வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-47
197
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
ஹாப்பி ஓணம் வாழ்த்துக்கள் நண்பர்களே..
இன்றைய உங்களுக்கான எபிசோடு 47.. வாசித்து மகிழுங்கள்.
என்னுடைய பாட்டியை பார்க்க தினமும் வருவாள் ஸ்ரீ.கொஞ்ச நேரம் இருந்து விட்டு தான் போவாள். என்னிடமும் நன்றாக பேசுவாள். ஆனால் பெயர் கூறி அவள் என்னை அழைத்ததே இல்லை.அவளுக்கு எப்பொழுதும் நான் குட்டி பையன் தான்.இரண்டு வருடத்திற்கு பின் அகிலுடன் பேச நினைத்தேன்.அவர்கள் மூவருமே என்னை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதற்கு பதில் நித்தியும்,யாசுவும் நன்றாக பழகினர்.நான் பள்ளியில் சேர்ந்த ஒரு வாரத்திலே தருண் என்னுடன் சேர்ந்து கொண்டான்.நாங்கள் சேர்ந்தே தான் திரிவோம். அவள் மீது எனக்குள்ள காதலை உணர்ந்த போது தான் அகிலும் அவளும் அதிக நெருக்கமானார்கள்.
இருவரது குடும்பமும் ஓரே வீட்டில் தான் வசித்தனர் அவர்கள் பிறந்ததிலிருந்து, இருவருக்கும் ஒரே அறை தான்.
என்ன இரண்டு பேரும் ஓரே அறையில் தான் தூங்குவார்களா? கைரவ், நிவாஸ் வாயை திறந்தனர்.
டேய்,ரொம்ப யோசிக்காதீங்க.அவர்களுக்கு அடுக்கு பெட் என்றான். இருந்தாலும் கைரவ் பேச,
அவனுக்கு ஸ்ரீ மேல் எந்த உணர்வும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அவளுக்கு தான் அவனில்லாது எதுவும் அசையாது.அவ்வளவு காதல் அகில் மீது.எனக்கு நித்தி, யாசுவுக்கு மட்டும் தான் அவளது காதல் தெரியும்.ஆனால் அவன் வேற பொண்ணு பின்னால் சுற்ற ஆரம்பித்தான். அது மட்டுமில்லாது ஸ்ரீ மீது இருந்த அன்பை கூட மறந்தான்.அவளிடம் எதற்கெடுத்தாலும் எறிந்து விழுவான். அவள் எப்போதும் அவனது கழுத்தை கட்டிக் கொண்டு தான் திரிவாள். எப்பொழுது அந்த பிரகதி பள்ளிக்கு வந்து சேர்ந்தாலோ, அப்பொழுதே ஸ்ரீயின் கெட்ட காலம் ஆரம்பமானது.
ஸ்ரீயை அகில் பக்கம் வரவே விட மாட்டாள். என்னை கவினும் அபியும் ஸ்ரீ அருகே விடவே இல்லை..அதற்காக நிறைய செய்தார்கள்.அவள் முன் என்னை அவமானப்படுத்துவது வேண்டுமென்றே அகில் ஸ்ரீயை சேர்த்து பேசுவார்கள்.
கவின் அபிக்கும் அந்த பிரகதியுடன் அகில் சுற்றியது பிடிக்காது இருந்தும் அகிலிடம் எதையும் கேட்க மாட்டார்கள்.
அந்த பிரகதியை வீட்டிற்கே அழைத்து வந்தான். யாரும் இல்லாத சமயத்தில் அந்த பிரகதி ஸ்ரீயுடம் பேசியதை பாட்டி கொடுத்து வரச் சொன்ன பழங்களை கொடுக்க வந்ததனால் என்னால் அந்த விசயம் தெரிந்து கொள்ள முடித்தது.
