அத்தியாயம் 38

ஆதேஷ் வெளியே வரும் போது, அங்கு கப் இல்லை. அவன் கையில் வைத்திருந்த காய்ந்த பூக்களை அவனது புத்தக அலமாரியில் வைத்தான்.

பின் அவன் தயாராகி கீழே வந்தான். அவன் முகத்தில் ஒரு பளபளப்பு சோபாவில் வந்து அமர்ந்தான்.

வசந்தியை அழைத்து, அக்கா யாரையும் காணோம்? கேட்டான்.

அவர் புரிந்து கொண்டாலும், தம்பி அம்மா ஆபிஸ்கு கிளம்பிட்டாங்க. அப்பா அவர் அறையில் இருக்கார் என்று முடித்தார்.

அக்கா..தயங்கிக் கொண்டு ஜானுவை கேட்டான்.

சின்னம்மா..அவங்க அறையில இருக்காங்க. இப்ப வந்துருவாங்க என்று சிரித்தார்.

சின்னம்மாவா?

ஆமா தம்பி. கூப்பிடக் கூடாதா?

அட அக்கா. பொறுத்தமா கூப்பிடுறீங்க என்று சிலாகித்தான்.

அவர் புன்னகையுடன் சமையலறைக்குள் சென்றார். அவன் அப்பா வந்து அமர்ந்தார்.

டாட்..ஜானு எந்த அறையில இருக்கா?

எதுக்குடா? அவர் புருவத்தை உயர்த்த, சும்மா தான் கேட்டேன். நான் கேட்கக்கூடாதா?

ம்ம்..சரி தான். கேட்கலாமே? என்று அறையை கை காட்ட, அவளும் வெளியே வந்தாள்.

குர்தியுடன் தலையை விரித்து முன் இரு பக்கமும் கிளிப் மாட்டி அவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள். ஆதேஷ் ஆவென அவளை பார்த்தான்.

மகனே, வாய்க்குள் ஏதும் சென்று விடாமல் அவன் அப்பா கிண்டல் செய்ய, அவன் பார்வை ஜானுவை விட்டு அகலாதிருக்க,

டேய்..மகனே..போதும்டா சைட் அடிச்சது.

டாட்..என்று அவரை முறைத்தான். மாம்..உங்ககிட்டயும் ஏதும் சொல்லி வைச்சிருக்காங்களா?

நாங்கள் தற்பொழுது முதலாய் சந்தித்த அன்றே சொல்லிட்டாளே?

டாட்..

எஸ் மை பாய் என்று ஜானுவை பார்த்து, அழகா இருக்கம்மா என்றார். அவள் அழுது சோர்வாகி இருப்பாள். அவள் அவர் காலில் விழுந்து ஆசி பெற, நல்லா இரும்மா என்றார்.

அவர் அருகே அமர்ந்து, அங்கிள் எனக்கு போன் தாரீங்களா? புவியிடம் சொல்லாமல் வந்துட்டேன். அவள் கோபமா இருப்பா.

ஜானு..புவியிடம் மாமா சாரை பற்றி ஏதும் கேட்காதே? ரெண்டு பேருக்கும் பிரச்சனை என்றான் ஆதேஷ்.

என்ன ஆச்சு மாமா? அண்ணா தான பிரச்சனை பண்றான் என்று கேட்க, ஆதேஷிற்கு அர்ஜூனிடமிருந்து போன் வந்தது.

ஆமாம் ஜானு. நான் சொல்றேன் ஒரு நிமிஷம் என்று அர்ஜூன் போனை எடுத்தான்.

அண்ணா..சொல்லுங்க?

ஆது, எங்களுக்கு ஒரு உதவி வேண்டுமே?

உங்களுக்கா? வேறு யாருக்கு?

தாரிகாவுக்கு.

அவளுக்கென்ன?

என்னடா இப்படி கேக்குற?

நிவி அன்று பேசியது போல் நீ பேசணும்.

அவன் என்ன பேசினான்? நான் என்ன பேசணும்? யாரிடம் பேசணும்?

கவினிடம்.

சீனியரிடமா? நான் என்ன? யோசித்தவன். அண்ணா அப்ப அஞ்சனா ஆன்ட்டி சும்மா தான் சொன்னாங்களா? தாரிக்கு கல்யாணமெல்லாம் இல்லை. நீங்க என்ன திட்டம் பண்றீங்க?

