ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 114.

ஸ்ரீ சமையலறையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அர்ஜூன் அறையிலிருந்து வெளியே வந்தான். ஸ்ரீயை பார்த்து, அவளிடம் சென்று பின்னிருந்து அவளை அணைக்க,

என்னடா பண்ற? என்று பயந்து நகர்ந்தாள்.

சாரி ஸ்ரீ தூக்கக் கலக்கத்தில் செய்து விட்டேன். நீ என்னை மன்னிச்சிட்டியா?

நீ என்னோட நல்லதுக்கு தானே சொன்ன. பரவாயில்லை. ஒரு வேலை அசந்து தூங்கினால் இனி என்னை எழுப்பு. நான் ஹாலில் படுக்கவே மாட்டேன் என்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வேலை செய்து கொண்டே, பேசினாள். அவன் அவளையே பார்ப்பதை பார்த்து, என்ன வேணும் அர்ஜூன்? பேசணுமா? கேட்டாள்.

அவன் பதிலளிக்காமல் அவளை பார்க்க, அவளும் அவனை பார்த்தாள். ஸ்ரீயை நெருங்கிய அர்ஜூன், நீ இப்படியே என் பக்கம் இருந்தாலே போதும் என்றான். அவன் காதலில் அவளை மறந்து நின்றாள் ஸ்ரீ.

அவன் மேலும் நெருங்கி வந்து, அவளது கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்த்தது. மீண்டும் நெருங்கி, ஸ்ரீ உனக்கு என் மீது கொஞ்சம் கூட காதல் இல்லையா?

அவள் பயந்தவாறு இருக்க அர்ஜூன் மிகவும் நெருக்கமாக வந்து, எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும் ஸ்ரீ என்றான் கண்ணீருடன். அவள் கண்கள் கோர்த்தது. அவள் கண்ணை மூடி நிற்க, அவளது மென்மையான பட்டு இதழ்களில் மெதுவாக முத்தமிட்டான். பின் தன்னை உணர்ந்தவனாக, நாம் என்ன செய்து விட்டோம் என்று அவன் நினைக்க, ஸ்ரீ அவனை பார்த்தவாறே நின்றாள்.

ஏதோ கருகும் வாசம் வரவும். சட்டென பாத்திரத்தை இறக்க முற்பட்டு கையை வைக்க போனாள். அர்ஜூன் அவளை தடுத்து அடுப்பை ஆஃப் செய்து பாத்திரத்தை எடுக்க, அவன் கையில் லேசாக எண்ணெய் தெரித்தது.

அர்ஜூன்..என்ன ஆச்சு? என்று அவனது கையை பிடித்தாள். அவள் கண்கள் குளத்தால் நிரம்பியிருக்க, அர்ஜூன் ஆச்சர்யமாக ஸ்ரீயை பார்த்தான். அவன் கையை ஈரமாக்கி, பின் ஈரத்துணியை கட்டி விட்டாள். அவன் கண்கள் முழுவதும் ஸ்ரீ மட்டும் தான் இருந்தாள். அவன் அவனது கட்டுப்பாட்டை இழந்து, அவளை அங்கிருந்த சுவற்றில் தள்ளி முத்தமிட்டான்.

அர்ஜூன்..அர்ஜூன்..என்று பதறினாள். அவனுக்கு அவளது அர்ஜூன் என்ற பதட்டம் அவனை நிறுத்த செய்தது.

என்ன செய்கிறோம்? என்று அவன் வெளியே செல்ல, அவனை நிறுத்திய ஸ்ரீ அவனது ஈரமான கட்டை மீண்டும் நீரில் நனைக்க, அவன் அவளது கையை உதறி விட்டு, போதும் என்று சொல்ல..

நோ..அர்ஜூன். கொஞ்ச நேரம் வைத்திரு என்றாள்.

உனக்கு யார் முத்தம் கொடுத்தாலும் இப்படி தான் அமைதியா இருப்பாயா? கேட்டான். அவள் தான் பதறினாளே! அது அர்ஜூனால் தாங்க முடியாமல் வார்த்தைகளை உதிர்த்தான்.

அவள் கண்கலங்க அவனை பார்த்து விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள். அவள் தன்னை விலக்குவதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

காலையிலே நித்தி, பவி இருவரும் தயாராகி வெளியே வந்தனர். இரண்டு பேருக்குமே சமைக்க தெரியாது. துருவன் அவர்களிடம் அம்மா வரச் சொன்னாங்க என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அங்கே சென்றனர்.

