள?

நல்லா இருக்காங்க. ஜானு எதுக்கு இப்படி கஷ்டப்படணும்? நீ இங்க வரலாமே? பிரதீப் துகிராவை முறைத்தான்.

இல்ல அண்ணி. நீங்க அண்ணா பக்கத்துல இருங்க. அண்ணாவை வெளிய விடாதீங்க. அண்ணா இன்று வீட்டுக்குள்ளே இருக்கட்டும். பார்த்துக்கோங்க.

சரி..ஆது என்ன செய்றான்? அவன் சாப்பிட்டானா? கேட்க, இல்ல அண்ணி, மாமா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நான் பேசியதை அண்ணாவிடம் சொல்லாதீங்க என்று ஜானு போனை வைத்தாள்.

துகிரா அவள் அறைக்கு செல்ல, பிரதீப்பும் அவள் பின்னே சென்று கதவை தாழிட்டான்.

உனக்கு என்ன பிரச்சனை? ஜானு அங்க போனதுனால உன்னை எல்லாரும் மறந்திருவாங்கன்னு நினைக்கிறியா?

அவள் அழுதாள். இங்க பாரு என்று அவளை கட்டிலில் உட்கார வைத்து, இதை கேள். எனக்கு வேலை நிறைய இருப்பதால் எனக்கு வரும் காலை பதவி செய்து கொண்டு தான் இருப்பேன் என்று ஆதேஷ், அவன் அம்மா, அப்பா பேசுவதை கேட்க வைத்தான்.

அதில் ஆதேஷ் முழுவதும் துகிராவிற்கு பிடித்தது, பிடிக்காதது என்று அனைத்தையும் பிரதீப்பிடம் கூறுவதும், லலிதாவும் துகிராவை பார்த்துக் கொள்ள சொல்லி பேசியது இருந்தது.

நீ மாமாவிடம் பேச மாட்டேல. ஆனால் அவர் பேசியதை கேட்கிறாயா? போட்டு காண்பித்தான்.

தம்பி, ஜானுவை எப்படி பார்த்துப்பீங்களோ அப்படி பார்த்துக்கோங்க எங்க பொண்ணை. அவளுக்கு போனை ரொம்ப நேரம் கொடுக்காதீங்க. அவள் அடிக்கடி தலையை பிடிச்சிட்டு உட்கார்ந்திருக்கா. அதுக்கு பதிலா அவள படிக்க சொல்லுங்க, வீட்டு வேலைய கத்துக்க சொல்லுங்க.

அவளிடம் நீங்க பேசியது போலவே தெரியலையே? என்று பிரதீப் கேட்க,

நான் பேச சென்றாலும் பாப்பா விலகி போயிடுறா? என்னை பிடிக்கலையா? இல்ல பயப்படுறாளான்னு தெரியல. அத விடுங்க.

லலி என்ன சொன்னான்னா. அவள் அவளோட அப்பாவுடன் இருந்ததை விட இங்க தான் அதிகமா இருந்திருக்கா. நமக்கு ஆது மட்டும் இல்லை. அவளும் நம்ம பொண்ணு தான். நல்லா நினைவில் வச்சுக்கோங்க என்று,

உங்க திருமணத்துக்கு பிறந்த வீட்ல இருந்து என்ன செய்யணுமோ அதை எல்லாமே தயார் செய்து விட்டேன் என்று லலி கூறினாள்.

அப்ப தான் அந்த பொண்ணு எங்களுக்கு எவ்வளவு முக்கியம்ன்னு தெரிஞ்சது? நானும் அவளை என் பொண்ணாகவே பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஆது கூட உங்களுக்கு ஏதோ சர்பிரைஸ் வச்சிருக்கான் என்று கூறி விட்டு, எங்க பொண்ணை நல்லா பாத்துக்கோங்க.

அவ வேலையே பார்த்திருக்க மாட்டா. கொஞ்ச பார்த்துக்கோப்பா என்று துகிரா மீது அக்கறையுடன் பேசி இருப்பார்.

அதை கேட்டு அவள் அழுது கொண்டு, அவர் தான் பேசினாரா? இதுவரை என் அப்பா கூட இப்படி யாரிடம் என்னை பார்த்துக் கொள்ள சொல்லி இருக்க மாட்டார் என்று அழுதாள்.

ஆறுதலாய் நடுஹாலில் இருவரும் அணைத்துக் கொண்டிருக்க, துளசியும் அப்பத்தாவும் வந்தனர்.

