வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part- 2 Episode-34
136
அத்தியாயம் 34
செய்தியாளன் ஒருவன் வந்து, அந்த பொண்ணும் தானே குட்டிப் பொண்ணுக்கான கார்டியன் என்று ஸ்ரீயை காண்பித்து, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்று கேட்டான்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
எனக்கு ஸ்ரீயை பிடிக்கும். அவள் விருப்பப்பட்டால் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று அர்ஜூன் கூற, அனைவரும் அவள் பக்கம் வர அர்ஜூனும் அவள் முன் வந்து நிற்க நிவாஸ் அர்ஜூன் முன் வந்து,
இங்க என்ன நடக்குது? நீங்க எல்லாரும் எதை பற்றி பேசுறீங்க? உங்கள யார் உள்ளே விட்டது. போங்க..ப்ளீஸ் என்று அழுது கொண்டே கையெடுத்து கும்பிட்டான்.
பலர் அங்கிருந்து செல்ல சிலர் நிவாஸை பற்றி கேட்க, சைலேஷ் அவர்களிடம் எல்லாரும் கிளம்புங்க. நாங்களே ஒரு நாள் உங்களுக்கு கால் பண்ணுவோம். அப்ப வாங்க என்று அவர்களை அனுப்பினான்.
கமலி ஸ்ரீயை பார்த்தார். அப்பொழுது அங்கே அழுது கொண்டு வந்தனர் இருவர். அர்ஜூன் அவர்களை பார்த்து ஓடிச் சென்று அணைக்க, யாருக்கும் யாரென்றே தெரியவில்லை. வினிதா குடும்பத்தினர் சினத்துடன் அவர்களை பார்த்தனர்.
நேத்து நல்லா தானடா இருந்தா? இப்ப என்னடா இப்படி கிடக்கா என் புள்ளை என்று வினிதா அப்பா புலம்ப, அவரை அணைத்து அர்ஜூனும் அழுதான்.
அம்மா அம்மான்னு ரெண்டு நாளா பின்னாடியே சுத்தி தெரிஞ்சுயேடி. ஒரேடியா விட்டு போக தானா? நான் உன்னை தனியே விட்டுடேனேடி என்று மார்பில் அடித்து அழுதார் வினிதா அம்மா.
பாப்பா எழுந்து பாட்டி என்றாள்.
அனுவை பார்த்த வினிதா அம்மா..பச்ச பிள்ளைய நீ எப்படிடி விட்டுட்டு போன? என்று அவரது மகளை பிடித்துக் கொண்டு அழுதார். தாரிகாவிடம் அனுவை கொடுத்து விட்டு ஸ்ரீ அவரை அணைத்துக் கொண்டு, அம்மா..அக்கா பாப்பாவை காப்பாற்ற தான் தன் உயிரையே இழந்தார். அவங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வேற உள்ளது என்று கூறினாள்.
எல்லாம் என்னோட தப்பு தான். அவளோட காதலை நாங்க அன்றே ஏற்றிருந்தால் அவள் இப்படி போயிருக்க மாட்டாளே என்று அழுதார்.
அதெல்லாம் இல்லம்மா என்று அழுதாள் ஸ்ரீ.
நீ ஸ்ரீயா? அவர் கேட்டார்.
அவள் தலையசைக்க, உன்னை பற்றி நிறைய சொன்னா. என்னோட பேத்தியை நீ தான் பார்த்துக்கப் போறன்னு சொன்னா. அவள் இருந்த ரெண்டு நாள் அர்ஜூன் ஸ்ரீ தாரிகா நித்தி யாசு அகில் அபி கவின் அவர் கூற,
எல்லாரும் அவரை பார்த்தனர். அவர் அங்கிருந்தவர்களை பார்த்து.. எல்லாருமே இருக்கீங்க என்றார். அவ புருஷனை பத்தி கூட அவ பேசல. உங்க எல்லார் பத்தியும் பேசி கிட்டே இருந்தாள். பாப்பாவும் என்றவர் கதறி அழுதார். தாரிகா நித்தி யாசுவும் அவரை அணைத்து அழுதனர்.
