ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 104.
வீட்டிற்குள் வந்த தீனா கையை கட்டிக் கொண்டு துளசியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். காவேரியோ சினத்துடன் கத்தினார். அப்பத்தா அங்கு வந்து,
எவடி இவ பிள்ளையை திட்டுறவ? துளசியிடம் வந்தார்.பின் தான் தீனாவையும் பார்த்து, என்னடி செஞ்சு தொலச்ச?
மேடமுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன் தீனா கூற, புவனாவிடம் பேசியதை காவேரி கூறினார்.
அந்த புள்ள சும்மாவே அவ அம்மா, அப்பா நினைச்சு அழுதுகிட்டே இருக்கு.நீ வேற ஏன்டி? அவரும் திட்டினார்.
இன்று வந்த அவ உங்க எல்லாருக்கும் முக்கியமா போயிட்டாளா? என்னை திட்டிக்கிட்டே இருக்கீங்க? துளசி அழுதாள்.அவள இங்கிருந்து அனுப்புங்க என்று கத்தினாள்.
முடியாது. நீ வேண்டுமானால் வெளிய போ என்று தீனா கத்தினான்.
சும்மா இருடா என்று அம்மா அவனை அமர்த்த, அவளுக்காக என்னை வெளிய போகச் சொல்றீயாடா?
உங்கிட்ட பேச எனக்கு பிடிக்கல என்று அறைக்கு சென்றான் தீனா. பேசாதடி அவன் சொன்ன மாதிரி, உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம் திட்டிக் கொண்டே சமையற்கட்டினுள் நுழைந்தார் காவேரி.
அப்பத்தா, நீயும் பேசு?
என்னத்த பேச சொல்றடி? நான் சொன்னா கேட்கவா போற? என்று புவனா அறைக்கு சென்று எட்டிப் பார்த்தார். அவள் அறை கதவு திறந்திருக்க, அவள் கட்டிலில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.
உள்ளே சென்று, அம்மாடி? என்று அழைத்தார்.
அழுது கொண்டே, நான் தனியா இருக்கணும் பாட்டி என்றாள்.
அம்மா..அவ ரொம்ப செல்லமா வளர்ந்த புள்ள. அதான் அப்படி பேசிட்டா.
என்கிட்ட யாரும் பேச வேண்டாம். நான் பிச்சக்காரியாவே இருந்துட்டு போறேன் தேம்பி தேம்பி அழுதாள்.
இதுக்கு மேல் என்ன பேச என்று எழுந்தவர், அவளிடம் நீயும் எங்க வீட்டு புள்ள மாதிரி தான்ம்மா. இனி அவ அப்படி பேச மாட்டா என்றார். பதில் கூறாமல் அவள் அழுது கொண்டிருக்க, இவர் சென்று விட்டார்.
அறைக்கு சென்ற தீனாவிற்கு வேலையே ஓடவில்லை. கீழிறங்கி வந்தான். அவளது அறை திறந்திருந்தது. யாருமில்லாததை பார்த்து விட்டு, அவள் அறைக்குள் சென்று கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டான்.
பாட்டி..நீங்க போங்க..நான் தனியா இருக்கணும் என்றாள் அதே நிலையில் இருந்து கொண்டு. தீனா சுவற்றில் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சத்தமில்லையே..என்று புவனா அறை வாசற்பக்கம் பார்த்தாள். தீனாவை பார்த்து மிரண்டு எழுந்து கட்டிலிலே அமர்ந்தாள்.
சார்..நீங்க? வெளிய போங்க சார்.
அவன் மீண்டும் அவளையே பார்த்தான். அவள் கத்த முற்படும் முன்னே, அருகே வந்து அவளது வாயை பொத்தி, அமைதியா இரு என்றான்.
அவள் அமைதியாக, துளசி பேசியது நினைவு வரவே, அவனிடம் முகத்தை காட்டாது திரும்பிக் கொண்டு அழுதாள். அவன் அவளை தூக்கி கட்டிலில் அமர்ந்து, அவளை மடியிலே உட்கார வைத்தான். அவளது முகத்தை நிமிர்த்தினான்.
