ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவர்க்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 77.
அபிக்கு போன் வந்தது பிரதீப்பிடமிருந்து, அவனும் இன்பா சேர்ந்து ஓரிடத்தில் இருக்க,தருணும் இதயாவும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர். எப்போதும் அவனது தோளில் கை போட்டிருப்பவள் இன்று அவனை அணைத்தபடி அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டு வந்தாள். அவன் வண்டியை இடையிலே நிறுத்தி அவளது கை மீது கை வைத்தான். அவளது கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டாள். அவளோ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு சென்று அவளை எழுப்பினான்.
தேங்க்ஸ் தருண் என்று கூறி விட்டு அவள் செல்ல, அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவள் திரும்பி அவனை பார்த்து, போ என்று கையசைக்க, அபிக்காக காத்திருக்கிறேன் என்றான்.
அவள் புன்னகையுடன் உள்ளே வந்தாள்.அம்மா இன்பாவை கேட்க, அவள் அபியுடன் வருவாள் என்றாள்.
என்னடி, அந்த பையனை அவளுக்கு பிடிச்சிருச்சா? கேட்டார். தெரியலம்மா..எனக்கு சோர்வாக உள்ளது. நான் என் அறைக்கு செல்கிறேன் என்றாள். அவர் வெளியே எட்டிப் பார்த்து, அவன் ஏன்டி, வெளியே நிக்கிறான்?
அபிக்காக வெயிட் பண்றான்?
அவனை உள்ளே வரச் சொல்லு. அவன் வரும் வரை உள்ளே இருக்கட்டும் என்றார்.
அம்மா, நீங்களே பார்த்துக்கோங்க.நான் உள்ளே செல்கிறேன் என்று அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வெளியே சென்ற அம்மா,தருண் அங்கில்லாது தேடினார்.
அவன் புவியிடம் போனிலே, பாடக் கேள்விக்கான விடைகளை விவரித்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து மலர்வுடன் அருகில் வந்தார்.
தம்பி, உள்ள வந்து பேசுங்க என்றார்.
இருக்கட்டுமா என்றான்.
அட, வாங்க தம்பி என்றார்.
அண்ணா யாரு? புவி கேட்க, அவன் தலையசைத்து அவர் பின்னே சென்றான்.
ப்ரெண்டோட அம்மா புவி என்றான். அம்மாவிடம் தங்கை என்றான்.
அவர் தலையசைத்து, உள்ளே சென்று இதயா என்ன செய்ற? வெளிய வா என்றார்.
அம்மா, நான் தான் சொன்னேன்ல.எனக்கு எதுவும் வேண்டாம். என்னை ஓய்வெடுக்க விடும்மா.
அண்ணா! பொண்ணு வாய்ஸ் கேக்குது? புவி கேட்க,
ம்ம்..அதுவா? நாளைக்கு சொல்கிறேனே! என்று கூற,
அண்ணா நீ அங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?
யாரு அந்த பொண்ணு? சொல்லுடா என்றாள்.
நாளை பேசலாம் என்று போனை வைத்து விட்டான். தருணிற்கு போன் வந்தது.
புவி..என்றான் யாரென்று பாராமல். அர்ஜூன் தான் போதையில் போன் செய்திருக்கிறான்.
போனை பார்த்தவன் அர்ஜூன் என்ன பேசுற? என்று எழுந்தான் தருண். அவன் குளறிய படி அவ என்ன வேண்டாம்னு சொல்லிட்டாடா?அழுதான்.
தெளிவா பேசுடா?
கவின் அர்ஜூனிடம் போனை பிடுங்கி, ஸ்ரீயை அடிச்சிருவோம்டா என்று அவனும் உளறினான்.
கவின் எங்கடா இருக்கீங்க? என்ன ஆச்சு? கேட்டான்.
அவன் மீண்டும் உளற,தருணுக்கு கோபம் வந்தது. எவனாது ஒழுங்கா பேசுங்கடா என்றான் எரிச்சலுடன்.
இதயாவும் வெளியே வந்தாள். அம்மாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதயாவை பார்த்ததும் அவளிடம், உன்னிடம் நித்தி, யாசு, ஸ்ரீ, தாரிகா யாருடைய நம்பராவது இருக்கா? கேட்டான் தருண்.
அவங்க உன்னோட ப்ரெண்ட்ஸ் தானே. உன்னிடம் இல்லையா?
இல்ல..எனக்கு அவங்களுடன் பழக்கமில்லை. அர்ஜூனுடன் மட்டும் தான் பேசுவேன்.இப்பொழுது தான் அர்ஜூனுக்காக பேசுகிறேன் என்றான்.
அபியுமா பழக்கமில்லை? கேட்டாள் இதயா.
ஆமாம் என்றான்.
எல்லாரும் ஒரே ஊரு தான?
ஆமா. ஒரே பள்ளி தான் என்றான்.
அர்ஜூன் மட்டும் தான் இப்பொழுது வரை ப்ரெண்டு.
என்னடா சொல்ற? அதிசய பிறவி மாதிரி பேசுற? கேட்டாள்.
