வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-103
186
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 103.
தூங்கி எழுந்த புவனா அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே தீனா அப்பா, அப்பத்தா இருந்தனர்.அவர்கள் முன் வந்து, நான் இங்கே வேலை செய்யலாமா? கேட்டாள்.
ஏன்டி? என்ற அப்பத்தா, உன்னை அதுக்கு கூட்டிட்டு வரல? நீ பத்திரமா இருக்க தான் என் மருமவ கூட்டிட்டு வந்தா?
பாட்டி, எனக்கு அவங்க நினைவாவே இருக்கு. எனக்கு எல்லா வேலையும் தெரியும். நான் செய்கிறேனே?
அங்கே வந்த காவேரி, உனக்கு புத்தகங்கள் வேண்டுமானால் படிக்க எடுத்து தாரேன்மா. தீனா அறையில் இருக்கும். அதை படி. மனது கொஞ்சம் அமைதியாகும் என்றார்.
இல்லம்மா. எனக்கு வீட்டு வேலை செய்து பழக்கமாகி விட்டது. அதனால் அதில் கவனத்தை செலுத்துகிறேனே?
சரிம்மா. பார்த்து செய் என்று சொன்னார் காவேரி.
அவளும் சமையலைக்குள் செல்ல அங்கிருந்த வேலைக்கார பொன்னம்மா, நீ போ தாயி.நான் பார்த்துக்கிறேன்.
அம்மாவிடம் கேட்டு தான் வந்திருக்கிறேன். நானும் செய்கிறேன் என்று சகஜமாக வேலையை செய்தாள். இதை பார்த்த காவேரி, ரொம்ப பொறுப்பா வேலை செய்றா? பாருங்க அத்தை என்றார்.
ம்ம்..ஆனால் அந்த பொண்ணுக்கு பழக்கம் இருக்குல. அவளோட வீட்ல அவள் தான் எல்லாமே செய்வாள்.அவளோட அம்மா அவளோட பத்தாவது வயதிலே முடங்கிட்டாளே? பசங்க ரெண்டு பேருமே பொறுப்பானவங்க. அவ அண்ணன் தான் எல்லாமே பார்த்துக் கொள்வான்.இந்த ஒன்றரை வருடமா தான் இந்த பொண்ணு பள்ளிக்கும் சென்று அவளோட அம்மாவையும் பார்த்துக் கொள்கிறாள்.
பாவம். ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாள? என்று காவேரி கேட்க, இருவரும் பேசுவதை கேட்டவாறு தீனா அப்பாவும் அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் சாப்பாடை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள் புவனா. அனைவரும் அமர்ந்து சாப்பிட, பொன்னம்மா எடுத்து வைக்க,அவரை தடுத்து புவனா எடுத்து வைத்தாள்.அவளை சாப்பிட உட்காரச் சொன்னார் அப்பத்தா.
எனக்கு பசிக்கல.நீங்க சாப்பிடுங்க.
உட்காரும்மா என்று காவேரி எழுந்து அவளுக்கு சாப்பிட எடுத்து வைக்க, தீனா அப்பாவிற்கு பிடிக்கவில்லை. அவள் சாப்பிடாமல் தட்டை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். அவர் சாப்பிட்டு அங்கிருந்து அவளை பார்த்து விட்டு சென்றார்.
சாப்பிட்டு அவளை பார்த்த காவேரி, என்னம்மா சாப்பிடலையா?
இல்லம்மா.எனக்கு பசிக்கல..
காலையிலும் சாப்பிடலை என்று அவளருகே வந்து தட்டை எடுத்து பிசைந்து ஊட்டி விட, அவள் அழுதவாறே சாப்பிடாள்.
அழாம சாப்புடுடி..அதட்டினார் அப்பத்தா.
எனக்கு விவரம் தெரிந்து அம்மா கூட ஊட்டி விட்டதில்லை. நாங்களாக தான் சாப்பிடுவோம் என்றாள். அவள் ஏக்கம் குரலில் தெரிய, இனி நான் உனக்கு ஊட்டி விடுறேன்மா என்று தன் முந்தானையால் அவளது கண்ணை துடைத்து விட்டு, சாப்பிடு என்று ஊட்டினார்.
