வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-57
178
ஹாய்.. ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 57..
கல்லூரி காலை இடைவேளையின் போது,அபி அர்ஜூன் வகுப்பிற்கு வெளியே கோபமாக நின்று கொண்டிருந்தான். வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த இன்பா அபியை பார்த்து,
இங்கே என்ன செய்கிறாய்? கோபமா இருக்கியா?அவனை சுற்றி வந்த படி கேட்டாள்.
நான் அர்ஜூனை பார்க்க வந்தேன்.நீங்கள் கிளம்புங்கள் என்றான்.
அவள் தோளை குலுக்கி விட்டு கிளம்ப, ஆதேஷும் அர்ஜூனும் வந்தனர். அர்ஜூனை பார்த்த அபி,அவனது கையை பிடித்து தரதரவென இழுத்து யாருமில்லா இடத்திற்கு வந்தனர்.அர்ச்சுவை காண வந்த இதயாவும் அபியிடம் மாட்டினாள்.
ஹேய்,இரண்டு பேரும் என்ன செய்றீங்க? கேட்டபடி அவர்களருகே வந்தாள். அபி அவனது போனில் அழிக்கப்பட்ட வீடியோவை கண்டறிந்து விட்டான்.
நீ தானே எனக்கு அனுப்பினாய்? என்று இதயாவிடம் கேட்டவன் அர்ச்சு பக்கம் திரும்பி, நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தேன்.நீ தானே அழித்தாய் அர்ச்சு என்னவென்று சொல்லு சரியாக கணித்தான் அபி.
அய்யோ மாட்டிகிட்டோமே! எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது.நான் முடித்து விட்டு வருகிறேன் நழுவ முயன்றாள் இதயா.அவளது கையை பிடித்த அபி, நில்லு..எங்க போற? எனக்கு சொல்லிட்டு நீ போகலாம் என்று அவளை நிறுத்தினான். அவள் அர்ச்சுவை பார்த்து சொல்லாதே! உதட்டசைவில் கூறினாள்.
இதை கவனித்த அபி..உங்களது சம்பாசனையை நிறுத்தி விட்டு,எனக்கு பதில் கூறுங்கள் என்றான்.
அர்ஜூன் அவனது போனில் இருந்த வீடியோவை காண்பிக்க போனை எடுத்தான். இதயா அதை பறித்து முக்கியமானதெல்லாம் இல்லை அபி.
ஒழுங்கா கொடுத்து விடு அபி இதயாவை பிடிக்க முயன்றான். இதை பார்த்த அங்கு வந்த கிஷோர், என்னடா விளையாண்டு கொண்டிருக்கிறீர்கள்?அது என்ன போனில்? என்று அருகே வந்தான். இதயாவிற்கு மனம் படபடத்தது.
போனில் அபியின் மாமா பொண்ணு சமாளித்தான் அர்ச்சு.
நீ உன்னோட அக்காவை கலையரங்கம் பக்கத்தில் இருக்கும் அறைக்கு என்னை பார்க்க வரச் சொல்கிறாயா? நேரடியாக கேட்டான்.
அவங்க எதுக்கு உங்களை பார்க்க வரணும் அபி கேட்டான்.
உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி தான் செய்யணுமோ! கிஷோர் கேட்டான்.
சார்,அவங்க தனியா வரலாம் மாட்டாங்க.நான் அழைத்து வருகிறேன் என்னுடைய மேம்மை அர்ஜூன் சொல்ல.
நீ என்ன அவளுக்கு எடுப்பா?
சார்.நான் எடுப்பும் இல்லை.துடுப்பும் இல்லை கோபமாக அர்ச்சு முறைத்தான்.
நீங்கள் கிளம்புங்கள்.என் அக்கா வர மாட்டாள் இதயா அவனை முறைத்தபடி கூறினாள்.
அவள் வர மாட்டாளா? நீ வருகிறாயா? இதயா அருகே கிஷோர் வந்தான். அபி அவன் முன் வந்து நின்று,நீங்க கிளம்புங்க சார்.
சார்.இது சரியில்லை என்றான் அர்ஜூன்.
