ஹாய்…ப்ரெண்ட்ஸ்….
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்……
இதோ உங்களுக்கான எபிசோடு 37..
நித்தியை சைலேஷ் விடுவிக்க, நித்தி அவனை இழுத்து, அவன் சட்டை பட்டனை திருகியவாறு,எனக்கு ஒன்று வேண்டுமே? அவன் கண்ணை பார்க்க, விழி விரித்து பார்த்தவன் அவளை இறுக்கி பிடித்தான்.
எனக்கு…எனக்கு… அவள் கேட்க,
உனக்கு….உனக்கு…..அவன் அவளை முத்தமிடுவது போல் வந்தான்.அவனை தடுத்த நித்தி, எனக்கு பஞ்சு மிட்டாய் வேண்டும் என்றாள்.
அவளை வேகமாக விடுத்தவன் அவள் விழும் முன்னே அவளை பிடித்தான் சைலேஷ். பஞ்சு மிட்டாய்கா?…இப்படி குலைந்தாய்? நான் என்னவெல்லாம் நினைத்தேன்?
என்ன நினைச்சீங்க?
அதுவா?…அவன் மேலும் அருகே வர, பஞ்சுமிட்டாய்… என்றாள்.
அட..போம்மா..மூடே போச்சு. என்ன தான் இருக்கு அதுல?
சிறுவயதிலிருந்தே என்னோட ஃபேவரேட். எப்பொழுதும் கவின் தான் வாங்கி தருவான். ஸ்ரீயை பார்த்ததிலிருந்து அவளை பற்றியே யோசித்து, நான் வாங்கவில்லை. அந்த பயலும் மறந்துட்டான்.கவினை பற்றி பேசியவுடன் சைலேஷ் முகம் கறுத்து போனது.
அவனை பார்த்தவள், சாரி….விருப்பமில்லை என்றால் வேண்டாம்.அவள் முன் நகர,அவன் அவளை அணைத்துக் கொண்டு, அவனை பற்றி என்னிடம் பேசாதே!
நீங்கள் தானே அவனை பற்றி பேசினாலும் ஒன்றுமில்லை என்று அன்று கூறினீர்களே!
என்னை விட அவனுக்கு தானே,உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் என்றான்.
அவள் சட்டென நிமிர்ந்து, அவனது கன்னத்தை தன் கையில் ஏந்தியவாறு,அவன் என்னுடன் சிறு வயதிலிருந்து பழகியவன். அவனுக்கு தெரியும். அதனால் அவன் பக்கம் நான் சென்று விடுவேனா? என்ன?அவன் என்னுடைய தோழன் மட்டும் தான். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அவ்வளவு தானே! சீரியசாக பேசியவள் அதற்காக இப்படி பொறாமைபடுகிறீர்களே! மிஸ்டர் சைலேஷ் சார் என்றாள் குறும்பாக அவனது கன்னத்தை கிள்ளியவாறு.
அவன் அவளை இழுக்க,…மாட்டுவேனா? தள்ளி நின்று கொண்டு….. தாத்தா….என்னை காப்பாற்றுங்கள்? அவர் என்னை அடிக்க வருகிறார்?கத்தினாள். அவள் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் வெளியே வந்தனர்.
அடப்பாவி என்று வாயில் கை வைத்தவாறு நின்றான்.
என்னம்மா ஆச்சு? அந்த பெண்மணி அவளருகே வந்தார்…தாத்தாவும் வரவே… எப்புடி? என்று…..அலவம் செய்தாள் சைலேஷை பார்த்து….
என் பெயர்த்தியவே அடிக்க போகிறாயா? தாத்தா சத்தமிட…..நான் ஒன்றுமே செய்யவில்லை தாத்தா என்று மண்றாடினான். அவள் சிரிப்பதை தாத்தா கவனித்து விட்டு, இங்கே வாம்மா கையசைத்தார்.
ஊகூம்….நான் வர மாட்டேன்.
