வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-113
156
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 113.
அர்ஜூன் வீட்டின் லாக்கை ஓபன் செய்து, உள்ளே செல்ல கவின் பின்னே வந்தான். அர்ஜூன் முகம் கோபமாக கவினை நிறுத்தி சட்டென கதவை சாத்தி விட்டு ஸ்ரீ அருகே சென்று அவளை முறைத்தபடி நின்றான் சினத்துடன்.
அவள் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் மெலிதான பசுமை நிற கவுனை அணிந்திருந்தாள். அது சிறியதாகவும் இருந்தது. அவளை எழுப்புவதை விட்டு, கோபத்தில் அவள் முகத்தில் தண்ணீரை ஊற்றினான். அவள் பதறி எழுந்தாள்.
அவன் ஊற்றிய தண்ணீரில் ஆடை நனைந்து அவளது அங்கங்கள் தெரிய,மீண்டும் கத்தினான். பயந்து எழுந்த தாரிகாவும் அவனை பார்த்தாள்.
கவின் வேகமாக கதவை தள்ளி விட்டு உள்ளே வர, சத்தம் கேட்டு அர்ஜூன் அவனது சட்டை கழற்றி அவள் மீது தூக்கி எறிந்து விட்டு,
என்ன செஞ்சுகிட்டு இருக்க? இப்படியேவா இருப்ப? அறைக்குள் செல்லாமல் இங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? உனக்கு அறிவேயில்லையா?
அவள் ஆடையை பார்த்து வேகமாக எழுந்து அவனது சட்டையை போட்டு, அழுது கொண்டே நின்றாள்.
எல்லாரும் உள்ளே வந்து அவளை பார்த்தனர். ஸ்ரீ எதுக்கு அழுற? அபி வேகமாக அவளருகே வந்தவனை மார்பில் ஒரே கையாலே தடுத்து விட்டு, இன்னும் இங்கேயே நிற்கப் போகிறாயா? ஸ்ரீயிடம் கத்தினான்.அவள் அழுது கொண்டே உள்ளே சென்றாள்.
அர்ஜூன், ஏன்டா அவளை இப்படி திட்டினாய்? இவ்வளவு கோபமா? பிரதீப் துகிராவுடன் வந்தான். அபி அதிர்ந்து நின்றான். அவள் உள்ளே செல்லும் போது தான் ஆடையை பார்த்தான் அபி.
தாரிகா அர்ஜூனிடம், ஏன்டா இப்ப அவள திட்டுன? என்று அவனை பிடித்து உலுக்கி விட்டு, நாங்க எவ்வளவு பயந்து இருந்தோம் தெரியுமா? நீ வேற துப்பாக்கியெல்லாம் எடுத்துட்டு போன? ஒரு போன் செய்ய தோன்றியதா? அட்லீஸ்ட் போனை எவனாது எடுத்திருக்கலாம் என்று கவினை முறைத்தாள்.
அவளுக்கு மருந்து போட்டு விட்டு, தூங்காம தான் உங்க போனாவது வரும்மான்னு பார்த்துக் கொண்டிருந்தோம். யாருமே போன் செய்யவும் இல்லை. எடுக்கவும் இல்லை. ஆடை விலகி இருந்ததை நீ பார்த்திருந்தால் உடனே சரி செய்து அவளை எழுப்பி இருக்கலாம்ல. அதை விட்டு தண்ணிய ஊத்திட்ட. பைத்தியமாடா உனக்கு? கத்தினாள். நீ செய்வதையெல்லாம் செஞ்சிட்டு அவளை கத்துற? திட்டி அவனை தள்ளி விட்டு, ஸ்ரீ அறைக்கு வெளியே நின்று கதவை திற ஸ்ரீ கத்தினாள்.
அர்ஜூன் தலையை பிடித்துக் கொண்டு, அவளை திட்டீட்டேனே? என்று அவள் அழுததை சிந்தித்தவன், அவனும் அவள் அறைக்கு வெளியே சென்று கதவை தட்ட,
போடா..என்று தாரிகா அர்ஜூனை தள்ளி விட்டு, நான் அவளை என்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறேன். அவளை மேலுன் கஷ்டப்படுத்துற என்று தாரிகா அழுதாள்.
