முறை அப்படிதானே வருது. அவருக்கும் வேற சொந்த பந்தம் இல்லை. அவருக்கு பிடிச்சிருக்கு கூப்பிடுறார். உனக்கு என்னடா பிரச்சனை? என்று அவன் ஏதும் சொன்னால் அவனை மடிக்கி பிடிக்கலாம் என்று லலிதா கேட்டார்.
ஆன்ட்டி பசங்களும் பொண்ணுங்களும் ஒன்று தான்னு சட்டமே சொல்லுது என்றாள்.
சட்டம் சொன்னது பெண்களின் முன்னுரிமைக்காக. குடிக்க இல்லை என்றான் சீற்றமுடன்.
கட்டிலில் நடந்து ஆதேஷ் அருகே வந்து, நான் குடிச்சா உங்களுக்கென்ன மாமா?
மாமா உன்னை நினைத்து வருந்துவார் என்றான் ஒரே வார்த்தையில்.
உங்க மாமாவுக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமிருக்காது மாமா. அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். நான் சின்ன பசங்களுடன் சுத்துறேன்னு எல்லாரும் சொல்றாங்களே.. எதுக்கு மாமா? தெரியுமா உங்களுக்கு? என்று அவன் அருகே வந்து,
ஆ..ஹா..நீங்க இவ்வளவு வளர்ந்துருக்கீங்க? அவன் அருகே நெருங்கி அவன் உயரத்தையும் அவளது உயரத்தையும் ஒப்பிட்டாள். கட்டிலில் நின்று அவனை பார்த்தால் நேராக அவன் கண்கள் தான் தெரிந்தது. அதை பார்த்துக் கொண்டே அவனிடம்,
மாமா, உங்களுக்கு கஷ்டமா இல்லையா? இவ்வளவு வளர்த்தியா இருக்கீங்க? அவன் தோளில் கையை போட்டுக் கொண்டு.
உனக்கு என்ன பைத்தியமா? என்று அவளது கையை தட்டி விட்டான் முறைத்துக் கொண்டு. கட்டிலின் முனையில் நின்று கொண்டிருந்த ஜானு கீழே விழ, ஆதேஷ் அவளை பிடித்தான்.
தேங்க்ஸ் மாமா என்று ஜானு சாதாரணமாக எழ, ஆதேஷிற்கு தான் இதயம் படபடவென துடித்தது. அவனை பார்த்த பெற்றோர்கள் நினைச்சது நடந்து விடும் போலவே என்று இருவரும் பார்த்துக் கொண்டனர்.
மாமா..என்று ஆதேஷை அவனது கையை பிடித்து, வாங்களேன் என்று கட்டிலில் அமர வைத்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். மீண்டும் பெற்றோர்கள் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
வேலைபார்ப்பவர்கள் மட்டும் தான் வீட்ல இருப்பார்கள். வேறு யாருமே இருக்க மாட்டாங்க. அண்ணா என்னை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவன் வேலையை கவனிக்க சென்று விடுவான். பள்ளி முடிந்து வந்தால் சாப்பிட அனைத்தும் இருக்கும். ஆனால் தனியா இருப்பது போல் தான் இருக்கும். முதல்ல சக்கரையை தான் பார்த்தேன். பின் தான் மத்த பசங்க பழக்கம்.
புவி சிறுவயது தோழியாக இருந்தாலும் அவளுக்கு படிக்கும் நேரம் பேசினால் பிடிக்காது. வீட்டிற்கு வருவது அம்மாவை கவனிப்பது, படிப்பது, டியூசன் எடுப்பது அதிலே நேரம் சென்று விடும் அவளுக்கு. அதனால் தான் அந்த குட்டி பசங்களுடனும் துருவனுடனும் சுற்றுவேன். அண்ணாவிடம் நான் கூறியதில்லை என்று அவனை பார்த்தாள். அவன் எந்த உணர்வும் காட்டாது இருக்க மாமா..மாமா..என்று அவனை அழைத்தாள்.
ம்ம்..மாமா பாவம் என்றான் ஆதேஷ்.
மாமா பாவமா? என்று ஜானு கோபமாக, என்னை பார்த்தால் பாவமா தெரியலையா?..போடா மூளையில்லாத மாமா என்று திட்டி விட்டு, அங்கிள் என்று அவன் அப்பாவிடம் சென்றாள்.
அப்படி சொல்லாதன்னு சொன்னேன்ல? ஆதேஷ் அவளிடம் சினத்துடன் வர,
என்னடா என் மருமகளை விரட்டிக்கிட்டு இருக்க? ஆதேஷ் அப்பா கேட்க, டாட் அப்படி சொல்லாதீங்க..என்றான்.
