ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 98.
தீனா துகிரா அருகே அமர்ந்து, அவள் தூங்குவதை பார்த்தான். அவனுக்கு புவி அழுகை, அவளது நெருக்கம் தான் நினைவிற்கு வந்தது. அவன் துகிராவையே பார்த்துக் கொண்டிருப்பதை தருண் அறையிலிருந்து வெளியே வந்த புவனா பார்த்து மனதினுள் அவருக்கு அவங்களை தான் பிடித்திருக்கிறது என்று நினைத்தாள்.
அங்கு யாருமில்லாமல் இருக்க, அவளது அப்பாவை தேடினாள்.அவர் மருத்துவரை பார்க்க சென்றிருப்பார். அங்கேயே அமர்ந்து தீனாவை பார்த்தவள் அதற்கு மேல் முடியாது என்று கண்ணை மூடி தலை சாய்த்திருந்தாள்.
தருண் அப்பா அங்கே வந்து,புவிம்மா என்று அவளது தலையை கோதினார். அப்பொழுது தான் அவள் அங்கே இருந்ததை பார்த்தான் தீனா.
அப்பா என்று அவரது தோளில் சாய்ந்தவள், அப்பா நான் அண்ணாவுடன் இருக்கவா? ப்ளீஸ்ப்பா..
அம்மா உன்னை கேட்பாளேம்மா.
அண்ணா பக்கத்துல இருக்கன்னும் போல இருக்குப்பா.
ஸ்கூலுக்கு போகணுமேடா?
ஆமாப்பா. அவனும் திட்டுவான்பா.
அண்ணா சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திருவான்டா.
அவள் தலையசைத்து, அவர் மடியில் சாய்ந்து கொள்ள கண்ணீருடன் அமர்ந்திருந்தார் தருண் அப்பா.
தீனா புவியை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஆனால் அவளுக்கு நாம் எதற்கு அவரை பற்றி யோசிக்கிறோம்? அவருக்கு தான் வேற பொண்னை பிடிச்சிருக்கே? துகிராவை பார்த்தவாறு கண்ணை மூடினாள்.தருண் அப்பாவும் தீனா புவியை பார்ப்பதை கவனித்தார்.
இன்பா குட்டிப் பாப்பாவிடம் பேசிக் கொண்டே நடந்தாள். ஜானு திடீரென முன் வந்து நிற்க பயந்து பின் நகர்ந்தாள். அபி அந்த பக்கம் தான் வந்தான்.
நீங்க எதுக்கு என்னோட மாமா கையை பிடிச்சீங்க? ஜானு கேட்க,
அதுவா..அவன் பூதத்திற்கு பயப்படமாட்டான் என்று தான் பிடித்தேன் என்று கிண்டலாக பேசினாள்.
ஜானு கோபத்தில் இன்பா கையை பிடித்து வேகமாக இழுத்தாள். இன்பா தடுமாறி கீழே விழுவதற்குள் கேரி பிடிக்க வந்தான். அதையும் தடுக்க ஜானு கேரி முன் வந்து நின்றாள்.
அபி அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவன் இன்பாவை பிடித்தான்.மாமா என்று ஜானு கத்த, குழந்தை பயத்தில் எம்பி நழுவியது.
ஹே..பாப்பா என்று இன்பா குரல் கொடுக்க, அவளை விட்டு குழந்தையை பிடித்தபடி அவன் கீழே விழுந்தான்.
கேரி பதறி பாப்பாவிடம் வந்தான்.
அடப்பாவிகளா? என்று கீழே விழுந்த இன்பா எழுந்தாள்.
பிடிச்சேல. ஏன்டா விட்ட? அபியிடம் கத்தினாள்.
பாப்பா என்று அபி பாவம் போல் கூற, பாப்பாவை பிடித்தால் என்னை கீழே விட்டு விடுவாயா?
இல்ல மேம்.
என்ன இல்ல?
கேரி இருவரையும் பார்த்து, வா..பிரின்சஸ் போதும். அவனை விடு என்று கேரி அவனாக தலையை கொடுத்தான்.
அவன் பக்கம் திரும்பிய இன்பா, நீ பேசாத? வேடிக்கை பார்த்த நீயெல்லாம் பேசக் கூடாது.
பிரின்சஸ்..இழுத்தான் கேரி.
