ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 110.

ஜானு தீனாவிடம் சினத்துடன் வந்தாள். அதற்குள் காவேரி அவனருகே வந்து கோபம் தீர தீனாவை அடித்துக் கொண்டே இருந்தார். பின் அவனது சட்டையை பிடித்து, என்னடா பேசுறீங்க? என்று கத்தினார்.

ஏம்மா, இத்தனை நாள்ல ஒரு நாளாவது என் அருகே வந்து, மனம் திறந்து பேசி இருப்பீர்களா? அப்பத்தாவை பார்த்து, உனக்கு எப்போதும் உன் பெரிய பிள்ள நினைப்பு தான? யாருக்காவது என்னை கவனிக்க தோன்றியதா? அவனும் கத்தினான்.

வெளிய எல்லாரும் நம்ம குடும்பத்தை பற்றி அப்படி பேசுறாங்க? அப்பாவுக்கும் உனக்கும் பிரச்சனைன்னா நான் என்ன செய்வேன்? என்னை எல்லாரும் தனியா விட்டீங்க?

பெரியப்பா போன பின் தான் எல்லாமே ஆரம்பித்தது. எல்லாரும் அவங்கவங்க பிரச்சனைய பார்த்துக்கிட்டு இருந்தீங்க? நான் சின்னப்பையன் தானே? என்னிடம் பேச கூட யாருமே இல்லை. அப்பா இதை மட்டும் தான் என்னிடம் அடிக்கடி சொல்வார்.

அவர் காதலை அவர் அண்ணனே கொன்று விட்டாராம்.காதல் உயிர்கொல்லி போல் ஒரு பொண்ணுடன் வாழ்வெதன்பது உயிரோட செத்ததற்கு சமம். அதற்கு பதில் தினமும் ஒரு பொண்ணுடன் இருக்கலாம் என்று சொல்லி வளர்த்தார். அவர் என்னிடம் என்ன பேசுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. நான் கல்லூரி படிக்க ஆரம்பித்த பின் என் குடும்பம் தான் சரியில்லை என்று அறிந்து கொண்டேன்.

விடுதியில் படிக்கும் பசங்களை பார்க்க அவர்களது குடும்பத்தினர்  மாதத்திற்கு ஒரு முறையாவது வருவார்கள்.வரும் போது அவனுக்கு பிடித்தது அனைத்தும் வாங்கி வருவார்கள். ஆனால் எனக்கு யார் வந்தீர்கள்? ஒரு முறை..ஒரே ஒரு முறையாவது வந்தீர்களாம்மா? கேட்டார்.

அவர் உடைந்து அமர்ந்தார். ஏன் அப்பத்தா உனக்கு மூத்த பிள்ளை மட்டும் தான் இருந்தாரா? சின்ன பிள்ளை இல்லையா? நான் ஒத்துக் கொள்கிறேன். அப்பா மட்டும் தான் பெரியம்மாவை காதலித்தார். அவர் பெரியப்பாவை தான் காதலித்தார். அதை அப்பாவிற்கு புரிய வைத்து கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும்.

பிரதீப்பை பார்த்து, தன் காதலியை அண்ணன் பிடுங்கி விட்டானே? என்ற ஆதங்கத்தில் தான் அப்பா அன்று அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்றார்.ஆனால் அவர் ஏதும் செய்யவில்லை. உன் அம்மா, அப்பா இறந்தது விபத்து மட்டும் தான்.

அப்பாவும் என்னுடன் பெரியதாக பேச மாட்டார். அவர் கூறிய அதே விசயத்தை மட்டும் தான் அடிக்கடி கூறுவார்.பிரதீப்பை பற்றி தான் எப்பொழுதும் உயர்வாக பேசுவார். அதனால் தான் எனக்கு அவனை பிடிக்காமல் போனது. அவனை பார்த்த தீனா,உனக்கு உண்மையான பாசத்தோட ஜானுவாது இருக்கா?

ஆனா என்னை சுத்தி எல்லாரும் இருக்காங்க. அம்மா, அப்பா, துளசி,சுஜி, கார்த்திகா, அப்பத்தா, அத்தை, மாமா, அவங்க பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்தாங்க, இருக்காங்க. ஆனா பாசமா யாருமே இல்லையே? என்று அழுதான்.

சுஜி, கார்த்திகா தீனாவிற்கு அடுத்து பிறந்தவர்கள். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தருண் அடிபட்டு ஜானுவையும், புவனாவையும் அழைத்து வந்த போது, அண்ணன் மீது அவள் வைத்திருந்த பாசம், அவளது அழுகை எனக்கு பிடித்தது என்று அவளருகே வந்து மண்டியிட அவள் பதறி நிமிர்ந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன், நான் யாரிடமும் மண்டியிடக் கூடாதா? என்ன? என்று கேட்டான் புவனாவிடம்.

