வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-63
204
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 63..
ஸ்ரீ என்று அழைக்க, பயந்து திரும்பிய ஸ்ரீ அகிலை எதிர்பாராமல் அங்கிருந்த பெட்டில் விழுந்தாள்.
ஏய்..ஸ்ரீ என்று அவன் அருகே வர,அவளை பயம் தொற்றிக் கொண்டது. வேண்டாம் சீனியர் என்றாள் பட்டென.
அவனுக்கு ஒரு மாதிரி ஆனது.அவனது முகவருத்தத்தை கண்ட ஸ்ரீ, ஒன்றுமில்லை சீனியர், திடீரென்று அழைத்தீர்களா? அதனால் தான் பதறி விட்டேன் என்று அவளது பிரசன்டை எடுத்தவள் அவனருகே வந்து எதுவும் பேசணுமா? கேட்டாள்.
ஆமாம் ஸ்ரீ. அன்று நான் தவறாக புரிந்து கொண்டு தான் அவ்வாறு நடந்து கொண்டேன் அகில் கூறினான்.
நோ பிராபிளம் சீனியர் என்றாள்.
நிவாஸ் அங்கே வந்து அகிலை முறைத்துக் கொண்டு,இங்க என்ன பண்ற ஸ்ரீ?
பாப்பாவிற்கு பிரசன்ட் எடுக்க வந்தேன் என்று காண்பித்தாள்.
வா..போகலாம் என்று நிவாஸ் அவளது கையை பிடித்து செல்ல, ஸ்ரீயின் கையை பிடித்து அகில் நிறுத்தினான்.
நிவாஸ் கோபமாக, சீனியர் கையை எடுங்கள் என்றான்.
அவளிடம் பேச வேண்டும் என்றான் ஸ்ரீயை பார்த்தவாறு.
நாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் ஸ்ரீ கூற, அகில் அவளது கையை விடுவதாக இல்லை.
நிவாஸ் அவனது கையை தட்டி விட்டு, யாருமில்லா இடத்திற்கு அழைத்து சென்று அவளை சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.
ஸ்ரீ சென்ற போது அகில் பின்னே சென்றதையும், பின் நிவாஸ் ஸ்ரீயை தரதரவென இழுத்து சென்றதையும் பார்த்திருப்பான் அர்ஜூன்.
கவினிடம் பாப்பாவை கொடுத்து, நீ இவனிடம் இரு..நான் வருகிறேன் என்று செல்ல, எங்கே போறடா அர்ச்சு? யாசு கேட்டாள்.
எங்க போனாலும் சொல்லணுமாம்மா? கேட்டான்.
ஓ..சரி..போ என்றாள் யாசு.
நேராக ஸ்ரீ நிவாஸ் இருக்கும் இடத்திற்கு வந்து அர்ஜூன், என்ன செய்றீங்க? கேட்டான்.
ஒன்றுமில்லை அர்ஜூன் என்று அவள் வெளியே செல்ல, அவன் அவனது கையை இடையே நிறுத்தி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு ரெண்டு பேரும் போகலாம் என்றான்.
அர்ஜூன் கையை தட்டி விட்டு, அவனிடமே கேட்டுக்கோ.. என்று ஸ்ரீ நகர்ந்தாள்.
நிவாஸ் நடந்ததை கூற,அவன் பேச தானே கேட்டான். எதற்கு உனக்கு இவ்வளவு கோபம்? கேட்டான் அர்ஜூன்.
எனக்கு பிடிக்கல. நான் தான் சொன்னேன்ல..இப்பொழுது அவளை காதலிப்பதை பற்றி பேச வேண்டாம் என்று. அர்ஜூன் நீயும் அவளை பார்க்கும் விதம் சரியில்லை என்றான்.
சரிடா விடு..பாத்துக்கலாம் அர்ஜூன் கூற, முடியாது என்றான்.
