வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-82
190
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 82
நித்தி அங்கே வந்து, என்னாச்சு மேம்? கேட்டாள்.
அப்புறம் தான் எமோசனல் ஆனதை நினைத்தவள் அபியை திரும்பி பார்த்தாள். அவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு, அவன் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
புரியுதாடி? அம்மா கேட்டார்.
என்னது? என்று நித்தியும் அபியை பார்த்தாள்.
ஒன்றுமில்லை நித்தி. ஸ்ரீ பற்றி ஏதாவது தெரிந்ததா? இன்பா கேட்டாள். இதயா எழுந்து அமர்ந்தார்.
இல்லை என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாரிகா அனைவருக்கும், ஸ்ரீ கூறியதை கூறினாள்.
நல்லா இருப்பதாக தாரிகாவிற்கு மேசேஜ் அனுப்பி இருக்கா போல, குரூப்ல சேர் பண்ணியிருக்கா.
குரூப்பா? என்னிடம் சொல்லவில்லை என்று இன்பா கேட்க,
அது வந்து..நித்தி தயங்கினாள்.அபியை கிண்டல் செய்கிறேன் என்று இன்பாவை பற்றியும் பேசி இருப்பார்கள். அவள் தயங்குவதை பார்த்து, நித்தி போனை பிடுங்கினாள் இன்பா.
மேம்..கொடுத்திடுங்க என்று பதட்டமானாள் நித்தி. அபி, கவின், அகில், பிரதீப் அவர்கள் அருகே வர, அபி வாங்கு என்று கண்ணை காட்டினாள். இன்பா அம்மா அதை பார்த்து,
ஏதோ ரகசியம் போனில் உள்ளதா? கேட்டார். அபி புரியாமல் விழித்தான். அகில் புரிந்து கொண்டு, மேம்..குடுங்க இன்பாவிடம் வந்தான்.
ஓ.கே மேம். நானே எடுத்து காட்டுகிறேன் என்று நித்தி போனை கேட்க, நானே வைத்திருக்கிறேன் பாஸ்வேர்டை சொல்லு என்றாள்.
நித்தி, அகில் கவினை பார்த்தாள்.சொல்லு சொல்லு இன்பா போனில் கவனத்தை செலுத்த,கவின் போனை இன்பா கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு ஓடினான்.
ஏய் குடுடா என்று இன்பா எழுந்தாள்.
மேம் என்று வழியை மறைத்து நின்றான். அவள் புருவத்தை உயர்த்தி திமிறாக நின்றாள்.
எங்க குரூப்ல உங்களை எப்படி மேம் சேர்ப்பது? நீங்க மேம். நாங்க சின்ன பசங்கன்னு நீங்க தானே சொன்னீங்க?அதனால் அதை பற்றி நீங்க கேட்க தேவையில்லை.
பிரதீப் அபியிடம், ஏன் மாப்பிள்ள நானும் குரூப்பில் இருக்கேனே! என்று கேட்க,
உங்க மாமாவே இருக்காங்க. நான் ஏன் இருக்கக்கூடாது? இன்பா கேட்டாள்.
மேம். உங்கள மாதிரி எங்க மாமா எங்களை கீழே வைத்து பார்க்க மாட்டாறே என்றான்.
நான் எப்போது, எனக்கு கீழே நீங்கள் என்று சொன்னேன்?
நாங்க சின்ன பசங்க தானே! அப்படி தானே நீங்களும் உங்க ப்ரெண்டு சந்துரூ அண்ணாவும் சொல்வீங்க என்று அவளிடம் வேறு ஏதும் பேசாமல் சினத்துடன் அபி சென்றான்.
அபியை அழைத்துக் கொண்டே நித்தியும் அகிலும் செல்ல, பிரதீப் இன்பாவிடம் அவனுக்கு சின்ன பையன்னு யார் சொன்னாலும் பயங்கர கோபம் வரும். அவன் வளர்ந்து விட்டானாம்! மத்தவங்க சொல்லலாம்.