ஏற்கனவே ஸ்ரீக்கும், அந்த பிரகதிக்கும் பிரச்சனை இருந்திருக்கும்.அவள் பள்ளியில் சேர்வதற்கு முன்பே ஸ்ரீயை பழி வாங்கவே இந்த பள்ளிக்கு வந்திருப்பாள். அவளுக்கு ஸ்ரீ அகிலை காதலிப்பது தெரிந்து வேண்டுமென்றே தான் அகிலுடன் பழகி இருப்பாள்.அது தெரியாமல் அகிலும் அவளது வலையில் சிக்கினான். இதில் காயம் ஸ்ரீக்கு தான்.
அவள் பேசியதை கேட்டு பிரகதி ஸ்ரீ முன்னே வந்தேன். என்னை பார்த்தவுடன் ஸ்ரீ உள்ளே சென்று விட்டாள். அந்த பிரகதி திமிறாக என் முன் வந்து,அவள் அழுவாள் பாரேன்.எனக்கு அது தான் வேண்டும்.நான் காதலித்தவனை அவள் பிரித்து விட்டாள்.இன்னும் அனுபவிப்பாள் என்று விட்டு சென்றாள்.
அன்று தான் ஸ்ரீ முதல் முறை அழுது பார்த்தேன்.ரொம்ப கஷ்டமா இருந்தது.அவளிடம் பிரகதி பற்றி கேட்டேன். அவள் காதலித்தவன் வேறொரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான்.அதை பார்த்து ஸ்ரீ அவனுடன் சண்டை போட்டு,விசயம் அவனை பற்றி தவறாக பேசப்பட்டு, அவனை அவனது பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டனர். அதனால் தான் அவள் இவ்வாறு செய்கிறாள்.
இதற்காகவா அழுகிறாய்?
இல்லை.அகில்..என்று கண்கலங்கினாள்.அப்பொழுதே அவளிடம் என் காதலை முதல் முறையாக கூறினேன். அவள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்களது அறையிலிருந்து என் அறை தெளிவாக தெரியும்படி தான் இருக்கும்.முதலில் இருந்தே அந்த அறையில் தான் அவளை பார்த்து பார்த்து காதலித்து வந்தேன்.ஸ்ரீ அம்மா சங்கரி ஆன்ட்டியும், அகில் அம்மா ரதி ஆன்ட்டியும் திக் ப்ரெண்ட்ஸ்.அது போல் தான் அவர்களது அப்பாக்களும். முதலில் ஸ்ரீ அம்மா அப்பாவிற்கு தான் காதல் வந்தது. பின் தான் அகில் அம்மா, அப்பா பழகி இருவருக்கும் பிடித்து நால்வருக்கும் ஒரே நாளில் தான் திருமணம் நடந்தது. ஸ்ரீ அகில் கூட ஒரே நாளில் தான் பிறந்தார்கள்.
அவளால் ஸ்ரீயை அகில் காயப்படுத்தினான். ஏன் ஒட்டிக் கொண்டே இருக்கிறாய்? நான் ஒரு பையன். உனக்கு அசிங்கமாக இல்லை பள்ளியில் அனைவர் முன்னிலையிலும் கேட்டான். அவள் ரொம்ப கஷ்டப்பட்டார். நித்தி அவனுடன் சண்டைக்கு போனாள்.நித்தி இரண்டு நாட்களாக அகிலுடன் பேசவே இல்லை. அவளுக்கு ஸ்ரீ என்றால் உயிர். அகில் நித்தியை சமாதானப்படுத்தானே தவிர ஸ்ரீயை கண்டு கொள்ளவே இல்லை. சிறு வயதிலிருந்து சேர்ந்தே இருந்தவள்.அவனால் தனியே இருக்க முடியவில்லை.அவளை பார்ப்பான்.பேச வந்தான்.ஆனால் சரியாக பிரகதி வந்து கெடுத்து விடுவாள்.
ஸ்ரீ அவர்களது அறைக்கு போகவில்லை. அம்மாவுடனே இருந்தாள்.அப்பா இருவருக்கும் கம்பெனி இங்கே இருப்பதால் இங்கே தான் அதிக நேரம் செலவலிப்பார்கள். அம்மாக்கள் மட்டுமே வீட்டில் இருப்பர்.