ஜானு முகம் மாறியது. அதை பார்த்த ஆதேஷ் அப்பா..வா ஜானும்மா, நாம சாப்பிடலாம்.

அங்கிள். என்னோட புவிக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். மாமாவிடம் பேசிட்டு வந்திடுறேன்.

அவன் இனி தாரியை சந்தேகமா பார்க்கவே கூடாது. அவனுடைய வார்த்தைகளையும் அடக்கி வைக்கணும். அதுக்கு..அர்ஜூன் இழுக்க,

அதுக்கு..என்னண்ணா, சீனியரிடம் என்னை பலிகாடாக்க போறீங்களா? ஏற்கனவே வாங்கிய அடியே இன்னும் சரியாகல. இதுல உங்க அன்பு தங்கைகிட்ட பேசுனேன்னு தெரிஞ்சா என்னோட கை காலி.

அதெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டான்டா.

அண்ணா. அவர் என்னிடம் தாரிகாவை சமாதானப்படுத்த ஐடியா கேட்டாரு. நானே அதுலயிருந்து தப்பிச்சு வந்தா. நீங்க என்னையே காலி செய்ய பாக்குறீங்க? இது நியாயமா அண்ணா?

தாரிகா போனை பிடுங்கி, ஏன்டா உன்னோட ப்ரெண்டுக்காக இதை கூட செய்ய மாட்டாயா?

ஓய்..ஒழுங்கா போனை வச்சிரு. நான் வந்தேன். உன்னை கொல்லாம விட மாட்டேன். நான் எவ்வளவு சீரியசா துருவனோட பிளான் பண்ணா? என்னை கிண்டலா பண்ற? உன்னோட சேர்ந்து அந்த பய குமாரன் பேர் நெஞ்சுக்குள்ளவே ஒட்டிக்கிடுச்சு. ஆனால் நீ என்னை திட்டுற? என்னால ஏதும் செய்ய முடியாது.

டேய்..வாரியா? வரலையா? அர்ஜூன் கேட்க, அண்ணா நீங்க தலைகீழா நின்னாலும் என்னால முடியாது. அவ காதலை அவளே பார்த்துக்கட்டும்.

சரி தாரி. அவன விடு. உனக்கு ஒரு விசயம் சொல்லவா? ஜானுவும் துருவனும் ரொம்ப நெருக்கம். ரெண்டு பேரும் பேசாம இருக்கவே மாட்டாங்க. அவனை புவி வேண்டாம்ன்னு சொன்ன பின் ஜானு தான் அவன் பக்கத்திலே இருந்தா. பாவம்ல துரு. அவனுக்கு ஜானு பொருத்தமா இருப்பால அர்ஜூன் கூற,

நோ..என்று கத்தினான் ஆதேஷ். அர்ஜூனும் தாரிகாவும் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆதேஷ் வீட்டில் ஜானு, அவன் அப்பா ஏதோவென்று பயந்து அவனிடம் வந்தனர்.

தம்பி,..என்னாச்சுப்பா? என்று தோசைக்கரண்டியுடன் வசந்தி வெளியே வந்தார்.

போனை துண்டித்து ஆதேஷ் ஜானுவிடம் நீ புவியிடம் பேசப்போகிறாயா? இல்லை துருவனிடம் பேசப் போகிறாயா? கேட்டான்.

மாமா..உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க தான் தீனா அண்ணா, புவி பத்தி சொல்றேன்னு சொன்னீங்க?

எதுவும் பிரச்சனையா? யாருக்கும் ஏதும் ஆகிவிட்டதா? என்று ஜானு பதற, அவன் மூச்சை இழுத்து விட்டு, ஒன்றுமில்லை ஜானு என்று அமர்ந்து ஜானுவிடம் தீனா தருண் பற்றி கூற,

என்ன கொழுப்பு அவனுக்கு? அதுக்குள்ள பிரேக் அப் பண்ணுவானா? மாமா..போனை கொடுங்க. முதல்ல அவனிடம் பேசலாம்.

அய்யோ ஜானு, அதெல்லாம் மாமா சாரே புவியை சமாதானப்படுத்திக் கொள்வார். நீ இப்ப சாப்பிடு. புவியிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நெஞ்சை பிடித்து அமர்ந்தான்.

இப்பொழுது அர்ஜூன் மீண்டும் போன் செய்ய, அண்ணா..ஏன் சாவடிக்கிறீங்க? போனை அணைத்தான். ஜானுவும் ஆதேஷ் அப்பாவும் அவனை புரியாமல் பார்த்தனர்.

