ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இன்றைய உங்களுக்கான எபிசோடு 60..

தருணும் இதயாவும் நனைந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து,என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? ஒன்றுமில்லை தானே! என்று இருவரையும் அளவிட்டாள் இன்பா.

தருண் அவனது சட்டையை பிழிந்து அணிந்து கொண்டான்.இதயாவின் கூந்தலில் நீர் சொட்டாய் விழ, இன்பா அவளது முந்தானையை எடுத்து அவளுக்கு துவட்டி விட்டாள்.இதயாவிற்கு தாரிகாவை காயப்படுத்தியது அரிக்க தொடங்கியது.அமைதியாகவே இருந்தாள்.

இதோட,எப்படி வீட்டுக்கு போறது?இன்பா தலையை பிடித்துக் கொண்டாள்.

இருங்க மேம் வாரேன் என்று ஆதேஷிடம் இவர்களை பார்த்துக் கொள் என்று வண்டியை எடுத்தான் தருண். ஐந்தே நிமிடத்தில் ஒரு சுடிதாரோடு வந்தான்.

இதயாவிடம் வந்து மாற்றிக் கொள் என்றான். அவள் சுற்றி பார்க்க அவன் இன்பாவை பார்த்தான்.

இன்பாவும் இதயாவும் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தனர். தருண் அமைதியாக இருப்பதை பார்த்து,சீனியர் ஏதும் பிரச்சனையா? கேட்டான் ஆதேஷ்.

சீனியர்னு கூப்பிடாதேடா.எனக்கு தான் பெயர் உள்ளதே! கேட்டான் தருண்.

நா அண்ணான்னு அழைக்கிறேன். சரி நீங்க சொல்லுங்க?

தருண் சொல்ல,சூழ்நிலையை கூறி மன்னிப்பு கேளுங்கள்.

உதவியாக இருந்தாலும் பொண்ணுகளுக்கு முதல் முத்தம் ஸ்பெசல் சிப்ஸ் சாப்பிட்டவாறு துகிரா கூறினாள்.

நான் முத்தம் தரவில்லை.

அப்புறம் என்ன யுத்தமா நடத்துனீங்க? கிண்டலாக கேட்டாள் துகிரா.

நான் என்ன செய்ய? என்று தலையை அழுந்த கோதினான்.

அவளுக்கு தெரியுமா? துகிரா கேட்க,ஆம் என்று தலையசைத்தான்.

அவள் கோபப்பட்டாளா?

தெரியவில்லை என்றான்.

புன்னகையுடன் நீங்கள் செய்ய வேண்டியதை அவள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றாள்.

நீங்க மன்னிப்பு கேட்டு பாருங்கள்.அக்காவும் தங்கையும் வந்தனர்.மூவரும் இதயாவை பார்த்தனர்.

துகிரா அவளை உற்று பார்த்து விட்டு,உனக்கு என்ன பிடிக்கும்? என்று கேட்டாள்.

தருணும் ஆதேஷும் துகிராவை முறைத்தனர்.

எதுக்கு கேக்குற? என்று இன்பா கேட்டாள்.

காரணம் இருக்கு மேம்.

அவளுக்கு கட்லெட் பிடிக்கும்.ஸ்வீட் என்ன பிடிக்கும்?

கேக் என்றால் அவ்வளவு தான் என்று உணர்ச்சி வசப்பட்டு இன்பா கூற,அக்கா என்று இதயா அவளை பார்த்தாள்.

நீ எதற்கு கேக்குற? இதயா கேட்டாள்.

டென்சன்ல இருந்தா சாப்பிடு.சரியாகிவிடும் என்றாள்.

தருண் ஆதேஷை பார்த்து, அப்படியே எனக்கும் வாங்கிட்டு வாங்க என்றாள்.

ஆதேஷ் அவளை முறைத்தான்.நீ சாப்பிட்டது போதும்.அதை கொடு என்று அவள் கையில் வைத்திருந்த சிப்ஸ் பாக்கெட்டை பிடுங்கினான்.

எனக்கு எதுவும் வேண்டாம் என்று இதயா தனியே சென்று அமர்ந்தாள். இன்பா அவளருகே வந்து உட்கார்ந்தாள்.