ஆம் என்று தலையசைத்தாள். அவள் கண்ணீரை துடைத்தான்.மீண்டும் பேச ஆரம்பித்தான்.பின் அவர்களை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் மால் போனது, அவள் அந்த தடியன்கள் முன் அவனை பாதுகாக்க வந்தது. நடந்த அனைத்தையும் கூறினான். அவள் பெற்றோர் இறந்த போது அவள் கண்ணீர், கஷ்டம். யாருமில்லை என்று அவள் புலம்பியது, துருவனுக்கு குழந்தைகளை வைத்து அவள் கூறிய அறிவுரை அனைத்தும் என்னை அறியாமலே என் மனதில் பதிந்து விட்டது.

அவள் எங்க வீட்டிற்கு வந்ததும் என்னுள் அவ்வளவு சந்தோசம். அப்பா சொன்ன இரவு நான் அவளை பார்க்க மட்டும் தான் செய்தேன். எனக்கு புவியை பிடிச்சிருக்கு என்று அவளை பார்த்து எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் புவி.

இத்தனை நாள் எப்படி இருந்திருக்கிறேன் என்று வருத்தமாக உள்ளது. நான் இதுவரை நிறைய பொண்ணுங்களுடன் சுற்றி இருக்கிறேன். ஆனால் அப்பா பேசியது போல் யாருடனும் படுத்ததில்லை. அப்பா என்னை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சும்மா ஹோட்டலுக்கு போவேன்.நான் தேர்ந்தெடுக்கும் அறைக்கு இரு கதவு இருப்பது போல் தான் இருக்கும்.

அழைத்து வரும் பொண்ணை அங்கே விட்டு, சுவர் ஏறி குதித்து வெளியே சென்று விடுவேன். எங்காவது மரத்தடி இல்லை,யாராவது வயசானவங்க தனியா இருக்கிற வீட்ல கேட்டு தங்கிடுவேன். வீட்டிற்கு செல்ல மாட்டேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் புவி என்று கூறி விட்டு, பவியிடம் நீ சொன்னது சரி தான். எனக்கு புவி ஸ்பெசல் தான். அதான் என் உயிரையும் பொருட்படுத்தவில்லை என்றான்.

புவனா அழ ஆரம்பித்தாள்.சாரி..சார்..நானும் உங்களை தவறாக புரிந்து கொண்டேன்.என்னை மன்னிச்சிருங்க. எனக்கும் உங்களை பிடிக்கும் என்றாள்.

பிரதீப் அப்படியே திரும்பி காவேரியை பார்த்தான். காவேரி அழுது கொண்டிருந்தார்.

போதும் நிறுத்துடா கத்தினார் அப்பத்தா.தீனா எழுந்தான். எனக்கு புரியது உன்னோட கஷ்டம். உன்னை விட கஷ்டப்பட்டது உன்னோட அம்மா தான்.

நீ சொன்ன மாதிரி அவள் உன்னை மட்டுமல்ல நாலு பிள்ளைகளையும் அவள் கவனித்ததில்லை. ஒரு நாளாவது உன்னோட அம்மா என்ன செய்றான்னு பார்த்தாயா? கேட்டவர்.

எல்லாரும் வெளிய போங்க நான் என்னோட பசங்களிடம் பேசணும் என்றார்.ஜானு வெளியே செல்ல, நீயும் பிரதீப்பும் இருங்க என்று நிற்க வைத்தார்.

அறையினுள் புவனா,காவேரி, அப்பத்தா,தீனா, பிரதீப், ஜானு,துளசி இருந்தனர்.உன்னோட அம்மா ஒரு நாள் கூட சந்தோசமா இருந்ததேயில்லை.உங்கப்பா கொடுமை தாங்காம ரொம்ப கஷ்டப்பட்டா.அவர் அவளை தினமும் மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்துவார் என்று காவேரிடம் சென்று அவரது ஆடையை விலக்க, அவர் பிடித்துக் கொண்டு, வேண்டாம் அத்தை என்று கத்திக் கொண்டே பயங்கரமாக அழுதார்.

