ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 79.

ஸ்ரீ கிளம்பியவுடன் அறைக்கு சென்றார் கமலி. அவருக்கு மனம் சரியில்லாது இருக்கவே, பால்கனிக்கு சென்று வானை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார். தூரத்தில் அழுது கொண்டே அமர்ந்திருந்த ஸ்ரீயை பார்த்தார். அவளை கவனிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீ கமலி வீட்டிலிருந்து வெளியே வந்ததும், துவண்டு அழ ஆரம்பித்தாள். வேகமாக ஓடினாள். அதுவும் முடியாமல் அங்கேயே உட்கார்ந்து,

அர்ஜூன் சாரிடா, நான் என்ன செய்து வந்திருக்கிறேன் தெரியுமா? நினைத்தாலே மனம் வலிக்கிறது. உனக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் உன்னை வேறோரு பொண்ணுக்கு மணமுடிக்க சம்மதம் என்று ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டேன் உன் அம்மாவிடம்.

அம்மா..என்னால முடியல.எனக்கு அர்ஜூன் வேண்டும்மா இல்லையென்றால் என்னால் வாழவே முடியாதும்மா என்று கதறி கதறி அழுதாள். அவள் பேசுவது கேட்கவில்லை கமலிக்கு. ஆனால் அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தார். பின் அவர் கிளம்பி கீழே வந்தார். ஸ்ரீ மெதுவாக சோர்வுடன் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியாமலே மறைந்து மறைந்து அவளை பின் தொடர்ந்தார்.

வெகுதூரம் நடந்தாள். அவரும் சளைக்காமல் அவளை பின் தொடர்ந்தார். அதற்கு மேல் முடியாமல்,ஓரிடத்தில் அமர்ந்து தண்ணீரை பருகி விட்டு, மீண்டும் அழுதாள்.

ஏன் என்னை சுற்றி இப்படியெல்லாம் நடக்கிறது? சாரி..அர்ஜூன் சாரி சாரி என்று பலமுறை கூறிக் கொண்டே அழுதாள்.

அம்மா, அப்பா என்னை மட்டும் தனியா விட்டுட்டு போயிட்டீங்க? அன்று நீங்கள் தடுக்கலேன்னா நானும் உங்களுடனே வந்திருப்பேன்ல. அம்மா, நீங்க சொன்ன மாதிரி ஆன்ட்டி, ரொம்ப மோசமானவங்க. அவங்க கொலையெல்லாம் சாதாரணமா பண்றாங்க.

என்னோட பயமே என்னோட ப்ரெண்ட்ஸும் அர்ஜூனும் தான். தருணும் என்னால தான மருத்துவமனையில் இருக்கிறான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இனி அவர்களை விட்டு விலகி இருந்தா தான் என் ஆன்ட்டி அமைதியா இருப்பாங்க.கொலை தான்னு பார்த்தா, போதை மருந்து பிஸினஸ் வேற. பாவம் ஜிதின் என்று புலம்பிக் கொண்டே போனை பார்த்தாள்.

அர்ஜூன் போன் வர, அவனது போட்டோவை பார்த்தவாறே, அர்ஜூன் உன்னை விட்டு போறதுக்கு முடிவெடுத்த பின் என் மனம் பாடாய் படுகிறதுடா. இனி எனக்கு உன்னுடைய காதல் கிடைக்காதது போல் தான் நடந்து கொள்வேன்.என்னை காயப்படுத்தி இப்படி எத்தனை நாட்கள் தான் உயிரோடு இருப்பேனோ? தெரியலடா என்றவாறு அவனது போட்டோவிற்கு முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டாள்.

இந்த கொஞ்ச நேரமே என்னால் உன்னை பார்க்காமல் இருக்க முடியல. என்னால் நீயில்லாது வாழ முடியாதுடா. கண்டிப்பா..கொஞ்ச நாள் உன்னை பார்த்து விட்டு போய் விடுகிறேன். தருணுடன் நீ அதிக நேரம் செலவழிக்க போகிறாய்? அதற்காக தான் உன் அம்மாவிடம் ஒரு மாதத்திற்கு மேலும் நேரம் கேட்டிருக்கிறேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு கொடுத்த வார்த்தையை காப்பேன்டா என்றாள்.

