ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 95.

புவனா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுதும் தீனா பார்வை அவள் மீது தான் இருந்தது. தருண் போனிற்கு மேசேஜ் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே அதை எடுத்தாள். அதில் ஒரு வீடியோ இருந்தது. அப்படியே உறைந்து பார்த்தாள். மூச்சு விட சிரமமானது. அது தருணை கார் மோதிய கோர சம்பவம்.அபியை தள்ளி தருண் காரினிடையே வர, அவனை தூக்கி அடித்தது கார். அவன் தூரத்தில் சென்று விழுந்தான். இரத்தம் சிதற அவன் விழுவதை பார்த்த தங்கை புவியால் மூச்சு விட முடியவில்லை. திணறிய புவனா கையிலிருந்து போன் ஜானு மீது விழுந்தது.

ஜானு பதறி புவனாவை பார்த்து, புவி என்னாச்சு? என்னடி ஆச்சு?

அண்ணா..அண்ணா..ப்ளட்..ப்ளட்..என்று மூச்சு வாங்கினாள்.தீனாவும் அவனது ஆட்களும் ஓடி வந்தனர்.

ஹேய்..என்ன? என்ன? என்று அவளை பிடித்து உலுக்கினான்.

அவனை பார்த்து,சா..சா..சார்..அ..அண்ணா..மூச்சு வாங்கினாள்.

ஜானு தண்ணி எடு..எடு..கத்தினான் தீனா. அனைவரும் அவர்களை பார்க்க, அவனது உடல் நடுங்க, அண்ணா.. அண்ணா..

அண்ணாவிற்கு ஒன்றுமில்லை..ஒன்றுமில்லை என்று அவளை அணைத்தான். பின் ஜானுவிடம் தண்ணீரை வாங்கி கொடுத்தான். அவள் மூச்சு சீரானது. அவன் கண்ணில் கண்ணீர். அதை தொட்டுப் பார்த்து விட்டு, அவளை பார்த்தான். மூச்சு சீரானாலும் அண்ணா.. அண்ணா..என்று முணங்கினாள்.

ஜானு போனை எடுத்து பார்த்து, மாமா என்று அழுதாள்.

போனை பிடுங்கி தீனா அனைத்தையும் பார்த்தான். அபிக்கு பதில் தான் தருணிற்கு அடிபட்டிருக்கிறது. அவனை காப்பாற்ற தான் இவன் வந்திருக்கிறான் என்று நினைத்தான் தீனா.

தீனா எழுந்து அவனது கையை ஜானுவிற்கு கொடுத்தான். அவள் அழுது கொண்டே எழுந்தாள். அவளுக்கு தான் கயலை பற்றி தெரியுமே? அவள் அழுகை நிற்கவே இல்லை.

அண்ணா..அபி மாமா என்று அழுதாள். அவன் கீழே உடலை குறுக்கி இருந்தவளிடம் கையை நீட்டினான். அவள் அதை கவனிக்க கூட இல்லை. அவளுக்கு அவன் அண்ணன் இரத்தம் சிதறியது தான் வந்து கொண்டே இருந்தது.

புவனா..புவனா..என்று அழைத்தான்.அவளிடம் பதிலில்லை. பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் நிற்பது. அனைவரும் புவனாவை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.

சட்டென அவளை கைகளில் ஏந்தினான். அவள் உணர்வில்லாது இருக்க, ஜானுவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அங்கே அழகிற்காக வைத்திருந்த செடிக்கு டியூப் மூலம் நீர் செல்வதை பார்த்து, ஜானு அழாதே என்று கத்தினான். அவள் கையை வாயில் வைத்து அமைதியானாள். புவனாவை ஜானுவை அருகே சாய்த்தி உட்கார வைத்து விட்டு டியூப்பை எடுத்து வந்து நீரை புவனா மீது பீய்ச்சி அடித்தான்.

ஜானு பதறி என்னடா செய்ற? என்று கத்தினாள். நீ தள்ளி போ என்று கத்தி விட்டு, அவள் மீது நிறுத்தாமல் அடித்தான்.

