ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 100.
தீனாவால் புவனா அழுகையை கேட்க முடியாது அவனுடைய ஸ்டேசன் சென்றான். அவனுடைய அப்பா அங்கு வந்து, நீ என்னை நினைச்சுக்கிட்டு இருக்க? கத்தினான்.
அப்பா..ப்ளீஸ் ரொம்ப சோர்வா இருக்கேன். நாளை பேசிக்கலாம் என்றான்.
நாளைக்கு என்ன பேசப் போற? எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டேல.
இல்லப்பா..ப்ளீஸ்.
அந்த பொண்ணுக்காக தான? அப்பா பேச்ச கேட்கல.
இல்லப்பா. இந்த இடத்தில எந்த பொண்ணு இருந்தாலும் அப்படி தான் செய்திருப்பேன்.
எனக்கு அப்படி தெரியவில்லையே? என்று தீனாவை கூர்ந்து பார்த்து, உனக்கு அந்த ஸ்கூல் பொண்ணு வேணும் தான?
அப்பா தனக்கு வலை விரிக்கிறார் என்று புரிந்து கொண்டு, ஆமா எனக்கு முழுசா அவ வேணும் என்று கத்தினான்.
இத தான் எதிர்பார்த்தேன் என்று அவர் கிளம்பினார். இவரை சமாளிக்கிறதுகுள்ள ச்சே..என்று தலையை பிடித்தவன். இதற்கு முன்னும் புவனாவை அமைதியாக பார்த்திருப்பான். அதனை யோசித்தவாறு கண்ணை மூடினான்.இச்செயலாலே புவனாவை பிரியப்போவதை அவன் அறியவில்லை.
ஹாஸ்பிட்டலில் தாரிகா அம்மா தருண் அறைக்கு வெளியே ஏதோ சிந்தித்தவாறு அமர்ந்திருக்க, கைரவ் அவரை பார்த்து அருகே வந்து அமர்ந்தான்.
என்ன ஆச்சும்மா? உங்க கணவர் இப்பொழுது ஓ.கே வா?
இப்ப நல்லா இருக்கார். அவர் நடக்க கூட செய்கிறார். அவரை நாளை டிஸ்சார்ஜ் பண்றாங்க.
நீங்க அவர் கிட்ட இல்லாம, இங்க இருக்கீங்க?
அர்ஜூனுடன் பேசணும். வாங்கம்மா உள்ள போகலாம்.
இல்லப்பா.தனியே பேசணும்.
சரிம்மா. அவனை வரச் சொல்கிறேன் என்று கைரவ் உள்ளே சென்று கூற, கைரவை பார்த்துக் கொள்ள சொல்லி அர்ஜூன் வெளியே வந்தான்.
அம்மா..என்று அழைத்தான்.
வா..என்று அவனை வெளியே அழைத்து வந்து, அங்கிருந்த மரத்தின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
என்னடா நடக்குது? ஸ்ரீக்கு? என்று அவர் பேச, அம்மா..என்றான்.
தாரி, எல்லாத்தையும் சொன்னாள்.அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். அவளை நம் வீட்டிலே விட்டு விடு என்றார்.
இல்லம்மா அவள் என்னுடனே இருக்கட்டும். அவள் அருகே இருந்தால் தான் நல்லா இருக்கான்னு நிம்மதியா இருப்பேன்.அம்மா விசயம் வெளியே தெரியக்கூடாது.
எப்படிடா தாங்கிக்கிட்ட?
அர்ஜூன் அவரது கையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தான். அன்றே நான் அவளை கண்டிருந்தால் அவளுக்கு இவ்வாறு நேர்ந்திருக்காது. என் மீது தான்மா தவறு.
இல்லப்பா. அது ஸ்ரீயின் தலைவிதி. ஆனால் அவள் துவண்டிருப்பாள். ஆமாம்மா அவளது கதறல் இப்பொழுது கூட கேட்டுக் கொண்டே இருக்கிறது என்று காதை பொத்திக் கொண்டு அழுதான்.
