ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 78.

அர்ஜூன் முன் வந்த அபி, தருணது பையிலிருந்த ஒரு பைலை காட்டினான்.

என்னடா இது? என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தான் அர்ஜூன்.

தருண், கயலின் கம்பெனி பற்றிய விசாரித்து வைத்திருக்கிறான். அவனுக்கு நடந்தது விபத்து அல்ல.அந்த கார் என்னை தான் குறி வைத்துள்ளது.அவன் தான் என்னை காப்பாற்றுகிறேன் என்று இடையே வந்து விட்டான் என்றான் அபி.

என்ன சொல்ற? அது விபத்தில்லையா? என்று இன்பாவிடம் தருண் கடைசியாக கூறிய சார் என்பது நினைவிற்கு வந்தது. அவள் அழுது கொண்டே அப்படியே அமர்ந்தாள்.

அர்ஜூன்..அவன் தான்..அவன் தான்..கிஷோர்.தருண் அந்நிலையில் கூறியது அவனை தான். அபியை என்றவள் அழ ஆரம்பித்தாள் இன்பா. அவளது அம்மா அருகே வந்து, யார் கிஷோர்? என்று கேட்டார். அபி அவனை பற்றி கூறினான்.

அபி நீ சொன்னது போல் முன்பே சீரியசாக எடுக்காமல் விட்டு விட்டேன். அதனால் தான் இப்படி நடந்து விட்டது என்று இன்பா அழுதாள் அபியை பார்த்துக் கொண்டே.அவனும் இன்பாவிடம் வந்து,

அப்படியெல்லாம் இல்லை. உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள்! இன்பாவை அபி சமாதானப்படுத்தினான்.

அர்ஜூனிற்கு போன் வந்தது. அவன் ஸ்ரீயை பார்த்தான். அவள் மறைந்து நின்றாலும் அவன் கண்டு கொண்டான்.

போனை எடுத்து,ஹலோ என்றான்.

அர்ஜூன் எப்படி இருக்க?அச்சோ உன்னோட உயிர்த்தோழன் உயிர் போகப் போகிறது போல். அவன் சும்மா இருந்திருக்கலாம். அவன் என் கம்பெனியை பற்றி விசாரித்தானாம்மே! அது சரியில்லை என்று தோன்றியது. அதான் அபியை வைத்து ஒரு ப்ளே பண்ணேன். பரவாயில்லை..உன் தோழனும் உன்னை போல் தான். அபிக்காக உயிரையே கொடுத்துட்டான்.

ஏய்,.எல்லாத்துக்கும் காரணமே நீ தானா? உன்னை சும்மா விட மாட்டேன்டி. என்னோட தருணுக்கு ஏதும் ஆகாது. அவனுக்கு ஏதாவது ஆனா..நீ செத்த..அடுத்த நிமிஷம் உன் முன்னால் தான் இருப்பேன் என்றான்.

நான் ஏதும் செய்யவில்லை. நீங்கள் தான் அனைவரிடமும் பிரச்சனை செய்கிறீர்களே! அதை சாதமாக எடுத்து தான் அந்த கிஷோருக்கு பணம் கொடுத்தேன். முடித்து விட்டான். ஆனால் அவன் அபியை கொல்ல தான் வந்தான். ஆனால் எதிர்பார்த்தது போல் உன் நண்பன் தான் தானாக வந்து சிக்கிட்டான். இனி ஒவ்வொருவராக ஒருவர் மருத்துவமனைக்கு என்று மிரட்டினாள்.

உன்னை சும்மா விட மாட்டேன்டி..என்று கத்தி விட்டு போனை உடைத்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவனையே பார்த்தனர்.

யாருடா? அபி கேட்க, அர்ஜூன் கூறினான்.

இதயா கோபமாக, ஸ்ரீயை பிடித்து இழுத்து வந்து எல்லார் முன்னும் நிறுத்தினாள்.

போதுமாடி உனக்கு. இன்னும் எத்தனை பேர் சாவடிப்பீங்க? கத்தினாள் சினத்துடன்.

அவளை எதற்காக இழுக்கிறாய்?யாசு முன் வந்தாள்.