என்ன ஆச்சும்மா? ஏதும் பிரச்சனையா? என்று அப்பத்தா கேட்க, அவரிடம் ஓடிச் சென்று அணைத்து, நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நான் எப்படி அவரது முகத்தில் விழிப்பேன்? என்று புலம்பி அழ, பிரதீப் அவர்கள் அருகே வந்தான்.

துகி..நீ அழுறியா? அதுக்கு பதிலா நீ அவரிடம் பேசலாமே? என்று பிரதீப் கேட்டான்.

அவனை பார்த்து, நான் பேசணும். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? கேட்டுக் கொண்டே உங்களை பார்த்த பின் தான் என்னோட எல்லா பிரச்சனையும் சரியானது. யாருமில்லாமல் கஷ்டப்பட்ட எனக்கு ரெண்டு குடும்பம் கிடைச்சிருக்கு என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவளறைக்கு ஓடினாள்.

என்னடா நடக்குது? அண்ணா..அவங்களுக்கு ஒன்றுமில்லையே?

அவ ரொம்ப சந்தோசமா இருக்கா என்று அவன் வெளியே செல்ல, பிரதீப்பிற்கு ஜானு சொன்னது நினைவிற்கு வந்தது. பெருமூச்செடுத்து வெளியே வர, அவன் முன் வந்தனர் நால்வர்.

அவர்களை பார்த்து, நீங்களா? என்று பிரதீப்பிற்கும் அவர்களுக்கும் சண்டை ஆரம்பிக்க, துளசி அதை பார்த்து அப்பத்தா..அண்ணி..என்று கத்தினாள்.

அப்பத்தா பார்த்து விட்டு, டேய்..எடுபட்ட பயலுகலா..எங்க போய் தொலைச்சீங்க? மருது, ரெங்கா..வாங்கடா என்று கத்தினார். துகிராவும் பிரதீப்பை பார்த்து அவனிடம் செல்ல, அங்கே ஆட்கள் வந்து அவர்களை பிடித்து கட்டினர்.

யாருடா நீங்க? அப்பத்தா சத்தமிட,

அப்பத்தா அமைதியா இருங்க. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தன் காப்பை உயர்த்திய பிரதீப், அவர்கள் அருகே தான் வந்தான். அதற்குள் அவர்கள் அவன் காலை பிடிக்க,

சொல்லுங்க..அவர் தானா?

ஆமாம் அண்ணா. வெற்றி அய்யா தான் உங்களையும் தீனா அண்ணாவையும் என்றான்.

தீனாவையுமா? என்று அவனுக்கு போன் செய்தான். அவன் புவனாவுடன் இருக்க, போனை எடுத்து சொல்லுடா..

பிரதீப் விசயத்தை சொல்ல, அப்பாவா? என்று கேட்டான்.

இரு. நான் வாரேன். இல்ல அவர் உன்னையும் கொல்ல ஆள் அனுப்பியதா சொல்றாங்க.

அம்மா..அங்க தான இருக்காங்க தீனா கேட்க, அவங்க வீட்டுக்கே வரல.

என்ன சொல்ற? என்று தீனா வேகமாக எழுந்து வெளியே வந்து பார்த்தான். காவேரி வெளியே தான் அமர்ந்திருந்தார்.

அம்மா..என்று கண்ணீருடன் அணைத்த தீனா, அம்மா..ஏன் வெளிய இருக்கீங்க?

இப்ப தான் ரெண்டு பேரும் சமாதானமாகி இருக்கீங்க? தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான்.

இப்படியெல்லாம் பேசாதீங்கம்மா..உள்ள போய் கதவை தாழிட்டுக் கொள்ளுங்கள். ரெண்டு பேரும் வெளியே வராதீங்க? என்று அவன் ஹாஸ்பிட்டல் விட்டு வெளியேற..அவனையும் சிலர் தாக்க சுற்றி இருந்தவர்கள் தீனாவிற்கு உதவியாக வந்தனர். அவன் அவர்களை பிடித்து விசாரிக்க, அவர்களும் அவர் அப்பா பெயரை கூறினார்கள்.

அர்ஜூன் போன் செய்து நடந்ததை கூற, இப்ப அவங்க நல்லா இருக்காங்கள? அகில் அம்மாவுக்கு தெரிஞ்சா துடிச்சு போயிருவாங்க தீனா சொல்ல, துருவன் அவன் பின் நின்றான்.