அங்கிருந்தவர் கண்கள் கலங்கியது. உன்னோட அப்பாவுக்கு காதல் கை கூடவில்லையாம். அதற்காக இவளுக்கு தான் தண்டனை.சுஜியும், கார்த்தியும் நேரடியாகவே உங்க அம்மா கஷ்டப்படுவதை பார்த்தனர். தாங்க முடியாத சுஜி, உங்க அப்பாவை கத்தி எடுத்து கொல்லப் பார்த்தாள். அவளை சமாளிக்க முடியாமல் தான் அவர்களை வெளிநாட்டிற்கே அனுப்பினோம்.அவளை அதான் நம்ம ஊருக்கு வரவே விடல.அப்பொழுது துளசி ரொம்ப சின்னப்புள்ளடா. அவளுக்கு ஏதும் நினைவில்லை.நீயும் ஊர்ல இல்லை.

உங்க அப்பா இப்ப இரண்டு வருடங்களாக தான் எதுவும் செய்வதில்லை. என் மருமவ அவனோட அறைக்கு போகவே பயப்படுவா? பிள்ளைகளை கூட்டிட்டு அம்மா வீட்டுக்கு போடின்னு அன்றே சொன்னேன்.பாவி மவ கேட்கல.இங்க தான் இருப்பேன்னு கஷ்டப்பட்டுகிட்டு உங்களுக்காக தான் உயிரோட இருக்கா என்று அழுதார்.

பிரதீப்பை பார்த்து, நீ வெளியே சென்றது கூட நல்லது தான். நீங்களாவது நிம்மதியா இருந்தீங்க. உங்க அம்மா, அப்பாவை கொன்னது என்னோட சின்ன பையன் இல்ல..வேற யாரோ? யாருன்னு தெரியல என்று என்னோட மூத்த பையன் இறந்தது விபத்து இல்லை. கொலை தான் செய்திருக்கிறார்கள். ஆனா சின்ன பையன் இல்ல என்று அழுதார்.

பிரதீப்பும்,தீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அம்மா.. என்று துளசி காவேரியிடம் அழுதுக் கொண்டே செல்ல, ஜானுவும் சித்தி என்று அவரை இருவரும் அணைத்துக் கொண்டனர்.

இப்ப இரண்டு வருசமாக அப்பா, அம்மாவை விட்டுட்டார். நான் தான் கிடைத்தேன்ல என்ற தீனா, உண்மையிலே அது விபத்து இல்லையா? எப்படி கொலைன்னு சொல்றீங்க?

ஒரு கடிதம். அதை காட்டுகிறேன் அதில் என் மூத்த பையனை ஓரிடத்திற்கு வரச் சொல்லி எழுதி இருந்தது.

எந்த இடம்? பிரதீப் கேட்டான்.

அது இங்கிலீஸ்ல இருந்ததுப்பா.எனக்கு புரியவில்லை என்றார்.

நான் கண்டுபிடிக்கிறேன் என்று தீனா அவனது அம்மாவிடம் சென்று, என்னை மன்னிச்சிருங்கம்மா..நான் என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சுகிட்டு உங்களை விட்டுட்டேன் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதான்.

நடுராத்திரில அவர் வெளிய போறாருப்பா? எங்க போறார்ன்னு பின்னே சென்றேன். அவர் என்னை பார்த்து விட்டார். இனி நான் அவரை பின்தொடர்ந்தால் உங்களை கொன்று விடுவேன்னு மிரட்டினார்ப்பா என்று காவேரி அழுதார்.

அம்மா..நீங்க எதை பற்றியும் கவலைப்படாதீங்க. நான் இருக்கேன் என்றான்.

நானும் தவறு செய்து விட்டேன் அப்பத்தா. என்னை மன்னிச்சிருங்க. உங்கள விட்டு சென்று விட்டேன். நீங்க சந்தோசமா இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்களும் சித்தியும் இப்படி கஷ்டப்படுவீங்கன்னு தெரியாது என்று கண்ணீர் உதிர்த்தான் பிரதீப். அனைவரும் சேர்ந்து விட்டனர். இதை பார்த்து புவனா கண்ணீருடன் தன் குடும்பத்தை நினைத்தாள்.

தீனா புவனாவை பார்த்தான். அவள் கண்ணீருடன் இருப்பதை பார்த்து, அவனது அம்மாவை துக்கி விட்டு எழுந்து அவரை தோளோடு அணைத்தபடி உட்கார வைத்து விட்டு அவளருகே வந்தான்.

அவளுக்கு அவன் பிடித்திருக்கு என்று கூறினாலும் துகிரா நினைவே வர, அவள் அவனையே பார்த்தாள்.

என்ன பேசணும்? என்று அவளருகே அமர்ந்தான். பிரதீப், அப்பத்தா அனைவரும் புவனா அருகே வந்தனர்.

அவள் தயங்கிக் கொண்டே, அவங்க? என்று கேட்டாள்.

