ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 99.
புவனா, அவளது அப்பா முன் வந்தார் மருத்துவர்.
சாரி சார்..காப்பாத்த முடியல டாக்டர் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு புவனா அழுதாள். அவளது அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.
பிரதீப், தீனா அப்பா, நித்தி அப்பாவும் அவர் அருகே வந்தனர்.தீனா அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். அனைவரும் அழ, தருணிற்கும் விசயம் எட்டியது.
நான் அம்மாவை பார்க்கணும்..பார்க்கணும் என்று துடித்தான். யாராலும் சமாளிக்க முடியவில்லை தருணை.இதயா அங்கிருந்தவர்களிடம் பேசி அவனது அறைக்கு அவனது அம்மாவை எடுத்து சென்றாள். அவன் கதறுவதை பார்த்து அவனை அணைக்க இதயா,அம்மா நம்மள விட்டுட்டு போயிட்டாங்க அழுதான். அம்மா உன் கூடவே தான் இருப்பாங்க என்று அழுது கொண்டு தருண் உன்னால ஊருக்கு பயணமெல்லாம் முடியாது. நான் இப்பொழுது தான் டாக்டரிடம் பேசினேன்.அவன் அழுது கொண்டே என்னால் முடியும்.
இங்க பாரு தருண் என்று அவனது முகத்தை உயர்த்தி, எங்களுக்கு நீ வேண்டும். அப்பா, புவனாவை கொஞ்சம் நினைச்சு பாரு. அவ ரொம்ப அழுதுகிட்டு இருக்கா. இன்று முழுவதுமே அழுதது போல் தான் இருக்கிறாள். ப்ளீஸ்டா.. நீயும் இல்லாது அவங்க என்ன செய்வாங்க?
அர்ஜூன் எல்லாத்தையும் பார்த்துக்குவான். தயவு செய்து ஒத்துக் கொள். உனக்கு ஒன்று என்றால் என்னாலும் தாங்க முடியாதுடா என்று கண்ணீர் விட்டு மற்றவர்களை பார்க்க, அவர்கள் புரிந்து கொண்டு வெளியே அம்மாவை கொண்டு செல்ல, அவள் அவனை முத்தமிட்டு ஆரத்தழுவினாள். பின் அவனிடம், நீ அமைதியா இரு.நான் வாரேன் என்று வெளியே வந்தாள்.
புவனாவும் அவனது அப்பாவும் உள்ளே வந்தனர் அழுது கொண்டே, அண்ணா..அம்மா..என்று அழுதாள் புவனா. அவன் அமைதியாக அம்மா நம்ம கூட தான் இருப்பாங்க புவி. அப்பா புவியை கூட்டிட்டு ஊருக்கு போங்க.
தம்பி..என்றார். இதயா சொன்னா என்னால வர முடியாதாம். நீங்க பார்த்துக்கோங்கப்பா என்றான் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு. அவர் அவனை அணைக்க அவன் அழுது விட்டான்.
அப்பா..என்னை மன்னிச்சிருங்க. என்னால அம்மாவுக்கு செய்ய வேண்டியதை கூட செய்ய முடியல என்று தலையில் கை வைத்து அழுதான்.
அண்ணா, நீ அழாதேண்ணா. நாங்க அழல..என்று கண்ணீரை துடைத்து விட்டு,புவனா அவனை பார்த்தாள்.தருண் அவளை பக்கம் அழைத்து நெற்றியில் முத்தமிட்டு, நீ இனி தான் ரொம்ப ஸ்ராங்கா இருக்கணும்மா. கவனமா இரு.அண்ணா..சீக்கிரம் வாரேன். நீங்க இனி ஒரு மாதத்திற்கு இங்கே வர முடியாது என்றான் கவலையுடன்.
அண்ணா..என்று அழுதாள். நான் இப்பொழுது தானே சொன்னேன். அழக்கூடாது என்று கண்ணீரை துடைத்து விட்டான். பின் இவர்கள் வெளியே செல்ல, தருண் கண்ணிலிருந்து நீர் நிற்கவேயில்லை.
அம்மாவை ஊருக்கு அழைத்து செல்ல, அனைவரும் கிளம்பினார்கள். பிரதீப்,தீனா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, தருண் அறை முன் வந்து நின்றனர். இருவரும் ஒருவாரு உள்ளே சென்றனர்.அவன் அழுது கொண்டிருக்க, இருவரும் வந்திருப்பதை பார்த்து அண்ணா என்று பிரதீப்பையும், சார் என்று தீனாவையும் அழைத்தான்.