நீ சொல்றது தப்புமா? என்று சொல்லி விட்டு, அவனுக்கு ஒரு பொண்ணை பிடிக்குமாம்.ஆனா அந்த பொண்ணு அவனுக்கு பதில் சொல்லலையாம். அதான் நான் என்ன நினைக்கிறேன்னா..அபிக்கு அந்த பொண்ணை விட என்னோட ஜானு சரியா இருப்பான்னு நினைக்கிறேன். அபி படிப்பு முடித்ததும் இரண்டு பேருக்கும் திருமணத்தை முடித்து விடலாம். உனக்கு தெரியும்லமா. ஜானு ஏற்கனவே அபி மீது பைத்தியமாக தான் இருக்கிறாள். அவளிடம் கேட்டால் நாளைக்கு என்றால் கூட அவனை கட்டிக் கொள்வாள் என்று கூறி விட்டு அவர் சென்றார். தூரமாக சென்று இன்பாவை பார்த்தான் பிரதீப்.
அவள் முக வாட்டத்துடன் அதே இடத்தில் நிற்க, அந்த பையன் சொல்றது உண்மையாடி. ஜானுவா? அந்த பையனோட தங்கையா? அம்மா வினவ, இன்பா தலையை தொங்க விட்ட படி இருந்தாள்.
அக்கா, நல்லா தெரியுது அபியை உனக்கு பிடித்திருக்கிறது என்று. அவன் தான் நேராகவே சொல்லிட்டான்ல. அம்மாவுக்கும் பிடித்து விட்டது. உன்னோட ஈகோவால அவனை இழந்து தவித்துக் கொண்டிருக்காதே! என்று இதயா வருத்தமாக தருணை பார்க்கச் சென்றாள்.
அர்ஜூன் தருண் இருக்கும் அறைக்கு வெளியே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடம் இதயாவும் சேர்ந்து கொண்டு கண்ணில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதீப் வேகமாக அர்ஜூன் அருகே வந்து, எங்கடா ஸ்ரீ? சட்டையை பிடித்தான்.
ஸ்ரீயா? தருண் அப்பா எழுந்தார்.
பிரதீப் அவரிடம் பேசாமல்,ஏற்கனவே சொன்னேல. கவனமா இருன்னு.
நான் தான் அவளிடம் கோபமாக பேசினேன் என்று இதயா சொல்ல,
என்ன பேசினாய்? பிரதீப் அவளருகே சினத்துடன் வர, அவள் பயந்து அர்ஜூன் பின் நின்றாள்.
அண்ணா! இதயாவிற்கு எதுவும் தெரியாது. இது விபத்தல்ல என்று தான் அவள் கோபமாக ஸ்ரீயிடம் பேசினாள்.
அவள் கோபமாக பேசினாள் சரி. நீங்க எல்லாரும் என்ன செஞ்சீங்க? பிரதீப் கோபப்பட்டான். அனைவரும் அதிர்ந்து இருக்க, ஸ்ரீ நல்லா தான் இருக்கா என்று நிவாஸ் உள்ளே வந்தான்.
இதயா, நீ கவலைப்படாதே! உன்னுடைய கோபத்தால் அவள் வெளியேறவில்லை என்று அர்ஜூனை பார்த்தான்.அவன் பின்னே வந்த இன்பா,
அவ எங்க இருக்கா? சொல்லுடா? கேட்டாள்.
எதுக்கு சொல்லணும் என்று அவளிடம் கேட்டு விட்டு, அர்ஜூன் அருகே வந்து, அப்பொழுது பேசியது பேசியது தான். எங்க வழிக்கு யாரும் வர வேண்டாம். என்னோட அக்காவை பாத்துக்க எனக்கு தெரியும்.
கேக்குறேன்ல, சொல்லுங்கடா, என்னோட பையனை கொலையா? என்று வாயை மூடிக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்தியவாறு கேட்டார்.
பிரதீப் முன் வந்து சமாளிக்க நினைத்தார்.
நீயும் சொல்லலைல என்று அவரையும் முறைக்க, வழியில்லாது அர்ஜூன் அனைத்தையும் சொன்னார்.
பெரியவங்க கிட்ட சொல்ல தோணலயா யாருக்கும்? அகில் நீயாவது உன்னோட அம்மாவிடம் சொல்லி இருக்கலாம்ல?
அப்பா, நான் அவங்க பெயரை சொன்ன போதே ரொம்ப பயந்தாங்க?