இவளுக்காக தான் எல்லாமே நடக்குது. சொல்லு.. சொல்லு.. என்று இதயா ஸ்ரீயை பிடித்து உலுக்கிக் கொண்டே அழுதாள்.

தாரிகா ஸ்ரீ அருகே வந்து, வா..செல்லலாம் என்றாள்.ஸ்ரீ அவளது கையை எடுத்து விட்டு, அவள் பேசட்டும் என்றாள் அமைதியாக. நிவாஸும் அவளருகே வந்து நின்றான்.

ஸ்ரீக்கு ரொம்ப கஷ்டமானது. ஆன்ட்டி தனக்கு பதிலாக தான் இவர்களை கஷ்டப்படுத்துறாங்க என்று அர்ஜூன் பேசியதை வைத்து, மனதை கட்டுப்படுத்தி அழாமல், பேசு..என்றாள் இதயாவிடமும்.

பேசவா? ஸ்ரீயை அடித்து விட்டாள் இதயா. அர்ஜூன் அப்பொழுது கூட ஏதும் பேசாமல் தான் இருந்தான். ஆனால் அவன் முகம் இறுக்கமாக இருந்தது. அதை பார்த்த ஸ்ரீ, அவனை பார்த்து விரக்தி புன்னகையுடன் மௌனமாகவே நின்றாள்.

இதற்கு மேல் முடியாது என்று அகில் வேகமாக ஸ்ரீயின் கையை பிடித்து வெளியே அழைத்து சென்றான். பின்னே தாரிகாவும் நிவாஸும் சென்றனர்.

அனைவரும் திகைப்புடன் பார்த்தனர். இன்பா இதயாவை அடித்து விட்டு, நீ எதுக்கு அவளை அடித்தாய்? அவளுக்கும் நம்மை போல் பிரச்சனை உள்ளது. தருணும் மற்றவர்களும் உதவ தான் செய்கிறார்கள். எனக்கு ஒன்னுன்னா சும்மா இருப்பியா நீ? அது போல தான் உதவ நினைச்சிருக்காங்க. உனக்கு முன்னாடியே ஸ்ரீயை தருணுக்கு தெரியும். அவனும் உதவ நினைத்திருக்கலாம் என்று திட்டினாள்.

நித்தி,யாசு, கவின், அபி அருகருகே நின்று கொண்டிருந்தனர்.தாரிகா அமைதியாக இருந்தது எனக்கு வியப்பா இருக்கு. அன்று மேகாவுடன் சண்டை போட்டாள். ஆனால் இன்று இதயாவை ஏதும் பேசவே இல்லை. எனக்கு ஏதோ தவறாக உள்ளது போல் தெரியுது என்றாள் நித்தி.

சரியா சொன்ன நித்தி. நான் அவளை அழைத்து வர, மருத்துவமனை சென்ற போதிலிருந்து அவள் சரியில்லை. அவள் மூடு அப்செட்டா இருக்கான்னு தான் விட்டுட்டேன். ஆனால் ஸ்ரீ, தாரிகா அமைதி ஏதோ உள்ளது என்று தவறாக தோன்றுகிறது கவின் கூறினான்.

யாசு கவனித்ததையும் சொல்ல, அவர்களும் அகில் சென்ற இடத்தை தொடர்ந்தனர்.

அகில் ஸ்ரீயிடம், என்ன நடக்கிறது? கேட்டான்.

என்னிடம் கேட்டா..எனக்கு என்ன தெரியும்?

சரி, இத விடு.அர்ஜூன் கிட்ட நோ சொன்னியா? கேட்டான் அகில்.

ஆமாம் சீனியர். நான் தான் ஜிதினை கல்யாணம் செய்ய போகிறேனே! என்றாள்.

இங்க பாரு..எதற்கெடுத்தாலும் ஜிதினை சொல்லி மறைக்காதே!எனக்கு தெளிவாக தெரிந்து விட்டது. நீ அர்ஜூனை காதலிப்பது.

நீங்களும் ஸ்மார்ட் தான் சீனியர் என்றாள் சிரிப்புடன்.

உன்னால் எப்படி சிரிக்க முடியுது? கத்தி விட்டான் அகில்.