புருவத்தை சுருக்கி, எவங்க?

ஹாஸ்பிட்டல..அவங்களுக்கு என்ன கொடுத்தீங்க?

ஹாஸ்பிட்டலா? என்று நெற்றியை தேய்த்தான். பின் புன்னகையுடன் துகிராவா?

ஆம் என்று தலையசைத்தாள்.

தீனா பிரதீப்பை பார்த்துக் கொண்டு, முதல்ல அவள ட்ரை பண்ண நினைச்சேன். எனக்கு அவ செட் ஆக மாட்டா. அந்த பொண்ணு சரியான சண்டைக்காரி. சரியான அராத்து.அவளுக்கு நான் வாங்கித் தந்து பிளாஸ்திரிகள். வாயில் ஒட்டிக் கொள். தேவைப்படும் என்றேன்.

புவனா புன்னகைத்தாள்.

ஓய்..என்ன? வாயை உடைச்சிருவேன் பிரதீப் கூற, புவனா பிரதீப்பை புரியாது பார்த்தாள்.

ஜானு புவனாவிடம் சந்தோசமாக வந்து, அண்ணா துகிராவை கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கேட்டுட்டான் என்றாள்.

என்ன கல்யாணமா? என்று புவனா பிரதீப்பை பார்த்தாள்.

அவ தான் இன்னும் ஏதும் சொல்லவில்லையே என்றான் பிரதீப். மற்றவர்கள் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

வெளியே வந்த அகில் தன் தம்பியை பார்த்து,நாங்க தான் முதல்லே சொன்னோம்ல? என்றான். துருவன் அழ ஆரம்பித்தான். சரிடா..சரிடா..உனக்கு வேற நல்ல பொண்ணா கிடைப்பா. முதல்ல படிப்புல கவனத்தை செலுத்து என்று அவனை அணைத்துக் கொண்டான்.

அவனுக்கும் அதே நிலை தானே. அவனையும் தேற்றிக் கொண்டு,தன் தம்பியையும் தேற்றினான்.

நித்தி அப்பா, அவளிடம் இன்னும் ஒருநாள் தங்கும்மா.நாம சேர்ந்தே சென்னை செல்லலாம் என்றார்.

அப்பா..நீங்களும் வர்றீங்களா? என்று ஒரு நிமிடம் மகிழ்ந்தாலும் இவர் வந்தால் ஸ்ரீ பற்றி இவருக்கும் தெரிந்து விடுமே? பயந்தவாறு திடீரென எதுக்குப்பா?

ஏம்மா..மறந்துட்டியா? அந்த நாளை என்றார்.

அப்பா..என்று சினத்துடன் நான் நாளையே கிளம்பி விடுவேன் என்றாள் அவரை முறைத்தவாறு. இந்த முறை மட்டும் அப்பாவிற்காக வாம்மா என்றார்.

நித்தி கோபமுடன், முடியாதுப்பா என்றாள்.

நித்தி எதுக்கு அப்பாகிட்ட கோபப்படுற? பவி கேட்டாள்.

பவி. உனக்கு ஏதும் தெரியாது. அமைதியா இரு என்றாள்.

வருத்தமுடன் தன் மகளை பார்த்தார். வா..நாம் வீட்டிற்கு செல்லலாம் என்று நித்தி அவளை அழைக்க, அப்பா நீங்களும் வாங்க என்று பவி அழைத்தாள். இல்லம்மா நான் காலையில் தான் வருவேன். எனக்கு ஒரு சர்ஜரி இருக்குமா? நீங்க வெளிய சாப்பிட்டுக்கோங்க. நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியாதுடா என்றார்.

அப்பா, நீங்க கவலைப்படாதீங்க. நான் எங்க வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று அகில் நித்தியை முறைத்துக் கொண்டு அவர்களை அழைத்து சென்றான்.

அம்மா அகிலை பார்த்து, ஏன்டா வந்துட்டு பேசாம போன? என்று அங்கிருந்த குச்சியை எடுத்து அவனை அடிக்க விரட்டினார். பின் தான் துருவனை பார்த்து, என்ன ஆச்சுடா? இப்படி காயத்தோட வந்திருக்க? என்று அவனருகே வந்தார்.நித்தியும் பவியும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த, வாங்க..வாங்க..என்று ஜாலியாக பேசினார்.

பவியிடம், உன்னை பார்த்தது போலே தெரியவில்லையே? என்று கேட்டார்.

ஆமாம் ஆன்ட்டி, நான் அதிகமா யாரிடமும் பேசியதில்லை.அகிலிடம் மட்டும் தான் பேசுவேன். அவனிடமும் சரியாக பேசியதில்லை. இப்பொழுது தான் எல்லாரிடமும் பேசி பழகுகிறேன்.