இப்ப என்ன செய்யப் போற அர்ஜூன்?
ஆதாரம் கண்டறிந்து அவங்களை அழிக்கணும். ஆனால் இதில் காயப்பட்டது ஸ்ரீ மட்டுமல்லம்மா.இன்னும் இருக்காங்க. நான் அவங்க யாரையும் சும்மா விடப் போறதில்லை.எனக்கு கெல்ப் பண்ண ஆட்களும் இருக்காங்க. எங்க பிசினஸ் வேலையும் ஆரம்பிக்கப் போறோம்.
ஆனால் ஸ்ரீயுடன் காதல்? அவர் கேட்க, இப்பொழுதும் அதே தான்ம்மா. முதலில் அகிலுக்காக அவளை விட்டு தர நினைத்தேன். ஆனால் அவளை என்னுடைய பொண்டாட்டியா தான்மா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும். ஆனால் அம்மா அந்த ஜிதின் மட்டும் என் முன்னாடி வந்தான்னா அவனை கொல்லாம விட மாட்டேன்.
பூவா இருந்த என்னோட ஸ்ரீ வாழ்க்கையை புயலாக்கி அவளை அவளே வெறுக்கும்படி செய்து விட்டான்.நிறைய வேலைகள் உள்ளதும்மா.என்னால எல்லாத்தையும் செய்ய முடியலம்மா. எங்க ஊர்ல ஒரு அண்ணா போலீசா இருக்காங்க. அவங்ககிட்ட அக்கா கேஸ் பத்தி விசாரிக்க சொல்லலாம்னு நினைக்கிறேன்.
சரி, எல்லாரும் கவனமாக இருங்க.நாளைக்கு அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணுறாங்க.நான் வேணும்னா உன் வீட்டுக்கு வந்து அவளை பார்த்துக்கவா?
அம்மா..நிவியும் ஹாஸ்பிட்டலில் தான இருக்கான். அவனை விட்டு அவளும் வர மாட்டாள். நானே என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கேன். பார்ப்போம்மா. பசங்க இருந்தா நாளைக்கு ஒரு நாள் மாறி மாறி இருவரையும் பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சேன். தருண் அம்மாவிற்கு இப்படி ஆகும்னு நினைக்கல. அவனை சமாதனப்படுத்தினாலும் அவன் இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியாது. அதனால நாங்க கல்லூரிக்கு செல்ல முடியாது.
அப்படி அவன் நல்லா இருந்தாலும் அவளை தனியே விட்டுட்டு போக முடியல. அவனுக என்னோட வீடு வரை வந்துட்டாங்க. நல்ல வேலையாக பிரதீப் அண்ணா, சைலேஷ் சார், சந்துரூ சார் எல்லாரும் கூட இருந்தாங்க.
அவங்களுக்கு ஸ்ரீ பற்றி தெரியுமா?
ஆம் என்று தலையசைத்தான்.அங்கே வந்த கைரவ், நான் இருக்கேன்டா தருணுடன்.நீ கல்லூரிக்கு சென்று வா.
எப்படி? இந்த கையை வைச்சுகிட்டு என்று யோசித்த அர்ஜூன் ஆருத்ரா அப்பா நினைவு வரவே சிறு புன்னகையுடன்,ஓ.கே நீ இரு.நான் உங்கள் அனைவருடைய பாதுகாப்பிற்கும் வழி செய்கிறேன்.
இதை அனைத்தையும் தீனாவின் ஆள் அவனுக்கு வீடியோவாக பதிவிட்டு அனுப்பினான் தீனாவிற்கு மட்டும். கண்களை மூடியிருந்த தீனாவிற்கு அழைப்பு வந்தது. வீடியோவை பார்த்தான்.