சார்..விடுங்க என்று அவனது மார்பில் கை வைத்து தள்ளினாள். அவனுக்கு சுகவதை செய்தது. அவளது இருகையையும் அவன் ஒரே கைக்குள் அடக்கியவன் நீ ரொம்ப அழுதிட்ட. இனி அழாதே.ரொம்ப கஷ்டமா இருக்கு என்றான்.
அவள் அழுகை தொலைந்து அவள் நிலை மறந்து, இவனுக்கு நம் மீதா அக்கறை? தோன்றியது. அவளும் அவனையே பார்த்தாள்.
அவளது சிவந்த கண்களில் முத்தமிட்டான். அவள் கண்கள் விரிய அவனை பார்த்தாள். கன்னத்தில் அவளது உவர்நீர் தேய்ந்து ஓய்ந்து காய்ந்திருந்தது. கன்னத்தில் முத்தமிட்டு, அவளது அழகான சப்பை நாசியில் முத்தமிட்டான். பின் உதடுகளில் முத்தமிட குனிந்தான். அவள் கண்கள் மூட அமர்ந்திருந்தாள். அதை பார்த்து குறுஞ்சிரிப்புடன் அவளது கழுத்தருகே வந்து மீசையால் வருடினான்.அவள் கண்களில் மீண்டும் உவர்நீர் சுரக்க கண்களை திறந்தவள், அவனிடமிருந்து தள்ளி இருப்பது தான் நல்லது என்று அவனை தடுத்து எழுந்தாள்.
ப்ளீஸ் சார். வெளியே போங்க என்றாள் கண்ணீருடன். அவனோ புவனாவை விடுவதாக இல்லை. அவளுக்கும் ஆறுதல் இல்லாமல் தானே தவிக்கிறாள். அவன் சட்டென அவளை இழுத்து அணைக்க,மங்கையவளோ பாகாய் கரைந்தாள். பின் அவனது கழுத்தில் கையை போட்டுக் கொண்டு அவனது கன்னத்தோடு உரசியவாறு, அழுதாள்.
அவன் அவளது கைகளை எடுத்து இடுப்பில் கோர்த்து தழுவிக் கொண்டு, உனக்காக நான் இருக்கிறேன். மனதை கஷ்டப்படுத்தாதே! அழுவதை நிறுத்து, இன்னும் எத்தனை நாட்கள் தான் அழுவாய்? எனக்காக அழாதே..ப்ளீஸ் என்றான்.அவனது இந்த பேச்சு அவளுக்கு அவன் மீதிருந்த பாசம், மரியாதை, அதீத காதலாய் உருவெடுக்க ஆரம்பித்தது.
அவள் அவன் மார்பில் புதைந்து கொண்டு அழுதாள். எனக்கு யாருமில்லாதது போல் இருக்கிறது. அண்ணாவை நினைத்து கஷ்டமா இருக்கு சார் என்றாள்.
ம்ம்..என்றான். அவள் பேசும் அனைத்திற்கும் ம்ம்..போட்டுக் கொண்டிருந்தான். பின் அவளை விலக்கி விட்டு, நீ அழாம இரு. நான் கிளம்ப வேண்டும். இரவு நான் வர நேரமாகும். முடிந்தால் உன்னை பார்க்க வருகிறேன். இல்லை காலை பார்ப்போம் என்று இதழ் குவித்து முத்தத்தை பறக்க விட்டு சென்றான். அவன் புவனா அறையிலிருந்து வெளியே வருவதை அவனது அப்பா பார்த்து, என் மகன் வேலையை ஆரம்பித்து விட்டான் போல் என்று அவன் புவனா மீது வைத்திருந்த காதலை மோகம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.அவரது எண்ணமும் செயல்களும் புவனாவை அதிகம் தாக்கப்போகிறது.