அர்ஜூனை துண்டித்து விட்டு அவளாகவே ஸ்ரீ பேசிக் கொண்டிருக்க, கவின் சத்தம் கேட்டது.

ஜில்லு..நில்லு என்று கத்தி கொண்டே தாரிகா பின் ஓடி வந்து கொண்டிருக்க, ஸ்ரீ அவர்களை பார்த்து கமலியை நோக்கி ஓடி வந்தாள்.

இவ எதுக்கு என்னை நோக்கி வருகிறாள்? என்று அவர் வேகமாக வேறு இடம் பார்த்து மறைந்து கொண்டார். ஸ்ரீ கமலி மறைந்திருந்த இடத்தில் மறைந்து கொண்டு எட்டிப் பார்த்தாள்.

இவர்களை பார்த்து இவள் ஏன் மறைகிறாள்? என்று புரியாமல் ஸ்ரீயை பார்த்தார் கமலி.

கவின் தாரிகாவை பிடித்து, நீ சொல்ல போகிறாயா? இல்லையா? சத்தமிட்டான். அவள் அழ ஆரம்பித்தாள்.

நிஜமாகவே ஸ்ரீ எங்கே? என்று எனக்கு தெரியாது.

வேற ஏதாவது நீ என்னிடம் சொல்ல இருக்கிறதா?

இல்லை.

இருக்கு.நீயும் ஸ்ரீயும் மாலையிலிருந்தே சரியில்லை. சொல்லப் போகிறாயா? இல்லையா?

எனக்கு தெரியாது கத்தினாள். பின் நான் இப்பொழுதே ஸ்ரீயை பார்க்கணும் என்று தாரிகா அழுதாள்.

எதுக்கு அழுற? அவளோட ஆன்ட்டி ஏதும் பிரச்சனை பண்ணாங்களா? கவின் கேட்டார்.

அங்கே விருட்டென பைக்கை நிறுத்தினான் அர்ஜூன். இவர்கள் பேசுவதை பார்த்து, கவினை பார்த்து அவளை பற்றி ஏதாவது தெரிந்ததா?

அவன் தாரிகாவை பார்த்தான்.

என்னை எதுக்கு பாக்குறீங்க? எனக்கு தெரியாது. நானும் அவளை பார்க்கணும் என்றாள் அர்ஜூனை முறைத்தவாறு.

அர்ஜூனை பார்த்த ஸ்ரீ, அங்கேயே திரும்பி அமர்ந்தாள். கால்களில் முகத்தை புதைத்து சத்தமில்லாது தேம்பினாள்.

தாரி உன்னிடம் சொல்லாமல் அவள் செல்ல மாட்டாள் அர்ஜூன் அவளை பார்த்தான்.

தாரிகா கையை கட்டிக் கொண்டு, நீ எதுக்கு அவளை தேடுற? அவள் இனி உனக்கு தேவையில்லையே? சினத்துடன் கத்தினாள்.

ஏன் இப்படி பேசுற? கவின் அவளை பிடித்து இழுக்க,

ஏன் பேசுறேனா? அன்று யாசு சீனியர் ஸ்ரீயை பற்றி பேசும் போது மட்டும் இவனும் அகில் சீனியரும் அடிக்க வந்தாங்க? இப்ப ரெண்டு பேரும் என்னடா செஞ்சாங்க? கவினிடம் கத்தினாள்.

டா வா? என்று அவளை கவின் அவளை பார்க்க,

ஆமா.. நான் அவளை காணோம்னு தேடினா.நீங்க அவளை பத்தி கேட்டுகிட்டே இருக்கீங்க? அவ எங்கிட்ட சொல்லியிருப்பான்னு சொல்றீங்க? என்னை விட முக்கியமானவங்க அவளுக்கு இருக்காங்க என்றாள்.

நீ என்ன பேசுற? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன் நீ அவளை தேட தேவையில்லை. அவளை நாங்க பாத்துக்குவோம். போ உன் வேலையை பாரு. அவள் தான் உன் காதலை நிராகரித்து விட்டாள்ல. இனி உனக்கு அவ தேவைப்பட மாட்டா கத்தினாள்.

அர்ஜூன் சினத்துடன் அவளருகே வந்து, என்ன சொன்ன? கேட்டான்.அவள் மறுபடியும் கூற, தாரிகாவை அடித்து விட்டான்.

