அத்தியாயம் 18

ஜானு உனக்கு இன்னொரு மாமாவா? துருவன் கேலி செய்ய, சும்மா இரு துரு..மீண்டும் அவனை திரும்பி ஜானு பார்த்தாள். ஆதேஷும் அவளை பார்த்தான். அவன் போன் ஒலித்தது.

சொல்லுங்க மேம்..

நான் கொடுத்த புத்தகத்தை முடிச்சிட்டியா? இன்பா கேட்டாள்.

மேம்..நானே இன்று தான் விடுதலை அடைந்தது போல் இருக்கு. இப்ப கேட்கிறீங்களே?

பிரதீப் அண்ணா, அந்த ரிசார்ட் பொறுப்பை வாங்கிட்டாங்க. இன்னும் நேரமாக்கினால் சரியாக இராது.

மேம்..மாமா என்னிடம் சொல்லவேயில்லையே?

மாமாவா?

எஸ் மேம்..துகிய அவங்க கல்யாணம் பண்ணிட்டா. எனக்கு மாமா தான? அவர் தான் அப்படி அழைக்க சொன்னார்.

சரி தான் போ. நாளைக்கு சைலுவும் மத்தவங்களும் வருவாங்க. நீ அவங்களுடன் சென்று அந்த ரெசார்ட்டை வீடியோ எடுத்து அவங்க பிளான்ன சொல்லணும்.

மேம்..எனக்கு பிளான் இருக்கு. நீங்க தான் அன்று எடுத்த வீடியோவை காட்டினீங்கள? மாமாவிடம் சொன்னேன். ஓ.கேன்னு சொல்லிட்டாரு என்று மகிழ்ச்சியாக அவன் பேசினான்.

என்ன விசயம் ஆது? ரொம்ப சந்தோசமா இருக்க.

ஷ்.ஷ்..என்று அவளிடம் காண்பித்து விட்டு, மேம் நீங்களும் வரலாம்ல.. வாங்களேன் இன்பாவை அழைத்தான் ஆதேஷ்.

நான் வரல..

மேம்..அண்ணாவை விட்டு வர முடியலயா?

அபியை பார்த்த இன்பா,டேய்..உத வாங்க போற.

உங்களால முடியாதே. நான் ஊர்ல இருக்கேனே?

நீ இங்க வராமல போகப் போற.

நாளைக்கு மாலை இல்லை இரவு நான் கிளம்பிடுவேன். அம்மா, அப்பா தான் இங்க இருக்க போறாங்க என்றான்.

ஜானு ஆதேஷை பார்க்க, என்ன ஜானு உன்னோட பார்வையில் தடுமாற்றம் தெரியுதே? என்று ஆதேஷை பார்த்துக் கொண்டே ஜானு காதை கடித்தான் துருவன்.

அவனது குதுகில் ஓர் அடி வைத்து விட்டு, வாயை மூடிகிட்டு வா..என்றாள்.

அவ எப்படி இருக்காடா? இன்பா கேட்க, அவன் தாரிகாவை பார்த்து நல்லா இருக்கா மேம்.

அபி போனை இன்பாவிடமிருந்து பிடுங்கி, தாரிகாவிடம் போனை கொடு என்றான்.

தாரிகா, நீ ஓ.கே தானே? கவின் ஏதாவது பேசினானா?

சாரி சொன்னாரு சீனியர். நான் எப்படி சீனியர் ஓ.கே வா இருக்க முடியும்? அபியிடம் கேட்க,

அவனுக்கு ஏதோ டென்சன்னு நினைக்கிறேன். ப்ளீஸ்ம்மா.. ரொம்ப கோபப்படாதே அபி கூற, இன்பா சினத்துடன் அவன் பேசியது சரியா? ப்ரெண்டுக்கு சாதகமா பேசுறியா?

மேம்..எனக்காக ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க கண்ணீருடன் அபி சீனியர், நீங்க அவர்கிட்ட பேசாம இருந்துடாதீங்க..என்றாள்.

நான் பேசுறேன்ம்மா. அபி பெயரை கேட்ட ஜானு நின்றாள். அபியிடம் போனை பிடுங்கிய அகில், நீ கவலைப்படாதம்மா..அவனை ஊருக்கு வந்து கவனிச்சுக்கிறேன்.