நீ அழாதேடா. நீ தான் தைரியமா இருக்கணும். நீயே அழுதா அப்பாவையும் புவியையும் யார் பார்த்துக் கொள்வது? நீ சரியாகி வா பிரதீப் கூறினான்.
அப்பாவையும் புவியையும் பற்றி கவலைப்படாதே! நாங்க எல்லாரும் இருக்கோம். நடக்க வேண்டியதை நாங்க பார்த்துக் கொள்கிறோம்.இருவரும் தீனாவை ஒரு மாதிரி பார்த்தனர்.
என்ன?
ஒன்றுமில்லை என்று மனதினுள், என்ன இவன் யாரையும் சுருக்கமாக பெயர் கூறி அழைக்க மாட்டானே? புவியா? என்று பிரதீப் அவனை பார்த்தான்.அவனது தோளில் தட்டி விட்டு கவனமா இரு என்று இருவரும் வெளியே வந்தனர்.
தீனா அவன் வண்டியில் அமர்ந்து இருக்க, அவனுக்கு புவியின் அழுகை கேட்டுக் கொண்டே இருந்தது. அகில் நண்பர்களும், இதயா குடும்பம்,கேரி, கைரவ் அங்கிருக்க, அர்ஜூன், இதயா இரண்டு பேரில் யாராவது ஒருவர் இங்கே இருக்கணும் நித்தி சொல்ல,
அங்கே வந்த ஸ்ரீ, அர்ஜூன் இங்கே இருக்கட்டும். இதயா நீ புவனாவிற்கு தேவை என்றாள்.தருணுக்கு துணையா அவன் இருக்கட்டும் என்றாள்.
ஸ்ரீ..என்று அகில் ஓடி வந்து, உன்னோட கைக்கு என்ன ஆச்சு? அவளது கையை பிடித்தான்.
உங்களுக்கு அவளோட கை மட்டும் தான் தெரியுதா சீனியர்? தாரிகா கூறிக் கொண்டே அர்ஜூனை பார்த்தாள்.பின் தான் அனைவரும் அவனது கையை பார்த்தனர்.
சைலேஷ், சந்துரூவும் அவளுடன் நின்றனர். நித்தி சைலேஷை பார்த்து, நீங்க வீட்டுக்கு போகலையா? நான் போன் செய்த போது வீட்டில் இருந்ததாக தானே சொன்னீர்கள்? ஏதும் பிரச்சனையா?என்று அவன் அருகே வர, கைரவும் அவனிடம் வந்தான்.
கேரி சந்துரூவை பார்த்து, ஹே..மச்சி என்று சந்தோசமாக அவனை அணைக்க, சந்துரூவும் அவனை அணைத்துக் கொண்டு, உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டா என்று அழுதான்.பின் அவன் இன்பாவை பார்த்தான்.
சைலேஷ் நித்தியை இறுக்கமாக அணைத்தான். இந்த சூழலில் அவனது அணைப்பு சரியாகபடவில்லை நித்திக்கு. அவனை விலக்கி அவனது முகம் நோக்கினாள். ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது அவளுக்கு. அவன் அருகே வந்து இப்பொழுது வேண்டாமே! இங்கு நிலைமை சரியில்லை என்றாள்.அவன் சட்டென விலகினான். அவனது கையை பிடித்து வருடினாள்.
ஸ்ரீ உனக்கு ஒன்றுமில்லையே? அனைவரும் அவளருகே வந்து அவளை விசாரித்தனர்.அவள் ஏதும் நடக்காதது போல் சகஜமாகவே பேசினாள்.
அர்ஜூன் நீ தருணை பார்த்துக் கொள். நான் நிவியுடன் இருக்கேன் என்றாள் ஸ்ரீ. வாங்க நாம் செல்லலாம் என்று அகில், நித்தி, யாசு,கவின், பிரதீப் சொல்ல துகிராவும் ஆதேஷும் அவர்களை பார்த்து நாங்களும் வரவா? கேட்டனர்.
நோ..என்றாள் யாசு.இதை அனைத்தையும் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான் தீனா.
ஸ்ரீயா? என்று அதிர்ந்தான். அவன் பேச நினைத்தான். அவளுடன் பேசினால் இவர்களது விசயம் தெரியாமல் போய் விடும் என்று மீண்டும் வண்டிக்கே சென்றான். அவனுள் பல எண்ணங்கள். அனைவர் முகமும் அழுது வெளுத்திருந்தது நன்றாக தெரிந்தது. எதுவும் தெரியாதது போல் வண்டியில் கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.
