ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 116.

பவியின் வீட்டை அடைந்ததும், பவி அம்மா..அம்மா..என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். இரு நாங்களும் வருகிறோம் என்று அகிலும் நித்தியும் அவள் பின்னே சென்றனர். அகிலுக்கு அர்ஜூன் போன் செய்ய, அவன் அதை பார்த்து,

இவன் வேற? என்று போனை அணைத்து வைக்கிறேன் என்று ஆன் செய்து விட்டு அவனுடைய பாக்கெட்டில் திணித்தான்.

அவள் சத்தம் கேட்டு ஓடி வந்தது ஜூலி. அதை கையில் தூக்கி பின் இறக்கி விட்டு, ஜூலி நீ உள்ளே போ..என்று அதனிடம் அமைதியாக பேசி விட்டு, அம்மா..என்று மீண்டும் கத்தினாள்.

ஏன்டி, கத்திக்கிட்டு இருக்க? அவளருகே வந்தார். ருத்ர காளியாய் நின்றிருந்தாள் பவி.

என்ன ஆச்சுடா பாப்பா? அவள் அப்பா வந்தார்.

நீங்க என்னை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க? கத்தினாள். வேலைசெய்பவர்களும் வந்து வேடிக்கை பார்க்க,

என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அகில் சத்தமிட்டான்.

நீ உன்னோட வாயை மூடிக்கிட்டு பாரு என்றாள் சினத்துடன். அவன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

என்னது இதெல்லாம் என்று ஸ்ரீயின் புகைப்படத்தை எடுத்து போட்டாள்.

இதெல்லாம் புகைப்படமா பிரிண்ட் போட்டுட்டியா? உன் கல்யாணத்தோட போடலான்னு நினைச்சேன்டா அப்பா கூற,

ஓ..என்றவள் இதுக்கு என்ன சொல்றீங்க? என்று அகில் குடும்பம்,ஸ்ரீ குடும்பம் சேர்ந்த புகைப்படத்தை தூக்கி எறிந்தாள்.

திகைப்புடன் அவளுடைய அம்மா கண்ணீருடன் அப்படியே சோபாவில் அமர்ந்தாள்.

பாப்பா..என்று அப்பா அவளருகே வர, வராதீங்க..என்று அழுதாள்.அவளுடைய அம்மா அழ, அப்பா அவரிடம் சென்று அவரது கையை பிடித்துக் கொண்டார்.

கண்ணீரை தவிர்த்து, அவர்களை முறைத்துக் கொண்டு, நான் யாரு சொல்றீங்களா? இல்லையா? கதறினாள்.

ஆமாம்மா. நீங்க எங்க பொண்ணு இல்லைடா என்று குலுங்கி அழுது கொண்டே, மன்னிச்சிருடா பாப்பா என்று அந்த புகைப்படத்தில் அகில் இருப்பதை பார்த்து,

தம்பி, நீங்க..எந்த ஊரு? கேட்டார். அகில் கூற,

ஸ்ரீயின் அம்மா,அப்பா பெயரை கூறி அவர் தான் உன்னுடைய அம்மா, அப்பா என்று கூறினார்.

அகிலும் நித்தியும், அங்கிள் என்றனர் கோரசாக.

உட்காருங்கப்பா. இவ உங்க பக்கத்து ஊரு தலைவர் வேலீஸ்வரனின் தங்கை தான் என்றார்.

மற்றுமொறு அதிர்ச்சி அகில், நித்திக்கு.

என்ன சொல்றீங்க? ஆன்ட்டி அவரு தங்கையா நீங்க?

ஆமாம். நாங்க லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டோம். எங்க வீட்டுக்கு பிடிக்கலை. அதனால இங்க வந்துட்டோம். என்னுடைய கர்ப்பத்தின் இறுதி காலத்தில் தான் ஊருக்கு சென்றோம். என்னுடைய அண்ணாவிற்கு மரியாதை கெட்டு விட்டதாம். எங்களை சேர்க்கவேயில்லை. இவர் அங்கேயே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தார். இரண்டே நாட்களில் வலி வந்து குழந்தை பிறந்தது. ஆனால் அது இறந்து தான் பிறந்தது. அது தாங்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஹாஸ்பிட்டலையே அலற வைத்தேன். அதே இடத்தில் தான் சங்கரியும் இருந்தாங்க.அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அவர்களுடன் அவரது கணவரை தவிர வேறு யாருமில்லை.