தேங்க்ஸ் அகில் சீனியர் என்றவுடன் அண்ணாவா? என்று துருவன் தாரிகா கையிலிருந்து போனை பிடுங்கி அண்ணா நீ எப்ப ஊருக்கு வர?

டேய்..நீ ஸ்கூல்லுக்கு போகலையா?

எங்க கூட அவங்களும் வாராங்க?

யாரெல்லாம் இருக்காங்க? அகில் கேட்டான். துருவன் கூற ஆதேஷிடம் போனை கொடுக்க சொன்னான்.

அவன் யோசனையோடு போனை எடுக்க, நீ அந்த பொண்ணு பக்கத்துல இருக்காத. அப்புறம் கவின் மேலும் தப்பா எடுத்துக்கப் போறான்.

சீனியர்..உங்க ப்ரெண்டை முதல்ல தாரியை நம்ப சொல்லுங்க. அவ என்னோட ப்ரெண்டு. நான் பேசாமல் இருக்க மாட்டேன் என்று பட்டென போனை வைத்து துருவனை முறைத்தான்.

ஆமாம்..உங்க எல்லாருக்கும் பழக்கம் இருக்கா? எதுக்கு அண்ணா என்னை முறைக்கிறீங்க?

உன்னோட அண்ணன் யாரிடமும் ஒழுங்காவே பேச மாட்டானா? தாரி உன்னோட நான் பேசினா கவின் சீனியர் தப்பா எடுப்பாறாம். நான் உன்னுடன் பேசக் கூடாதாம். காதல்ல நம்பிக்கை முதல்ல வேணும். அது இல்லாம பெருசா பேசுறாங்க? சீற்றமானான்.

ஜில்லா..இங்க பாரு என்று துகி அவள் போனில் புகைப்படம் எடுத்தாள்.

என்ன பண்ற துகி? என்னை மேலும் டென்சன் ஆக்காதே? சத்தமிட்டான்.

ஸ்கூல் பசங்களாம் வாராங்க. கோபப்படாதே.. உனக்குள் இப்படி ஒரு அந்நியனா? துகிரா கேலி செய்தாள்.

ஓய்..நீ ஓவரா பேசுற? மாமாகிட்ட சொல்லி உன் வாயை அடைக்கிறேன்.

மாமான்னா..பயந்திடுவோமா? என்று துகிரா காலரை தூக்கி விட்டாள். பிரதீப் அவர்கள் முன் வந்து காரை நிறுத்தினான். ஜானு புன்னகையுடன் துகிராவை பார்த்தாள்.

மாமா..என்று ஆதேஷ் கூப்பிட, என்னடா மாமா…நான் யாருக்கும் பயப்படவே மாட்டேன். போடா..போ..உன் மாமாவிடம் சொல்லு.. என்றவுடன் அனைவரும் சிரித்தனர்.

அவள் புரியாது திரும்ப கையை கட்டிக் கொண்டு பிரதீப் கண்ணில் கூலருடன் இருந்தான்.

நாங்க சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.சொல்லுடா ஜில்லா..

ஆமாம் மாமா..என்று நகைத்தான். துகி உங்களுடன் வாராலாம்.

இல்லையே..நான் அப்படி சொல்லவே இல்லை என்று ஆதேஷை முறைத்துக் கொண்டே பின் நகர்ந்தாள்.

சீக்கிரம் வீட்டிற்கு வாங்க என்று அவன் காரை செலுத்தினான்.

அப்பாடா..ஏன்டா உனக்கு? என்று ஆதேஷை அடித்தாள் துகிரா.

யாரோ பயப்படாதது போல் பேசினாங்க அண்ணா. இவ்வளவு பயமா? துருவன் கேட்க, திடீர்ன்னு முன்னாடி நின்னா பயமா தானே இருக்கும்.

துரு..நேரமாகிறது ஜானு கூற இருவரும் பள்ளிக்குள் ஓடினர். மற்றவர்கள் இருவரையும் பார்த்தனர்.

இவனை பாரேன் அகில் சீனியருக்கு எதிர்பதமாக இருக்கான் என்று தாரிகா துருவனை கூற, ம்ம்..என்ற ஆதேஷ் பார்வை ஜானுவை தொடர்ந்தது.

அவர்கள் உள்ளே சென்று பார்த்தது துளசி அவள் நண்பன் ஒருவனை அடிப்பதை.

ஜானுவும் துருவனும் அவளிடம் ஓடி வந்தனர். வெளியே இருப்பவர்களுக்கு நன்றாக கண்ணில் பட்டது நடப்பதனைத்தும்.