இதுவும் இல்லாமல் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று பள்ளி முடிந்து இரவு எட்டு மணியளவில் பிரகதி கூறவே,அவள் ஸ்ரீயை ஏதோ செய்து விட்டாளோ என்று பயந்து வேகமாக பள்ளிக்கு சென்று ஸ்ரீ பெயரை கூறி அழைத்து தேடினேன்.அவள் முணங்கும் சத்தம் கேட்டு, கதவையே உடைத்து விட்டு உள்ளே சென்றேன்.அவளது தண்ணீர் பாட்டிலில் மயக்க மருந்து கலக்கி வைத்திருந்திருக்கிறாள் பிரகதி.ஸ்ரீ குடித்து மயங்கி இருந்திருப்பாள். அவள் விழிக்கும் சமயம், என்னை வரவைத்திருக்கிறாள்.
இதை அறியாத நான் அந்நிலையில் ஏதும் புரியாமல், அவளை மடியில் போட்டு கன்னத்தை தட்டி எழுப்பினேன்.அவளுக்கு வியர்த்து இருந்தது. மயக்க நிலையிலே இருக்கவும் ஏதோ உளறினாள். எனக்கு புரியவில்லை. அவளை மடியில் போட்டு அழுது கொண்டிருக்க, அகில், நித்தி, யாசு, கவின்,அபி மற்றவர்களையும் அழைத்து வந்திருந்தாள் பிரகதி.
இரவு நேரம் எங்களை பார்த்து அவள் தவறாக பேச, அவனும் என்னை பிடித்து அடிக்க ஆரம்பித்தான். ஸ்ரீ விழித்து புரியாமல் இருக்க,அவன் கூறிய வார்த்தையில் உடைந்து விட்டாள்.
என்னை அடித்தவன் தலையை பிடித்துக் கொண்டு எழுந்த ஸ்ரீயை பார்த்து, என்னம்மா தெளிந்ததா? இவன் மீதுள்ள போதை..இருவரும் இப்படி சேர்ந்து ஒன்றாக எத்தனை இரவுகளை கழித்திருக்கிறீர்கள்? கேட்டவுடன் அதிர்ந்து நின்றவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். அனைவரும் அவளையே பார்க்க, அதில் உறைந்தவள் எழவே இல்லை.நித்தி யாசு தான் அவளருகே வந்து சமாதானப்படுத்தினார்கள்.
அவள் தனியே செல்வதை பார்த்து நானும் அவள் பின்னே சென்றேன். அவள் கவலையாக இருந்தாள் எங்கே செல்வாளோ! அங்கே தான் இருந்தோம்.அவள் அருகே சென்று அவளது முதுகில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.அவள் முதலில் ஏதும் கூறவில்லை. அவளிடம் சாக்லேட்டை நீட்டினேன்.அவளுக்கு கஷ்டமான நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவது அவளது வழக்கம்.அவள் நடந்ததை கூறினாள்.நானும் அவள் என்னிடம் கூறிய விசயத்தை சொன்னேன்.
நன்றாகவே திட்டம் தீட்டிருக்கிறால்ல.இனி எப்படி என் பெற்றோர்கள் முகத்தில் விழிப்பேன் அழுதாள்.எனக்கு என்ன பேசவென்று தெரியாமல் இருந்தேன்.
அகிலிற்கு அவன் பேசியதன் தீவிரம் புரிந்து ஸ்ரீயை தேடினான். அவள் தான் அங்கு இல்லையே! வீட்டிற்கு வந்தான். அவர்களது அம்மாவிற்கு விசயம் தெரிந்து,அவனை அவனது அம்மா அடித்து விட்டார்.ஸ்ரீ அம்மா வாசலையே பார்த்த படியே இருந்தார்.