புடிங்கடா அவளை,…என்றார் தாத்தா…அனைவரும் அவளை பிடிக்க எத்தனிக்க, நிற்காது வீட்டினுள்ளே ஓடிக் கொண்டிருந்தாள்.வீடெங்கும் ஒரே சத்தம்…. உற்சாகமாக இருந்தனர் அனைவரும். அந்தம்மா கனிக்கு நித்தியை மிகவும் பிடித்து போயிற்று.தாத்தாவும் சைலேஷும் சிரித்த வண்ணம் அவளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் அகில் கைரவ் அறைக்கு சென்றான். அவன் அகிலிடம் நார்மலாகவே பேசினான். நீ அவள் அறை பக்கம் செல்லாதே! நாளை மட்டும்…. அவள் தாரிகா அப்பாவிடம் எவ்வளவு தைரியமாக பேசினாள் தெரியுமா? சுற்றிலும் ரௌடிகள்…அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை அவள். எங்களுடன் சேர்ந்து சண்டை போட்டாள். ஜிதினை பார்த்து எவ்வாறு நடந்து கொண்டாளோ! அதே போல் தான் உன் செய்கையால் கோபப்பட்டதாக பேசினார்கள். எனக்கு தெரிந்து அவள் கண்டிப்பாக உன்னுடன் பேச வருவாள். அதற்குள் அவளை பார்க்கிறேன் என்று ஏதும் செய்து விடாதே!
அகிலிற்கு கோபம் வந்தாலும் அதை மறைத்து அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரத்திலே அகில் வெளியே அமர்ந்திருப்பதை கண்ட அர்ச்சு, கைரவ் அறைக்குள் மெதுவாக நுழைந்தான்.
டேய்…இப்பொழுது அதை நீங்கள் பத்திரமாக வைத்திருங்கள். அவர்கள் என்னை சோதித்ததை வைத்து பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் ஸ்ரீயை காயப்படுத்துவது போல் ஏதோ ஒன்று உள்ளது போனில் அவன் பேசியதை கேட்டு அர்ச்சு வேகமாக அவனருகே வந்தான்.
உன்னிடம் என்ன உள்ளது? கேட்டான்.
என்னிடம் என்ன உள்ளது என்று தெரியாதது போல் பேசினான் கைரவ்.
என்னிடம் நடிக்காதே கைரவ். நீ பேசியதை கேட்டேன்.. என்ன அது?…யாரிடம் உள்ளது? அர்ச்சு வினவினான்.
அவன் வைத்திருப்பதை சொல்லி, அதில் என்ன உள்ளதென்று தெரியாது.ஆனால் ஸ்ரீயை அவர்கள் காயப்படுத்தியது இருக்கும் என்று கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்…
அதை நீ பார்க்கவில்லையா?
அண்ணாவிற்கு தெரிந்தால் கோபப்படுவான்.அதான் என்னுடைய அல்லகைகளிடம் தான் கொடுத்திருக்கிறேன்.
பத்திரமாக வைத்திருக்க சொல்.நாம் இருவரும் சேர்ந்து என்னவென்று பார்ப்போம் என்றான் அர்ச்சு.
அகில் வெளியே இருக்கிறானா? கைரவ் கேட்டான். அர்ச்சு தலையசைத்தான்.
அகில் ஸ்ரீயிடம் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் யாரும் அவனிடம் பேசவில்லை. முதன் முதலாய் தனிமையை உணர்ந்தான் அகில்.
ஸ்ரீ விருப்பத்துடன் இருவரும் முத்தத்தில் இருக்கிறார்கள் என்று தான் உடைந்து வெளியே சென்றிருப்பான் அர்ச்சு. நடந்த முழுவதையும் அவன் கண்டிருக்கவில்லை. நிவாஸ் கூறிய பின் தான் தெளிவாக தெரிந்திருக்கும். அதனால் அவனும் அர்ச்சுவிடம் பேசவில்லை.அவனும் அமைதியாகவே இருந்திருப்பான்.
உனக்கு அவன் மீது கோபமா? கைரவ் கேட்டான்.
அவள் விருப்பப்பட்ட எதையும் செய்பவன் நான். அவன் அவளை காயப்படுத்தி விட்டான். அதனால் தான் கோபம்…வேறொன்றுமில்லை அர்ச்சு கூறினான்.
உனக்கும் ஸ்ரீயை பிடிக்கும் தானே!…இப்படி கூறுகிறாய்?
காதலிப்பவர் மகிழ்ச்சியே எனது நிம்மதி என்றான் அர்ச்சு மனதினுள் புழுங்கிய படி.
ம்ம்ம்…நான் நினைச்சதை விட நீ ஸ்ட்ராங் தான்.
சரி…அண்ணா கிளம்பிடாரா?அவன் விடுதிக்கு கிளம்பணும் அர்ச்சு கேட்டான்.