அங்கு வந்த தாரிகா அம்மா, அவர்களிடம் வந்து ஸ்ரீ என்ன பண்றீங்க? பிள்ளைய இப்படி பக்கத்துல வைச்சுக்கிட்டு அழுதா. பிள்ளை பயப்படுவா. அவள் முகத்தை பாருங்கள் என்று திட்டி விட்டு அனுவை தூக்கிக் கொண்டு விறுவிறுவென வெளியே வந்தாள்.
கமலிக்கோ..தன் மகன் தன்னை விட அனைவரிடமும் நெருக்கமாக இருக்கிறானே என்று அர்ஜூனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார். லலிதா அவரது தோளில் கை வைத்தார். இருவரையும் பார்த்த ஆதேஷ், அவர்களிடம் வந்து
அந்த பாப்பா அப்பாவுக்கு என்ன நடந்தது? சொல்லுங்க மாம்.
உனக்கு தேவையில்லாததை பேசாத ஆது.
சொல்லுங்க என்றான்.
தம்பி. அதான் சொல்றாங்கள தேவையில்லாதது என்று ஒருவர் கூற, அர்ஜூன் கோபமாக எது தேவையில்லாதது? தேவையில்லாதது என்றால் எதுக்கு நீங்க வரணும்?
எனக்கு நல்லா நினைவிருக்கு. நீங்க எல்லாருமே இங்க தான் இருந்தீங்க. அவர் உயிருக்கு போராடிகிட்டு இருந்தார். யாராவது முன் வந்தீங்களா? இப்ப எதுக்கு வந்தீங்க? பிசினசை பிசினசா மட்டும் பார்க்கக் கூடாது. உங்க கம்பெனிக்கும் அவங்க கம்பெனிக்கும் தொடர்பு இருக்குன்னா.. செத்தவங்கள பார்க்க வந்தா எல்லாமே ஓ.கே ஆகிடுமா? அவங்க பிரச்சனை உங்க பிரச்சனையா நினைச்சு உதவி செய்யணும். அப்ப தான் பார்ட்னர்ஷிப் வளரும்.
அன்று நீங்க அக்காவுக்கு துணைக்கு இருந்திருந்தா இப்ப அநியாயமா அவங்க செத்துருக்க மாட்டாங்க. எனக்கு அன்று ஏதும் புரியல..இல்ல இன்னும் நான் முயன்றிருந்தால் அவரையும் காப்பாற்றி இருக்கலாம்.
நல்லா நினைவில் வைச்சுக்கோங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பா உங்க எல்லா பிள்ளைகளும் அனு மாதிரி தான் நிக்க போறாங்க என்று கத்தி விட்டு அங்கிருந்த ஒரு பொண்ணை இழுத்தவன் அவன் முதுகில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பொண்ணு நெற்றியில் வைத்து,
இப்ப எப்படி இருக்கு சார்.? அன்று என்னோட அம்மா சொன்னாங்கன்னு அவர் பக்கம் செல்லவிடாமல் என்னை தடுத்தவர் தானே? இவ உங்க பொண்ணு தான? சொல்லுங்க..சொல்லுங்க..என்று கத்தினான்.
அனைவரும் அதிர்ந்து அவனை பார்க்க, என்னோட கம்பெனியில உதவி கேட்டவங்க தான எல்லாரும். இங்க இருக்குற எல்லாரையும் பற்றி எனக்கு முழுதாக தெரியும். சில பேர் மட்டும் இல்லை என்று கயலை பார்த்தான். அவளும் அங்கே தான் விழித்துக் கொண்டிருந்தாள். கமலி அவனை பார்த்து விட்டு கயலை பார்த்தார். மேகாவின் அப்பாவும் அங்கு தான் இருந்திருப்பார்.
யாரால அக்காவும் அவங்க கணவரும் செத்தாங்களோ. அவங்கள பிடிக்காம விட மாட்டேன் அவன் கத்த,
அர்ஜூன், என்ன செய்யுற? என்று ஸ்ரீ அவனை ஓங்கி அறைந்தாள். அவன் அந்த பொண்ணை விட்டு துப்பாக்கியை நழுவ விட்டான்.