ஏன்டா? அவர் கேட்க, இவன் ஏதாவது சொல்லி ஜானு மேலும் கஷ்டப்பட்டு விட்டால் என்ன செய்வதென்று அவன் வாயை மூடி பேசாதே என்று அவனை வெளியே இழுக்க,
மாமா..என்ன சொல்ல வந்தீங்க? என்று ஜானு இருவரையும் குறுகுறுவென பார்த்தாள். அம்மா அவன் வாயிலிருந்து கையை எடுத்தார். ஆதேஷ் ஏதும் பேசாமலிருந்தான்.
மாமா சொல்லுங்க என்று அவனிடம் வந்தாள்.
உனக்கு என்ன பிரச்சனை? நான் போகிறேன் என்று கடுப்பாக கத்தி விட்டு வெளியேற இருந்தவனை நிறுத்திய அவனது அப்பா, அமைதியா உட்காரு என்று அவனை அமர வைத்து விட்டு,
ஏன் நீ தனியா இருக்குறது போல் நினைக்கிறாய்ம்மா? நாங்க இருக்கோம். உன்னோட சித்தி குடும்பமும் இருக்கோம் என்றார்.
ஆதேஷ் கோபத்தில்..அவனை பார்த்த ஜானு, அங்கிள் நீங்க கிளம்புங்க. நானே பார்த்துக்கிறேன்.
நீ என்ன பார்க்கப்போகிறாய்? என்று ஆதேஷ் மீண்டும் சினத்துடன் பேச, ஜானு கண்கள் கலங்கியது. யாரிடமும் பேசாமல் அவளது கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
ஆது..சும்மா இருக்க மாட்டாயா? லலிதா திட்டி விட்டு, ஜானு எழுந்திரு..என்று அவளிடம் வந்தார்.
ஆன்ட்டி, எல்லாரும் கிளம்புங்க. நான் ஒய்வெடுக்கணும் என்றாள்.
ஏய்..என்ன? உனக்காக தான பேசுறாங்க? எழுந்து உட்கார மாட்டாயா? ஜானுவிடம் கோபமாக கட்டிலில் படுத்திருந்த அவளை பிடித்து இழுத்தான். அவள் கண்ணீரோடு இருப்பதை பார்த்தவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
ஆது..என்று அவனது அப்பா அவனிடம் நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கிறோம் சினத்துடன் கூற, அவன் அவளை விடுத்து வெளியே சென்றான் கோபமாக.
அங்கிள்..மாமாவை எதுக்கு திட்டுனீங்க?
ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துகிடன்னு தெரிய வேண்டாமா?
மாமா என்று அவளும் வெளிய செல்ல இருந்தவளை நிறுத்தினார் லலிதா.
ஜானு எங்களுடன் ஊருக்கு வாராயா? என்று கேட்டு விட்டார்.
ஆன்ட்டி, நான் அண்ணாவை விட்டு எப்படி வரது?
இப்ப இல்லைம்மா. கல்லூரி சேர்ந்த பின் தான்.
வேண்டாம் ஆன்ட்டி. மாமா சின்ன விசயத்துக்கே கோபப்படுறாங்க. இது வேறையா?
அவன் எதுவும் சொல்ல மாட்டான்.
ஆன்ட்டி..முதல்ல நான் பள்ளியை முடிக்கணும். அப்புறம் பார்க்கலாம் என்று ஆன்ட்டி, மாமா எதுக்கு கோபப்பட்டாங்க? கேட்டாள்.
அவன் அப்படிதான்ம்மா. நீ ஓய்வெடு என்றார்.
மருமகளே இதை சாப்பிட்டு ஓய்வெடு என்றார். அவள் அதை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டாள்.
நான் எதுக்கு தேவையில்லாமல் கோபப்பட்டேன்? என்று சிந்தனையில் மூழ்கினான்.
ஜானு தூங்க முடியாமல் மாமா..எதுக்கு கோபப்பட்டாங்க? சிந்தித்தாள். அவன் அப்பா மருமகள் என்று அழைக்கும் போது அப்படி சொல்லாதீங்கன்னு ஆதேஷ் கூறியது அவள் நினைவுக்கு வந்தது.
மாமா தவறாக எண்ணி தான் என் மீது..என்று யோசித்தவளுக்கு கண்ணீர் ஆறாய் ஊற்றியது. மாமாவுக்கு என்னை பிடிக்காதா? அபி மாமாவுக்கும் பிடிக்கலை. இந்த மாமாவுக்கும் பிடிக்கலை என்று நினைத்தவள். அவருக்கு பிடிக்கலைன்னா நான் ஏன் அழுகிறேன்? என்று புரியாமல் மீண்டும் அழுது கொண்டே தூங்கிப் போனாள்.