இங்க பாருடா,அவளை நாங்கள் காதலிக்கிறோம்.அவள் அழகாக இருந்தாள். பார்த்தோம்.தவறா? கேட்டான்.
ஸ்ரீயை பார்த்தால் ஒரு பொண்ணு கூட இன்று ரசிக்க தான் செய்வாள் என்றான் அர்ஜூன்.
என்னடா பேசுற? அவளை காதலிப்பதாக கூறுகிறாய்? மற்றவர்கள் ரசிப்பார்கள் என்று கூல்லா சொல்ற? கேட்டான் நிவாஸ்.ஆனால் அவள் யாரையும் கண்டு கொள்வதில்லையே என்றான் அர்ஜூன் குறும்பாக.
அட போடா..என்றவன் அவளிடம் ஒழுங்கா நடந்து கொண்டால் நல்லது என்று எச்சரிப்பது போல் கூறினான். அர்ஜூன் சிரித்தவாறு, அவளை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்.ஆனால் காதலித்துக் கொண்டே இருப்பேன் என்றான். நிவாஸ் அர்ஜூனை பார்த்து,ம்ம்..என்று கிளம்பினான்.
அர்ஜூன் அகிலை பற்றி யோசித்தவாறு, அவன் இருந்த அறைக்கு சென்றான்.அங்கே வினிதா அக்கா அவனுக்கு கேக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அர்ச்சுவை பார்த்த அக்கா, இந்தா அர்ஜூன் கேக் என்றார். அக்காவிடம் வாங்கியவன் அகில் அருகே வந்து அமர்ந்தான்.
அகில் அர்ச்சுவை பார்க்க,அக்கா இருவரையும் கவனித்தபடி நின்றார்.
உன் பார்வை அவள் மீது விழுவது போல் தெரிகிறதே! அகில் அர்ச்சுவை கோபமாக பார்த்தான்.
காதலிக்கும் பெண்ணை தானே பார்த்தேன்.
நாம் பேசியதை மறந்து விட்டாயா?
மறக்கவில்லை. நான் கூறியது போல் என்னால் அவளை விட முடியாது அர்ஜூன் கூறினான்.
என்னடா சொன்ன? என்று அகில் அர்ச்சுவை அடிக்க வந்தான். அர்ச்சு அவனை தடுத்தான்.
நிலை சரியில்லாததை புரிந்த அக்கா, அவர்களை தடுத்து, இரண்டு பேரும் என்னடா உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க?
நீங்கள் சண்டை போடுவதை ஸ்ரீ பார்த்தால் ரொம்ப கஷ்டப்படுவாள். உங்களில் ஒருவரை தான் அவள் காதலிக்கிறாள் என்றவுடன்.
தெரியும்.ஆனால் கூற மாட்டேன்.ஒரு வேளை அவள் அகிலை காதலித்தால் நீங்கள் சண்டை போடுவதை பார்த்தால் நீ அவளை சந்தேகப்படுவது போல் தெரியும் அவளுக்கு, அகிலிடம் கூறி விட்டு
அர்ஜூனிடம்..அவள் உன்னை காதலித்தால் நீ அகிலிற்காக அவளை விட்டு கொடுப்பேன் என்று ஏற்கனவே செய்தது அவளை காயப்படுத்தும்.
அதுமட்டுமல்ல அவளுடைய இந்நிலையில் நீங்கள் இருவரும் சேர்ந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறாள் அவள்.ஆனால் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
முதல்ல அவள் பிரச்சனை முடியட்டும்.அப்புறம் உங்கள் காதலை பற்றி சிந்திக்கலாம். அவளுக்கு யாரை பிடித்திருக்கிறது என்று அப்பொழுது முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
அவர்கள் பேசியதை கேட்ட ஸ்ரீ, அங்கிருந்து அழுது கொண்டே ஓடினாள்.
நில்லு ஸ்ரீ..என்று அறை கதவை திறந்து நிவாஸ் இருவரையும் முறைத்து விட்டு ஓடினான்.