பொடி பசங்கடா நீங்க?எனக்கே அட்வெய்சா?
அங்கே வந்த இன்பா கிஷோரை முறைத்து விட்டு,இதயா கையை பிடித்து முன்னேற அவன் இன்பா கையை பிடித்தான்.அபிக்கு கோபம் வர,அதற்குள் இன்பா கிஷோரை அறைந்தாள்.
இனி யாரிடமாவது இவ்வாறு நடந்து தெரிந்தால் செறுப்படி தான் வாங்குவ என்றவள்..வாங்கடா என்று அபியையும் அர்ஜூனையும் அழைத்தாள்.
அவர்கள் அவனை முறைத்து விட்டு கிளம்பினார்கள்.இன்பா அவர்களிடம்,அந்த இடத்தில் தனியே என்னடா செய்தீர்கள்?அந்த பொறுக்கியுடன் திட்டினாள்.இதயா இன்பாவை அணைத்துக் கொண்டாள்.
அவன் உங்களை தனியே வரச் சொன்னான் மேம் அர்ச்சு கூறினான்.
சரி விடுங்க.நான் அவனை கவனித்துக் கொள்கிறேன் என்றாள்.
அக்கா வேண்டாம்.அவன் இருக்கும் பக்கம் கூட செல்லாதே என்றாள் இதயா.
சரி.வாங்க போகலாம் என்றாள் இன்பா. பெண்கள் சென்ற பின் அந்த வீடியோவை அபியிடம் காட்டினான் அர்ஜூன்.
அபி கோபமாக பல்லை கடித்தான். அவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் அர்ஜூன் என்றான் அபி.
கொஞ்சம் பொறுமையா இரு அபி.அவன் ஆசிரியராக இருக்கிறான். நமக்கான நேரம் வரட்டும்.
இவங்க எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்கிறாங்க அர்ஜூன் என்று அபி விக்கியை பற்றி கூறினான்.
இது எப்படா நடந்தது? அர்ஜூன் கேட்டான்.
நான் தான் தினமும் அவங்களை வீட்டில் விடுகிறேன் என்றவன் எனக்கு சரியாக படவில்லை என்றான்.
நோ..டென்சன் டா.நான் இந்த வீடியோவை உன்னிடம் காட்டியதை மேம் கிட்ட சொல்லாதே! சைலேஷ் சாரிடம் சொல்லி என்ன செய்யலாம் என்று பார்ப்போம் என்றான் அர்ச்சு.அப்புறம் நான் கூறினேனே அனு பாப்பா இன்று அவள் பிறந்தநாள். ஈவ்னிங் பார்ட்டி போகணும்.நீயும் வர..அக்கா என்னோட ப்ரெண்ட்ஸை வரச் சொன்னாங்க.
இருவரும் மீண்டும் வகுப்பிற்கு சென்றனர். மதிய வேளை சாப்பாட்டை வேகமாக முடித்த அபி கல்லூரி நூலகத்திற்கு சென்றான்.
அங்கே தான் இன்பாவும் இருந்தாள்.ஆதேஷ் தருண் அவளருகே இருந்தனர்.அவர்கள் ஒவ்வொரு புத்தகமாக இது..இது..கேட்டுக் கொண்டிருந்தனர். அவள் மறுத்துக் கொண்டிருந்தாள்.இதை பார்த்த அபி அவர்களருகே வந்தான்.
என்னடா தேடுகிறீர்கள்?கேட்டான்.அவர்கள் கூறியவுடன் இந்த ஃராங்கில் பாருங்கள் இருக்கும் என்று அசால்ட்டாக எடுத்து இன்பா கையில் ஒரு புத்தகத்தை கொடுத்து விட்டு,அவனுக்கு வேண்டியதை எடுக்க சென்றான்.
மூவரும் அவனை ஆச்சர்யமுடன் பார்த்தனர்.பக்கத்தில் இருந்த ஒருவன். மேம்..அபிக்கு இந்த நூலகத்தில் எந்த புத்தகம்? எங்கே இருக்கும்? என்று சரியாக தெரியும்.நாங்கள் அவனிடம் கேட்டு தான் புத்தகத்தை எடுப்போம் என்றான்.