இப்ப கத்துறதுனாலயோ? இல்ல இவங்க கிட்ட பேசுறதுனால எதுவும் சரியாகாது. செத்த யாரும் திரும்பி வரப் போறதில்லை. நம்ம பிரச்சனையை நாம தான் பார்க்கணும். இவங்களாம் மாறவே மாட்டாங்க. எல்லாரும் அவங்க பணம் சொத்தை காப்பாற்ற தான் நினைப்பாங்க. உனக்கு புரியுதா? இல்லையா? அவள் சத்தமிட்டாள். அனைவரும் அவளை பார்க்க, அர்ஜூன் கோபப்படுவான் என்று ஸ்ரீ நினைத்திருக்க, அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
அவள் திகைப்புடன் சுற்றியிருந்தவர்களை பார்க்க, அர்ஜூனின் அழும் சத்தம் தவிர ஏதும் கேட்கவில்லை ஸ்ரீக்கு. கமலி ஸ்ரீயை முறைக்க, அவரை பார்த்துக் கொண்டே அர்ஜூனை தட்டிக் கொண்டிருந்தாள்.
அன்று அவர் சாகும் நிலையில் எப்படி பார்த்தார் தெரியுமா ஸ்ரீ? அவர் கண்ணில் அவ்வளவு ஏக்கம் யாராவது காப்பாற்ற மாட்டார்களா? தன் குடும்பத்துடன் சந்தோசமா இருந்து விட மாட்டோமா? அவர் கடைசி பார்வை என் அம்மா மீது இருந்தது. ஆனா அவங்க என்று அவளை விட்டு விலகி அவன் அம்மாவிடம் ஆக்ரோசமாக சென்றவன்,
இப்ப கூட ஒரு ஆறுதலுக்கு பக்கம் கூட நீங்க வரலை. ச்சே..எனக்கு இது தான். இதே தான் பயங்கர எரிச்சலா இருக்கு. என்னோட அம்மா மட்டுமில்லை இங்க இருக்கிற நிறைய பேர் தன்னோட குடும்பத்தை பார்ப்பதில்லை. யாரோ என்று தான் இருக்கிறீர்கள்?
செத்த பிறகு நீங்க உருவாக்கிய கம்பெனியா உங்கள சுமந்து போக போகுது. இல்ல..உங்கள மனசுல சுமக்க அடுத்தவங்கள விட உங்க குடும்பம் வேண்டும். உங்களை நம்பி வந்த உங்க மனைவியை பாருங்கள். உங்களை பார்க்க கூட முடியாமல் கஷ்டப்படும் உங்க பசங்களை பற்றி யோசியுங்கள்.
உங்க மனைவி, பையனுக்கு என்ன பிடிக்கும்? என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்களுக்கு ஏதும் தெரியாது. அதே போல் உங்க பசங்கட்ட உங்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு கேளுங்க. அவங்க சொல்ற பதில் உங்க கம்பெனியும் பணமும் என்பார்கள்.
உங்களுக்கு பாசம் இருக்கும். ஆனா காட்ட மாட்டீங்க. ஏன் உங்க குடும்பம் தானே? கொஞ்ச நேரம் பேசலாம். வெளிய கூட்டிட்டு போகலாம். இதனாலே பசங்க வாழ்க்கை முறை தவறி தவறான பழக்கத்திற்கு ஆளாவார்கள். அவன் தவறு செய்து விட்டால் அவனை கண்டிக்கிறேன் என்று என் மானம் மரியாதையை வாங்கி விட்டாய் என்று அப்பொழுதும் அவர்களை தான் குறை சொல்லுவீங்க?