அர்ஜூன் வீட்டிற்கு வண்டியில் கொண்டிருந்த சமயம் தாரிகா அவனை நிறுத்தி, எனக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஸ்ரீயை பார்த்தாள். அவள் வாகாக அர்ஜூன் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீயை எழுப்பி விட்டு தாரிகா இறங்கினாள். ஆடை இருக்கும் பிரிவிற்குள் நுழைந்தாள்.ஸ்ரீ நீ வா..என்று அழைத்தாள்.
தாரி..தூக்கமா வருது என்றாள் ஸ்ரீ.
நேற்றிலிருந்து ரொம்ப நேரம் தூங்குற? ஒழுங்கா வந்திரு.
ப்ளீஸ் தாரி. நீ எடுத்துட்டு வா. நான் இங்கேயே அர்ஜூனுடன் இருக்கிறேன் என்று கண்ணை காட்டினாள் .
சரி என்று புன்னகையுடன் அவள் சென்றாள். அர்ஜூன் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.நான் உன்னோட தோள்ள சாய்ஞ்சுக்கவா? கேட்டாள் ஸ்ரீ.
வேகமாக அவளை பார்த்தான். சரி..இருக்கட்டும் என்று அங்கிருந்த சேரில் தலையை சாய்க்க முடியாமல் அவள் திணறுவதை பார்த்து சிரித்துக் கொண்டு, இன்னும் நீ க்யூட்டா இருக்க மை ஏஞ்சல் என்று மனதினுள் நினைத்தவாறு, ஸ்ரீ உனக்கு பிரச்சனையில்லை என்றால் சாய்ந்து கொள்.
அவள் அவனது கையை இறுக பற்றியவாறு தலையை சாய்த்துக் கொண்டாள். அவள் இதழ்களில் கள்ளப்புன்னகை குடி புகுந்தது. அர்ஜூனிற்கு இதயம் படபடவென துடித்தது. அவன் குனிந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.பின் தாரிகா வர, அங்கிருந்து கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் ஸ்ரீக்கு போன் வந்தது. அவள் கை நடுங்க நின்றாள். அர்ஜூன் போனை வாங்கி பார்த்து அதை தூக்கி எறிந்தான்.
அர்ஜூன்..என்றால் கலங்கியவாறு. அவன் கோபமாக அவனறைக்குள் சென்றாள்.தாரிகா அர்ஜூனை அழைத்தாள்.
போகட்டும் தாரி என்று ஸ்ரீ அழுது கொண்டே அவளிருக்கும் அறைக்கு செல்ல, தாரிகாவும் உள்ளே வந்தாள்.
ஸ்ரீ ஜிதினை என்ன செய்வது?
ப்ளீஸ் தாரி. அவனை பற்றி பேசாதே!
இருவரும் அமைதியானார்கள்.ஜிதின் நிவாசிற்கு போன் செய்ய, அவன் அவனிடம் நீ மட்டும் என் முன்னால் வந்தால் கொன்று விடுவேன் என்று கத்திக் கொண்டிருந்தான்.அகிலும் நண்பர்களும் அங்கே வந்தனர்.
தாரிகா அம்மாவிடம் யார் என்று கேட்டார்கள்?
அவரும் விழித்துக் கொண்டிருக்க, அகில் போனை வாங்கினான். ஜிதின் குரலை அறிந்தவன், உனக்கு எவ்வளவு தைரியமென்றால் எங்க ஸ்ரீ மீதே கை வைக்க பார்ப்பாய். இனி ஸ்ரீ, நிவாஸிற்கு போன் செய்யக் கூடாது என்று மிரட்டலாக பேச, ஜிதின் போனை வைத்து விட்டான் போல்,எந்த பதிலும் இல்லாது போனது.
ஸ்ரீ எங்கே? கேட்டனர். அர்ஜூனுடன் இருவரும் இன்று வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.நான் தான் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தேன் என்றார் தாரிகா அம்மா.