என்னிடம் அதில் ஒரு குழந்தையை கொடுத்து சமாதானப்படுத்தினார். அப்பொழுது தான் பவிம்மா முதலாய் என் கையில் நீ வந்தாய். ஆனால் உன்னுடைய அம்மா என்னிடம் உன்னை கொடுக்கவே மாட்டேன் என்றார்கள். எனக்கு நீ வேண்டும் என்று பிடிவாதமாய் அந்த ஹாஸ்பிட்டல் மாடிக்கு சென்று தற்கொலை செய்ய முயன்றேன்.

அதனால் மனமிறங்க என்னிடம் உன்னுடைய அம்மாவே ஓடி வந்தார். அவரே குழந்தையை கொடுத்து விட்டு அழுது கொண்டே சென்றார்.அவர் அழுது கொண்டு செல்வது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் நானும் அவர் பின் சென்று அவரை நிறுத்தி, குழந்தையை கொடுத்தேன்.

ஆனால் அவர் நீயே பாப்பாவை வைத்துக் கொள். நல்லபடியா வளர் என்று அழுது கொண்டே, இவளை நான் இப்பொழுது தூக்கினால் கண்டிப்பாக என்னால் உன்னிடம் கொடுக்க முடியாது. சீக்கிரம் என்னிடமிருந்து சென்று விடு என்று கத்தி அழுதார்.

இவர் தான் வேகமாக என்னை இழுத்துக் கொண்டு இங்கே அழைத்து வந்து விட்டார். அதற்கு பின் உன் அம்மா ஒரு சில முறை தூரத்தில் ஊரிலிருந்து வந்து பார்த்து விட்டு சென்றதை பார்த்து கீழே வருவதற்குள் அவர் என்னை பார்த்து கிளம்பி விடுவார்.

நான் அவரிடம் பேச வேண்டுமென்று நினைத்தேன். இப்ப எப்படி இருக்காங்க? அந்த பொண்ணு வளர்ந்திருப்பாள? ஆசையுடன் அவர் கேட்டார்.

அவங்க இறந்துட்டாங்க என்றான் அகில் வெறித்தவாறு.

என்ன சொல்றீங்க தம்பி? அப்பா கேட்க, அகில் சினத்துடன் அவங்கள கொன்னுட்டாங்க என்றான்.

கொலையா? என்று பவி அதிர்ந்து அகிலருகே வந்தாள். சும்மா இரு அகில் என்றாள் நித்தி.

நித்தியை முறைத்து பார்த்த பவி, கண்ணீருடன் அகிலிடம் சென்று, அவங்கள எதுக்கு கொல்லணும்? யாரு கொன்னாங்க? அவனை பிடித்து உலுக்கிக் கொண்டு அவன் மீதே சரிந்தாள்.

ஏற்கனவே இருந்த டென்சன் அவளை பெற்றெடுத்தவர்கள் இறந்தது. அதுவும் கொலை என்றதும் அவளது வெகுளியான மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவள் சரிய, பவி..பவி..என்று அவன் பதற, அவளது அம்மா, அப்பா பவிம்மா..பவிம்மா.. என்று அழுது கொண்டிருந்தனர். நித்தி வேகமாக தண்ணீரை எடுத்து வந்து தெளித்தாள்.

இதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன் கையிலிருந்து போன் நழுவி கீழே விழுந்தது. கண்ணீருடன் அப்படியே அமர்ந்தான்.

வெளியே வந்த தாரிகாவும் ஸ்ரீயும் அர்ஜூன் அருகே வந்து, என்ன ஆச்சு அர்ஜூன்? அர்ஜூன்..அர்ஜூன்..என்று பதறினர். அவன் வாஸ்பேசனில் தண்ணீரை திறந்து விட்டு, சட்டு சட்டு என முகத்தில் அடித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ அவனை பிடித்து இழுத்து, அவனது முகத்தை நிமிர்த்தி துவாலையால் துடைத்து விட்டு, மெதுவாக கேட்டாள். அவன் அவளை கட்டிக் கொண்டு, நான் சீக்கிரம் வந்திருக்கணும். தப்பு செய்து விட்டேன் என்று ஏங்கி அழ ஆரம்பித்தான்.

என்னன்னு சொல்லிட்டு அழுடா? தாரிகா கத்த, சுயம் வந்தவன் தரையில் விழுந்த போனை தேடினான். போன் கைக்கு கிடைக்கவும் அதை காதில் வைத்து பார்த்தான்.பவி எழுந்த சத்தம் கேட்க, ஸ்ரீயை நகர்த்தி விட்டு, வேகமாக அவன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டான். வெளியே இருவரும் கலக்கத்துடன் அர்ஜூன்..அர்ஜூன் கதவ திறடா. பயமா இருக்கு.ஏதும் பிரச்சனையா? கேட்டனர்.