அவர்கள் சாப்பிட்டு சென்றவுடன் ஆதேஷ் உணவை முடித்து விட்டு துருவிடம் கேட்டு விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

வசந்தி அவனருகே வந்து, தம்பி..சின்னம்மா உங்க அறைக்கு வந்தாங்களே ஏதாவது நடந்ததா?

என்ன? என்று திகைத்து அவன் கேட்க, இல்ல தம்பி உங்க அறைக்கு சென்று வந்த பின் சின்னம்மா முகமே வாடி இருந்தது.

என்ன? இல்லையே. ஒன்றுமே நடக்கலையே? ஆதேஷ் கூற,

ஏன் தம்பி உங்க பொருட்களை சின்னம்மா பார்த்தாங்களா?

என்ன பொருள்? என்று எனக்கு ஆடை எடுத்து தர சொன்னேன். எடுத்து தந்தாள். டீ குடித்த கப்பை எடுத்து சென்றாள்.

தம்பி, அவங்க கப்ப எடுத்திட்டு வரலை. நான் தான் எடுத்து வந்தேன்.

அவ எடுத்துட்டு போகலையா? என்று ஹாலில் இருந்த ஜானுவை பார்த்தான். அவள் முகம் வாடி இருந்தது.

இவளுக்கு என்ன ஆச்சு? என்று ஆதேஷ் கேட்க, உங்க ஆடை இருக்கும் இடத்தில் இருந்த போட்டோவ பார்த்திருப்பாங்க? அதனால கூட இருக்கலாம்.

அதனால எதுக்கு அவ வாடி இருக்கணும்?

தம்பி, நீங்க இன்னும் அந்த பொண்ணை தான் நினைச்சுகிட்டு இருக்கீங்களா?

இல்லையே? அவளுக்கு தான் ஆள் இருக்கே.

அவனிடம் வந்த அவன் அப்பா அர்ஜூன் போனில் இருக்கிறான்.

அண்ணா..என்று போனை எடுத்த ஆதேஷ், அண்ணா என்னை விட்டிருங்க. அதான் உங்க ப்ரெண்டு சிங்கிளா இருக்காரே அவரை வைத்து நீங்க நினைக்கிறத செய்யுங்க என்று உலறினான்.

என்ன சிங்கிளா? ஆது உனக்கு ஆள் உள்ளதா? அர்ஜூன் கேட்க,

அய்யோ, உலறி விட்டோமே? என்று எண்ணிக் கொண்டிருக்க அவன் அப்பா கையை கட்டிக் கொண்டு அவனை பார்க்க, ஜானு சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சொல்லு ஆது? தாரிகாவும் கேட்க,

தாரி வாய மூடு. அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து ஏன் என் உசுற வாங்குறீங்க? கைரவ் சீனியரை வைச்சு என்னமும் செய்யுங்க.

ஆது, எப்ப கிராமத்து பாஷையெல்லாம் கத்துக்கிட்ட? கேலி செய்தாள்.

ஏய்..தாரி, என்னை கொலைகாரனாக்காதே.

அண்ணா..அவன் என்னை மிரட்டுறான் என்று தாரிகா அர்ஜூனிடம் கிண்டலாக கூற,

ஆது நீ என்னோட தங்கையவே மிரட்டுறியா?

அய்யோ..அண்ணா. உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் தான் மாட்டினேனா? என்னை விட்டுருங்க. டாட் என்னையே கவனித்துக் கொண்டிருக்கிறார். நல்லா மாட்டி விட்டுடீங்க. தாரி..உன்னை நான் பழி வாங்காம விட மாட்டேன் பார்.

தம்பி, முதல்ல உன்னோட டாடுக்கு பதில சொல்றா? அப்புறம் பழி வாங்கலாம் தாரிகாவும் கேலி செய்ய, இனி யாராவது உதவின்னு போடுங்கடா அப்புறம் வச்சுக்கிறேன் என்று போனை துண்டித்தான்.

அவன் போனை பேசி விட்டு, டாட் எனக்கு ஒரு முக்கியமான வேலை உள்ளது ஆதேஷ் நழுவ முயற்சிக்க, ஆது நில்லு என்றார்.

