வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-40
149
அத்தியாயம் 40
அர்ஜூன்..அவர் சொந்த ஊர்ல இருக்காருன்னு தான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கோம். அவர் எப்ப காணாம போனாரு? டாக்டர் கேட்டார்.
சார்..நான் சொல்றேன். ஆனால் இப்ப வேண்டாம். நாங்க ஏற்கனவே பிரச்சனையில தான் இருக்கோம். அவளுக்கு மருந்து ஏதும் தரணுமா?
இல்ல. அவள் நன்றாக ஓய்வெடுத்தாலே போதும். அர்ஜூன் அவளுக்கு அவள் பேசியது நினைவிருக்காது. ஆனால் அவளுக்கு இங்க வந்தது புரிந்திருக்கும். பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
தேங்க்ஸ் டாக்டர் சார் என்று அர்ஜூன் எழ, அங்கிள் அவளுக்கு வேரெதும் ஆகாதுல நிவாஸ் கேட்க, எனக்கு முழுதாக தெரியவில்லை. ஸ்ரீ மனசுல தான் பிரச்சனை. அர்ஜூன் நான் ஏற்கனவே சொன்னது போல் அவளை யாராவது கவனித்து கொண்டு தான் இருக்கணும்.
நிஜமாகவே அவள் அதிலிருந்து வெளிய வரலைன்னு தோணுதா? அர்ஜூன் கேட்டான்.
எஸ் அர்ஜூன். அவளை எதிலிருந்துனாலும் வெளியே கொண்டு வரலாம். ஆனால் அவளுக்கு நம்பிக்கையும் உடைந்திருக்கிறது. அவள் பெற்றோரை அவள் கண் முன் கொன்றிருக்கிறார்கள். இன்னும் கூட நமக்கு தெரியாமல் ஏதாவது கூட நடந்து இருக்கலாம். அவளாக இதிலிருந்து வெளியே வரணும். அது ரொம்ப கஷ்டம்.
ரெண்டு வருஷமாகுமா?
இல்ல..பத்து வருஷம் கூட ஆகலாம். ஆனால் அவ்வளவு நாட்கள் அவள் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அவளுக்கு மனம் மாறி தவறான முடிவு கூட எடுக்க வாய்ப்புள்ளது. தற்கொலை முயற்சி கூட செய்யலாம். அவள பார்த்துக்கிறது ரொம்ப கஷ்டம் அர்ஜூன்.
சார்..என்றான்.
அங்கிள் வேற எதுவும் செய்ய முடியாதா?
முடியும். அர்ஜூன் உன் காதலை அவளை ஏற்றுக் கொள்ள வைக்கணும். கட்டாயப்படுத்தக் கூடாது. அவளாக காதலை உன்னிடம் சொல்லணும். எனக்கு தெரிந்து அவள் காதலை உன்னிடம் சொல்ல நினைக்கும் போது தான் அவளை பற்றிய உண்மை தெரிந்திருக்கணும். அதனால் தான் சொல்லாமல் விட்டிருக்கணும்.
அவளுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு வேண்டும். அது உன்னுடைய காதலால் மட்டும் தான் முடியும்.
அவள் தவறான முடிவு எடுக்காமலிருக்க அர்ஜூனை விட ஒன்று இருக்கிறது. அனு.. அவளை பார்த்தாயா அர்ஜூன்?
அனு, ஸ்ரீயை அம்மா என்று அழைக்கும் போது அவளை பார்த்தாயா? அவளிடமிருந்த தவிப்பு. அதுமட்டுமல்ல அனுவும் ஸ்ரீயும் ஒரே நிலையில் இருப்பதாக ஸ்ரீ நம்புகிறாள். இருவரும் அதிக நெருக்கமானால் கண்டிப்பாக ஸ்ரீ தவறான முடிவு எடுக்க மாட்டாள். ஆனால் அர்ஜூன் அவள் கண்டிப்பா யோசிப்பா.