ஒன்றுமில்லை என்று மெசேஜை மட்டும் ஸ்ரீக்கு தட்டி விட்டு, நடப்பதை கவனிக்கலானான்.

எழுந்த பவி கேட்டது யார் அவர்கள்? என்று தான். அகில் அமைதியாக இருக்க, அவனது சட்டையை பிடித்து சொல்லுடா என்று கத்தினாள்.

ஹே ஸ்ரீ? எங்க இருக்கா? அவ நல்லா தான இருக்கா? கேட்டாள்.

ம்ம்..மட்டும் பதில் தந்தான்.

தம்பி, அன்று நீங்க பேசியது அந்த பொண்ணு பத்தி தானா? அவள் அம்மா கேட்டார். நித்தியும் அழுது கொண்டு ஆமாம்மா..என்றாள்.

என்ன அவளை பத்தி? பவி கேட்க, அவள் அம்மா கண்கள் கலங்கியது.

ஒரு நிமிடம் பவி, சிறுவயதில் ஸ்ரீ போல் தான் இருந்தாயா?

ஆமாம். இப்பொழுது அவளுக்கென்ன?

அப்படியென்றால் இப்பொழுது உன் உருவமும் அவள் உருவத்தை ஒத்ததாக தானே இருக்கணும். ஆனால் நீ..என்று அவன் கேட்க, மூவரும் அவளுடைய அம்மா, அப்பாவை பார்த்தனர்.

அவளுக்கு ஏழு வயதிருக்கும். நாங்க என்னோட அண்ணாவை பார்க்க ஊர் பக்கம் வந்தோம். அன்று ஒரு தம்பதிகள் காரில் வந்து கொண்டிருக்க, அவர்களை பெரிய கன்டெயினர் மோதி விபத்து நடந்தது. காரை திடீர் பிரேக் போட லேசாக பூட்டப்பட்ட காரிலிருந்து பவி பள்ளத்தில் விழுந்தாள். விபத்தில் சிக்கியவர் தான் அவளை காப்பாற்றி மீட்டு கொடுத்தார். அவளுக்கு முகத்தில் பட்ட அடியால் அவளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம்.அதில் அவள் பழைய விசயத்தை மறந்து விட்டாள் என்றனர்.

இன்னும் எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறீரகள்? கத்தினாள் பவி அழுது கொண்டு.

அம்மா..நாங்க எதையும் மறைக்கணும்னு நினைக்கல. உன்னை எப்பொழுது எங்களோட பொண்ணா தான் பார்த்தோம். அதனால் தான் சொல்ல தோன்றவில்லை.நீ இல்லாம எங்களால இருக்க முடியதுடா என்றார் அவள் அப்பா.

இது போல் தானே என்னை பெத்தவங்களும் இருந்திருப்பாங்க? கேட்டாள். அர்ஜூன்,அகில், நித்தி இதை நினைத்து தான் இக்கதையை கேட்டு அழுதிருப்பார்கள்.

அவளுடைய அம்மா அழ ஆரம்பித்தார். நான் வேண்டுமென்று செய்யவில்லை என்று அழுதார். ஏங்க அவளை நம்ம விட்டு போக விட்ற மாட்டீங்கள? என்று அழுதார்.

சரிம்மா என்றார் அவர். பவி அவர்களை முறைத்தாள்.

கண்டெயினர் விபத்தா? எந்த இடத்தில்? நித்தி கேட்டாள்.

அவர்கள் இடத்தை கூற, என்ன அங்கேயா? என்று அகில் நித்தி அதிர்ந்தனர்.

அதுவும் கொலை தான் என்றார் பவியின் அப்பா.

யாருன்னு தெரியுமா? அகில் கேட்க, அவர்கள் நினைவு பின்னோக்கி சென்றது. அவளை காப்பாற்றி அவளுக்கு தண்ணீரை எடுத்து கொடுத்து விட்டு காரின் பின்னே இவர்கள் இருக்க, கை தட்டலும் சிரிப்புமாய் வந்து நின்றார் வேலீஸ்வர்.அவரை பார்த்து அதிர்ந்த இவர்கள் அங்கிருந்த கல் பாறையின் பின் மறைந்து நின்று நடப்பதை பார்த்தனர்.

காரிலிருந்து ஒரு பெண்ணின் குரல், ஏங்க எங்க இருக்கீங்க? என்று ஒரு பெண் வெளியே வந்தார்.தலை முழுவதும் இரத்தம் அந்த ஆளோ பவியை காப்பாற்றி ஒப்படைத்து விட்டு இறந்து விட்டார்.