ஒரு வேளை நம்மால் தான் அவள் இப்படி செய்கிறாளோ? என்று தருண் நேராக இதயா முன் நின்றான். அவனை ஏறிட்டு அவள் பார்க்க,

நான் அவன் கூறியது போல் வேண்டுமென்றே செய்யவில்லை.நீ தான் விழிக்கவே இல்லை.அதனால் தான் முதலுதவி செய்தேன் என்றாள்.

என்னடா செஞ்ச?இன்பா தருணை முறைத்தாள்.

அக்கா ஒன்றுமில்லை.தண்ணீரில் விழுந்ததில் மயங்கி விட்டேன்.அவன் முதலுதவி செய்த பின் தான் விழித்தேன்.அவன் உதவி தான் செய்தான் என்றாள்.

அப்புறம் என்னடி? கேட்டாள் இன்பா.

அக்கா என்று இதயா அவள் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.

நீயும் உன் நண்பர்களுடன் ராகிங் செய்தாய் தானே!

நான் என்ற இன்பா..ஆம்.ஆனால் நீ நினைப்பது போல் இல்லை.ஜஸ்ட் எண்டர்டைன் தான் பண்ணுவோம். பாடு..பாடு..டான்ஸ் பண்ணு.உனக்கு பிடித்ததை செய்து காட்டு என்று தான்.. நிமிர்ந்து இதயாவை பார்த்தாள்.

நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் அக்கா என்று இன்பாவை அணைத்துக் கொண்டு,அப்பா சென்ற பின் அம்மா என்னை கவனிப்பதையே நிறுத்தி விட்டார்கள். உன்னையே கவனிக்கிறார்கள் என்று உன் மீது கோபம் வேறு.கம்பெனி பிரச்சனையால் நம் நிலை மாறி விட்டது வேறயா? எல்லாரும் என்னிடம் வேறு மாதிரி நடந்து கொண்டார்கள். அதனால் எதையும் யோசிக்காது ப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து இப்படி செய்து விட்டேன்.

சைலேஷ் அண்ணா அன்று திட்டிய போது கூட அவரும் உனக்காக பேசுகிறார் என்று கோபம் தான் வந்தது. தாரிகா உன்னோட ப்ரெண்டோட தங்கை என்று தெரியவும் கஷ்டமா இருந்தது.ஆனால் அப்பொழுதும் நான் தெளிவாகவில்லை.இப்பொழுது அந்த சீனியர் பேசியவுடன் தான் அதன் வலி புரிந்தது.சாரிக்கா அம்மாவிற்கு இன்னும் என் மீது கோபம் குறையவில்லை.நான் என்னக்கா செய்றது? பெரிய தப்பு செய்துட்டேன் என்று அழுதாள்.

சீனியரா? என்ன பேசினான்? இன்பா கேட்டாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை மேம் என்று தருண் இதயாவை பார்த்தான்.

பெருசா இல்லைக்கா.எனக்கு ராகிங் பண்ணா எப்படி இருக்குன்னு காண்பிச்சான்.அவ்வளவு தான்.

யாருடா? என்னடா செஞ்சாங்க? தருணிடம் இன்பா கேட்டாள்.

அக்கா.ப்ளீஸ் அதை விடு என்று இதயா இன்பாவை மீண்டும் அணைத்துக் கொண்டு, நான் இப்போது என்ன தான் செய்வது? கேட்டாள்.

இன்பா அவளை நிமிர்த்தி, நீ தான் புரிந்து கொண்டாயே.அதுவே போதும் என்றாள்.

அதற்கு தருண் தவறு செய்வது இயல்பு தான்.அவளிடம் நீ மனதாற மன்னிப்புக் கேள்.உன் மனது தானாகவே சரியாகி விடும்.

ம்ம்.இதுவும் சரி தான் செய்து பார் இன்பா சொல்ல,இதயா தருணை பார்த்தாள்.தருண் போனை எடுத்து ஆதேஷ் அருகே அமர்ந்தான்.

என்ன அவனையே பாக்குற? இன்பா கேட்டவுடன் அவன் எனக்கு உதவினான் என்றாள் புன்னகையுடன்.

அதற்கென்ன? கேட்டாள் இன்பா.

அக்கா,பசிக்கிற மாதிரி இருக்கு.நீ சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா? கேட்டாள் இதயா.

இன்பா,அவளிடம் சாப்பிட எடுத்து கொடுத்தாள்.

அக்கா.நான் தருணிடம் தேங்க்ஸ் சொல்லிட்டு வாரேன் என்று அவள் எழுந்தாள். அவன் போன் பேசிக் கொண்டே தனியே சென்றான். இதயாவும் அவன் பின் சென்றாள்.