அனுவை விட்டு அக்கா சென்ற போதே அனு அழுததை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். சின்ன பிள்ளைக்கு என்ன தெரியும்? என்று நினைத்தால் அக்கா முன்னதாகவே ஸ்ரீயை அம்மாவென அழைக்க சொல்லி பயிற்சி கொடுத்திருப்பாங்க போல. மீண்டும் ஒரு தாயை இழந்து அனு கஷ்டப்படக் கூடாதுன்னு அனுவை விட்டு விலகுவாளா? இல்லை அனுவிற்காக அவள் வாழ்வாளா? என்பது ஸ்ரீ முடிவில் தான் உள்ளது நிவாஸ் கூற,
யார் அனு? என்று டாக்டர் கேட்டார்.
அர்ஜூன் அனைத்தையும் கூற, சூப்பர் அர்ஜூன். இது உங்களுக்கான வாய்ப்பு. ஸ்ரீ எல்லாவற்றையும் மறக்க வைக்க அந்த குட்டிப் பொண்ணை ஸ்ரீயுடன் நெருக்கமாக பழக விடுங்கள். அதற்காக நீ விலகி விடாதே. அவளும் உன்னை காதலிக்கிறாள். மறந்து விடாதே அர்ஜூன். இருவருடனே இரு. பார்த்துக் கொள்ளலாம் என்று உற்சாகமானார் அவர்.
எதுவும் உதவி தேவைப்பட்டால் எனக்கு போன் செய்யுங்கள் என்றார்.
அர்ஜூன் அவரை முறைத்து விட்டு, நீங்க சொன்ன தகவலே போதும். நீங்க உங்க குடும்பத்தை பாருங்கள். நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் மருத்துவராய் மட்டும் உதவுங்கள். நாங்கள் வருகிறோம் என்று அர்ஜூன் அவரது பரிசோதனை இடத்திற்கு சென்று ஸ்ரீயை தூக்கிக் கொண்டு சென்றான்.
நல்ல திட்டம் தான் அகில் கூற, இருவரும் அவனை பார்த்தனர். நான் வெளியிலிருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தேன் என்று நேரடியாகவே அகில் கூறி விட்டு பைக்கை எடுக்க, இருவரது பைக்கும் வீட்டை நோக்கி விரைந்தது.
வீட்டில் அனைவரும் சாப்பிடுங்க என்று கைரவ் அர்ஜூன் சொன்னான் என்று சாப்பிட வைத்தான். கமலி சினத்துடன் உள்ளே வந்தார்.
எங்கே அவள்? எங்கே அவள்? கத்திக் கொண்டே உள்ளே வந்த கமலியை யாரும் கண்டு கொள்ளவேயில்லை.
இன்பா அம்மாவும், வினிதா அம்மாவும் அவரை அழைக்க, சற்று அமைதியுடன் ஸ்ரீ எங்கே?
என்ன பேசுற? என்று சினந்து செய்தியை பார்க்கவே இல்லையா?
தருண் டீவியை போட, அர்ஜூன் பேசியது தான் ஓடிக் கொண்டிருந்தது. நம் நாட்டின் கிரேட் பிசினஸ் வுமன் மகன் தன் அம்மாவை விட்டு பிரிந்து இருந்தாரா? அம்மாவை அவருக்கு பிடிக்காதா? அவர் தன் பையனை கூட பார்த்துக் கொள்ளவில்லையா? இவ்வளவு சொத்தையும் யாருக்காக சம்பாதித்து இருக்கிறார்? அர்ஜூன் கன்ஸ்ட்ரக்சன் பிராஜெக் பாதிக்கப்படுமா? என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
கமலி வீட்டிற்கே சென்று அவரை எடுத்த பேட்டியும் ஓடிக் கொண்டிருந்தது. அவரை துளைத்து கேள்விகள் கேட்டும் அசராமல் பதிலளித்திருந்தார். அர்ஜூன் அனுவை வளர்ப்பதாக கூறி இருந்ததையும் கேட்க,
அவன் வளர்ப்பதில் என்ன உள்ளது? எனக்கு பிரச்சனையில்லை என்று கூறியதை கேட்டு அனைவரும் அவரை பார்த்தனர். அப்பொழுது கூட கால் மீது கால் போட்டு கெத்தாக அமர்ந்திருந்தார்.