அய்யோ..உன்னோட புருசன் செத்து போயிட்டான். நீ ஒரு வார்த்தை என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன்னு சொல்லு. அது போதும். உன்னை நான் காப்பாற்றி விடுவேன் என்றான் அந்த மாக்கொடூரன்.

என்னை காப்பாற்று..என்னோட பிள்ளைகளுக்கு அம்மாவாது வேண்டும் என்று கை கூப்பி அழுதார்.என்னோட பசங்க இரண்டு பேரும் சின்ன பசங்க. ப்ளீஸ் என்னை விட்டுடு என்று அழுதார்.

அவர் அந்நிலையிலும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டார். இவர் கோபத்தில் எழ, இவரை நான் தான் தடுத்து விட்டேன். இல்லையென்றால் அவன் எங்களையும் கொன்றிருப்பான். பவி வலியுடன் காயத்தில் அவர் காப்பாற்றி கொடுத்த போதே மயங்கி இருந்தார். தண்ணீர் கொடுத்தும் எழவில்லை. பயந்து கார் பக்கம் வர எத்தனித்த சமயம் தான் அந்த கைத்தட்டல், சிரிப்பு சத்தம் கேட்டு அங்கேயே மறைந்து கொண்டோம்.

அந்த பொண்ணை அவன் தொட வந்த சமயம் அந்த பொண்ணு, நீ என்னை தொட்டு, என் பிள்ளைகளை காப்பாற்றுவதை விட, அவங்க என்னுடைய குடும்பத்தாருடன் இருந்து விட்டு போகட்டும் என்று அவராகவே அந்த பள்ளத்தில் குதித்து விட்டார். ஒரு நிமிடம் என் உயிரே போயிற்று அந்த பெண்ணின் செயலால்.

அதிலிருந்த அந்த பக்கமே நாங்கள் வரவில்லை.

அந்த கண்டெய்னர் நம்பர் பார்த்தீர்களா? நித்தி கேட்டாள்.

ம்..நான் பார்த்தேன்ம்மா என்று கண்ணை மூடி அனைத்தையும் ஓட விட்டார் பவியின் வளர்ப்பு அம்மா.

அது..5552 என்றார்.

அந்த நம்பர் தானா? என்று அகில் வருத்தமுடன் நித்தியை பார்த்து, நித்தி அவங்க..அவங்க..கண்டிப்பா பிரதீப் அண்ணா பெற்றோர்கள் தான் என்றான்.

பிரதீப் அண்ணாவா? பவி தலையை பிடித்தவள், சரியாக அவள் இடத்திற்கு வந்தாள். நித்தியிடம் வந்து, ஸ்ரீக்கு என்ன? சொல்லு..சொல்லு..என்று கத்தினாள் பவி.

நீ இப்பொழுது அதை தெரிந்து கொள்ள வேண்டாம். நீ இவர்களுடன் தான் இருக்க வேண்டும் எப்பொழுதும் போல்.அப்பொழுது தான் நீயாவது பாதுகாப்பாக இருப்பாய்? நம்மை தவிர யாருக்கும் நீயும் ஸ்ரீயும் சிஸ்டர்ஸ் என்று தெரிய வேண்டாம். தெரிந்தால் அவர்கள் உன்னையும் சும்மா விட மாட்டார்கள்.

யார்ன்னு சொல்லுடா? அவளை கொல்ல பார்க்கிறார்களா? கேட்டாள். அகில் இரு என்று அவனை நிறுத்தி அவளுக்கு தெரிந்த அனைத்தையும் கூற, இத்தனை நாள் உடன் பிறந்தவர் யாருமில்லாமல் வாழ்ந்த பவிக்கு தனக்கு ஒரு அக்கா இருக்கிறாள் என்று மகிழும் முன்னே அவள் பட்ட கஷ்டம் தெரியவும் உடைந்து அழுதாள்.

தம்பி..நான் இருக்கேன். அவளும் எனக்கு பொண்ணு தான்ப்பா. அந்த பொம்பளையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பவியின் வளர்ப்பு அப்பா கூற, நோ..அங்கிள் என்ற அகில்,

உங்களை பற்றி தெரிந்தால் உங்களை வைத்து, அவர்கள் உடனே ஸ்ரீயை கொல்ல வாய்ப்பு உள்ளது. அவளுக்கு உதவுவது நண்பர்கள் மட்டுமே. அதனால் தான் அவள் சவால் விடுத்திருக்கிறாள். அவளுக்கு குடும்பமாக அவள் முன் நீங்கள் வந்தால் அந்த பொம்பளைக்கு எளிதாகி விடும்.

