ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 87.
இதயா தருண் அறைக்குள் நுழைய, அவனின் இமைக்கா நொடிகள் அவனை தாக்க, அவளோ சோகத்தின் உருவாய் அவனருகே வந்து நின்றாள்.
என்ன தான் அவள் தன் முகத்தை சமன் செய்திருந்தாலும், அவளது வீங்கிய கண்கள், இறுக்கமான முகம்,தோய்த உடல் அவனுக்கு தெளிவாக கூறியது. அவனுக்காக அவள் அழுதிருக்கிறாள் என்று.
அவனை பார்த்து அவள் மீண்டும் கலங்கியவாறு அவனது தலையை தொட அவள் எத்தனிக்க, அவன் அவளது கையை பிடித்து இழுத்தான். இதை எதிர்பாராத இதயா அவன் மார்பில் விழுந்து, சாரி..சாரி..என்று எழ முனைந்தாள்.அவன் அவளை எழ விடாமல் இறுக்கி அணைத்தவன், எனக்காக நீ அழுதாயா? கேட்டான்.
இதயா நிமிர்ந்து அவனை பார்க்க, அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மீண்டும் ஏதோ பேச வந்தவனை நிறுத்திய இதயா, நீ அதிகமாக பேசவோ சிந்திக்கவோ கூடாது என்று மருத்துவர் கூறினார். ப்ளீஸ் என்று கெஞ்சினாள்
தருண் மார்பில் புதைந்து கொண்டே. நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவன் முகம் பார்த்தாள். அவன் சற்றும் தாமதிக்காது அவளை மேலும் இறுக்கி கொண்டு, “ஐ லவ் யூ”டியர் என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவளுக்கு அவன் முத்தம் ஆறுதலளிக்க, அவள் கண் நீரூற்றானாது.
எதுக்கு அழுற? எனக்கு ஒன்றுமே இல்லை என்று தருண் இதயாவை அணைத்தபடி இருக்க, அவனது மார்பினை மஞ்சமாக்கி இருந்த தாரிகையோ..எனக்கு ரொம்ப பயமா இருக்கு தருண். கஷ்டமா இருக்கு. என்னால எல்லாரும் கஷ்டப்படுவது போல் உள்ளது.
அவனது புருவங்களில் முடிச்சுகள் விழ பார்த்த அவனிடம், நீ என்னை எப்போதும் வெறுக்க மாட்டாய் தானே! அவள் கூற, வேறேதோ நடந்து இருக்குமோ? அவனுள் எண்ணப்போக்கு சென்றது.
வெளியே அர்ஜூனை கவின் தடுக்க,கேட்காது தருண் அறைக்குள் நுழைந்தான். இதயா அவனது கையை பிடித்தவாறு அமர்ந்திருந்தாள். இருவர் கண்களும் காதலில் கரைந்திருக்க, அர்ஜூனை பார்த்த தருண்,
அர்ஜூன்..எழ பார்க்க, இதயா அவனை தடுத்தாள். அர்ஜூன் பாசமாக விசாரிப்பான் என்று நினைத்தால், தருண் எதிர்பாராத வித சீற்றத்துடன்,
ஏன்டா இப்படி செஞ்ச? நீ அந்த கம்பெனியை பற்றி அதே கம்பெனி ஆட்களிடமா விசாரிப்பாய்? எதையும் கூறமாட்டாயா? அவளும் நீயும் எனக்கு எவ்வளவு முக்கியம்? அவளை போல் நீயும் ஆரம்பித்து விட்டாய்? அவள் தான் பைத்தியம் போல் ஏதும் கூறாமல் அவ இஷ்டத்துக்கு செய்கிறாள்.நீயும் என்று கண்கலங்கியவன் அழுதே விட்டான்.
அர்ஜூன்..தருண் எழ, இதயா அவனை நிறுத்தி விட்டு, அர்ஜூன் என்ன பேசுகிறாய்? சைகை செய்தாள். பதட்டத்தில் அவன் பேசியதை நினைத்தவன் அமைதியாகி விட,
ஸ்ரீ என்ன செய்தாள்? அப்புறம் அர்ஜூன் ஸ்ரீயை பற்றி தருண் ஏதோ சொல்ல வந்தான். அர்ஜூன் அவனை தடுத்து விட்டு, உனக்கு தெரியாத விசயத்தையும் அறிந்து கொண்டேன் என்று விட்டு, இந்த அறையை விட்டு நீ வெளியே வந்தால் உன்னை நானே கொன்று விடுவேன் என்று ஆக்ரோசமாக கத்தினான்.