அர்ஜூன் அவரிடம், ஸ்ரீ அம்மாவிற்கும் கயலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? உங்களுக்கு தெரியுமா? கேட்டான். நிவாஸும் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்? கேட்டான்.
கயலா, ஸ்ரீ அப்பாவின் தங்கை தானே! அவள் தான் பிரச்சனையா?அவள் பிடிவாதக்காரி. நினைப்பதை சாதிப்பாளாம்.எனக்கு வேரேதும் அவளை பற்றி தெரியாது.
வாங்க.நானும் வருகிறேன்.அவளிடம் பேசுவோம் என்றார்.
வேண்டாம்.யாரும் வர வேண்டாம். அவங்கள பார்க்க நான் போறேன் என்றான் நிவாஸ்.
நீ என்னடா பண்ணப் போற? தாரிகா கேட்டாள்.
நான் நேரடியாகவே பிரச்சனையை முடிக்க பார்க்கிறேன். இதற்கு மேல் அவளை இவ்வாறு பார்க்கக்கூடாது. அவ உங்க கூட இருக்கும் போது தான் அவள் சிரித்தே பார்த்தேன்.
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது. நான் கிளம்புகிறேன். இதை கூற தான் வந்தேன் என்று நிவாஸ் மீண்டும் அர்ஜூனை பார்த்தான்.
அகில் நிவாஸிடம், நீ தனியே போக வேண்டாம். நாங்களும் வருகிறோம் என்றான்.
இதயா பேசியதால் தான் வெளியே வந்தாயா? என்று ஸ்ரீயிடம் கேட்டேன்.
இதயா சொன்னது சரி தான். அவங்க என்னை வைச்சு தான் எல்லாமே பண்றாங்க. அதனால்.. என்று நிவாஸ் சொல்ல தயங்கினான். நீ தனியாக சென்று ஆஜராக போகிறாயா? அவள் எங்கே? என்று கேட்டாள் தாரிகா.
நீ போக வேண்டாம் என்று நிவாஸ் கையை பிடித்தான் அர்ஜூன். அவனருகே வந்து, எல்லாமே இப்படி தான் நடக்கும் முன்பே நினைத்தோம். அதனால் தான் தனித்தே இருந்தோம்.
உங்க கூட இருந்த போது சந்தோசமா இருந்தோம். அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்களும் ரொம்ப உதவியாகவும் இருந்தீர்கள்.இனி யாருடைய உதவியும் வேண்டாம் என்று அவன் கிளம்ப, பிரதீப் அவனை நிறுத்தி பிரச்சனை என்றால் அழை என்று அவரது நம்பரை கொடுத்தார்.
எல்லாரும் ஒரே ஊரா? கேட்டார் இன்பாவின் அம்மா. நித்தி தலையசைத்தாள் வருத்தமுடன்.
இப்ப,என்ன செய்ய போறீங்க? இன்பா கேட்டாள்.
அர்ஜூன் வேகமாக வெளியே செல்ல, அகில் அவனை தடுத்தான். தாரிகா உடனே, சீனியர் அவனை விடுங்கள். ஸ்ரீயை நினைத்தால் பயமாக உள்ளது என்றாள்.
அகில் அர்ஜூனை விட்டு உள்ளே சென்றான்.அர்ஜூன் நிவாஸை நிறுத்தி,வேற யாரும் வேண்டாம். நான் மட்டும் துணைக்கு வாரேன்டா.
என்னை நினைத்தா வருத்தப்படுகிறாய்? நிவாஸ் கேட்க,
ஆமாடா ப்ளீஸ் தனியே போகாதே! கெஞ்சினான் அர்ஜூன்.
ப்ளீஸ் அர்ஜூன்.எனக்கும் இதயா சொன்னது சரியாக தான் படுகிறது. உனக்கும் ஏதாவது ஒன்று என்றால் உன்னுடைய குடும்பம் வருத்தப்படுவாங்க. அவங்களும் ஸ்ரீயை தான் காயப்படுத்துவார்கள். யாருமில்லாது இருப்பவன் நான் தான். என்னால் மட்டுமே பிரச்சனையை முடிக்க முடியும் என்று ஆணித்தனமாக கூறி விட்டு அவன் சென்று விட்டான்.