எல்லாம் முடிந்து அவள் மீண்டும் வேலை செய்ய, நீ ஓய்வெடுக்கலாமேம்மா? என்றாள்.
இல்லம்மா என்று அவள் வேலையை தொடர்ந்தாள். அனைவர் அறைக்கும் சென்று அனைத்தையும் ஒழுங்கு படுத்துவது, துணி துவைப்பது, சுத்தம் செய்வது என்று அவள் நிறுத்தாமல் வேலை செய்ய, அப்பத்தாவிற்கு அவளை பிடித்து விட்டது.
அம்மா அவங்க வெளிய போயிருக்காங்க. நான் போடுறேன் என்று வைத்து விட்டு அவள் அறைக்கு சென்று அவளது புத்தகத்தை வெளியே எடுத்து வைத்தாள்.பின் சமையலறை வந்து வெந்நீரை எடுத்து செல்ல தவறி பானையை கீழே விட்டாள். அது கீழே விழுந்து தெரித்தது. அனைவரும் அங்கே வந்து அவளை பார்த்து பதறினர்.
ஒன்றுமில்லை.நான் தள்ளி வந்து விட்டேன். பாதத்தில் மட்டும் தான் பட்டிருக்கிறது. வலிக்கலம்மா..
என்ன வலிக்கல? நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல காவேரி புவனாவை திட்டினார். அவளுக்கு இது புதிது. அண்ணா இல்லாத போது இது போன்ற காயங்கள் பட்டு தான் வேலை செய்திருப்பாள்.காவேரி பதட்டத்தை பார்த்து, கண்ணிமைக்காமல் அவரையே பார்த்தாள்.
என்னடி புள்ளைய திட்டிக்கிட்டு இருக்க? அவளுக்கே அடி பட்டுருக்கு. மருந்து எடுத்து வாடி என்று அப்பத்தா புவனாவை அழைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.
ரொம்ப வலிக்குதாடி? கேட்டார்.
இல்லை என்று தலையசைத்தாள். காவேரி அவளது காலை தூக்கி அவரது மடியில் வைத்து, எடுத்து வந்த மருந்தை போட்டுக் கொண்டிருந்தார். புவனாவிற்கு மனது ஆறுதலாக இருந்தது. உள்ளே வந்த துளசி அதை பார்த்து, கோபமுடன் அவளது பையை தூக்கி எறிந்து விட்டு,அம்மாவிடம் வந்து என்ன செய்றீங்க? கத்தினாள்.
நான் மருந்து தான்டி போட்டுக் கொண்டிருக்கிறேன்.
மருந்தா? அவளுக்கா? அதுவும் எப்படி? என்று சீற்றத்துடன் புவனாவை பிடித்து இழுத்தாள். புவனா கீழே விழுந்து எழுந்தாள்.
போடி..வெளியே..ஒரு அநாதை நீ? எதுக்கு எங்க வீட்டுக்கு வந்த? வாய்க்கு வந்த படி திட்டினாள். புவனா இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையுடன் அவளது அறைக்கு நொண்டி நொண்டி சென்று கதவை அடைத்தாள்.
அப்பொழுது உள்ளே நுழைந்த தீனா பார்த்தது. அவனுடைய அம்மா தங்கையை அடிப்பதை பார்த்து, அம்மா எதுக்கு அவளை அடிக்கிறீங்க? கேட்டான். அவனது அப்பத்தா புவனா அறை கதவை தட்டினார்.அதை பார்த்து புரியாமல் அம்மாவை பார்த்தான்.
ஏன்டி, அந்த பொண்ணே கஷ்டத்துல இருக்கா? இப்படி பேசுற? நாளைக்கு நானும் செத்து போனா? நீ தனியா தாண்டி நிக்கணும் என்று கத்தினார் துளசியிடம்.
அப்பொழுது அறை கதவை திறந்து நொண்டிக் கொண்டே, துளசியிடம் வந்த புவனாவை பார்த்து, புவி நீ எப்படி இங்கே? என்று விழித்தான் தீனா.
அவள் அவனை கண்டுகொள்ளாது துளசியிடம், நான் அநாதை இல்லை. இவங்க தான் என்னோட குடும்பம் என்று அவள் குடும்ப புகைப்படத்தை காட்டி விட்டு, அழுது நொண்டிக் கொண்டே தீனாவை தாண்டி சென்றாள்.