நித்தி இது யாருக்கும் தெரியக்கூடாது நம் நண்பர்களுக்கும். முக்கியமாக ஸ்ரீக்கும் அர்ஜூனுக்கும் என்றான் அகில்.

இல்லை. நான் அவளுடன் தான் இருக்கப் போகிறேன் என்று பவி எழுந்தாள்.

ம்ம்..போ. அவள் அர்ஜூன் வீட்டில் தான் இருக்கிறாள் முகவரி தரவா? என்று சொல்லி விட்டு, உனக்கு அறிவில்லை. நான் இவ்வளவு தெளிவாக கூறுகிறேன். அவளுடன் இருக்க போகிறேன் என்று கூறுகிறாய்? அவளை நீயே கொன்று விடு. முதலில் செத்தால் அவள் தான் செத்திருப்பாள். ஆனால் அவளுக்கு உதவ பத்து பேருக்கு மேல் இருக்கிறோம். எங்கள் அனைவரையும் சேர்த்து கொன்று விடு என்று கனலுடன் கத்தினான்.

அவளுடைய அப்பா கூட அகில் கோபத்தில் மிரண்டு தான் போனார். தருண், நிவாசை அவர்கள் தான் கொல்ல பார்த்தனர். தருண் அவர்களது கம்பெனி பற்றி விசாரித்ததற்கே கார் அடித்து கொல்ல பார்த்தனர் என்று நிவாஸை பற்றி கூற அவன் சொல்வதற்குள் சைலேஷிடமிருந்து அகிலுக்கு போன் வந்தது.

கண்ணை துடைத்தவன் சொல்லுங்க சார் என்றான்.

ம்ம்..ஓகே சார். அவள் பக்கத்தில் தான் இருக்கிறாள். நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறோம் என்று வைத்து விட்டு நித்தியிடம், சைலேஷ் சார் தான்.அவர் பேசணுமாம்.

வா..என்று அவள் எழுந்தாள். நான் உங்களுடன் சேர்ந்து அவளை பார்க்க மட்டுமாவது வரவா? ப்ளீஸ் கெஞ்சினாள் பவி.

அவளை பார்த்து ப்ரெண்டா வரலாம் என்று அகில் கூற மலர்ச்சியுடன் பவி எழுந்தாள்.

தயங்கிக் கொண்டு நித்தி, அகில் பிரதீப் அண்ணாவிடம் அவங்க பெற்றோரை பற்றி கூறவில்லையா?

நித்தி, அண்ணா பொறுமையா இருந்தாலும் இந்த விசயத்துல கண்டிப்பா கோபத்துல ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? உனக்கே தெரியும் அவங்கள அவங்க சித்தப்பா தான் கொன்று விட்டாரென்று தவறாக புரிந்து கொண்டு ஜானுவையும் தனியே அழைத்து வந்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவு வளர்ந்திருக்கிறார்.அவரிடம் சொன்னால் கொல்ல கூட தயங்க மாட்டார். ஏற்கனவே அந்த அர்தீஸ் வேற புவனாவை தொந்தரவு செய்தான். அவரிடம் கூற முடியாது. இதுக்கு சரியான ஆள் தீனா சார் தான். அவங்க அப்பா செய்யவில்லை என்று அவரே நிரூபிக்கட்டும். அவரிடம் பேசிக் கொள்ளலாம். வா முதலில் உன்னோட ஆளை சென்று பார்ப்போம் என்றான் அகில்.

உன்னோட ஆளா? பவி நித்தியை பார்த்தாள். நித்தி அகிலை பார்த்தாள்.

சைலேஷ் சார் தான். அது இருக்கட்டும். நீ இங்கே இரு. நாங்க அவரை பார்த்து விட்டு வருகிறோம் என்று சென்ற அகில், பவியை திரும்பி பார்த்து, அவங்க கூட சண்டை போடாதே! ஆரம்பத்தில் அவர்கள் தவறு செய்தாலும் அதுவும் நல்லதே. அவங்களுடன் இருந்ததால் தான் நீ பிரச்சனை இல்லாமல் இருக்க.அவங்க நிலையில் இருந்தும் யோசித்து பார் என்று சென்றான்.

அகிலுக்கு அவர்கள் மீது கோபம் இருப்பது தெளிவாக தெரிந்தாலும் அவன் பவியிடம் அவர்களுக்கு ஆதரவாக பேசியதால் அவர்களுக்கு அவனை பிடித்தும் விட்டது.