நானும் அப்படி தான். பாட்டியுடன் ஊரில் இருக்கும் போது அம்மா எப்ப வருவாங்க வருவாங்கன்னு காத்துகிட்டு இருந்தேன். நானாக தான் இங்கே வந்தேன். ரெண்டே நாள் என்னால எங்க அம்மா வீட்ல இருக்க முடியல. அவங்கள நான் பார்க்கவே முடியாது. காலையில் எழும் முன்னே கிளம்பிடுவாங்க. மாலை வந்தால் வீட்டில் இருக்க மாட்டாங்க. நான் தூங்கிய பின் தான் வருவாங்க. இடையில் எழுந்து போய் பார்த்தாள். தூங்கிக் கொண்டு இருப்பார்கள். யாருமில்லாமல் அங்கிருப்பது பைத்தியம் பிடிப்பது போல் தான் இருக்கும். அதனால் செக்ரட்டரி அங்கிள் கூட மட்டும் தான் பேசுவேன். அவர் மூலம் தான் வீடு வாங்கியது. அம்மா பணம் தான் அவங்க எப்பவாது தான் வருவாங்க. அதுவும் அவங்க பிசினஸ் பற்றி பேசுவாங்க. அப்ப நான் பதினொன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் கூட சாப்பிடியா அர்ஜூன்.?அம்மா செஞ்சு தரவா? கேட்டது கூட இல்லை. என்னோட அம்மா சாப்பாடு நான் சாப்பிட்டதே இல்லை.
என்னோட பாட்டி, அப்புறம் என்று அஞ்சனா அம்மாவை தேடினான். அவர் கண்கலங்க அவனை பார்த்துக் கொண்டிருந்தார். அவனுடைய அப்பாவை கூறி அஞ்சனா பட்ட கஷ்டத்தை கூறி, இவங்க செஞ்சதை சாப்பிட்டிருக்கேன் என்று ஸ்ரீ அருகே சென்று அவளது தோளில் கையை போட்டுக் கொண்டு ஒரு வாரமா இவ தான் செஞ்சு தாரா..என்று என் அம்மாவுக்கு பிடித்தது என்று எதுவுமே எனக்கு தெரியாது.
ஆனால் என்னோட ஸ்ரீயை பற்றி எல்லாமே தெரியும் என்று அவளை பற்றி முன்பிருந்து அவன் காதலையும் கூறினான். அவள் பயத்துடன் அவன் அம்மாவை பார்த்தாள்.
ஏம்மா..அவ பசங்களோட சுத்துறா? அவ செட் ஆக மாட்டான்னு அடிக்கடி சொல்வீங்க?
எல்லாரும் தேவைக்காக எல்லாருடனும் பேசுவோம். ஆண்களுடன் எந்த டீலிங்களையும் வைச்சுக்க மாட்டேன் உங்களால இருக்க முடியுமா? அது உங்க தேவைக்காக நீங்க பழகுறது.
ஆனால் அவள் எதுக்காக பசங்களோட பேசுவா தெரியுமா? பிரச்சனை பண்ற பசங்களை சரி செய்ய தான். பசங்களுக்கு சரிசமமா பேசுவா? ஏன் அடிக்க கூட செய்வாள்?
ஸ்ரீன்னா..எங்க ஸ்கூல்ல பயம் இருக்கும். மேம் விசயத்துல கூட சாரை எதிர்த்து பேசி இருக்கா. பசங்க பொண்ணுங்க விருப்பமில்லாம பக்கத்துல கூட வர முடியாது. அவளை பத்தி அவள் யோசிக்கவே மாட்டா. எப்பொழுதும் மத்தவங்கள பத்தி தான் யோசிப்பா. நான் சந்தித்தது அவள் என்னை காப்பாற்றிய போது தான் என்று அவளை பார்த்தான். அவள் திறுதிறுவென விழித்தாள்.
அவளை விடுத்து தருணை மீது கையை போட்டு, சின்ன வயசில என் பக்கம் எப்பொழுதும் அருகே இருந்த என்னோட குட்டி ப்ரெண்ட் தருண். அவர்களது நட்பை பற்றி கூறி விட்டு, அவனுடைய நண்பர்கள் அனைவர் பற்றியும் சொல்லி விட்டு, ஆதேஷை பார்த்தான். இவங்க எல்லாரும் காதல், நண்பர்களாக இருந்தாலும் புதியதாக எனக்கு கிடைத்த பிரதர் என்று ஆதேஷை அணைத்தான். அவனும் ரொம்ப அழுதான்.