சாப்பிட அமர்ந்தனர்.துருவன் பவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.நித்தி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

பவியை பார்த்து உங்களுக்கு காதலில் அனுபவம் இருக்கிறதோ? கேட்டான் துருவன். அகில் நித்தி சாப்பிடுவதை நிறுத்தி அவளை பார்த்தனர்.

அவளுக்கு துரு நினைவுபடுத்தி விட்டானே? அழுது விடுவாளோ? என்று இருவரும் பார்த்தனர்.

அமைதியா சாப்பிடுடா என்று ரதி பவியை பார்த்துக் கொண்டே துருவை அதட்டினார்.

மனதினுள் மறைத்தவாறு, ஆம் என்று வேறெதுவும் கூறாமல் சாப்பிடாள். அவளுக்கு அம்மாவிடமிருந்து போன் வந்தது.

சாப்பிட்டுக் கொண்டே, சொல்லுங்கம்மா?

ம்ம்..சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கேன். நான் நல்லா தான்மா இருக்கேன். அம்மா எனக்கு இந்த ஊர் புதுசா தெரியுது. அழகாக இருக்கு என்று

அம்மா,ஜூலி தூங்கிட்டாளா? அது கத்தியது.

அவள் முகம் பிரகாசித்தது. ஏ..ஜூலி குட்டி சாப்பிட்டியா? சமத்தா அம்மா கூட தூங்கு. நான் நாளைக்கு வந்துருவேன்.

மீண்டும் கத்தியது. சரிடா உனக்கு வாங்கிட்டு வாரேன் என்று அவள் அழகா பேசுவதை ரதியும் துருவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மா, அப்பா ஓ.கே தானே?

தூங்கிட்டாரா?

சரிம்மா. நான் நாளைக்கு அவரிடம் பேசிக்கிறேன் என்று போனை துண்டித்தாள்.

யாரும்மா ஜூலி? அகில் அம்மா கேட்டார்.

அம்மா..அது நாய்க்குட்டி என்றான் அகில். அகிலை முறைத்துக் கொண்டு பவி கோபமாக எழுந்தாள்.

நித்தி அவளது கையை பிடித்து அமர்த்தினாள்.

அப்புறம் எப்படி சொல்றதாம்? கேட்டான்.

இன்னொரு தடவை என்னோட ஜூலியை அப்படி சொன்ன கொன்றுவேன். பார்த்துக்கோ..என்றாள் அங்கிருந்த கத்தியை காட்டி,

சோ..இன்ட்ரஸ்டிங் என்றான் துருவன்.

என்ன? என்று அகில் அவனிடம் கேட்க, உனக்கு நான் சொன்னது கேட்கவே இல்லையா?

அகில் துருவனை முறைத்தான்.

சாப்பிட்டு விட்டு,அவர்கள் ஹாலிற்கு வந்தனர். அகில் வீடும் பெரியது தான். அதில் தான் அகில் குடும்பமும் ஸ்ரீ குடும்பமும் ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள்.

அங்கிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து, ஆன்ட்டி இது..என்று ஸ்ரீயை காட்டி அவள் பேசுவதற்குள் அகில் அவளது வாயை பொத்தினான். நித்தி பயத்தில் ஏதோ உளறினாள்.

என்ன ஆச்சும்மா? ஸ்ரீ பற்றி ஏதும் பேசி விடாதே என்று அவளது காதருகே கூறினான். அவனது நெருக்கத்தில் அவள் உறைந்து நின்று கேட்க வந்ததையே மறந்தாள்.

ஒண்ணுமில்லை ஆன்ட்டி என்றாள். இந்த புகைப்படமா? என்று அவரே அவர்களை பற்றி கூறினார். இதை பார்த்த துருவன், அண்ணா எதையோ மறைக்கிறான் என்று தெளிவாக தெரிந்தது.

அகில் அம்மா கூறியதை கேட்டவள் அகில், நித்தியை பார்த்தாள். சரிங்க ஆன்ட்டி, நாங்க கிளம்புகிறோம் என்று இருவரும் கிளம்பினார்கள். அகில் பெருமூச்சு விட்டான். ஸ்ரீயை பற்றி தெரிந்தால் அவளது பெற்றோர் இறந்த விசயமும் தெரிய வரும். அம்மா அதை தாங்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர்.

நித்தி அவள் வீட்டிற்கு பவியை அழைத்து வந்து அகில் காதலை தவிர நடந்தது, நடப்பது அனைத்தையும் சொன்னாள்.