அண்ணாவுக்கு என்னாச்சு? என்று அவன் பதற, அவனுக்கு ஒன்றுமில்லை. அம்மாவிடம் ஏதும் கூறாதே என்று அவ
னிடம் கூறி விட்டு, அம்மாவை நல்லா பார்த்துக்கோ என்றான் தீனா.

நீங்க இப்படியெல்லாம் பேச மாட்டீங்களே? துருவன் அவனை பார்க்க, நான் அண்ணாவை பார்க்க போகணும்.

நீ இங்க என்ன பண்ற?

அம்மா..புவிக்கு கொடுத்து வரச் சொன்னாங்க. அதான் வந்தேன்.

ஆமா. வா..வா..என்று துருவனை அழைத்துக் கொண்டு புவி அறைக்குள் சென்றனர் இருவரும். நீ இவங்கள பார்த்துக்கோ. நான் வந்து விடுகிறேன் என்று தீனா வெளியே ஓடினான். புவி அவனையே பார்த்திருந்தாள்.

பிரதீப் வீட்டிற்குள் செல்ல, உங்களுக்கு ஒன்றுமில்லைல? என்று அவனை பார்த்தாள் துகிரா.

அண்ணா..அப்பா தானா அண்ணா என்று துளசி பாவம் போல் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லைடா என்று பிரதீப் அவளது தலையில் கை வைத்தான்.

அங்கே வந்த தீனா பிரதீப்பை இழுத்து அறைக்குள் சென்று,அந்த கொலைகாரனை பிடிச்சுட்டாங்க. அர்தீஸ், வேலீஸ்வரையும் பிடிச்சாச்சு. ஆனால் இப்ப அப்பா என்று கலங்கிய தீனா..அவரும் இவர்களுடன் கூட்டாக இருப்பாரோ? கேட்க,

என்ன சொல்ற தீனா? அவருக்கு அவனுடன் சேரும் தைரியமெல்லாம் இருக்காது என்று பிரதீப் கூற, அர்ஜூன் சைலேஷிடம் சந்தேகமாக கூறியதை சொன்ன தீனா..

அண்ணா..அப்பா இதில் இருப்பது போல் தோன்றுகிறது?

இப்படியெல்லாம் நம் வீட்டினரிடம் சொல்லிடாதே? பிரதீப் கூற, தீனா அமர்ந்தான்.

வெளியே நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த துகிராவும் துளசியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அண்ணா..என்னை மன்னிச்சிருடா. உன்னோட அம்மா, அப்பாவை கொன்னது அவர்தான்னு தெரிஞ்சா கோபத்துல நீ அவங்கள ஏதாவது செய்து விடுவாயோ என்று தான் உன்னிடம் நாங்க யாருமே சொல்லல. வெளியே இருந்தவர்கள் அதிர்ந்து அவர்களை பார்த்தனர்.

அவனை அப்படியே விடக் கூடாது. அவனுக்கு வலிக்கும் படி ஏதாவது செய்யணும் பிரதீப் கூற, இல்ல அண்ணா..அவனை கோர்ட்டுல ஒப்படைக்கணும் ஆதாரத்துடன்.

ஆதாரமா? பிரதீப் கேட்க, எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்தும் போது கொடுக்கணும் தீனா கூறினான்.

அதை எடுக்க தான் அன்று எங்க வீட்டிற்கு போனேன். நீ, ஜானு, மாப்பிள்ள வருவீங்கன்னு எதிர்பார்க்கலை. அந்நேரம் பார்த்து அந்த அர்தீஸ் வேற வந்திருக்கான். அவன் என் ஆதாரத்தை எடுக்க தான் வந்தான். ஆனால் ஜானு தேவையில்லாம அதிகமா பேசிட்டா.

நான் ஜானுவை கூப்பிடவேயில்லை. மாப்பிள்ளையிடம் தனியே பேச தான் அழைத்தேன். அது என்ன ஆதாரம்?

அம்மா, அப்பாவை கொலை செய்த வீடியோ.

என்ன? எங்க இருக்கு. நான் பார்க்கணும்.

வேண்டாம்டா. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

துகிரா, துளசி கையை இழுத்து தீனா அறைக்கு சென்றாள்.

நம்ம அந்த ஆதாரத்தை தேடுவோம் துகிரா கூற, ஆனா.. அதை பார்த்து நாம என்ன செய்றது?

ஜானுவுக்கு இந்த விசயம் தெரிந்தே ஆகணும். கண்டிப்பா ஆன்ட்டிக்கும், ஆதுவுக்கு தெரிஞ்சிருக்கும். அவங்க அவகிட்ட மறைக்கிறாங்க. நாம தெரியப்படுத்துவோம்.