பின் நிவாஸை பார்த்து, நிவி அன்று அவங்க அடிச்சு கீழே கிடந்தீயே? எனக்கு ஏதோ என்னோட உயிரே போனது போல இருந்ததுடா என்று அர்ஜூன் அவனை அணைத்தான். எனக்கு தெரியும் அர்ஜூன்.
அர்ஜூன் என்னோட வெயிட்ட எப்படிடா தாங்குன?
அவனை தூக்கினாயா? ஸ்ரீ கேட்க, அர்ஜூன் அதற்கு பதிலளிக்காமல் ஸ்ரீயை ஒரு பக்கமும், நிவாஸை ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டு, கயலிடம் சென்றான்.
அர்ஜூன் இருக்கும் வரை இவங்கள உங்களால ஏதும் செய்ய முடியாது. முடிஞ்சா முயற்சி செய்யுங்கள் என்று கயல் கையிலிருந்த போனை தட்டி பறித்து,
சார்…ரெடியா இருங்க. நீங்க செய்யக்கூடாத எல்லாத்தையும் செஞ்சுட்டீங்க. அதுக்கு தண்டனை வேண்டாமா? அதை கஷ்டப்பட்ட என்னோட ஏஞ்சலும் நிவியும் தான் கொடுப்பாங்க. அக்கா குடும்பத்துக்கு நடந்ததுக்கும் நீங்க தான் காரணம். எனக்கு நன்றாக தெரியும்.
தீனா அர்ஜூனிடம், என்ன சொல்ற?
சார்..பிரதீப் அண்ணா பெற்றோர்கள் இறந்ததுக்கு காரணமும் இந்த ஆள். ஸ்ரீ நிவாஸ் பெற்றோர் இறந்ததுக்கு காரணமும் இவன் தான். இத்தனை நாள் ஸ்ரீயையும் நிவியையும் அழ வைத்ததும் இவன் தான். தருண் அபியை கொலை செய்ய வந்தது இவன் ஆள் தான். யாசுவை கொல்ல வந்ததும் இவன் தான்.
இன்பா அர்ஜூனிடன், அபியை விக்கி என்று சொல்ல, மேம்..நம்மள பத்தி எல்லாமே தெரிஞ்சு நமக்கு பிரச்சனை பண்றவங்கள..பணத்தால் வாங்கி இவன் தான் எல்லாமே செய்கிறான்.
உங்கள விக்கி, கிஷோர் உங்களை விட மாட்டார்கள். நீங்க கவனமா தான் இருக்கணும்.
போனில் சிரிப்பு சத்தம் பயங்கரமாக ஒலிக்க, அனைவரும் திகைத்தனர்.
அர்ஜூன்..கோபத்துடன், உன்னை விட மாட்டேன். அந்த பொண்ணை கொல்லாம விட மாட்டேன் அவன் கூற,
என் மாமனே உன்னால முடியாது. அனு பக்கம் கூட வர முடியாது. வைடா போனை என்று துண்டித்தான் அர்ஜூன்.
பிரதீப் அர்ஜூன் பேசியதை நினைத்து ஜானு எண்ணம் அவனை வாட்ட, அவன் கூறிய மறு செய்தியில் அதிர்ந்தான். அர்ஜூன் போனை வைத்தவுடன்,
நீ என்ன சொன்ன? பிரதீப் அர்ஜூன் சட்டையை பிடித்தான்.
ஆமாண்ணா. அப்பா, அம்மா சாவுக்கு காரணகர்த்தா அனைத்தும் இவன் தான். ஆனால் அப்பாவை கொலை செய்தது நம்ம பக்கத்து ஊர் வேலீஸ்வர்.
தீனா பக்கம் பிரதீப் திரும்ப, அண்ணா..என்று அவன் அழைக்க, உனக்கு தெரியுமா? என்று அவனை பிடித்து உலுக்கினான்.
தெரியும்? தீனா கூற,
அவனது கழுத்தை பிடித்த பிரதீப் ஏன்டா சொல்லல?
