ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 84
ஜிதினை விடுவிக்க சொல்ல, கயலுடைய ஆட்கள் அவனை விடுவித்தனர். அவன் தள்ளாடியபடி ஸ்ரீக்கு நேராக வந்து அவளை முகர்ந்தான். அவள் அவனை தள்ளி விட்டு வெளியே செல்ல முற்பட, அவளை பிடித்து ஜிதின் மீதே தள்ளி விட்டாள் அந்த ராட்ச்சசி கயல். நிவாஸ் அவனை தடுக்க வந்தான். அவனை கயல் ஆட்கள் பிடித்துக் கொள்ள, அவன் துள்ளிக் கொண்டு, அவளை விடுங்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கதறினான்.
ப்ளீஸ் ஜிதின், என்னை விட்டுரு..என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள். இதை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அழுது கொண்டிருந்தனர்.
அவன் போதையில் இருந்தாலும், என்னை மன்னிச்சிடு ஸ்ரீ. எனக்கு நீ வேண்டும் எப்பொழுதும் என்றான்.
நீ பேசுகிறாய்? தெளிவாக தான் இருக்கிறாயா? அதிர்ந்து ஸ்ரீ கேட்க,
அவன் தெளிவாக இல்லை தான். ஆதி இறந்த பின் யாருமில்லாமல் தவித்தது தான் உனக்கே தெரியுமே! அவனுக்கு உன் மீது பைத்தியம் என்று கூட சொல்லலாம்.நான் அவனிடம் அடிக்கடி சொல்லி வைத்தேன். அவளை நீ எடுத்துக் கொண்டால் தான் எப்போதும் உன்னுடன் இருப்பாள் என்று. அதனால் தான் அன்று தெளிவாகவும் அவ்வாறு செய்தான். நான் நினைத்தது போல் அவன் மனதினுள் அது மட்டும் பதிந்து விட்டது. அதனால் அவன் உன்னை பக்கம் வைத்துக் கொள்ள எண்ணி தான் வருகிறான். கொஞ்ச நேரம் ஒத்துழைம்மா. போதும். உன்னை காதலித்தவன், உன்னுடைய நண்பர்களுக்கு தெரியட்டும்.
அவள் அழுது கொண்டே ஜிதின், நீ என்னருகே வராதே நான் செத்துடுவேன் என்றாள். அதற்கு அவனிடம் பதிலில்லை.
அவன் முன் வர, அவள் நகர்ந்து கொண்டே சென்றாள். கடைசியாக கீழே விழுந்தாள்.அவன் அவள் ஆடை மீது கை வைத்தான். ஸ்ரீ அவனை அறைந்தாள். அவன் சினம் அதிகமாக அவளது டாப்பை களைந்தான். அவள் உள்ளேயும் மெலிதான சிறிய அளவிலான டாப்புடன் இருக்க,அவள் கையை வைத்து உடலை மறைக்க தோற்று போய் கதறினாள்.
அவன் மீண்டும் அவள் மீது கை வைக்க வர, நிவாஸ் அவனை பிடித்தவர்களையும் இழுத்து போட்டு,ஜிதினை உதைத்தான். ஸ்ரீ வேகமாக எழுந்து குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.பின் சவரை ஆன் செய்து அங்கேயே உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தாள். ஜிதின் அங்கே வந்து, கதவை வெறி கொண்டு தட்டினான். அவனை இழுத்து நிவாஸ் கோபமாக அடித்து கீழே தள்ளினான்.ஜிதின் கீழே விழுந்து மண்டையில் அடி பட்டு மயக்கமானான்.
எல்லாமே ஸ்பாயில் ஆகிடுச்சு என்று கத்திக் கொண்டே அவள் ஆட்களுடன் வெளியேறினாள் கயல். அதில் ஒருவன் மட்டும் அங்கே நின்று தாபத்துடன் ஸ்ரீ அறையை பார்க்க, கயல் அவனை அறைந்து இழுத்து சென்றாள். ஸ்ரீயை பழி வாங்கவே ஜிதினை வளர்த்தது போல் இருந்தது.
