வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-109
184
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 109.
ஜானு துகிரா அருகே அமர்ந்தாள். ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஜானு..பேசணும்னு சொன்ன?
ம்ம்..என்று கண்ணீரை ஒற்றை விரலால் சுண்டி விட்டு, என்னோட அண்ணா இதுவரை அவனுக்காக எதுவும் நினைத்தது, கேட்டது கூட இல்லை. எல்லாமே எனக்காக தான் செய்தான். ஒரு நாள் கூட அவனுக்காக என்று வாழ்ந்ததில்லை. எந்த பொண்ணுடன் நின்று பேசியது கூட இல்லை. அவனுக்கென நான் எத்தனை பொண்ணை பார்த்தேன் தெரியுமா? ஆனால் நான் என்ன சொல்லியும் கேட்கவேயில்லை. அவன் ஒன்று மட்டும் தான் சொன்னான். என்னை போல் பொண்ணு வேண்டுமாம்.
நான் எங்கே போவேன்? என்னை மாதிரி பொண்ணுக்கு..நம் முதல் சந்திப்பே சண்டை தான். போகப் போக உன்னிடம் நான் என்னையே பார்த்தேன். ஆனால் எனக்கு என் அண்ணனுக்கு சரியாக இருப்பாய் என்று தோன்றவில்லை. உன்னுடைய வயது என்னை விட ஒரு வயது அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்.
தருண் அண்ணாவை பார்க்க வந்த போது அண்ணா உன்னிடம் நடந்து கொண்டதிலே எனக்கு புரிந்து விட்டது. அவனுக்கு உன்னை பிடித்திருக்கு என்று. அவனே சொல்லட்டும். நானாக கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டோனோ? என்ற பயத்தில் நான் உன்னை பற்றி ஏதும் பேசவில்லை.
ஆனால் இப்ப எல்லார் முன்னாடியும் அவனே சொல்லிட்டான். ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணீரை துடைத்து விட்டு. நான் அண்ணா பத்தி சொல்றத விடு. நீயே இங்க யார்கிட்டனாலும் கேட்டுப் பாருங்க. அவரை பத்தி எல்லாருக்குமே தெரியும். விசாரிச்சுக்கோ..அண்ணா தான் என்னை நன்றாக பார்த்திருக்கிறான். இதுவரை யாரும் அவனை பார்த்துக் கொண்டதில்லை என்று அபி இன்பாவிடம் கூறிய அதே அவங்க குடும்ப கதையை கூறினாள்.அவனை பிடிக்கவில்லை என்றால் என்று ஜானு துகிராவை நிமிர்ந்து பார்த்து, அவரிடம் சொல்லாதே! என்னிடம் சொல்லி விட்டு போ.
அவருக்கும் உனக்குமுள்ள வயது வித்தியாசத்தை மட்டும் காரணமாக சொல்லி விடாதே! ப்ளீஸ்..என்று விட்டு பிடித்திருந்தால் நீயே அவரிடம் சொல்லிவிடு. அண்ணாவை பொறுப்பா பாத்துக்கோ என்றாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த துகிரா அழுதாள். அவள் அழுவதை பார்த்து ஆதேஷ் அங்கு வந்து, அவளை என்ன சொன்னாய்? எதுக்கு அழுகிறாள்? என்று கத்தினான். ஜானு துகிராவை பார்த்து விட்டு ஆதேஷை பார்த்தாள்.
ஜானுவிற்கு புரியவில்லை. எதுக்கு அழுறா?
ஜில்லா..அவள திட்டாதே என்று துகிரா ஜானு கையை பிடித்துக் கொண்டு, எனக்கு தெரியாதே?
என்ன தெரியாது? ஜானு கேட்டாள்.
பொறுப்பா பார்த்துக்கணும்னா? எப்படி?
ஜானு அவளை பார்த்து, இதுக்கா அழுத?அவளது கண்ணீரை துடைத்து விட்டு, பொறுப்பானா? நீ வேற எதுவும் செய்ய தேவையில்லை. அண்ணாவை மட்டும் பார்த்துக் கொள். மற்ற எல்லாவற்றையும் அவனே பார்த்துக் கொள்வான்.