அர்ஜூன் வந்ததை அறிந்து கொண்ட இன்பாவும் இதயாவும் ஸ்ரீ அறைக்கு சென்றனர். அவர்கள் ஒரே கட்டிலில் தூங்குவதை பார்த்த இன்பாவும் இதயாவும் அப்படியே நின்றனர்.
இதயா, நான் பார்ப்பதை தான் நீயும் பார்க்கிறாயா? இன்பா கேட்க, ஆமாக்கா..அர்ஜூனும் ஸ்ரீயும் என்றவள் முகம் பிரகாசத்துடன், வாக்கா.. அவங்கள தொந்தரவு செய்ய வேண்டாம்.
இதயா அவங்க?
அம்மா..வா என்று இன்பாவை தள்ளி இழுத்து வந்து, அவள் கஷ்டத்தில் துணை இருக்கும் போது, இது தவறில்லை. அவர்கள் தவறான எண்ணத்துடன் இருந்தால் கதவை திறந்து போட்டிருக்க மாட்டாங்க.
என்னடி சொல்ற? எப்படினாலும் இது தவறு தானே?
அக்கா அவங்கள தொந்தரவு செய்யாதே. நான் தாரிகாவை பார்த்து விட்டு வாரேன்.
இருடி நானும் வாரேன். நீ அப்புறம் பார். நான் அவளிடம் பேசி விட்டு வருகிறேன் என்று இதயா சென்று விட்டாள்.
இவளுக்கு என்னாச்சு? ஏதோ சரியில்லை என்று குழப்பமுடன் இன்பா சென்று கொண்டிருந்தாள். எதிரே வந்த அபி, அகிலை கவனிக்கவில்லை. அவர்களை தாண்டியும் சென்றாள்.
அபி அவள் முன் வந்து அவளது கையை பிடிக்க அபியை பார்த்து,
ம்ம்..எனக்கு நல்லா தெரியுது. ஏதோ பெரிசா இருக்கு. கவின் எப்போதும் என்னிடம் எதையும் மறைக்க மாட்டான். ஆனால் எங்களுக்குள்ள இடைவெளி வந்தது போல் தெரியுது.
இதயாவிற்கு தெரிந்தால் தருணிற்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் அபி கூற..
எங்க எல்லாத்தையும் சொல்ல மாட்டிங்கிறாளே? தருண் சத்தம் கேட்டு இருவரும் அவனை பார்த்தனர்.
ஏன்டா வெளிய வந்த?
உள்ளேயே எத்தனை நாள் நடப்பது? டாக்டர் தான் சொல்லிட்டாரே. அதான் வெளியே வந்தேன்.
சரி. இதயா உன்னிடம் ஏதாவது சொன்னாலா? இன்பா கேட்டாள்.
தருண் அமைதியாக இருவரையும் பார்த்தான் .பின் அன்று கூறினார்களே ஜிதின் ஸ்ரீயை கட்டாயப்படுத்த முயற்சி செய்தான். அர்ஜூன் கவின் காப்பாற்றியது. அது உண்மையா? இல்லை அவனிடமிருந்து அர்ஜூனால் ஸ்ரீயை காப்பாற்ற முடியாமல் போயிருக்குமோ?
இல்ல..என்று அபி எழுந்தான்.
கண்டிப்பா தெரியல. ஆனால் அர்ஜூன் வேதனை எனக்கு தெளிவா தெரிஞ்சது. அவளை இழந்தால் எந்த அளவு கஷ்டப்பட்டிருப்பானோ அது போல் தான் அவன் இருந்தான். ஸ்ரீ பேசியது..அவள் நடந்து கொள்வது எல்லாம் அப்படி தான் காட்டுகிறது. அவன் அவனுடைய ஸ்ரீயை இழந்து விட்டான். அவளுக்கும் தெரியாமலே ஜிதின் ஸ்ரீயை எடுத்துக் கொண்டான்
என்னடா சொல்ற? அபி சீற்றமுடன் வினவ,
ஸ்ரீ தருண் அறைக்கு வந்து பேசியதை கூறி, அவள் கூறிய விதத்தில் இது தான் நடந்திருக்குமென்று அன்றே கண்டு கொண்டேன். அவள் வாய்விட்டு தான் கூறவில்லை. ஆனால் தெளிவாக தெரிந்தது. இவர்கள் உள்ளே வலியை மறைத்துக் கொண்டு நடிக்கிறார்கள் அபி.