நினச்சேன். நீங்கள் இங்கேயே இருங்கள் என்று அக்காவும் ஸ்ரீ சென்ற திசை நோக்கி சென்றார்.
நிவாஸ் அவளை சமாதானப்படுத்த,அக்கா அவர்களிடம் வந்து நிவாஸை கிளப்பி விட்டு அவர் பேச ஆரம்பித்தார்.
நீ ஏதும் நினைக்காதேம்மா..என்றார் அவர்.
இவங்க ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் என்னால சண்டை போட்டுக் கொண்டே இருக்காங்க. அவங்களுக்கு ஏன் புரிய மாட்டிங்கிது?இதை வைத்து கூட என்னோட ஆன்ட்டி திட்டம் போட கூட வாய்ப்பு உள்ளது.
கண்ணை துடைத்தவள், நீங்க ஏன்கா இப்படி பண்றீங்க? அனுவை என்னால் பார்த்துக் கொள்ள முடியாதுக்கா.
அவர் வருத்தமுடன் நான் சென்ற பின் என்னோட பொண்ண அர்ஜூன் பார்த்துக் கொண்டாலும் அவளுக்கு அம்மா என்று யாராவது வேண்டும்.அது கஷ்டம் தான்..ஆனால் ஒரு பொண்ணும் துணை இருந்தாள் தான் நன்றாக இருக்கும் என்றார்.
அர்ஜூன் திருமணம் செய்ய போகும் பொண்ணு பார்த்துக் கொள்வாள் ஸ்ரீ கூற, அவன் வேறு பொண்ணை திருமணம் செய்வான் என்று உனக்கு தோன்றுகிறதா?
அதற்கு இன்னும் நாட்கள் உள்ளது அக்கா.அனுவிற்காக கண்டிப்பாக செய்து கொள்வான் என்றாள்.
அவன் செய்ய மாட்டான் என்று மனதில் நினைத்தார்.
அக்கா..அவர்கள் என்னை சும்மா விடவே மாட்டார்கள்.இதற்கு முன்னாவது மூன்று பேரை பாதுகாக்கும் பொறுப்பு தான்.ஆனால் இப்பொழுது இவர்கள் அனைவரும்.அவர்கள் என்னை உயிரோட விடவே மாட்டார்கள்.
என்னோட ஆன்ட்டிக்கு..நான் துடிதுடித்து இறக்க வேண்டுமாம். என்னிடம் கூறினார்கள்.எனக்கு சாவு நிச்சயம்.ஆனால் இவர்களில் ஒருவருக்கும் ஏதும் ஆக விட மாட்டேன்.
இவர்களுக்கும் எனக்கும் உள்ளது..என்று ஆரம்பித்த ஸ்ரீ கண்கலங்க தடுமாறிக் கொண்டு..அகில் அர்ஜூன் இரண்டு பேருக்கும் என்னோட கனெக்சன் இருப்பது போல் தெரிகிறது. இத்தனை நாள் எனக்கென யாரும் முன் வரவில்லை.
என் அப்பா என்னை விட்டு பிரியும் அந்த தருணத்தில் ஏதோ பெயரை கூற வந்தார்..அது கூட “அ” என்று எழுத்தில் தான் ஆரம்பிக்கும்.அவர் கூறி முடிப்பதற்குள் என்னை விட்டு சென்று விட்டார். முதலில் அகில் பெயர் தெரிந்தவுடன் அவர் அவனை பற்றி தான் கூற வந்திருப்பார் என்று நினைத்தேன். அர்ஜூனை தெரிந்தவுடன் எனக்கு குழப்பமானது.
எனக்கு இருவரும் ஒன்று தான். காதல் வேற…இது வேற..அர்ஜுனை பார்த்த பின் தான் அவர்கள் கூறிய குக்கூ நானாக இருப்பேனோ என்ற சந்தேகம் எழுந்தது.அப்பா என்ன கூற வந்தார் என்பது தெரியவில்லை என்றாலும்..இவர்களால் எனக்கு உதவ முடியும் என்று தோன்றியது.