எனக்குமே எங்க சொத்து, வீட்டு பொறுப்பு எதை பத்தியும் தெரியாது. அண்ணா தான் எல்லாமே பார்த்துக் கொள்வான். காலையில் டீ சாப்பிடுறதுல இருந்து இரவு தூங்க கட்டிலை தயார் செய்வது வரை..வீட்டுல மட்டுமல்ல வெளிய வேலையும் எல்லாமே அவன் தான் பார்த்துக் கொள்வான்.
நீ ஓ.கே சொன்னா போதும். எனக்காக செய்கிறவன் அவனுக்கு பிடிச்ச உனக்காகவும் செய்ய மாட்டானா? நீ தான் நல்லா யோசிச்சு முடிவெடு. சரின்னு சொல்லிட்டு பாதிலே விட்டுலாம் போகக் கூடாது. அப்புறம் என்னை பற்றி உனக்கு தெரியும் தானே? என்று துகிரா கன்னத்தை பிடித்து விட்டு ஆதேஷை பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.
ஆதேஷ் அவள் பின்னே ஜானு ஒரு நிமிஷம் என்று அவள் முன் வந்து , சாரி நான் கொஞ்சம் டென்சனாகிட்டேன். அதான் என்னவென்று கூட கேட்காமல் உன்னை திட்டி விட்டேன்.
அவள் ஏதும் பேசாமல் அமைதியாக சென்று விட்டாள். ஜானுவை சண்டைக்காரியாக, மாமா..மாமா..என்று உயிரை விடும் ஜானுவை பார்த்த ஆதேஷிற்கு இன்றைய ஜானு புதியதாக இருந்தாள். தன் தோழிக்காக அவ்விடத்தை பற்றி கூட யோசிக்காமல் உதவியது, தோழிக்கான அழுகை, அண்ணா மீதான பாசம், துகிராவை ஏற்றுக் கொண்டு அவளிடம் பேசிய விதம் அவனை வியக்க வைத்தது.
ஜானு நேராக துருவனை பார்க்கச் சென்றாள். அவனை அந்த பசங்க அடித்ததில் அதிக காயமாக இருந்திருக்கும். அவனும் மருந்தை போட்டு விட்டு புவனாவிற்காக கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தான்.
உள்ளே வந்த தீனா அம்மாவும் அப்பத்தாவும் புவனாவை வெளியிருந்து பார்த்துக் கொண்டு தீனாவை பார்த்தனர். அவன் முகம் இறுக்கத்துடன் வியர்வையுடன் இருந்தான். அப்பத்தா தான் இருவரையும் பார்த்திருப்பாரே? அந்த புள்ளைக்கு ஒன்றுமில்லைடா என்று தீனா அருகே வந்து உட்கார்ந்தார். பிரதீப் தீனாவை முறைத்தவாறே இருந்தான்.
இதை பார்த்த காவேரி, பிரதீப்பிடம் வந்து அமர்ந்தான். தீனா அவனது அம்மாவை பார்த்தான். அவர் பிரதீப்பையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் அவரிடம், எதுக்கு இப்படி பாக்குறீங்க?
அவனது தலையை வருடியவர்..உனக்கு அந்த பொண்ணை நிஜமாவே பிடிச்சிருக்காயா?
அவரை பார்த்து விட்டு, ஆமா பிடிச்சிருக்கு. அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சா நான் அவளை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்றான்.
தீனா சட்டென எழுந்து, என்ன பேசுறீங்க?
காவேரி துகிரா பற்றி கூறினார்.தீனா அமைதியாக அமர்ந்தான். இருவரும் புவனா பற்றி பேசுகிறார்களோ? என்று நினைத்து தான் அவன் பயந்திருப்பான்.
நித்தி அப்பா வெளியே வந்தார்.அவரை பார்த்து அனைவரும் எழுந்தனர். அப்பொழுது தான் தன் மகள் அங்கிருப்பதை பார்த்தார்.