அர்ஜூன் எதற்கு இந்த கோபம்? ஸ்ரீ எங்கே? வெளியே இருக்கிறாளா? தருண் கேட்க, இதயா கண்கள் கலங்கியது. அதை பார்த்த தருண், ஸ்ரீ எங்கே? இதயாவிடம் அதட்டலாக கேட்டான்.
அவள் என்னால் தான் இதயா நடந்ததை கூற முனைந்தாள்.
உனக்கும் பைத்தியம் ஆனதா? அதற்கு காரணம் நீ இல்லை என்று அர்ஜூன் கூற, நான் தான் என்று இதயா கூற, இருவரும் இவ்வாறாக மாறி மாறி பேச,
நிறுத்துங்க இரண்டு பேரும் தருண் கத்தி விட்டு தலையை பிடித்தான். இதயாவும் அர்ஜூனும் பதறி அவனருகே வந்தனர். இருவரையும் பிடித்து விட்டு, சொல்லுங்க ஸ்ரீ எங்கே?
அவள் அர்ஜூன் வீட்டில் தான் இருக்கிறாள்.
அர்ஜூன் உன் வீட்டில் ஸ்ரீயா?
அவள் எங்கேயும் இருக்கட்டும்.நீ தேவையில்லாமல் சிந்தித்து தலைபாரத்தை ஏற்றி வைத்துக் கொள்ளாதே! அவனருகே வந்து, தலை வலி அதிகமாக உள்ளதா?அர்ஜூன் வினவினான்.
தருண் மீண்டும் ஸ்ரீயை பற்றி கேட்க, அர்ஜூன் இதயாவை அழைத்துக் கொண்டு வெளியே நகர,
நில்லு இதயா..சொல்லிட்டு போ. உனக்கும் தெரியும் தானே?
அர்ஜூன் தருணை முறைத்து விட்டு இதயாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
ப்ளீஸ் அர்ஜூன்..நான் அவனை பார்த்து விட்டு வருகிறேன்.எதையும் சொல்ல மாட்டேன். அவனுக்கு தெரிந்தால் அவன் ஸ்ரீயை பார்க்க செல்ல கூட வாப்புள்ளது. அதனால் கூறவே மாட்டேன் என்றால் உறுதியாக.
அர்ஜூன் வெளியே அமர, இதயா உள்ளே சென்றாள்.அதே சமயத்தில் அங்கே வந்தனர் புவனா,ஜானு, பிரதீப்பின் சித்தப்பா மகன் தீரன்.
புவி அர்ஜூனிடம், அண்ணா, எங்கே அண்ணா? அழுதாள்.
ஜானு அண்ணாவிடம் வந்து, தருண் அண்ணாவிற்கு என்னாச்சு? கலங்கிய குரலில் கேட்டாள்.
அர்ஜூனும்,பிரதீப்பும் ஒருவாறு தருண் அறையை பார்க்க, இருவரும் உள்ளே சென்றனர்.
நீங்கள் கல்லூரி செல்லவில்லையா? ஆதேஷ்,துகிராவிடம் வினவினான் அர்ஜூன்.
இல்லை அண்ணா. நாங்களும் இங்கேயே இருக்கிறோம்.
துகிராவை பார்த்த அர்ஜூன் கேள்விகளால் அவளை நோக்க,அவள் மீண்டும் ஆரம்பித்தாள்.எல்லாரும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள் முகத்தை பாவமாக வைத்தாள்.
அங்கே வந்த தீரன், வாவ்..க்யூட் பேபி.நான் இருக்கேன். நீ யாருன்னு சொல்லு.ஒருவழி செய்து விடலாம்.
போடா டுபுக்கு. நான் உங்கிட்ட ஏதாவது சொன்னேனா? போடா டேய் என்றாள்.
