அத்தியாயம் 35
ஸ்ரீயை நிமிர்த்தி பார்க்க, அவரும் வெளியே வந்தான். அவன் அம்மாவையும் பார்த்து, எதுக்கு அழுற ஸ்ரீ? சினத்துடன் கேட்டான். அவர் கமலியை அடிக்கடி சந்திப்பவர் என்று அவனுக்கு தெரியும். அவன் தவறாக புரிந்து கொண்டு,
அம்மா..என்ன பண்ணீங்க? கேட்டான். ஸ்ரீ சட்டென திரும்பி கமலியை பார்த்தாள். அவரும் அப்பொழுது தான் கமலியை கவனித்தார்.
தம்பி, நீங்க நினைக்கிற மாதிரி ஏதுமில்லை என்று பதறினார் அவர்.
ஸ்ரீயை விடுத்து அவரிடம் வந்தான் அர்ஜூன். ஏதுமில்லைன்னா எதுக்கு பதறணும்? அவரை முறைத்து கொண்டே கேட்டான்.
அர்ஜூன்..ஸ்ரீ அழைக்க, இரு பேசிக்கிட்டு இருக்கேன்ல அவளிடமும் சத்தமிட்டான்.
நிஜமாகவே ஏதுமில்லை அவர் கூற, இருக்கு அர்ஜூன் ஸ்ரீ கூற, மூவரும் அவளை பார்த்தனர்.
என்னோட அம்மா என்ன சொன்னாங்க? இவர் என்ன பேசினார்? கேட்டான்.
அர்ஜூன் அவர் அப்பாவை பற்றி பேசினாரா? எனக்கு அப்பா நினைவு வந்து பார்க்கணும் போல இருந்தது. அதான் அழுதேன் என்றாள்.
என்ன சொன்னீங்க? அவன் கேட்க,
அப்பாவை பற்றி கூறியதை பற்றி கூறி அழுது கொண்டே பதிலளித்தாள்.
இதுக்கா அழுற? அவன் சந்தேகமாக கேட்க,
ஆமா..அப்பாவை ஏமாத்திருக்காங்க. சொந்த தங்கையே ஏமாற்றி இருக்காங்க. அவர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்ல என்று மீண்டும் அழுதாள். காரணம் ஏதோ சொன்னாலும் அவள் அவளது பெற்றோர்களை மிஸ் பண்ணுவது தெரிந்தது மற்றவர்களுக்கு.
ஆனால் அர்ஜூன் கோபமாக, உங்களுக்கு இங்க என்ன வேலை? கேட்க, அர்ஜூன் ஆன்ட்டி தண்ணீர் கேட்டாங்க. நான் தான் அப்பா நினைவில் கவனிக்காமல் விட்டுட்டேன்.
சாரி ஆன்ட்டி என்று வேகமாக உள்ளே சென்று எடுத்து வந்து கமலி முன் வந்து, ஆன்ட்டி இப்ப போங்க. நாம அப்புறம் பேசலாம் என்று அவரிடம் சத்தமில்லாமல் உதட்டசைவில் கூறினாள்.
தண்ணிய கொடுக்க இவ்வளவு நேரமா? அர்ஜூன் கேட்க தண்ணீர் அவர் மீது பட்டு விட,
சாரி ஆன்ட்டி..சாரி ஆன்ட்டி..வாங்க உங்களுக்கு ஆடை எடுத்து தாரேன் என்று அர்ஜூனை பார்த்தாள்.
எதுக்கு இப்ப இப்படி பதறுற ஏஞ்சல்? அவன் கேட்டுக் கொண்டே அவன் அம்மாவை பார்த்தான். அவரும் அவனை தான் பார்த்தார். அவருக்கு அர்ஜூன் ஸ்ரீயை அப்படி கூப்பிடுவது பிடிக்காதே? அவன் அதனால் அவரை கவனிக்க, அவர் ஸ்ரீயை பார்த்தான்.
டேய்..போடா என்று அவனை தள்ளி விட்டு, வாங்க ஆன்ட்டி என்று அவள் அழைக்க,
அவங்க எடுத்துப்பாங்க. அங்க போய் எடுத்துக்கோங்க என்று அவளை பிடித்து இழுத்தான்.
அர்ஜூன்..விடு அவள் கூற, கமலி அமைதியாகவே இருவரையும் கவனித்தார். அவர் அங்கிருந்து புன்னகையுடன் சென்றார்.
