அத்தியாயம்10

வீட்டிற்குள் வந்த மேகா பெருமூச்சு விட்டு, அவள் அப்பாவை பார்க்க சென்றாள். அவர் இல்லை என்றதும் அவள் அறைக்கு சென்று ஆடையை மாற்றி அறையின் ஓரிடத்தில் தொங்க விட்டு, நீ எனக்கு ஸ்பெசல் என்று வெளியே வந்து ஒரு காரை எடுத்து அவள் அப்பாவை பார்க்க சென்றாள்.

அப்பாவிடம் சென்று நந்துவை காதலிப்பதாக கூறினாள். அவர் காச்பூச்சென்று கத்தினார். அர்ஜூனுக்கு முன் கொஞ்சமும் தகுதி இல்லாதவன் என்று அவர் கத்த,

அர்ஜூனை முன் அவனை வைத்து பேசாதீர்கள்? என்று அவள் முதன் முறையாக சத்தமாக பேசினாள்.

உனக்கு அவ்வளவு தைரியம் வந்து விட்டதா? அவளை அடிக்க வந்தார். அவரது கையை தடுத்து, நான் உங்க பொண்ணு. தெரியுதா? இல்லையா? கத்தினாள்.

என்னோட பிஸினசுக்கு அர்ஜூன் தான் சரியா இருப்பான் அவர் கூற, உங்களுக்கு பிஸினஸ் தான் பிரச்சனை என்றால் நான் பிஸினஸை பார்க்கிறேன். ஆனால் நந்துவை தான் திருமணம் செய்து கொள்வேன்.

யோசித்த அவர் சரி. உன் பொறுப்பில் நாளையே ஒரு கம்பெனி பொறுப்பை தருகிறேன். நீ நல்ல படியாக நடத்தினால் அவனையே திருமணம் செய்து கொள் என்று அவர் கூற, அங்கிருந்த அவள் அப்பாவின் பணியாளிடம் அவள் விதிமுறையை கூறி ஒப்பந்தம் தயார் செய்ய சொன்னாள்.

அவள் அப்பா சிரித்து விட்டு, உனக்கு பிஸினஸ் பற்றி என்ன தெரியும்? நீ தோற்க தான் போகிறாய்? என்றார்.

நானும் வெற்றியடைவேன். என் காதலையும் வெற்றி அடைய வைப்பேன் என்றாள் உறுதியாக.

பணியாள் ஒப்பந்தம் எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அவர் அதை பார்த்து மேலும் சிரித்தார்.

அதில் மூன்று வருடங்கள் கேட்டிருந்தாள். அதற்குள் தனியே ஒரு கம்பெனியும் நான் நடத்திக் காட்டுகிறேன் என்ற சவால் வேற. நான் வெற்றியடைந்து விட்டால் எனக்கு நந்துவை நீங்களே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

சரிம்மா. நீ இதுல வெற்றியடைந்தால் என்று சிரிப்புடன் நானே உனக்கு அவனை திருமணம் செய்து வைக்கிறேன் என்றார்.

மாத்தி பேசுனீங்க. உங்க மானம் மரியாதை போகும் அளவு செய்து விடுவேன் என்று வெளியே வந்தாள். அய்யோ..எந்த தைரியத்துல இப்படி பேசிட்டு வந்தேன். நாளைக்கே மாத்துன்னா எப்படி முடியும்? போச்சு..என்று தலையில் அடித்து கொண்டவளுக்கு அர்ஜூன் நினைவு வந்தது.

கைரவ் தாரிகாவுடன் ஹாஸ்பிட்டல் உள்ளே வந்த நந்து அவர்களை பார்த்து விட்டு சென்றான். தாரிகா வெளியே இருக்க ஸ்ரீ விழித்து கண்காணிப்பதை பார்த்த கைரவ், ஸ்ரீ காதருகே சென்று அர்ஜூனை சைட் அடிக்கிறியா?

கண்ணை மூடியவாறே தெரியுதுல..நீ போடா என்றாள்.

அடப்பாவி என்று வாயில் கை வைத்த கைரவ் அர்ஜூனை பார்த்தான். அவன் லேப்பில் மும்பரமாக இருக்க, இவர்களை கவனிக்கவேயில்லை.