ஏன்டா அவளை அடிச்ச? கவின் அர்ஜூன் சட்டையை பிடித்தான்.ஸ்ரீ வேகமாக எழுந்து பார்த்தாள்.

இங்க பாருங்க. யாரும் என்னோட காதலை பத்தி பேச தேவையில்ல. அகிலுக்கு அவளை விட்டு கொடுக்க தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. எப்பொழுதும் போல் தான் என்னை வேண்டாம் என்றாள்.

இதற்கு முன் என்றால் அவளை அகிலுக்கு விட்டு கொடுக்க நினைத்திருப்பேன். அவள் வேண்டாம்னு சொன்னாலும் சரி, அவள் என்ன பேசினாலும் என் மனம் மாறாது. அவளை கொஞ்ச நாட்களாக என் பொண்டாட்டியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது போல் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் அப்படி தான் நினைப்பேன்.அவள் ஜிதினை கல்யாணம் செய்தாலும் என்னால என்னை மாத்திக்க முடியாது.

என்னோட ஏஞ்சல் இடத்தை எந்த பொண்ணாலும் நிரப்ப முடியாது. யாரையும் என் வாழ்வில் வர விட மாட்டேன். யாராவது அவளை ஏதாவது செய்ய நினைத்தால் கொல்ல கூட தயங்க மாட்டேன் என்றான்.

கமலி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர, ஒரு பொண்ணு அவரை தாங்கினாள்.

அர்ஜூன்..என்று அவனது நாமத்தை உச்சரித்தவாறு ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள்.

என்னடா சொல்ற? உங்களுக்குள்ள? கவின் கேட்டான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கோவிலில் நடந்தது, வினிதா வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி விட்டு, அவனை கட்டிப் பிடித்து, இவளை போலவே அஞ்சும்மாவும் திட்டிடாங்கடா.அப்புறம் நிவாஸ் கூறியதை சொல்லி குழந்தை போல் அழுது கொண்டே அவ எங்க இருக்கான்னு தெரியலடா என்று அழுதான்.

அஞ்சும்மா வீட்டில், ஜிதின் வீட்டில் எல்லாம் பார்த்தாச்சுடா. அவளை காணோம்டா.

தாரிகா கண்கொட்டாமல் அர்ஜூனை பார்த்துக் கொண்டு, நான் தான் உன்னை தவறாக நினைத்து விட்டேன் மனதினுள் நினைத்துக் கொண்டேன் என்று அவளும் இருவரையும் கட்டிக் கொண்டாள்.

பின் அர்ஜூனை பார்த்து, இதயா பேசும் போதும் அமைதியா இருந்த?

தருணை அவள் காதலிக்கிறாள். அதனால் கோபத்தில் தான் அவ்வாறு பேசினாள். நான் இடையே வந்தால் ஸ்ரீ மீது தான் அவளுக்கு கோபம் அதிகமாகும். அதனால் தான் அமைதியாக இருந்தேன். அந்நிலையில் சண்டை போடுவது நல்லதில்லை என்று தோன்றியது.

தாரிகா அர்ஜூனிடம் சாரி சொல்ல, அவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா? எங்க போயிருப்பா? என்று.

அவளுக்கு அர்ஜூன் அம்மா தோன்றினாலும் தெரியலையே என்றாள்.

அவனது கைகடிகாரத்தை திருப்பியவன், நேரமாகி விட்டது. தருணிற்கு சிகிச்சை முடிந்திருக்கும். மருத்துவர் என்ன சொல்றாங்கனு பார்த்துட்டு வந்திடுறேன்.நீங்க அவளை தேடுறீங்களா? கேட்டான். அவனது போன் ஒலித்தது.

அண்ணா! வந்துட்டீங்களா? அப்பா, புவனா வந்திருக்காங்களா?

புவனா வரல. அப்பாவை மட்டும் அழைத்து வந்திருக்கிறேன். அம்மாவை பார்க்க யாராவது வேண்டுமே! பிரதீப் கூறினான்.

ஓ.கே அண்ணா! நீங்க முன்னாடி போங்க. நான் வருகிறேன்.

நீ எங்கடா இருக்க? கேட்டார் அவர்.