ஜானுவுக்கு தெரிஞ்சா அழுவாளே?

அழுவா..ஆனால் எல்லாரும் இதை மறைச்சு அவளா தெரிஞ்சுகிட்டா யாரிடமும் பேச மாட்டா என்று துகிரா ஆதேஷ் அப்பாவிற்கு போன் செய்தாள்.

அவர் மகிழ்வுடன் எடுக்க, அப்பா..ஜானுவிடம் கொடுங்க துகிரா கூற,

என்னம்மா சொன்ன? கண்கலங்கினார்.

அப்பா..ஜானுகிட்ட குடுங்க. ஆன்ட்டிக்கும் ஆதுவுக்கும் தெரிய கூடாது. தனியா வந்து பேச சொல்லுங்க. முக்கியமான விசயம். நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன்.

ஜானு பக்கம் சென்று அவள் கூறியதை அவர் கூறி ஜானுவிடம் போனை கொடுத்து விட்டு, லலி பொண்ணு என்னை அப்பான்னு சொல்லிட்டா என்று அவரை தூக்கி சுத்திக் கொண்டே கத்தினார். வசந்தி புன்னகையுடன் உள்ளே சென்றார்.

அய்யோ..விடுங்க. எல்லாரும் பாக்குறாங்க அவர் கூச்சத்தில் நெளிய, அவரை இறக்கி விட்டு அணைத்துக் கொண்டார்.

அப்பான்னா சொன்னா? என்னை மட்டும் அம்மான்னு கூப்பிட மாட்டிங்கிறா? அவர் முகம் வாட, நேரம் கொடு. அழைப்பாள்.

ஜானு அவளறைக்கு சென்று போனை காதில் வைக்க, ஜானு..நீ உன்னோட அறையிலே இந்த போனுடன் இரு. நான் மறுபடியும் போன் செய்கிறேன். ரொம்ப முக்கியமான விசயம் போனை வைத்தாள்.

ஜானு படுக்கையில் படுத்துக் கொண்டே ஆதேஷ் காதலை கூறியதை நினைத்து கனவுலகத்தில் வலம் வந்தாள் ஜானு.

ஹாஸ்பிட்டலில் துருவன் வருத்தமுடன் அமர்ந்தான். பின் புவியை பார்த்து, இந்தா புவி சாப்பிட அம்மா கொடுத்தாங்க என்று கொடுத்தான்.

உனக்கு என்னாச்சுடா? அவள் கேட்க,

அண்ணா..அண்ணா..என்று அழுதான். நிமிர்ந்து அமர்ந்த புவி..அண்ணாவுக்கு என்னடா?

தெரியல புவி. தீனா சார் போன்ல பேசியதை கேட்டேன். அண்ணாவுக்கு ஏதோ பிரச்சனை கேட்டால் சொல்லவே மாட்டேங்கிறார் என்று காவேரியை பார்த்தான்.

ஆன்ட்டி, போன் இருக்கா கேட்டான்.

இருக்குப்பா என்று அவர் காட்ட, நான் பேசிட்டு தரவா?அவர் கொடுத்தார்.

அகில் எண்ணிற்கு போன் செய்ய, அர்ஜூன் யோசனையோடு போனை எடுத்தான்.

அண்ணா..அவன் அழைக்க, துருவா என்ன வேண்டும்?அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன் அண்ணா? நீங்களா? அண்ணா எங்கே?

அவன் வெளியே சென்றிருக்கிறான்.

அண்ணா உண்மைய சொல்லுங்க. அண்ணாவுக்கு என்ன ஆச்சு? அண்ணா எங்க? நான் அண்ணாவிடம் பேசணும்.

தீனா சார் பேசியதை நான் கேட்டேன். சொல்லுங்க, அண்ணாவுக்கு என்ன ஆச்சு? கத்தினான். அர்ஜூன் அமைதியாக இருந்தான்.

அண்ணா நீங்க சொல்றீங்களா? இல்ல அம்மாவிடம் சொல்லவா? துருவன் கேட்க,

இல்ல அம்மாகிட்ட எதையும் சொல்லாத. அவனை சுட்டுட்டாங்க. ஆனால் இப்ப அவன் ஓ.கே தான்.

என்ன சுட்டுட்டாங்களா? இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? கத்தினான். புவனாவும் காவேரியும் திகைத்து அவனை பார்த்தனர்.