அர்ஜூன்,நான் அபி, தருணை பார்த்துட்டு கிளம்புறேன் என்று ஸ்ரீயை பார்த்தான். அமுக்குனி மாதிரி இருந்துட்டு என்ன வேலையெல்லாம் பாக்குறா இந்நிலையிலும் என்று ஸ்ரீயை திட்டிக் கொண்டே வெளியே சென்று அர்ஜூன் வேலையா இருக்கான். தொந்தரவு செய்யாதே! தாரிகாவிடம் கூற,

சீனியர் நீங்க தான் இரண்டு பேரையும் தொந்தரவு செய்றீங்க? என்றாள்.

அப்ப ஸ்ரீ விழித்திருப்பது உனக்கு தெரியும்.

நாம் வரும் போதே அவள் விழித்து தான் இருந்தாள். எனக்கு தெரியும் என்றாள்.

போங்கடா நீங்களும் உங்க குடும்பமும் என்று கைரவ் வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டில் வேலை செய்பவர்கள் சைலேஷ் நித்தி ஒரே அறையில் இருப்பதை பற்றி பேசினார்கள்.

என்ன? என்று அதிர்ந்தான். அந்த பொண்ணு அழுத சத்தம் கேட்டது என்று அவர்கள் பேச, அவர்கள் அருகே சென்று நித்தி அழுதாலா?

ஆமாம் சின்னய்யா..அழுதாங்க. ஆனால் உங்க அண்ணா காரணமில்லை என்று தெளிவாக தெரிந்தது.

அது நீங்க சொல்லலைன்னாலும் எனக்கு தெரியும் என்று அவன் சினத்துடன் கூற, மன்னிச்சிருங்க..என்று விலகி சென்றனர்.

என்னவாக இருக்கும்? என்று சிந்தித்தவாறு சாப்பிட அமர்ந்தான். பின் அவனறைக்கு சென்று அர்ஜூன் முகம் சரியில்லையே என்று சிந்தித்தான்.

அர்ஜூன் லேப்பில் மும்பரமாக இருக்க, ஸ்ரீ அர்ஜூனை ரசித்துக் கொண்டிருந்தாள். அர்ஜூனை மேகா அழைக்க, முறைத்தவாறு போனை எடுத்து அவளை பேச விடாமல் திட்ட ஆரம்பித்தான்.

உனக்கு அறிவே இல்லையா மேகா? தனியா குடிச்சுக்கிட்டு இருந்திருக்க. எவனாவது ஏதாவது செய்தால் என்ன செய்வது? ச்சே..நீ எதுக்கு என்னை அழைத்தாய்? அவன் எத்தனை வருடங்களாக உன்னை காதலிக்கிறான்? ஒரு முறை கூட உனக்கு ஏதும் தோன்றவேயில்லையா? அதுவும் என் பின்னே சுற்ற அவனை பயன்படுத்தி இருக்கிறாய்? பசங்க காதல் அவ்வளவு கேவலமா போச்சுல..கத்தினான்.

ஸ்ரீ கண்ணில் நீர் வழிந்தோட, அவளும் தானே அர்ஜூனை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவள் கஷ்டத்தை பங்கிட்டது அவன் தானே? அவன் மனதில் இருந்த வலியை மேகாவிடம் கொட்டி அவளை காயப்படுத்துகிறேன் என்று அவனது ஏஞ்சல் காயப்படுவது தெரியாமல் பேசிக் கொண்டே போனான். ஸ்ரீயால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல்  கண்ணை நன்றாக துடைத்து விட்டு, அவளது ஆடையை இறுக்கமாக பற்றி கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கண்ணை மூடினாள்.

மேகாவும் தேம்பி தேம்பி அழுதாள். பின்பு தான் அர்ஜூன் அமைதியானாள்.

ப்ளீஸ் அர்ஜூன். என்னை மேலும் நோகடிக்காதே? அழுது கொண்டே, நான் அவனை புரிந்து கொண்டேன். நானும் அவனை காதலிக்கிறேன்.

காதலிப்பதாக நடித்து மேலும் அவனை காயப்படுத்தாதே அவன் சினம் பொங்க மேகாவிடம் கத்தினான்.