ப்ளீஸ் அர்ஜூன். நான் எடுத்து கொடுத்துட்டு வந்துடுறேன்.
ஓ.கே. ஆனால் நான் உன்னிடம் பேசணும். இங்கேயே வா. நான் காத்திருக்கிறேன் என்றான். அவள் தயங்கியவாறு தலையசைத்தாள்.
அறைக்குள் அழைத்து சென்ற ஸ்ரீ,..சொல்லுங்க ஆன்ட்டி என்றாள்.
அவருக்கு என்ன பேசவென்று புரியாது இருந்தவர். உனக்கு அகிலை பிடிக்குமா?
அவள் புன்னகையுடன், ம்ம்..பிடிக்கும். இருவரும் ஒரே வீட்டில் இருந்ததால் உள்ள ஈர்ப்பு. நான் முதலில் அவனை தான் காதலிக்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எங்களுக்குள் ஏதோ நடந்துள்ளது. ஆனால் அவனிடம் விலகி இருந்தது போல் நினைவுகள். அர்ஜூன் முகம் தான் கண்முன் வந்து வந்து செல்கிறது. வேறெதுவும் எனக்கு நினைவில்லை ஆன்ட்டி. நானும் நினைவு படுத்த முயற்சி செய்தேன். ஆனால் தலைவலியில் மயங்கி விடுகிறேன் என்றாள்.
ஆனால் இப்பொழுதும் அகில் சீனியரை பார்த்து அதே போல் தான் நினைத்தேன். ஆனால் அர்ஜூனை பார்த்த பின் சில நினைவுகள் என்று அவள் கண்கள் கலங்கியது.
ஏன், அவனை கஷ்டப்படுத்தியது நினைவுக்கு வந்ததா? கமலி கேட்க, சாரி ஆன்ட்டி என்றாள்.
நாம சந்தித்து ஐந்து நிமிடங்கள் கூட இல்லை. ஆனால் மூன்று முறை சாரி சொல்லிட்ட. நீ இப்படி இருக்கவே மாட்டாயே?
அர்ஜூனிடம் காதலை சொன்னியா?
ஆன்ட்டி, நான் எப்படி சொல்லுவேன்?
ஏன் என்னிடம் உள்ள ஒப்பந்தம் தடுக்குதோ?
இல்ல ஆன்ட்டி, நீங்க சொன்ன மாதிரி அவனுக்கு நான் பொருத்தமில்லை. நான் தகுதியில்லாதவள் என்று அவள் அழ,
ஏன் நீ அழுது கொண்டே இருக்கிறாய்?
ஆன்ட்டி, வேற ஏதாவது பேசணுமா? கேட்டாள் ஸ்ரீ.
ஏன் அவனை பார்க்க போகணுமா?
ஆமாம் ஆன்ட்டி. அவனுக்கு உங்க மீது தான் சந்தேகம் வரும்.
நீ போ என்று அவர் கூற, அவள் உள்ளே அழைத்து சென்று புடவையை காட்டி விட்டு, இது உங்களுக்கு அழகா இருக்கும் என்று வேண்டுமென்றே கூற, அவர் அவளையே பார்த்தார்.
அவர் தான் இருவரும் பேசியதை கேட்டிருப்பாரே?
ஆன்ட்டி, நீங்க மாத்திட்டு வாங்க என்று வெளியே வந்து பெருமூச்செடுத்து விட்டாள்.
அர்ஜூன் கையை கட்டிக் கொண்டு அவர்கள் சென்ற கதவை பார்த்தபடியே நின்றான். அவள் இப்படி வருவதை பார்த்து அவளை இழுத்துக் கொண்டு சமையற்கட்டினுள் சென்றான்.
அர்ஜூன் விடு. யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.
எனக்கு எந்த பிரச்சனையுமில்லை அவன் கூற, நடந்தவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லலிதாவும் தாரிகாவும் சமையற்கட்டிற்கு வெளியே நின்று எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்ன சொன்னாங்க ஸ்ரீ?
அர்ஜூன், உன்னோட அம்மா சோ..க்யூட். என்னிடம் என் அப்பாவை பற்றி பெருமையாக பேசினாங்க. எனக்கு ஆறுதல் சொன்னாங்க.
அர்ஜூன் நம்பவே இல்லை. என்னோட அம்மா..வாய்ப்பே இல்லை. அவங்களுக்கு என்னை சமாதானப்படுத்தவே தெரியாது. உன்னிடம் பேசினாங்களா? பொய் சொல்லாதே?