நிவாஸ் ஸ்ரீ இருக்கும் கதவருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தான். ஆனால் ஸ்ரீயில் சத்தம் கேட்காமலிருந்தது.
ஸ்ரீ கதவை திற, அவங்க போயிட்டாங்க.வெளியே வா என்று கத்தினான். அவள் பதிலளிக்காமல் இருக்க, அவன் பயத்தில் ஸ்ரீ..ஸ்ரீ..என்று அலறினான். அவள் தான் மயங்கி விட்டாளே? எப்படி எழுவாள்?
வெளியே வந்த கயல் ஆட்களில் ஒருவன், மேடம் அந்த பொண்ணையும். பையனையும் என்ன செய்வது?
ஒன்றும் செய்ய வேண்டாம். அவனால் இப்பொழுதைக்கு ஏதும் செய்ய முடியாது.அவளாலும் முடியாது.இருவரையும் அழைத்து செல்ல அர்ஜூன் கண்டிப்பாக வருவான். அவன் அவர்களிடம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவளறைக்கு சென்றாள்.
கொஞ்ச நேரத்தில் அர்ஜூனும் கவினும் காரில் வெகுண்டு வந்திருந்தனர். அவர்களை தடுக்க வந்த அனைவரையும் அடித்தனர் வெறியுடன். கயல் ஆட்களில் ஒருவன் மட்டும் கயலிடம் விசயத்தை சொல்ல, அவள் கீழிறங்கி வந்தாள்.
அவளை பார்த்த அர்ஜூன் அவளது கழுத்தை பிடித்து நெறித்தவாறு, எங்கே அவர்கள் என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.கவின் சுற்றி பார்த்துக் கொண்டிருக்க அர்ஜூன் சத்தம் கேட்டு, நிவாஸ் தவண்டு கொண்டே அர்ஜூன் என்று மாடியின் வராந்தாவிற்கு வந்து அழைத்தான்.
அவள் கோபமாக துப்பாக்கியை எடுத்தாள். அதை பார்த்த கவின் அதை தட்டி பறித்து அவள் முன் நீட்டினான். அர்ஜூன் வேகமாக படி ஏறி நிவாஸ் அருகே வந்து அவனை தூக்க வந்தான்.
நோ..அர்ஜூன். ஸ்ரீ..என்று அவளிருக்கும் அறை பக்கம் கையை நீட்டினான். நிவாஸ் மிகவும் சோர்வாக அங்கேயே படுத்துக் கொள்ள, அர்ஜூன் உள்ளே சென்று ஸ்ரீ..ஸ்ரீ..என்று கத்திக் கொண்டே அவளை தேடினான். அவன் கண்கள் குளியலறையை பார்த்தன. அங்கே ஜிதின் கீழே விழுந்து மயங்கி இருக்க, அர்ஜூன் கோபம் தீர அவனை அடித்தான் இருந்தும் அவன் எழவே இல்லை.
குளியலறையை கதவை தட்டினான். அவள் சத்தம் கேட்கவே இல்லை.கவின் கயலை ஓர் அறைக்குள் தள்ளி வெளியிருந்து பூட்டி விட்டு, நிவாசை பார்த்தவாறு ஸ்ரீயை தேடி சென்றான். அர்ஜூன் கதவை உடைப்பதை பார்த்து அவனும் உள்ளே வந்தான்.அர்ஜூன் அவனை பார்த்து விட்டு, குளியலறைக்குள் நுழைந்தான். கவினும் உள்ளே சென்று ஸ்ரீயை பார்த்து திரும்பி நின்றான். அர்ஜூன் அவனது சட்டையை கழற்றி ஸ்ரீயை சுற்றிக் கொண்டு கண்ணீருடன் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அவனை எழுப்பு. இதற்கு மேல் இருவரையும் இங்கே விட முடியாது என்று அர்ஜூன் சொல்ல,கவின் நிவாசை எழுப்பினான். அவன் விழித்து, என்னால நடக்க முடியாது. நீங்க அவளை காப்பாத்துங்க என்றான்.