இல்ல அர்ஜூன். அவன் இல்லாத போது தான் அவன் காதலும் புரிந்தது. அவன் மீது எனக்குள்ள காதலும் புரிந்தது. சாரி அர்ஜூன். அன்று நீ என்னை வேண்டாம் என்றதால் கோபத்தில் சிந்திக்காமல் பேசி விட்டேன்.

அவனிடம் சொன்னாயா?

இல்லைடா..அவனிடம் சொல்லும் முன் அப்பாவிடம் சொல்லலாம் என்று அவள் அப்பாவுடம் பேசியதை கூறினாள்.

என்ன? ஏய்..உன்னால முடியாது என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் நீ தான் எனக்கு உதவ வேண்டும். எனக்கு நந்து வேண்டும்.

ஓய்..என்ன? மிட்டாய் வேண்டும் என்பது போல் கேட்கிறாய்?

அர்ஜூன்..நான் இந்த நேரம் கேட்டுள்ள மூன்று வருடம் அவனுடன் பேச முடியாது. அதனால் பார்த்துக் கொண்டே இருக்கணும் என்று தான் நம் கல்லூரியிலே அதற்கான பிரிவில் சீட் வாங்கப் போகிறேன்.

நீ தான் எனக்கு அனைத்தையும் சொல்லித் தரணும்.

நீ பைத்தியமா? நாளைக்கே ஒண்ணுமே தெரியாம கம்பெனிக்கு போய் என்ன செய்யப் போற? உனக்கு பிடிச்ச போட்டோகிராபிய விட்டுட்டியா? என்னால நம்ப முடியல..

ஏன் அர்ஜூன். நீ ஸ்ரீக்காக விடலையா? என்று கேட்டாள். அர்ஜூன் திரும்பி ஸ்ரீயை பார்க்க, அவளது புருவத்தில் இருந்த முடிச்சை பார்த்து, கெட்ட கனவு காண்கிறாளோ? என்று போனை ஸ்பீக்கரில் போட்டு மெதுவா பேசு மேகா என்று ஸ்ரீ தலைப்பக்கம் அமர்ந்து அவளது தலையை பிடித்து விட்டான்.

என்னடா சத்தத்தையே காணோம். நீ அவளுக்காக தானே கல்லூரி மாறினாய். கோர்ஸ் மாற்றி ஏதோ செய்து கொண்டிருக்கிறாய்? ஏன் என் காதலுக்காக நான் செய்யக் கூடாது?

இங்கே பாரு மேகா சொல்லும் போது நல்லா தான் இருக்கும். ஆனால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதுவும் நீ சும்மாவே வகுப்பை கவனிக்கவே மாட்ட. நீ கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்ட உனக்கு தூங்க கூட நேரமிருக்காது.வகுப்பை கவனித்துக் கொண்டு மாலை கம்பெனிக்கு செல்லணும். இதில் இன்னொன்று நீயாக தொடங்க போகிறாயா?

எவ்வளவு பணம் வேண்டும் தெரியுமா? நீ பெரிய ரிஸ்க் எடுக்குற மேகா?

அவள் அழுது கொண்டு, எனக்கு என்ன செய்வதென்று தெரியலடா? நான் ஒத்துகலைன்னா. கல்யாணம் தான். உன்னை ஒத்துக்க வைக்க என் அப்பாவால் முடியலைன்னாலும் வேற யாரையாவது பார்த்து முடிவு செஞ்சிருவாங்க.

கண்ணை துடைத்த மேகா, என்னால் முடியும் அர்ஜூன். கண்டிப்பா முடியும் என்றாள்.

நீ நந்துவிடம் இதை சொல்லலாமே?

எப்படி சொல்ல சொல்ற? அவனை எனக்காக அவனுடைய கனவை விட்டு வரச் சொல்ல சொல்கிறாயா? முடியாதுடா. அவன் கனவை நோக்கி அவன் செல்லட்டும்.

மேகா உன்னுடைய ஆசை? அர்ஜூன் கேட்க, இப்ப எனக்கு அவனை விட பெரியதாக எதுவும் தெரியவில்லை. ப்ளீஸ் அர்ஜூன் உன்னை விட யாரையும் எனக்கு தெரியாது.