ஆனால் பேசுவது கேட்கவில்லை.

துளசி என்னாச்சு?

அவனுக்கு திமிறு வைச்சு போச்சு? அதான் குறைக்கிறேன் என்று துளசி கூற,

என்ன?

ஆமாம் ஜானு. புவியை பற்றி ஓவரா பேசுறான். அவள் எல்லாரிடமும் என்று துருவை பார்த்து அமைதியானாள்.

என்னடா சொன்ன புவியை? என்று துருவனும் அந்த பையனும் சண்டையிட்டு உருள, ஆசிரியர்கள் அவர்களை சூழ்ந்தனர்.

துருவனை எழுப்பி விட்டு ஜானு அவனது தலையில் இருந்த தூசிக்களை தட்டி விட, அடுத்ததுக்கு தயார் படுத்திட்ட போல என்று ஜானுவை கை காட்டி பேசினான்.

அவள் கொஞ்சமும் யோசியாது அனைவர் முன்னிலையிலும் அவனை அறிந்து விட்டு, ஆசிரியர்களை பார்த்து,

கொலைகாரனெல்லாம் பள்ளியில் சேர்ப்பது சரியா? கேட்க, மற்றவர்களுக்கு தெரியாமல் தான் இருந்திருக்கும் புவியை இவர்கள் தள்ளி விட்டது. இப்பொழுது தெரிய வர, தலைமை ஆசிரியர் அங்கு வந்து,

ஜானு என்ன பேசுற? என்று அதட்டினார் அவர்.

அவள் விசயத்தை சொல்ல, அந்த பசங்க அவ எங்க மீதுள்ள கோபத்தில் பேசுகிறாள். சாட்சி இருக்கான்னு கேட்டான்.

ஜானு சினத்துடன் அவனை முறைத்தாள்.

என்ன முறைக்கிற? அவள நீ தள்ளி விட்டு எங்கள சொல்றீயா? கேட்டான் ஒருவன்.

நானா? என் புவியையா? கொலையா? என்று ஜானு கண்ணில் கண்ணீர் வந்தது.

தலைமை ஆசிரியர் ஒரு ஆசிரியரை அழைத்து, போலீசை கூப்பிடுங்கள் பார்க்கலாம் என்றார்.

இருங்க சார். நானே உங்க முன்னாலே என் அண்ணாவை கூப்பிடுறேன் என்று அழுது கொண்டே ஆதேஷிடம் சென்று போனை கேட்டாள்.

ஆதேஷ், துகி, தாரியும் பள்ளிக்குள் வந்தனர். ஜானு தீனாவிற்கு போன் செய்து அவனை வரச் சொல்லி போனை அணைத்தாள்.

சார்..எங்கள பற்றி தெரிந்தும் நீங்க எங்கள நம்பாம அவ பேச்ச கேக்குறீங்க?

தம்பி..எனக்கு நல்லா தெரியும்..ஜான்வி ரொம்ப சேட்டைக்காரி.. பிடிவாதக்காரி..சரியா படிக்கமாட்டா..சின்ன பசங்களோட ஊரை சுத்துவா. ஆனால்..என்று நிறுத்தியவர் பிரதீப் சாரின் தங்கை .அவரை மாதிரி நேர்மையான பொண்ணு. உங்க மாதிரி பசங்களுக்கு அவ தான் சரி..என்றார்.

தீனா அங்கே அந்த பசங்க பெற்றோருடன் வந்தான். புவனாவுக்கு ஒன்றுமில்லைன்னு தான் உங்க எல்லாரையும் விட்டு வைச்சிருந்தேன்.

என்ன சார்..அவள் உங்க ஆளுன்னா? உங்க இஷ்டத்துக்கு எங்களை ஜெயில்ல போடுவீங்களா? என்று திமிறாக ஒருவன் கேட்டான்.

என்னோட ஆளா? என்று சிரித்த தீனா. அவ படிச்சி முடிஞ்ச பிறகு என்னோட பொண்டாட்டிடா பொறம்போக்கு. நீ செஞ்சதே தப்பு. இதுல திமிறா வேற பேசுற?