நோ..டாட் என்று திரும்பி பார்க்காமல் சென்ற ஆதேஷ் வசந்தி சொன்னதை யோசித்து, அக்கா நாம பேசிக்கிட்டு இருந்தோம்ல. புகைப்படத்தை பற்றி தானே சொன்னீங்க? அதன் பின் ஜானு முகம் வாடியதா? என்று அவளை பார்த்தவனுக்கு, ஜானு நீ பொறாமைப்படுகிறாயா? என்று வேகமாக மாடி ஏறி அவனறைக்கு விரைந்தான்.

எதுக்கு இப்படி ஓடுகிறான்? அவர் கேட்க, வசந்தி ஆதுவையும் ஜானுவையும் கண்ணை காண்பித்தார்.

ஜானு எழுந்து வந்து, மாமாவுக்கு ஏதும் பிரச்சனையா? கேட்டாள்.

இருக்குமோ? என்று வசந்தி கூற,

இருக்குமோவா? கண்டிப்பா ஏதோ இருக்கு. காலையில இருந்து கொஞ்சம் அதிக ஆற்றலுடன் தான் இருக்கான் என்று ஆதேஷ் அப்பா கூறினார்.

அப்படியா? அங்கிள் மாமாவுக்கு பெரிய பிரச்சனையா?

தெரியலம்மா. நீ போகாதம்மா. கோபப்படுவான் என்றார். ஜானுவை ஆதேஷ் அறைக்கு அனுப்ப அவர் எடுக்கும் முயற்சி என்று அறிந்த வசந்தி,

ஆனால் அய்யா, தம்பி டென்சனா போயிருக்காரு. ஏதாவது செய்து கொண்டால் என்று அவர் பதறுவது போல் நடிக்க,

என்ன சொல்றீங்க அக்கா? ஜானு பதறினாள்.

ஆமாம்மா. அந்த பொண்ணு. அதான் தம்பி காதலிச்சாரே அந்த பொண்ணு அவரை வேண்டாம்னு சொன்னப்ப எப்படி தவித்து போனார் தெரியுமா? ரொம்ப கஷ்டப்பட்டுச்சு தம்பி. சரியா சாப்பிடாம தூங்காம என்று அவர் சொல்ல,

போதுங்கா. இதுக்கு மேல சொல்லாதீங்க. நான் மாமாவை பார்த்துட்டு வாரேன் அங்கிள். அவர் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று ஜானு சொல்லி விட்டு ஆதேஷ் அறைக்கு சென்றாள்.

ஆதேஷ் அவனறைக்கு வந்தவுடன் கப் இருந்த இடத்தை பார்த்தான். அங்கும் அவர்களுடைய புகைப்படம் இருக்க, அவன் அப்பாவும், வசந்தி அக்கா பேசியதையும் நினைத்து, ஜானுவுக்கும் என்னை பிடிக்குமா? என்று மகிழ்ச்சியுடன் தாரிகாவுடன் எடுத்த புகைப்படத்தை கிழித்து, ஜானுவுடன் அவன் எடுத்த புகைப்படத்தை அவனது பர்ஸில் எடுத்து அவ்விடத்தில் ஒட்டினான்.

எங்கே தாரிகா போல் ஜானுவும் தன்னை பிடிக்காது என்று கூறி விடுவாளோ என்று பயந்து தான் அவளிடம் காதலை கூறி இருக்க மாட்டான்.

ஆதேஷ் அறை கதவை தட்டி, மாமா..என்ன செய்றீங்க? கதவை திறங்க? பதற்றத்துடன் கத்தினாள்.

அவன் அவள் பதற்றத்தை கேட்டு ஜானு உன்னை.. என்று புன்னகையுடன், நீ போ ஜானு என்று கவலையான குரலாக மாற்றி பதில் கொடுக்க,

மாமா நீங்க கதவை திறங்க..அப்புறம் பேசிக்கலாம் என்றாள்.

வசந்தி அக்கா..தம்பிக்கு சின்னம்மாவை பிடிச்சிருக்கு அய்யா. அம்மாவும் நீங்களும் நினைச்சபடி எல்லாமே நடக்கப்போகுது.

ம்ம்..நடந்தால் நல்லது தான். அவன் அந்த பொண்ணை முழுசா மறக்கணுமே?

தம்பியை பார்த்தாலே தெரிகிறது. கண்டிப்பா அந்த பொண்ணை மறந்திருப்பார்.

பார்ப்போம் என்றார் ஆதேஷ் அப்பா.

இல்ல ஜானு. நீ போ..

மாமா..கதவை திறங்க இல்லை. உங்கள் அறை சன்னல் வழியே குதித்து உள்ளே வருவேன்.