நம்பமாட்டேல. நீ என்னை நம்பலைல்ல. போ..நான் போகிறேன்.
அது எப்படி போக முடியும்? அவர் என்ன சொன்னார்?
அர்ஜூன் என்னை யாரும் ஏதும் சொல்லவில்லை. நான் ஓ.கே தான்.
இல்லை..
ஏன்டா..நம்பவே மாட்டிக்கிற? என்று செல்லமாக அவனை அடித்தாள்.
இதுக்கு மேல அடிச்ச? உன்னை கிஸ் பண்ணிடுவேன்.
அவனையே பார்த்த ஸ்ரீ கண்கள் கலங்க, அவளாகவே அவன் மீது சாய்ந்து அழுதாள்.
ஸ்ரீ? அவளை குனிந்து பார்த்தான்.
என்னடா இப்படி ஆகிடுச்சு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன். அனுவை எப்படி சமாளிக்கிறது? இரவு அக்காவுடன் இருப்பாள். திடீர்ன்னு தேடுனா என்ன பண்றது?
அவள் அழுகை அதிகமாக, நாம் தான் பார்த்துக்கணும் ஸ்ரீ.
சொல்றது ஈசிடா? எனக்கே அடிக்கடி அம்மா அப்பா நினைவாவே இருக்கு. அவ சின்ன பொண்ணுடா? ரொம்ப கஷ்டப்படுவா அக்காவை பார்க்க முடியாமல் என்று அவனை அணைத்து தேம்பி தேம்பி அழுதாள். அவனும் அவளை அணைத்து அழுதான்.
அவனிடமிருந்து பிரிந்த ஸ்ரீ, கண்ணை துடைத்து விட்டு வா..போகலாம் என்று அழைத்தாள்.
ஸ்ரீ நீ போ வாரேன் என்று அவன் கூற, ஏன் அர்ஜூன்? அவனருகே அமர்ந்தாள்.
கமலியும் இவர்களை தாரிகாவுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவ்வப்போது கமலியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
இங்க என்ன பண்றீங்க? ஆதேஷ் கேட்க, தாரிகா அவன் வாயை பொத்தி பக்கத்து அறைக்கு அழைத்து சென்றாள். வினிதாவின் அறை.
ஆதேஷ் சத்தம் கேட்டு இருவரும் எழுந்தனர். ஆதேஷா? அர்ஜூன் வெளியே வர, யாருமில்லை.
வினிதா அறையில் அனு பிறந்தநாளன்று அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள். அர்ஜூன் அனுவுடன் எடுத்தது. வினிதாவுடன் எடுத்தது என்று இருந்தது. எல்லா புகைப்படத்திலும் அர்ஜூன் முகத்தில் அவ்வளவு சந்தோசம் வெளிப்படையாக தெரிந்தது.
கமலி அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்க, தாரிகா அழ ஆரம்பித்தாள். லலிதா அவளை அணைத்துக் கொள்ள ஆதேஷ் வெளியே சென்றான்.
கமலி பாதத்தில் வந்து விழுந்தது ஒரு புகைப்படம். அதில் அன்றி இரவு அர்ஜூன், அனு, ஸ்ரீ தனி அறையில் இருந்த போது எடுத்த புகைப்படம். அவர்களுக்கு தெரியாமலே எடுத்திருந்தார் வினிதா. ஸ்ரீ மார்பில் அனு தூங்கியவாறு அவள் மடியில் அர்ஜூன் தூங்குவது. ஸ்ரீ கண்ணீருடன் அவன் தலையில் கை வைத்தபடி இருந்தது. அதை பின்னே திருப்பி பார்த்தார்.
பெர்ஃபைக்ட் ஜோடி என்றும் கமலி மேம் இது உங்களுக்காக என்று எழுதி இருந்தது. அது இருந்த இடத்தை பார்த்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது.
அழுகை சத்தம் கேட்டு ஸ்ரீயும் அர்ஜூனும் உள்ளே வந்தனர். கவினும் வந்திருப்பான். அவன் வெளியே இருந்து தாரிகாவை பார்த்தான்.