உங்கள் மகனுக்கு அவர் பக்கத்தில் இருக்கு பொண்ணை பிடிக்குமாமே? யார் அந்த பொண்ணு? அவங்கள உங்க பையனுக்கு திருமணம் செய்து வைக்கப் போறீங்களா?
ஸ்ரீ பெற்றோரை பற்றி கூறி விட்டு, இப்பொழுதே என்ன திருமணப்பேச்சு? அவன் முதல்ல அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடையட்டும். அப்புறம் பார்க்கலாம்? என்று ஸ்ரீயை புறக்கணித்திருந்தார்.
பின் அவன் பேசிய அந்த கொலைகாரன் பற்றியதை வீடியோவாக காட்டினார்கள். யாரோ வீடியோ எடுத்து செய்தியாளருக்கு மறைமுகமாக அனுப்பி உள்ளனர். இதை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
இது எப்பொழுது வீடியோவாக்கப்பட்டது அபியும் தருணும் ஒருவாறு வினவ, பாருங்க இன்னும் இருக்கு என்றார் கமலி.
அந்த கொலைகாரன் யார்? நிழலுருவமாக ஒரு படம் தயாரித்து, நல்ல செய்தி என்று செய்தியாளர்கள் பரப்ப, போலீஸ் அனைவரும் அவனை தேட ஆயத்தமானார்கள். அந்த வீடியோவில் அர்ஜூன் முடிவில் மாமா என்று கொலைகாரனை அழைத்தது வேற பெரும் பரப்பாகியது.
என்ன நடக்குதுடா? என்று நித்தி பயத்துடன் அனைவரையும் பார்க்க, விடு நித்தி போலீசே எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவாங்க என்றாள் இதயா.
ஏய்..அவங்க கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடி நம்ம எல்லாரும் உயிரோட இருக்கணும்ல. அதுவும் அர்ஜூன் மட்டும் அந்த செய்தியாளரிடமோ..அந்த கொலைகாரனிடமோ மாட்டினால் அவ்வளவு தான் என்று தருண் கூற, அங்கு செய்தியாளர் வெளியிருந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
வாட்ச்மேன் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்.
அர்ஜூன் வீட்ல இல்லைன்னு சொல்லி அனுப்பிடுவோமா? யாசு கேட்க,
ஓ.கே மேடம்ன்னு போயிடுவாங்களாம் என்று அபி கடுப்புடன் கூறினான்.
அவர்களை விரட்ட என்ன செய்யலாம்? அனைவரும் யோசிக்க, கைரவ் அவர்களிடம் யாராவது புகழ்மிக்கவரை வெளியே அனுப்பினால் அவர் செய்தியாளரை அனுப்பி விடுவார் என்று கமலியை பார்த்தான்.
இப்ப தான்டா முடிச்சிட்டு வந்தேன் என்று அவர் கூற, நாங்க பேசினா உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறீடும். ஓ.கேவா? இன்பா கேட்க,
போய்த் தொலைகிறேன் என்று அவர் சென்று பேசி அனுப்பி விட்டு உள்ளே வந்தார்.
நீங்க எதுக்கு ஸ்ரீயை தேடுனீங்க? இன்பா கேட்டாள்.
அவளால் தான் எல்லாம் நடக்குது? அவர் அவளை பொரிந்து தள்ள அங்கிருந்தவர்கள் கோபமுடன், அவள பத்தி ஏதாவது பேசுறதா இருந்தா? நீங்க கிளம்புங்க. தேவையில்லாம எங்கள கோபப்படுத்தாதீங்க? அபி கூற,
பரவாயில்லை. நன்றாக பேசி பழகி விட்டாயே?
மேம். உங்க அளவுக்கு கேவலமா எனக்கு பேசத் தெரியாது என்று சினத்துடன் அமர்ந்தான் அபி.
ஏய், என்னிடம் எப்படி பேசுற? அபி முன் வந்தார். இன்பா அவர் கையை பிடித்து இழுத்து அவரை பார்த்து, உங்கள என்னோட பெரிய ரோல் மாடல்ல நினைச்சேன். ஆனா ஒரு சின்னப் பொண்ணுக்கிட்ட எப்படியெல்லாம் பேசக்கூடாதோ அப்படி பேசி அவளை காயப்படுத்தீட்டீங்க. அவ எவ்வளவு கஷ்டத்துல இருக்கா தெரியுமா உங்களுக்கு? இன்பா கண்கள் நெருப்புடன் தகிக்க, அவர் பின் நகர்ந்தார்.