அர்ஜூன் ஸ்ரீயை கவினிடம் கொடுத்து விட்டு, அவன் நிவாஸை தூக்கினான்.
வேண்டாம் அர்ஜூன். கஷ்டமா இருக்கும்.
உன்னை எப்படி எங்களால் விட்டு செல்ல முடியும்? உன்னை ஏதாவது செய்து விடுவார்கள். வாயை மூடிக் கொண்டு வா என்று பயங்கரமாக கத்தினான்.
அர்ஜூனின் இந்த பாசத்தில் நெகிழ்ந்த நிவாஸ் கண்கலங்கினான்.தேங்க்ஸ் அர்ஜூன் என்றான்.
வாயை மூடு என்றேன் மீண்டும் அவன் கத்த,நிவாஸ் இதழ்களில் புன்னகை நிரம்பியது.இருவரையும் எப்படியோ காரில் போட்டு கவின் வண்டியை எடுக்க, அர்ஜூன் மடியில் ஸ்ரீயை படுக்க வைத்து,நிவாஸை அவனது தோளில் சாய்த்து இருவரையும் பார்த்து கலங்கிய படி இருந்தான் அர்ஜூன். காரை கொஞ்சம் தொலைவில் வந்து நிறுத்தினான் கவின்.
எதுக்குடா நிறுத்தின?
இருவரையும் இந்நிலையில் எங்கே அழைத்து செல்வது? நம் நால்வரை தவிர இந்த விசயம் நம் நண்பர்களுக்கு கூட தெரியக் கூடாது. அகிலுக்கு தெரிந்தால்..என்று அர்ஜூனை பார்த்தான் கவின்.
நோ..யாருக்கும் தெரியக்கூடாது உடைந்து கண்ணீரோடு கூற, நிவாஸ் அர்ஜூன் கையை பிடித்தான் அழுத்தமாக. அவனால் பேச முடியவில்லை.
கவின் போனை எடுத்து தாரிகாவிற்கு அழைத்து, பசங்க வந்துட்டாங்களா? கேட்க,
ம்ம் என்றாள். யாரிடமும் ஏதும் சொல்லவில்லை தானே! மறந்தும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருங்கள். இதயா என்ன செய்கிறாள்?
அவ வருத்தமாக தான் இருக்கிறாள் என்று சோகமாக கூற, பசங்க கிளம்பிய பின் சொல்லு என்றான். ஓ.கே என்று அணைத்தாள்.
தாரிகா, இவனுக எங்க போனான்னுக? அபி கேட்டான்.
அவங்க காலையிலே வெளிய போனாங்க. வர நேரமாகும்னு சொன்னாங்க என்று இதயாவை பார்த்தாள்.
இதயா, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறாயா?
அவள் மீண்டும் அழுது கொண்டே இருக்க, அபி அருகே வந்து தருணுக்கு ஏதும் ஆகாது. அவன் காதலித்த முதல் பொண்ணு நீ தான். எனக்கு அவனே சொன்னான். உனக்காக கண்டிப்பாக வருவான் என்று சமாதானப்படுத்தினான்.
பின் அனைவரும் கிளம்ப, மணி ஒன்பதானது.அகில் இருவரையும் பார்த்துக் கொண்டே கிளம்பினான். அர்ஜூன் நிவாசையும் ஸ்ரீயையும் அவர்களது குடும்ப மருத்துவரிடம் அழைத்து சென்று காண்பிக்க, அவர்களுக்கு சிகிச்சை முடித்து விட்டு, கவினை அவர்களிடம் விட்டு அர்ஜூனை பேச அழைத்து சென்றார். அவன் அமைதியாகவும் அவனுக்கு உள்ள காயத்தை பார்த்து விட்டு, அதற்கு முறையாக மருந்திட்டு, உண்மை தெரிந்து விட்டது போல என்றார்.