அண்ணா பக்கத்துல தான் இருக்கீங்களா?

இல்ல துருவா. அவன் பக்கத்துல ஒரு பொண்ணு இருக்கா.

பொண்ணா? யாரு? யாசு அக்காவா?

இல்ல. பவின்னு எங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு.

பவியா? அவங்க கூட நித்தி அக்கா கூட எங்க வீட்டுக்கு வந்தாங்களே? அவங்களா?

உங்க வீட்டுக்கு வந்தாளா?

ஆமாம். அவங்ககிட்ட போனை கொடுங்க.

வேண்டாம் துருவா. அகிலுக்கு சரியானவுடன் நீ அவளிடம் பேசிக்கோ.

என்ன ஆச்சு அர்ஜூன்? யாரு? ஸ்ரீ கேட்க, அவளை பிடித்து இழுத்து வாயை மூடினான் அர்ஜூன்.

அண்ணா..ஸ்ரீ அக்கா வாய்ஸ் மாதிரி இருக்கே. அக்கா அங்க தான் இருக்காங்களா? அவங்களுக்கு ஒன்றுமில்லையே?

பவி அக்கா..ஸ்ரீ அக்கா அங்க இருக்கிறதை சொன்னாங்க. ஆனா அக்கா அண்ணா பக்கத்துல இல்லையா?

ஸ்ரீயா? அவள் இங்க இல்லையே?

அண்ணா..நீங்க பொய் சொல்லாதீங்க. எனக்கு அவங்க குரலை நன்றாக தெரியும். அர்ஜூன் கையை எடுத்து விட்டு அவளை முறைத்தான்.

துருவா.இங்க நிறைய பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. நீ அமைதியா இரு. எல்லாரும் என்னோட பொறுப்பு. யாருக்கும் ஏதும் ஆகாது. உன்னோட அண்ணா கொஞ்ச நேரத்தில முழிச்சிடுவான். மருத்துவர் சொன்னார்.

அவன் விழித்தவுடன் பேச வைக்கிறேன் என்று போனை வைத்து விட்டான்.

புவி, அர்ஜூன் அண்ணா மறைக்கிறாங்க. எனக்கு தெரியும் ஸ்ரீ அக்கா அங்க தான் இருக்காங்க.

அவள் பேசாமல் அவனை பார்க்க, உனக்கு தெரியுமா? கேட்டான்.

தெரியும். ஸ்ரீ அக்கா மட்டுமல்ல அங்க எல்லாருக்கும் ஆபத்து தான். என் அண்ணாவிற்கு நடந்தது விபத்தல்ல. கொலை முயற்சி என்றாள்.

ஏய்..புவி..அண்ணா என்ன செஞ்சாங்க?

ஸ்ரீ அக்காவை அவங்க ஏதோ பண்ணீட்டாங்க. அர்ஜூன் அண்ணா எப்படி அழுதாங்க தெரியுமா? என்னால அதை பத்தி கேட்க முடியல. அமைதியா பார்த்துகிட்டு இருந்தேன். பிரதீப் அண்ணா,ஜானு, இவருக்கும் தெரியும்.

ஏதோ நடக்குது? ஆனால் என்னன்னு தெரியல?

ஆதேஷிற்கு போன் செய்தான் துருவன். அவன் போனை எடுக்கவில்லை.

ஆதேஷ் அண்ணா போனை எடுக்க மாட்டிக்கிறாங்க.

ஆன்ட்டி, ஜானுவிடம் போன் இருக்கா?

தெரியலையே தம்பி..என்றார் காவேரி.

தெரியலையா? என்று போனை பார்த்தவன் துளசி போன் வைச்சிருப்பால என்று அவள் அம்மாவிடமே எண்ணை கேட்டான்.

எதுக்கு தம்பி?

ஆன்ட்டி, ஜானு துளசியிடம் பேசி இருப்பால. நான் கேட்டுக்கிறேனே?

அவர் எண்ணை போனில் எடுத்து கொடுக்க, துளசி போனை எடுத்து, அம்மா..சொல்லுங்க. நான் முக்கியமான வேலையா இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.

உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? துருவன் குரலை கேட்க, பதறி போனை கீழே விட்டாள் துளசி.

ஏய்..உடைச்சுறாத? சீக்கிரம் தேடிக்கிட்டே பேசு.