இது அவனது பிரிவில்லையே! அவனுக்கு எப்படி தெரியும்? இன்பா கேட்டாள்.
அவனுக்கு பிடித்தது.புத்தகம் மட்டுமே!அவனை அதிகமாக இங்கேயும், அவன் நண்பர்களிடமும் பார்க்கலாம்..அவன் டிரம்ஸ் சூப்பரா ப்ளே பண்ணுவான்.அவனை நிறைய பொண்ணுகளுக்கு கூட பிடிக்கும்.அவன் தான் கண்டு கொள்ளவே மாட்டான். இங்கே கொஞ்ச நேரம் அவனை சுற்றி கவனியுங்களேன். பொண்ணுங்க பார்வை.. புத்தகத்தை விட அவன் மீது தான் இருக்கும் என்றான்.ஆனால் அவனுக்கு பிடித்த பொண்ணும் இருக்கா போலவே நேற்று கூட வந்தாலே அந்த சின்னப் பொண்ணு என்று அவன் ஜானுவை சொல்ல,இன்பா இதழ்களில் புன்னகை அரும்பியது.
அந்த பையன் கூறியது போலவே புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பொண்ணு அவனை பார்த்தவாறு அங்கும் இங்குமாய் நடப்பதை பார்த்தனர் மூவரும்.
மேம் அங்கே பாருங்களேன் என்று ஒரிடத்தில் பொண்ணுங்க வரிசையாக அமர்ந்து புத்தகம் படிப்பது போலவே, புத்தகத்தை இறக்கி ஏற்றுவதுமாக அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்து இன்பா கலகலவென சிரித்தாள்.அனைவரும் இன்பாவை பார்த்தனர்.
சாரி காய்ஸ்.யூ கண்டினியூ..என்று கையசைத்து புத்தகம் பக்கம் திரும்பினாள். அபியும் அவளை பார்த்தான்.ஆதேஷும் தருணும் அபியை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவனும் அவர்களை பார்த்து புருவத்தை உயர்த்த,ஒன்றுமில்லை என்று தலையசைத்தனர் இருவரும்.
அபி மாறவே இல்லை மேம் என்றான் தருண்.
என்ன? கேட்டான் ஆதேஷ்.
நாங்கள் ஒரே பள்ளியில் தான் படித்தோம்.இவங்க இசைக்குழுவில் உள்ளார்கள் தெரியுமா? உங்களுக்கு கேட்டான்.
இல்லையே.இசைக்குழுவா?
ஸ்ரீ தான் பள்ளியில் அதுக்கு ஹெட். இப்பொழுது அகில் இருக்கிறான்.பள்ளி போலவே கல்லூரியிலும் செம்ம ஃபேமஸ் இவங்க. இங்கே இவர்களுக்கு எதிராக ஒரு இசைக்குழுவும் உள்ளனர்.லையன்ஸ் இசைக்குழு. இருவருக்கும் ஆகாது.இதோ போறான் பாருங்கள் வருண்.இவன் அதில் இருக்கிறான்.அபி லெவலுக்கு இல்லையென்றாலும் படிப்பான்.
அபியை ஒரு பொண்ணு பள்ளியில் காதலித்தாள்.அவன் பின்னே சுற்றினாள்.அபி அவளை அழைத்து,முதல்ல படிக்கிற வேலையை பாரு. காலேஜ் போன பின்னும் என் மீது காதல் இருந்தால் யோசிக்கிறேன் என்று கட் செய்து விட்டான். பின் அவள் அவன் பக்கமே வரல என்று சிரித்தான் தருண்.
எனக்கு இவர்களை பிடிக்கும்.அர்ஜூனிடம் இவர்கள் நடந்து கொண்டது சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்கள் என்ன செய்தாலும் அர்ஜூன் ரொம்ப பொறுமையாக இருப்பான். அவனை பிடித்து அவனிடம் பழகி ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.