டக்கென்று எழுந்து அவரருகே சென்று, அவரை பிடித்து உலுக்கி இதை தான் அன்று சொன்னீர்களா? என்று கதறி அழுதான். அவர் அவனை அணைத்து ஆறுதலளித்து, இனி தான் அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு தெரியுமென்று கயல் விழிக்கு தெரியாது. அவர்கள் பேசியதை நான் மறைந்து நின்று கேட்டு விட்டேன். எனக்கும் பொண்ணு இருக்கு தம்பி. எனக்கு மனசு ரொம்ப வலித்தது. ஆனால் அவளுடன் என்னால் சண்டையிட முடியாது.அதனால் அவளுக்கு காய்ச்சலில் போது ஸ்ரீ மசக்கையாமல் இருக்க அதற்கான மருந்தையும் சேர்த்து கொடுத்து விட்டேன். அதனால் அவளுக்கு இத்தனை நாட்களாக ஏதும் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆனால் கயல் அவளை பரிசோதிக்க சொல்லிக் கொண்டே இருப்பார். நானும் வந்து சும்மா பேசி விட்டு பார்த்தது போல் காட்டிக் கொள்வேன்.
நான் வரும் போதெல்லாம், அவ என்னோட ஸ்டெதஸ்கோப்பை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள் விசயம் தெரியாமல். உண்மையாக அந்த பொண்ணு பாவம் தான்.
இனி என்ன செய்யப் போகிறாளோ தம்பி? உங்களுக்கு ஸ்ரீயை பிடிக்கும் தானே! உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் தானே! என்றவுடன் அவன் அழ ஆரம்பித்தான் அர்ஜூன். பின் அந்த பொம்பளையை சும்மா விட மாட்டேன்.
பரவாயில்லைப்பா.இவ்வளவு தூரம் அவளுக்காக கயல்விழியை எதிர்த்து பிள்ளையை இம்முறை காப்பாற்றி இருக்கிறீர்களே? அதுவே போதும். நீங்க நல்லா இருப்பீங்க.
அவளை யாரும் தொடவே முடியாது. அவ்வளவு வலிமையான, தைரியமான பொண்ணு. அவளுக்கு இந்நிலையா? என்று அழுதான்.
தம்பி, நீங்களாவது இந்த பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க? அதுவே எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த பொண்ணுக்கு வாழ்வே வெறுத்து போய் விடும் கவலைப்பட்டார்.
இல்லை. அவளை நான் விட மாட்டேன் என்றான் அர்ஜூன்.
ஒரு நிமிடம் அதிர்ந்தவர்..காப்பாற்றுவதை சொல்கிறீர்களா? தயக்கத்துடன் கேட்டார்.
இல்லை. அவளுடனான என் காதல் எப்பொழுதும் எந்நிலையிலும் மாறாது வாழ்ந்தால் அவளுடன் மட்டும் தான். என்னால் வேற பொண்ணை ஏற்றுக் கொள்ள முடியாது என்றான் தீர்க்கமான குரலில்.
திகைப்புடன் என்ன சொல்றீங்க?
எல்லாம் அவளுக்கு தெரியாமல் நடந்தது.ஜிதினை அவள் காதலிக்கவே இல்லை. ஒரு வேலை அவளுக்கு என்னை பிடித்திருந்தால், அவளை என்னுடையவளாக ஆக்கிக் கொள்வேன் என்றான்.
தம்பி,..நீங்க பார்த்தீங்க தானே! உங்களால் அவளுடன் வாழ முடியாது. உங்களை இது மிகவும் காயப்படுத்தும் என்றார்.
என்னை விட, அவள் தான் அதிகமாவே காயப்படுவாள். என்னால் அதை மறக்க முடியும். அதற்கு அந்த கயல் சாக வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சும்மா விட மாட்டேன். என் கையாலே சாவாங்க என்றான் கோபத்தில் பல்லை கடித்தவாறு.
இதுவரை நல்லா இருந்துட்டா. இனி என் ஆட்டம் ஆரம்பம் என்றான் அவன் கொடூரமாக முகத்தை வைத்துக் கொண்டு.அவள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் ஒருவரையும் நான் சும்மா விடப் போறதில்லை.