போன் செய்தான் கைரவ்.சைலேஷ் போனை எடுக்க ஒரே சத்தம். நித்தி அங்கிருந்தவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அண்ணா…நீ வீட்டில் தான் இருக்கிறாயா? இவ்வளவு சத்தமாக உள்ளது.சைலேஷ்.. சிரித்துக் கொண்டு, கேட்கிறாயா?
என்ன கேட்க?
நித்தி அருகே போனை கொண்டு சென்றான்.சைலேஷ் வீட்டில் ஒவ்வொன்றுக்கும் தனி தனி வேலையாட்கள். மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் … ஆறு பேர் இருந்தனர்.டிரைவர் அங்கிள்…டிரைவர் அங்கிள் என்று கத்திக் கொண்டிருந்தாள். ஆர்ம் ரஸ்டிலிங் நடத்திக் கொண்டிருந்தாள்.
அண்ணா…வீட்டையே சந்த கடை ஆக்கிட்டா போலவே கைரவ் கூற, என்ன சொன்ன? அதட்டுதலாக கேட்டான் சைலேஷ்..
அண்ணி..ஆக்கிட்டாங்க என்றான்.
ம்ம்ம்….என்றவன்..இதுவும் நல்லா தானே இருக்கு என்றான்.
நல்லா இருக்கா.என்னை மட்டும் எல்லாரும் திட்டுவீங்க.
போன் எதற்கு செய்தாய்?
அகில் விடுதிக்கு செல்ல வேண்டும்.நீயும் ஒன்பது மணிக்குள் வர வேண்டும். அரை மணி நேரம் தான் உள்ளது. அண்ணா…ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வருகிறாயா? சாப்பிட்டு விட்டேன் ஆனாலும் ரொம்ப பசிக்கிறது.
வாங்கி வருகிறேன் என்றவன் போனை அணைத்து விட்டு, நித்தியை அவன் பக்கம் திருப்பி, நான் கிளம்ப வேண்டும். விளையாட்டு போதுமே! என்றான். தாத்தா அவனை பார்த்து சிரித்தார்.
ஓ.கே……டிரைவர் அங்கிள்…இன்னொரு நாள் நாம் விளையாடுவோம். கார்டன் அங்கிள்…நீங்கள் தான் இன்றைய வின்னர் அறிவித்து விட்டு,சைலேஷ் பக்கம் திரும்ப, அவன் அவர்களுக்கு சைகை செய்தான். அனைவரும் அங்கிருந்து அகன்றனர். தாத்தாவும் அவருடைய துணையாளை அழைத்து உள்ளே செல்லும் முன் அவனை நன்றாக பார்த்துக் கொள். மருத்துவர் காலையில் என்ன சொல்கிறார் என்று மறவாமல் என்னிடம் கூற வேண்டும் கட்டளையிட்டு,
அம்மா..சாப்பிட வாம்மா…அவர் அழைக்க, நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோம் என்று அவளது கையை கோர்த்து நின்றான்.என் பெயரன் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லாமல் சொல்கிறான் பார் என்று துணையாளிடம் அவர் கூற,
அப்படியில்லை தாத்தா…நித்தி நகர முற்பட, அவளை நகராதவாறு பிடித்திருந்தான் சைலேஷ்.அவள் அவனை முறைத்தாள்.
எனக்கு ஒரு ஹக்…குடு என்றான் சைலேஷ்.
ம்ம்..என்றவள் அவனை அணைத்து பின் விடுவிக்க,நான் கிளம்புகிறேன். தாத்தாவை பார்த்துக் கொள் என்று கிளம்பினான்.
அவன் ஹாஸ்பிட்டல் சென்று அகிலை கிளப்பி விட்டு கைரவ் அறைக்குள் நுழைந்தான்.அகில் வருத்தமுடன் செல்வதை அர்ச்சு கவனித்துக் கொண்டிருந்தான்.நிவாசிற்கு காபி வாங்கி கொடுத்து விட்டு, அர்ச்சுவும் வாங்கிக் கொண்டு அவனருகே வந்தான்.
ஸ்ரீ உங்களை பார்த்தால்…நிவாஸ் ஆரம்பிக்க, நான் சென்று விடுவேன் என்றான் அர்ச்சு.