தேடுறீங்களா? என்ன தேடுறீங்க? அதுவும் அவங்களுடன் சேர்ந்து என்ன செஞ்சுகிட்டு இருக்க? அவன் மீண்டும் வினவ,

அதை எதுக்கு உன்னிடம் சொல்லணும். நான் அப்புறம் பேசுகிறேன்.

என்ன தேடுறீங்கன்னு கேட்டேன்?அவன் கேட்க,

என்ன துகிராவுமா தேடுறா? தம்பி போனை கொடுங்க என்று போனை காவேரி வாங்கி,

என்னடி தேடுறீங்க? பிரச்சனையா? எங்க இருக்கீங்க?

தீனா அண்ணா அறையில் என்றாள்.

ஏய்..முதல்ல வெளிய வாங்கடி. தீனாவுக்கு தெரிஞ்சா கத்துவான். அவன் அறைக்குள் என்னையே அதிகம் உள்ளே விடமாட்டான்.

அவன் அறையில என்ன தேடுறீங்க?

உன்னோட புருசன் கொலைகாரனான்னு கண்டுபிடிக்க போறோம்?

என்னடி சொல்ற? அவரு நம்ம எல்லாரையும் கஷ்டப்படுத்துனாரு. தப்பான பழக்கம் கூட இருக்கு. ஆனா கொலையெல்லாம் செய்ய மாட்டார்.

அம்மா..போதும். இதுக்கு மேல அவர் பக்கம் பேசின என்னை நீ கொலைகாரியா தான் பார்க்கணும். அண்ணாவுக்கும் அப்பா மேல சந்தேகம்  வந்துருக்கு.

ஜானு பெற்றோரை கொன்றது அந்த வேலீஸ்வர். அவருக்கு உன்னோட புருசனும் உடைந்தயா இருப்பார்ன்னு எனக்கும் தோணுது. அது மட்டும் உறுதியாகட்டும். அந்த ஆளை அப்புறம் வச்சுக்கிறேன் போனை டப்பென வைத்தாள்.

காவேரி அதிர்ந்து, இல்ல அவரு கொலை பண்ணியிருக்க மாட்டார் என்று அழுதார்.

ஆன்ட்டி, என்னாச்சு? அவ என்ன சொன்னா? அவரருகே வந்தான் துருவன்.

தம்பி, உனக்கும் அவரை தெரியும்ல. அவர் கொலைகாரனா இருப்பாரோன்னு என் மவ அவரை சந்தேகப்படுறா? என்று அழுதார்.

அவன் யோசனையோடு, அதெல்லாம் இருக்காது ஆன்ட்டி அழாதீங்க என்று ஆறுதல் படுத்த, புவனாவும் அவருக்கு ஆதரவாக பேசினாள்.

தேடிக் கொண்டிருந்த துளசி கையில் பட்டது ஓர் உறை. அதை திறந்து பார்த்தாள். அதில் ஓர் பென் டிரைவ் இருந்தது.

அண்ணி இதுவாக இருக்குமோ என்று துகிராவிடன் கேட்டாள்.

அவள் வேகமாக அவளறைக்கு சென்றாள். ஆதேஷ் அவளுக்கு வாங்கி கொடுத்த லேப்பை எடுத்து வீடியோவை பார்க்க இருவர் கண்ணிலும் கண்ணீர். துளசி அழுது கொண்டிருந்தாள்.

வேகமாக ஆதேஷிற்கு அனுப்பினாள்.பின் ஜானுவிற்கு போன் செய்து ஆதுவிற்கு அனுப்பியதை பாரு.

வேண்டாம் ஜானு. நீ பார்க்காதே துளசி கூற, ஏய்..நான் தான் சொன்னேன்ல துகிரா கூற,

அய்யோ..அவ பார்த்தா ரொம்ப அழுவா.வேண்டாம். ஜானு நீ பார்க்க வேண்டாம்.

அண்ணி..என்னது அனுப்பி இருக்கீங்க?

நீயே பாரு என்று போனை வைத்தாள்.

ஜானு வேகமாக வெளியே ஓடி வந்தாள்.

மருமகளே எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?

மாமாவை பார்க்க போறேன் அங்கிள் என்று கூறி கொண்டே படியில் ஏறினாள். அவர்கள் அவளை பார்த்து சிரித்துக் கொண்டனர்.

ஜானு மனதினுள் என்னவாக இருக்கும்? அண்ணி பார்க்க சொல்றாங்க. துளசி வேண்டாம்னு சொல்றா. அவள் அழுதது போல் இருந்தது. அவன் அறைக்கு சென்று கதவை தட்டினாள்.