ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 106.
அர்ஜூன் என்னோட காதலை அவங்க கொன்னுட்டாங்க. எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவனுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும். ஆனா அவனுக்கு.. நான் என்று அவள் அர்ஜூன் மார்பில் சாய்ந்து அழ ஸ்ரீ ஆரம்பித்தாள்.
அவன் ரொம்ப மோசம்டா. அவனுக்கு என்னோட காதல் புரியவேயில்லை. பிளாஸ்டர், ஸ்டுபிட்,இடியட் என்று திட்டினாள்.
நான் என்ன கேட்டா? இவள் என்ன சொல்றா? என்று அவளை பார்த்து,
“ஐ லவ் யூ மை ஏஞ்சல்” என்றான்.
லவ்வா? நானும் தான்டா என்று என்னோட லவ் ஆழமானதுடா உலறலுடன் பேசினாள்.
இது சரியில்லை. இவ அவங்கிட்ட ஏதாவது சொன்னாலும் சொல்லிடுவா என்று தாரிகா வெளியே வந்து,இருவரது நெருக்கத்தை பார்த்து அதிர்ந்து தான் இருந்தாள்.
டேய்..இரண்டு பேரும் என்னடா பண்றீங்க? என்று தெரியாதது போல் கேட்டாள். அப்பொழுது தான் விழித்தது போல் கவினும் எழுந்து, அர்ச்சு ஸ்ரீயை என்னடா பண்ற?
யாரு? நானா பண்றேன்? வந்து பாரு என்றவன் அவளது ஆடையை கவனித்து விட்டு, வேகமாக அவனருகே இருந்த போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டான். மனதினுள் சிரித்தவாறு கவின் அவனை பார்த்து, ஸ்ரீ உனக்கு அறிவிருக்கா? என்று திட்டினான்.
யாருக்குடா அறிவில்லை? உனக்கு தான்டா. நீ யாருடா அர்ஜூனை கேக்குற?
ஓ..உனக்கு அவனை மட்டும் தெரியுதோ?
அர்ஜூன் முகத்தின் முன் வந்து பார்த்து,ஹான்..என் செல்லக்குட்டில? என்னை தூக்குடா என்று அர்ஜூனிடம் கூற,
ஸ்ரீ நீ ஏற்கனவே அவன் மீது தான் இருக்கிறாய்?தாரிகா கூறினாள்.
இவ எப்படா குடிச்சா? கேட்டான் அர்ஜூன்.
உன் தாக்கம் தான் என்று மனதில் எண்ணியவாறு, எனக்கு எப்படி தெரியும்? என்று எழுந்தான்.
கவினை பார்த்து, தாரி இந்த பையன் யாரு?இது எங்க அர்ஜூன் வீடு.நீ யாருடா? என்று அர்ஜூனிடமிருந்து எழுந்தாள்.
அவன் சிரித்துக் கொண்டு, அவ அலப்பறை தாங்க முடியல. அவ ரொம்ப குடிச்சாலான்னு தெரியல.அவள் உடம்புக்கு ஏதும் ஆகிவிடாமல்.
அதெல்லாம் ஒன்றுமிருக்காது. கவலைப்படாதே அர்ஜூன்.ஸ்ரீ தள்ளாடிக் கொண்டு கவின் அருகே வந்து, ஏய்..போடா நீ அர்ஜூன் அருகே படுக்கக்கூடாது.
சரி.அப்ப யார் படுப்பா?
அது யாரு? அர்ஜூனோட அனு என்றாள்.
போதும் ஸ்ரீ வா என்று தாரிகா அவளை அழைக்க, அவளை தட்டி விட்டு நேராக அர்ஜூனிடம் சென்று, நீ யார் கிட்டயும் சொல்லாத? அந்த இடியட்டை என்றாள்.
யாரை சொல்ற? என்ன பேசுற? ஒன்றுமே புரியல. ஆரம்பத்துல என்னை திட்டுவது போல் இருந்தது. ஸ்ரீயை நிறுத்தி அவளது முடியை சரி செய்து தாரிகாவுடன் அனுப்பினான் அர்ஜூன் .
அவள் மீண்டும் அர்ஜூன் பக்கம் திரும்ப,
டேய் நீ வாடா என்று கவின் அர்ஜூனை அழைத்துச் சென்றான்.