உள்ளே சென்று பேசிக் கொண்டிருக்க அங்கே இருந்த பூனைக்குட்டியை பார்த்து,

ஆன்ட்டி, இது அழகா இருக்கே..நீங்க வளர்க்கிறீங்களா? என்று கேட்டாள் பவி.

அவர் சோகமுடன் ஆமாம்மா. இது என்னோட பொண்ணுது என்றார்.

உங்களுக்கு பொண்ணு இருக்காங்களா?

இருந்தாம்மா என்று ஸ்ரீயை காட்டினார். நேற்று நித்தி கூறியது நினைவிற்கு வந்தது.

ஓ..இது ஸ்ரீ வளர்த்ததா? மனதில் நினைத்தவாறு அதை தூக்கினாள். அது கொஞ்சம் பெரிய பூனை தான். யாரிடமும் சரியாக செல்லாது என்று கூறி கொண்டிருக்கும் போதே அதை தூக்கி விட்டாள். அது அவளது கையை பிராண்டி விட்டு ஓடியது.

அய்யோ என்ன ஆச்சும்மா? பதறினார் ரதி.

ஒன்றுமில்லைம்மா. நான் அதை என் வழிக்கு கொண்டு வராமல் விட மாட்டேன் என்று வலியை கூட காட்டாது புன்னகையுடன்,

ஹே..மியாவ்..எங்க இருக்க? நான் வாரேன் என்று அதை பார்த்து விட்டாள். அவள் அருகே சென்றவுடன் பாய்ந்து ஓடியது. அவளும் விரட்டி சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அகில் குளித்து சார்ட்ஸூடன் தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஓடி வந்த பவி அவனை இடிக்க, அவன் விழ சென்றான். அவனது பனியனை பிடித்து நிறுத்தி விட்டு,

டேய், பார்த்து வர மாட்டியாடா இடியட் என்றாள். அவனுக்கு ஸ்ரீ நினைவு வந்தது. இருவரும் இப்படி தான் ஒரு முறை இடிக்க, அவளும் பிடித்து நிறுத்தி விட்டு, பார்த்து வாடா எருமை என்றிருப்பாள். அவன் ஸ்ரீ..என்று அவள் பின் ஓட,

ஹே..மியாவ்..மியாவ்..என்று அவள் பூனையை விரட்ட, நித்தி இருவரையும் பார்த்திருப்பாள்.அகில் போகாதே நில்லு. அவ ஸ்ரீ இல்லடா. நீ எதையும் பேசிடாதே என்று கத்திக் கொண்டே அகில் பின் நித்தி ஓடினாள். அவனது அம்மாவும் துருவனும் அவர்களை பின் தொடர்ந்தனர்.

பெரிய சுவர் ஒன்று எழும்பி இருக்க, பவி அதை பார்த்துக் கொண்டு, மியாவ்..உன்னால இனி போக முடியாதே என்று அதனிடம் வவ்வளம் காண்பித்து வெறுப்பேற்றினாள். அது அங்கிருந்த சுற்றில் நீட்டிக் கொண்டிருந்த குறுகிய கல்லில் கால் வைத்து பாய்ந்து ஏறியது.

அடியாத்தி..நீ ரொம்ப திறமைசாலி போலவே என்று அவள் ஏற முயன்றாள். அவளால் முடியாது போக, கீழிருந்த கயிற்றை சுழற்றி சுவற்றின் மேலிருந்த நீட்டிய கல்லை பார்த்து எறிய கயிறு பிடித்துக் கொண்டது. அதை வைத்து அவள் ஏறி பார்த்தாள். பூனையை காணவில்லை. மியாவ்.. மியாவ்..என்று சத்தமிட்டு அதை அந்த சுவற்றின் மேல் நின்று தேடிக் கொண்டிருக்க, எல்லாரும் அங்கே வந்தனர்.

ரதி அவளை பார்த்து அப்படியே நின்றார். அகிலும் துருவனும் ஸ்ரீ என்றனர். நித்திக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை. அந்த பூனையோ அவர்களுடன் வந்து அவளை பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு மியாவ்..மியாவ்..என்று கத்தியது.

நீ அதற்குள் இங்கே வந்து விட்டாயா? பவி கீழே பார்த்து, அய்யய்யோ, இப்ப எப்படி இறங்குவது? என்று கீழிருந்தவர்களை பார்த்தாள். ஸ்ரீயின் அதே செயல்கள் பவியிடம். அவளை பார்த்து பிரமித்து நின்றனர்.

அவர்கள் அவளை பார்ப்பது புரியாமல்,யாரை பார்க்கிறார்கள்? என்று பின் திரும்பி பார்த்து முன்னே அம்மா என்று விழ, துருவனும் அகிலும் அவளை தாங்கி பிடித்தனர்.