நான் என்ன சொன்னேன்னு. இப்படி பாசமா பேசுற? இதுவரை யாரும் என்னிடம் இவ்வாறு பேசியதே இல்லை.என்னை பார்த்தாலே பொண்ணுங்க தன்னால பின்னாடி வருவாங்க சிலாகித்தான்.
அவனை மேலிருந்து கீழே பார்த்து விட்டு, உன்கிட்ட என்ன இருக்கு? உன் பின்னாடி சுத்துறது உண்மையிலே பொண்ணுகளா? ஒரு வேலை கண்ணு தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று மேலும் அவனை கலாய்க்க, பிரதீப்பால் தாங்க முடியாத சிரிப்பு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
என்னோட பெருமைய எங்க ஊருக்கு வந்து பாரு என்று அவனும் அவள் முன் வர,
பெருமையா? எருமையா? அவள் கேட்க, இதற்கு மேல் முடியாது என்று வெடித்து சிரித்தான் பிரதீப்.
அப்பொழுது இதயாவும், ஜானுவும் வருத்தமாக வெளியே வந்தனர். தன் அண்ணன் சிரிப்பை கண்டு வியந்து நின்றாள். அவன் அளவிற்காக சிரிப்பவன். இந்த அளவு சிரிப்பானா என் அண்ணன்? பார்க்க
அவனோ,அது எப்படி? துகிராவிடம் கேட்டுக் கொண்டே, பெருமை எருமை என்று தீரனிடம் அருகே வந்து அவனை பார்த்து பார்த்து சிரித்தவன். நீ டுபுக்காடா? என்று மேலும் சிரிக்க, அவனுக்கோ சினம் ஏறியது.
ஹலோ சார், இது மருத்துவமனை என்று செவிலியர் கூற,சாரி சிஸ்டர் என்று சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தான் பிரதீப்.
நான் அப்படி என்ன சொன்னேன்? இப்படி சிரிக்கிறார்.
சார், நான் காமெடி எதுவும் செய்யவில்லையே? என்றவள் ஜானுவை பார்த்தாள். அவள் அதிர்ச்சியுடன் அவளது அண்ணாவையே பார்த்துக் கொண்டிருக்க, துகி பிரதீப் சர்ட்டை இழுத்து கண்ணை காண்பித்தாள். இதை பார்த்து தீரனும் மற்றவர்களும் ஜானுவை பார்த்தனர்.
அண்ணா! நீ சிரித்தாயா? கண்கலங்க அவனருகே ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதாள். ஆதேஷ் துகிராவிற்கு ஏதும் புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
என்னாச்சுடா? பிரதீப் விழிக்க, அண்ணா! நீ சிரிச்ச நான் பார்த்தேன். அர்ச்சு அண்ணா நீங்க பார்த்தீங்கள? தீனா அண்ணா நீயும் பார்த்தேல. என்னோட அண்ணா மனசால சிரிச்சான் மகிழ்வுடன் அவனது கன்னத்தில் முத்தமிட்டு அண்ணா..என்றாள்.
அவன் உடனே மண்டியிட்டு, இவ்வளவு சந்தோசமா உனக்கு? அவன் கேட்க, அவள் ஆனந்த கண்ணீருடன் தலையசைத்தாள்.
சிரிக்கிறதுல என்ன இருக்கு?துகிரா கேட்டாள்.
நீ..நீ..தான காரணம் என்று ஜானு அவளையும் அணைக்க, துகிராவிற்கோ ஒன்றுமே புரியவில்லை.என்னோட அண்ணா சிரித்து நான் பார்த்ததே இல்லை. இன்று அவன் மனதார சிரித்தான். என்னால முடியாததை நீ செய்து விட்டாய்.”தேங்க்ஸ்” என்றாள் ஜானு.
துகிரா பிரதீப்பை பார்த்தாள். அவன் முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டிருந்தது. ஆதேஷ் நடப்பது புரியாமல் விழி விரிய, இரண்டு பேரும் திடீரென கொஞ்சுகிறார்கள் என்று ஜானு துகியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
எல்லாரும் சாப்பிடலாம் வாருங்கள் என்ற அழைப்பில் அனைவரும் திரும்ப, இன்பாவும் அவளது அம்மாவும் அவர்கள் பின் சைலேஷும், சந்துரூவும் வந்தனர்.