தெரியாதா? உனக்கு தான் பெரிய சப்போர்ட் இருக்குமே? மிஸ்ஸஸ் கமலி இருக்காங்கள?

அர்ஜூன்..நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? உன்னோட அம்மாவுக்கு  உன்னுடனே செலவழிக்கவே நேரமில்லை. எனக்கு அதுவும் உன்னை வேண்டாம் என்று சொன்ன பின் உதவுவாங்களா?

ப்ளீஸ் அர்ஜூன். படிக்க கெல்ப் பண்ணுடா.

சரி, நான் என் நந்துவுக்காக செய்கிறேன். நீ முதலில் உன் அப்பாவிடம் இரண்டு நாட்கள் நேரம் கேள். திங்கட்கிழமை முதல் பார்க்கிறேன். ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி கேள். பின் நாளை முதல் வேலையாக அந்த கம்பெனி மூத்த ஆட்களை பற்றி அறிந்து கொண்டு அவர்களை உன் கைக்குள் போட்டுக் கொள். அது உனக்கு நன்றாகவே தெரியும் என்று சிரித்தான்.

நான் அந்த கல்லூரி சீனியர் யாரையாவது அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ அவனிடம் நேரடியாகவே எல்லாவற்றையும் கூறி அவன் மூலம் பிஸினஸ் பற்றி அறிந்து கொள்.

என்னால் முடிந்தது இவ்வளவு தான் மேகா. எனக்கு நிறைய வேலை இருக்கு என்றான்.

கதவை திறந்து உள்ளே வந்த மேகாவோ.. தெய்வமே என்று அர்ஜூன் காலிலே விழுந்தாள். அர்ஜூன் அதிர்ச்சியுடன் மேகா என்றான். அவளை எழச் சொல்லி, மேலிருந்து கீழ் வரை அவளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

ஒரே நாள்ல எப்படி மாறிட்ட? இது நீ தானா? அர்ஜூன் சிரித்துக் கொண்டே ஆச்சர்யப்பட்டான்.

அர்ஜூன் நாளைக்கு ஷாப்பிங் போகணும். வாரீயா? தனியா சென்றதேயில்லை.

நான் ஏற்கனவே கூறிட்டேன். எனக்கு நிறைய வேலை இருக்கே. நீ எப்பொழுதும் போல் நந்துவையே அழைத்துக் கொள்.

அவனையா? என்று யோசித்து முடியாதேடா. முன்பு ப்ரெண்டா மட்டும் இருந்தான். அவனை அழைத்துக் கொண்டே சென்றேன். ஆனால் இப்பொழுதும் அதே போல் எப்படிடா முடியும்? நான் அவனுடன் சென்றால் நானே அவனிடம் எல்லாவற்றையும் கூறி விடுவேன். அவன் தான்டா என்னோட நெகட்டிவ்.

அவனுக்கு நான் செய்யப்போவது தெரிந்தால் அவன் ரொம்ப கோபப்படுவான்.

தெரியுதுல? இதெல்லாம் தேவையா?

அர்ஜூன், நானும் கேட்டு விடுவேன் என்று ஸ்ரீயை பார்த்தாள். ஆமாம் இவளுக்கு என்ன ஆச்சு? எப்ப பாரு ஹாஸ்பிட்டலயே இருக்கா.

அது எதுக்கு உனக்கு?

என்னால் முடிந்ததை சொல்லிட்டேன். அவ்வளவு தான்.

அர்ஜூன் நந்துவிடம், என் காதலையோ திட்டத்தையோ கூறி விடாதே?

நீ சொல்லாம செய்தால் அவனுக்கு கோபம் வரும். நீ சொல்லி விட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

இல்ல அர்ஜூன் சொன்னால் அவன் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். வேண்டாம் சொல்லாதே! பின் வருவதை அப்பொழுது கவனித்துக் கொள்ளலாம்.

சரி நான் நாளை உனக்கு எல்லாவற்றையும் கூறுகிறேன். நீ என்னை பார்க்க தவிர்ப்பது நல்லது.

ஏன்டா, உங்கள தொந்தரவு செய்து விட்டேனோ?

பைத்தியம் மாதிரி பேசாதே மேகா.