ஏன் நீங்க மட்டும் அவள புரிஞ்சுக்கல? நீங்க பேசும் போது எப்படி துடிச்சு போயிருப்பா? அபி கோபமுடன் அர்ஜூன் வரும் முன் கிளம்புங்க. இல்ல நான் கண்டிப்பா நீங்க அவனிடம் பேசியதை சொல்லிடுவேன்.
அபி..இவங்க எதுக்கு நீ சொல்றதுக்கு பயப்படணும். அவங்களுக்கு அவங்க பையன் மேலே அக்கறை இல்லை. இதுல ஸ்ரீயை பத்தி எப்படி புரிஞ்சுப்பாங்க? இதயா கேட்டாள்.
சும்மா இருங்கடி. வீட்டுக்கு வந்தவங்க கிட்ட வம்பு வளர்த்துகிட்டு என்று இன்பா அம்மா அவரிடம் வந்து,
ஆமாம்மா..உங்க பணம், கம்பெனி சம்பாதிச்ச எல்லாத்தையும் வைச்சு இப்ப உங்க புள்ளய பக்கத்துல பார்க்க கூட முடியல. இதுல என்னம்மா சந்தோசம் இருக்கு? கேட்க, கமலி முகம் வெளுத்து கண்கள் கலங்கியது.
எனக்கு தெரியாதும்மா. அந்த பொண்ணுகிட்ட என்ன பேசுனீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் தப்பா பேசி இருக்கீங்கன்னு தெரியுது?
உங்க பையன் அனு பாப்பா அம்மாவுக்கு எல்லாமே முடிச்சு வந்து அறை பக்கம் ஒரே ஒரு நிமிஷம் தான் தலைய காட்டினாரு. அவரோட அம்மா..நீங்க சும்மா தான் இருந்தீங்க. அவரோட இன்னொரு அம்மா பார்த்து எடுப்பதற்குள் அவர் தலை ஈரமா இருக்கு துவட்ட துவாலையை எடுத்து கொடுத்துச்சே. இத விட வேற எந்த குணம் குறைச்சலா போச்சு அந்த பொண்ணிடம். குறைய நம்மிட்ட வைச்சிட்டு மத்தவங்க பழி சொல்லலாமா? கேட்டார்.
பொதுவாக இன்பா அம்மா யாரிடம் பேச கூட மாட்டார். அம்மா இந்த அளவு பேசுவார் என்று அவர் மகள்களும் எதிர்பார்க்கவில்லை. இருவரும் அவர்களது அம்மாவை அணைத்துக் கொண்டனர். அதை பார்த்த கமலியின் தாயுள்ளம் ஏங்கியது. சிலர் இதை கண்டு கொண்டனர்.
அதே நேரம் அர்ஜூன் ஸ்ரீயை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் முழுவதும் ஈரமுடன் ஸ்ரீ மயங்கிய நிலையில் தூக்கி வருவதை பார்த்து பதறி எல்லாரும் அவனிடம் வந்தனர். அவன் நேராக அறைக்குள் சென்று அவளை கட்டிலில் கிடத்தி விட்டு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டே இருந்தான்.
அபி அவனை நிறுத்தி அர்ஜூன்..அர்ஜூன்..என்று கத்த, அப்பொழுது தான் அர்ஜூனுக்கு உரைத்தது. அவனை சோபாவில் அமர வைத்தான் அபி.
ஸ்ரீக்கு என்னாச்சு? எல்லாரும் கேட்க, கைரவ் அனுவுடன் உள்ளே வந்தான். அனு ஸ்ரீயை பார்த்து,
அம்மா..அம்மா..என்று கண்ணீரோடு கையை நீட்ட..கமலி அதிர்ந்து அனுவையே பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் தான் ஏற்கனவே கேட்டார்களே. அனுவை கைரவ் இறக்கி விட, அவள் ஸ்ரீயிடம் வந்து அம்மா..அம்மா..என்று மீண்டும் அழ, அர்ஜூன் எழுந்து அவளை தூக்க வந்தான்.