இன்பா குரலை கேட்டவுடன் இதயா எழுந்து ஓடிச் சென்று, அவளை அணைத்துக் கொண்டு அழுதாள்.
இதயா, அவன் தான் எழுந்து விட்டான்ல இன்பா அவளது தலையை கோதினாள்.
அர்ஜூனிடம் சொல்லி விட்டு தருண் அறைக்குள் நுழைந்த இதயா, தருணிடம் நீ எதை பற்றியும் யோசிக்காதே! ஸ்ரீ நன்றாக இருக்கிறாள் என்று பெயருக்கென்று கூற, அவனோ உனக்கு சொல்ல விருப்பமில்லை தானே?
அவனருகே அவள் வர, அவளை இடுப்போடு அணைத்துக் கொண்டான் தருண்.அவனை தவிர்க்காமல் அவளும் நீ நன்றாக ஓய்வெடு அறிவுரை கூறி விட்டு அவனது அடிபட்ட இடத்தில் இதழ் ஒத்தடம் கொடுத்தாள்.பதட்டமாக வந்த புவியும் ஜானுவும் இருவரையும் பார்த்து திகைத்து நின்றனர்.
அண்ணா என்ற சத்தம் கேட்டு, திரும்பினர் இருவரும். ஆனால் இருவரும் தடுமாறவில்லை.நான் வெளியே இருக்கிறேன்.நீ ஓய்வெடு என்றாள்.
அவளை நிறுத்தியவன் புவியையும், ஜானுவையும் உள்ளே அழைத்தான். புவனா பள்ளிச்சீருடையில் தான் வந்திருப்பாள்.ஜானு எப்பொழுதும் போல் பாவடை தாவணி.
அண்ணா..என்று அழுத புவனா இதயா கையை தட்டி விட்டு,தருணிடம் சென்று அம்மாவிற்கு தெரியாமல் வந்திருக்கிறேன்.நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? இதயாவை பார்த்தனர் இரு பொண்ணுங்களும்.
புவி..கொஞ்சம் அமைதியா இரு என்று கூறிய தருண், நீயும் அர்ஜூனை போல் என்னிடம் மறைக்கிறாய்ல?
புவி அவளது கையை எடுத்து விடவும் வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற, இதயாவால் முடியாமல் அழுது கொண்டே, என்னால் அவளை பற்றி ஏதும் சொல்ல முடியாது.
ஏன் முடியாது? நீ சொல்லி விட்டு தான் வெளியே செல்லணும் என்றான்.
கண்ணை துடைத்துக் கொண்டு, நான் சொல்லமாட்டேன் என்றாள் அழுத்தமாக.
ஓ..சொல்ல மாட்டாயா? விரக்தியுடன் கேட்டவன்.ஸ்ரீ அர்ஜூனுக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்கு தெரியும் தானே! அது போல் எனக்கு நீ. நீ சொல்லவில்லை என்றால் அப்படியே சென்று விடு. என் முன்னே வராதே!
அவள் அப்படியே அமர்ந்து, நான் எப்படி சொல்வது? அதற்கு கூட எனக்கு தைரியம் இல்லையேடா. வாயை மூடிக் கொண்டு கதறி அழுதாள். நான் என் கண்ணாலே பார்த்தேன் ஸ்ரீயின் நிலையை. நல்ல வேலையாக அர்ஜூனும் கவினும் சென்றதால் இருவரும் ஏதோ உயிரோடு இருக்கிறார்கள் என்று அழுது கொண்டே இருக்க, ஜானுவும் புவியும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
என்னால முடியலடா.ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க என்ன தான் அவளை காப்பாற்றினாலும் ஒரு பொண்ணோட நிலையில் இருந்து கொண்டு..பேச முடியாமல் ஏங்கி ஏங்கி அழ,.
தருணும் அவள் அழுவதை பார்த்து பயந்து தான் போனான். அவன் எழுவதற்குள் ஜானு இதயாவை அணைத்து விடுவித்தாள். பின் அவள் கேவல் மட்டும் கேட்டது. அவன் கண்ணிலும் நீர் தொட்டு புவி கையில் விழ, அவள் தன் அண்ணணை பார்த்தாள்.