நீ கிளம்பு..

நீ என்னை விரட்டுவதிலே குறியாய் இருக்க?

அவள் பார்த்தால் தவறாக எண்ணிக் கொள்வாள் என்று பயமாக உள்ளதோ?

போதும் மேகா. நீ கிளம்பு. என்னை சந்திக்க வராதே. போனிலே தொடர்பு கொள்ளலாம் என்று அவளை வெளியே தள்ளினான்.

ஸ்ரீக்கு அர்ஜூன் பேசியது மறுபடியும் நினைவு வந்தது. நாம் தூங்குவது தான் சரி என்று கண்ணை மூடினாள். அவளால் தூங்க தான் முடியவில்லை.

அர்ஜூனுக்கு அழைப்பு வர, போனை எடுத்தார்.

பேபி,..ஊருக்கு போறீங்க போல? கயல் கேட்டாள்.

அர்ஜூன் உள்ளிருந்த அறைக்குள் சென்று சத்தமாக சிரித்தான். ஸ்ரீ பயந்து விழித்தாள்.

என்ன பயமா இருக்கா கயல்விழி சந்திரகாந்த்?

உனக்கு எப்படி தெரியும்?

தெரியுமே? அப்புறம் உங்க பின்னாடி இருப்பவனை சீக்கிரம் நெருங்கி விடுவேன். சொல்லுங்க அந்த ஆளிடம்.

யாருமில்லை. நீ யாரை சொல்ற?

நல்லா நடிக்கிறீங்க? எங்கிட்ட இதெல்லாம் ஆகாது. எனக்கு தெரியும். என்னோட ஸ்ரீயை யாரோயோ வைத்து மிரட்டுறீங்க? அவர் கையல கிடச்சுட்டா. எல்லாமே முடிஞ்சிடும்.

முடிந்து விடுமா? கலகலவென சிரித்தாள் அவள்.

முடியும் என்றான் அழுத்தமாக அர்ஜூன்.

என்ன பேபி,..நீ சொல்றியே? உன்னோட ஸ்ரீ. அவள் உன்னுடையவள் இல்லையே? அவள் தான் வேரொருவனுக்கு சொந்தமாகி விட்டாளே?

அர்ஜூன் பல்லை கடித்துக் கொண்டு, நிறுத்து என்று கத்தினான்.

என்னோட பேபிக்கு கோபம் வருதா?

அர்ஜூன் அமைதியாக இருந்தான்.

பேபி..கவனிக்கிறாயா? உன்னுடைய கஷ்டத்தை விட அவளுக்கு தான் அது அதிக வலியை கொடுத்திருக்கும். எந்த மருந்தும்..சாரி சாரி..உன்னால் கூட அவளுக்கு மருந்தாக முடியாது.

நீ நல்லா அவளை கவனித்தாயா? கண்ணாடி பார்க்கிறாளா? அவள் உடல் அவளுக்கு அருவருப்பை மட்டும் தான் கொடுக்கும்.ஆனா நீ அவ பக்கத்திலே இருக்க போல..நீ இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?

அந்த வலியோடு அவள் உயிரோட வாழ முடியும்ன்னு நினைக்கிறியா? நெவர்..ஒரு நாள் இல்ல..ஒரு நாள் அவள் சாக தான் போறாள். பாரு..

நோ..நோ..அவளுக்கு ஏதும் ஆகாது என்று பதறினான்.

ஆகும்? அவள் கூற,

இங்க பாரு, அவ என்னோட ஸ்ரீ. அவள் தவறான முடிவு எடுக்க மாட்டாள். அது மட்டுமல்ல நாய் கடிச்சா எல்லாரும் சாக நினைக்க மாட்டாங்க. என்னோட ஸ்ரீயும் அதிலிருந்து வெளியே வருவா. வர வைப்பேன் என்றான் அர்ஜூன் நம்பிக்கையுடன்.

அவள் ஒன்றும் அவனை காதலிக்கவில்லை. அவள் அருகே இனி யாராவது வந்தால் கொல்ல கூட தயங்க மாட்டேன். அந்த ஜிதின் கிட்ட சொல்லிடு என்று போனை வைத்து தலையை பிடித்தான்.