சைலேஷ் அர்ஜூனுக்கு போன் செய்து எல்லாருமே கல்லூரிக்கு கிளம்புங்க.ஹாஸ்பிட்டலில் நான் பார்த்துக் கொள்கிறேன்.
நோ சார். என்னால இந்நிலையில் அவர்கள் மூவரையும் விட்டு கல்லூரிக்கு வர முடியாது என்றான். கவின் போனை வாங்கி அர்ஜூன் வருவான். ஆனால் இனி நான் கல்லூரிக்கு வரல..நான் இந்த வருடம் முழுவதும் நீட் தேர்விற்காக படிக்க வேண்டும்.
நோ..கவின் இந்த பிரச்சனை முடியும் வரை நீ கல்லூரிக்கு சென்று தான் ஆக வேண்டும்.
நான் சென்று என்ன செய்வது?
இன்னும் கல்லூரியில் வெல்கம் பார்ட்டி நடத்தவில்லை. வரும் வாரம் நடக்கும் உங்க குழுவும் செய்ய வேண்டும்.லயன்ஸ் குழுவும் உள்ளதே?
ம்ம்..இருக்கு..நீயே பார். நீ வந்து தான் ஆக வேண்டும் நண்பர்களுக்காக.
ஓ.கே சார். ஆனா இரண்டு நாள் விடுப்பு எடுத்துகிறேன்.நான் ஊருக்கு போகணும் என்றான்.
சரி. போயிட்டு வா என்றான் சைலேஷ்
கல்லூரிக்கு அனைவரும் செல்ல சைலேஷ், சந்துரூ, இதயா அம்மா, தாரிகா அம்மா ஹாஸ்பிட்டலில் இருக்க, மோகன் கமலி வீட்டில் இருந்தார். கொஞ்சநாட்கள் அவர் அங்கே இருக்கட்டும் என்று கமலி கூற, தாரிகா அம்மாவிற்கு வருத்தமாக இருந்தாலும் விட்டு விட்டார்.
கல்லூரியில் ஒரு கார் உள்ளே வந்தது. அனைவரும் அங்கே கவனிக்க நேராக அகில், நித்தி முன் வந்தது.காரிலிருந்து கெத்தாக பவி இறங்கினாள்.
அவளை பார்த்து அகில் வாயை பிளந்தான். அவன் மட்டுமா? நம்ம பசங்க எல்லாருமே.நித்தி அருகே வந்து கண்ணடித்து, எப்படி? என்றாள் கிளாசை கழற்றியவாறு. மாடல் உடையில் வந்திருந்தாள்.
பவி, என்ன கோலம் இது? அகில் கேட்டான்.
நல்லா தானே இருக்கு என்றாள்.
உதட்டை பிதுக்கியவன் ஓ.கே தான். இன்னும் கொஞ்சம் சரி செய்யணும் என்று நேராக அவள் காதலித்தவன் முன் வந்து அவளை நிறுத்தினான். அவர்கள் வெறியுடன் இருவரையும் பார்த்தனர்.
அவனருகே தைரியமாக வந்த பவி, என்ன சார்? எப்ப உள்ளிருந்து வந்தீங்க? அவனது தாடையை பிடித்து, ம்ம்..அடி பலம் தான் போலவே என்றாள் கிண்டலாக.
அவன் அவளது கையை தட்டி விட, எறிகிறதா? கேட்டாள். அகில் புரியாமல் அவளை பார்த்தான்.
இனி எந்த பொண்ணையாவது ஏமாத்துவ? முயற்சி செய்து பார் என்றாள்.
பவி, உனக்கு பைத்தியம் ஏதும் பிடித்திருக்கிறதா? இவன் கிட்ட இப்படி பேசுற?
அகில் உனக்கு தெரியாதுல? நான் என்னோட பெற்றோருடன் சென்று கம்பிளைண்ட் எழுதி கொடுத்து விட்டேன். அவன் அன்று நடந்ததை வீடியோ எடுத்திருக்கிறான். அதை எனக்கே அனுப்பி விட்டான். மிரட்டுகிறானாம்..மூஞ்சிய பாரு.
