ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 112.
டேய்..அன்று இவனும் இருந்தான்லடா கேட்டான் ஒருவன்.
ஆமாம்டா என்றான் மற்றொருவன்.
அன்று எல்லாருடன் சேர்ந்து என்னை என்ன செய்தீர்கள்? இன்று தனியே மாட்டினாயா? என்று அவன் சிரிக்க,
பிரதீப் அவனை பார்த்து விட்டு கேலியாக, என்னடா குட்டிம்மா? இவனுக காமெடிலாம் பண்ணுவாங்களா? அவள் பயந்தவாறு இருக்க அவளது கன்னத்தில் முத்தமிட்டு, பயமா இருக்கா?
அவள் தலையசைக்க, முட்டாள் பசங்களா? அன்னைக்கு பத்து பேரா இருந்தீங்க. ஆனா இன்னிக்கு நாலே பேர் தான்.
அதில் ஒருவன், நாங்க நாலு பேர் நீ ஒருத்தன்டா.
நான் ஒருத்தனா? பத்து பேரான்னு நீங்களே சொல்வீங்கடா? என்றான் பிரதீப் கெத்தாக.
வாடா..பார்க்கலாம்னு ஒருவன் சொல்ல, ஆரம்பித்தனர் கலவரத்தை. ஒரே நொடி தான் அனைவரும் கீழே விழுந்திருந்தார்கள்.
சொல்லுங்கடா..நான் ஒருத்தனா? பத்து பேரா?
சார்..எங்கள விட்டுருங்க என்று ஒருவன் கையெடுத்து கும்பிட்டான். அய்யோ தம்பி, என்று துகி அப்பா அவனருகே ஓடிச் சென்றார்.
யோவ்..நாங்க என்ன சொன்னோம்? அவ அடியாள கூட்டிட்டு வந்திருக்கா? அவளை என்று எங்க வீட்டுக்கு அனுப்புற? என்றான் பிரதீப்பிடம் அடியும் வாங்கிக் கொண்டு கேட்டான்.
இது சரியில்லை என்று குட்டிம்மா இங்க வா என்று அவளை அழைத்தான். இங்க நீ சந்தோசமா இருப்பியா? நீ அடிக்கடி ஆதேஷ் வீட்ல தான் இருப்பன்னு சொன்னேல..அங்க நீ சந்தோசமா இருப்பியா?
நான் இந்த வீட்டில் இருந்ததேயில்லை. எனக்கு மட்டும் தனி வீடு. வேலை செய்ய ஆட்களும் இருப்பார்கள். தனியே தான் இருப்பேன். என்னால் அவ்வாறு இருக்க முடியாமல் தான் ஜில்லா வீட்டுக்கு வருவேன்.அங்கே பாதுகாப்பா இருப்பது போல் தோன்றும்.ஆனால் அவங்களும் எனக்கானவங்க இல்லை என்று தோன்றிக் கொண்டே இருக்கும். எனக்கு யாருமே இல்லை என்பது உண்மைதானே?
அவளது வாயை தன் கைகளால் மூடியவன். எங்க ஊருக்கு வாராயா? கேட்டான்.
உங்க ஊருக்கா? நானா? யாரும் ஏதும் சொல்ல மாட்டார்களா? என்னுடைய படிப்பு முடியவில்லை. எனக்கென்று எதுவுமே இருக்காது. இங்கிருக்கும் வரை தான் எனக்கு அப்பா பணம் தருவார். பணமில்லாமல் என்னால் படிக்க முடியாதே?
எத்தனை கேள்வி கேக்குற?
உனக்கு வேண்டியதை செய்ய நான் தான் இருக்கேனே? என்றான். அவள் மெதுவாக ஜானு இப்படிதான் சொன்னாள் என்றாள்.
என்ன சொன்னா?
ரொம்ப முக்கியம். நான் அங்கு வந்தால் எப்படி படிப்பது?
வீட்டிலிருந்து படிக்க முடியாதா? தொலைதூரக் கல்வி என்றான்.
எனக்கு ஓ.கே தான்.ஆனா ஜானு..கேட்டாள்.
ஜானு உன்னை இந்த பாவிகளிடம் விட்டு வந்தால் தான் சண்டையிடுவாள்.
சரியாக வீட்டிற்கு வந்த ஒருவன் கொரியர் என்றான்.
வாங்க. நான் தான் ஆர்டர் செய்தேன் என்று கையெழுத்திட்டு, பார்சலை வாங்கி உடையை மாற்றி விட்டு வா என்றான் பிரதீப்.