சாரி பாப்பா. என்னால வர முடியாது.உனக்கு நான் மறுமுறை வாங்கித் தாரேன்.சுடிக்கு பதில் வேற ஏதாவது அனுப்பிகிறேன் என்றான்.

ஏன்டா?

உனக்கே தெரியும்.என்னால் இப்பொழுது எந்த வேலைக்கும் செல்ல முடியாது. அப்பாவின் வருமானத்தை வைத்து சரிகட்டுங்கள். இரண்டே வாரம் தான்.உனக்கு சுடி என்ன? பாவடை தாவணி வாங்கித் தாரேன்.

அவசர தேவைக்காக பணம் செலவாகி விட்டது. கோபிச்சுக்காதே புவி என்றான் தருண்.

சரி அண்ணா.உனக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது?

வலி ரொம்ப இல்லை. ஓ.கே தான் என்று உதட்டை கடித்தவாறு தோள்பட்டையை அசைத்தான்.

எந்த வம்புக்கும் போகாதேடா என்றாள் அவள்.

நான் எந்த வம்புக்கும் போக மாட்டேன்.பிராமிஸ் போதுமா?என்றான்.

ஓ.கே அண்ணா.அர்ஜூன் அண்ணாவிடம் கூறி விடு என்றாள்.

அதெல்லாம் தேவையில்லை.நீ கவலைப்படாதே.நல்லா படி.கவனமாக இரு.அம்மா,அப்பாவை பார்த்துக் கொள். ஏதும் பிரச்சனை என்றால் கூறு..

சரி அண்ணா..

நான் வைக்கிறேன் என்று போனை அணைத்து விட்டு தோளை பிடித்தவாறு திரும்பினான். இதயா அவன் அருகில் நிற்க, பயந்து ஓர் அடி நகர்ந்தான்.

இங்கே என்ன பண்ற? கேட்டான்.

உனக்கு என்ன? கேட்டுக் கொண்டே அவனருகே வந்து அவனது தோளில் கை வைத்தாள்.அவன் விலகி ஒன்றுமில்லை என்றான்.

நீ சொல்ல வேண்டாம். நானே பார்க்கிறேன் என்று அவனருகே வந்தாள்.

பார்க்கிறாயா? என்று அவன் பின்னே செல்ல, அவள் முன்னே வந்தாள். நின்ற இதயா சிரித்து விட்டு, நீ ரொம்ப பயப்படுற?நான் உன்னை நல்ல பையன்னு நினைச்சேன்.முரட்டு பையனா நீ? என்று அவனது கையை பிடித்து,

தேங்க்ஸ்.அவங்க கிட்ட இருந்து கெல்ப் பண்ணியதுக்கு என்றவள் அவனது கண்களை பார்த்தவாறு நின்றாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.பின் அவன் அவளது கையை உதறி விட்டு வேகமாக முன் சென்றான்.

தருணிற்கு போன் வந்தது.எடுத்து பேசியவன் என்னடா சொல்ற? அவன் எங்கே இருக்கிறான்?

அது தெரியாது. போனை பார் என்றான் தருணின் வகுப்பு நண்பன்.

அர்ஜூனிற்கு போன் செய்து விசயத்தை சொல்ல,அவன் வகுப்பில் தான் இருப்பதாக இப்பொழுது தான் நித்தி கூறினாள்.நான் அருகே தான் இருக்கிறேன் என்று போனை வைத்தான் அர்ஜூன்.

தலையை கோதிக் கொண்டே வேகமாக ஓடிய தருண்,ஆதேஷிடம் இவர்களை பார்த்துக் கொள் வருகிறேன் என்று கிளம்பியவனை நிறுத்தி,

பிரச்சனையா? கேட்டாள் இன்பா.

எஸ் மேம் என்று அவன் போனை காண்பிக்க, அனைவரும் பார்த்தனர்.

“கண்ணெடுக்காத நிலையை

 கொடுத்தாயே டா

 மௌன ராகத்தை ரசிக்க

 வைத்தாயே டா

 இதழளிடண்டும் இணைந்த

  உணர்வளித்தாயே டா

 ஆண்மையின் வாசம் முதலாக

 புரிந்தேனே டா

 எனக்கென்று நீ என்றும்

  இருப்பாயா டா?”