ஒரு நிமிஷம்..நீங்க மாமா கீழ விட்டதுக்காக திட்டுறீங்களா?இல்ல உங்க ப்ரெண்டு உங்களை பிடிக்கலைன்னு திட்டுறீங்களா? ஜானு கேட்டாள்.
நான் எங்கே திட்டினேன்? நான் பேசிக் கொண்டு தான் இருக்கேன் என்றாள் இன்பா.
ஜானு வாயில் கை வைத்து நின்றாள். அபியும் கேரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பாப்பா அழ, அபி பாப்பாவை தூக்கிக் கொண்டு எழுந்தான். குழந்தை அபியை பார்த்து கிளுக்கி சிரித்தது. நடந்ததை மறந்து அவன் குழந்தையுடன் ஒன்றிப் போனான். இன்பா அவனை பார்த்துக் கொண்டிருக்க, கேரி அவளருகே வந்து, சைலேஷ் கூறியது இவன் தானா?
அவன் என்ன கூறினான்?
உனக்கு சரியாக இருப்பானாம் சைலு கூறினான். அவள் மீண்டும் அபியை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
அனைவரும் உள்ளே செல்ல, அபியும் கேரியும் மட்டும் வெளியே இருக்க,கேரி அபியிடம்
பிரின்சஸை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம்.
அபி அவனை பார்த்து, அதை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.
என்னை உனக்கு தெரியுமா?
ம்ம்..நல்லா தெரியும்.அவங்க பின்னாடியே சுத்தி காதலை சொல்லி ரிஜக்ட் ஆனவங்க தானே?
தெரிஞ்சு வைச்சிருக்கியே? இப்ப எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுமா?
தெரியும். எங்களுக்கு பிஸினல்ல கெல்ப் பண்ண?
அவனை பார்த்து புன்னகையுடன், அதற்கு தான் வந்தேன். ஆனால் போகும் போது பிரின்சஸ் கூட தான் செல்வேன்.
அபி அவனை முறைத்தான்.
முறைக்காத லிட்டில் பாய்.அவளை என்னோட பொண்டாட்டியா கூட்டிட்டு போவேன்.
ட்ரை பண்ணுங்க பார்ப்போம் என்றான் அபி குறுஞ்சிரிப்புடன்.
உனக்கு கோபம் வரலையா?
அவங்க உங்களுக்கு பிரின்சஸ் மட்டும் தான். அவங்க இந்த ராஜாவோட ராணி என்றான் காலரை தூக்கி விட்ட அபியை பார்த்து பிரம்பித்து நின்றான் கேரி.
அவள் உன்னோட பெரியவ..உங்க வீட்ல ஒத்துக்கலைன்னா?
நான் ஒத்துக் கொள்ள வைப்பேன் என்று உறுதியாக கூறி விட்டு , பாப்பாவுக்கு சாப்பிட எடுத்து வாங்க என்று அவன் உள்ளே சென்றான்.
இவன் என்ன இவ்வளவு உறுதியா பேசுறான்? ஒரு வேளை இன்பா அவனிடம் விழுந்து விடுவாளோ?
நோ..நோ..என்று தலையை சிலுப்பி கொண்டு காரை நோக்கி நடந்தான் கேரி.
உள்ளே பாப்பா சிரிப்பில் அனைவர் மனமும் பாப்பா பக்கம் சென்றது.பாப்பா சிரிப்பு சத்தம் கேட்டு துகிரா எழுந்தாள். புவனா அபியிடம் சென்று பாப்பாவை வாங்கி கொஞ்சிக் கொண்டிருந்தாள் மகிழ்வுடன்.
துகிரா எழுந்ததை பார்த்த தீனா, வெளியே சென்று ஒரு ஆடையுள்ள பார்சலை எடுத்து துகிராவிடம் கொடுத்தான். இதை பார்த்து புவனா, அவளுக்கு வாங்கிக் கொடுத்தது போல் தான் அவளுக்கும் வாங்கிக் கொடுக்கிறான் என்று நினைத்தாள். வழுக்கட்டாயமாக மனதை அடக்கி பாப்பாவிடம் லயித்தாள்.
துகிராவிடம் கொடுத்து, உன்னுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு விட்டேன். சாரி என்று கொடுத்து விட்டு அமர்ந்தான்.அவனுக்கு போன் வந்தது.
வாட்? என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க? சொல்லிட்டு தானே வந்தேன் ஆக்ரோசமாக கத்தினான்.அனைவரும் தீனாவை பார்த்தனர்.