கவின் தாரிகாவை சமாதானப்படுத்த முன் வந்தான். அங்கேயே நில்லுங்க.அவ எந்த நிலைமையில் இருக்கா. இப்பொழுது இப்படி தான் திட்டுவாயா? அர்ஜூனிடம் கேட்டு விட்டு, ஸ்ரீ கதவை திற.நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அழுதாள்.
அது உங்க ரெண்டு பேருக்குமே பாதுகாப்பு இல்லை கவின் கூற, நாங்க இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? அவள் கேட்க, கவினும் கோபத்தில் தாரிகாவை அடித்து விட்டான்.
டேய்..என்னடா பண்றீங்க? அபி கவினிடம் வந்தான். அர்ஜூன் அப்படியே நின்றான் கண்ணீருடன்.
என்ன பேச்சு பேசுறா? பாருடா அபி என்று கவின் அவனை கட்டிக் கொண்டு அழுதான்.
பிரதீப் ஸ்ரீ அறை அருகே சென்று, ஸ்ரீம்மா..அண்ணா வந்திருக்கேன். கதவை திற என்றான்.அவளிடமிருந்து சத்தமேயில்லை.
தாரிகா மீண்டும் எழுந்து, ஸ்ரீ வெளிய வா..கத்தினாள். துகிரா கதவருகே வந்து காதை வைத்து கேட்டாள். எல்லாரும் அவளை முறைத்தனர்.
எதுக்கு முறைக்கிறீங்க? அழுதுகிட்டு இருக்கா.
அர்ஜூன் கதவருகே வந்து, சாரி ஸ்ரீ..நான் புரியாம பேசிட்டேன். அப்புறம் எல்லாரும் இங்கே தான் இருக்காங்க. ஆடையை மாற்றி விட்டு வெளியே வா.
அபி அர்ஜூன் அருகே வந்து, அவளது உடை? அவனை உற்றுபார்த்தான். தாரிகா அவளது காயத்தை பற்றிக் கூறினாள். விசயம் ரொம்ப பெரியது என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர். தீனாவிற்கு மட்டும் அர்ஜூன் இன்னும் ஏதோ மறைக்கிறான் என்று புரிந்தது.
ஆதேஷ் அர்ஜூனை இழுத்து அணைத்துக் கொண்டான். அனைவரும் அமர்ந்திருக்க, தாரிகாவும் அர்ஜூனும் ஸ்ரீ அறை அருகே நின்றிருந்தனர்.
கொஞ்ச நேரத்தில் ஸ்ரீ வெளியே வந்தாள். அவள் அழுததை அவள் முகம் தெளிவாக காட்டியது. தாரிகா அவளிடம், ஸ்ரீ நீ ஓ.கே தானே? அவளை பார்த்த ஸ்ரீ அமைதியாக நின்றாள்.
அர்ஜூன் அவளது கையை பற்றி, சாரி ஸ்ரீ..நான் கோபத்தில் பேசிட்டேன் என்றான்.
அவனை பார்த்து விட்டு, நீ பேசியது தவறில்லை. எனக்கு அறிவிருந்தால் எந்த ஆடையுடன் ஹாலில் இருக்கிறேன் என்று தெரிந்திருக்கும் கூறிக் கொண்டே சமையலறக்கு சென்று பாலை எடுத்து டீ போட ஆரம்பித்தாள். அவள் கூறியதன் அர்த்தம் அர்ஜூனுக்கு புரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு புரிந்தது. அவளையே பார்த்தனர் மற்றவர்கள்.
சாரி..ஸ்ரீ என்று அர்ஜூன் அங்கும் வந்தான். அவனை உறுத்து பார்த்து விட்டு, நான் தான் சொன்னேன்ல. நீ திட்டியது தவறில்லை. நான் அப்படி இருந்த நிலையில் வேறு யாராவது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்காது என்று கூறிக் கொண்டே அவள் டீயை டிரேயில் எடுத்து வைத்து விட்டு, தாரிகாவை அழைத்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி அவள் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அனைவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.
அர்ஜூன்..நீ சரியான முட்டாள்டா. அவள் உனக்காக காத்திருந்ததால் அப்படியே தூங்கி விட்டேன் என்றும் உன்னை தவிர யாரும் என்னை அந்த ஆடையில் பார்க்கக் கூடாது என்று மறைமுகமாக சொல்கிறாள் என்று மனதினுள் கவின் அர்ஜூனை திட்டினான்.