பாப்பா நல்லா இருக்கா.ஆனால் அவள் ஒரு மாதத்திற்கு நடக்கக்கூடாது. பெட் ரெஸ்ட் தான் எடுக்கணும்.ஒரு மாதத்திற்கு பின்னும் அவள் கவனமாக தான் இருக்கணும். அவளை பார்த்துக் கொள்ள யாராவது பக்கத்திலே இருக்க வேண்டும் என்று காவேரியை பார்த்தார்.
நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தீனாவிடமிருந்து பதில் வந்தது. பிரதீப் அவனிடம், நீ பார்த்துக்கப் போறீயா? அவளே உடல் நலமில்லாது இருக்கிறாள். உன்னோட எண்ணமே சரியில்லை என்றான் சினத்துடன்.
காவேரி புரியாமல் விழித்தார். அவன் பேசியதை பிரதீப், தீனா அம்மாவிடம் கூறினான்.
அவன் என்னடா சொல்றான்? கேட்டார். அம்மா நான்..என்று சொல்ல முடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கினான் தீனா.
அவனை அறைந்து விட்டு, நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? பொண்ணுங்க வாழ்க்கை அவ்வளவு சாதாரணமா போச்சா? திட்டினார்.
அவன் காதலை எதற்கு மறைக்கிறான் என்று அவனை உற்று பார்த்தார் அப்பத்தா. அவன் தலைகவிழ்ந்து நிற்க, பிரதீப் அவனை அடிக்க வந்தான். அதற்குள் புவனா குரல் கேட்டது.
அண்ணா..அண்ணா..என்று பதறினாள். உடனே அவனை விடுத்து அனைவரும் உள்ளே சென்றனர். அவனுடைய அப்பத்தாவும், பவியும் அவனையே பார்த்தனர்.
பவி அவனருகே வந்து, சார் நீங்க அந்த பொண்ணை காதலிக்க தானே செய்றீங்க? ஏன் இப்படி பேசுனீங்க? உங்களுக்கு அந்த பொண்ணு முக்கியமில்லை என்றால் உங்க உயிரை கூட பொருட்படுத்தாமல் அவ்வளவு ஆழமான பள்ளத்தில் குதித்திருக்க மாட்டீங்க. நான் உங்க காதலை பார்த்து பிரமித்து இருந்தேன்.ஆனால் ஒரே நிமிடத்தில் இப்படி பேசீட்டீங்க? உங்க அப்பா உங்களுக்கு அவளை விடும் அளவு முக்கியமா?
அகில் பவியிடம் வந்து, இவர் கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க? என்று தீனாவை முறைத்து விட்டு அவளது கையை பிடித்து இழுத்து சென்றான்.
இப்பொழுது தான் நான் எப்படியெல்லாம் தப்பா வாழ்க்கையை ஓட்டி இருக்கிறேன் என்று கண்ணீருடன் புவனாவும் தன்னை அப்படி தான் நினைக்கிறாளா? அவளும் பார்த்திருப்பாளே என்று மனம் துடித்தது.அவன் அங்கேயே அமர்ந்து கத்தி அழ முடியாமல் தலையை தொங்க விட்ட படி அழுது கரைந்து கொண்டிருந்தான்.
அப்பாவை நினைச்சு பயப்படுறியா?
அவன் அவரை பார்த்து தலையசைத்து ஆம் என்றான்.
அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்? உனக்கு அவளை பிடித்திருந்தால் கூறி விட்டு சந்தோசமா இரு. உன்னோட பெயரை நீயே கெடுத்துட்டியே? என்று வருந்தினார்.
பரவாயில்லை அப்பத்தா. மறுபடியும் தலையை தொங்க விட்டு அமர்ந்தான்.
பவி மீண்டும் வெளியே வந்தாள்.அகில் அவளை பிடித்து, எங்க போற?