நான் என்று தயங்கியவன். நாம் நேரில் பேசுவோம் என்று போனை வைத்து விட்டு, தருண் அப்பா வந்து விட்டார். நான் செல்கிறேன் என்று கிளம்பினான். கவினும் தாரிகாவும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

ஸ்ரீ ஏற்கனவே உட்கார்ந்திருந்த இடத்தில் அமர, கமலியை பிடித்த அந்த பொண்ணு,

அக்கா..பாவம் என்றாள்.

உனக்கு அவளை தெரியுமா? கேட்டார்.

ம்..தெரியும்.

நீ யார்? உன் பெயர்? கேட்டார்.

ஆருத்ரா மருத்துவமனை டீன் பொண்ணு ஆருத்ரா என்றாள்.அங்கு தான் தருண் இருக்கானா? கேட்டார்.

ம்ம் என்றாள்.

உனக்கு எப்படி ஸ்ரீயை தெரியும்? உனக்கு அர்ஜூனை தெரியுமா? கேட்டார்.

எனக்கு அர்ஜூனை நல்லா தெரியும். இருவரும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவன் வேறு கல்லூரிக்கு மாறி விட்டான். ஆனால் அவனை எனக்கு பிடிக்காது என்றாள் பட்டென.

ஏன்மா?

ஆன்ட்டி, அவன் சரியான சிடுமூஞ்சி. ப்ரெண்ட்ஸ் கிட்ட கூட சிரித்து பேச மாட்டான். பொண்ணுங்க பக்கத்தில் வந்தா கொலை செய்து விடுபவன் போல் தான் பேசுவான். அவன் பேசிய ஒரே பொண்ணு மேகா மட்டும் தான்.

ஆனால் இப்பொழுது எல்லாரிடமும் சிரிக்கிறான்.ஸ்ரீ அக்கா, மத்தவங்க எல்லாரும் அவன் ப்ரெண்ட்ஸ் போல. அவங்கள தான் ஆழமா காதலிக்கிறான்.

அப்பப்பா..என்ன காதல்? நான் நினைத்தது போல் அவன் இல்லை. அவனுக்கு பிடித்தவர்கள் அருகே இல்லாமல் தான் எங்கள் கல்லூரியில் இருந்த போது அவ்வாறு நடந்திருக்கிறான் என்று அர்ஜூனை புகழ்ந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன் அவனை பார்த்தேன். நானே வியக்கும் அளவுக்கு நன்றாக பேசினான் என்றவள் பேச்சை நிறுத்தி, வந்துட்டான் பாருங்க என்னோட ஹீரோ என்று பல்லை காட்டினாள் ஆருத்ரா.

யார சொல்றா? என்று பார்த்தால் நிவாஸ் ஸ்ரீக்கு பின்னே நின்று கொண்டிருந்தான்.ஆருத்ரா அவனை பார்த்து வழிந்து கொண்டிருக்க, இந்தாம்மா.. துடச்சுக்கோ என்று கைக்குட்டையை அவளிடம் கொடுக்க, தேங்க்ஸ் ஆன்ட்டி என்றாள்.

நீ எந்த மாதிரி பொண்ணு? கேட்டார்.அவள் ஏதும் கூறாமல் நிவாசையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் எழுந்து மறைந்து கொள்ள, நீ எதுக்கு மறைஞ்சு நிக்குற? போ,..பேசு என்றார்.

ஆன்ட்டி.நீங்க வேற அவனோட அக்காவுக்கு பிரச்சனை வரக் கூடாதுன்னு அவங்க கூடவே இருக்கான். அவங்க ஆன்ட்டி தான் அவங்க ரெண்டு பேரோட பெற்றோர்களை கொன்றிருக்கிறார்கள். அவர்களை பழி வாங்க தான் இருவரும் அந்த வீட்டில இருக்காங்க.பாவம் அந்த அக்காவை அவங்க மாமா ஜிதின் ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க என்றாள்.

என்ன சொல்ற? நிஜமா தான் சொல்றியா?கொலையா பண்ணா?

ஆன்ட்டி, நீங்க யாரு? நீங்களும் அவங்க மாதிரி கொலை பண்றவங்களா? என்று பின் நகர்ந்தாள்.

இல்லைம்மா. நான் அர்ஜூனோட அம்மா என்றார்.

அவனோட அம்மாவா..என்று சாரி ஆன்ட்டி. அவனை பத்தி உங்க கிட்ட..என்றவள் அமைதியானாள்.