அவன் என்ன மிரட்ட? என்று வீடியோவை நானே போலீசிடம் ஒப்படைத்து விட்டேன்.நம் அனைவர் முகத்தை மறைத்து, என் ஆடை விலகிய பகுதியை மட்டும் கட் செய்து ஒப்படைத்தோம்.
என்ன சொல்ற? அதை எதற்கு போலீசிடம் கொடுத்தாய்?
உனக்கு பிரச்சனை வந்து விடாமல்.
பார்த்து விடலாம்..என்றாள் நம்பிக்கையுடன்.
அன்று நீ வரவில்லை என்றால் என் வாழ்வே முடிந்து போயிருக்கும்.அதே போல் வேற எந்த பொண்ணுக்கும் யாரும் முன் நிற்பார்கள் என்று கூற முடியாது.இனி இந்த பொறுக்கி யாரை? என்ன செய்தாலும் அவன் வாழ்நாள் முழுவதும் கலி தான் சாப்பிடணும் என்றாள்.
நித்தி அவளிடம் வந்து, நல்ல வேலை செய்திருக்கிறாய்? நான் கூட கல்லூரி வர பயப்படுவாய் என்று நினைத்தோம் என்று பேசிக் கொண்டிருக்க, பவி தோழிகள் வந்தனர்.
அவர்கள் நழுவ, பவி அவர்களை பிடித்து இழுத்து அவர்கள் முன் கை கட்டி நின்றாள்.
எவ்வளவு பணம்டி வாங்குனீங்க?
பவி நாம எல்லாரும் ப்ரெண்ட்ஸ்.இப்படி பேசாதே! நாங்க ஒன்றுமே செய்யல?
ஓ..அப்படியா? என்று போனை நீட்டி வீடியோ ஒன்றை ஓட விட்டாள். அந்த பசங்கள ஸ்டேசனுக்கு சென்று இவர்கள் திட்டிய காட்சி. அதுவும் எப்படி?
ஒரு வேலைய உருப்படியா செய்ய மாட்டீங்களாடா? திட்டம் போட்டு கொடுவென்று கெஞ்சி விட்டு, இப்பொழுது கோட்டை விட்டு வந்து நிற்கிறீர்கள்? என்றும் இனியும் பலவாறான அடுத்தடுத்து பவியை காயப்படுத்தும் திட்டங்களை கூறி இருந்தார்கள்.
இது எப்படி என்னிடம் என்று கேட்கிறீர்களா?
என் அம்மா ஏற்பாடு தான். நாங்க ஒன்றும் அந்த பொறுக்கிகள் பணத்துக்கு முன் குறைஞ்சவங்க இல்லை. என்னோட அப்பா சொன்னதை நான் செஞ்சிருந்தா.இவங்க எல்லாரோட வாழ்க்கையும் முடிந்திருக்கும்.
நட்பிற்கான மரியாதையை அன்பையே கெடுத்துட்டீங்கடி.. ச்சீ, உங்கள் பார்த்தாலே பிடிக்கல போயிருங்க. என் மூஞ்சிலே விழிக்காதீங்க என்று டென்சனுடன் கத்தினாள். அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
அவளை நித்தி, நண்பர்கள் சந்திக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.
பவியை பார்த்து அர்ஜூன், யார் இந்த பொண்ணு? கவினிடம் கேட்டான். அவனும் கூறினான். அவன் பார்வை அகிலிடம் வந்தது.
அகில் அவர்கள் பின் தான் அமைதியாக வந்து அமர்ந்தான்.
எதுக்கு டென்சன் ஆகுற? நான் கூட நீ கல்லூரிக்கு வர மாட்டாயோன்னு நினைச்சேன்?செம்மையா கெத்து காட்டிட்ட? நித்தி கூற,
அட,நீ வேற நித்தி..அம்மா சொன்னது மாதிரி பேசினேன். அவ்வளவுதான்.
அப்புறம் எப்படி டென்சன் ஆன? அபி கேட்டான்.
அது தானா வந்துருச்சு?
அதான பார்த்தேன். இவளாது? பேசுறதாவது? அகில் கூறினான்.
பவி அவனிடம் வந்து கையை நீட்டி எதையோ கேட்டாள்.
என்ன? என்று புருவத்தை உயர்த்தினான்.