இரு அகில் என்று தீனா முன் வந்தாள். அகில் அவளை பிடித்து கத்தினான். நான் தான் சொல்றேன்ல. நீ எதுக்கு அவரிடம் பேசுற? தேவையில்லாத வேலை செய்யாதே! அவங்க செய்றதை செய்யட்டும்.
என்னடா பேசுற? உங்க யாருக்குமே புரியலயா? நான் படத்தில பார்த்த ஒன்றை நேரில் பார்த்தேன். இவர் செஞ்சது எவ்வளவு பெரிய விசயம்?
நான் உன்னிடம் கேட்கிறேன்? அந்த பொண்ணை எனக்கு தெரியாது. அந்த பொண்ணை உனக்கும் தெரியும் தானே? எத்தனை வருசமா தெரியும்?
சிறுவயதிலிருந்தே தெரியும். புவனா தருணின் தங்கை.
தருணா? என்னோட கிளாஸ்மேட்டா?
அகில் தலையசைத்தான். அவன் எங்கே போய் தொலைந்தான்?
அவனுக்கு விபத்து என்று அவனுக்கு நடந்தது. அவனுடைய பெற்றோர்கள் பற்றி கூறினான்.அவள் கண்கள் கலங்கியது. அவனும் இந்த ஊர் தானா?
ம்ம்..என்றான்.
அவள் பார்வை தீனாவை கூர்மையாக ஏறிட்டது.அப்பத்தா அவளிடம், ஏம்மா பொண்ணு? நீ யார்?
யார் பற்றியும் தெரியாமல் என் பெயரனோட காதலை பற்றி சரியா கேட்குற?
அவர் செஞ்சதுல தான் தெரிந்தது. இந்த உலகமே சுயநலமானது. அதில் ஒரு பொண்ணுக்காக உயிரை விடும் அளவு தில்லா அவளை காப்பாற்றி இருக்கார். அதிலே தெரியவில்லையா அவர் காதல்?
இப்பொழுதெல்லாம் காதலித்து ஏமாற்றி விட்டு போகிறவங்களுக்கு மத்தியில் இவர் செயல் எனக்கு பிடித்தது. எனக்கு தெரிந்து அவளுக்கும் இவரை பிடிக்க வாய்ப்புள்ளது. அவள் நிலையில் எந்த பொண்ணுக்கு இவரது செயல் பிடிக்காமல் போகும்? கண்டிப்பாக அவள் மனதில் இவர் இருக்க வாய்ப்புள்ளது.
வாய்ப்பு மட்டும் தான். அனைவரும் சொல்வதை பார்த்தால் நீங்க சரியான ப்ளே பாய் போல. இருவரும் ஒரே ஊர் தான் என்றால் கண்டிப்பாக நீங்க பொண்ணுங்க கூட இருந்ததை அவளும் பார்த்திருப்பாள்.
நீங்கள் செய்ததை உதவியாக பார்த்தால் வாய்ப்பே இருக்காது. ஒரு தேங்க்ஸோட விட்டுருவா.
அகில் பவி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். நித்தி வெளியே வந்து தீனாவிடம், சார் அவள் உங்களை பார்க்கணும்னு சொல்றா?
தீனா தயங்கிக் கொண்டே எழுந்தான். பவி அவனிடம் நன்றாக சிந்தித்துக் கொள்ளுங்கள் என்றாள்.
தீனா உள்ளே சென்றான். எல்லாரும் வழிவிட அவளருகே சென்றான். அவனை மீறியும் அவனது கண்களில் கண்ணீர். அவளது கால்கள் பெரிய கட்டுகளால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் அவளது கால்களை பார்த்தான். பின் அவளை பார்க்க, இம்முறை அவள் அழவில்லை.
அவள் அவனது கைகளை பிடித்து தேங்க்ஸ் சார் என்றாள். அவனுக்கு பவி சொன்னது நினைவிற்கு வந்தது.சார் நான் சென்னை செல்லப் போகிறேன். என்னோட அண்ணா கிட்ட போறேன். இங்க இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் தான். அவள் தன்னை விட்டு செல்லப் போகிறாளா? என்று ஏக்கத்துடன் பார்த்தான்.