நில்லும்மா..மருந்து போட்டுக்கோம்மா காவேரி அவள் பின்னே வந்தார்.
வேண்டாம்மா..எனக்கு பாதுகாப்பு மட்டும் போதும் என்று கதவை சாத்தினாள்.
ஏன்டி, உனக்கு என்ன தான்டி பிரச்சனை? பிள்ளைக்கு மருந்து கூட போட விடாம பண்ணிட்ட. அவள் காலில் வெந்நீர் பட்டு பாதம் சிவந்து கொப்புளமாகி உள்ளது என்று திட்டினார் அப்பத்தா. அவள் அமைதியாக இருக்க,
வெந்நீர் பட்டதா? மருந்து போடலையா? என்று தீனா புவனா அறை கதவை தட்டினான். அவள் அழுது கொண்டிருந்தாள்.
புவனா நீ கதவை திறக்கலைன்னா. நான் கதவை உடைத்து விடுவேன் என்றான்.
ப்ளீஸ் சார். நான் தனியா இருக்கணும். விடுங்கள் என்று அழுது கொண்டே கூறினாள். அனைவரும் அவளையே கவனிக்கிறார்கள் என்று கோபமாக அவள் அறைக்கு சென்றாள் துளசி. பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கப் பட்டிருந்தது.
அங்கிருந்த வேலையாளை அழைத்து கேட்டாள் துளசி.புவனா தான் செய்தாள் என்றவுடன் அனைத்தையும் கீழே தள்ளி விட்டாள்.
தீனா அவனது அம்மாவை பார்க்க, சீக்கிரம் மருந்து போடணும். கொப்புளங்கள் பெரியதாகி விடும்.போட்ட மருந்தையும் அழித்திருக்கிறாள் என்றார்.
அவன் அப்பத்தாவை பார்த்தான்.அவரும் செய்வதறியாது இருந்தார். பின் அவர் முன் வந்து, பாப்பா எனக்கு கொஞ்சம் மருந்து தேய்த்து விடுறியா? எல்லாரும் அவங்க அறைக்கு போயிட்டாங்க என்று கூறிக் கொண்டே புவனா இருந்த அறைக்கதவை தட்டினார்.
அவள் அமைதியாக வந்து கதவை திறக்க, தீனாவை பார்த்து கதவை அடைக்க, அவன் கையை வைத்து தடுத்தான். அதில் அவள் மீண்டும் கீழே விழ, அவன் அவளை பிடித்து விட்டு, வா வெளியே என்று இழுத்தான். அவள் நிற்க முடியாமல் கதவை பிடித்துக் கொண்டு,
அம்மா..எனக்கு வேண்டாம் என்றாள். காவேரி அவளை முறைத்தார்.
அப்பத்தா தீனாவிடம் கண்ணை காட்ட, அவளை தூக்கி வந்து சோபாவில் போட்டு விட்டு அவனும் அமர்ந்தான்.
காவேரி..மீண்டும் அர்ச்சனையை ஆரம்பிக்க, அவன் புவனாவையே பார்ப்பதை கவனித்த அப்பத்தா, நீ சென்று குளித்து விட்டு வா. இரு வெந்நீர் என்று சொல்ல, அவள் பாவம் போல் அப்பத்தாவை பார்த்தாள்.
நீ இனி ஏதாவது செய்கிறேன்னு? சமையற்கட்டுக்குள் போ என்று அப்பத்தா புவனாவிடம் கூற. எனக்கு..அவள் தொடங்க, போதும் என்று மருந்தை போட்டு விட்டார்.
எனக்கு வெந்நீரே வேண்டாம். நான் ஹீட்டரை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று எழுந்து உள்ளே சென்றான் புன்னகையுடன். அறைக்குள் நுழைந்த தீனா சந்தோசத்தில் ஓர் ஆட்டம் போட்டு விட்டு குளியலறைக்கு சென்றான்.
அவன் குளித்து விட்டு வெளியே வந்தான். விசில் சத்தம் கேட்டு கீழே எட்டிப் பார்த்தான். அங்கே துருவன் அவனது வீட்டு பெரிய மதிற்சுவற்றில் நின்று விசிலடித்து புவனாவை அழைத்தான்.