அண்ணா..என்று அர்ஜூனை கட்டிக் கொண்டு, அவங்க ஏன்டா இப்படி பண்ணாங்க? என்று அழுதாள். அர்ஜூனும் ஸ்ரீயும் புகைப்படத்தை பார்த்தனர். இருவரும் அங்கு இருக்க முடியாமல் வெளியேறினார்கள் அழுது கொண்டே. ஸ்ரீயும் தாரிகாவும் புகைப்படத்தை வினிதா மீது வைக்க, நித்தி, யாசு, அபி, அகில் ரொம்ப எமோஸ்னலா அழுதாங்க. அர்ஜூன் ஓரமாக அமர்ந்து தலையை காலுக்குள் விட்டு கொண்டு அழுது கரைந்தான்.
வினிதா அறையில் இருந்த லலிதா, என்னடி அது? என்று கமலியிடமிருந்து கடிதத்தை பிடுங்கினார். கமலி அவரை முறைத்துக் கொண்டே அவரிடம் பிடுங்கி கட்டிலில் அமர்ந்து கடிதத்தை பிரித்தார்.
மேம், நானும் என்னோட பொண்ணும் உங்க பையன் வாழ்வில் வந்து தொந்தரவா இருக்கோம் என்று எனக்கு புரியுது. என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரி என்று யாருமில்லை. ஆனால் அவர் சென்ற பின் அர்ஜூன் துணையா இருந்தப்ப..ஏதோ அவன் மட்டும் தான் எனக்கு சொந்தமென்று தோன்றியது. அது உண்மைதான். அவரை தவிர எனக்கென்று யாருமில்லை. அர்ஜூன் எங்களுடன் துணைக்கு இருந்ததால் தான் நாங்கள் உயிரோட இருந்தோம்.
அவனை தொந்தரவு செய்ய நான் நினைக்கவில்லை. இவ்வளவு சொத்துக்கும் ஒரே வாரிசு அனு தான். கண்டிப்பா அவளை கொல்ல நினைப்பாங்க இல்லை கஷ்டப்படுத்துவாங்க. எனக்கு இருக்கும் நம்பிக்கையான ஆள் அர்ஜூன் தான். அனுவும் அவனுடன் நினைத்ததை பேசுவாள். நான் இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவேன். அதனால் அனைத்தையும் அர்ஜூன் தான் பார்த்துக் கொள்ள போகிறான்.
உங்களுக்கு பிடிக்காத இன்னொன்று ஸ்ரீ. நீங்க அந்த பொண்ணை எப்படி பாக்குறீங்க? உங்களுக்கு எதுக்கு பிடிக்கலைன்னு எனக்கு தெரியாது.
அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவள் முதல்ல கோவில்ல தான் பார்த்தேன் என்று அன்று நடந்ததை சொல்லி விட்டு, அர்ஜூனுக்கு அந்த நாள் ரொம்ப சிறப்பான நாள். அர்ஜூனுக்கும் ஸ்ரீக்கும் நடந்ததை சொல்லி, அர்ஜூன் ஸ்ரீயை மனைவியாகவே பாவிக்க ஆரம்பித்து விட்டான். அவள் பக்கம் இருக்கும் போது தான் அவன் ரொம்ப சந்தோசமா இருக்கான். அந்த புகைப்படத்தை பார்த்தீங்களா?
அர்ஜூன் இந்த மாதிரி அசந்து தூங்கியதேயில்லை. கல்லூரி விடுமுறையின் போது எங்க வீட்டுல தான் இருந்தான். தூங்கவே மாட்டான். அவன் தூக்கம் மிகக் குறைவாகவே இருக்கும். ஸ்ரீயை பற்றி முன்பே எங்களிடம் பேசுவான்.
எல்லார் முன் அவன் அவளை ஸ்ரீ என்று அழைத்தாலும் அவனுக்கு ஸ்ரீ எப்போதும் ஏஞ்சல் தான். நீங்க வேற பொண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தாலும் அவனால் ஸ்ரீயை மட்டும் மறக்க முடியாது.
ஒரு வேலை வேற பொண்ணை திருமணம் செய்து வைத்தால் என் பொண்ணுக்கான முழுப்பொறுப்பையும் ஸ்ரீயிடம் கொடுத்து விடுங்கள். கண்டிப்பா நீங்க பார்க்குற பொண்ணு ஸ்ரீ மாதிரி இருக்க முடியாது. என்னோட அனுவும் கஷ்டப்படுவா.
ஸ்ரீக்கும் அர்ஜூன் என்றால் உயிர். நீங்க எதை பற்றியும் பேசாமல் கவனித்து பாருங்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியும். அர்ஜூன் ஸ்ரீ திருமணம் நடந்தால் அர்ஜூனுக்கு அம்மா கிடைப்பாங்களான்னு தெரியாது. ஆனால் உங்களுக்கு மகனாக அர்ஜூன் கிடைத்துவிடுவான். கிடைக்க வைத்து விடுவாள் ஸ்ரீ.