ஸ்ரீயை அப்படி என்ன செய்திருப்பார்கள்? அர்ஜூன் உன்னோட காதலாக இன்னும் அவள் தான் இருக்கிறாளா? யார் அது உங்களுக்கு பிரச்சனை தருவது? யார் அந்த ஜிதின் சிந்தித்தவாறு இருந்தான். பிரதீப்பிற்கு தெரியுமா? பசங்களுக்கும் தெரியுமா? அபிக்கும் தெரிந்திருக்கும் தானே? என்றவன் எழுந்தான்.
அர்ஜூனும் கைரவும் அம்மாவிடம் பேசி விட்டு அறைக்கு வந்தனர். தருண் அழுது கொண்டிருந்தான். அவனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தனர். அர்ஜூன் நிவாஸை பார்க்க அவர்களது அறைக்கு சென்றான். அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் ஜன்னலருகே யாரோ இருப்பது போல் இருந்தது. அதை பார்த்து வேகமாக வெளியே வந்த அர்ஜூன் மறைந்திருந்தவரை பிடித்தான். ஸ்ரீயும் தாரிகாவும் உள்ளிருந்து ஜன்னல் வழியே பார்த்தனர்.
அது ஆருத்ரா. அவளது அப்பாவிடமிருந்து தப்பி நிவாஸை பார்க்க வந்திருந்தாள். ஆரு நீ என்ன பண்ற?
அர்ஜூன் அவன் என்ன செய்றான்னு பார்க்க வந்தேன். அப்பாவிற்கு தெரிந்தால் கோபப்படுவார் தெரியும்ல?
தெரியும்டா. அவன் விழித்தானா? இப்ப அவன் ஓ.கேவா?
அவ தான் இருக்கால. அவளே அவனை சமாளிச்சிடுவாள்.
நீ கிளம்பு என்றான் அர்ஜூன்.இன்று மட்டும் ப்ளீஸ் அர்ஜூன்.
ஆரு இங்க என்ன பண்ற? நீ உன் அறையில் தான இருந்த? ஆருத்ராவின் அண்ணன் அங்கு வந்தான்.
அண்ணா.ப்ளீஸ் டா. நீயாவது புரிஞ்சுக்கோ.
ஸ்ரீக்கு அவர்கள் பேசியதை வைத்து நிவாஸிற்கு மெசேஜ் பண்ண பொண்ணு இவள் தான் என்று புரிந்தது. ஆனால் முகம் சரியாக தெரியவில்லை.
தாரி நீ நிவியை பார்த்துக்கோ.நான் வாரேன் என்று அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் ஸ்ரீ.
ஆருவை பார்த்து, ஹே..நீயா? எப்படி இருக்க? ஸ்ரீ கேட்க, ப்ளீஸ் ஸ்ரீ. இன்று மட்டும் நான் உங்களுடன் இருக்கிறேன். விடியற்காலையிலே வீட்டிற்கு சென்று விடுவேன்.
அவள் அர்ஜூனை பார்த்தாள். ஸ்ரீ நீ உள்ள போ என்றான் அவன்.
அர்ஜூன் இந்த பொண்ணு? ஸ்ரீ கூற,எனக்கு எல்லாமே தெரியும்.
ஆரு..உனக்கு நான் உதவுகிறேன். ஆனால் இப்பொழுது வேண்டாம். அவனுக்கு ஒன்றுமில்லை. நீ இப்பொழுது இங்கே இருப்பது தெரிந்தால் தான் அப்பா கோபத்தில் அவனை என்ன செய்வார்ன்னு தெரியாது. ஒழுங்கா வீட்டுக்கு வா.நானே கூட்டிடு போறேன்.
அவன் எழுந்ததும் பேசலாம் என்றான் அவள் அண்ணா.
அவனுக்கு தெரியாது என்றாள் ஆருத்ரா.
என்ன தெரியாது? அண்ணா கேட்டார்.
அவனுக்கு என்னையும் தெரியாது. என்னுடைய காதலும் தெரியாது.
அர்ஜூனும், நீ கிளம்பு ஆரு என்று கூற,உன்னோட அண்ணா தான் உதவுறேன்னு சொல்றாருல.நாங்களும் கெல்ப் பண்றோம். இப்ப நீ கிளம்பு. நான் அவனை பாத்துக்கிறேன் என்றாள் ஸ்ரீ.