ஸ்ரீ மீண்டும் கதவடைக்க, அர்ஜூனுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் அறைக்கு வெளியே அவன் நின்று கொண்டிருக்க, பிரதீப் அர்ஜூனை அழைத்து அவன் அருகே உட்கார வைத்து பேசினான்.
அண்ணா, மீண்டும் அதே போல் நடந்து விடுமோ? என்று பயந்து தான் அவளை திட்டினேன். ஆனா அவ கோவிச்சுக்கிட்டா என்றான் பாவமாக.
இவனை என்ன செய்வது? டியூப்லைட் என்று அபி அவனை மனதில் திட்டிக் கொண்டு, அவ கொஞ்ச நேரத்தில உங்கிட்ட வந்து பேசுவா பாரு என்று சொன்னான். அர்ஜூன் முகம் மலர்ந்தது.
அதுக்குள்ளையும் சரியாகிட்ட? தீனா கேட்டான்.
அவ பேசினா போதாதா? என்றான்.
கவின் தாரிகாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
தாரிகா அவனருகே வந்து அமர்ந்து, சாரி சீனியர் கோபத்துல தானே பேசினேன். சின்ன பொண்ணு தானே மன்னிக்கக்கூடாதா? என்று சமாதானப்படுத்த,
இதை பார்த்து இதுக்கு மேல் என்னால் இங்கே இருக்க முடியாதுப்பா.நான் ஊருக்கு போறேன் என்றான் தீனா.
மாமா, புவியை பார்க்காம இருக்க முடியலையாக்கும் என்றான் அபி. தருணுக்கு தெரிந்தால் என்ன சொல்லப் போறானோ?
எங்களை பத்தி நீங்க எதையும் சொல்லி தொலைச்சிறாதீங்க? நானே சொல்லிக்கிறேன் என்ற தீனா மாலை வருகிறேன். நீங்க எப்படி? பிரதீப் துகிராவை பார்த்தான் தீனா.
நாங்க..என்று துகிராவை பார்த்தான் பிரதீப். அவளும் அவனை பார்த்தாள்.
நாங்க அவளுக்கு தேவையானதை வாங்கிட்டு மாலை நீ வருவாய்ல.. வேலையை முடிச்சிட்டு கிளம்புவோம் என்றான் பிரதீப்.
ஷாப்பிங்கா? இவளுடனா? ஆதேஷ் பிரதீப்பை பார்த்தான். அவ எடுக்கவே மாட்டா. ஆனா நிறைய ஆடையை போட்டு காண்பித்தே நம்மை கொன்று விடுவாளே?
டேய்..சும்மா இருடா என்று துகிரா அவனை முறைக்க, துகிராவை தோளோடு அணைத்து, எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என்றான் பிரதீப்.
சோ..க்யூட் டியர் என்றாள்.
ஆஹாம்..என்றான் ஆதேஷ்.அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அபி கொஞ்ச நேரம் உன்னோட லேப் வேண்டுமே? அர்ஜூன் கேட்க, எனக்கு தான் என்று அபி அருகே பிரதீப் வந்தான்.
உங்களுக்கா?
உனக்கு தான் அர்ஜூன் சில தகவல்களை அனுப்பி இருக்கிறான் என்று அபியை சமாளித்து இருவர் மட்டும் உள்ளே சென்றனர். அபி யோசனையோடு அவர்களை பார்த்தான்.அர்ஜூன் ஸ்ரீயின் வீடியோவை அழித்துக் கொண்டிருந்தான். பிரதீப் மீதமுள்ள இரண்டு பென்டிரைவ் தகவல்களை அவனுடைய மெயிலிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் அதே அறையிலே தூங்கி விட்டான். பிரதீப் அவனை பார்த்து கவலையுடன் பெருமூச்செடுத்து விட்டு அபி லேப்பில் இருந்த அனைத்தையும் அழித்து விட்டு அங்கேயே வைத்து விட்டு வெளியே வந்தான். ஆதேஷ் மட்டும் உட்கார்ந்திருக்க துகிரா அவனருகே தூங்கிக் கொண்டிருந்தாள். பிரதீப் அவனிடம் வந்து, உள்ளே தூங்காமல் இங்கேயே தூங்கி விட்டாளா? கேட்டாள்.