ப்ளீஸ் என்னிடம் ஸ்ரீயை பற்றி மட்டும் கேட்காதே. அவளுக்கு நடந்ததை பார்த்து நான் மயங்கியே விழுந்து விட்டேன். அதனால் தான் உன்னை பார்க்க வர நேரமானது.
நீ உன்னோட வீட்டிற்கு போகலையா? தருண் கேட்டான்.
தாரிகா, கவின்,அர்ஜூனுடன் அர்ஜூன் வீட்டிற்கு தான் போனேன். இப்பொழுது தான் தோன்றுகிறது. நான் அங்கே சென்றிருக்கவே கூடாது மீண்டும் ஏங்கினாள்.
நீ கேட்பதால் ஒன்று மட்டும் சொல்கிறேன். உன்னை விட மோசமான நிலை தான் அவளுக்கு. அதுமட்டுமில்லை நிவாஸ் என்று..தருணை பார்த்தாள்.
அவனுக்கென்ன? கலங்கிய பார்வையை அவள் மீது செலுத்தினான்.
அவனை எல்லாரும் சேர்ந்து எப்படி அடித்தார்கள் தெரியுமா? அவன் தலை,வயிறு, கைகளில் சரியான அடி. அவனை இரண்டு அறை தள்ளி தான் சேர்த்திருக்கிறோம்.கவினும் உன்னுடைய அப்பாவும் தான் உடன் இருக்கிறார்கள்.
யாருடா அவங்க? அவங்களுக்கு என்ன தான் வேண்டும்? பாவம் ஸ்ரீ என்று அழுதாள்.
அண்ணா. நம் ஸ்ரீ அக்காவா? ஜானு கேட்டாள்.இதயா அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
தருண் தலையசைக்க, ஓ..உங்களுக்கும் அவளை தெரியுமா? இரு பெண்களையும் பார்த்தவள். இத்தனை பேர் இருந்தும் அவளை இப்படி விட்டு விட்டீர்களே? என்று இதயா மீண்டும் அழுதாள்.
அவங்களுக்கு என்ன ஆச்சு? ஜானு கேட்டாள்.
ப்ளீஸ் தருண்.இனி எங்கள் யாரிடமும் அவளை பற்றி கேட்காதே! என்றாள் கெஞ்சலாக.
அக்கா..என்று ஜானு கேட்க தொடங்க, வேண்டாம் ஜானு. எனக்கு புரிந்து விட்டது. இதற்கு மேல் அவளிடம் வேண்டாம் என்று ஜானுவை தடுத்தான் கண்ணீருடன்.
தயங்கிய தருண், அ..அ..அர்..அர்ஜூன் பார்த்தானா? தழுதழுத்தது அவன் குரல்.
ஆமாம்.நாங்க நால்வரும் போனிலும் நிவாஸ் அருகிலிருந்தும் பார்த்தான். அவனால் தடுக்க முடியாமல் தவித்து போனான். அவன் வலி எங்களுக்கு தெளிவாக அவன் முகத்தில் தெரிந்தது.ஸ்ரீ எப்படியோ தப்பித்தாள். ஆனால் அவள் வாழ்க்கை.. என்று இதயா அழுதாள்.
நீ இங்கே வா என்று தருண் அழைக்க, இல்லை என்று தலையசைத்து நான் வெளியே இருக்கிறேன் என்று கையை காட்டினாள்.
ப்ளீஸ் யாரும் இதையும் யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அவள் முற்றிலும் உடைந்து கூற, தருணிற்கு கோபம் தலைக்கேறியது. அகில் ப்ரெண்ட்ஸ் யாருக்கும் கூட தெரியாது. அகிலுக்கு தெரியவே கூடாது என்று தான் கவின் அர்ஜூனிடம் பேசினான்.
ம்ம்..ஓரிடத்தை முறைத்தவாறு, அந்த நாய்க்கு தெரியவே கூடாது என்று முணுமுணுத்தான் தருண் . ஜானு இதயாவை வெளியே அழைத்து வந்த போது தான் பிரதீப் சிரித்துக் கொண்டிருப்பான்.