ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 108
ஓடி வந்த தீனா கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. பதட்டத்துடன் நேராக வந்து புவனாவை எட்டி பார்க்க, அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். துகிரா அவனை பார்த்துக் கொண்டே அவனருகே சென்று அவளும் எட்டிப் பார்த்தாள்.
இருவரும் சேர்ந்து அவளை பார்க்க, புவனாவிற்கோ இருவரையும் சேர்த்து பார்த்ததில் கஷ்டமாக இருந்தது. அவனுக்கு துகியை பிடித்திருக்கிறது என்று தானே நினைத்திருந்தாள்.அவனை தொந்தரவு செய்து விட்டோமோ? என்ற பதற்றத்தில் பிடித்திருவர்கள் கையை விட்டால், அனைவரும் புவி என்று கத்த, துருவன் ஓடி வந்தான். அவள் விழுந்த நொடியே எதையும் யோசிக்காது தீனாவும் குதித்து விட்டான்.
ஜானுவும் துளசியும் அண்ணா என்று கத்தினர். பிரதீப் தீனா.. என்று கத்த, அவள் கால் மாட்டியிருந்த சிறு பாறையிலிருந்து தொங்கி கால் எலும்புகள் உடையும் சத்தத்துடன் அவள் வலியில் அலறிய சத்தத்துடன் கீழே தொங்கினாள்.அவள் கால்கள் முழுவதும் இரத்தத்தால் நனைந்தது.எல்லாரும் அவர்கள் மீது லைட்டை அடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.
குதித்த தீனா கண்ணீருடன் அவள் அலறிய நேரத்தில் அவளை தன் கையில் பிடித்திருந்தான். பின் அங்கிருந்த கயிற்றை பார்த்து பிடிக்க அவனது ஒரு கையை நீட்டினான்.ஆனால் தவற விட்டு மீண்டும் முயன்று பிடித்தான். அவள் ஒரு கையில் இருக்க, கயிற்றை பிடித்தவாறு தொங்கினர் இருவரும். அனைவருக்கும் அப்பொழுது தான் மூச்சே வந்தது.புவனா வலி தாங்க முடியாமல்,
வலிக்குது..தாங்க முடியல..தாங்க முடியலன்னு கத்திக் கொண்டே இருந்தாள். அவளது கால்களை பார்த்த தீனா அழுது கொண்டு பேச முடியாமல், அவளை பிடித்துக் கொண்டு என்னை விட்டு உன்னை போக விட மாட்டேன் என்று அவளிடம் கூறி விட்டு மேலே பார்த்து அண்ணா கயிற்றை பிடித்து இழுடா..என்று கத்தினான். அவள் ஓய்ந்து போய் மயங்கினாள்.
புவி..புவி..என்று பதறினான் தீனா. அவள் தன்னை விட்டு சென்று விட்டாளோ என்று பயந்து, அண்ணா..சீக்கிரம்டா. புவி கண்ணை மூடி விட்டாள்டா. வேகமா இழுடா என்று பதறிக் கொண்டே கத்தினான். அவன் கத்திய சத்தம் அவ்விடமெங்கும் எதிரொலிக்க, அனைவரும் அதிர்ந்து எல்லாரும் சேர்ந்து அந்த கயிற்றை பிடித்து இழுத்தனர்.
அந்த பசங்க ஓடி விட, தீனா அருகே வந்து விட்டான். ஆனால் கயிறு அந்து விழப் போக சரியாக கையை கொடுத்தான் பிரதீப். ஆதேஷ் பிரதீப்பை இழுக்க, அனைவரும் சேர்ந்து இழுக்க மேலே வந்து விழுந்தான் தீனா. அவனுக்கும் அங்கங்கு அடி பட்டிருந்தது.அவன் மீது மயங்கிய புவனாவை மடியில் போட்டுக் கொண்டு அழுதான். அனைவரும் அவர்கள் அருகே வர, அவளை தூக்கிக் கொண்டு அழுதவாறு வேகமாக ஓடினான் தீனா.