அகில், கவின், அபி பிரதீப்பை பிடித்து இழுக்க, இந்த கோபத்துக்காக தான்டா சொல்லல? எங்க அவனை ஏதாவது செஞ்சு. நீ உள்ள போயிட்டா துகியும் ஜானுவும் உடைஞ்சுடுவாங்க.
அர்ஜூன், இவன் தான் செய்தான்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற? தீனா கேட்க, எனக்கு இந்த விசயத்தை நீங்க சொன்னவுடன் அண்ணாவோட பெற்றோர்களை பற்றி தான் விசாரித்தேன். அதில் கயல் கம்பெனியுடன் தான் கடைசியாக இணைந்து வேலை செய்வதாக ஒப்பந்தமாகி இருந்தது. அவர் கையெழுத்திட்ட அன்று தான் அவர்களை கொலை செய்திருக்கிறார்கள். அப்படி பார்த்தால் இவன் அவர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறான்.
அர்ஜூன், அவர்கள் வெளியூரில் வேலைக்காக போனதில்லையே? அவங்க பரம்பரையாக இருக்கும் தொழிற்சாலை, தோட்டம் துரவுகள், எஸ்டேட்டை தான் பாதுகாத்து வந்தார்கள் அபி கேட்க,
அபி முதலாவதாக வெளியூரிலும் ஆரம்பிக்கலாம் என்று வீட்டில் பேசி இருக்கிறார்கள். என் அப்பாவிற்கு அது பிடிக்கவில்லை. ஏற்கனவே காதல் தோல்வி..அப்புறம் இது வேற என்று யோசித்த தீனா,
அண்ணா..நீ நினைத்தது போல் அவருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ? தீனா கேட்க, இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களையே கவனிக்க, ஸ்ரீ அவர்கள் அருகே வந்து எல்லார் முன்னிலையிலும் கண்டிப்பா பேசணுமா அண்ணா? தீனாவை கேட்டாள்.
அண்ணனா? உனக்கு நினைவு வந்து விட்டதா ஸ்ரீ? அர்ஜூன் கேட்க, பிரதீப் அண்ணா அண்ணான்னா அவர் தம்பியும் அண்ணா தானே.
தயவு செய்து அமைதியாக இருங்க. வெளிப்படையா திட்டம் போடாதீங்க? இங்கயே அவங்க ஆள் கூட இருக்கலாம் என்றாள்.
தீனா அவன் தலையை தட்டி விட்டு, ஏம்மா..நீ என்னுடன் வேலையில்ல வந்து சேர்ந்துக்கிறியா? ஸ்ரீயிடம் வர, அர்ஜூன் முன் வந்து அவ வரமாட்டா என்று அவளை தள்ளி இழுத்து சென்றான்.
அங்கிருந்த அனைவருக்கும் அர்ஜூனின் கஷ்டம் தெளிவாக புரிந்தது. கமலி அன்று ஸ்ரீயை யார் முன் அவமானப்படுத்தினாங்களோ? அவங்க எல்லாருமே இங்க தான் இருந்தாங்க. அனைவரும் கமலியை வித்தியாசமாக பார்க்க, அவர்களில் ஒருவர் மட்டும் அர்ஜூன் முன் வந்து நடந்ததை கூறி விடலாம் என்று வந்தார்.
அவரை பார்த்து, அவன் சொல்லுங்க..என்றான்.
அதற்குள் அவரை அறிந்து கொண்டவளாய்..அவரிடம் ஓடி வந்து, தண்ணீர் தானே நான் எடுத்து தாரேன் சார்..வாங்க என்று அழைத்தாள் ஸ்ரீ.
ஸ்ரீ நில்லு என்று அர்ஜூன் அழைக்க, அவளுக்கு பக்கென்றது. அவளது உள்ளன் பனியன் கை முழுவதும் மறைத்து லாங் ஸ்கர்ட்டும் போட்டிருந்தாள். அவளது ஆடை அப்பொழுதிலிருந்தே தட்டிக் கொண்டே இருந்திருக்கும்.