சரிம்மா. உன்னோட காதல்? அக்கா கேட்டார்.
காதல்..என்று கண்களை மூடி புன்னகையுடன் ஃபீல் செய்து விட்டு, என்னால் என்னையே காப்பாற்ற முடியாது. காதலை காப்பாற்றுவதா? விரக்தியுடன் கூறினாள்.
அவர்கள் பேசுவதை அகில், அர்ஜூன் இருவரும் மறைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.இருவரது கண்களும் கலங்கியது.
அக்கா, நீங்க அனுவை உங்களது பெற்றோர்களிடம் விடலாமே! ஸ்ரீ கேட்டாள்.
அவர் பெருமூச்சுடன் முடியாது ஸ்ரீ. நான் மிடில் கிளாஸ் பொண்ணு தான்.காதலுக்காக அவர்களை விட்டு தான் இவருடன் வந்தேன். இவர் வீட்டில் இவர் எடுப்பது தான் முடிவு.ஆனால் யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. அவர்களுடன் இருந்தால் என்னை கஷ்டப்படுத்துவார்கள் என்று தான் தனியே அழைத்து வந்தார்.அவர் அவ்வப்போது மட்டும் சென்று அவர்களை சந்தித்து வருவார்.
பிரச்சனையை புரிந்து அவருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்து தான் அனு பெயரில் அனைத்தையும் மாற்றி இருக்கிறார். எனக்கு கூட எதுவும் தெரியாது. அவர் குடும்பம் எங்களை பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று தான் இவ்வாறு செய்திருக்கிறார். அவர்களை இனி நான் அழைத்தால் அவர்களையும் சேர்த்து எங்கள் குடும்பம் வாழ விடாது.அவர் இறந்த பின் அர்ஜூன் தான் கூடவே இருந்தான். அனுவும் அவனென்றால் பயப்படாமல் இருப்பாள். அவனுக்கு கஷ்டமாக இருக்கும் என்று தெரியும். அவன் வாழ்க்கையில் அனு இடைஞ்சலாக இருப்பாள் என்றும் தோன்றியது.எனக்கு அனு உயிரோடவாது இருக்கணும்.அதனால் தான் அவனிடம் உதவி கேட்டேன்.
அவனும் சின்ன பையன் தானே! அவன் தயங்குவானோ? என்று பயமாக கூட இருந்தது.
ஆனால் அவன் உடனே ஒத்துக் கொண்டான். அனு சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவனிடமே ஒப்படைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். என்ன கூறப் போகிறானோ! வருந்தினார்.பின் அவனுடைய அம்மா..கண்டிப்பாக இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவன் எங்களுக்கு உதவியதே அவர்களுக்கு பிடிக்கவில்லை.அவன் தான் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறான்.
அக்கா, அவனது அம்மா ஏன் அவனுடன் இல்லை.ஏதாவது தெரியுமா? ஸ்ரீ கேட்டாள்.
எதற்கு கேட்கிறாய்?
அக்கா..அவன் கூறுவது போல் அவன் மீது அக்கறை இல்லாமல் அவர்கள் இருக்கவில்லை.அவனை பின் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தாரிகா வீட்டில் ஒரு முறை கோபத்துடன் சண்டை போட்டு வெளியே நான் வந்தவுடன் அர்ஜூன் தான் என்னை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான்.அப்பொழுது நான் அவங்களை பார்த்தேன். இன்னொரு முறை கூட கோவில் சென்ற போது பாசத்துடன் அவனை பார்த்ததை கவனித்தேன்.
அர்ஜூன் என்ன தான் ஸ்மார்ட்டா இருந்தாலும், அம்மா விசயத்தில் முட்டாள் தான் என்றாள்.
உனக்கு அவனது அம்மாவை எப்படி தெரியும்? கேட்டார் அக்கா.