என்னுடைய கடிதங்கள்?
அது அன்றே கீழே போட்டு விட்டேன் என்றான்.
அது என்னோடது. நீ எதுக்கு கீழ போட்ட?
அது என்னிடம் தானே இருந்தது. அதனால் கீழே போட்டேன்.
வேண்டாம் அகில். விளையாடாதே? அதை கொடுத்து விடு.
என்னிடம் இல்லை.
ப்ளீஸ் கொடுத்துடு.
அவளிடம் கொடுத்து விடேன் நித்தி கூற, நிஜமாவே என்னிடம் இல்லை என்றான்.
ஏன்டா, இப்படி பண்ற? அவனை அடித்து விட்டு கொடுத்திருடா? என்றாள்.
அதில் ஒரு புகைப்படம் இருந்தது. அதை மட்டுமாவது கொடுத்து விடு. அதை கோபத்தில் எறிந்து விட்டேன் என்றாள் கலங்கிய குரலில்.
புகைப்படம்..என்னுடையதா?
உன் மூஞ்சி.இன்னொரு புகைப்படம் இருந்தது.
இன்னொன்றா? யாருடையது?
அது எனக்கு முக்கியமானவங்களது.
அந்த லூசு பயலா?
இல்லைடா. ப்ளீஸ் குடு.
யாருதுன்னு சொல்லு?
என்னோட டீன் என்றாள் கண்கலங்கியவாறு.
டீன்னா? யாரு? நித்தி கேட்டாள்.
ஜூலிக்கு முன்னாடி முழுவதும் அவன் தான் என் கூடவே இருப்பான். நித்திக்கு புரிந்தது. அந்த நாய் பற்றி கூறி இருப்பார்களே? அகிலுக்கும் புரிந்தது.
நான் இருக்கான்னு பார்த்துட்டு தாரேன்.
என்னடா இப்படி சொல்ற? எனக்கு கண்டிப்பா வேணும்.
பார்க்கிறேன் என்றான்.
பார்க்கிறாயா? வேணும்னு சொல்றேன்ல சத்தமிட்டாள்.
ஏய், என்ன சத்தம் குடுக்கிற? அதான் செத்து போச்சுல? என்றான் சாதாரணமாக,
என்ன சொன்ன? என்று அவனை அறைந்து விட்டு அங்கிருந்து கோபமாக வண்டியை எடுத்து, வேகமாக தடுமாறியவாறு ஓட்டினாள்.
ஏன்டா? என்று தலையில் அடித்த நித்தி, அர்ஜூன் வண்டியை எடு என்றான். அவள் கண்ணுமுண்ணு தெரியாமல் வண்டியை ஓட்ட,மரத்தில் மோதி கார் நின்றது. அர்ஜூனும் நித்தியும் அவளருகே சென்றனர். மற்றவர்களும் அங்கே வந்தனர். அகில் வண்டியருகே வர, அர்ஜூன் அவளை காரிலிருந்து இறக்கினான்.
அருகே வந்த அகில் பதட்டமாக, அவளது கன்னத்தை தட்டி, பவி இங்க பாரு. என்னிடம் தான் இருக்கும்.நான் தாரேன் என்று அவன் பதறிக் கொண்டே கூற,அர்ஜூனும் நித்தியும் அவனை முறைத்தனர்.
கவின் அவள் மீது தண்ணீர் தெளிக்க, அவளும் எழுந்தாள். தலையில் சிறிய காயம் தான்.அவளுக்கு குடிக்க நீரை கொடுத்தான். அவள் குடித்து விட்டு, அகிலை பார்த்து அந்த புகைப்படம் எனக்கு வேண்டும் அகில்.கவின் அவளுக்கு பிளாஸ்டரை போட்டு விட்டான்.
என்னிடம் தான் இருக்கும். பார்த்து எடுத்து தாரேன் என்று பைக் அருகே சென்று,அனைத்து கடிதத்தையும் பார்த்து அந்த புகைப்படத்தை மட்டும் எடுத்து வந்தான்.
அதை பார்த்து அர்ஜூன் கோபமாக, உன்னிடம் இருந்தால் அப்பொழுதே கொடுத்திருக்கலாம் தானே?