துளசியால் நம்பவே முடியவில்லை.என் அண்ணனா இவன்? என்று. அவள் மட்டுமல்ல தீனா அங்கிருந்தவர்களுக்கு புதிதாக இருந்தான்.
ஆதேஷ் தீனா முன் வந்து கார் இருக்கும் திசைக்கு அழைத்துச் சென்றான். தீனா வெளியே வந்தவுடன் பவி அப்படியே உறைந்து இருவரையும் பார்த்துக் கொண்டு அவளது கண்களை நீரால் நிரப்பிக் கொண்டிருந்தாள். அவளது தனிமை இவனது செயலால் அவளுக்கு உயிர்ப்பை தந்தது. அன்பு பொய் என்று நினைத்திருந்த அவள் மனதில் இது போன்ற அன்பு கிடைக்குமா? என்று ஏக்கம் வந்தது.
நித்தி அவளை தட்டி இவ்வுலகம் கொண்டு வந்தாள். ஆதேஷிற்கு தாரிகா அவனை விட்டு முழுதாக சென்று, அவள் கவின் கையை பிடிக்கும் போது வலித்த வலி இன்று தீனாவிடம் தெளிவாக தெரிந்தது.அவனை நம்மை போல் விடக் கூடாது என்று தோன்றி காரை எடுத்தான். அதில் தீனா புவியை தூக்கிக் கொண்டு ஏற, அவள் மயங்கினாலும் அவனது சட்டையை இறுக்கமாக பிடித்திருந்தாள்.பிரதீப் முன் ஏற,துகி பின் ஏற வந்தாள். அவளை தள்ளிய ஜானு, தீனா அருகே அமர்த்து, புவி..எழுந்திரு..எழுந்திரு..கத்திக் கொண்டே இருக்க, துகிரா பிரதீப் அருகே அமர்ந்தாள்.
ஆதேஷ் காரை எடுக்க, மற்றவர்கள் அகிலுடன் அடுத்த காரில் ஏறினார்கள். இதை அங்கு வந்த அந்த பசங்களோட பெற்றோர்கள் பார்த்துக் கொண்டு நின்றனர். பிரதீப் கண்கள் துகிரா பக்கம் இருப்பதை கூட அறியாது தீனாவையே துலாவிக் கொண்டிருந்தது. ஆதேஷ் அதையும் கவனித்துக் கொண்டு தான் காரை செலுத்தினான்.
தீனா உதடுகள் துடிக்க புவி..புவி..மட்டுமே. ஜானு அழுது புலம்பிக் கொண்டே வர, ஆதேஷ் அவர்கள் இருவரையும் பார்த்தான்.ம்ம்..என்று பெருமூச்சுடன் வண்டியை செலுத்த ஊருக்குள் சென்றனர். நேராக நித்தி அப்பா மருத்துவமனை முன் தான் வந்து நின்றது.
அப்பொழுதும் புவியை தூக்கிக் கொண்டு பதட்டம் குறையாது ஓடினான் தீனா. நித்தி அப்பா அவளை பார்த்து அதிர்ந்து, என்னவென்று விசாரித்து சிகிச்சையை ஆரம்பித்தார். தீனா தலைகவிழ்ந்து கண்ணீருடன் வெளியே அமர்ந்திருக்க, அவளுக்கு ஒன்றுமாகாது என்று பிரதீப் அவனருகே அமர்ந்தான்.
தீனா அவனை கட்டிக் கொண்டு அழுதான். காலையில் தான் பேசினாள் அண்ணா. உயிரே போச்சுடா அண்ணா. பிரதீப் அமைதியாக நீ கிளம்பு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
தீனா அவனை நிமிர்ந்து பார்க்க, நீ போன்னு சொன்னேன் என்றான்.
ஆதேஷும் மற்றவர்களும் அவனை பார்க்க, அண்ணா ப்ளீஸ் தீனா அண்ணா இருக்கட்டும் என்றாள் ஜானு.
வேண்டாம் ஜானு என்றான் கோபமாக.