இனி என் ஸ்ரீ மீது எவனும் கையை வைக்க யோசிப்பாங்க.
அவர் அவனை ஆச்சர்யத்தோடு, உன் காதல் தூய்மையானது. கண்டிப்பாக அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள் மனதினுள் நினைத்தார்.அவனிடம் உன் காதல் என்னை வியக்க வைக்கிறது. உன்னை போல் ஒருவனை சந்தித்ததை நினைத்து மகிழ்கிறேன். உன் காதலுக்காக என்னுடைய வாழ்த்துக்கள்.
முதலில் அந்த வீடியோஸ் அனைத்தையும் அழித்து விடு. நீ நடந்து கொண்டதில் கண்டிப்பாக கோபத்தில் வீடியோவை வெளியே விட கூட தயங்க மாட்டாள். சீக்கிரம் அழித்து விடு என்றார்.
நான் இப்பொழுதே செல்கிறேன் அர்ஜூன் எழ, உன்னை போல் மகன் கிடைக்க உன் பெற்றோர்கள் தவம் செய்திருக்க வேண்டும் அவனை அணைத்து கவனமாக இரு. அவள் பயங்கரமானவள். உதவிக்கு நீ என்னை அழைக்கலாம் என்றார்.
அர்ஜூன் கவினிடம் சென்று,இவர்களை கவனித்துக் கொள் என்று விரைந்தான் கயல் வீட்டிற்கு.அங்கே வந்து பார்த்தால் அவர்கள் அடித்து போட்டவர்கள் அப்படியே கிடக்க,கயலை பூட்டி வைத்திருந்த அறைக்கருகே சென்று,
எல்லா வீடியோவையும் அழித்து விடு. இல்லையென்றால் நீ செத்து விடுவாய் என்று சிலிண்டரை இழுத்து அறை அருகே கொண்டு வந்தான். கேஸை எடுத்து விட,கீழே கிடந்த அனைவரும் முடியவில்லை என்றாலும் தவண்டு கொண்டும், காலை இழுத்துக் கொண்டும் ஓடினர்.
கயலிற்கே அல்லு விட்டது. அழிக்கிறேன் என்று சொல்ல, கதவை திறந்து விட்ட அர்ஜூன் லைட்டரை சிலிண்டரிடம் கொண்டு வர, அழிக்கிறேன் என்றாள்.
நான் உன்னை நம்ப மாட்டேன். போனை அவளிடமிருந்து ஒரு கையில் வாங்கி தேடி அழித்தான்.அவளது அறைக்குள் உள்ள அனைத்தையும் பிடித்து இழுத்தவன்.அங்கிருந்த பெட்டியை எடுத்தான்.
அதை எடுக்காதே! அவள் அர்ஜூன் அருகே வர, நீ பக்கம் வந்தால் இங்கிருந்தே சிலிண்டர் மீது எறிந்து விடுவேன் லைட்டரை காண்பித்தான். என் ஸ்ரீக்காக என் உயிரை விடுவது கூட எனக்கு சந்தோசம் தான்.
கயல் பயந்து அங்கே நின்றாள்.அவன் அந்த பெட்டியை திறக்க முழுவதும் பென்டிரவ். அர்ஜூன் அதிர்ந்து கயலை பார்க்க, ஸ்ரீயுடையது நீல கலரில் உள்ளது. அதை மட்டும் எடுத்து விட்டு மற்றதை தந்து விடு என்றாள்.
முடியாது என்றவன் அனைத்தையும் வாரிக் கொண்டு புயலென பறந்தான்.
உன்னை சும்மா விட மாட்டேன் அர்ஜூன் கத்தினாள் கயல்விழி.
“என்னுயிரின் உயிரே
உன் வலியை திருப்புவேன்
என் காதல் உன் மனமே!
என் காதல் உன் குணமே!
என் காதல் உன் தைரியமே!
என் காதல் உன் பண்பே!
என் காதல் உன் உண்மையான அன்பே!
காதலாகிய உன் காதலே என்னிடம்!”