நம்பர் இருக்கா? மீண்டும் கேட்டான்.
இல்லையே என்றாள்.
அபியும் இன்பாவும் வந்தனர். அபி வெளியே இருக்க, வேகமாக தருண் அபியிடம் சென்றான். அர்ஜூனிடமிருந்து சரியாக தருணிற்கு போன் வந்தது. அவன் எடுத்தான்.
சார்..உங்க நம்பர் தான் முன் இருந்தது.அதான் போன் செய்தோம். ஒருவர் மயங்கி விட்டார்.மற்றவர் புலம்பிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் சீக்கிரம் வாங்க. இங்க சில ரவுடி பசங்க வேற இருக்காங்க. இந்த போனுக்குரியவரை பார்த்தால் பணக்கார வீட்டு பையன் போல் இருக்கார். ஏதும் பிரச்சனையாகிடாமல் சீக்கிரம் வாங்க சார் என்று ஒருவர் கூறினார்.
சார், கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள்.நாங்கள் சீக்கிரம் வந்து விடுவோம் என்று போனை அணைத்தவன். அபி தாரிகாவுக்கு போனை போடு என்றவன், இன்பா அம்மாவிடம் நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறி விட்டு அபியை பிடித்து இழுத்தான்.
இருடா சொல்லிட்டு வாரேன்.ஏதும் பிரச்சனையா? அபி கேட்க, இந்த அர்ஜூனை என்ன தான் செய்வதோ? அவனை திட்டிக் கொண்டு தாரிகாவிடம் விசயத்தை கேட்டான்.
இருக்கிற பிரச்சனை போதாதா? என்று தலையில் அடித்துக் கொண்டான் தருண். இன்பாவின் குடும்பத்தினர் தருணை பார்த்து சிரிக்க, அபியும் கூறி விட்டு தருணிடம் வர, அபியிடம் அர்ஜூன் காதலை ஸ்ரீ நிராகரித்து விட்டாளாம் என்று யோசிக்க, அபி இன்பாவிடம் மேம்..நீங்க கேட்டதுக்கான விடை நாளையே கிடைத்து விடும் என்று அவளருகே வந்து கூறி விட்டு ஓடினான்.
எதுக்கான விடை? இதயா கேட்டாள்.
ஸ்ரீ விசயம்.
அக்கா அவளை இன்று பார்த்தாயா? அர்ஜூன் சந்தோசத்தை பார்த்து வருத்தப்பட்டாள்.நான் கேட்க நினைத்தேன்? அவள் ரொம்ப எமோசனலா அவளது அறைக்கு சென்று விட்டாள்.
நல்லா கவனித்தாயா? இன்பா கேட்க, ஆமாக்கா. ஏன் மறுபடியும் கேட்கிறாய்? இதயா கேட்க,
இப்பொழுது தெரியும் பார் என்று இன்பா சோபாவில் அமர்ந்தவள். நித்திக்கு போன் செய்து கேட்டாள்.
நினைச்சேன்..ஸ்ரீ அர்ஜூனை வேண்டாம்னு சொல்லிட்டாலாம் என்று யோசனையோடு கூறினாள்.
அக்கா..அதுக்கு வாய்ப்பே இல்லைக்கா என்றாள் இதயா சொன்னாள்.
ஏன்டி அப்படி சொல்ற? அவள் அர்ஜூனிடம் எதையோ மறைப்பது அவளது முகத்தில் தெளிவாக தெரிந்தது.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியே பலத்த சத்தம் வெளியே வந்த இதயா அழுது கொண்டே சத்தம் வந்த இடத்திற்கு ஓட,
என்னடி ஆச்சு? என்று இன்பாவும் அம்மாவும் வந்தனர். அபி அழுது கொண்டே ஆம்பிலன்ஸூக்கு போன் செய்ய, தருண் இரத்தவெள்ளத்தில் மிதந்தான்.
இதயா அவனது கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். அம்மாவும் புரிந்து கொண்டார் இதயா தருணை காதலிப்பதை.
அவன் அனைவரையும் சுற்றி பார்த்தவன் இன்பாவிடம், மேம்..கார் சென்ற திசையை காட்டி, இதயாவையும் பார்த்து, சார்..சார்..என்று இதயாவின் கையை பிடித்தான். பின் அபி..அவன் தான் என்று சொல்லிக் கொண்டே இதயா கையை விட்டு அவளது கழுத்தில் இருந்த செயினில் கை வைத்தான்.அது கழன்று அவன் கைக்கு வந்தது. அதை கைக்குள் வைத்துக் கொண்டு கண்ணீருடன் கண்ணை மூட, அனைவரும் பதறினர்.
ஆம்புலன்ஸ் வர, அவனை ஏற்றி அபியும் ஏறினான். நானும் வருகிறேன் என்று அழுது கொண்டே இதயாவும் ஏற,அபி அவளது அம்மாவை பார்த்தான்.