அவளிடம் வந்த அர்ஜூன், முதல்ல அறைக்கு சென்று ஸ்கர்ட்டை மேலே ஏற்றி போடு. கால் தட்டுகிறது. கீழே விழுந்திருவ..அவன் கூற,
அவள் சிறிது வெட்கத்துடன், ம்ம்..என்று தலையை ஆட்டி விட்டு அவரை பார்க்க, அவர் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து மெலிதான புன்னகையை தவழ விட்டார். அவன் சென்றவுடன் வாங்க சார் என்று தனியே அழைத்து சென்று,
ப்ளீஸ் சார், ஆன்ட்டி பேசியதை அவனிடம் சொல்லிடாதீங்க. அவன் ரொம்ப கோபப்படுவான்.
ஏன்மா, உனக்கு அவனை பிடிக்கலையா?
எனக்கு பிடிக்கிறது எதுவுமே கிடைக்காது சார்.
நான் தம்பியை நிறைய முறை பார்த்திருக்கேன். ஆனால் பேசியதே இல்லை. அவர் கோபத்திலும் சரி..அவரது கஷ்டத்திலும் சரி..நீ தான் இருக்கணும். நீயே பார்த்தேல. நீ பேசியதும் அவங்க அம்மாவிடமுள்ள கோபத்தை கொஞ்சம் குறைத்து மனதிலிருந்த அனைத்தையும் சொன்னார். இத்தனை பேர் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல் பேசினார்.
ஆனால் சார், அவனுக்கு நான் தகுதி இல்லாதவளாயிற்றே?
நீ தகுதியானவள் தான்மா. உன்னோட அப்பா அர்ஜூன் அம்மாவை விட பெரிய ஆளா தான் இருந்தாரு. அவரோட நல்ல மனசுதான். அனைத்தையும் இழக்க வைச்சது. அவருக்கு உரியவங்களே துரோகம் பண்ணாங்க.
ம்ம்..தெரியும் சார். எங்க ஆன்ட்டி தான் ஸ்ரீ கூற, அவர் கமலி மேம் நல்லவங்க தான். ஆனால் அடுத்தவங்க விசயத்துல தலையிட மாட்டாங்க.
உங்களுக்கு ஆன்ட்டியை எத்தனை வருஷமா தெரியும்?
ஆறு வருடமா என்றார்.
எனக்கு அவங்கள பத்து வருடங்களுக்கு மேலாகவே தெரியும். அவங்க என்னை பத்தி தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு தெரியும்? ஆனா அவங்க நேரடியா பேசும் போது ரொம்ப ரொம்ப வலித்தது சார். ஆனா இப்ப பழகிடுச்சு.
உனக்கு எல்லாமே நினைவிருக்காமா?
இல்ல சார். அவங்கள பார்த்தவுடனே அர்ஜூன் அம்மான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவனோட அதே அழகான கண்கள்.
வேண்டாம்மா. அழகா இருக்காங்கன்னு மட்டும் தெரியாம கூட சொல்லிடாத. மேடமுக்கு செம்மையா கோபம் வரும்.
எதுக்கு சார்?
தெரியலம்மா. ஆனால் ரொம்ப கோபப்படுவாங்க.
ஓ.கே சார். அர்ஜூனிடம் ஆன்ட்டி பேசியதை மட்டும் சொல்லிடாதீங்க.
சரிம்மா. நான் சொல்லலை என்று அவளிடம் உங்க ஜோடி பொருந்தம் அழகாக இருந்ததும்மா என்றார்.
அவள் வெட்கத்துடன் புன்னகைக்க, தம்பி சொன்ன பழைய பொண்ணா தெரியல. ரொம்ப மாறி இருக்கீங்க போல. அந்த கயலால பிரச்சனைன்னா சொல்லும்மா. நானும் என்னால் முடிந்ததை உதவுகிறேன்.
அப்புறம் அம்மா..நீங்க தம்பியை ஒரு வேலை வேண்டாம்ன்னு சொல்லிட்டா. எனக்கு போன் செய்யுங்க. என்னோட பையனுக்கு உங்கள கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன். அவனுக்கு உங்கள மாதிரி பொண்ணை அவனுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று நங்கூரத்தை வைத்தார்.