அண்ணா..என்றாள். இன்னும் கொஞ்ச நேரத்துல அவனோட அப்பா வருவார். என்ன செய்வான்? அவர் தேவையில்லாமல் பேசுவார். வேண்டாம் அவன் கிளம்பட்டும். அவன் தான் அப்பா சொல்லை தட்டாத பிள்ளையாயிற்றே? கிளம்ப சொல்லு என்று பிரதீப் கத்தினான்.
நான் போகமாட்டேன்.
வேண்டாம்டா. அவ சின்னப் பொண்ணு. அவ விசயத்துல விளையாடாதேடா? பிரதீப் கோபப்பட்டான்.
அவர் என்ன சொன்னாலும் நான் அவளுடன் தான் இருப்பேன் என்றான் தீனா தீர்க்கமாக.
என்ன பேசுற? புரிஞ்சு பேசு..
யார் வந்தாலும், என்ன சொன்னாலும் நான் இப்பொழுது இங்கே தான் இருப்பேன் என்றான் தீனா பிடிவாதமாக. துகிரா, பவியை தவிர அனைவருக்கும் புரிந்தது.
தீனா எல்லா பெண்களுடன் பழகினாலும் அவனுடைய எல்லையை மீறியதில்லை. அது புவிக்கும் தெரியும். அவன் சுற்றுவதை அவளும் பார்த்திருப்பாள்.இப்பொழுது புவியை அப்படி தான் பார்க்கிறானா? இல்லை உண்மையாகவே காதலிக்கிறானா? புரியாமல் குழம்பி பார்த்தனர். அதை கண்டறிய தான் பிரதீப் ஆரம்பித்தான்.
எப்படி? உங்க அப்பா வந்தாலும் சார் அவள் தான் முக்கியம் என்று கூறுவீர்களோ? கேட்டான். தீனா பதிலளிக்காமல் பிரதீப்பை முறைத்தான்.
தீனா பதிலளித்தால், அவன் நேராக காதலை சொன்னது போலகுமே? அது தெரிந்து அவனது அப்பா அவளை ஏதாவது செய்து விட்டால் என்று அவன் சிந்தித்தான்.
எங்க பதிலையே காணோம் பிரதீப் கேட்க, என்னால் அப்படி சொல்ல முடியாது என்று விட்டான். எல்லாரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.
ஓ..அப்படின்னா? நீ அவளுக்காக அழுதது நடிப்பா? இடியட் நீ அவளை காப்பாற்றாமலே விட்டிருக்கலாம் என்றாள் துகிரா.
என்ன சொன்ன? என்று கண்கள் சிவக்க, துகிரா கழுத்தை இறுக்கினான். பிரதீப் அவனது கையை பிடித்து தள்ளி விட்டு, உனக்கு எவ்வளவு தைரியம் அவ மீதே கை வைக்கிறாய்? கத்தினான் பிரதீப்.
துகிரா அதிர்ந்து பிரதீப்பை பார்த்தாள். ஆதேஷ் அவளது கையை பிடித்து இழுத்து வெளியே சென்றான்.பிரதீப் தீனாவை பார்த்து, இனி நீ புவனா பக்கம் வரவே கூடாது என்றான்.
நான் வருவேன். முடிஞ்சா தடுத்துக்கோ என்று அங்கேயே அமர்ந்தான். கோபமாக பிரதீப் வெளியே வந்தான். ஆதேஷை விட்டு அவனருகே வந்து துகிரா, நீங்க என்ன சொன்னீங்க?
நான் என்ன சொன்னேன்? ஒன்றுமில்லையே?
நீங்க எதுக்கு கோபப்பட்டீங்க? கேட்டாள். பிரதீப் ஆதேஷை பார்த்து, அவளை அழைத்துச் செல். ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருக்கிறேன் என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான்.
ஜில்லா, நீ இதில் தலையிடாதே! எனக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றாள்.
துகி..வா போகலாம். அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றான் ஆதேஷ்.
இல்லை.எனக்கு இப்பொழுதே தெரிந்தாக வேண்டும் என்று சத்தமிட்டாள்.