அவள் வீட்டிற்குள் உள்ள ஊஞ்சலில் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தாள். இவனை..என்று தீனா திரும்ப, மற்றுமொறு சத்தம் கேட்டது.ஜானு கையை பிடித்து தூக்கினான் துருவன். அவளும் விசிலுடன் புவனாவிடம் பேச, புவனா கீழே ஊன்றி இறங்க பாதம் வலித்தது.
ஏய், என்ன ஆச்சு? என்று துருவன் கேட்டவாறு தடுமாற இருவரும் வீட்டிற்குள் விழுந்தனர்.
குட்டி பேயே? எப்படி கனக்கிறாய்? என்று திட்டிக் கொண்டே அவளை தூக்கி விட, மேலும் சத்தம் கேட்டது. ஜானு..எங்களையும் தூக்கு.. சிறுபிள்ளை குரல் கேட்க,
புவனா நொண்டிக் கொண்டே, அவர்களிடம் வந்து உங்களுக்கு ஒன்றுமில்லையே?
உனக்கென்ன?
வெந்நீர் பட்டு விட்டது.
இங்க வந்தும் சமையலறைக்குள் சென்றாயா? இனியாவது படிப்பாய் என்று நினைத்தேன் ஜானு கூற, புவனா அமைதியாக, நான் எப்படி சும்மா சாப்பிடுறது? ஜஸ்ட் என்னை பாதுகாத்துக் கொள்ள மட்டும் தான் வந்தேன். அந்த அர்தீஸ் அன்று நடந்தது தெரியும் தானே? அதற்காக மட்டும் தான் வந்தேன்.
அண்ணாவுக்கு அவனை பற்றி சொல்ல வேண்டாம்னு எல்லாரிடமும் கேட்டு தான் அனுப்பினேன். அவனால் நான் கஷ்டப்பட்டது தெரிந்தால் அண்ணா மறுபடியும் அவனுடன் சண்டைக்கு செல்வான். எதற்கு பிரச்சனை? அதனால் தான் அவங்க கேட்டதும் ஒத்துக் கொண்டேன்.சும்மா சாப்பிடுவதற்கு பதில் வேலை செய்து சாப்பிடலாம்னு நினைச்சேன். அது தப்பா? கேட்டாள்.
அம்மா தாயே! உன்னோட நியாயத்தை நாம் உட்கார்ந்து பேசுவோமா? என்று துருவன் புவனாவை உட்கார வைத்து, அவளது பாதத்தை பிடித்து பார்த்து ஊதினான்.
என்னடா பண்ற? என்று சட்டென காலை அவனிடமிருந்து பிடுங்கினாள். அவனுக்கு எவ்வளவு தைரியம்? என்று தீனா மனதினுள் திட்ட, மீண்டும் சத்தம் கேட்டது.
போச்சு, அட நம்ம படைகள் அங்கே தான் இருக்காங்க. உன்னை பார்க்க வாரேன் என்று ஒரே பிடிவாதம். அங்கே ஒருவர் மீது ஒருவர் ஏறி அவர்களும் துருவன் போல் ஒவ்வொருவராக நிற்க,
சிறுவர், சிறுமியர் புவனாவை பார்க்க வந்திருப்பதை அதிசயமாக பார்த்தான் தீனா. இவள் தான் யாரிடமும் பேச கூட மாட்டாளே?
ஜானு இரண்டு பேரும் என்ன செஞ்சு வைச்சிருக்கீங்க? புவனா கோபமாக இருவரையும் முறைத்தாள்.
புவி..என்று ஒரு குட்டி பையன் கத்தினான்.
ஏய்.. விழுந்திறாதடா என்று நொண்டிக் கொண்டே வேகமாக நடக்க முடியாமல் நடந்தாள் புவனா. தீனா ஆடையை போட்டுக் கொண்டு வேகமாக வந்தான்.
எதுக்கு இவ்வளவு வேகமாக செல்கிறான்? என்று காவேரியும் அவன் பின்னே சென்றாள்.