அபி புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்க, இவர்கள் மூவரும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் முன் அமர்ந்தனர். இன்பா திரும்பி மீண்டும் அந்த பெண்களை பார்த்து விட்டு அபியை பார்த்தாள்.
அவன் இன்பாவை பார்க்க, அவள் அவனை பார்த்து சிரித்தபடி, அந்த பொண்ணுங்களை பார்க்க,அவனும் பார்த்து விட்டு இன்பாவை பார்த்தான்.
அவள் மெதுவாக அவனை நெருங்கி வந்து, உன்னை அந்த பொண்ணுங்க செம்மையா சைட் அடிக்கிறாங்கடா என்றாள்.
அவளுடைய நெருக்கம் அவனுள் உணர்வு பிறந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டு, அதனால் என்ன மேம்? கேட்டான்.
யாரையாவது செலக்ட் பண்ணுடா என்றாள்.
மூவரும் சேர்ந்தவாறு,என்ன? என்றனர். அனைவரும் அவர்களை பார்க்க,எனி பிராபிளம் என்றொரு குரல் கேட்டது.
துர்கா என்று இன்பா எழுந்து அவரை கட்டிக் கொண்டு, எப்படி இருக்கிறாய்? கேட்டாள்.
இன்னு,நான் தான் நூலக பொறுப்பாளர் என்றார்.
வாவ் சூப்பர்டி என்று இன்பா சுருதி குறைந்து, இங்கேயா? கேட்டாள்.
நாம் அப்புறம் பேசலாம் என்று விட்டு, பசங்களை பார்த்து அமைதியாக இருங்கள்.உள்ளே சென்றார்.
ம்ம் என்றாள் அமைதியாக. நான் உங்களிடம் அபியை பற்றி கூறியது அவனுக்கு பொண்ணு பாக்கவா? கொடுமடா? இது கூட ஃபீல் ஆகலையே இவங்களுக்கு தருண் மனதினுள் நினைத்தான்.
அபி போனில் சத்தம் வரவே,மெசேஜ் பார்த்தான்.மெலிதான புன்னகையுடன் கீழே வைத்தான். மீண்டும் வரவே போனை எடுத்தவன். அய்யோ அப்பத்தா..தலையில் அடித்துக் கொண்டான் புன்னகையுடன்.
அவன் புன்னகையை பார்த்த இன்பாவால் கண்ணெடுக்க முடியாமல் அவனை பார்த்தாள். மீண்டும் மெசேஜ் வந்தது.அவன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு,பை டா என்று விட்டு மேம் அப்புறம் பார்க்கலாம் என்று எழுந்தான்.
இன்னும் நேரம் உள்ளதே! என்றாள்.
அவன் கண்ணாலே போனில் சொந்தம் அழைக்கிறது என்றான். அவள் புரியாமல் பார்க்கவே,அவன் போனை காட்டவும் அதை பார்த்து சிரித்தாள்.
அவனுடைய அப்பத்தா,அபி பெயரை கூறி நடனமாடியவாறு காட்சியை பார்த்து சிரித்திருப்பாள்.
இன்பாவிடம் நெருக்கமாக வந்த அபி,நான் பேசவில்லையென்றால் என் அப்பத்தா இங்கேயே வந்து விடுவார் என்று கையை க்யூட்டா ஆட்டிக் காண்பித்தவாறு கிளம்பினான்.
டேய்,புத்தகத்தை எடுத்து வாருங்கள்டா. என்ன பேசுறான்னு பார்ப்போம் என்று சுவாரஸ்வத்துடன் கூறி விட்டு வெளியே வந்து அபியை தேடினாள் இன்பா.
மேம் என்று அவர்கள் அழைப்பது கூட கவனிக்காமல் செல்வதை அங்கிருந்த பெண்கள் பார்த்து விட்டு,அவர்களும் இன்பாவை பின் தொடர்ந்தனர்.
ஆதேஷ் பிரச்சனையாகி விடாமல், சீக்கிரம் வாடா என்று புத்தகத்தை என்டரி போடுங்கள் மேம்.வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று ஓடினார்கள் தருணும்,ஆதேஷும்.