அவன் சிரித்துக் கொண்டு கதவை திறந்து சோகமாக முகத்தை வைத்திருக்க, மாமா உங்களுக்கு ஒன்றுமில்லையே என்று அவனை சுற்றி சுற்றி வந்தாள்.

அவன் முகத்தில் நிறைய அடிபட்டிருக்கும். அதற்கு மருந்து கூட போட்டிருக்க மாட்டான்.

மாமா..நீங்க எப்ப குளிச்சீங்க? மருந்து போடலையா?

அவன் மௌனம் காக்க, இருங்க வாரேன் என்று அவளறைக்கு சென்று சில மருந்துகளை எடுத்து வந்து, அவனை உட்கார வைத்து ஜானு போட்டு விட ஆதேஷ் ஜானுவையே கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

ரொம்ப வலிக்குதா மாமா?

ஜானு..வலிக்குது ஜானு. இங்க என்று அவன் இதயத்தை காட்ட, அவள் கைகள் நின்று அவனை ஒரு முறை பார்த்து விட்டு தலையை கவிழ்ந்து கொண்டே போட்டு விட்டாள்.

அவன் அவளது தாடையை பிடித்து நிமிர்த்த, அவள் கண்ணிலிருந்து நீர் சொட்டிக் கொண்டே இருந்தது.

வேகமாக விலகி மாமா, நான் அப்புறம் வாரேன் என்று அவள் வாசற்பக்கம் செல்ல, ஆதேஷ் அவள் முன் வந்து அவனது காலை வைத்து அறைக்கதவை மூடினான்.

மா..மா..என்று தடுமாறினாள் ஜானு.

ஜானு, என்னை பார் என்று அவளை நிமிர்த்த ஜானு ஓடுவதிலே இருந்தாள். அவனை பார்க்க முடியாமல் மாமா..கதவை திறங்க. நான் போகணும்.

அவளை அவன் பக்கம் திருப்பி அவளது கண்ணீரை தொட்டு அவளிடம் காண்பித்து, எதுக்கு ஜானு? என்று கேட்டான்.

மாமா..என்று வாயை அழுவது போல் வைத்து, மாமா கதவை திறங்க ப்ளீஸ் என்று கெஞ்சினாள். அவளது கண்ணீரை துடைத்து விட்டு, ஜானு கண்ணை மூடி அதே ஆடைகள் உள்ள இடத்திற்குள் அழைத்து சென்றான்.

மாமா..என்ன செய்றீங்க?

அவன் கையை எடுக்க, அந்த இடத்தில் இவர்கள் இருவரது புகைப்படத்தை பார்த்து திகைத்து, மாமா..நீங்க? இங்க..என்று திணறினாள்.

ஏன் ஜானு? உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிட்ட. என்னிடம் கேட்டு இருக்கலாமே?

மாமா..என்று அழுதாள். அவன் அவளை அணைத்துக் கொண்டு, அவளை பார்த்து முதலாய் அவனது சிரிப்பு, அவனுக்கு ஆதரவாய் கல்லூரியில் வைத்து அணைத்தது. புவிக்காக அவள் கஷ்டப்பட்டது. அவளது அண்ணாவுடனான பிரச்சனை, சாம்சங்கிடம் பேசியது. இருவரும் சேற்றில் விழுந்தது. கடைசியாக அவளை மணக்கோலத்தில் பார்த்து அவனையே தொலைத்தது. இந்த குர்திலும் அவளை ரசித்தது என்று அவன் கூற, அவள் அழுது கொண்டு அவனை இறுக்கி அணைத்து, ரொம்ப தேங்க்ஸ் மாமா..

அவளை விலக்கி, நீ என்ன சொன்ன?

தேங்க்ஸ்.

தேங்க்ஸா. உனக்கு நான் சொல்றது புரியுதா? இல்லையா?

புரியுது மாமா.

என்ன புரியுது?

உங்களுக்கும் என்னை பிடிக்கும் தான.

உனக்கு என்னை பிடிக்க மட்டும் தான் செய்யுமா?

ஏன் மாமா? நீங்க வேரேதும் சொல்லலையே?

நான் சொல்லலையா? அவன் சிந்தித்து,” ஐ லவ் யூ ராட்ச்சசி” என்றான்.