அவளை வம்புக்கு இழுத்து பழக்கமாகி விட்டது. அதே போல் செய்து விட்டேன். சாரி என்றான் பவியிடம்.
அவள் அவனை முறைத்துக் கொண்டு, மீண்டும் கையை நீட்டினாள். நான் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டி உள்ளது என்றான்.
வாசித்தாயா? என்று எழுந்தாள்.அவன் சிரித்துக் கொண்டு ஆமாம். மீதியையும் வாசித்து விட்டு தாரேன்.
நோ..நோ..எனக்கு இப்பொழுதே கொடு என்று அவன் வண்டி அருகே சென்றாள்.
என்னோட வண்டியை தொடாதே! எனக்கு பிடிக்காது. நானே தந்து விடுவேன்.
அது என்னோட பர்சனல். நீ எதற்கு படிக்கிறாய்?
அது என்னை பற்றியும் என் நண்பர்கள் பற்றியும் தானே இருக்கிறது என்றான்.
என்னை பற்றியும் எழுதி இருக்கிறாயா? அபியும் யாசுவும் ஒருவாறு கேட்டனர்.
அவள் அர்ஜூனை அப்பொழுது தான் கவனித்தாள். அவனிடம் நீ என்ன ப்ளே பண்ணுவ?
நானா? அர்ஜூன் கேட்டான்.நான் இவர்களது குழுவில் இல்லை என்றான்.
சரி அகில். நீ படிச்சிட்டு எனக்கு கொடு. என்னை பற்றி என்ன எழுதி இருக்கான்னு பார்ப்போம் என்றான் கவின்.
அகில் நீ கொடு.நான் கோபத்தில் தான் போட்டு விட்டேன். மீண்டும் அவனது வண்டியில் கை வைத்தாள்.
பவி நோ..தொடாதே என்று அவளிடம் நெருக்கமாக வந்தான்.அகில் எனக்கு வேண்டும் என்றாள்.
நான் தாரேன். ஆனால் இப்பொழுது இல்லை என்று அவளது கையை இறுக்கினான். கை வலிக்குதுடா.விடு என்றாள்.
அவன் அவளை முதல் முறையாக மிக நெருக்கமாக பார்க்கிறான். அவனுக்குள் புதிதாய் ஏதோ உணர்வுகள். பவி..என்று பேச்சே வரவில்லை அகிலுக்கு. ஆனால் அவளோ கடிதத்தில் தான் குறியாக இருந்தாள்.அவள் எடுக்க, அவன் தடுக்க, அவனது கை அவளை தடுக்க சென்று அவளது இடையில் பட்டது.
அவள் வேகமாக நகர்ந்தாள். அகில் அவளை பார்த்து பதட்டமாக சாரி என்றான். அவளும் பதட்டமாக விலகினாள். நான் கிளம்புகிறேன் என்று காரினுள் அமர்ந்தாள். இதை பார்த்து அர்ஜூன், ஒரு நிமிஷம் வெளியே வா என்று பவியை அழைத்து அபி அவளை அழைத்து கல்லூரிக்கு செல். எல்லாரும் கிளம்புங்க..அகில் நீ இரு என்றான் அர்ஜூன்.
அர்ஜூன் அகிலுடன் சண்டைக்கு செல்ல போகிறான் என்று நித்திக்கு புரிந்தது. காரை கவின் எடுத்து வருவான். அர்ஜூன் வா போகலாம் என்று அவனை இழுத்து சென்றாள்.அகில் நடந்ததை நினைத்து,நாம் என்ன பண்றோம்? தலையை அழுந்த கோதியவாறு சென்றான். கல்லூரிக்கு சென்றவுடன் அகில் பவியை தேடினான். அர்ஜூன் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.
டேய்..ஏன் முறைக்கிறாய்? தெரியாமல் பட்டு விட்டது. அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றான்.
நான் இங்க தான் இருக்கேன் என்று குரல் வந்த திசை பார்த்தான்.அங்கே நித்தி யாசு அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.
அவளை பார்த்தவுடன், சாரி பவி. தெரியாமல் கை பட்டு விட்டது என்றான் அவசரமாக. அவள் தலையசைத்து விட்டு அவளது வகுப்பிற்கு செல்ல, மற்றவர்களும் கிளம்பினர்.