தம்பி,..நீங்க ஆடையை மாத்திட்டு வாங்க. பாப்பாவுக்கு சளி பிடிக்கும் இன்பா அம்மா கூற, அனு பக்கத்தில் வந்து அவன் பக்கம் திருப்பி,
ஸ்ரீக்கு ஒன்றுமில்லை. மழையில் நனைந்து விட்டோம். ஆட்களுடன் சண்டை..மயங்கி விட்டாள். ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தோம். அவளுக்கு மருந்து கொடுத்திருக்காங்க. அவள் மாலை தான் எழுவாள்.
அர்ஜூன் அவள் சாப்பிடலை. அதற்குள் மருந்தா? இன்பா கேட்டாள்.
மேம்..அவள் மயக்கத்திலிருந்து ரொம்ப நேரமா எழல. அவள் மருத்துவர் தான் அவளுக்கு மருந்து கொடுத்திருக்கிறார். எழுந்தவுடன் சாப்பிடட்டும். எல்லாரும் வெளிய இருங்க. நித்தி நீ ஸ்ரீயுடன் இரு என்று சமையலறைக்குள் சென்றாள்.
என்ன வேண்டும்பா? என்று இன்பா அம்மா அர்ஜூனிடம் கேட்க, நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி என்று வெந்நீர் வைத்து எடுத்து ஸ்ரீ அறைக்குள் சென்றான். யாசு வா..என்று சத்தமிட்டான் அர்ஜூன். அவளும் உள்ளே செல்ல அனைவரும் அர்ஜூனையே கவனித்துக் கொண்டிருந்தனர்.
நித்தி, யாசு அவள் மழையில் நனைந்திருக்கிறாள். உடலை துடைத்து விட்டு வேறு ஆடை மாற்றுங்கள். இதுவும் ஈரமாகி விட்டது என்று வெளியே வந்தான். அபி அவனிடம் வந்து வேற பிரச்சனை ஏதுமில்லையே?
இல்லை அபி. அகில் நிவாஸ் இன்னுமா உள்ள வரலை என்று அர்ஜூன் வெளியே நகர, முதல்ல குளிச்சிட்டு ஆடையை மாற்று என்றொரு சத்தம். கமலியை பார்த்து, நீ இங்க என்ன செய்றீங்க?
நான் வந்தா உனக்கு என்ன பிரச்சனை?
எனக்கென்ன..என்று அர்ஜூனும் வெளியே செல்ல, டேய்..போய் குளிச்சிட்டு ஆடையை மாற்று. அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்று அபி வெளியே சென்றான். அர்ஜூன் ஓர் அறைக்குள் சென்றான்.
அகிலும் நிவாஸூம் அவர்களது சட்டையை உதறிக் கொண்டிருந்தனர். வெளிய என்னடா பண்றீங்க? அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
டேய்..அர்ஜூன் எங்கடா இருக்க? நீ மட்டும் அழுக்கு படியாமல் வந்துட்ட என்று அர்ஜூனை அகில் அர்ச்சனை செய்து கொண்டு உள்ளே வந்தான். மீண்டும் ஆட்களுடன் சண்டையிட்டு சேறு பட்டு வந்திருந்தனர்.
இதயா, இன்பா மற்றவர்களும் அகில், நிவாஸை பார்த்து பயங்கரமாக சிரிக்க, அனு அவர்களிடம் வந்து அங்கிள் கீழ விழுந்துட்டீங்களா?
அங்கிளா? அகில் அனுவை பார்த்து, என்ன பார்த்தா உனக்கு எப்படிம்மா தெரியுது?
ஹலோ..அங்கிள்..நீங்க குளிச்சிட்டு வாங்க ச்சீ என்றாள்.
சின்ன பிள்ளை எல்லாம் கலாய்க்குதே? அகில் தலையில் அடித்துக் கொண்டு குளிக்க சென்றான்.
நிவி இங்க பாரு என்று தருண் அவனை புகைப்படம் எடுக்க, சீனியர் என்ன பண்றீங்க?