சரி. நீ போய் ஓய்வெடு ஆதேஷிடம் கூறி விட்டு, துகிராவை தூக்கினான்.அவளை கட்டிலின் நடுவே போடுங்க. இல்ல கீழே விழுந்திடுவா என்றான் புன்னகையுடன்.
நீ என்ன மாமான்னு கூப்பிடலாம் பிரதீப் கூற, தலையசைத்து விட்டு ஆதேஷ் அறைக்கு சென்றான்.பிரதீப் துகியை தூக்கி வந்து கட்டிலில் ஏறி அவனும் படுத்துக் கொண்டு தன் கை அணைப்பிலே போட்டுக் கொண்டு அவனும் தூங்கினான்.
ஆதேஷிற்கு ஜானு போன் செய்தாள். இது என்ன புது நம்பரா இருக்கு? யோசித்தவாறு எடுத்தான்.
எல்லாரும் என்ன செய்றீங்க? ஒரு போன் செய்தால் கூட எடுக்கமாட்டீங்களா? பட்டாசாய் வெடித்தாள். ஜானுவென்று கண்டுபிடித்து விட்டான் இருந்தாலும் தெரியாதது போல் தான் நடித்தான்.
யார் கிட்ட பேசுறீங்க? நீங்க யாரு? என்று பாவம் போல் நடித்தான்.
யாரா? ஏன்டா என்னோட வாய்ஸ் கூட தெரியலையா? ஜானு திட்ட, நீ யாருன்னு முதல்ல சொல்லிட்டு பேசுடி? அப்பத்தா குரல் கேட்க, அவன் உதட்டில் சிரிப்பு தவழ்ந்தது.
ஜானு பேசுறேன்.
ஜானுவா? எந்த ஜானு? கேட்டான்.
நீ தெரிஞ்சுகிட்டே நடிக்கிறியா? எனக்கு செம்ம டென்சனா இருக்கு. ஆன்ட்டிக்கு என்ன ஆச்சு? சொல்லு ப்ளீஸ். எனக்கு தூக்கமே வரல. டென்சன் ஆக்காதடா என்று கத்தினாள்.
அம்மாவுக்கு ஒன்றுமில்லை. அவங்க அப்பா கூட இருக்காங்க என்றான்.
அப்பாவா? உனக்கு அப்பா என்று அன்று அவர்கள் பேசியதை சிந்தித்து, அப்பாவை உன்னோட அம்மா ஏத்துகிட்டாங்களா? கேட்டாள்.
ம்ம்..என்றான் சுருக்கமாக.
ஏன்டா, உனக்கு பிடிக்கலையா?
அப்படியெல்லாம் இல்லை. எனக்கு ஓ.கே தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அபிக்கு அர்ஜூனின் அந்த ரகசிய அறை நினைவுக்கு வந்தது. யாரும் அங்கு இல்லாதிருக்க, கதவை திறந்து பார்த்தான். அது பூட்டப்பட்டு இருந்தது. கஷ்டப்பட்டு திறந்து உள்ளே சென்ற அபி, ஸ்ரீயின் புகைப்படங்களை பார்த்து அதிர்ந்து, பின் வேகமாக கதவை பூட்டி விட்டு, அவனது காதலை நினைத்து உடல் சிலிர்த்தான். வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பார்க்க நண்பர்கள் அனைவரும் சேர்ந்திருந்த புகைப்படம், தருணுடன் அவனிருந்த புகைப்படம் என அனைத்தும் இருந்தது.
அவர்களது புகைப்படம் அருகே சென்ற அபி கவலையுடன் சாரிடா அர்ஜூன். இதில் கூட நாங்கள் உன்னை சேர்க்கவேயில்லை. ரொம்ப கஷ்டமா இருக்குடா வருந்திக் கொண்டிருக்க, ஏதோ சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான்.