பாருங்க பெத்தவங்களே..ஒரு போலீஸ் அவன் முன் வந்து பேசுகிறேன். அவன் எவ்வளவு திமிறா பேசுறான். பேசலாம்..பேசலாம் தான். ஆனா தப்பு செய்துட்டு பேசலாமா என்று அவன் வாயில் ஓங்கி ஓர் குத்து விட்டான். அந்த பையன் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது.

இது தான் கடைசி எச்சரிக்கை எல்லாருக்கும்.நான் அவனை ஏதாவது செய்தால் புவி கோவிச்சிப்பா. சோ அவங்க நான் விட்டுடுறேன். ஆனால் பிரபசர் சார். உங்க ஸ்கூல் பெயர் கெட்டு போகம இருக்க என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டீங்கன்னா நல்லது.

அதில் உள்ள ஒரு பொண்ணு துளசியும் தான் செய்தாள். அவளும் எங்க தோழி தான் என்றாள்.

அவளை பார்த்த தீனா..தப்பு யார் செய்தாலும் அது தப்பு தான்.

அண்ணா..அவ வீட்ல தான் இருந்தா ஜானு கூற, ஆதேஷும் நாங்க அன்று வந்த போது பதட்டத்துடன் கார் முன் வந்து விழுந்தாள். நாங்க கேட்டப்ப தான் விசயம் தெரிந்து அங்கு போனோம்.

நீங்க பாக்கலையா? தீனா அந்த பசங்க பெற்றோரிடம் கேட்க,

பார்த்தோம். எங்க பசங்க மீது தான் தவறு. இனி நடக்காம பார்த்துக்கிறோம்.

பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் உங்க பசங்க   டீ.சி யை வாங்கிட்டு போங்க.

சார்…என்று அவர்கள் தீனாவை பார்க்க. அவன் தோளை குலுக்கிக் கொண்டு ஆதேஷை பார்த்து சீக்கிரம் வீட்டுக்கு போங்க. நானும் வருகிறேன் என்று கிளம்பினான்.

வகுப்பு தொடங்க எல்லாரும் கிளம்பினார்கள். ஜானு ஆதேஷை பார்த்து நன்றி கூறி போனை கொடுத்து விட்டு திரும்ப, அங்கு வந்த ஒரு பொண்ணு, இவங்க யாரு ஜானு? என்று மூவரையும் பார்த்து கேட்டாள்.

இவங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க என்றவுடன் துகிராவிற்கும் ஆதேஷிற்கும் கோபம் வந்தது.

ஜானு என்ன பேசுற? துளசி கேட்க, ஜானு வேறு பக்கம் கண்ணை கட்டினாள். அங்கே ஒருவன் ஜானுவை பார்த்தவாறு நின்றிருந்தான்.

ஜானு..என்று துகி முன்னேற, அவளது முகத்தை உற்று பார்த்த தாரிகாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. நேற்று என் முன் ஆதுவை மாமான்னு பேசுனா? ஆனா இப்ப..யாரோ போல் பேசுகிறாள். இதில் ஏதோ உள்ளது என்று உறுதியாக நம்பிய தாரிகா துகியை நிறுத்தி, அவள விடுங்க..

எப்படி விடுறது தாரி. அவ ரொம்ப ஓவரா போறா? நாம விருந்தாளியா? விருந்தாளியா? என்று டென்சனா பேசிய ஆதேஷிடம் உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம்? உன்னை விட துகிரா தான் கோபப்படணும் தாரிகா வினவ,

ஆதேஷால் ஏதாவது கூற முடியுமா? என்ன? அவன் அமைதியாக துகிராவிடம் அவளுக்கு புவனா மீதுள்ள கவலையை நாம எல்லாரிடமும் காட்டுகிறாள். இடைவேளையின் போது அவளிடம் பேசி விட்டு செல்லலாம் என்று தாரிகா கூற, துகிரா ஒத்துக் கொண்டாள்.

ஆதேஷ் தான் கோபமாக நாம் எதுக்கு அவளுக்காக காத்திருக்கணும்? அவ பேசியது தவறு.

கொஞ்ச நேரம் அமைதியா இரு ஆது. நீங்க அவள கவனிக்கவேயில்லை. இன்னும் ஏதோ சரியில்லை என்று தாரிகா எடுத்துரைக்க இருவரும் அமைதியானார்கள்.

ஆதேஷை பார்த்து விட்டு வகுப்பிற்கு சென்றாள் ஜானு. துளசியும் துருவும் ஜானுவுடன் சென்றனர்.