அர்ஜூன் வீட்டிற்கா? யோசித்தான் அகில். பின் அவன் அர்ஜூனிற்கு போன் செய்து கேட்க, வீடு வரை வந்துட்டாங்கடா. எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. இன்று இரவு இங்கேயே ஓய்வெடுத்து விட்டு காலையிலே வந்து விடுவேன். ஸ்ரீயும், தாரிகாவும் இங்கே தான் இருக்காங்க.
நீ தருணையும் இதயாவையும் இன்று மட்டும் பார்த்துக் கொள்ளேன். அபியை நிவாஸ் அறையில் இருக்க சொல்லு. சைலேஷ் சார் வீட்டிற்கு நித்தி, யாசுவை அனுப்பி விடுவோம். அம்மாக்கள் வீட்டிற்கு செல்லட்டும். கவினை மட்டும் என் வீட்டிற்கு வரச் சொல்லு என்றான்.
நீ ஏன்டா ஒருமாதிரி பேசுற? அகில் கேட்டான்.
அந்த ஜிதின் ஸ்ரீக்கு போன் செய்தான். நிவாஸிக்கும் போன் செய்தான் என்று இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீ இப்ப ஓ.கே தானா?
அவள் அப்பொழுது பயந்தவாறு தான் தெரிந்தாள். இப்பொழுது என்ன செய்கிறாள் என்று தெரியல? நான் என் அறையில் இருக்கிறேன்.
பார்த்துக்கோடா என்று போனை அணைத்தான் அகில்.அகில் அர்ஜூன் சொன்னதை கூறினான். சைலேஷிற்கு அர்ஜூன் போன் செய்து சொல்ல, அவன் ஹாஸ்பிட்டல் கிளம்பினான். அபிக்கு சந்தேகம் அதிகமானது.
இன்பா ஏழு மணியளவில் சாப்பாட்டுடன் வந்தாள்.
அபியை இன்பா தனியே அழைத்து சென்றாள். அனைவரும் ஆர்வமாக பார்க்க, அவளோ அவளது போனில் பிரதீப் அந்த ரெசார்ட் வாங்கிய விவரத்தை அனுப்பினான். அதற்கு அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பின் ஆதேஷிற்கும் விசயத்தை அனுப்பினாள்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப, இதயாவை அம்மா வீட்டிற்கு அழைத்தார்.நோம்மா..நான் இங்கேயே இருக்கேன். அவன் யாரிடமும் பேச மாட்டிக்கிறான். கொஞ்சம் பயமா இருக்கு என்று அம்மாவை அணைத்தாள்.
சைலேஷ் அங்கு வந்து, நித்தி யாசுவை அழைத்துச் சென்றான். ஆனால் அவன் பேசாமல் அமைதியாக ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து நித்திக்கு கோபம் வந்தது.யாசு அவளது கையை பிடித்து அமைதியாக இருக்கச் சொன்னாள்.
நித்தியும் யாசுவும் அமைதியாக அவனையே பார்க்க, காரை நிறுத்தியவன் ஒருவருக்கு போன் செய்தான். அவனது கம்பெனிக்கு சென்றனர்.
அவனது அறைக்கு அழைத்து சென்று அவர்களை அமர வைத்தான். பின் அவன் கோப்புகள் இருக்கும் அறைக்கு அவனது உதவியாளருடன் சென்றான்.நித்தி யாசுவிற்கு சாப்பிட பொருட்கள் வந்தது.
நித்தி சார் பெரிய ஆளு தான். கல்லூரி, கம்பெனி..அதுவும் எட்டடுக்கு கட்டிடம் என்றாள் யாசு.
ம்ம்..அமைதியாக கூறினாள் நித்தி.
என்ன ஆச்சு நித்தி?
அவர் என்னிடம் ஏதும் பேசவில்லையே?
பார்த்தாலே தெரியவில்லையா? அவர் ஏதோ டென்சன்ல இருக்கார். அதனால் தான் பேசி இருக்க மாட்டார்.சைலேஷ் உள்ளே வந்தான்.