அவளுக்கு ஏதாவது ஆகி விடாமல்டா?

வாயை மூடு என்று சீறினான்.

அவள் நிதானமாக முகத்தை திருப்பி நீரை கையால் மறைத்தாள்.அவன் உடனே அதை கீழே போட்டு விட்டு, அவளை நோக்கி ஓடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் தீனா.

ஜானு திகைத்து, டேய்..என்ன செய்ற? ஓடி வந்து அவனை தள்ளி விட்டாள். அவன் கீழே விழ, அவனது சட்டையை பிடித்து தீனா கீழே விழாமல் தடுத்தாள் புவனா.

புவி என்று அழைத்தாள் ஜானு. அவள் தீனாவை பார்த்து, சார் ரொம்ப நேரம் என்னால் இப்படி பிடித்திருக்க முடியாது. சீக்கிரம் எழுந்திருங்கள்.

அவன் கண்கள் நீரால் நனைந்திருக்க தீனா எழுந்தான். நீ..நீ..ஓ.கே தான? கேட்டான்.

அவள் அவனை கவனிக்காது ஜானுவிடம், ஏதோ தவறாக இருக்கு ஜானு என்றாள்.

ஜானு இருவரது செய்கையிலும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஏய்..ஜானு உன்னிடம் தான்  பேசிக் கொண்டிருக்கிறேன் புவனா அவளை உலுக்கினாள்.

இப்பொழுது நடந்தது கனவா? நிஜமா? குழம்பியவாறு புவனாவை பார்த்தாள்.

அண்ணாவிற்கு என்று..அவள் மீண்டும் கலங்க, ஏம்மா பாசமலர் தங்கையே.. எங்களை விடும்மா ஜானு கெஞ்சினாள்.உன்னால செம்ம சோர்வாகிடுச்சு.

ஏன்டா, அவளை கட்டிப் பிடித்தாய்? நீ ஏன்டி அவனை பிடித்தாய்?

உங்க அண்ணா டீம் ஆட்கள் முன் கீழே விழுந்தால் அவரை பார்த்து கேலி பேசுவார்கள். அவர் போலீஸ். அவரை யாரும் ஏதும் பேசினால் நம் கிராமத்திற்கு தான் அவமானம் என்று பங்கமாக்கினாள் அவனை.

அப்பொழுது கூட அவன் ஏதும் பேசவில்லை. நீரை எடுத்து முகத்தில் அடித்து விட்டு, அவனது ஆட்களை அனுப்பி விட்டு மாலுக்குள் சென்று அவனாகவே ஒரு ஆடையை வாங்கி வந்து புவனாவிடம் கொடுத்தான்.அவள் மறுக்க ஏதும் பேசாமல் அங்கேயே வைத்து விட்டு வண்டியில் ஏறி அதே வீடியோவை பார்த்தான். திரும்ப திரும்ப பார்த்தான்.

அபி பின்னே இருந்த கார் கண்ணாடியில் கிஷோர் முகம் தெளிவாக தெரிந்தது. தீனா அவனுடைய ஆட்களுக்கு அதை அனுப்பினான்.

போ..புவி..மாத்திட்டு வா. தொப்பையா நனைந்திருகிறாய்? ஜானு கூறி கொண்டே தீனா புவியிடம் நடந்து கொண்டதையே ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஆடை மாற்ற சென்ற புவனா இதயமோ படபடவென துடித்தது. நெஞ்சில் கை வைத்தபடி தீனா அவளை அணைத்ததை முகம் சிவக்க அவளை அவளே கண்ணாடியில் பார்த்தாள்.பார்த்த பின் தான் தன் நிலையும் அவர்களது உயர்வும் தோன்றியது. தன் கன்னத்தில் அவளே அறைந்து கொண்டு அவர் எல்லாரிமும் அவ்வாறு தான் நடந்து கொள்வார். அதுபோல் தான் என்னிடமும் நடந்து கொண்டார் அழுகை பொங்கியது அவளுக்கு. எல்லாவற்றையும் தன்னுள் புதைக்க நினைத்தாள். தீனாவிற்கு பெண் பார்க்கும் படலத்தை அவர் வீட்டில் ஆரம்பித்தது பற்றி துளசி கூறியது நினைவிற்கு வந்தது. மனதை கல்லாக்கிக் கொண்டு ஆடையை மாற்றி விட்டு, மௌனமாக வெளியே வந்தாள். நவீன கால ஆடையாக இருந்தது. அவள் அதை கூட சரியாக கவனிக்கவில்லை.