நானும் உங்களது அத்தையை சாதாரணமாக தான் எடை போட்டு விட்டேன். அவர்களால் தான் ஸ்ரீ அவளை அவளே காயப்படுத்தி இருக்கிறாள். அவள் தான் பழைய நினைவு கொண்டு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். அதை அறிந்து கொண்ட உங்கள் ஆன்ட்டி அவளிடம் எதையோ கூறி..மேலும் உன்னிடம் கேட்க தூண்டி இருக்கிறார்கள்.அதனால் தான் அவளது மூளைக்கு அதிக வேலை கொடுத்து இந்நிலையில் இருக்கிறாள். உங்கள் ஆன்ட்டி என்னிடம் கூறிய ஆரம்பம் இது தான்.
அடுத்த திட்டத்தை அவர்கள் ஆரம்பிக்கும் முன் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். உனக்கு அவர்களை பற்றி தெரியும் தானே! ஏதாவது திட்டம் தோன்றினால் கூறு.அவள் மறைத்துள்ள பிரச்சனை என்று உங்கள் குடும்ப மருத்துவர் கூறினாரே.அதை அவள் வாயிலிருந்து சொல்ல வைக்க வேண்டும். அது தெரிந்தால் தான் அடுத்த படி நோக்கி நகரலாம். அவள் சரியான பின் அவளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் அர்ச்சு கூறினான்.
அப்படி மட்டும் செய்து விடாதே! அவள் கூறவே மாட்டாள். வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாகி விடும்.நானே அவளை கூற வைக்க முயற்சி செய்கிறேன்.உங்களுக்கு தெரியாதது போல் காட்டிக் கொள்ளுங்கள் என்றான் நிவாஸ்.
நீ அவளிடம் விசயத்தை மட்டும் கற.நான் அவளிடம் பேசி புரிய வைத்து விடுவேன்.என்னதான் அவள் எல்லாவற்றையும் மறந்திருந்தாலும் அவள் என்னுடைய ஸ்ரீ தான். அவளிடம் எப்படி பேசி புரிய வைக்க வேண்டுமென்று எனக்கு தெரியும்.நீ எதற்கும் பயப்படாதே!
என்னுடைய ஸ்ரீயா? இவ்வளவு நம்பிக்கையா உனக்கு? நிவாஸ் கேட்டான்.
ம்ம்…அவள் மீது என்றான் அர்ச்சு புன்னகையுடன்.
எங்கள் மருத்துவர் பேசியதை நினைக்கும் போது மனதுக்கு ஏதோ சரியாக படவில்லை.அவளால் தாங்க முடியாது.அவளை விட்டு செல்ல கூடாது என்ற வார்த்தைகள் என்னை கலங்க வைக்கிறது.
பயமாக உள்ளது அவளை நினைத்து. அவனும் யோசித்தவாறு,அதையும் பார்ப்போம் என்றான் அர்ச்சு.
உதவி வேண்டுமென்றால் கூறு…வந்து விடுவேன். நீ தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே!அவளுக்கு குளுக்கோஸ் முடிந்தவுடன் செவிலியரை அழை இல்லையென்றால் என்னிடம் கூறு.நான் அழைத்து வருகிறேன் அர்ச்சு கிளம்ப,தலையசைத்தான் நிவாஸ்.
நிவாஸ் ஸ்ரீயை இரவு முழுவதும் பார்த்துக் கொண்டான். அவள் எழவே இல்லை.சைலேஷிற்கு அதிகாலை நான்கு மணியளவில் தாத்தா போன் செய்து ஏதோ கூறினார். அவன் லேசான புன்னகையுடன் வருகிறேன் என்று விட்டு வெளியே வந்தான்.அர்ச்சு அறைக்கு சென்றான். அவன் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். சைலேஷை பார்த்து எழுந்தான்.
என்ன பார்த்துக் கொண்டிருந்தாய்? அம்மா எப்பொழுதும் எனக்கு பிஸினஸ் பற்றிய விவரங்களை வீடியோவாக பதிவிட்டு அனுப்புவார்கள். கல்லூரி வந்த பின் பார்ப்பேன். இப்பொழுது தேவைப்படும் போல் உள்ளது…அர்ச்சு கூற,
ம்ம்…..அந்த கயல் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவளை ஸ்ரீயிடமிருந்து திசை திருப்ப….கம்பெனி ஒன்றை அவள் வைத்திருக்கும் பிராடெக்டிலேயே ஆரம்பித்து அவளுக்கு குடைச்சல் கொடுத்தால் அவள் கவனம் அதன் மீது திரும்பி விடும் அர்ச்சு ஆர்வமுடன் பேசினான்.