அவள் அதிர்ந்து பார்க்க அடுத்தவர் பொருள் ஒன்று கூட உன்னிடம் இருக்கக்கூடாது என்றான்.
அவள் கழுத்திலிருந்த செயினை கழற்றி அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு, ஓர் அறைக்கு சென்று ஒரு டாப்பையும் லெகினையும் அணிந்து வந்தாள்.
இனி இவள் உங்க பொண்ணு இல்ல. இனி நாங்க எப்போதும் எந்நிலையிலும் வர மாட்டோம் என்றான் பிரதீப்.
துகிரா அவளது அப்பாவிடம், எனக்கு மாமா வேலை பார்த்தது போல் உங்க பையனுக்கும் பார்க்காதீங்க சார். இனி உங்களுக்கும் எனக்கும் ஏதுமில்லை என்று கூறி விட்டு பிரதீப்பை பார்த்தாள்.
அவள் என்னோட துகி. யாராவது அவளை தொந்தரவு செய்ய நினைத்தால் சாவடிச்சிருவேன் என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவர்கள் பின்னே வந்த துகிராவின் சித்தி, இனி உனக்கு எந்த சொத்தும் கிடைக்காது. போ..வந்துறாத என்றார்.
அவள் பேசுவதற்குள் பிரதீப் அவரிடம், அவளுக்கு உங்க சொத்து தேவையில்லை. என்னுடைய சொத்திற்கான ராணி அவள் தான்.
அப்படி என்னப்பா சொத்து வச்சிருக்க? வாய் கோண இளக்காரமாய் கேட்டார்.
அவன் புன்னகையுடன், நீங்க கண்டிப்பாக தெரிந்து கொள்வீர்கள் என்றான்.
துகிரா அவர்களிடம், எனக்கு சொத்தே தேவையில்லை. அவர் மட்டும் போதும் என்று கையை கோர்த்துக் கொண்டு நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். உங்களை மாதிரி நான் இல்லை என்று பிரதீப்பிடம்,
எதுக்கு டியர், வெட்டிப் பேச்சு என்று அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.
நீ உறுதியா தானே இருக்கிறாய்? பிரதீப் வினவ, அவனை இறுக தழுவிக் கொண்டு, எனக்கு இப்ப தான் சுத்தமான காற்றை சுவாசிப்பது போல் இருக்கிறது என்றாள் கண்ணை மூடிக் கொண்டு. அவன் அவளை ரசித்து பார்த்தான்.அவன் உதடுகளில் புன்னகை குடி வந்தது.
அபி அதை பார்த்து, வாவ்..மாமா எவ்வளவு அழகா சிரிக்கிறார்? ரசிக்க, இன்னும் முடியவில்லை உன் மாமாவின் பிரச்சனை என்றான் தீனா.
அனைவரும் அவனை பார்க்க, நான் அன்று நடந்த போதே விசாரித்தேன். அந்த பையனின் அப்பா ரொம்ப மோசமானவர் என்று தீனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேன் ஒன்று வந்தது. பிரதீப் துகிராவை சுற்றி வளைத்தது. அர்ஜீன் கதவை திறக்க, தீனா அவனை தடுத்து, இவங்கள அவனால சமாளிக்க முடியாது. அவனை கண்டிப்பா துகிராவை கார்னர் செய்பவன் துக்கி செல்வான். நாம் பின் தொடர்ந்து அப்புறம் உதவலாம் என்றான் தீனா.
போனை ஆன் செய்து, அவனுடைய ஆட்களையும் சீக்கிரம் வர சொன்னான்.போலீஸ் வந்து கொண்டிருந்தனர்.தீனா கூறியது போல் இருவரையும் அழைத்து சென்றனர்.
அவர்கள் பாழடைந்த தொழிற்சாலையில் இருந்தனர்.அங்கே ஒருவன் கால் மீது கால் போட்டு இருவரையும் பார்த்தவாறு இருந்தான்.
பிரதீப் கை கட்டப்பட்டு இருந்தது. அவன் எழுந்து துகிராவை எழுப்பினான். அவள் எழாமல் இருக்க பயந்து, அவளது கன்னத்தை தட்டினான்.
அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்று எதிரே இருந்தவன் கூற,அவனை பார்த்து உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான் பிரதீப்.
எனக்கு அந்த பொண்ணு போதும் என்றான்.
என்ன பேசுற? அவளுக்கு உன் மகள், மகன் வயது இருக்கும். இப்படி பேசுற?