அங்கிருந்த ஒருவர், ஏம்மா பொண்ணு யார் கிட்ட சவுண்டு குடுக்கிற? சண்டைக்கு வருவது போல் வந்தார்.
என்னய்யா..சண்டை போடணுமா? என்று அவள் டாப் காலரை தூக்கி விட்டு அவர் முன் வர, பிரதீப் கோபம் மறைந்தது.
யோவ்..வாய்யா. நீயா? நானான்னு பார்ப்போம் என்றாள் அவரிடம்.அவர் திருதிருவென விழித்தார். அங்கே வந்த தீனா அம்மாவும்,அப்பத்தாவும் துகிராவை பார்த்தனர். பிரதீப்பை பார்த்து நின்றனர். அவன் அவள் முன் வந்து கையை கட்டிக் கொண்டு, என்ன தெரியணும்? கேட்டான்.
நீங்க ஏன் சார் கிட்ட அப்படி பேசுனீங்க? அவர் என் கழுத்தை தானே பிடித்தார்.
முதல்ல தீனாவை அவர், இவர்ன்னு சொல்லாத. எனக்கு பிடிக்கல என்றான்.
ஏன்? நான் அப்படி தான் சொல்வேன்.அந்த சார் புவனாவிற்காக என்ன செய்தார்? வாவ்..சூப்பர்ல ஜில்லா என்று ஆதேஷ் பக்கம் திரும்பினான். அவன் அவளருகே வந்து, வேண்டாம் நீ அவரை கோபப்படுத்துற?
கோபம் வந்தா இவரு என்ன பண்ணுவாரு? அடிச்சிருவாரோ? என்று அவனருகே வந்து, என்ன அடிப்பீங்களா? அடிப்பீங்களா? என்று கேட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென அவளை இழுத்து அனைவர் முன்னிலையிலும் இதழ்களில் முத்தமிட்டான்.
துகிரா அவனை தள்ளி விட்டு வாயில் கையை வைத்து அவனை அதிர்ந்து பார்த்தாள். என்ன இன்னும் அடிக்கணுமா? என்று கேட்டான்.
சொல்லு? இன்னும் அடிக்கணுமா? என்று அருகே வந்தான். அவள் ஆதேஷிடம் சென்றாள். நான் தான் சொன்னேன்ல ஆதேஷ் கூற,
உனக்கு..உ..உனக்கு..அவர் கோபம் மீது கோபம் வரவில்லையா?
கோபம் உள்ளது தான். ஆனால் நீ நடந்து கொண்டது சரியில்லை. நான் அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்று சொன்னேன். நீ கேட்டாயா?
ஏன்டா? தெளிவா சொல்லமாட்டாயா?
எப்படி? இப்படி பேசாத.அவர் முத்தம் கொடுத்து விடுவார்ன்னு தெளிவா சொல்லணுமா? ஆதேஷ் கேட்டான்.
இல்லடா. அது வந்து..சிந்தித்தாள். அங்கிருந்த ஒருவன் விசிலை பறக்க விட்டான். எங்க அண்ணா கெத்து தான்டா என்று அண்ணா நல்லா பண்ணீங்க.
துகிரா அவனை முறைத்தாள்.ஜானு அவன் அண்ணன் செயலை பார்த்து அதிர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரதீப் மனம் புன்னகையுடன் இருந்தாலும் அவன் தீனாவை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
துகிரா அழ ஆரம்பித்தாள். ஏய், எதுக்கு இப்ப அழுற?
போடா..என்று அவள் விலக, பிரதீப் அவளது கையை பிடித்து, எங்க போற? கேட்டான்.
யோவ்.நான் எங்க போனா? உனக்கு என்னயா?
இந்த வாய் இருக்கே என்று அவளது உதட்டை பிடித்தான். இதுக்கு மேல நீ வாயை திறந்த மறுபடியும் முத்தம் கொடுத்திடுவேன்.
அவனை தள்ளி விட்டு, டேய்..ஜில்லா, உனக்கு கோபமே வரலையா?