சைலேஷ் பயங்கரமாக சிரித்து விட்டு, கம்பெனி ஆரம்பிப்பது என்ன சிறு பிள்ளை விளையாட்டு போல் பேசுகிறாயே! மேலும் சிரித்தான். அதற்கு நிறைய பணம் வேண்டும். பணம் போட்டு கூட ஆரம்பித்து விடுவாய். நம்பிக்கையான ஆட்கள் வேண்டும்.பிஸினஸ் பற்றி உனக்கு என்ன தெரியும்? போன வருடம் கூட நீ போட்டோகிராபி தான் படித்து இருக்கிறாய்.இப்பொழுது தான் படிக்கவும் சேர்ந்திருக்கிறாய்.உன்னால் எப்படி முடியும்? சைலேஷ் கேட்டவுடன்,அர்ச்சு விவரிக்க ஆரம்பித்தான்.
கம்பெனி தொடங்க…என்னவெல்லாம் செய்ய வேண்டும். அரசாங்க அப்ரூவல்…. அனைத்தையும் கூறியவன்..அவங்களை கீழே இறக்க, அவர்களுடைய ஷேர் கோல்டர்ஸ் அனைவரையும் நம் பக்கம் திருப்ப வேண்டும். அவர்களுக்கு கயல் மீதுள்ள நம்பிக்கையை அழிக்க வேண்டும். நாம் அந்த நம்பிக்கையை பிடித்து நமக்குரியவர்களாக மாற்ற வேண்டும்.இதில் முக்கியமான ஒன்று.நாம் தான் இதில் ஈடுபட்டிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியக் கூடாது.
வாவ்…சூப்பர்…என்று கை தட்டிக் கொண்டே, நான் உன்னை என்னமோ என்று நினைத்தேன். நீ வேற லெவல் தான் போ சைலேஷ் அர்ச்சுவை பாராட்டினான்.
உங்களால் எனக்கு உதவ முடியுமா?கேட்டான் அர்ச்சு.
கண்டிப்பாக……நீ பணத்திற்கு ஏற்பாடு செய்.நான் கம்பெனி ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பிராடெக்ட் அதே வேண்டாம் அர்ஜூன்.வேற யோசிக்கணும் என்றான் சைலேஷ். அர்ச்சுவும் ஒத்துக் கொண்டான்.
அதற்கான பதவியை நீயே எடுத்துக் கொள்ளேன்….அவன் கூற, உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான ஆள் தான் தேவை என்றான்.
சைலேஷ் இன்பாவை கூறினான்.
மேடமா?
ம்….அவள் தான்.
அவளது அப்பா கம்பெனியை மீட்டெடுக்க தான் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை கம்பெனி “சி இ ஒ” வாக போடலாம். நன்றாக நடத்துவாள் என்றான்.
இதில் ஆபத்து உள்ளதே! கயலுக்கு தெரிந்தால் பிரச்சனை மேம்க்கு தான்.
நீ கூறுவது சரிதான்…தாடையை தடவியவாறு.
ஆன்லைன் கம்பெனியாக நாம் ஏன் நடத்தக் கூடாது அர்ச்சு கேட்டான்.
ம்ம்…இது கூட ஓ.கே தான்.
மீடிங்க நேரடியாக இல்லாமல் நம்முடன் சம்பந்தமில்லாதவர்களை வைத்து செய்யலாமே!
ஓ.கே…வேற….
என்ன சார்..? கிண்லாக கேட்கிறீர்கள்.
நீ எப்பொழுது இதை எல்லாம் யோசித்தாய்?
நான் ……என்று சிந்தித்தவாறு ஸ்ரீ இருக்கும் அறையை பார்த்தான்.
அட…..காதல்..நிறைய யோசிக்க வைக்கிறதே!
அதெல்லாம் ஒன்றுமில்லை சார்.எல்லாமே ஓ.கே. நாளை ஈவ்னிங்குள்ள இன்பாவிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு என் தம்பியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்கிறாயா?
நான் பார்த்துக் கொள்கிறேன்..ஏதும் பிரச்சனையா சார்?
இல்லை. நான் சீக்கிரம் வந்து விடுவேன் என்று புன்னகையுடன் வீட்டிற்கு சென்றான்.