ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 75.
இதயாவை அனைவரும் பார்க்க, ஒன்றுமில்லை அர்ஜூன். எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு என்றாள். அவள் சமாளிப்பதை புரிந்து கொண்ட இன்பா,வா..கிளம்பலாம் என்றாள்.
நோ..நோ..இன்று என்னுடைய டிரீட்.எல்லாரும் சாப்பிட்டு போகலாம் அர்ஜூன் கூற, நான் சாப்பிட்டு விட்டேன் என்றாள் இதயா. ஓ.கே உனக்கு நாளைக்கு காலேஜ்ல..ஸ்பெசல் டிரீட் என்றான்.
என்னடா, அவளுக்கு மட்டுமா ஸ்பெசல் யாசு கேட்டுக் கொண்டிருக்க,நித்தியும் அகிலும் வந்தனர்.நித்தியை பார்த்து மீண்டும் குஷியான அர்ஜூன், அவளை கட்டிக் கொண்டு,நான் சந்தோசமா இருக்கேன் என்றான்.
என்னடா இவ்வளவு சந்தோசமா இருக்க? சரி கொஞ்சம் விலகுறியா?
அய்யோ, சாரி நித்தி என்றவன் அகிலை அணைக்க வர, அவன் விலகினான்.
டேய்..அலும்பு தாங்க முடியலடா…விடுடா என்றான் அபி.
அர்ஜூன் அருகே வந்த நித்தி, ஸ்ரீ ஒ.கே சொல்லிட்டாலா? கேட்டாள்.அகில் நித்தியை பார்த்து முறைத்தான்.
இல்லடா. அத விட வேற எதுக்கு சந்தோசமா இருப்பான் என்று நித்தி ஓரக்கண்ணால் அகிலை பார்த்து காதை மூடினாள்.
நான் திட்டல..விடு என்றான் அகில்.
எல்லாரும் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க? தாரிகா எங்க? என்ன பிரச்சனை? கவினை பார்த்தாள். அவனருகே சென்று அவனிடம் கேட்க, அவன் அனைத்தையும் கூறினான்.
அப்பாடா, ஒரு பிரச்சனை முடிந்தது என்றாள் நித்தி. நித்தியின் பார்வை இன்பா, இதயாவை தொட்டு மீண்டது.
சாப்பாடு ஆர்டர் கொடுங்கடா என்றான் அர்ஜூன்.
வாழ்த்துக்கள் அர்ஜூன்.இனி இது உன் வீடு தான் என்றாள் நித்தி. சாப்பாடு வரவே அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.அகிலிடம் தருண் வேண்டா வெறுப்பாக பவியை பற்றி கேட்க,
அவ சரியான முட்டாள்டா. ஒரு வருஷமா வேஸ்ட்ஸ் பண்ணி இருக்கா அவளை திட்டினான் அகில். தருண் கோபமாக, அவளை பற்றி என்ன தெரியும்னு இப்படி திட்டுற?
ஏன்? உனக்கு தெரியுமாங்கோ?அகில் திருப்பி கேட்க, தெரியும். நாங்கள் ஒரே வகுப்பு தான் என்றான் தருண்.
சொல்லவே இல்லை என்றான் அபி.
நீங்க தான் கேட்கவே இல்லையே என்றான் சாப்பிட்டவாறு தருண். இதயாவிற்கு பயம் ஆரம்பித்தது.
அகில் உனக்கு ஒருவருடைய நல்ல பக்கம் கண்ணுக்கு தெரியாது போல என்றான் தருண்.
வேண்டாம் டா. எனக்கு சண்டை போட மூடு இல்லை என்றான் வெறுப்புடன்.
உனக்கு அவளை பற்றி தெரியும்னு சொன்னேல. சொல்லு என்றாள் நித்தி.
சாப்பிட்டுக் கொண்டே, அவன் சொன்ன மாதிரி அந்த பொண்ணு முட்டாள் தான்.அந்த வினயிடம் மட்டுமல்ல.. எல்லாரிடமும் என்றான்.
என்ன சொல்ற? புரியல கேட்டாள் நித்தி.