ஜானு புவியை பார்த்து, அவளை சுற்றி வந்து உனக்காக செய்தது போல் உள்ளது என்றாள்.

ஆடையை கவனித்த புவி, அச்சோ..எனக்கு இது வேண்டாம் என்று உள்ளே செல்ல போனவளை தடுத்த ஜானு யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க.

இல்ல ஜானு.

வா என்று ஜானு அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள். போனில் பேசிக் கொண்டே புவியை பார்த்த தீனா தடுமாறினான். அவனது கண்கள் அவளை விட்டு செல்லாதே என்றது.

கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன் வாங்க செல்லலாம் என்று போனை வைத்து விட்டு அவளை பார்த்துக் கொண்டே வண்டியை எடுத்தான். அவளும் அவனை தவிர்க்க, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

திடீரென புவனா மனம் படபடவென துடித்தது. அவ்வப்போது தீனா புவியை பார்த்துக் கொண்டு தான் வந்தான்.அவள் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஜானு என்னோட போன் எங்கே? கேட்டாள்.

போனா? எதற்கு புவி?

ஜானு ஏதோ தப்பா இருக்கு. யாருக்கோ ஏதோ நடக்க போவது போல் இருக்கு ஜானு பதட்டமானாள்.

தேவையில்லாம எதையும் யோசிக்காத. எல்லாரும் நல்லா தான் இருக்காங்க தீனா சொன்னான்.

நேற்று இது போல் தான் இருந்தது. அண்ணாவிற்கு இப்படி ஆகி விட்டது கண்கலங்கியவாறு.

ஒன்றும் நடக்காது என்று தருண் போனை நீட்டினான்.

போனை ஜானு வாங்கி புவியிடம் கொடுத்தாள். அர்ஜூனிற்கு போன் செய்தாள். அவன் எடுக்கவே இல்லை.

அர்ச்சு அண்ணா எடுக்க மாட்டிக்கிறாங்க என்று அப்பாவிற்கு போன் செய்தாள். அவர் எடுத்தார்.

எங்கம்மா இருக்க? ரொம்ப நேரமாகிறது. அம்மா தேட ஆரம்பிச்சுடுவா?

வந்துகிட்டு தான் இருக்கோம்பா. அப்பா அங்க ஏதும் பிரச்சனையா?

இல்லம்மா. அண்ணாவை தான் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு செவிலியர் வந்து திட்டிட்டு போனாங்க. அவன் அதிகம் பேசுகிறானாம். அமைதியாக இருக்க சொல்லி நான் தான் இவ்வளவு நேரம் இங்கே இருந்தேன். இப்பொழுது தான் வெளியே வந்தேன்.அந்த பொண்ணோட அம்மா தான் அவனுடன் இருக்காங்க.

அப்பா, இதயா இருக்காங்களா? கேட்டாள். பக்கத்துல தான்ம்மா அந்த பொண்ணு இருக்கா. அவங்க கிட்ட கொடுங்களேன் என்று போனை வாங்கி அனைவர் பற்றியும் கேட்டாள்.பின் அர்ச்சு அண்ணா போன் எடுக்க மாட்டிகிறாங்க? உங்களுக்கு என்னன்னு தெரியுமா? அக்கா என்று புவி ஆரம்பிக்க, ஜானு அவளை இடித்து தீனாவை கண்காட்டினாள்.

அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்கிறதா சொன்னான். அந்த வேலையாக தான் இருப்பான். அதான் எடுக்க மாட்டிக்கிறான். நீ யாரை பற்றியும் கவலைப்படாதே நாங்க இருக்கோம் என்றாள் இதயா.

தேங்க்ஸ் அண்ணி.

ஜானு புவியை பார்த்து, என்னடி உன்னோட அப்பா மாதிரி ஏத்துக்கிட்ட?

எனக்கென்ன பிரச்சனை? அண்ணாக்கு தான் அவங்களை பிடிச்சிருக்குல? அப்ப எனக்கும் பிடிக்கும் தானே?

ஏய்,நான் அப்படி சொல்ல? உன்னோட அண்ணா உன்னை மறந்துறாம பார்த்துக்கோ?

இதயா போனை ஜானுவிடம் கொடுக்க சொல்ல, புன்னகையுடன் போனை ஜானுவிடம் நீட்டினாள்.

ஏன்டி? என்று முகத்தை சுருக்கி கொண்டு வாங்கிய ஜானுவிடம், என்னோட அக்கா சொன்னா உன்னோட சுட்டி தனத்தை.

அக்காவா? யார் உங்க அக்கா?

இன்பாவை பற்றி கூறிக் கொண்டே இதயா இன்பாவை பார்த்தாள்.அவள் ஆதேஷுடன் சேர்ந்து புத்தகத்தை புரட்டியவாறு இருந்தாள்.

அவங்க தானா? எனக்கு அவங்கள தெரியும். அதுக்காக உங்களை நான் அண்ணின்னு கூப்பிட மாட்டேன்.

சரி தான்.நீ என்னை அவ்வாறு கூப்பிடக் கூடாது. நீ வேறு முறை தானே வரும்?

வேற முறையா? நானா? என்ன சொல்றீங்க? புரியல.

தெரிய வேண்டிய நேரம் வரும். அப்பொழுது தெரிந்து கொள். போனை ஸ்பீக்கரில் போடு என்று புவனாவிடம் நீ எதற்காகவும் பயப்பட தேவையில்லை. இங்கே அனைவரும் நலமாக இருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னோட அண்ணா ப்ரெண்ட்ஸும் வந்துருவாங்க. நோ..வொரி என்று போனை துண்டித்தாள்.

புவி அவங்க ஏன் அப்படி சொன்னாங்க? அவங்களுக்கு நான் என்ன முறையாக இருக்கப் போகிறேன்?என்னையே குழப்புறாங்க என்றாள்.

புவனா முகம் மலர்ந்தாலும் உள்ளம் அரித்துக் கொண்டு தான் இருந்தது. இம்முறை அவளையும் அவளது வதனத்தையும் தீனா கண்கள் தீண்டிச் சென்றது.

சார், நிறுத்துங்கள் புவனா கூற,எதுக்கு இங்க நிறுத்த?

இந்த ஆடையுடன் ஹாஸ்பிட்டல் செல்ல முடியாது என்று பின்னே அவள் முன் வாங்கிய ஆடையை காயப் போட்டிருந்தாள். அதை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

இதை எப்ப டி காயவைத்தாய்? ஜானு விழிக்க, தீனாவும் அவளையே பார்த்தான்.

நான் உள்ளே சென்று மாற்றி விட்டு வருகிறேன்.

தீனா வேகமாக கீழே இறங்கி அவளது கையை பிடித்து நிறுத்தி, இங்க பாதுகாப்பு தானான்னு பாத்துட்டு வாரேன் என்று உள்ளே சென்றான். ஜானுவும் புவனாவுடன் நின்றாள்.

ஜானு நீயும் வா என்று இருவரையும் அழைத்து வந்து, புவனாவிற்கு அறையை காட்டினான். அவள் மாற்றி விட்டு கையில் அவளது பள்ளி சீருடையும், தீனா வாங்கி தந்த ஆடையும் கவரில் வைத்திருந்தாள்.அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.