வா..என்று ரதி ஆன்ட்டி சங்கரி ஆன்ட்டியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே வந்து எல்லாரிடமும் ஸ்ரீயை பற்றி கேட்டனர்.அப்பொழுது எங்கள் பிரதீப் அண்ணா கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தார்.அவர் அவளுக்காக ஊருக்கு கிளம்பி வந்தார்.எங்களுக்கு யாரும் தேடுவது தெரியாது. நாங்கள் காட்டின் ஊடே இருந்தோம்.அவர் வர மணி பதினொன்று.நான் ஸ்ரீயை வீட்டிற்கு அழைத்தேன்.நீ போ..நான் வரல என்றாள் பிடிவாதத்துடன்.மிருங்கள் வாழும் காடு எப்படி அவளை தனியே விடுவது என்று அவளுடனே இருந்தேன்.
ஸ்ரீ, நீ என்னை நம்புகிறாய் தானே! என்று கேட்டேன். அவள் என்னை பார்த்து,உன்னை எனக்கு ஏழு வருடங்களாக தெரியும் என்றாள்.
அண்ணா அங்கே வந்து அவளை சமாதானப்படுத்தி ஊருக்குள் அழைத்து வந்தார். நாங்கள் மூவரும் சென்றனர்.அங்கே எங்களை பார்த்து புரளி பேச,என் பாட்டி என்னை அடித்து விட்டார்.
ஸ்ரீ தான் அவரிடம், நாங்கள் ஏதும் செய்யவில்லை. நான் அறைக்குள் இருப்பது தெரியாமல் யாரோ பூட்டி விட்டார்கள். மூச்சு விட கஷ்டமாக இருந்தது.மயங்கி விட்டேன். வெளியே வர முடியவில்லை.அர்ஜூன் பள்ளி நூலகத்திற்கு வந்தான். மயக்கத்தில் என் முணங்கும் சத்தம் கேட்டு கதவை திறக்க முடியாமல் உடைத்து உள்ளே வந்து பயத்தில் என்னை அவன் மடியில் போட்டு அழுது கொண்டிருந்தான். அதை பார்த்து இவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள். அந்த அறையில் புத்தகங்கள் நிறைய இருக்கும். சன்னல் ஏதும் கிடையாது.அதனால் தான் நான் மயங்கி விட்டேன்.குட்டி பையன் வரலைன்னா, நான் செத்து போயிருப்பேன். அப்பொழுது எல்லாருக்கும் நல்லா இருந்திருக்கும்ல என்றாள்.
ஓடி வந்து அகில் அம்மா அவளை அணைத்து, அப்படியெல்லாம் பேசாதேம்மா,எங்களுக்கு நன்றாக தெரியும்.நீங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று,அவரது கையை விலக்கியவள், அவள் அம்மாவை பார்த்தாள்.
அம்மா,நீங்க என்னம்மா சொல்றீங்க?
என்னோட பொண்ணு நெருப்பு.யாரும் அவளருகே கூட செல்ல முடியாது. என்று நன்றாகவே தெரியும் என்றாள்.அப்படியென்றால் இப்பொழுது வரை இருவரும் என்ன செய்தீர்கள்?கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.
அவள் காட்டிற்குள் தனியே சென்றாள்.அவளை தனியே விட முடியாது துணைக்கு ஒரு பாதுகாவலான மட்டும் தான் நான் சென்றேன் என்று விட்டு கோபமாக அர்ஜூன் சென்றிருப்பான்.
அகில் பேச வந்தும் ஸ்ரீ அவனிடம் பேச வில்லை.ஒரு வாரம் கழிந்தது. அவர்களது அப்பாக்கள் வந்தனர். அவர்களும் அகிலை திட்டவே,அவன் பிரகதியிடம் கூறி வருத்தப்பட்டான். அவள் இருவரையும் பிரிக்க நினைத்தாள். முடித்து விட்டாள். அவள் ஊருக்கு சென்று விட்டாள். அவளை பற்றி அகிலிற்கு இன்று வரை தெரியாது.இருவரும் ஒன்றாகவே இருந்ததாலே என்னவோ, ஸ்ரீயால் வெகு நாட்கள் அவன் மீது கோபமாக இருக்க முடியவில்லை. அதனால் பழைய மாதிரி நட்புடன் இருந்தனர். ஆனால் ஸ்ரீ முன்பு போல் அவனுடன் நெருக்கமாகவில்லை. நானும் இரண்டாம் முறையாக காதலை கூறினேன். அவளால் ஏற்க முடியவில்லை.என்ன தான் அவள் அகிலுடன் பேசினாலும் அவள் மனதில் அவன் ஏற்படுத்திய காயம் மறையவில்லை.