அப்பாவா? டாக்டர் சாரா? வராங்களா?
எப்படி அமைதியா இருக்க சொல்றீங்க? மீண்டும் கத்தினான்.
அந்த பக்கம் பேசியவர்கள் சொன்னதை கேட்டு போனை துண்டித்து அமர்ந்தான். புவியை பார்த்தான். அவள் சிரித்தவாறு குழந்தையிடம் உரையாடிக் கொண்டிருந்திருப்பாள்.அதே புன்னகை மாறாது அவனை பார்க்க அவனுக்கு மனது கனமானது.
போனை மீண்டும் எடுத்து, அவனது அப்பாவிடம் பேசினான். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடுவோம் என்றார் அவர்.
போனை வைத்து விட்டு, தருண் அப்பா அருகே சென்று அமர்ந்தான்.அவரும் அவனை பார்த்தார்.
அங்கிள், ஆன்ட்டி..ஆன்ட்டி..என்று தயங்கினான்,
என்னப்பா? அவள் புவியை பார்க்க பிடிவாதம் செய்கிறாளா? கேட்டார். புவனா அதை பார்த்து பாப்பாவை அவர்களிடம் கொடுத்து விட்டு தீனா அருகே வந்தாள்.
இல்லை அங்கிள்.அவங்களுக்கு தருணிற்கு ஏற்பட்ட விபத்து பற்றி தெரிந்து, பார்க்க நினைத்து ரொம்ப எமோசனலாகி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டாராம். அவங்க மூச்சு விட முடியாம..என்று புவனாவை பார்த்தான்.
அவரோ முகமெங்கும் பதட்டம்.ஆக்சிஜன் வைச்சு இங்க தான் அழைத்து வந்துகிட்டு இருக்காங்களாம். அவங்களை காப்பாற்றுவது கஷ்டம்னு கேசவன் அங்கிள் சொன்னாராம்.
என்ன சொல்றீங்க தம்பி. அவளுக்கு ஒன்றுமிருக்காது.. ஒன்றுமிருக்காது என்று புவனாவை பார்த்து,
புவிம்மா..அம்மாக்கு ஒன்றுமிருக்காதும்மா அவர் அழுதார். புவனா நம்ப முடியாதது போல் தீனா அருகே வந்து,
நீங்க சும்மா தான சொல்றீங்க? என்னோட அம்மாவுக்கு ஒன்றுமில்லை தான? அவன் கண்கள் கலங்க உண்மை தான். வெடித்து அழ ஆரம்பித்தாள்.ஜானு அவளிடம் ஓடி வந்து,புவி அம்மாவிற்கு ஒன்றுமிருக்காது..அவளை அணைக்க,
அவளை தள்ளி விட்டு தேம்பி தேம்பி அழுதாள். அவள் அப்பாவும் அழ அங்கிருந்த செவிலியர்,
எதுக்கு பேசண்ட்சை தொந்தரவு பண்றீங்க?
அவளது அப்பா மனதில் அழுது கொண்டு அங்கேயே சாய்ந்து அமைதியாக,புவனா முடியாமல் அழுது கரைந்து கொண்டிருக்க, தீனா அங்கிருப்பவர்களை பற்றி கூட யோசிக்காது புவனாவை அணைத்து அழாதே..அழாதே..என்று கண்ணீர் வடித்தான்.ஜானு அவனை பார்த்து அதிர்ந்தாள்.புவி அவன் மீது வாகாக சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
ஜானு தீனா அருகே வந்து அவனை முறைத்துக் கொண்டு, அவனை அவளிடமிருந்து பிரித்து தீனாவை தள்ளி விட்டு, அவள் புவனாவை அணைத்தாள். மற்ற பொண்ணுங்களும் அங்கே வந்து ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டனர்.
அப்பொழுது தான் ஜானு யோசித்தாள். அண்ணா எங்கே? என்று, கைரவும் சத்தம் கேட்டு வந்தவன் என்னுடைய அண்ணனும் காணோம்.சந்துரூ என்று சுற்றி பார்த்தாள் இன்பா.
எல்லாரும் எங்கே போனாங்க?
அர்ஜூனும் இல்லையா? கவின் வந்தான். கவின் அர்ஜூனுக்கும்,நித்தி சைலேஷிற்கும், இன்பா சந்துரூவிற்கும் போன் செய்தனர். மூவருக்கும் ஒரே நேரத்தில் போன் வரவே மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் எடுத்தனர்.