பாத்துக்கோப்பா.. நாங்களும் வருகிறோம் என்று கூறினார். அவனை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபி அகிலுக்கு போன் செய்து விசயத்தை சொல்லி, அர்ஜூனை எப்படியாவது அழைத்து வா..என்று அவனிருக்கும் இடத்தை கூறினான். பின் அபி நித்திக்கு விசயத்தை சொல்ல,
எப்படிடா? அதிர்ந்து..நாங்களும் வாரோம்டா என்றாள்.
இப்ப வேண்டாம்.
நிவாஸ் இருக்கான்டா. கவின் தான் செல்லும் முன் எங்களுக்கு துணைக்கு அவனை தாரிகா வீட்டில் இருக்க சொன்னானாம் என்றாள் நித்தி.
அவனிடம் கொடு என்றான் அபி. அபி விசயத்தை சொல்லி,மற்றவர்களை அழைத்து வரச் சொன்னான். ஸ்ரீயும் அவர்களுடன் கிளம்பினாள்.
அகில் பாருக்குள் பதட்டத்துடன் உள்ளே நுழைய, அர்ஜூன் புலம்பிக் கொண்டிருந்தான். கவின் மயங்கி இருந்தான்.
அர்ஜூனிடம் இப்படியே பேசினால் புரியாது என்று அங்கிருந்த தண்ணீரை எடுத்து மளமளவென அகில் ஊற்றினான்.
அர்ஜூன் கொஞ்சம் தெளிவாக, வாடா..சீக்கிரம் என்று கையை பிடித்து அகில் இழுக்க, அங்கிருந்த ரௌடி பசங்க, யாருடா அந்த பொண்ணு? அவ்வளவு அழகா இருப்பாளா? காட்டுடா? அவர்களிடம் வம்புக்கு வர,தலையை பிடித்துக் கொண்டிருந்த அர்ஜூன் கோபமாக எழுந்தான்.
சார் விடுங்க..எங்க ப்ரெண்டுக்கு விபத்தாகி விட்டது.உடனே போகணும் சார் அகில் சொல்ல,
என்னடா சொல்ற ?விபத்தா யாருக்கு? அர்ஜூன் பதட்டப்பட்டான்.
அவர்கள் அடங்காமல் ஸ்ரீயை பற்றி மேலும் கேட்க, அர்ஜூன் அவர்களை பார்த்து முறைத்து விட்டு அகிலை பார்த்து, யாருக்குடா? அவனை பிடித்து உலுக்கினான்.
தருண் என்றவுடன்..அர்ஜூன் வேகமாக அங்கிருந்து ஓடினான். நில்லுடா..என்று அகில் கூப்பிட, அவன் பைக்கை எடுத்தான் விருட்டென. தருணிடனான நினைவுகளை நினைத்த படியே அழுது கொண்டே சென்றான் அர்ஜூன்.
அகில் கவினை எழுப்ப, அவன் எழவில்லை. அவர்கள் அகிலை வம்பிற்கு இழுக்க, கோபத்தை கட்டுப்படுத்திய அகில், கவினை தூக்க முடியாமல் இழுத்துக் கொண்டு அர்ஜூன் காருக்கு இழுத்து சென்றான். அர்ஜூன் காரை தான் எடுத்து வந்திருப்பான். அவன் நேராக அர்ஜூன் வீட்டிற்கு சென்று கவினை எழ வைத்து, அவர்களும் மருத்துவனைக்கு சென்றனர்.
ஏற்கனவே இன்பா அவளுடைய அம்மா, தாரிகா வீட்டில் இருந்தவர்கள் வந்திருப்பார்கள். அர்ஜூன் சட்டை எல்லாம் நனைந்து மது வாசனையோடு அழுது கொண்டே வந்தான். அவனை பார்த்து அபி அவனை அடிக்க ஆரம்பித்தான்.இதை பார்த்து ஸ்ரீ அங்கிருந்து விலகி மறைந்து நின்றாள்.
என்னடா பண்ணீட்டு வந்திருக்க? என்று அவனை தரதரவென அங்கிருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்று ஒழுங்கா எந்த வாடையும் இல்லாம வா..அவனை விட்டு வெளியே வந்தான். அங்கே வந்த ஒரு காவலர் அபியிடம் பேச, அவர் தருணின் கல்லூரி பையை கொடுத்தார்.
நர்ஸ் ஒருவர் வெளியே வர, அவரை மறித்து தருணை பற்றி கேட்டனர்.
காப்பாற்றுவது கடினம் தான்.ரொம்ப சீரியாச தான் இருக்காங்க.நீங்கள் வழி விட்டால் தானே சிகிச்சை நடக்கும் என்றார். அனைவரும் அழுது கொண்டிருக்க, அர்ஜூன் அவனுக்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே இருந்து அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை காப்பாத்துறது கஷ்டம்னு சொல்றாங்க அர்ஜூன் என்று இதயா அர்ஜூனை பிடித்துக் கொண்டு அழுதாள். இன்பா அவளிடம் வந்து அழுது கொண்டே, அவளை அணைத்துக் கொண்டு தருணுக்கு ஒன்றுமாகாது என்று சமாதானப்படுத்தினாள்.