எனக்கு வரல? எனக்கு தான் தெரியுமே? என்றான் ஆதேஷ்.
தெரியுமா? என்னடா தெரியும்?
அவர்..என்று ஆதேஷ் ஆரம்பிக்க, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு? பிரதீப் பட்டென உடைத்தான்.
பிடிச்சிருக்கா? அப்படின்னா?
அவன் அவனது வயது மற்றும் அவனை பற்றி கூறினான். உனக்கும் எனக்கும் ஏழு வயது வித்தியாசம் இருக்கும். நீ என்னை கல்யாணம் செய்து கொள்வாயா? நீ யோசித்து சொல் என்று அவன் முகத்தை கோபமாக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
ஜானு..அண்ணா? என்றாள். அவளையும் பார்த்து விட்டு உள்ளே சென்றான்.
நம்ம பையனுக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு.அனைவர் முன்னிலையிலும் கல்யாணம் வரை பேசிட்டான் என்று தீனா அம்மா சந்தோசமாக ஆனந்தகண்ணீர் வடித்தார்.
பிள்ள..சரியாதான் தேர்ந்தெடுத்திருக்கான்.வயசு என்ன வயசு? என்றார் அப்பத்தா.
அத்த..புவனா என்று காவேரி நியாபகப்படுத்த, வாடி புள்ளைய பார்ப்போம் என்று அவர்கள் துகிராவை பார்த்து, நல்ல பதிலா சொல்லு தாயி என்று அப்பத்தா கூறி விட்டு உள்ளே சென்றார்.
துகிரா அமைதியாக அமர்ந்தாள். அவளருகே ஆதேஷும் ஆதரவாக அமர்ந்தான்.
ஜில்லா..எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. என்னால உங்களுக்கு தான் பிரச்சனை. அதிலிருந்து வெளியே வர நினைத்து தான் இங்கே வந்தோம். ஆனால் இவரு என்னை கல்யாணம் பண்ண சொல்லி கேட்கிறார்.
உனக்கு அவரை பிடிக்கவில்லையா? ஆதேஷ் கேட்டான்.
இந்த ஊருல அவருக்கு மரியாதை இருக்கு. நல்லவரா இருக்கார். ஜானுவை மாதிரி என்னையும் நல்லா பார்த்துப்பார். ஆனா என்னால அவருக்கு பிரச்சனை தானே வரும். என்னோட அப்பாவை பற்றி உனக்கு தெரியும் தானே? பிசினசிற்காக அவனை பற்றிய உண்மை தெரிந்தும் கல்யாணம் பண்ண வைக்க நினைக்கிறார். பயமா இருக்குடா.
அப்ப உனக்கு அவரை பிடிச்சிருக்கு தானே!
ஓ.கே தான். அப்பாவை நினைச்சா பயமா இருக்குடா அழுவது போல் பேசினாள்.
இவனிடமிருந்து என்னை காப்பாற்றினாலும் வேற யாருக்காவது என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாறே?
அதை பற்றி கவலைப்படாதே! பார்ப்போம் என்றான் ஆதேஷ்.
ஜானு அவர்கள் அருகே வந்து துகிராவை பார்த்துக் கொண்டே நின்றாள். இவள் ஏதும் சண்டை போடுவாளோ? என்று ஆதேஷ் அவளை பார்த்தான். அவனை பார்த்த ஜானு, நான் அவளிடம் பேச வேண்டும் என்றாள்.
நீ என்ன பேச போகிறாய்? அவள் இன்னும் உங்க அண்ணாவுக்கு பதிலேதும் சொல்லவில்லை.
தெரியும். நான் தனியா பேசணும் என்றாள் அழுத்தமாக.
முடியாது. என் முன்னே பேசு என்றான் ஆதேஷ்.
துகிரா ஆதேஷிடம், நீ போ..நாங்க பேசிக்கிறோம் என்றாள்.
துகி..
நான் தான் சொல்றேன்ல..போ.
அவர்கள் கண்ணுக்கு தெரிவது போல் அமர்ந்து கொண்டான்.