ஜானுவும் அவர்களிடம் வந்து, டேய்..சக்கரை ஏன்டா எல்லாரும் மேல ஏறினீங்க? திட்டினாள். துருவா..நீ செஞ்சதை பார்த்து அவங்களும் ஏறி இருக்காங்க புவனா அவனை திட்டினாள்
புவி அக்கா..பயமா இருக்கு என்று ஒரு குட்டிப்பொண்ணு கூற, அசையாமல் இரு.நான் வாரேன் என்று அங்கிருந்த ஏணியை எடுக்க சென்றாள்.
இரு. நானும் வாரேன் என்று துருவனும் அவளுடன் சென்றான். அவர்கள் மூவரும் எடுத்து வந்து சுவற்றில் சாய்த்து புவி ஏற, அவளை தடுத்து துருவன் ஏறினான்.
டேய்..பார்த்துடா என்று புவனா கூற,அவன் ஒருவனை துக்க, அவனும் இடறி கீழே விழ வந்தான். அங்கே வந்த தீனா துருவனை விழாமல் பிடித்து, அவனை இறக்கி விட்டான். பயத்தில் பயந்து கொண்டிருந்த பாப்பா தீனாவை பார்த்து பயந்து கீழே விழ, அவன் ஒரே தாவலில் பாப்பாவை பிடித்து கீழே விழுந்தான். பின் அனைவரையும் இறக்கி விட்டு, அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனது செய்கையை மறைந்து நின்று காவேரி பார்த்துக் கொண்டிருந்தார்.புவனா ஓரிடத்தில் அமர்ந்தாள்.
புவனா துருவனது தலையில் ஓர் அடியை போட்டு, உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். பசங்க முன்னாடி உங்க குரங்கு சேட்டையை காட்டாதீர்கள் என்று பேசியவாறு ஜானுவை முறைத்தாள்.
சாரி புவி. ஜானு சொல்ல, பேசாதே ஜானு. அவங்க கீழ விழுந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? அவள் கோபமாக, அந்த குட்டி பிள்ளைகளை பார்த்து,
எதுக்கு இங்க வந்தீங்க?அதுவும் இந்த மாடுகளுடன் என்று பல்லை கடித்தாள்.துருவனும் ஜானுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையை தொங்கவிட்டனர்.
புவிக்கா,அவங்க மாடு இல்ல..ஜானு குரங்கு, துருவா குரங்கு என்றான் ஒரு குட்டிப் பையன்.அவர்கள் அவனை முறைக்க, அவள் உதட்டில் புன்னகை மலர,
அக்கா திட்ட தான் செய்தேன். அவங்க உங்களோட பெரியவங்க தான? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.ஓ.கே வா? நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க?
அக்கா..டியூசன் அக்கா என்றாள் பாப்பா.
நீங்க அம்மா கிட்ட சொல்லி ஸ்கூல்ல டியூசன் சேர்ந்துக்கோங்கடா என்றாள்.
அக்கா,நம்ம வீட்டுக்கு வர மாட்டியா? கேட்டான் குட்டிப்பையன்.
நா..நான்..என்று திணறினாள்.ஜானு இடையே வந்து, என்னோட வீட்டுக்கு வாங்க..நான் சொல்லித் தாரேன்.
உனக்கே ஒன்றும் தெரியாது. நீ எனக்கு சொல்லித்தாரியா?
துருவன் சிரித்தவாறு, இந்த அசிங்கம் தேவையா? கிண்டலடித்தான்.
என்னால வர முடியாதுடா. ஒரு மாதம் தான் நம் ஊரில் இருப்பேன் என்றாள். தீனாவின் முகம் மாறியது.
என்ன சொல்ற புவி? ஜானு கேட்க, ஆமாம் ஜானு. இந்த மாதம் மட்டும் தான் இருப்பேன்.நான் அண்ணாவுடன் சென்று விடுவேன்.
அண்ணாவால் எப்படி அங்கே நீ படிக்க பணம் கட்ட முடியும்?
ம்ம்..யோசிக்கணும் என்றாள்.
என்ன இப்படி சொல்ற? துருவன் கேட்டான்.
ஜானு நீ எங்க வீட்ல கூட தங்கி இருந்துக்கோ. நான் வேண்டுமானால் பள்ளிக்கு அருகே இருக்கும் விடுதியில் தங்கிக் கொள்கிறேன். இந்த வருட படிப்பாவது முழுசா முடிச்சிட்டு போகலாமே?