அவனுடைய அதே கண்கள் அக்கா என்றாள்.
உன்னால் இவ்வளவு தெளிவாக கண்டறிய முடிந்திருக்கிறதே! மனதினுள் நினைத்தார்.
ம்ம்..என்ற அக்கா, அகிலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அர்ஜூன் யாரென்று தெரியாத எங்களுக்காகவே நிறைய செய்கிறான். அவனுக்கு உன்னை பிடிக்கும்.உன்னை அவ்வளவு எளிதில் அவர்களிடம் விட்டு விடுவானா? என்ன?
உன்னை அவன் விட மாட்டான்.அது எனக்கு நன்றாக தெரியும்.நீ ரொம்ப நாள் சந்தோசமா இருப்பம்மா..என்றாள்.
அவள் தெரியும் கா என்றாள்.அகிலும் சும்மா இல்லை அக்கா.அர்ஜூன் காதலை மனதினுள் வைத்திருக்கிறான். அகில் அதை வெளிக்காட்டுகிறான். அவ்வளவு தான்.நான் தான் குக்கூ என்பது தெளிவாக முன்பே அறிந்து கொண்டேன்.
அகில் அர்ஜூன் இருவரும் நல்ல பசங்க தான். அன்று அவன் எனக்கு கொடுத்த முத்தம் கூட வேண்டுமென்றே செய்யவில்லை.
நான் அவனிடம் கோபப்பட்டதன் காரணமே வேறு.அன்று என்னால் அவனது முத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனக்கு வாழ்வே வெறுத்து விட்டதுக்கா. இதில் காதல்,முத்தம் தான் குறைச்சல்.எனக்கு கொஞ்ச நாட்கள் இவர்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.இவங்களால் நிவியும் ஹாப்பியா இருக்கான். அது போதும் என்றவாறு வானத்தை நோக்கி,
அம்மா,அப்பா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.நீங்க அவங்கள என் கிட்ட அனுப்பியதுக்கு தேங்க்ஸ்ம்மா.மனசு தெம்பா இருக்கு.ஆனா அம்மா..நீங்க சொன்ன மாதிரி.என்னால என்னை பாதுகாக்க முடியுமானு தெரியல.என்னோட ப்ரெண்ட்ஸ் எனக்கு நிறைய கெல்ப் பண்றாங்கம்மா.
அப்பா..நீங்க சொல்ல வந்தது எனக்கு சரியாக மட்டுபடவில்லை. ஆனால் கண்டிப்பாக இவங்கள பத்தி தான் சொல்ல வந்தீங்கன்னு புரியுது. உங்களுக்கு பிடிச்சவங்களோடு வாழ்ந்து விட்டு உங்களிடம் வந்து விடுவேன் என்று கண்ணீருடன் நின்றாள்.
அக்கா, அவளை அணைத்துக் கொண்டு.நீ இப்படி பேசாதம்மா.நான் தான் சொன்னேன்ல.உனக்கு ஒன்றுமாகாதும்மா என்றார்.
அக்கா, நான் சந்தோசமாக தான் சாவேன்.அம்மா, அப்பா போன பின் என்னால் இருக்கவே முடியவில்லை. இப்பொழுது வரை அம்மா, அப்பா இல்லாமல் செத்திடலாம் போல தான் உள்ளது.ஆனால் என்னால் மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்ற மட்டும் தான் இருக்கிறேன் இல்லையென்றால் அவர்கள் இறந்த அன்றே நானும் அவர்களுடன் சென்றிருப்பேன். நான் சாவதற்குள் அவங்களை கொன்று விட்டு தான் சாவேன். அவர்களை விட்டால் அனைவரது வாழ்க்கையையும் அழித்து விடுவார்கள்.அதை நடக்க விட மாட்டேன்.
ப்ளீஸ் ஸ்ரீ..சாவு..சாவு..என்று பேசாதே! நீ இன்னும் உன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை.அவள் அமைதியாக இருந்தாள்.