உன்னையே அவனுக்கு தெரியாதா? ரொம்ப நல்லது.எங்கிட்ட மட்டும் அப்படி வாயடிக்கிற?அவளது அண்ணன் திட்டினான்.
அம்மாவுக்கு தெரியும் என்றாள் அவள்.
உங்களலாம் வைச்சுகிட்டு அப்பாவை எப்படி சமாளிக்க போறேனோ? என்று அவளை இழுத்து சென்றான்.அர்ஜூனும் ஸ்ரீயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,
ஸ்ரீ..சீக்கிரம் வா என்று தாரிகா சத்தமிட்டாள். இருவரும் அவள் பக்கம் திரும்ப, நிவாஸ் எழுந்து மீண்டும் அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்து கொண்டிருந்தான்.இருவரும் வேகமாக உள்ளே வந்தனர்.
அர்ஜூன் அவனை நிறுத்த, அவனை கொல்லாம விட மாட்டேன் என்று கத்திக் கொண்டிருந்தான். பின் ஸ்ரீயும் அர்ஜூனுடன் சேர்ந்து அவனை தடுக்க, ஸ்ரீயை பார்த்து,
உனக்கு ஒன்றுமில்லைல? நீ நல்லா தான இருக்க? என்று அவளை திருப்பி திருப்பி பார்த்தான்.
ஏன் இப்படி பண்ண? சொல்லவே உனக்கு தோணவில்லையா? ஸ்ரீயை முழுமூச்சாய் தள்ளினான்.
ஸ்ரீ? என்று அர்ஜூன் அவளை தூக்கி விட,உன்னிடம் சொல்ல எனக்கு என்ன தெரியும்? அதை பார்த்து தான் தெரியும் என்று அழுதாள் ஸ்ரீ. கீழே விழுந்திருந்த தாரிகா ஸ்ரீயிடம் வந்தாள்.
லூசாடா நீ? எல்லாரையும் தள்ளி விட்டுக்கிட்டே இருக்க? கத்தினாள் தாரிகா.அவள் பொருட்களை உடைக்காமல் தடுக்க வந்த தாரிகாவை பிடித்து தள்ளி இருப்பான் நிவாஸ்.
அழாதே ஸ்ரீ என்று அர்ஜூன் அவளை அணைக்க, நிவாஸ் அர்ஜூன் ஸ்ரீயை அணைப்பதை பார்த்து, அவனை பிடித்து இழுத்து அவனையும் தள்ளினான் நிவாஸ்.
அர்ஜூனும் ஸ்ரீயும் எழுந்தனர்.பின் நிவாஸை சரி செய்து, அவனை படுக்க வைத்தனர். ஸ்ரீயும் நிவாஸும் பேசிக் கொண்டிருக்க, அர்ஜூனும் தாரிகாவும் வெளியே வந்தனர்.
தருண் அறைக்கு சென்று கைரவிடம், பக்கத்தில் கடை வரை சென்று வாரோம் என்று தாரிகாவை அழைத்துக் கொண்டு ஸ்ரீக்கு இரவில் மருந்து போட்டு காயவைப்பதற்கு ஏற்ற ஆடையை எடுக்க சொன்னான் அர்ஜூன்.இருவரும் வாங்கி விட்டு வந்தனர்.
ஸ்ரீ வா..என்று இருவரும் அழைத்தனர். அவள் வெளியே வந்தாள். நிவாஸ் அர்ஜூனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீயிடம், உனக்கான அறை என்று பக்கத்து அறை சாவியை கொடுத்தான் அர்ஜூன்.
எனக்கு எதற்கு தனி அறை.நான் நிவியுடனே இருக்கிறேன் என்றாள்.
இல்ல ஸ்ரீ. நீ மருந்து போட வேண்டும். அதனால் நீ தனியே தான் இருக்க வேண்டும் தாரிகா கூறினாள்.
எதற்கு?