கடுகடுப்பான முகத்துடன் சீனியர், யாருக்கும் இது தெரியக்கூடாது. அர்ஜூனுக்கோ வேறு யாருக்குமோ தெரிஞ்சா மறு நொடியே நீங்க என்னோட பிணத்தை தான் பார்ப்பீர்கள் மிரட்டினாள்.

நிவாஸ் ஸ்ரீயிடம், நீ என்ன சொன்ன? கன்னத்தில் அவளை அறைந்தான். எல்லாரும் போங்க என்று கத்தினான் நிவாஸ்.

அதை பார்த்து தாரிகா, தனியே ஓரிடத்தில் அமர்ந்தாள் சோர்வாக. அவளுக்கும் அர்ஜூன் அம்மா ஸ்ரீயிடம் பேசியது தான் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. ஸ்ரீ அங்கிருந்து வெளியே செல்ல, அகில் நிவாஸை சமாதானப்படுத்தினான்.

நிவாஸ் ஸ்ரீயை அடித்ததை பார்த்தனர் அவர்களை பின் தொடர்ந்து வந்தவர்கள்.

ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. நிவாசும் தனியே ஓரிடத்தில் அமர்ந்தான்.அகில் தாரிகா, நிவாசை பார்த்தவாறே இருந்தனர்.அப்பொழுது தான் அர்ஜூன் அங்கு வந்தான்.

என்னடா நடக்குது? ஒண்ணுமே புரியல அபி சொல்ல,

ஸ்ரீ நம் அனைவரிடமும் எதையோ மறைப்பது போல் உள்ளது யாசு கூறினாள்.அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தாரிகா வேகமாக எழுந்து வெளியே செல்ல, நில்லு தனியாக செல்லாதே உரக்க கத்தினான் கவின்.

ஸ்ரீ தனியே தான் சென்றிருக்கிறாள். அது உங்கள் யாருக்கும்  தெரியவில்லையா? திரும்பி அவனை பார்த்து கத்தி விட்டு சென்றாள்.கவினும் அவளை பின் தொடர்ந்தான்.

ஸ்ரீ எங்க போயிருக்கா? அர்ஜூன் கேட்க, அனைவரும் மலங்க விழித்தனர்.

எங்கேன்னு கூட அவள் சொல்லலையா? சத்தமிட்டான்.

ஏ..தம்பி. இது ஹாஸ்பிட்டல். கத்தாம இருங்க என்றார் ஒரு பெண்மணி.

அவளை கவனிக்கவே மாட்டீங்களா? சினத்துடன் அர்ஜூன் வினவ,

அர்ச்சு, உன்னிடம் ஒன்று கேக்கணும்? ஸ்ரீ உன் காதலை நிராகரித்ததால் தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தாயா? உனக்கே தெரியும்..நீ தான் அவளை சமாதானப்படுத்தி அவளோட ஆன்ட்டி விசயத்தில நாம தலையிட ஒத்துக்கிட்டா. இதயா பேசும் போது அமைதியா இருக்க? அதுக்கு காரணம் நீ தான? இதயா பேசும் போது அவள் உன்னை தான் கவனித்தாள் நித்தி கூறி விட்டு,

அதுமட்டுமல்ல,நான் அவளிடம் தோழியாக இருக்க கேட்ட போது கூட, வெளியே வைத்து காட்டிக் கொள்ளாதீர்கள் என்று தான் கூறினாள். அவளாக பிரச்சனையை கூறவும் இல்லை. உதவி கேட்கவும் இல்லை.

இத்தனை நாட்களாக எங்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. நண்பர்களை சேர்த்து கொள்ள.. என்ன? யாரிடமும் பேச கூட விட மாட்டார்கள். தனியாக தான் எங்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அவளுக்கு என்ன தோன்றியதோ! முதல் முறையாக ஸ்ரீயும் நானும் உங்களுடன் பழகினோம்.ஒரு வேலை உங்களது சிறு வயது தோழியுடனான நெருக்கம் கூட அவளுள் உணர வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் தான் எங்களை வைத்து விளையாடுகிறார்கள் என்று நினைத்தால் உங்களுக்கும் எங்களை பார்த்தால் விளையாட்டாக உள்ளதுல? அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் உங்களுக்கு புரியவில்லையா? ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. அவள் நிலையில் இருந்தால் தான் உங்களுக்கு புரியும்? ஆக்ரோசமாக கத்தி விட்டு நிவாஸ் அவர்களை பார்த்து,

இனி எங்களுடைய பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு யாரும் வேண்டாம். போதும்..அவளை விட்டு விடுங்கள். உங்களுக்கு அந்த கயலே பரவாயில்லை.