நித்தியும் இன்பாவும் கோபமாக,சொல்லாம எங்க போனீங்க? கத்தினார்கள்.கவின் மட்டும் அமைதியாக அர்ஜூனிடம் பேசினான். இது தீனாவிற்கு சந்தேகத்தை உண்டாக்கியது. பிரதீப்பிற்கு அவன் போன் செய்தான்.
நான் வெளியே இருக்கிறேன் பிரதீப் கூற, அதான் எங்க இருக்க? நான் கூப்பிட வாரேன் என்று தருண் அம்மாவை பற்றி அவன் கூற, நானே வருகிறேன் என்று கிளம்பினான் பிரதீப்.
அண்ணா என்று அர்ஜூன் எழ, தருணுக்கு தெரிந்தால் என்று அர்ஜூன் பயப்பட ஸ்ரீயும் தாரிகாவும் என்னவென்று கேட்டனர்.
அங்கிருந்த பொருட்களை நான் என்னுடைய லேப் பேக்கில் எடுத்துக் கொள்கிறேன்.நான் தினமும் எடுத்து செல்வதால் யாருக்கும் சந்தேகம் வராது என்றான். அவர்கள் அங்கிருந்து கிளம்ப, நாங்களும் வருகிறோம் என்று ஸ்ரீயும் தாரிகாவும் வந்தனர்.
முடியாது. இங்கேயே இருங்க அர்ஜூன் கூறினான்.
அர்ஜூன், அவங்களும் வரட்டும். தனியே அவர்களை விட்டுச் செல்வது சரி வராது என்றான் சந்துரூ. மற்றவர்களும் கூற, ஸ்ரீயும் தாரிகாவும் கிளம்பினர்.அவர்களையும் அர்ஜூன் தன் பையையும் காரில் விட்டு உள்ளே சென்றனர்.
ஸ்ரீயை பார்த்து தாரிகா இன்னும் ஆச்சர்யமுடன் தான் இருந்தாள். இவ மனுசி தானா? அவளாள இத எப்படி தாங்க முடிஞ்சது? நினைத்தாள்.
புவனா அழுவதை தாங்க முடியாதவனாக ஒன்றும் செய்ய முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தீனா. அங்கே புவனாவின் அம்மாவை கொண்டு வந்தனர். அவள் மேலும் அழ, துகிராவிற்கு புவனாவை பார்க்கும் போது அவளையே பார்ப்பது போல் இருந்தது.அவள் புவனாவிடம் வந்து அவளை ஆறுதலளிக்கும் விதத்தில் அணைக்க, அவள் துகிராவை தள்ளி விட்டாள். அப்பொழுது தான் அர்ஜூனும் மற்றவர்களும் வந்தனர்.
துகிரா விழுந்ததை பார்த்து ஆதேஷ் ஓடி வர, அதற்குள் பிரதீப் அவளை தூக்கி விட்டான். அவள் அழுது கொண்டே, எனக்கு என்னையே பார்ப்பது போல இருக்கு. என்னோட அம்மாவும் என்று கட்டிக் கொண்டு அழுதாள்.
ஆதேஷ் அருகே வந்து இருவரையும் பார்த்தான். அவனை பார்த்த பிரதீப் அவளை அவனிடம் விட்டுட்டு தருண் அப்பாவிடம் சென்றான். லேசாக கதவு திறந்திருக்க, உள்ளே தருணிற்கு புவனாவின் அழும் சத்தம் கேட்டது.
இதயா அம்மா உள்ளே இருக்க, இதயா முதலாக அவனது அம்மாவை பார்க்கிறாள். அவள் உறைந்து இருக்க, அம்மா அவனை சமாளிக்க பார்த்தார். ஆனால் முடியாது உண்மையை கூறினார்.
அவன் எழ முயன்றான். அவனால் முடியாமல் அவனும் கத்திக் கொண்டிருந்தான். அவன் சத்தம் கேட்டு அர்ஜூன், கவின்,அகில்,அபி அவனிடம் வந்தனர்.
தருண் வேண்டாம்டா..அம்மாவுக்கு ஒன்றுமில்லை அவனை தடுக்க, அவர்களது அம்மாவை வெளியே கொண்டு வந்தனர்.