என்ன பேசுறடா? அம்மாவுக்கு துணைக்கு யார் இருப்பாங்க?
நீ பார்த்துக்க மாட்டியா?
என்னால பார்த்துக்க முடியும். அவங்களுக்கு அவங்க பையன் உடன் இருப்பது போல் வராதுடா. பைத்தியம் மாதிரி உளறாமல் அம்மாவை நல்லா பார்த்துக்கோ.
இங்க பாரு துருவா..உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது.நீ என்ன தான் பேசினாலும் நீ என்னோட ப்ரெண்டு மட்டும் தான்டா.
அம்மா, அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டத்துல இருக்காங்க. நீ இப்படி நடந்துக்கிற? அண்ணாவும் அருகே இல்லை. என்ன தான் நான் பார்த்துக் கொண்டாலும் உரிமையான உன்னை போல் வர முடியாது என்று கண்கலங்கினாள்.
அவள் அவளது பெற்றோரையும் அண்ணனையும் ரொம்ப மிஸ் பண்றான்னு அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. எல்லாரும் கிளம்புங்க என்று அவள் செல்ல, குட்டிப்பாப்பா அவளை தடுத்து, அவளுக்கு முத்தம் கொடுத்தாள். அவள் கண்களில் சரேரென்று நீர் விழிந்தது.
அவள் கண்ணீரை துடைத்த பாப்பா, அம்மாவும், ஸ்ரிட் ஆபிசரும் வர மாட்டாங்களா அக்கா? கேட்டாள். இதை கேட்டு புவனா தாங்க முடியாமல் அழுது கொண்டே செல்ல, புவி என்று அழைத்தாள் ஜானு.
புவனா சென்று கொண்டிருக்க இடையே வந்த துளசி அவளது காலை இடையே நீட்டினாள். கவனிக்காது சென்ற புவனா கீழே விழுந்தாள்.
தீனா சினத்துடன் எழுந்தான்.அதற்குள் ஜானு துளசி கன்னத்தை பழுது பார்த்திருந்தாள். நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? காலையில இருந்தே நீ சரியில்ல. உன்னோட சுத்துதுகல.. அதுகள விட்டு விலகி இருன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன். அவங்க சொல்லி தானே இப்படியெல்லாம் அவளிடம் நடந்து கொள்கிறாய்? அவங்க உன்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நீ என்னோட ப்ரெண்ட்ஸை பத்தி பேசுறியே? இவளே ஒரு அநாதை. இவள் பின்னாடி சென்று கொண்டிருக்கிறாய்? என்னோட ப்ரெண்ட்ஸ் இவ மாதிரி பிச்சைக்காரியெல்லாம் இல்லை. அவங்க எல்லாரும் வசதியானவங்க என்று பேச, புவனாவிற்கு கஷ்டமா இருந்தது.
காவேரி சினத்துடன், என்ன பேச்சுடி பேசுற? அவளை அடித்தார். புவனா எழுந்து அழுது கொண்டே செல்ல, அவளது கையை பிடித்த ஜானு.
நீ இந்த மாதிரி இடத்துல இருக்கக் கூடாது. வா என்னுடன்.. என்றாள் ஜானு.
ஜானு..வேண்டாம். நாம் நாளை பேசுவோம். ப்ளீஸ் என்று அவளது கையை எடுத்து விட்டு அழுது கொண்டே சென்றாள்.
ஜானு காவேரியை பார்த்து, நாளைக்கு நீங்க எல்லாரிடமும் அவளை பார்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிடுங்க. அவளை நான் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். முதல்ல உங்க பொண்ணை ஒழுங்கா நடந்துக்க சொல்லுங்க. மறுபடியும் பள்ளியில் வைத்து அவளிடம் பிரச்சனை செய்தால் அவ்வளவுதான். அவளை அழைத்து செல்ல, அண்ணா தான் வருவான். பின் பிரச்சனையாகும் என்று தீனாவை பார்த்து, நீயெல்லாம் போலீஸ்னு வெளியே சொல்லாத? எனக்கு அசிங்கமா இருக்கு? என்று திட்டி விட்டு சென்றாள்.
காவேரியும் தீனாவும் கோபமுடன் துளசியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.