இதை ஆருத்ராவுக்கு அனுப்பினா எப்படி இருக்கும்? அவன் கேட்க, வேண்டாம் சீனியர் என்று அவனிடம் போனை பிடுங்க அனைவர் மனநிலையும் மாறி சிரித்தனர். கமலியும் இவர்கள் விளையாட்டை ரசித்தார்.
பின் பசங்க குளித்து வர, அர்ஜூன் சற்று நேரம் கண்ணயர்ந்தான். கமலி கிளம்ப எழுந்திருக்க,
எங்க போறீங்க மேம்? அர்ஜூன் உங்கள வெளிய விடக் கூடாதுன்னு சொல்லி இருக்கான் இன்பா கூறினாள்.
அவர் அவன் இருக்கும் அறையை பார்த்தார். நித்தியும் யாசுவும் ஸ்ரீ அறையை பூட்டி விட்டு வெளியே வந்தனர். அனுவுடன் சேர்ந்து சிலர் கார்டூன் பார்க்க, மற்றவர்கள் அவரவர் வேலையை பார்த்தனர். அன்று மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தார் இன்பா அம்மா. அவரிடம் வந்த நித்தி நானும் உதவுகிறேன் என்று கூற,
வேண்டாமே நித்தி என்று அபி அவளிடம் வந்தான். ஆன்ட்டி, அவங்களுக்கு சமைக்கவே தெரியாது கேலியாக அவன் கூற,
யார் சொன்னா? தாரிகா அம்மா எனக்கு சொல்லி கொடுத்திருக்காங்க.
ஆமா..இப்ப நீ செஞ்சு பழகி எப்ப நாம சாப்பிடுவது? கேட்டுக் கொண்டே இன்பா வந்தாள்.
நீங்க எல்லாமே செய்வீங்களா? நித்தி கேட்க,
எல்லாமே தனியா கூட செய்ய முடியும். பழகிட்டேன்ல..என்று புடவை இடுப்பில் செருகி அம்மா..ஸ்ரீ இந்நேரம் தூங்குகிறாளே?
தூங்கட்டும். அர்ஜூனிடம் பேசணும்மா என்றார். அபியின் கண்கள் அவனை மீறியும் இன்பாவின் சொருகிய இடுப்பில் பதிய கண்டு கொண்ட நித்தி,..
அபி, வா நாம போகலாம். மேம்மே எல்லாத்தையும் பார்த்துப்பாங்களாம் என்று அவனை இழுத்து வெளியே சென்று அவன் காதை திருகினாள்.
எல்லாரும் இருவரையும் பார்க்க, இன்பா அம்மாவும் எட்டி பார்த்தார்.
நித்தி அவனை விடு. என்னடா செஞ்ச அபி? யாசு கேட்க, நான் என்ன செய்தேன்? ஒன்றுமில்லையே?
நித்தி மீண்டும் அவன் காதை திருக, அகில் பாருடா இவளை என்று அவனருகே வந்தான். அனுவும் அவர்களை பார்த்து விட்டு அகிலிடம் வந்து,
அங்கிள்..நீங்க அழும் போது க்யூட்டா இருந்தீங்க? என்றாள். அனுவை தூக்கி மடியில் வைத்து கொண்ட அகில், அப்படியா, அவ்வளவு க்யூட்டாவா இருந்தேன்? நீ என்னை கட்டிக்கிறியா?
டேய்..என்று அனைவரும் சத்தமிட, கட்டிக்கிறேன் என்று அனு அகிலை அணைக்க, அகில் புன்னகையுடன் இது போதுமே? என்றான்.
அர்ஜூன் முன் கேட்டுத் தொலையாத. அவன் உன்னை கொன்னுடுவான் அபி கூற, ஆமா அவனுக்கு மட்டும் தான் கொல்லத் தெரியும் பாரு.
யாராவது கவினிடம் பேசுனீங்களா? அகில் கேட்டான்.
இல்லை என்று அனைவரும் தலையசைக்க, நித்தி சினத்துடன் அவனுக்கு வாய் கூடி போச்சு. அவனுக்கு இது தேவைதான்.