ஆதேஷ் ஜானுவிடம், ஷ்..ஷ்..கொஞ்ச நேரம் அமைதியா இரு என்று வெளியே வந்தான். ஸ்ரீ அர்ஜூன் இருக்கும் அறைக்குள் சென்றாள். கதவு முழுவதுமாக அடைக்கவில்லை. அவள் செல்வதை அபியும் பார்த்தான். அவன் அங்கேயே நிற்க, ஆதேஷ் அவ்வறைக்கு வெளியே நின்று ஜானு..ப்ளீஸ் பேசாதே என்று ஸ்ரீ பேசுவதை கவனிக்க, அபி ஆதேஷை பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்த ஸ்ரீ, அர்ஜூன் அருகே அமர்ந்தாள். ஏன்டா இப்படி கஷ்டப்படுத்துற? முன்னெல்லாம் உன் காதலை நினைத்து தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னை பற்றி தெரிந்ததிலிருந்து ரொம்ப கோபமாவே நடந்துக்கிற? நீ அதை பார்த்ததால் என் மீது உனக்கிருந்த காதல் காணாமல் போய் விட்டதா? நீ என் மீது தண்ணீர் ஊற்றிய போது பயந்து தான் எழுந்தேன். ஆனால் பேசியது தான் அதிகமா காயப்படுத்துதுடா.
உனக்கு என்னை பிடிக்காமல் போய் விட்டதோ? அதுவும் நல்லது தான். ஆனால் இருக்கும் வரை உன்னுடன் இருக்க நினைத்தேன். அவங்க என்னை கஷ்டப்படுத்து போது ரொம்ப வலிச்சதுடா. ஆனா அதை விட நீ எவனுடனும் போ என்று கூறிய வார்த்தை, கோபமாக என்னை பார்ப்பது, பேசுவது ரொம்ப ரொம்ப வலிக்குதுடா. நீ இன்னும் நான் அவனை தான் காதலிக்கிறேன் என்று நினைக்கிறாய் தானே அர்ஜூன். அது அவன் மீதுள்ள காதல்லல்ல. பாசமா கூட இருக்கும் என்று அவளது தலையில் கை வைக்க சென்றாள். அவன் எழுந்து விடுவானோ என்று அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஸ்ரீ அர்ஜூன் நெற்றியில் முத்தமிட்டு, நீ உன்னோட பிசினஸ் வேலைய பாருடா. நான் எடுத்த முடிவில் மாறுவதாக இல்லை. சாரிடா அர்ஜூன். உன்னிடம் சொல்லாமலே நான் என் வழிக்கே போரேன். நான் உனக்கு சரியானவளில்லை. நான் உன்னிடம் காதலை சொல்லி விடலாம் என்று நினைத்த போது தான் ஏதேதோ நடந்து விட்டது. இப்பொழுது எதுவும் சரியாகாது அர்ஜூன். நீ திட்டத்தை செயல்படுத்தும் முன் எனக்கான நேரத்தை உன்னுடன் செலவிட்டு போகிறேன் என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டு வெளியே வந்தாள்.
ஆதேஷ் மறைந்து கொண்டான். அவள் சென்ற பின், ஆதேஷ் போனை காதில் வைத்தான்.ஜானு அமைதியாக ஸ்ரீ பேசியதை கவனித்து இருப்பாள்.ஆதேஷ் அவளை அழைக்க, ம்ம்..என்றாள்.
என்ன ஆச்சு பட்டாஸ்? அவள் நினைவு ஸ்ரீயை சுற்றி வந்தது. அக்கா ஏன் அர்ஜூன் அண்ணா காதலை ஏத்துக்கல? யோசித்தாள்.
ஹே..லயன்ல இருக்கியா? ஆதேஷ் கேட்டான்.
ம்ம்..இருக்கேன். ஸ்ரீ அக்கா அழுதாங்களா?
ஆமாம். ரொம்ப நேரம் அறைக்குள் தான் இருந்தாங்க. அண்ணா திட்டிட்டார்.
ஓ..என்று யோசித்தாள்.
அவங்க உங்க ஊரு தான? அவங்கள பத்தி சொல்லேன்.
சொல்றேன் என்றாள் அமைதியாக.
இப்பொழுது வேண்டாம். மாலை அங்கே வருவேன். பேசலாம் என்று போனை வைத்து விட்டு ஸ்ரீ பேசியதையே நினைத்தவாறு படுத்தான் ஆதேஷ்.