நித்தி, நீ அவ மீது ஆர்வமா இருக்க போல தருண் கேட்டான்.
ஆமாடா. அந்த பொண்ணு சோ க்யூட்.அழகா பேசுறா.ரொம்ப வெகுளி.
அதான் அவளது பிரச்சனை என்றான் தருண்.
யார் என்ன சொன்னாலும் செய்வா? அவளோட ப்ரெண்ட்ஸ் கூட அவளை யூஸ் பண்ணிகிட்டு தான் இருக்காங்க. அவளோட அம்மா ரொம்ப கண்டிப்பானவங்க.அதனால வெளியே எங்கேயும் போகவே மாட்டாள். அவளுக்கு தேவையான அனைத்தும் அவளது வீட்டில் இருக்கும். சுதந்திரமாக மட்டும் அவளை விட மாட்டாங்க.
அவளுக்கு அதுவும் நல்லது தான் என்றான்.
ஏன்டா அப்படி சொல்ற?நித்தி வினவ,
அவளை சுதந்தரமா விட்டா, எல்லாருக்கும் கெல்ப் பண்றேன்னு சொத்தையே அழிச்சிருவா. அந்த அளவு மத்தவங்கள நம்புவா. இன்று நடந்தது கண்டிப்பாக அவளை பாதித்திருக்கும்.
நீ நாளைக்கு அவளை பாரேன் அவ காலேஜிக்கு வர மாட்டா. அவங்க அம்மா கிட்ட நடந்ததை சொல்லி அடி வாங்கி, அவளை அறைக்குள் பூட்டிப் போட்டுருப்பாங்க..அவளுக்கு உயிரே ஜூலி தான் என்றான்.
நிறுத்துடா..நீ என்ன பக்கத்துல இருந்து பாத்த மாதிரி பேசுற? உனக்கும் அவளுக்கும் என்ன? என்று நித்தி கேட்க,
தருண் அழகான புன்னகையுடன் இதயாவை பார்த்தான். அவள் முறைத்துக் கொண்டிருந்தாள்.
எனக்கும் அவளுக்கும்..எனக்கும் அவளுக்கும்..என்று இழுத்துக் கொண்டே மீண்டும் இதயாவை பார்த்தான். அவள் கையோ பக்கத்தில் இருந்த பில்லோவை குத்திக் கொண்டிருந்தாள். அதை பார்த்த அபி..சொல்லி தொலைடா. டென்சனா இருக்குல.
உனக்கு எதுக்கு டா டென்சன்? தருண் பார்வை மீண்டும் இதயாவை துளைக்க, இன்பாவிற்கு புரிந்து விட்டது. அவளுக்கு மூச்சே நின்றது போல் இருந்தது.
சொல்லுடா? அர்ஜூனும் இதயாவை பார்த்துக் கொண்டே அவனது தலையில் தட்ட, நாங்க முதல் வருடத்திற்கான பிராஜெக்ட் சேர்ந்து தான் செய்தோம்.
அவங்க வீட்டுக்கு போனாயா? கேட்டான் அபி.
தருண் புன்னகையுடன் தலையசைத்தான்.அபி தருண் காதில்,போதும்டா..ரொம்ப வெறுப்பேத்துற?
நல்லா தானே இருக்கு என்றான்.
அப்ப உனக்கும் இதயாவை பிடிக்குமா? என்று வாயில் கையை வைத்துக் கொண்டு இதயாவை பார்த்தான். இன்பா அவனை பார்த்து முறைத்தாள்.
அவன் கிட்ட என்னடா அபி பேசுற? அவன சொல்ல விடேன் என்றாள் யாசு.
தருண் முகத்தை மாற்றி, அந்த பொண்ணை லவ் பண்றதுல்லாம் முடியாதுடா.ஆனால் அவளுடன் பழகுபவர்களுக்கு அவளை பிடிக்காமல் இருக்காது. அவ்வளவு ஸ்வீட் அந்த பொண்ணு. அவங்க அம்மா அவளுக்கு அப்படியே எதிர்ப்பதம்.செம்ம டெரரானவங்க. பாவம் பவி..அவள மாதிரி யாராலும் இருக்க முடியாது. அவளுக்கு அப்பாவை பிடிக்கும். அவர் அதிகம் வீட்டில் இருப்பதே இல்லை. ஏதோ மயான பூமி மாதிரி இருக்கும். எப்படி தான் சமாளிக்கிறாளோ!