பள்ளிக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர் ஆதேஷ், துகி, தாரிகா. கொஞ்ச நேரத்தில் ஜானுவும் துளசியும் பதட்டத்துடன் வகுப்பிலிருந்து வெளியே வந்தனர். ஜானு இவ்வாறு தான் எப்பொழுதும் செய்வதால் ஆசிரியரும் பெரிதாக எண்ணவில்லை.

வகுப்பு தொடங்கி பத்து நிமிடம் தான் ஆகிறது. அதற்குள் இருவரும் எதுக்குடா வெளிய வாராங்க? துகிரா கேட்க, தாரிகா இருவரையும் இழுத்துக் கொண்டு மறைந்து கொண்டாள்.

என்ன தாரி? ஆதேஷ் கேட்க, அங்க கவனி என்று அவள் கூற, துளசி நீ வராதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் ஜானு.

ஜானு துருவனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.

புரியுது துளசி. ஆனால் இன்னிக்கே முடிச்சிட்டா நல்லது.

வேண்டாம் ஜானு பயமா இருக்கு.

துளசி நீ பயந்து என்னையும்  பயமுறுத்தாதே! அவன் எழுதியதை மட்டும் பத்திரமா வைச்சிரு. அவன் தான வரச் சொல்லி இருக்கான். இப்ப போகலைன்னா பள்ளி முடிந்த பின் தொந்தரவு செய்வான். தேவையில்லாமல் துருவுக்கும் அவனுக்கும் பிரச்சனை வரும். துரு ஏற்கனவே வலியோட தான் இருக்கான். நாமே பார்த்துக்கலாம்.

அவனை பற்றி தெரிந்தும் எப்படி பயப்படாமல் இருக்க ஜானு. உன்னோட தைரியம் எனக்கு இல்லை. உனக்காக தான் வருகிறேன். சும்மாவே உன் பின்னே சுற்றுவான். அழகான பொண்ண பார்த்தால் விடவும் மாட்டான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

என்ன பேசுறாங்க தாரி? ஆதேஷ் கேட்க, ஆது ஜானுவுக்கு லெட்டர் எழுதி ஒருவன் வர சொல்லி இருக்கான். அவள் பின் தான் சுற்றுவானாம்..

ஜானுவுக்கு தைரியம் அதிகம் தான் துகிரா சொல்ல,அது தைரியம் இல்லை..திமிறு என்று திட்டினான் ஆதேஷ்.

அய்யோ..துளசி எனக்கும் பயமா தான் இருக்கு. துருவன் பக்கம் இருந்ததால் தைரியமா இருப்பேன். ஆனால் இப்ப பயமா தான் இருக்கு. அவன் புவனாவுக்காக உதவ சென்று அதிகம் மனதாலும் உடலாலும் காயத்துடன் இருக்கிறான். எனக்காக வந்து அவனுக்கு ஏதாவது ஆனால் என்னால் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது.

நான் யாருக்கும் இந்த அளவு பயந்ததில்லை. இவனை பார்த்தால் பயமாக தான் இருக்கும். காட்டிக் கொள்ளாமல் பேசி சமாளிக்க பார்ப்போம்.

என்ன பேசி சமாளிக்க போறீயா? அவன் மட்டும் இருந்தால் கூட சமாளிக்கலாம். அவன் நண்பர்கள் இருந்தால் என்ன செய்வதுடி..பயமா இருக்கு.

சரி..நீ போ. நான் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னை தனியே அந்த பொறுக்கியிடம் விடவா? நானும் வருகிறேன் என்று துளசியும் ஜானுவும் செல்ல, பேச்சு சத்தமே இல்லை.

ஜானு, துளசியை அவனுக ஏதும் செய்து விடாமல்டா. பயமா இருக்கு துகிரா கூற, வாங்க உள்ள போகலாம் என்று வாட்ச் மேனிடம் பேச அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

துகிரா பிரதீப் பெயரை கூற, அவர்களை உள்ளே விட்டார் அவர்.

வாங்க தேடலாம் என்று ஆதேஷ் தனியாக ஒரு பக்கமும், துகிரா தாரிகா சேர்ந்து ஒரு பக்கமும் சென்றனர்.

யாருக்கும் நான் பயந்ததேயில்லை. அவனை பார்த்தாலே பயமா இருக்கும் என்ற ஜானுவின் குரல் ஆதேஷ் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது. அவளை விரைந்து தேடினான்.