என்னுடைய அக்காவை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும்.இனி நீங்கள் யாரோ? நாங்கள் யாரோ? அவன் விலக, அர்ஜூன் நிவாஸ் கையை பிடித்தான்.

விடு..அர்ஜூன் என்று மருத்துவமனைக்குள் சென்றவன் இதயா அருகே சென்று, இனி ஸ்ரீயால் யாருக்கும் ஏதும் ஆகாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாக அவன் சென்றான்.

நில்லுடா..இன்பா பின்னே வந்தும் பயனில்லை.

தாரிகா அம்மா அதை பார்த்து அர்ஜூனிடம் வந்து, ஸ்ரீ எங்கே? கேட்டார். அவன் பதில் கூறாமலிருக்க,

உங்களை காதலிச்சா மட்டும் தான் உதவுவீங்களோ? நான் நினைச்ச மாதிரி நீ இல்ல. அவ எந்த நிலையில் இருக்கா? என்று அடிபட்ட உன் நண்பனை பார்த்து சிந்தித்து தெரிந்து கொள். அடுத்தது அவளாக கூட இருக்கலாம் என்றவர் ஒரு செவிலியரிடம் சென்று, என் கணவரை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். என்னோட பொண்ணை காணோம்.நான் பார்த்து விட்டு வருகிறேன் என்று வெளியே வந்தார். அர்ஜூனும் பின் வர, அவனை முறைத்து விட்டு சென்றார்.

ஸ்ரீயை தேடிச் சென்ற தாரிகா கண்ணில் ஸ்ரீ படவே இல்லை. அவள் அழுது கொண்டே அமர, கவின் தான் அவள் பின் வந்திருப்பானே!

எதற்கு அழுகிறாய்? அவன் கேட்டான்.

உங்களிடம் நான் எப்படி கூறுவது? என்று மனதினுள் நினைத்தவாறு, எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீனியர். ஸ்ரீக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்று அழுதாள்.

நீ எதற்கு பயப்படுகிறாய்? வேறு ஏதும் பிரச்சனையா? போட்டு வாங்க நினைத்தான். அவள் தெளிவாக தருணுக்கே இப்படி என்றால் ஸ்ரீ நிலை என்று மாற்றினாள்.

அழாதே! இத்தனை பேர் இருக்கிறோம். அவளை விட மாட்டோம் என்றான்.

என்ன விட மாட்டீங்களோ! அவள் இப்பொழுது எங்கு இருக்கிறாள்? என்று கூட தெரியவில்லை என்று புலம்பினாள் தாரிகா.

வா..அவளை தேடுவோம் என்று தாரிகா கையை பிடித்து அழைக்க, சீனியர் ஒரு முறை உங்களை அணைத்துக் கொள்ளவா? என்று கேட்டாள். அவன் கையை விரிக்க, அணைத்து அவனிடமிருந்து ஆறுதலை பெற்றுக் கொண்டாள்.

ஸ்ரீ,அர்ஜூன் அம்மா வீட்டிற்கு நேராக சென்றிருப்பாள். அவளை பார்த்து, இந்த நேரத்தில் எதற்காக வந்தாய்? வெறுப்புடன் கேட்டார்.

அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. அதை அடக்கியவள். எனக்கு ஒரு மாதம் போதுமா? என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் நிம்மதிக்காக ஒப்பந்தம் ஒன்று தயார் செய்து எடுத்து வந்துள்ளேன். இந்தாருங்கள் என்று காகிதத்தை நீட்டினாள்.

அதில் உங்கள் மகனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவனை விட்டு, நான் கண்டிப்பாக சென்று விடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதற்கு பதிலாக அர்ஜூனுடன் அனு வாழ்நாள் முழுவதும் உடன் இருக்க நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பதை பார்த்து, சினத்துடன் எழுந்தார்.

அந்த பிள்ளைக்காக நீ ஏன் பேசுகிறாய்?சீற்றத்துடன் கேட்டார்.