நல்ல வேலை ஜூலியாவது இருக்கா?
ஜூலியா? இன்பா கேட்டாள்
அந்த வீட்டு நாய் என்றான் அகில்.
அவ முன்னாடி இப்படி தான் சொன்னாயா? கேட்டான் தருண்.
ஆமா,அவ ரொம்ப கோபப்பட்டு அவனோட கையெழுத்து போட்ட எல்லா பேப்பரையும் தூக்கிப் போட்டு விட்டாள் சோகமாக.
இந்த எருமையால..நல்ல பொண்ணு ஹர்ட் ஆகிட்டா என்றாள் நித்தி அகிலை திட்டிக் கொண்டே,
கையெழுத்தா? அர்ஜூன் கேட்டான்.
அவ சொன்னது, அவள் எழுதி இருந்ததை கூறவும், அகிலை அவளுக்கு பிடிக்குமோ? யாசு கேட்க,
நித்தி அவனை பார்த்து அவளுக்கு இந்த சிடுமூஞ்சி செட் ஆக மாட்டான்.
அவங்க அம்மா பிரச்சனை இல்லைன்னா? உனக்கு அவ ஓ.கே வா? நித்தி தருணை பார்த்து கேட்டாள்.
இன்பா, அர்ஜூன், அபி, தருண் பார்வை இதயாவை நோக்க, அவள் அவனை முறைப்பதை நிறுத்தவே இல்லை. நான் மட்டும் நல்லா இருந்தா நீ காலிடா மனதினுள் நினைத்தாள் இதயா.
இல்ல நித்தி. என்னோட குடும்பத்து சரியா வர மாட்டா.எனக்கு அந்த மாதிரி பொண்ணுல்லாம் பிடிக்காது என்றான்.ஆனா அவ க்யூட் என்று இதயாவை பார்த்தான். அவளோ என்னால முடியலடா என்று சோபாவிலே சாய்ந்து படுத்துக் கொண்டாள்.
நீ என்ன தான்ட சொல்ல வர?
எனக்கு அவளெல்லாம் வேண்டாம் என்று எழுந்தான்.
ஒரு நிமிடம் என்று தருணை நிறுத்திய அகில், அவளுடைய ப்ரெண்ட்ஸ் அவளுக்காக கவலைப்பட்டாங்களே? வெயிட் பண்ணாங்களே? என்று கேட்டான்.
ஆமால..என்றாள் யாசு.
அவளை விட்டால் ஓசி திண்பண்டத்திற்கு என்ன செய்வார்கள்? நாளைக்கு காலேஜ் வருவீங்கள? தெரியாதது போல் அவளுடைய தோழிகளை கவனித்து பாருங்கள். அவன் ஒரு நேரத்தை சொல்லி அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் மறைந்து நின்று..இல்லை அது கூட தேவையில்லை. அவளை பற்றி நேராக கேட்டால் கூட நீங்க கேட்டதற்கான பதில் கிடைக்கும் என்றான்.
எப்படிடா? யாசு கேட்டாள்.
என்னை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டே தான் இருப்பேன் சிறு வயதிலிருந்தே என்றான் அகிலை முறைத்தவாறு. கை கழுவி விட்டு வந்து இதயா படுத்திருந்த சோபா பக்கம் அமர்ந்தான்.
அர்ஜூன் அவனிடம் வந்து, இன்னும் அகில் மேல கோபப்படாதடா கூற,
என்னால உன்னை மாதிரி இருக்க முடியாதுடா. உனக்கு தான் சூடு சுரனையே இல்லை. போடா.. என்றான் தருண் சினத்துடன்.
ப்ரெண்ட்ஸ்குள்ள இதெல்லாம் பார்க்க கூடாதுடா.