அர்ஜூன் விலகி செல்ல, அந்த தழும்பு மறைய என்ன செய்வது? பற்றி அர்ஜூன் மருத்துவரிடம் பேசியதை தாரிகா சொல்லி விட்டு, மருந்தை பற்றி விவரித்தாள்.
ஸ்ரீ கண்கலங்க அர்ஜூனை பார்த்து அவனை தழுவி நன்றி சொல்ல நினைத்த தன் மனதை அடக்கிக் கொண்டு அவனையே பார்த்தாள்.
ஸ்ரீ அவனும் ரொம்ப கஷ்டப்பட்டான் என்று அவன் கையை தாரிகா பார்த்தாள்.
அவனுக்கு ஏற்கனவே அதே இடத்தில் தான் அடிபட்டது. இப்பொழுதுமா? ஏன் தாரி எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? எனக்காக என்னவெல்லாம் பார்த்து பார்த்து செய்கிறான். அடுத்த ஜென்மத்திலாவது அவனுடன் இருக்கும் பாக்கியம் எனக்கு வேண்டும் தாரி.
வேண்டாம் ஸ்ரீ.எதை பற்றியும் யோசிக்காதே. எல்லாம் முடிந்தது. அப்படியே விட்டு விடுவோம்.
விடவா? என்று விரக்தியாக சிரித்த ஸ்ரீ. நான் போட்டுக் கொள்கிறேன். உன்னால் தனியே நிவியை சமாளிக்க முடியுமா?
அதெல்லாம் அவன் புரிந்து கொள்வான்.
சரி தாரி. வா..உள்ளே செல்லலாம் என்று அவர்கள் கதவை திறக்க, அர்ஜூன் அவர்கள் முன் வந்து கதவை திறந்து உள்ளே சென்று சுற்றி பார்த்தான். அனைத்து சன்னலையும் அடைத்தான். பின் ஸ்ரீயிடம் நாங்க போன் செய்து உன்னை அழைத்தால் மட்டும் வெளியே வா என்று அவளது போனை வாங்க, அவள் அதை விடாமல் பிடித்தாள்.
அவன் அவளை என்னவென்று பார்த்தான். தேங்க்ஸ் அர்ஜூன்.
அவன் கொடு என்றான். போதும் அர்ஜூன். நீ ஓய்வெடு. ரொம்ப சோர்வா இருக்கடா.
நீங்க போன் செய்த பின்னே நான் கதவை திறக்கிறேன். நீ நேற்றிலிருந்து தூங்கவில்லை. கொஞ்ச நேரம் தான் ஓய்வெடுத்தாய். நீ போ. நல்லா தூங்கி எழுந்திரு.
இருக்கட்டும் ஸ்ரீ. நீ இந்த மருந்தை போட்டுக் கொள்வாயா?
கண்டிப்பா. ஆனா எனக்கு நிவியுடன் கொஞ்சநேரம் இருந்துட்டு மருந்து போட்டு தூங்குறேன்.அர்ஜூன் நான் அனைத்தையும் மறந்திடுவேன்.நீ என்னை பற்றி யோசித்து உன் உடம்பை கெடுத்துக் கொள்ளாதே! உன்னோட மூஞ்சியை கண்ணாடில பாரு. ரொம்ப டல்லா இருக்க என்று அவனருகே வந்து அவனது கன்னத்தை பிடித்து இழுத்து, இப்படி சிரிக்கணும் என்றாள் புன்னகையுடன்.
ஸ்ரீ என்று அவன் அணைத்துக் கொள்ள அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள். நான் நல்லா இருக்கேன்டா. நீ சமத்தா போய் தருணை பார்த்துக் கொண்டு தூங்கு.நீ தூங்கிய பின் தான் நான் தூங்குவேன் என்றாள்.
அவன் கண்ணீரை துடைத்து விட்டு, போ..என்று தருண் அறைக்குள் அவனை தள்ளினாள். அவன் புன்னகையுடன் உள்ளே வந்தான்.