அவள் என்னிடம் வந்து பேசுவாள்.அவன் ஒரு சுயநலவாதி. இன்னும் அந்த பிரகதி புராணத்தையே பாடிக் கொண்டிருக்கிறான். என்னுடைய காதல் கொஞ்சமும் அவனுக்கு தெரியவில்லை வருந்துவாள்.எங்களுக்கு பத்தாம் வகுப்பு பரீட்சை ஆரம்பமானது.அன்று தான் அகிலும் ஸ்ரீயும் சென்று கொண்டிருக்க, நானும் பின் தான் வந்து கொண்டிருந்தேன்.அவர்களை வேகமாக வந்த ஒரு மாருதி அள்ளி போட்டுக் கொண்டு சென்றது. அவர்களை ஓடியே பின் தொடர்ந்தேன்.காட்டிற்குள் உள்ளே ஒரு சிறிய வீட்டிற்குள் சென்றனர். அன்று உள்ளே ஏதோ கைக்கலப்பில் ஸ்ரீயின் தலையில் ஆணி ஒன்று குத்தி அவளை கிராமத்திலிருந்து இங்கே கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கே அவர்களை நான் தான் போலீஸிடம் காட்டிக் கொடுத்தேன்.அன்றே…அவள் அப்பாவிடம் கேட்டேன்.எங்கே செல்கிறீர்கள் என்று? அவர் பிடிவாதமாக மறைத்து விட்டார்.
நண்பர்கள் அனைவரும் யாரும் யாரிடமும் பேசுவதே இல்லை.அகில் மிகவும் கஷ்டப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ இல்லாமல் ஏதும் இல்லாதது போனது.அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். என்ன! அந்த பிரகதி பேச்சை அதிகமாகவே கேட்டு விட்டான். அன்று கூட ஸ்ரீயை பற்றி வேறு யாரும் பேசக்கூடாது என்று நினைத்து அவன் பேசியது பூதாகரமாகி விட்டது. அவனும் அவளை காதலிக்கிறான் என்று அவள் பிரிந்த பின் தான் உணர்ந்தான்.என்னாலும் ஸ்ரீ அங்கே இல்லாமல் இருக்க முடியவில்லை.பாட்டியை தனியே விட்டு நானும் இங்கே வந்து விட்டேன். இங்கே எப்படியாவது அவளை கண்டறிய வேண்டும் என்று சுற்றி தெரிந்தேன்.அவள் அருகே இருந்தும் எனக்கு தெரியாமல் போய் விட்டது . அநியாயமாக அங்கிள், ஆன்ட்டியை கொன்று விட்டார்கள் என்று கண்ணீர் வடித்தான். அவர் என்னை பார்த்து இருக்கிறார் என்றும் உதவிக்காக என்னை அணுக வந்தார் என்பதும் அந்த பொம்பள கூறி தான் தெரிந்தது.
அவர் என்னிடம் பேச முயன்றது கண்டிப்பாக ஸ்ரீக்காக தான் இருக்கும்.இனி அவளை அனைத்து பிரச்சனையிலிருந்து விடுவிப்பது என்னோட கடமை.அவர்களை கொன்ற யாரையும் சும்மா விட மாட்டேன் கோபமாக கத்தினான். அவனை நிவாஸும் கைரவும் அணைத்து அமைதியாக்கினர்.
நீ இப்பொழுது ஓய்வெடு.உன்னுடைய உதவி எனக்கு கண்டிப்பாக தேவை.நானே அழைக்கிறேன் என்றான் அர்ஜூன்.