என்னடா இது? அவனை சும்மா விடக் கூடாதுடா இன்பா கூற
மேம்..பிரச்சனை அது மட்டுமல்ல. அர்ஜூனுக்கு இது மட்டும் தான் தெரியும். ஆனால்..கொஞ்சம் யோசியுங்கள். ஸ்ரீயிடம் காதலை அர்ஜூன் சொன்னான். அவள் ஏற்கவில்லை. ஆனால் அவளும் அவனை காதலிக்கிறாள். அப்புறம் ஏன் அர்ஜூன் காதலை சொன்ன போது ஏற்றுக் கொள்ளவில்லை? கண்டிப்பாக அவளோட ஆன்ட்டி காரணமில்லை. “அர்ஜூன் இனி என் காதலை எப்படி சொல்வேன்று அவள் கூறினால் தான்” இதுவும் காரணமாக எனக்கு படவில்லை. ஸ்ரீக்கு அவளை பற்றிய உண்மை தெரியும் முன்னே காதலை நிராகரித்தாள்.
கைரவ், யாசுவிற்கு தான் ஸ்ரீ காதல் தெரியாதுன்னு நினைக்கிறேன்.
இல்ல கைரவிற்கு தெரியும். அன்றி இரவு நடந்ததை கூறினான் தருண்.
ஏன்டா, சொல்ல மாட்டிங்கிறா? இன்பா கேட்க,
ஒரு காரணம் எனக்கு தெளிவாக தெரியும் மேம் என்றான் தருண்.
அபியும் இன்பாவும் அவனை பார்க்க, அர்ஜூனுக்கு நான் கூறுவது தெரியக்கூடாது என்று கமலி ஸ்ரீயிடம் பேசியதை கூற, அபிக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
அவங்களுக்கு எவ்வளவு திமிறு? ஸ்ரீயை பற்றி எப்படி பேசி இருக்காங்க? அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும். மேம் அவள் அந்த மாதிரி இல்லவே இல்லை.
ம்ம்..அதான் உன்னோட மாமா பெரிய ஊர் கதையவே சொன்னாரே என்று கூறி விட்டு, அப்ப ஸ்ரீ அர்ஜூனிடமிருந்து விலகி தானே இருக்கணும். அவன் பக்கத்திலே இருக்காலே என்று தருண் கேட்டான்.
அபி..அவ ஏதோ தனியா செய்ய நினைக்கிறா? இன்பா கூற,
அர்ஜூன் அவளிடம் சொல்லி இருக்கான். அவளாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாதுன்னு. அவளும் சரி என்று தான் கூறினாள்.
டேய்..புரிஞ்சிக்கோ. நல்ல பொண்ணுக்கிட்ட போய்..மேம் பேசியது போல் பேசினால் அவள் அந்த பையனை கண்டிப்பா தூக்கி எறிந்து விட்டு போயிடுவா? ஆனா ஸ்ரீ அர்ஜூனிடம் மேலும் நெருக்கமா இருக்கா. அதுவும் நீங்க சொன்ன மாதிரி நடந்திருந்தா அர்ஜூன் முகத்தில் கூட அவளால் விழிக்க முடியாது. கண்டிப்பா இதுல ஏதோ தப்பா இருக்கு. அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கணும். இது ஸ்ரீக்கு டேஞ்சர் இன்பா கூற, தருணும் இன்பா கூறியதை ஏற்றான்.
மேம்..தேவையில்லாம யோசிக்காதீங்க அபி கூற, போடா..உன்னிடம் சொன்னேன் பாரு. என்னை சொல்லணும் என்று இன்பா செல்ல, தாரிகாவும் இதயாவும் வந்தனர். தாரிகா மிகவும் சோர்வாக தெரிந்தாள்.
தாரிகா..நீ ஓய்வெடுக்காமல் என்ன செய்ற? அபி கேட்டான்.
எனக்கு தூக்கம் வரல சீனியர் என்று அவள் உள்ளே செல்ல, தருணிற்கு ஏதும் தெரியாமல் தான் இருந்திருக்கும். அவன் அவளை பற்றி அபியிடம் கேட்டான். கவினை பிரேக் அப் செய்துட்டாள் அபி கூற,
இதுக்கு தான் இந்த காதலே வேண்டாம்ன்னு சொல்றது என்று இன்பா அபியை பார்த்தாள்.
ஆமாம்டா அபி, மேம்க்கு காதலே வராதாம் தருண் சொல்ல, தருண் சும்மா இரு என்று அபி கூற,
காதல் வராதுன்னு யாருடா சொன்னா? டேய்..நானும் மனுசி தான்டா. மிருகமே காதலிக்குது. எனக்கு காதல் வராதா? வரும்ன்னு நினைக்கிறேன்னு இன்பா அபியை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.
டேய் மச்சான், அவங்க சொன்னதை கேட்டியா? தருண் குஷியாக அபியை பார்க்க, அவன் கண்ணோ இன்பா பின்னே சென்றது.