அழகுக்கு முன் வயது முக்கியமில்லை.
அடச்சீ..இவ்வளவு கேவலமா பேசுற?
டேய்..அவனை பிடித்து கட்டுங்கடா என்றவுடன் அவன் பிரதீப்பை கட்டிப் போட்டான். துகிரா மீது தண்ணீரை ஊற்றி எழுப்பினார்கள்.
அவள் எழுந்து, யாருடா நீங்களெல்லாம்? கேட்டுக் கொண்டே பிரதீப்பை பார்த்தாள். அவனை அடித்தும் வைத்திருந்தனர். அவனை இரத்தம் சொட்ட கட்டி இருந்தனர்.
அவரை என்னடா செஞ்சு வைச்சிருக்கீங்க? என்று அவனிடம் பதறி ஓடினாள்.
அவன் அவளை பார்த்து புன்னகையுடன், நான் சொன்னா கேட்பேல?
கண்டிப்பா கேட்பேன். நீ ஏதும் பேசாமல் அமைதியா அவன் சொல்வதை கேள் என்றான்.
நான் அவன் சொல்வதை கேட்கணுமா? கேட்டாள்.
ம்ம்..என்று தலையசைத்தான். இவன் பேச்சு அவர்களை குழப்பியது.அவன் கதறுவான் என்று நினைத்திருந்தார்கள். இவர்கள் வெளியே இருப்பதை தீனா ஏற்கனவே மேசேஜ் பண்ணி இருப்பான்.
துகிராவை அவர்கள் இழுத்து அந்த ஆள் முன் நிற்க, அங்கிள் நீங்களா?
உங்க பையன் தான் தவறா நடந்துக்கிறான்னா? நீங்க இப்படி எங்களை கடத்தீட்டு வந்துருக்கீங்க?
என்னம்மா பண்றது? உன்னை பார்த்தவுடனே எனக்கு பிடிச்சு போச்சு. நீ எனக்கு வேண்டும் என்பதால் தான் என் மகனை திருமணம் செய்து தர சொல்லி கேட்டேன்.
என்ன? என்று பதறினாள். உங்களுக்காகவா? என்று பிரதீப் அருகே வந்து அவனை கட்டிக் கொண்டாள்.எனக்கு பயமா இருக்கு? ஏதாவது செய்யுங்கள் என்று அழுதாள். அந்த ஆளின் ஆட்கள் அவளை இழுத்து வந்து அவன் முன் போட்டனர்.
இங்கே வா..அந்த ஆள் அழைத்தார். அவள் முறைத்துக் கொண்டிருக்க,
ம்ம்..சீக்கிரம் அவன் சொல்வதை கேள் என்றான்.
என்ன சொல்றீங்க? என்று அவனருகே வந்து, நான் அந்த சொட்ட தலையனிடம் போகணுமா?
சும்மா இரும்மா. நான் சொன்னா கேளு என்றான் பிரதீப்.
போடா..நீயும் இவங்கள மாதிரி ரொம்ப ரொம்ப ஃபேட் பாய் என்று அழுது கொண்டு அவனருகே அமர்ந்தாள்.அவளை மீண்டும் இழுத்து அந்த ஆளிடம் தள்ளினார்கள்.
அவள் மீது அந்த ஆள் கை வைக்க,கையை இறுக்கிக் கொண்டிருந்த பிரதீப் பார்வை வாயிலிலே இருந்தது.அவள் அழுது கொண்டு அந்த ஆளை தள்ளி விட்டாள். அவன் மீண்டும் அவளை தொட, கட்டை ஏற்கனவே அவிழ்த்திருந்த பிரதீப் தன் துகியை அவன் பக்கம் பிடித்து இழுத்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கண்ணீரோடிருக்க, அவனது ஆட்கள் அவனருகே வந்தனர். அதற்குள் துப்பாக்கி சத்தம் கேட்டது. தீனாவும் அவன் ஆட்களும் உள்ளே வந்து அவனை பிடிக்க, அவன் துகிராவை பிடித்து அவள் ஆடையில் கை வைத்தான்.