கவின் தாரிகாவை பார்த்து கண்ணால் அழைத்தான்.பின் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, கவனமா இருங்க என்று கூற அவளும் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஸ்ரீ பார்த்து இருங்கள் என்று கவின் மிகுந்த அக்கறையுடன் கூற, மற்றவர்கள் அவனை பார்த்தனர்.
ஹாஸ்பிட்டலில் அர்ஜூனும் கைரவும் தருணுடன் இருக்க, ஸ்ரீயும் தாரிகாவும் நிவாஸ் அறையில் இருந்தனர். சைலேஷ், சந்துரூ அவரவர் வீட்டிற்கு செல்ல, இதயா குடும்பமும், கேரி வந்த வேலைக்காக அவனும் அவர்களுடன் ஊருக்கு கிளம்பினார்கள்.
தீனாவை பார்த்தவர்கள், சார்..நீங்க கிளம்பலையா? என்றும் கேட்டனர். வாங்க போகலாம் என்று அவர்களை அழைத்தான். அகில் நண்பர்கள் அவனுடன் செல்ல, சைலேஷ் வீட்டிற்கு சென்று கேரி அவனது பொருட்களை எடுத்துக் கொண்டும், இதயா வீட்டில் அனைவரும் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிரதீப்புடன் கிளம்பினார்கள்.
தாரிகா அவள் அம்மாவிடம் நடந்ததை கூறி இருப்பாள். அவரும் வந்து தருணை பார்த்து விட்டு ஸ்ரீயை பார்க்க, அவள் மனதில் கஷ்டப்படுகிறாள் என்று புரிந்து ஏதும் சொல்லி அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து தாரிகாவிடம் சொல்லி விட்டு சென்றார்.
தீனா புவனா மீது வைத்திருந்த பார்வையை அவனுடன் வேலை செய்பவர்கள் தவறாக அவனது அப்பாவிடம் கோர்த்து விட்டனர். அதை கவனிக்க தான் வந்திருப்பார் தருண் அம்மாவுடன். அவர்கள் கூறியது போலவே தீனாவின் பார்வை புவனா மீது இருப்பதை பார்த்தார். அவரும் அவனுடைய காதலை அறியாது அதை காமமாக நினைத்துக் கொண்டார். அவர் எதையோ யோசித்துக் கொண்டே சென்றார். அவள் அருகே தான் அவரும் இருந்தார். அவள் பார்வை யார் மீதும் விழவில்லை என்பதை நன்றாக புரிந்தது. அவளுக்கு தன் மகன் மீது விருப்பமில்லை என்று அவராகவே தீர்மானித்துக் கொண்டார்.
முதலில் அம்மாவுடன் சென்ற அனைவரும் ஊருக்கு செல்ல, பின்னே தீனா, அகில் நண்பர்கள் சென்றனர்.அதன் பின் தான் பிரதீப் இதயா குடும்பத்துடன் உள்ளே நுழைந்தான்.
கேரியை மட்டும் பிரதீப் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பாப்பாவிற்கு தேவையானதை தயார் செய்து கொடுத்தான். கேரிக்கு கிராமம் புதியது. அவன் வெளிநாட்டில் உள்ள கிராமப்பகுதிக்கு கூட சென்றிருக்கமாட்டான்.
தருண் வீட்டில் ஊரார் அனைவரும் குழுமி இருக்க, இதயா குடும்பத்தை தருண் அப்பா கூட எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தருணுடன் இருப்பார்கள் என்று தான் நினைத்திருந்தார்.
இதயாவும் இன்பாவும் வந்ததும் புவனா அருகே தான் சென்றார்கள். ஊரே இருந்தாலும் அவளுக்கு துணையாக யாரும் நிற்கவில்லை. பக்கத்தில் ஜானுவும் இருந்தாள். இன்பாவிற்கு, புவனாவிற்கு நீங்கள் தேவை என்று ஸ்ரீ கூறியதை நினைத்து, சரியாக அனுமானித்திருக்கிறாளே? என்று ஸ்ரீயை நினைத்து பெருமையாக இருந்தது.