தயவு செய்து உங்க பையன் வாழ்க்கையையும், அந்த பொண்ணு வாழ்க்கையையும் நீங்களே கெடுத்துடாதீங்க என்று எழுதி முடித்திருந்தார்.
என்னடி செய்யப் போற? என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பிரதீப் தீனாவை வெளியே அழைத்து சென்று, ஏன்டா சொல்லலை? அந்த ஆளை விடு. புதிதாக இவன் யாரு? எல்லாருடைய பிரச்சனைக்குமே காரணம் இவன் தான்னு அர்ஜூன் சொல்றான்.
எனக்கும் தெரியாது. சொல்ல மாட்டிக்கிறான்.
நம்ம எல்லார் சம்பந்தப்பட்ட ஒருவன் என்றால் யார் அவன்? இத்தனை கொலை செய்து குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கிறான்?
டேய்..கொலைகாரனுக்கு எதுக்குடா குற்றவுணர்ச்சி இருக்கும்?
ஆமால..என்ற பிரதீப், யாராக இருக்கும்?
கண்டுபிடிச்சிடுடலாம் தீனா பேசிக் கொண்டிருக்க, இருவரையும் கண்டு கொள்ளாமல் தருண் அவர்களை தாண்டி சென்றான். இதயாவும் பின்னாலேயே வந்தாள். அவளும் அவர்களை பார்க்கவில்லை.
வெளியே வந்த தருண் வாந்தி எடுத்தான். இதயா அவனது தலையை பிடிக்க, இரு வாரேன் என்று தண்ணீர் எடுக்க சென்றாள். தீனா அவனது தலையை பிடிக்க, அவனை பார்த்த தருண் கையை தட்டி விட்டார். தண்ணீருடன் வந்த இதயா..தீனா மீது தருண் வைத்திருந்த கோபத்தை பார்த்து, தண்ணீரை தீனாவிடம் கொடுத்து விட்டு சென்றாள்.
இதயா..இரு அவன் அழைக்க, அவள் சென்று விட்டாள். தருண் தீனாவை முறைக்க பிரதீப்பும் உள்ளே சென்றான்.
தீனா தண்ணீரை கொடுக்க, அதை சினத்துடன் பிடுங்கி வாய் கொப்பளித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தான்.
என்ன மச்சான் என் மேல கோபம் போகல போல..தீனா கூற,
யாரு மச்சான்..போயா என்றான்.
நீங்க என்னிடம் பேச வேண்டாம். நீங்க கேட்டா போதும் என்று புவனாவை அழைத்தான்.
அவள் போன் எடுத்தவுடன் கத்த ஆரம்பித்தாள். எங்க இருக்கீங்க? உங்களுக்கு புல்லட் பட்டது. சிகிச்சை பண்ணதா சொல்றாங்க? அது சரியாவதற்குள் எங்க போனீங்க? ஓய்வெடுக்க வேண்டாமா? அப்படி என்ன வேலை? திட்டிக் கொண்டே போனாள்.
இந்த ஜானு எங்க போனா? என்னனென்னவோ சொல்றாங்க? அவ நம்ம ஊர்ல இல்லைன்னு சொல்றாங்க? அண்ணனுக்கும் தங்கைக்கும் பைத்தியம் பிடிச்சு போச்சு. நான் அவளிடம் பேசணும்?
புவி..என்று அழைத்தான் தருண்.
அண்ணா..நீ அவர் போனில்..அவள் தயங்க,
என்ன பண்றன்னு தெரிஞ்சுதான் பண்ணிறியா?
அண்ணா..எனக்கு அவரை பிடிக்கும்.
இல்லை..நீ தப்பா நினைக்கிற?
இல்ல அண்ணா. தெளிவா தான் இருக்கேன்.
உனக்கு தான் அவர பத்தி தெரியுமே?
அவளுக்கு அழுகை வந்தது.
என்ன மச்சான் அவ்வளவு தானா? இன்னும் முயற்சி செய்யலாமே? என்று தெனாவட்டாக பேச,
புவி நீ அழுதாலும் என்னால ஏத்துக்க முடியாது. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?
வேண்டாம்டா மச்சான். அவ அழுறா?