சார்..நீங்க வேற, அங்க ஒருத்தன் இருக்கான் பாருங்க என்று அகிலை கை காட்டி, அவனுக்கும் என்னை பிடிக்கும். எனக்கு முதல்ல அவனை தான் பிடிக்கும் என்று யோசித்த ஸ்ரீ, அகில் அப்பா பெயரை கூறி கேட்க,
உங்க அப்பாவும் அவரும் ரொம்ப நெருக்கம்.
அவரை பத்தி ஏதாவது தெரியுமா?
அவர் ரொம்ப புத்திசாலி மனுசர். அவர் ஒரு மருந்தை கண்டுபிடிச்சார். உன்னோட ஆன்ட்டி அது தான் வேண்டும்னு பிடிவாதமா இருந்தார். ஆனால் அவர் மருந்தில் ஏதோ சேர்க்க சொல்லி வற்புறுத்தியதால் அவளை சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.
அங்கிள் இப்ப அவரை பத்தி ஏதாவது தெரியுமா? ஸ்ரீ கேட்க, அவர் குடும்பத்துடன் இருப்பார்.
இல்ல அங்கிள். அவரை காணோம். அவர் இல்லாமல் எங்க ரதி ஆன்ட்டி உடஞ்சுபோயிட்டாங்க. அவங்க குடும்பமே கஷ்டத்துல இருக்கு. அகில் சீனியர் ஒரு முறை வருத்தப்பட்டு அபி சீனியரிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கேட்டேன்.
அவரோட அந்த மருந்தை பற்றிய தகவல்களை மட்டும் கண்டறிந்து உதவ முடியுமா? கண்டிப்பா அதை பற்றி தெரிந்தால் அவரை கண்டுபிடிக்க முடியும். ஆன்ட்டியை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இந்த உதவி மட்டும் செய்ய முடியுமா?
அவர் சிந்தித்து விட்டு, கண்டிப்பா செய்கிறேன் என்றார்.
ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். உங்க நம்பரை தாங்களேன் என்று வாங்கிக் கொண்டு மீண்டும் தேங்க்ஸ் அங்கிள் என்று கூற,
அங்கிள்ன்னு கூப்பிடுறீங்க?
அங்கிள் நமக்கு தான் இப்ப தெரிஞ்சுடுச்சே. அதனால தான் அங்கிள். அவனுக்கு தெரிஞ்சவங்கள விட யாரையும் அங்கிள்ன்னு கூப்பிடுவது பிடிக்காது. அதான் சார்ன்னு சொன்னேன். நீங்களும் ஆன்ட்டி மாதிரி பெரிய ஆளா தான இருப்பீங்க?
உன்னோட உள்ளத்தை கண்டிப்பா மேம் புரிஞ்சுக்கிட்டு உன்னை ஏத்துப்பாங்க என்றதும் அவள் கண்ணில் நீர் சொட்டியது.
இல்ல அங்கிள். ஆன்ட்டி ஒத்துக்கிட்டாலும் இனி என்னால அவனை திருமணமெல்லாம் பண்ண முடியாது.
ஏன்மா, உனக்கு அவரை பிடிக்கும்லம்மா. பிடிக்கும் ரொம்ப பிடிக்கும். எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் அவன் இல்லாமல் கஷ்டமா இருக்கும். தூரத்திலிருந்தாவது அவனை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கும் அங்கிள். ஆனா என்னால முடியாது என்று தேம்பி தேம்பி அழுதாள்.
அம்மா..என்னாச்சு? எதுக்கு இப்படி அழுறீங்க? அவர் கேட்க, ப்ளீஸ் அங்கிள் அர்ஜூன் பேச்சை விடுவோமே? என்று அழுதாள்.
அங்கிள் நான் ..உங்களுக்கு மெசேஜ் பண்றேன் என்று அவள் அழுது கொண்டே வெளியேற கமலி அவர்கள் பேசியதை கேட்டிருப்பார். அவரை கவனிக்காது செல்ல, அர்ஜூன் அவள் முன் வந்தான்.