ஊர் முழுவதும் அங்கு தான் இருந்தது. ஏற்கனவே உடல் நலமில்லாதவர் என்பதால் சீக்கிரம் எடுக்க முடிவு செய்து, வேலை தொடங்கி இருந்தது. பசங்க வெளியே இருக்க,தீனா குடும்பம் முழுவதும் அங்கு தான் இருந்தார்கள். அவனுடைய அப்பாவும் அங்கு தான் இருந்தார். தீனா யார் வீட்டிற்கு சென்றாலும் வெகுநேரம் இருக்க மாட்டான். ஆனால் வந்ததிலிருந்து வீட்டிற்கு கூட செல்லாமல் தன் மகனை அதிசயித்து பார்த்தவர். அவன் கண்ணீரை மட்டும் கவனிக்கவில்லை.
அங்கு வந்த ஒருவனை பார்த்து ஊரார் மரியாதையுடன் வழி விட்டனர்.பணத்திற்கான மதிப்பு மட்டும் என்பது நன்றாக தெரிந்தது.அந்த பெண்மணியும், அந்த இளைஞனும் சென்ற பின் அவர்களை பற்றி அவதூறாக பேசினர்.
அந்த பெண்மணி உள்ளே வந்து புவனாவிடம் தன் ஒப்பாரியை ஆரம்பித்தார்.
மதினி..பொண்ணை என் பிள்ளைக்கு முடிச்சு விடாம போய் சேர்ந்துட்டியே? இப்ப என்ன தான் செய்றது?உன் பிள்ள வேற பட்டணத்துல குத்துயிறும் கொலையுறுமா இருக்கானே. அவனும் போய்டான்னா என் மருமவள..யார் பார்த்துப்பா.. புலம்ப, தருண் அப்பா மேலும் கண்ணீர் விட, இதயாவும் இன்பாவும் அந்த பொம்பளைய கொலைவெறியுடன் முறைத்தனர்.
அது பத்தாது என்று அந்த இளைஞன் அர்தீஸ் வேறு புவனாவிற்கு ஆறுதல் கூறுகிறேன் என்று அவளை தடவ, வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த தீனா கோபத்தின் உச்சிக்கே போனான்.
இதயா எழுந்து, நாங்க வரும் போது நீங்க எல்லாரும் பேசியதை கேட்டோம். நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியணுமா? நான் இந்த வீட்டு பையனுக்கு பதில் தான் வந்திருக்கேன். புரியலயா? இந்த வீட்டு மருமகளா வந்திருக்கேன். தருண் இடத்துல இருந்து நான் செய்ய வேண்டிய முதல் வேலை என்றவள் அர்தீஸை முறைத்தவாறு அவனை நெருங்கி அவனது கையை பிடித்து இழுத்து திருப்பி உடைத்தாள். அவன் வலி தாங்க முடியாமல் கத்தினான்.
உனக்கு எவ்வளவு தைரியம்னா புவி மேல கையை வைப்ப என்று மீண்டும் அவனது மறுகையை பிடிக்க,
அண்ணி, வேண்டாம்..வேண்டாம்..என்று தடுத்தாள் புவனா.
ஏன்டி, என் பிள்ள மேலையே கையை வைச்சுட்ட? அவன் யாரு தெரியுமா?
தெரியுது.பொறுக்கி..பொறம்போக்கு தான? இத்தனை பேர் முன்னாடி கை வைக்கிறான்ல அப்பவே தெரியலையா? என்று இன்பா எழுந்தாள். ஜானு வாயை பிளந்து கொண்டு இருவரையும் பார்த்தாள். அவள் மட்டுமா? அங்கிருந்தவர்கள் அனைவரும் தான்.
அவ இருக்கிற கஷ்டத்துல வந்து ஆறுதல் சொல்லிட்டு போகுற விட்டுட்டு. இஷ்டத்துக்கு பேசுற என்று அந்த பொம்பளையை வெளியே இழுத்து வந்தாள். ஆம்பளங்க முதற்கொண்டு அவளை வினோதமாக பார்த்தனர்.இதயாவும் அவனை வெளியே இழுத்து வந்தாள்.
இதயா அவனை விட்டு அக்கா நகரு என்றவள், என்ன சொன்ன? என்னோட தருண் குத்துயிரும் கொலயுருமா இருக்கானா? ம்ம்..சரி தான். ஆமா அவன் அப்படி தான் இருக்கான். அவன் போவானா? எங்க போவான்? எப்படி போவான்?
நான் வேணும்ன்னா உனக்கு போற ரூட்டை காட்டவா? கத்திக் கொண்டே இதயா அந்த பொம்பள கழுத்தை பிடித்தாள்.