“ஐ லவ் யூ என் மூளையில்லாத மாமா” என்று ஆதேஷ் கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஆதேஷ் அவளை அணைத்துக் கொண்டே நாற்காலியில் அமர்ந்து, அவளை மடியில் அமர்த்தி கட்டிக் கொண்டு, ஜானு..நீ எனக்கு இன்று போல் தினமும் டீ போட்டு தருவாயா?

கண்டிப்பா செய்கிறேன் மாமா.

இன்று போல்.

என்ன? இன்று போல் என்று யோசனையோடு அவன் முகத்தை பார்த்தாள்.

ஜானு..உன்னோட உதடு இனிப்பா இருக்கே. எனக்கு சுகரே வேண்டாம்.

என்ன சொல்றீங்க?

நீ குடித்த டீ இனிப்பா இருக்குன்னு சொன்னேன்.

மாமா.. நீங்க என்னோட டீ நல்லா இல்லைன்னு சும்மா தான் சொன்னீங்களா?

இல்லையே..அப்புறம் சொன்னேனே? என்று அவளது உதட்டை பார்த்தான்.

மாமா..என்று ஜானு அவனை அடித்துக் கொண்டே சிரிக்க, அவனும் சிரித்தான்.

மாமா..உங்களுக்கு ரொம்ப வலிக்குதா மாமா? என்று அவனது நெற்றியை தடவ, நீ பக்கத்துல இருந்தா நான் சாவ கூட தயார் தான்.

மாமா..என்ன பேசுறீங்க? என்று அவனது வாயிலே அடித்தாள்.

ஜானு..நான் தாரி புகைப்படம் அங்கு இருப்பதையே மறந்துட்டேன். வசந்தி அக்கா சொன்ன பின் தான் நினைவுக்கே வந்தது.

நம்ம காதலை மாம், டாட் ஏத்துப்பாங்க. ஆனால் மாமா ஏத்துப்பாங்களா ஜானு? மாமாவுக்கு என்னை பிடிக்குமா ஜானு? ஆதேஷ் கேட்டான்.

ப்ளீஸ் மாமா. அண்ணா பற்றி பேச வேண்டாமே?

புரிஞ்சுக்கோ ஜானு. மாமாவுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா?

அவள் பேச வர, அவளது வாயில் கை வைத்து, துகிய தான சொல்ற?

அவள இப்ப தான் மாமாவுக்கு தெரியும். என்ன தான் மாமா உன்னுடன் ஒரு அண்ணா போல் பழகவில்லை என்றாலும் அவர் உனக்காக மட்டும் தான் வாழ்ந்தார். அவர் உன்னிடம் மட்டுமல்ல ஜானு யாரிடமும் பேசுவதில்லை. தேவையான நேரத்தில் மட்டும் தான் பேசுகிறார்.

நீயே யோசிச்சு பார். அவரும் குடும்பமா தான் இருந்தார். திடீர்ன்னு உன்னோட அம்மா, அப்பா இழப்பு..என்று அவன் கூறும் போதே நிறுத்தினான். ஜானுவின் பெற்றோரை கொலை செய்திருக்கிறார்கள் என்று தான் அவனுக்கும் தெரியுமே? ஆதேஷ் கண்கள் கலங்க, ஜானு அவனை பார்த்தாள்.

மாமா..என்னாச்சு?

ஒன்றுமில்லை என்று அவர்கள் சென்ற பின் தனியா இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். அவங்கள தினமும் நினைச்சுக்கிட்டு இருந்திருப்பார்ல. அதிலும் இவ்வளவு தூரம் வளர்ந்து உன்னை பாதுகாப்பா பார்த்துகிட்டு இருந்திருக்கார் என்று கட்டுப்படுத்த முடியாமல் ஆதேஷ் அழுதான்.

மாமா..எதுக்கு அழுறீங்க? மாமா..மாமா..

ஜா..ஜானு. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கவா?

மாமா..அண்ணாவுக்கு ஒன்றுமில்லை தானே?

இல்லம்மா. நீ கிளம்பு. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கிறேன்.

சரி மாமா. நீங்க ஓய்வெடுங்க என்று அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

சாரி ஜானு. உங்கிட்ட எனக்கு உண்மைய சொல்ல தைரியமில்லை மனதினுள் நினைத்த ஆதேஷ் ஜானுவை இறுக அணைத்தான்.

அவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. ஆனால் எதுவும் கேட்காமல் நீங்க ஓய்வெடுங்க மாமா என்று அவனை படுக்க வைத்து விட்டு அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.