என்னால் உங்கள் இருவரையும் கண்டிப்பாக தனியே விட முடியாது என்று மனதினுள் நினைத்துக் கொண்டு, நாளை அந்த பொம்பளையை பார்க்க நான் செல்வேன் உனக்கு முன்னதாக. உள்ளே சென்றான். மற்றவர்களிடம் சோகத்தோடு அவன் பேச கூட விட மாட்டேங்கிறான் என்றான்.
அகில் அர்ஜூனை முறைத்தவாறு இருக்க, தாரிகாவின் அம்மாவும் வருத்தமுடன் அவரது கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அவர் முழுவதையும் யாரிடமும் கூறவில்லை தாரிகா தவிர.ஆனால் நிவாஸ், ஆருத்ராவிற்கு தெரிந்து விட்டது இவர்களுக்கு தெரியாது.
அதிகாலை பகலவன் தன் காதலியான மலையிலிருந்து மீண்டெழுந்து வந்து, தன் வீச்சுகளை மக்களிடம் தெளித்துக் கொண்டே வெளியே வந்தார். ஹாஸ்பிட்டலில் தருண் அப்பா டென்சனோடு அமர்ந்திருந்தார். நர்ஸ் தருண் அறைக்கு சென்று வந்தார்.
அவன் விழித்துவிட்டானா? என்று அனைவரும் கும்பலாக வந்து நிற்க, இரவு என்பதால் பிரச்சனை ஏதுமில்லை சார். இனி ஆட்கள் வருவார்கள். இத்தனை பேர் இங்கே இருந்தால் சரியாக இராது. யாராவது இருவர் மட்டும் இருந்தால் கூட போதும். அனைவரும் கிளம்புங்கள். டாக்டர் வந்தார் திட்டுவார் என்று நர்ஸ் கூறினார்.
அப்பா, நீங்களும் நானும் தருணுடன் இருப்போம். மற்றவர்கள் கிளம்பட்டும் என்றான் பிரதீப். அனைவரும் கிளம்ப, இதயாவும் அர்ஜூனும் தருண் அறையையே பார்த்துக் கொண்டு நின்றனர்.
நீங்களும் கிளம்புங்கள் என்றார் அப்பா. அவள் மாட்டேன் என்று தலையசைத்தாள்.
அம்மா..நீ ஓய்வெடுத்து விட்டு வாம்மா. நான் அவன் அம்மாவிடம் கூறவில்லை. புவனாவிற்கு மட்டும் தான் தெரியும். அதனால் நான் அவனை பார்த்து விட்டு சென்று அவளை சமாதானப்படுத்தி விட்டு புவனாவை அழைத்து வரணும்.நீ வந்த பின் நான் கிளம்புகிறேன் என்று இதயா அம்மாவிடம் கொஞ்ச நேரம் அவனை பார்த்துக் கொள்ள முடியுமா? உங்களுக்கு சிரமம் தானே! என்று தருண் அப்பா வருத்ததுடன் கேட்டார்.
வீட்டில் நான் சும்மா தான் இருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் எங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்றார் இன்பாவின் அம்மா.
அண்ணா! நானும் வீட்டிற்கு சென்று தயாராகி வருகிறேன். நீங்கள் கிளம்பிய பின் இவர்களுடன் நானும் இங்கே இருக்கிறேன் என்றான் அர்ஜூன்.
அப்பா அவனது தோளை தட்டிக் கொடுக்க, அர்ஜூனிற்கு ஆதரவாக இருந்தது.அவர்கள் கிளம்ப, அனைவரும் கண்டிப்பாக கல்லூரி செல்ல வேண்டும் என்று சைலேஷ் மெசேஜ் வந்தது வீட்டிற்கு சென்றவர்களுக்கு.
அனைவரும் ஒத்துக் கொள்ள, நானும் இதயாவும் தருணுடன் தான் இருப்போம் என்று அர்ஜூன் உறுதியாக சொல்ல, கவினும் தாரிகாவும் அன்று விடுப்பு எடுப்பதாக கவின் கூறினான். அவளது அப்பாவை பார்த்துக் கொள்வதற்காக. மற்றவர்கள் ஒத்துக் கொண்டனர்.