உதவியாளரிடம் லிஸ்டை சரி பார்த்து எடுத்து விட்டு கூறு.சீக்கிரம் என்றான்.
ஓ.கே சார் என்று அவன் வெளியேறினான். அவன் கையில் ஒரு கோப்பை வைத்துக் கொண்டு இருவரையும் பார்த்தான்.நித்தி ஏதும் சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்தாள்.
என்ன ஆச்சும்மா? சாப்பிடலையா? உனக்கு பிடிக்கவில்லையா? கேட்டாள்.
யாசு அவனிடம், சார் உங்க கம்பெனியை நான் சுற்றி பார்க்கலாமா? என்று கேட்டாள். இருவருக்கும் தனிமையை ஏற்படுத்திக் கொடுத்தாள்.
சைலேஷ் ஒரு பொண்ணுக்கு போன் செய்து அழைக்க, அவள் யாசுவை அழைத்துச் சென்றாள். நித்தி அமைதியாக இருப்பதை பார்த்து, கையில் வைத்திருந்ததை கீழே வைத்து விட்டு அவளருகே எழுந்து சென்றான்.
அவள் அவனது கையை தட்டி விட, கதவை லாக் செய்து விட்டு அவளருகே வர, அவனை தள்ளி விட்டாள்.
கோபப்படாதேம்மா..என்று அவளை எழ வைக்க முயற்சி செய்தான். அவளை அசைக்க முடியாது இருக்க,அவளை தூக்கி அவனது டேபிளில் அமர வைத்தான்.பின் அவளிடம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நித்தி. இப்பொழுது தான் கல்லூரி பிரச்சனை முடிந்தது. இங்கே ஆரம்பித்து விட்டது. அந்த யோசனையில் உன்னுடன் சரியாக பேச முடியவில்லை என்று வருந்தினான்.
ஒரே குதியில் கீழே இறங்கி, அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு,அதுக்கு பேசாமலா இருப்பது? நீங்க பேசாம இருந்ததற்காக இந்த வாய்க்கு தண்டனை தருகிறேன் என்று தன் இதழ்களை அவனது இதழ்களுடன் பொருத்தினாள். இருவரும் முத்தமழையில் நனைந்திருக்க, சைலேஷ் கைகள் நித்தியின் இடையை வருடியது.
அழைப்பு வர, உதவியாளர் உள்ளே வந்தான். இருவரும் நகர்ந்தனர். சார் நீங்க சொன்ன கம்பெனி தான் பிரச்சனை என்றான் அவன்.
சைலேஷ் முகம் இறுகியது. நித்தி அவனது உள்ளங்கையை பிடித்து வருடினாள். அவன் மனம் அமைதியானது. இதை பார்த்த உதவியாளன் புன்னகையுடன், நான் அப்புறம் வாரேன் சார்.
அவனது அறைக்குள் ஓர் அறை இருந்தது.நித்தியை அதில் இருக்க சொல்லி வெளியே வந்தான். அங்கே அவனது பெற்றோர்கள் புகைப்படம் தாத்தாவுடன் சேர்ந்தவாறு இருந்தது. அவள் அங்கிருந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சைலேஷ் அர்ஜூனிற்கு போன் செய்து தன் கம்பெனி சேர் திடீரென வீழ்ந்துள்ளது.கயல் காரணமென்று கூறினான். அர்ஜூன் அதிர்ந்தாலும் அதை சரி செய்யும் வழியையும் சொன்னான்.அதை உதவியாளரிடம் கூறி செய்ய சொல்லி விட்டு நித்தியை பார்த்தான். அவள் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.பின்னிருந்து அவளை அணைத்தான்.
அம்மா. அப்பாவா?
ம்ம்..என்றான் சோர்வாக, அவள் திரும்பி பெரிய பிரச்சனையா?
ம்ம்..
அவளும் அவனை அணைத்து விட்டு சீக்கிரமே சரியாகிடும் என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.யாசு வர, மூவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.