நித்தி, யாசு அவளை பிடித்து இழுத்து அவங்க யாருன்னு தெரியுமா?
யாரா இருந்தா என்ன? என்னோட தருண் செத்துடுவான்னு சொல்றாங்க? புவியை அந்த பரதேசி தொடுறான்? யாரும் கேட்காம வேடிக்கை பாக்குறீங்க? மவனே இனி என்னோட குடும்பத்துக்குள்ள வந்த செத்தடா..என்று அவனை பிடித்து தள்ளினாள் இதயா.
அய்யோ நிறுத்துங்க..அவங்க பக்கத்து ஊரு தலைவரோட குடும்பம் அங்கிருந்த ஒரு பெண்மணி கூற,
அதுக்கு..என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்களா? என்று பிரதீப், தீனாவை பார்த்தாள். பிரதீப்பிடம் சென்ற இன்பா, உங்க ஜானுவை அவன் தொட்டா சும்மா விடுவீங்களா? கேட்டாள். அவனுக்கும் கோபம் இருந்திருக்கும். ஆனால் பேச முடியாத நிலை. பிரதீப் அவ்வப்போது வெளியே ஊருக்கு சென்று வருவான். அப்போது ஜானு தனியே தான் இருப்பாள். காலை நேரமென்றாலும் பெண் பிள்ளையாயிற்றே?அதனால் தான் பொறுத்திருப்பான்.
அட,கிரேட் போலீஸ்சார்..இங்க தான இருக்கீங்க? என்று தீனாவை உற்றுப்பார்த்தாள் இன்பா. கோபமுடன் கண்கள் சிவந்து தான் நின்றிருப்பான். ஹாஸ்பிட்டலில் புவிக்காக தீனா கலங்கியதை கவனித்து தானே இருந்தனர் அனைவரும்.அவன் அப்பா பேச்சை அப்படியே கேட்பவன் என்பதால் அவர்களை தீனா பகைத்துக் கொள்ளவில்லை.
இத்தனை நாளாய் அவனுக்கு புவி தங்கையின் தோழி மட்டும் தானே! ஆனால் தற்பொழுது தான் காதலிக்க ஆரம்பித்து விட்டானே?
என்ன சார்? உங்களுக்கு எப்படி? ஏற்கனவே கோபமா தான் இருந்தீர்கள் போல.அது வந்து சார் என்று அவன் முன் வந்து, அவளை அவன் எப்படி பார்த்தான் தெரியுமா? விட்டால் விழுங்கி விடுவான் போல என்று அவள் பேச, அபி இன்பா வாயை மூடினான்.
இன்பா அபி கையை கடித்து விட,.ஷ்..ஆ..என்றான் அபி.
அச்சோ சாரி அபி. வலிக்குதா? உனக்கு மருந்து அப்புறம் போடலாம்.
விட்டதை தொடர்ந்தாள் இன்பா தீனாவிடம். முதல்ல அவளது கழுத்து பக்கம் கையை கொண்டு போனான். அப்புறம் சார் கீழிறங்கி தோள்பட்டையில் அவன் கைகள் சென்றது. பின் அவளது அவளது..என்று இன்பா இழுத்துக் கொண்டே தீனாவிடம் சொல்ல வர அவன் அவளை முறைத்தான்.
ஏன் சார் முறைக்கிறீங்க? அவன் செய்ததை தான் சொன்னேன். வேணும்னா மாதிரி சேம்பிள் பாக்குறீங்களா? புவி இங்க வாயேன். உன்னை இந்த பொறம்போக்கு தொடணுமாம்.
அர்தீஸிடம் போடா.. இதுக்கு மேல நாங்க தடுக்கல. அவள என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ? சொன்ன நிமிடத்தில் அவன் உள்ளே செல்ல, இன்பா திமிறாக தீனாவை பார்த்தாள்.
தீனா கொந்தளித்து தன் மேல் பட்டன் இரண்டை கழற்றியவாறு உள்ளே சென்றான். காலரை தூக்கி விட்டவன் புவனா மீது அவன் கை வைக்க, புவனா பயத்தில் மயங்கினாள். அவளை ஒரு கையில் தாங்கிய தீனா, உள்ளே வந்த இதயாவிடம் புவனாவை விட்டு அவனது மறுகையை பிடித்து வெளியே சென்று அவனை அடிக்க கையை ஓங்கினான்.