பக்கத்தில் வந்தீங்கன்னா? இந்த பொண்ணு உடம்பை எல்லாரும் பார்க்க வேண்டி வரும் என்று மிரட்டினான். இதை எதிர்பார்க்காதவர்கள் அதிர்ந்து நின்றனர். சன்னலை உடைத்து கயிற்றில் வந்து குதித்த அபி அந்த ஆளை எத்தி விட, பிரதீப் துகிராவை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவனையும் அவனது ஆட்களையும் தீனாவும் அவன் ஆட்களும் பிடித்து அந்த ஏரியா போலீசிடம் ஒப்படைக்க சென்றனர். துகிரா அழுது கொண்டே, ஒரு நிமிசத்துல உயிரே போச்சு. நீங்களே என்னை அவனிடம் ஒப்படைத்து விட்டீர்கள்..பிரதீப்பை போட்டு அடித்தாள்.
நான் ஹீரோயிசம் காட்டுவேன்னு நினைச்சியா? அவங்க ரொம்ப மோசமானவங்க. அவங்க கிட்ட காட்டுனா? இப்ப உன்னை..அத விடு.வா..என்று அவன் மீண்டும் அவளை அணைத்தான்.
மாமா போதும். நாங்க எல்லாரும் இருக்கோம் என்றான்.
அடேங்கப்பா,என்னவொறு ஸ்மைல்..செம்மையா இருக்குண்ணா அர்ஜூன் கிண்டல் செய்ய பிரதீப்பிற்கே வெட்கம் வந்தது.துகிரா ஆதேஷை பார்த்து, அவனிடம் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.அவன் அவளது தலையை தடவி கொடுத்தான்.
தலையை களைக்காதேடா ஜில்லா என்று அவனது கையை தட்டி விட்டாள். அனைவரும் சிரித்தனர்.
விடியப்போகுது.வாங்க கிளம்பலாம் என்று கவின் கூற, தீனா போன் செய்து, நீங்க கம்பிளைண்ட் கொடுக்கணும். இப்பொழுதைக்கு ஊருக்கு வேண்டாம் என்றான்.
அவன் ஸ்டேசனுக்கு வரச் சொல்ல, அவர்கள் அனைவரும் அங்கு சென்று வேலையை முடித்து விட்டு அர்ஜூன் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தனர். தீனாவிடம் நீ புவனாவை சென்று பார் பிரதீப் கூற, கையை கட்டிக் கொண்டு தீனா அனைவரையும் பார்த்தான்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். என்ன ஆச்சு சார்? கவின் கேட்டான்.
என்ன பிரச்சனை அர்ஜூன்? கேட்டான்.
பிரச்சனையா? இல்லையே?
இருக்கு.. ஸ்ரீக்கு.. இருக்கு தான? அவன் கேட்க, அனைவரும் விழித்தனர்.
சொல்லப் போகிறீர்களா? இல்லையா? அண்ணா உனக்கும் தெரியும்தானே?
அண்ணாவா? என்று பிரதீப் விழி விரிக்க தன் தம்பியை பார்த்தான்.
சொல்லுங்க? எனக்கு ஏற்கனவே தெரியும்? நீ அப்படி அழும் அளவிற்கு என்ன நடந்தது?
அண்ணா..ஒன்றுமில்லைண்ணா என்று அமைதியானான்.
நீ எதையோ மறைக்கிறாய் அர்ஜூன்? சொல்லு என்றான் அபி.
ஒன்றும் இல்லைன்னு சொல்றேன்ல என்று அர்ஜூனின் சினம் வெளியே வந்தது.
ப்ளீஸ்டா, அவனை விடுங்களேன் பிரதீப் கூறினான்.
சரி,நீ சொல்லு என்றான் தீனா. பிரதீப் அமைதியாக இருக்க, மாமா சொல்லுங்க? அவ ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்கா? அபி கூறினான்.
அபி,..எல்லாருக்கும் விசயம் தெரிந்தது என்று ஸ்ரீக்கு தெரிந்தால் உடைந்து விடுவாள். தயவு செய்து நடந்ததை மட்டும் கேட்காதீர்கள் கவினும் சத்தமிட்டான்.
அர்ஜூன் வேகமாக அங்கிருந்து தனியே சென்றான். அண்ணா..நில்லுங்க என்று ஆதேஷ் அர்ஜூன் பின் செல்ல, போதுமா எல்லாருக்கும்? என்று கத்தி விட்டு கவினும் செல்ல. பிரதீப் அர்ஜூனை வருத்தமுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
இதற்கு மேல் நாமே கண்டறியலாம் என்று தீனா மனதினுள் நினைத்துக் கொண்டான். அர்ஜூனிற்கு ஸ்ரீயின் நிலையை தாங்க முடியாமல் அழுதான். அவனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். உடன் தீனாவும் சென்றான்.