இன்னொரு ஸ்ரீ கஷ்டப்பட வேண்டாம் என்று தான்.

என்ன உளறுகிறாய்? அவளை நான் அர்ஜூனிடம் விட்டால், என் பையனை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?

கண்டிப்பாக ஒரு பொண்ணாவது வருவாள். அப்படி ஒருத்தியால் மட்டும் தான் அர்ஜூனை சந்தோசமாக வைத்துக் கொள்ள முடியும். எனக்கு அர்ஜூன், அனு சந்தோசமா இருக்கணும் என்றாள்.

பைத்தியம் மாதிரி பேசாதே! அவர் திட்ட,

மேகாவை திருமணம் செய்து வைத்தால், கண்டிப்பாக அவனால் சந்தோசமாக இருக்க முடியாது.தயவு செய்து வேரொரு பொண்ணை பாருங்கள். இப்பொழுதே கூட ஆரம்பிங்கள்.

இதில் வேறெதுவும் திட்டம் வைத்திருக்கிறாயா?

இல்லையே..எதுக்கு கேக்குறீங்க?

அவனை விட்டு கொடுக்க முடிவெடுத்து விட்டாயா? இல்லை என்னிடம் நடித்து விட்டு, அவனிடம் என்னை பற்றி தவறாக கூறி எங்களை பிரிக்க பார்க்கிறாயா?

மேம்..நீங்கள் உங்கள் மகனை விட்டு தனியே தான் இருக்கிறீர்கள் கேலியாக கூறி விட்டு, அர்ஜூன் என்னிடம் காதலை கூறினான்.நான் நிராகரித்து விட்டேன். இனி கொஞ்ச நாள் அவனருகே மட்டும் இருந்து விட்டு செல்கிறேனே! என்று கெஞ்சுதலாக கேட்க, அர்ஜூன் அம்மாவிற்கு ஸ்ரீயின் செயல்கள் ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீ இது நீ தானா? இல்லை என்னிடம் நடிக்கிறாயா? மனதினுள் கேட்டுக் கொண்டிருந்தார்.

நீங்கள் கையெழுத்திட்டால் நான் கிளம்பி விடுவேன் என்றாள்.

ஆன்ட்டி என்று தானே அழைப்பாய்?கேட்டார்.

எள்ளலாக சிரித்தவள் எனக்கும் அர்ஜூனுக்கும் ஒன்றுமில்லை என்ற போது நீங்கள் எனக்கு யாரோ தானே! மேம் என்றாள்.

இம்முறை அர்ஜூன் அம்மாவிற்கு ஒரு மாதிரி ஆனது. பாசமில்லை என்றாலும் சிறுவயதிலிருந்து ஆன்ட்டி என்று அழைத்தவள் மேம் என்று விட்டாலே என்று மனதினுள் நினைத்தார்.

எனக்கு இந்த ஸ்ரீ புதுவிதமாக தெரிகிறாள்.நான் ஒத்துக் கொள்கிறேன் என்று இருவரும் கையெழுத்திட, அவள் கிளம்ப, காபி சாப்பிடுகிறாயா? என்று கேட்டார்.

நோ மேம்.யாருன்னு தெரியாத இடத்துல எனக்கு சாப்பிட்டு பழக்கமில்லை என்று கிளம்பினாள். அவள் இப்படி பேசி விட்டாளே! வருந்தினார் அர்ஜூன் அம்மா.

ஒரு நிமிடம் நில்லு மணி பன்னிரண்டாகிறது. நான் என் ஆட்களை அனுப்புகிறேன் என்று கை தட்ட, இருவர் முன் வந்தனர்.

நோ மேம். நான் இப்பொழுதே பழகிக் கொள்கிறேன் என்று திரும்பாது கண் கலங்கியவாறு வெளியே சென்றாள்.

         “உனை மனதில் சுமந்து

          கருவாய் காப்பேனடா!

         கனவில் தோன்றி எனை

              நீ ஆள்வாயடா!

            உன் அருகே நிற்க

            தயங்க வைத்தாயேடா!

         உன்னுடன் வாழ்ந்த காலமே

            சொற்ப காலமானதடா!

            சொற்ப காலமானதடா!”