என்னடா பண்ற? உனக்கு புத்தி கழண்டு போச்சா? தீனா அப்பா அவன் முன் வந்து தடுத்தார். இன்பா தீனாவை பார்க்க அவனோ இல்லப்பா..இப்ப தான் நான் சரி பண்ணப்போறேன் என்று அவனை அடிக்க, இடையே வந்த பிரதீப்பும் அவனுடன் சேர, அவனை அடித்து போட்டனர் இருவரும்.
ஏய்..உங்கள சும்மா விட மாட்டோம்டா அவனது அம்மா கர்ஜிக்க, இன்பா அந்த பெண்மணி கன்னத்தில் ஓங்கி அறை விட்டாள்.
என்ன செய்வ? இதுக்கு மேல யாராவது அவளையோ, எங்க அங்கிளையோ தொந்தரவு பண்ணீங்கன்னா அவ்வளவு தான் என்று நாக்கை மடித்து மிரட்டினாள்.
ஏம்மா பொண்ணு. நீ தப்பு பண்ணீட்ட? அந்த பொம்பள கத்தினாள்.
போம்மா..நான் என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும் என்று இன்பா உள்ளே சென்று அவளது பையை திறந்து ஒரு மருந்து எடுத்து வந்து போட்டுக்கோ என்று அபியிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.
வெளியே வந்த அபியிடம் அவன் அம்மா, யாருடா அந்த பொண்ணு? நம்ம பிரதீப்புக்கு சரியா இருப்பால. அழகா இருக்காடா.அவன் தலையில் கை வைத்து போம்மா.. என்றான்.
ஏன்டா? என்று அம்மா அபியை பார்த்துக் கொண்டே சென்றார்.பிரதீப் அவனிடம் வந்தான்.
மாமா என் காதலுக்கு நீயே எதிரி ஆகிடுவ போல? அபி கேட்க,
அவனருகே வந்த அவர்களது அப்பத்தா யாருடா அவ? இம்முட்டு அழகா இருக்கா? நல்லா பேசுறா? நம்ம தீனா கூட அந்த பொண்ணுக்காக தான சண்டை போட்டான். நம்ம தீனாவுக்கு பொருத்தமா இருப்பாள? கேட்டார்.
அட மாமாக்களா, வெளியேல்லாம் எனக்கு போட்டிக்கு ஆள் தேவையில்லை.நீங்களே போதும் என்று அபி புலம்பினான்.
நான் என்ன சொல்றேன்? நீ என்னடா பேராண்டி சொல்ற?அவன் தலையில் அடித்துக் கொண்டான். புவனா விழித்து மீண்டும் அழுதாள்.
மாமா இங்க பாருங்க, எப்படி கடிச்சு வைச்சிருக்காங்க? என்னோட அம்மா என்ன பேசிட்டு போறாங்க? பாருங்க. என் மேல யாருக்கும் அக்கறை இல்லை அபி கூற,
அக்கறை இல்லாமலா? பிரின்சஸ் மருந்து கொடுத்துட்டு போறா? கேரி கேட்டான்.
அவங்களுக்கு என் மேல அக்கறை இருக்கா? என்று சிரிக்க, பிரதீப் அவனது தலையில் தட்டி எங்கே நின்று சிரிக்கிறாய்?
சாரி மாமா என்று அமர்ந்து மருந்தை போட்டுக் கொண்டான் அபி. அகிலும் கவினும் தனியே இருக்க நித்தி, யாசு அங்கே வந்தனர். நித்தி அப்பா அவர்களிடம் நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க? பெரியவங்கலாம் இருக்காங்கள?
இல்லப்பா. நாங்களும் இருக்கோம். ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. தருணால அவங்க அம்மாவுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாதுல்லப்பா அழுதாள் நித்தி. யாசு அவளை அணைக்க,
சரி இருங்க. அந்த பொண்ணு யாரும்மா?
யாருப்பா?
அதான் பயங்கரம்மா தீனா தம்பியை உசுப்பேத்தியதே அந்த பொண்ணு?
அவங்க மேம்பா என்றாள்.
அட..டீச்சராம்மா. அதான் பிள்ள கரெக்டா பேசுது? ஆனால் அடி தான் பயங்கரம்மா.அவனுக என்ன பிரச்சனை கொண்டு வரப் போறானுகளோ?
அவர்கள் பேசுவதை கேட்டு இன்பா, டீச்சர் என்று பரவியது. அபி அதற்கும் அடித்துக் கொண்டான்.