நீ போக வேண்டாம். உன்னுடைய படிப்பு என்ன ஆவது?
பிரதீப் அண்ணா படிக்க இப்பொழுதைக்கு பணம் தாரேன்னு சொன்னாரு. அண்ணாவுக்கு இன்று நடந்தது பற்றி தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவான். அவன் பக்கம் இருந்தால் நிம்மதியாகவாது இருப்பான்.அங்கிருக்கும் பள்ளியில் சேர்ந்து கொள்கிறேன்.
நீ இந்நிலையில் எப்படி போக முடியும்? போகாதே என்றான்.
இங்க இருந்தால் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? யாருக்கும் சிரமம் தர எனக்கு விருப்பமில்லை.தீனா அம்மா கூர்மையுடன் தன் மகனை கவனித்துக் கொண்டிருந்தார்.
நா..நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
சார்..நீங்களா? உங்களால் எப்படி என்னை பார்த்துக் கொள்ள முடியும்? சும்மாவே வீட்டிற்கு இரவில் அதுவும் நேரம் கழித்து தான் வருவீங்க. அதுவுமில்லாமல் உங்க அப்பாவிற்கு சும்மாவே என்னை பிடிக்காது.
இல்லை..அப்படியெல்லாம் இல்லை. அவர் எல்லாரிடமும் அவ்வாறு தான் நடந்து கொள்வார்.
ஓ.கே சார்.நான் நாளையே கிளம்புகிறேன்.
இல்ல..நான் விடுப்பு எடுத்து பார்த்துக்கிறேன்.
சார், நான் ஒரு பொண்ணு.உங்களால என்னை பார்த்துக்க முடியாது.
இல்ல..நான் பார்த்துப்பேன்.
தீனாவின் அப்பா அவனை அழைக்க,போனை எடுத்தான்.அவர் அவனை உடனே வரச் சொன்னார்.
நான் ஹாஸ்பிட்டலில் இருக்கேன்.
நீ அந்த புள்ளைக்காகவா குதிச்ச? நேற்று இரவு அந்த பொண்ணு கூட தானே இருந்த?
என்ன பேசுறீங்க? என்று அவன் நகர, பிரதீப் அவனை மறைத்து இங்கிருந்தே பேசு என்று போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
வேற பொண்ணாடா இல்ல? அவர் கேட்க, அப்பா நிறுத்துங்க என்று சத்தமிட்டான்.
ஏன்டா, அந்த புள்ளைக்காக என்னையே எதிர்த்து பேசுறியா? அவன் அமைதியாக இருந்தான்.
சொல்லுடா. அந்த பொண்ணு அழகா தான் இருக்கா.அவ கூட தினமும் படுக்க நினைக்கிறாயா? கேட்க, கைகளை மடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டே தலைகுனிந்தான். பிரதீப்பிற்கும் மற்றவர்களுக்கும் சினமேறியது. பவி வாயை திறக்க, அகில் அவளது வாயை பொத்தினான்.
சொல்லுடா.இனி முடியாதுல.அந்த பொண்ணால நடக்க கூட முடியாது. எப்படி அவளுடன் இருக்க முடியும்? இப்பவே நீ வீட்டுக்கு வா என்றார்.
பல்லை கடித்துக் கொண்டு முடியாது என்றான்.
என்னடா முடியாது? ஏன்டா முடியாது? காதலிக்கிறியா? காதெல்லாம் இவ்வுலகில் இல்லை. உனக்கு எத்தனை முறை கூறி இருக்கிறேன். நீ நன்றாக தானே இருந்தாய்?
புவனா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு விம்மலுடன் இருந்தாள். அனைவரும் அவள் பக்கம் திரும்ப, ஜானு பிரதீப்பிடம் வந்து போனை பிடுங்கி விட்டு எறிந்தாள்.போன் சில்லுசில்லுலாய் உடைந்தது.தீனா புவனாவை பார்த்து பதறி அவளிடம் வந்தான்.