அகில் அதிர்ச்சி குறையாது அவளையே பார்த்து கண்ணில் நீர் ததும்ப ஸ்ரீ..ஸ்ரீ..என்றான். பவி அவனை முறைத்து பார்த்து விட்டு,கீழே இறங்கினாள்.

ஆன்ட்டி..என்று பவி அழைக்க, நித்தி பவியை பார்த்துக் கொண்டே நின்றாள். ரதி இவ்வுலகிலே இல்லாது அவர்களது பழைய உலகிற்குள் சென்று விட்டார்.

எல்லாருக்கும் என்ன ஆயிற்று? என்று எல்லாரையும் பார்த்து சாப்பிடலாமா? பசிக்குது? கேட்டாள். அவர்கள் பதிலளிக்காமலிருக்க, அந்த பூனை பவி மீது தாவியது.

அதனிடம், இவங்களுக்கு என்ன ஆச்சு? என்னை இப்படி பார்க்கிறார்கள்? கேட்டாள்.அது மியாவ்.. மியாவ்..என்று பல முறை கத்த அனைவரும் நிலைக்கு வந்தனர்.

நித்தி வேகமாக பவியிடம் வந்து, பவி நீயா? ஸ்ரீயா? கேட்டாள்.

என்ன எல்லாரும் என்னை பார்த்து ஸ்ரீன்னு சொல்றீங்க?நான் பவி என்றாள்.

ஆமா பவி என்றாள் நித்தி குழப்பமுடன்.

நித்தி அகிலிடம், அம்மாவை காட்டி விட்டு பவியை அழைத்து சென்றாள்.

டேய் அண்ணா, யாருடா அந்த பொண்ணு? அப்படியே ஸ்ரீ மாதிரியே நடந்துக்கிறா? துருவன் கேட்டான்.

ம்ம்..என்று அம்மாவை அழைத்து அவர்களிடம் சென்றான் அகில்.

பவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நித்தி அவளை பார்த்து, தெரியாம சொல்லிட்டோம் என்று சமாதானப்படுத்தினாள்.

அகிலும் அம்மாவை நிதானப்படுத்தி, ஸ்ரீயை பற்றி பேச வேண்டாம்மா என்று சொல்லி அழைத்து வந்தான்.

ரதி அவளுக்கு பரிமாற, ஆன்ட்டி உட்காருங்க. சேர்ந்தே சாப்பிடலாம் என்றாள் பவி.

இல்லம்மா.நீ சாப்பிடு. நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். பின் நித்தி அவளை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

இரவில் தூக்கத்தில் அவளது வீட்டின் மீது கவனம் இருந்திருக்காது பவிக்கு. நித்தி அகிலை தனியே சந்திக்க சென்றாள்.பவி கொஞ்ச நேரம் வீட்லயே இரு. நான் வந்து விடுவேன் என்று சென்றிருந்தாள்.

பவி நித்தி அறைக்கு சென்று அவளது சிறுவயது புகைப்படங்களை பார்த்தாள்.அதில் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து எடுத்த புகைப்படம்.அகில் ஸ்ரீ நெருக்கம் நன்றாக தெரிந்தது. பின் தான் அகில் ஸ்ரீக்காக எல்லா இடத்திலும் முன் வந்தது பவி நினைவுக்கு வந்தது.

அவள் பார்த்துக் கொண்டே இருக்க, அங்கிருந்த ஐந்து வயது ஸ்ரீ புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தாள்.அதை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். நித்தியை தேடினாள்.

அகிலும் நித்தியும் இருப்பதை பார்த்து அவர்களிடம் வந்து மூச்சிறைக்க நின்றாள்.

பவி, ஏதும் பிரச்சனையா? பதறி எழுந்தாள் நித்தி. அவள் மூச்சை இழுத்து விட்டு, கையை இரு என்று விட்டு, அந்த புகைப்படத்தை காட்டி, இது.. இது.. என்று கேட்டாள்.

எங்களுடைய ஸ்ரீ என்றான் அகில்.

ஸ்ரீயா? என்று அமர்ந்தாள். அவளுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.

அவளிடம் நித்தி கூறினாளே ஸ்ரீயும் அகிலும் ஒரே வீட்டில் இருந்தனர் என்று. அகில்..என்று அவனை பார்த்தால் பின் வேகமாக அங்கிருந்து ஓடினாள்.