நித்தி இது அதிகப்படின்னு உனக்கு தோணலையா? யாசு கேட்க,
நீங்க வேற? அர்ஜூன் கவினை அப்படியெல்லாம் விட்ற மாட்டான். பாரு அவன் ஏதோ திட்டத்துடன் தான் இருக்கிறான் தருண் கூற,
சரியா எப்படி கண்டுபிடிச்ச தருண்? தாரிகா எங்க வீட்ல அண்ணா பாதுகாப்புடன் தான் இருக்கா கைரவ் கூற, அனைவரும் அதிர்ந்தனர்.
அர்ஜூன் சரியா தான் யோசித்திருக்கான் நித்தி என்ற அபி, தாரிகாவிற்கு கண்டிப்பா கல்யாணமெல்லாம் இருக்காது. அவன் மீண்டும் கைரவ் வீட்டிலிருந்தே பிரச்சனையை முடிக்க பார்க்கிறான்.
பரவாயில்லை. அவனை எல்லாரும் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க. என்னால் நடந்ததை நான் தான் முடிக்கப் போகிறேன்.
அர்ஜூன் ஆதேஷை வைத்து கவினை பொறாமைபடுத்தி அவனையே மொத்தமா மாத்த நினைச்சான். ஆனால் ஆதேஷ் ஒத்துக்கல கைரவ் கூற,
அவன் தாரிகா ப்ரெண்டு தான். உதவி இருக்கலாமே? அகில் சொல்ல,
அபி..உனக்கு தெரியுமா? ஜானுவுக்கும் அவனுக்கும் ஏதோ ஓடுது கைரவ் சொல்ல..
ஓடுதா? நடக்கலையா? என்று யாசு கேலியுடன் நகைக்க, நிஜமா தான் ஆதேஷுடன் தாரிகாவும் அர்ஜூனும் உதவி கேட்டப்ப நான் பக்கத்துல தான் இருந்தேன். என்னம்மா..கத்துனான் தெரியுமா? கைரவ் கூற,
அப்ப சீரியசா தான் இருக்கானா? அபி கேட்டுக் கொண்டே மாமா..என்ன செய்கிறாரோ? என்று பிரதீப்பை நினைத்து அபி வருந்தினான்.
அவர் பக்கத்துல தான் துகிரா இருப்பாளே?
என்னோட மாமாவ என்னன்னு நினைச்ச? அவருக்கு ஜானுன்னா உயிரு. ரொம்ப கஷ்டப்படுவார். யார் உடன் இருந்தாலும் அங்கேயே சுற்றி திரிந்த ஜானு இல்லாம கஷ்டமா இருக்கும். அவ பேசியதிலும் காயம் பட்டிருப்பார் என்று மீண்டும் வருந்தினான்.
டேய்..மாமா பையா. உன்னோட மாமா சீக்கிரம் சரியாகிவார். மனசலவுள அவர் வலிமையா இருந்ததால தான் அவரால் வாழ்வில் முன்னேறியும், ஜானுவை வளர்த்தும் இருக்கிறார்.
ஏன்டா அபி, மாமாவ பத்தி யோசிச்சியே? உனக்கு ஜானு பற்றிய கவலையே இல்லையா? உன் பின்னாடியே இத்தனை நாளாய் சுத்திக்கிட்டு இருந்தா? உனக்கு கொஞ்சம் கூட அவள் மீது சலனமே இல்லையா? அகில் கேட்டான்.
இல்லடா..அவள சின்னப்பொண்ணா தான் பார்த்தேன். அதனால எனக்கு ஏதும் தோன்றவில்லை.
உனக்கு தோன்றவில்லை. ஆனா அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா? நித்தி கோபமாக கேட்டாள்.
புரியுது நித்தி. ஆனால் அவளுக்கு என் மீது காதல் இருந்தா..இத்தனை கஷ்டத்தையும் மறைச்சிருக்க மாட்டால?
ம்ம்..ஆமாடா அபி. அண்ணா என்ன தான் உன்னோட அம்மா, அப்பாவிடம் அவளை விட்டு சென்றாலும் சிறிது நேரத்திலே எங்க வீட்டுக்கு வந்திருவா புவியை பார்க்க தருண் கூறினான்.
இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த கமலி எழுந்து சமையலறைக்கு சென்று, அவரும் உதவ கேட்க,
இத்தனை நாளாய் ஓடிக்கிட்டே இருந்திருப்பீங்க? இன்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று இன்பா அம்மா கூற,
நான் சமையல் செய்தே பல வருடங்களாகிறது. இன்று செய்ய தோன்றுகிறது என்று அவரும் உதவினார்.
அர்ஜூன் வெளியே வந்தான். அகில் இங்கே வா..என்று அவனை அழைத்து பவி பற்றி கேட்க, போச்சு மறந்தே போனேன். அவங்கள எச்சரிக்க தான் போனே செய்தேன் அவன் சொல்ல, அகிலுக்கு அழைப்பு வந்தது.
என்னப்பா அகில், அம்மா நல்லா இருக்காங்களா? பத்திரமா பார்த்துக்கோ இல்ல அவள மாதிரி ஆகிடும் மிரட்டும் தொனியில் பேசினான் அந்த மாஸ்டர்.
யாருடா நீ? அகில் கத்த,
அம்மா சொல்றத கேட்கவே மாட்டாயா? என்ன புள்ள நீ? நான் மட்டும்.. என்று கூற வந்தவன் நிறுத்தி, அகில் உன்னோட காதல் என்ன ஆனது? போச்சா..என்று பயங்கரமாக சிரித்தான். அர்ஜூன் உன் காதலை பறித்து விட்டானா? அவன் கேட்க, அகில் அர்ஜூனை பார்த்துக் கொண்டு போனை ஸ்பீக்கரில் போட்டான்.
அர்ஜூன் அதை வாங்கி ஸ்பீக்கரை எடுத்து விட்டு, பேசு..என்று அகிலிடம் சைகை செய்தான்.
திடீரென அகில் சிரித்துக் கொண்டு, அர்ஜூனா? என் காதலையா?..மீண்டும் சிரித்து அர்ஜூன் என் காதலை பறிக்கவில்லை. நான் தான் புரியாமல் அவனிடம் நடந்து கொண்டேன். அதுசரி..எங்க காதல் விவகாரம் உனக்கு எதற்கு?
காதல்..காதல் தான் அனைத்தையும் மாற்றும். எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வைக்கும் அவன் கத்தினான். அகிலே போனை ஸ்பீக்கரில் போட்டான். நானும் உன்னை போல தான் முதலில் நான் ஒரு பொண்ணை காதலித்தேன். பேரழகி அவள். ஆனால் சொல்லகூட வழியில்லாது போனது. அடுத்து ஒரு பொண்ணை காதலித்தேன். ஆனால் அவளால் என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் பிசினஸில் நுழைந்தேன். அதையும் கெடுத்தானே அவன்.
விடுவேனா நான்? இருந்த மொத்த கோபமும் அவனானான். அவன் குடும்பம் மொத்தத்தையும் அழிக்க நினைத்தேன். அதில் ஒரு துரும்பு தப்பித்து மீண்டும் என்னிடமே மாட்டியது. சரியான வேட்டை தான். ஆனால் அந்த துரும்பை அழித்தே தான் தீருவேன். என் இறுதி மூச்சு அப்பொழுது தான் அடங்கும் என்று விட்டு,
அகில் உனக்கு என்னோட வலிய காட்டவா? கேட்க, அகில் புரியாது விழித்தான். அர்ஜூனும் அவன் கூறிய கதையையே உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
புரியலையா அகில் செல்லம். உன்னுடைய காதல் ஸ்ரீ உன்னை மறுத்து விட்டால், ஆனால் சமீபமா உனக்கே வேற யாரையோ பிடிச்சிருக்கு போல அவன் கூற,
நான் இப்ப சிங்கள்டா என்றான் அகில்.
அய்யோ தம்பி. நீ இன்னும் உன்னுடைய அடுத்த காதலை உணரலைன்னு நினைக்கிறேன். நான் காட்டுகிறேன் என்று அவன் போனிற்கு புகைப்படம் ஒன்றை அனுப்ப, அதை பார்த்து அகில், அர்ஜூன் இருவரும் பதட்டமானார்கள்.