ஓ..அப்படியா? அப்ப விட இப்பொழுதும் ஸ்ரீ மீது காதலுடன் தான் இருக்கிறான். உன்னுடைய காதல் என்னாகும்? தருண் கேட்டான்.
அது என்று பதில் கூற முடியாமல் அர்ஜூன் இருக்க, அபி கவினை மன்னிக்கவே மனம் வரவில்லை இருந்தும் அவர்களிடம் பேசுவது போல் அகிலிடம் இருக்க முடியாது.
அபி உன்னை காயப்படுத்தியதற்காக வருத்தப்பட்டான். அழவே செய்தான் என்றான் தருண்.
என்னடா சொல்லி தொலைச்ச அவனிடம்?
சொப்பு சாமான வைச்சு விளையாடியதா சொன்னேன் போடா.
தருண் சொல்றியா? இல்லையா?
வேண்டாம் அர்ஜூன், என்னை கோபப்படுத்தாத!
சொல்லுடா? அர்ஜூன் விடாம கேட்டான்.
என்னோட கோபத்தை காட்டினேன்.அவனுக்கு அவனது தப்பை புரிய வைத்தேன். ஆனால் கவினுடன் நான் ஏதும் பேசல.அவன் எப்படிடா..உன்னிடம் நல்ல படியா நடந்துக்கிறான் கேட்டான்.
அர்ஜூன் சிரிப்புடன் தருணை பார்த்து, என்னடா செஞ்ச?
காதல்டா என்றான்.இருவரும் சிரித்துக் கொண்டனர்.
தருண் அப்படியே உனக்கு டாக்டர் என்ன சொன்னாங்கன்னு சொல்லேன்? அர்ஜூன் கேட்டான்.
அது இருக்கட்டும். நீ எப்படிடா ஸ்ரீயை மறந்த? அவ இன்னும் சாப்பிடலை. அவளோட அறையில் இருக்கா கேட்டான்.
அர்ஜூன் தலையில் கையை வைத்துக் கொண்டு, உனக்கு நினைவிருந்தால் சொல்லி இருக்கலாம்ல டா? தருணிடம் கேட்டான்.
நான் எதுக்குடா சொல்லணும். எனக்கு முதல் முறையா உன் மேல கோபம் வருது? யாரை வேண்டுமானாலும் மறக்கலாம். நீ அவளை மறக்கலாமா?அவ எப்ப அறைக்கு போனான்னு பார்த்தியாடா? உனக்குன்னு குடும்பம் கிடச்ச சந்தோசத்துல அவளை மறந்துட்டேலடா. அகில் தான் இப்படி இருப்பான். இப்பொழுது நீயும்? தருண் கேட்க,
இல்லடா.கொஞ்சம் கவனிக்காம இருந்துட்டேன்டா.. அவன் எழ, அஞ்சும்மாவிடமிருந்து போன் வந்தது.
ஸ்ரீயை பற்றி கேட்டார். அவள் அறையில் இருக்காம்மா. நான் பார்த்துக்கிறேன் என்று படபடப்புடன் சொன்னான். அம்மா சிந்தித்தவாறு கவினிற்கு போன் செய்து வர சொல்ல, அவன் அங்கே கிளம்பினான்.
யாசுவிற்கு அவளது பெற்றோர்கள் போன் செய்தார். அவள் வெளியே செல்ல, நாங்க கிளம்புறோம்டா என்று அர்ஜூனிடம் கூறி விட்டு தருண் இதயாவை எழுப்ப, அவள் அவனை பார்த்தாள்.
போகலாமா? கேட்டான். அவள் தலையசைக்க, இன்பாவை பார்த்தான்.
அபி, என்னை வீட்டில் விட முடியுமா? கேட்டாள்.
நானா? என்று கேட்டான். அவள் தோளை குலுக்கிக் கொண்டு முன் செல்ல, மகிழ்ச்சியுடன் அவள் பின் அபி ஓடினான்.
அகிலும் நான் உன் வீட்டிற்கு செல்கிறேன் அர்ஜூனிடம் கூறி கிளம்ப, நித்தி அப்பா வீடியோ காலில் வர, யாசு நித்தி இருவரும் சேர்ந்து பெற்றோர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.