நித்தியும் அகிலும் அவள் பின்னே ஓடினர். இவளுக்கு என்ன ஆச்சு? ஸ்ரீயின் புகைப்படத்துடன் எங்கே செல்கிறாள்? அகில் பேசிக் கொண்டே ஓடினான். பவி அவன் வீட்டிற்கு வந்ததை பார்த்து, என்னோட வீட்டுக்கு இவ எதுக்கு வந்தா? என்று இருவரும் உள்ளே சென்றனர்.

பவி பதட்டமாக அகில் அம்மாவிடம் வந்து, ஸ்ரீயின் அறை எது? கேட்டாள்.

ஸ்ரீயை உனக்கு தெரியுமா? அவளை பார்த்திருக்கிறாயா? எப்படி இருக்கா என்னோட பொண்ணு? கேட்டார்.

அய்யோ..அவளுடைய அறையை கூறுங்களேன் என்று பவி கேட்க,

அவளது பதட்டத்தை பார்த்து ஏதும் பிரச்சனையாம்மா? கேட்டார்.

ப்ளீஸ் ஆன்ட்டி என்றாள்.

அகில் ஸ்ரீ அறைக்கு அழைத்துச் சென்றார் அவர். உள்ளே சென்று ஸ்ரீயின் குடும்பமும் அகில் குடும்பமும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு, அவளது கட்டிலருகே சென்றாள்.அவளது கட்டிலை களைத்து போட்டாள். அதில் நிறைய கிரீட்டிங்கும் ஒரு காகிதமும் இருந்தது.அகில் உள்ளே வந்து, நான் என்னுடைய அறைக்கு வந்தே ஐந்து வருடங்களானது. நீ எப்படி எங்களது அறைக்குள் நுழையலாம்? என்று பவியை அடிக்க கையை ஓங்கினான். களைந்த பொருட்களுக்கிடையே சில புகைப்படங்கள் இருக்க, பவியை விடுத்து அதை எடுத்தான். பவி காகிதத்தை படித்து விட்டு அவனிடம் நீட்டினாள்.

புகைப்படத்தை பார்த்த அகிலும் நித்தியும் அதை பார்த்து உறைந்தனர். நித்தி காகிதத்தை படித்தாள். அகில் உடைந்து அழுதான். பவி அவனை பார்த்துக் கொண்டிருக்க, அகில் அம்மா அவனை அணைத்து ஆறுதலளித்தார்.

நித்தி காலடியில் இன்னொறு காகிதம் கிடக்க, அதை படிக்க ஆரம்பித்தாள். அகில் அதை கேட்டு மீண்டும் அழுதான். பார்த்துக் கொண்டிருந்த பவி, அவள் தேடிய ஸ்ரீயின் ஆல்பத்தை தேடி கண்டறிந்தாள். அதிலும் அகில் இருந்தான். எல்லாவற்றிலும் இருவரும் சேர்ந்தே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே, ஆன்ட்டி இப்பொழுது இதை எடுத்து செல்கிறேன். சீக்கிரம் கொண்டு வந்து தருகிறேன் என்று அகிலை பார்த்து, இப்படியே அழுவதை விடு.

எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். இப்பொழுதே என் வீட்டிற்கு செல்ல வேண்டும் பவி அவளது கையை கொடுக்க, கண்ணை துடைத்து விட்டு அவளை ஒரு நிமிடம் பார்த்தான் அகில்.

ப்ளீஸ் என்று கண்ணாலே கெஞ்சினாள்.

அம்மா நான் கிளம்புகிறேன்.

அம்மா அவனை அணைத்து, கஷ்டமா தான் இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் ஏத்துக்க பழகிக் கொள்ளடா என்று அறிவுறுத்தி விட்டு, ஸ்ரீயை பார்த்தாயா? அடுத்த முறை வரும் போது அவளை அழைத்து வாடா. என்னோட ஜாங்கிரியை பார்த்து வெகுநாளாயிற்று. அவளையும் அண்ணாவையும் அழைத்து வாடா என்றார்.

இறந்தவர்களை எப்படி அழைத்து வருவது? என்று நித்தி திருதிருவென விழித்தாள்.

வாரோம் என்று வெளியே வந்தனர். என்ன ஆயிற்று? நீ என்ன செய்கிறாய்? எனக்கு புரியவில்லை என்று நித்தி கேட்டாள்.

ப்ளீஸ்..சீக்கிரம் போகணும் என்று பவி காரில் ஏறி, அகில் அருகே அமர்ந்தாள்.

அவன் அவளை ஒருமுறை பார்த்து விட்டு, காரை ஓட்டினான்.

அவள் சீட்டில் தலை சாய்த்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள். நித்தியும் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.