அழட்டும். அவ என்னோட தங்கச்சி தானே. கொஞ்ச நாள் அழுவா? ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான். சீக்கிரம் புரிஞ்சுப்பா.
ஏன் புவி வெறும் ஈர்ப்பு தானா? தீனா கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
புவி உனக்கு பிடிச்சிருந்தா? இப்பவே மறக்கணும். பிரேக் அப் பண்ணிடு.
புவி பிரேக் அப் பண்ணிடலாமா? தீனா கேட்க, அவளுக்கு ஏதோ உலகமே நின்றது போலிருந்தது.
எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க? அதற்குள் பிரேக் அப் ரொம்ப நல்லது என்று போனை துண்டித்து அழுதாள் புவி.
காவேரி அருகிலிருந்து கேட்டவர் தீனாவிற்கு போன் செய்தார்.
டேய்..என்ன பேசிக்கிட்டு இருக்க? அவளோட அண்ணா மட்டுமல்ல யார் சொன்னாலும் உன் முடிவுல தெளிவா இருக்கணும்.
அம்மா..அவன் கேட்டதற்கு அவள் மௌனமானாள்? அழுகிறாள்?
டேய்..அரை மெண்டல். அவ அமைதியா இருந்தது. அண்ணாவை எதிர்த்து நிற்கவும் கூடாது. தன் காதலும் வேண்டும் என்பதால். அவள் அழுதது பிரேக் அப் சொன்னதால். அதுவும் நீயே கேக்குற? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?
அவளிடம் போனை குடுங்க.
புள்ள உன்னிடம் பேச மாட்டாள் காவேரி கூற, அம்மா.. குடுங்க.
நான் தான் சொல்றேன்ல. புள்ள அழுதுகிட்டு இருக்கா.
தருண் போனை வாங்கி, அவ கிட்ட போனை கொடுங்க?
நீ உன்னோட அண்ணாவிடம் பேசுறியாம்மா? அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
தம்பி பேச மாட்டேன்னு புள்ள அழுது. நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்.
அவன் வருத்தமாக அமர்ந்தான். தீனாவும் திரும்ப திரும்ப போன் செய்ய, அவன் அம்மா திட்டி போனை வைத்தார்.
தருண் தனியே இருந்த கல் இருக்கையில் படுக்க தீனா அவனிடம் வர, உன்னால புவி என்னிடம் கோவிச்சிக்கிட்டா..தருண் கூற, உன்னால தான்டா மச்சான், என் புவி பேச மாட்டிங்கிறா? என்று பேசிக் கொண்டே மெதுவாக தருண் போனை எடுக்க,
போனை கொடுத்திருங்க..என்று இருவரும் விளையாட்டு போட்டி நடத்த, ஆதேஷ் அவர்கள் முன் வந்தான்.
மாமா சார், ஒண்ணு துருவனோட ஓடி பிடிச்சு விளையாடுறீங்க? இப்ப என்னோட சீனியரா? உங்களுக்கு ஜானு, துளசியே தேவலை.. என்றான் அலுப்பாக.
மாப்பிள, கோபமா இருக்கீங்களா? என்று தீனா ஆதேஷ் அருகே வந்தான்.
மாமா சார்..கோபம் மட்டுமல்ல செம்ம கடுப்புல இருக்கேன். என் பக்கம் வந்து ஏதும் பேசினா நான் இருக்கும் கோபத்தில்..சத்தமிட்டான்.
என்ன ஆச்சு இவனுக்கு? தருண் அவனை பார்க்க, சரி அதை விடுங்க ஜானு ஓ.கே வா? தீனா கேட்டான்.
இவங்கிட்ட எதுக்கு ஜானுவை கேட்கிறீங்க? தருண் தீனாவை பார்க்க, அவ இவர் வீட்ல தான் இருக்கா.
ஆதேஷ், என்ன சொல்றார்? ஜானு உன் வீட்டில் என்ன செய்கிறாள்?
என்னிடம் ஏதும் கேட்காதீங்க. நான் ஏற்கனவே என் அம்மா மீது கோபத்தில் இருக்கிறேன் என்று நகர்ந்து செல்ல, தருண் தீனாவை பார்த்தான்.
நீ எங்க காதலை ஏத்துக்கோ. நான் விளக்கமாக சொல்றேன்.
போயா..எனக்கு உன் சவகாசமே வேண்டாம். என் தங்கையை உன்னிடமெல்லாம் விட முடியாது என்று உள்ளே சென்று இதயாவை முறைத்தான்.